வியாழன், 29 ஆகஸ்ட், 2024

ஒரு ஜோக் மட்டும்....

 சமீபத்தில் கீதாவுடன் நடந்த ஒரு உரையாயாடலைத்தொடர்ந்து இதை எழுதுகிறேன்.

நானும் கூட ஆரம்ப காலங்களில் "ஆத்மா சாந்தி அடைவதாக"  "ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்றெல்லாம் அனுதாபத் செய்திகள் போட்டிருக்கிறேன்,  ஒருமுறை ஆத்மா என்கிறோம், ஒருமுறை ஆன்மா என்கிறோம்.  இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா என்றும் யோசித்திருக்கிறேன்.  இது போன்ற விவாதங்களுக்கெல்லாம் நான் ஆளல்ல.  கீதா அக்கா போன்றவர்கள் இதைப் பற்றி சொல்லக்கூடும்.

இந்தகேகேள்வி வேறு சிலருக்கும் வந்திருக்கிறதது என்பது - பின்னே, வராமலிருக்குமா? - இணையத்தை அலசும்போது கிடைக்கிறது.  அதையெல்லாம் அலச நமக்கு நேரம் போதாது.  ஒருவர் ஆத்மா பிறப்பு இறப்பு உடைய உயிர் என்றும், ஆன்மா என்பது ஆதி அந்தம் இல்லா இறைவன் என்றும் சொல்கிறார்.  இன்னொருவர் இரண்டும் ஒன்றுதான் என்கிறார்.

ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு துளி.  பூமியில் இருப்பதும் மண்.  சட்டியில் இருப்பதும் மண்.  இரண்டும் ஒன்றே என்றாலும் வேறு வேறு.  அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது என்றெல்லாம் படித்திருக்கிறேன்.  ஜீவாத்மாவுக்கு தனது காரிய பலன்களால் மறுபிறப்பு நிகழ்கிறது.  பாவமெல்லாம் தீர்ந்தால் பரமாத்மா எனும் உருவம் காணமுடியாத, அளவிட  முடியாத அந்தப் பேரொளியுடன் இணைந்து விடலாம் என்கின்றனர்.  செய்வதெல்லாம் பாவம் எனும் வரையறைக்குள் வரும்போது ஜென்மம் எங்கே தீர்வது, எங்கே கடைத்தேறுவது?  

சிலர் கட் அண்ட் ரைட்டாக ஏழு ஜென்மம்தான்,  இது என்னுடைய ஏழாவது ஜென்மம்.  அவ்வளவுதான்.  நான் பூமி வாழ்விலிருந்து ரிட்டையர் ஆகி முக்தி பெற்று விடுவேன் என்று சொல்கிறார்கள்.  யார் அவர்களுக்கு அப்படி சொன்னதோ...  யார் மூலம் செய்தி வந்ததோ...

சூரியனின் பலகோடி ஒளி கதிர்கள் பூமியை அடைவதை போல, இந்த பூமியில் ஒவ்வொரு உடலும் உருவாகும் பொழுது உயிராக ஆன்மா அதனோடு சேர்ந்துவிடுகிறது.  அந்த உடல் சடலமாக மாறும் பொழுது, அந்த உடலோடு பயணித்த ஆன்மா தன்னையும் அறியாமல் அந்த உடலோடு பயணித்த காலங்களில் அந்த உடலின் மீது ஒரு அன்பை ஏற்படுத்தி கொள்கிறது.  திடீரென அந்த அன்பு உடையும் பொழுது, அந்த ஆன்மா தன் அமைதியை இழந்து தவிக்கிறது.  அதே ஆன்மா, தான் யார் என்பதை அறிந்து தான் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்தை அடைந்துவிட்டால் சாந்தி அடைகிறது.  உடல் வேறு, உயிர் வேறு என்பதை புரிந்து வைத்துள்ள ஞானிகளின் ஆன்மா எந்த சிரமமும் இல்லாமல் இறைவனடி சேர்கிறது.  நம்மை போன்றவர்களின் ஆன்மா பல பிறவிகள் எடுத்த பின்பே அந்த சாந்தி நிலையை அடைகிறது என்கிறார் ஒருவர்.

உடலை விட்டுப் பிரிந்த உயிர் அங்கேயே பத்து நாட்கள் வரை சுற்றும் என்றும், தன் உடலைப் பார்த்து வருந்த யார் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.  

ஆனால் அதே சமயம் சில செத்துப்பிழைத்தவர்கள்' உடலை விட்டு நீங்கின உடனேயே யாரோ எஸ்கார்ட் போல தன்னுடன் கூட வருவது போலவும், ஒளியின் வேகத்தில் அண்டவெளியில் பயணிப்பது போலவும், தூரத்து வெளிச்சம் தெரிந்தததாகவும்,  அந்தப் பயணமும், அந்த அனுபவமும் மிக இன்பமானதாக இருந்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.  அதேவேளையில் உயிர் மீண்டும் உடலை அடைந்து நுழையும் வேளையில் தாங்கொணா துன்பமாக இருந்தது என்றும் சொல்லப் படித்திருக்கிறேன்.

யோகியின் சுயசரிதையில் முக்தி அடைவதற்கு முன் பாவ பரிகாரங்களுக்கேற்ப உயிர் கடக்க ஏழு லோகங்கள் இருப்பதாகப் படித்திருக்கிறேன்.

இந்த விவாதங்கள் இன்ஸ்டால்மென்ட்டில் தொடரும்!?

பொதுவாக இந்து தவிர மற்ற மதத்தவர்க்கு மறுபிறவியில் நம்பிக்கை கிடையாது என்பதால் 'சாந்தி அடைஞ்சுக்கோ போ'  (R I P) என்று சொல்லி விடுகிறார்கள்.  

வேதம் பயின்ற சர்மா சாஸ்திரிகள் ஒருமுறை இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.   

மற்ற மதத்தவர்கள் மறுபிறப்பு இல்லை என்று நம்புவதால் ஆன்மா சாந்தியடைவதாக என்று சொல்கிறார்கள்.  நிறைய பேர் யாருடைய மறைவுச் செய்தியாவது வந்தால் போதும், RIP RIP என்று ரிப்பி விடுவார்கள்.  என் நண்பர்கள் சிலரிடம் அதற்கு விளக்கம் தெரியுமா என்று  கேட்டபோது விளக்கம் தெரியாதவர்களே அதிகம்.  மற்றவர்கள் சொல்கிறார்கள், நானும் சொல்கிறேன்.  "அனுதாபம் சொல்வது" என்றார் ஒருவர்!  ஆனாலும் விளக்கம் தெரிந்தவர்கள் நிறைய உண்டுதான்.  

சாந்தி அடைவதை ஆங்கிலத்தில் சொல்கிறோம்.  அவ்வளவே,  ரெஸ்ட் இன் பீஸ்.  நம்ப மாட்டீர்கள்...  அலுவலக  க்ரூப்பில் ஒருவர் piece என்று peace ஐ பீஸ் பீஸாக்கி இருந்தார்! கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாயிருந்தது!  ரொம்பக் கேட்டால் டைப்போ ஆட்டோ கரெக்ஷன் என்று சொல்லி விடுவார். 

காஞ்சி மடத்தில் எல்லாம் பழக்கமான சர்மா சாஸ்திரிகள் ஒருமுறை இதைப் பற்றி சொல்லி இருந்தார்.  பொதுவாக இந்துக்கள் "அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்' என்று சொல்லலாம் என்று சொல்லி இருந்தார். நான் அதைதான் இப்போதெல்லாம் பின்பற்றுகிறேன்.  இப்போதெல்லாம் என்றால் சுமார் பனிரெண்டு வருடங்களாக!  கூடவே அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு இதைத் தாங்கும் மனவலிமையைத் தரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் சேர்த்துக் கொள்கிறேன்.  அப்படி நான் ஏதாவது குழுவில் கொடுத்ததும் நிறைய பேர் அதை அப்படியே காபி பேஸ்ட் செய்து விடுவார்கள்.  அது சுபலம்...   சே...  சுலபம்.  அதைச் சரியாக பார்க்காதவர்கள் RIP பால் இடத்தை நிரப்புவார்கள்.

அனுதாபச் செய்திகளை விட்டு விடுவோம்.  பொதுவான வேண்டுதல்களுக்கு வருவோம்.

மத வேறுபாடின்றி அனைவரும்அவ்வப்போது, ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது  "ஏழேழு ஜென்மங்களுக்கு அல்லது அடுத்த ஜென்மத்திலும் நானே உனக்கு மகனாக பிறக்கவேண்டும்" என்பது போன்ற டயலாக்குகளை சொல்கிறார்கள்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது கடவுளுக்கு மட்டுமல்ல, இந்த வேண்டுதலுக்கும் பொருந்தும்.  

அடுத்த ஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் கூட இது மாதிரி உணர்ச்சி வசப்பட்டு டயலாக் விடுவார்கள்.   

=====================================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

குழந்தைகள் விருப்பத்தின்படி, தந்தையுடன் செல்ல அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத காவலில் உள்ள குழந்தைகளை மீட்டு தரக்கோரிய தாயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்த உத்தரவை அடுத்து, நீதிமன்றத்தில் இருந்த குழந்தைகளின் தாயார், கண்கலங்கியபடி வெளியே சென்றார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கல்லுாரி கட்டணம் செலுத்த பணம் கேட்ட மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  குடிப்பழக்கத்தால் இவருக்கும், மனைவி மீனாட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மீனாட்சி மகளுடன் தனியாக வசித்து வந்தார். இசக்கிமுத்து மகன் வேல்முருகன் 22, 2019ல் வள்ளியூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.  அப்படி ஒரு அப்பா...  இபப்டி ஒரு அப்பா...!


அடுத்த தலைமுறை கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி தான், குவாண்டம் கம்ப்யூட்டிங். இது, குவாண்டம் கோட்பாட்டின் அடிப்படையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. குவாண்டம் கோட்பாடு அணு மற்றும் துணை அணு மட்டங்களில் ஆற்றல் மற்றும் பொருளின் நடத்தையை விளக்குகிறது. சர்வதேச அளவில் இதற்கான முயற்சி, பல நாடுகளில் நடக்கிறது.  நாம் தற்போது பயன்படுத்தும், கிளாசிக் வகை கம்ப்யூட்டர்கள் 0, 1 என்ற பைனரி எண்களை கட்டளையாக கொண்டு செயல்படுகின்றன. கிளாசிக் வகை கம்ப்யூட்டர்களை விட வேகமாக செயல்படும் ஆற்றல் உடையதாக, குவாண்டம் கம்ப்யூட்டிங் இருக்கும்.  குவாண்டம் கம்ப்யூட்டிங் முறையில் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தினால், அதை உடைப்பது கடினமாக இருக்கும். தொலை தொடர்பிலும், துல்லியமான முன்னறிவிப்பு இருக்கும். குவாண்டம் கம்ப்யூட்டிங் டெக்னாலஜியை பயன்படுத்தி ஐ.ஐ.டி.,யில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் துவங்கப்பட்டுள்ளன.

ராஞ்சி: போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதால் ஆத்திரமடைந்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் திவேதி, அம்மாநில டி.ஜி.பி.க்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.  பா ஜ  யுவ மோர்ச்சா எனும் இளைஞர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் மாற்று பாதையில் இவர் சென்ற கார் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. இதனால் சரியான நேரத்திற்கு நீதிமன்றம் செல்ல முடியாமல் அவதியுற்றார்.  இதையடுத்து மாநில காவல்துறை டி.ஜி..பி., அனுராக் குப்தாவிற்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். முறையாக அறிவிப்பு இல்லாமல் சரியான முறையில் போக்குவரத்தை சரியாததால் தாம் குறிப்பிட்ட நேரத்திற்கு நீதிமன்றம் செல்ல முடியாமல் தாமதம் ஏற்பட்டு விட்டதாக புகார் கூறினார்.  தனக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி!

15 ஆண்டுகளுக்கு முன்னால் அரியர் வைத்துள்ள மாணவர்கள் கூட தேர்வு எழுதி வெற்றிபெற அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி அளித்துள்ளது.

சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக நூற்றாண்டு கடந்த புளிய மரங்கள் கருணையே இல்லாமல், தொலைநோக்கும் இல்லாமல் வேரோடு வெட்டி அகற்றப்படுகின்றன.  இதன் தாக்கமாக அங்கிருந்த குரங்குகள் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் அக்டோபரில் ப்ரம்மோற்சவம் நடக்க இருப்பதால் அங்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். எல்லா பக்தர்களுக்கும் தங்கும் வசதி செய்து தர வேண்டுமென்பதால் அந்த கால கட்டத்தில் நன்கொடையாளர்களுக்கு தங்கும் வசதி செய்து தர இயலாது ஆகவே நன்கொடையாளர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

- இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்த சட்டம் அக்டோபர் ஒன்று முதல் ஸ்ரீலங்காவில் அமலுக்கு வருகிறது. 

- தமிழ் நாட்டில் எட்டு மாதங்களில் 47 யானைகள், 5 புலிகள் இறப்பு. விஷம் வைத்து கொலையா என விசாரணை.

- இந்தியர்களின் ஆரோக்கிய கேட்டிற்கும், மரணத்திற்கும் இங்கு நிலவும் சுற்றுச் சூழல் குறிப்பாக காற்றின் மாசுபாடு காரணம் என்கிறது ஆய்வு.

- IIT மும்பையில் ஐந்து வருடங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்திருக்கிறது.

- நன்கு படித்து உயர் பதவியில் இருக்கும் பெண்களில் பலர் திருமணம், குழந்தைப் பேறு முதலியவற்றை தள்ளிப் போடுவதோடு, தங்கள் கரு முட்டைகளை சேமித்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது நம் நாட்டில். மும்பையில் செயற்கை கருத்தரிப்பு நிலையம் வைத்திருக்கும் பெண் மருத்துவர் ஒருவர், ஒரு வாரத்தில் மூன்று பெண்கள் தங்கள் கரு முட்டைகளை சேமிக்க வருவதாக சொல்லியிரூக்கிறார். இப்படி சேமிக்கப்படும் கரு முட்டைகளை எட்டு வருடங்கள் வரை பாதுகாக்கலாமாம்.

- அழகாக இருப்பவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று அரிஸோனா பல்கலைகழக ஆய்வு சொல்கிறது. தோற்றப் பொலிவற்றவர்களின் குறைந்த ஆயுளுக்கு சமூகத்தின் புறக்கணிப்பு காரணமாம். - Sad

- தங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட சிலர், பயிற்சி காலத்தில் போதுமான திறமையை நிரூபிக்காததால்
அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி நியமன ஆணையை திரும்ப பெற்றிருக்கிறது விப்ரோ நிறுவனம். 

- தஞ்சை: தனியாக நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டிக்கு லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்று, அவரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த ஆறு பவுன் சங்கிலி பறிப்பு.

25 கிலோ நகைகள் அணிந்து திருப்பதி ஏழுமலையானை நேற்று தரிசனம் செய்த மும்பை பக்தர்கள்.


திருமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்நேற்று 25 கிலோ தங்க நகைகள் அணிந்து வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். இரு சகோதரர்கள் மற்றும் அந்த இருவரில் ஒருவரின் மனைவி என இந்த மூவரும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இரு சகோதரர்களும் தலா 10 கிலோ எடையுள்ள தங்க சங்கிலிகள், மோதிரங்கள், கையில் காப்பு என மொத்தம் 20 கிலோ நகைகளை அணிந்திருந்தனர். இவர்களுடன் வந்த பெண் 5 கிலோ தங்க நகைகள் அணிந்திருந்தார்.

இந்த மூவரையும் வரிசையில் இருந்த சாமானிய பக்தர்கள் மட்டுமின்றி விஐபி பக்தர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்த பக்தர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினர். இதையடுத்து கூலிங் கிளாஸ்அணிந்து கொண்டு பலருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மூவரும் பிறகு காரில் ஏறிச் சென்றனர். இவர்களுடன் பாதுகாப்புக்காக சுமார் 15 பேர் வந்திருந்தனர்.

================================================================================================


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


**********************************************************************************


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 சென்ற இதழில்.. மன்னிக்கவும், சென்ற வாரம் நான் வீடு கவிதை ஒன்று எழுதி இருந்தது நீங்கள் அறிந்ததே...   மறுநாள் முகநூலில் கந்தசாமி சார் வீடு என்கிற தலைப்பில் கல்யாண்ஜியின் கவிதையைப் பகிர்ந்திருப்பதைப் பார்த்தேன்.


இது கவிதை!

=======================================================================================

படித்ததைப் பகிர்வதில்.....

பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது?

பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது? அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? தெரிந்து கொள்ளலாம்

பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் உள்ளதற்கு அறிவியல் காரணம் உள்ளது. மற்ற நிறங்களை விட மஞ்சள் நிறம் அதிகம் தெரியும். ஆகவே விபத்துகளை தவிர்க்க பள்ளி பேருந்துகளுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்படுகிறது. சிவப்பு நிறம் நீண்ட அலைநீளம் மற்றும் 650 நானோ மீட்டர்களை கொண்டது. இதன் விளைவாக, தொலைதூரத்திலிருந்து சிவப்பு நிறத்தை நம்மால் காண முடியும். ஆனால் மஞ்சள் நிறத்தின் அலைநீளம் வெறும் 580 நானோ மீட்டர்கள் மட்டுமே.இருந்தபோதும் பள்ளிப் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழலாம். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால், மஞ்சள் நிறத்திற்கான லேட்டரல் பெரிஃபெரல் விஷன்(எல்பிவி) சிவப்பு நிறத்தை விட 1.24 மடங்கு அதிகம். இதன் விளைவாக, அதன் பார்வை சிவப்பு நிறத்தை விட அதிகமாக உள்ளது.

இதனால் மஞ்சள் நிறத்தை மழை & மூடுபனியில் கூட நம்மால் தூரத்தில் இருந்து எளிதில் பார்க்க முடியும்.

 =============================================================================================

பொக்கிஷம் :




JKC ஸாருக்காக ஒரு ஜோக் மட்டும்...



79 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. ஆத்மா, ஆன்மா, பிறவி, மறுபிறவி, என்ற தத்துவ ஆராய்ச்சிக்குள் புகுந்து விட்டீர்கள். இந்த ஆராய்ச்சி முடிவில்லாதது. இதில் மேலும்
    //இந்த விவாதங்கள் இன்ஸ்டால்மென்ட்டில் தொடரும்!?// \
    என்று திகில் ஊட்டுகிறீர்கள். இப்பவே கண்ணைக் கட்டுதே சாமி. சாமி காப்பாத்து.

    கடைசியில்
    //கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது கடவுளுக்கு மட்டுமல்ல, இந்த வேண்டுதலுக்கும் பொருந்தும். //
    என்று எப்படியோ தொடரும் போட்டாகி விட்டது. வாசித்து சிந்தித்து பார்க்க நேரமில்லை. என்ற சப்பைக்கட்டு கட்டாமல், இறப்பு, ஆன்மா பற்றி தற்போது சிந்திக்க விருப்பமில்லை என்று சுருக்கமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

    இந்த வார நியூஸ் ரூம் நிறைய செய்திகள் கொண்டிருக்கிறது செய்திகள் பல தரப்பட்டவையாகவும் உள்ளது.

    குவாண்டம் கம்ப்யூட்டர் வர பல வருடங்கள் பிடிக்கலாம். எப்படி எலக்ட்ரிசிட்டி இல்லாமல் இருக்க முடியாதோ அப்படி கம்ப்யூட்டர் இல்லாமல் உலகம் இயங்காது என்று தோன்றுகிறது.

    . தனி நபர் கையிருப்பு தங்க உச்சவரம்பு இருக்கும்போது எப்படி ஒவ்வொருவரும் 10 கிலோ தங்கம் அணிந்திருக்க அனுமதி கிடைத்திருக்கும்.

    //அழகாக இருப்பவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று அரிஸோனா பல்கலைகழக ஆய்வு சொல்கிறது. தோற்றப் பொலிவற்றவர்களின் குறைந்த ஆயுளுக்கு சமூகத்தின் புறக்கணிப்பு காரணமாம். - Sad//
    நான் அழகில்லை.

    கவிதையின் தலைப்பு என்ன. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. இயல்பாய் இரு என்பதற்கு என்ன அர்த்தம் என்பதும் புரியவில்லை.

    பாட்டுக்கு பாட்டு

    இருப்பவர் மறைந்தால்
    இருப்பிடம் இடியும்
    ஆன்மா நீங்கிய
    உடல் போல.
    எனவே
    வீட்டின் ஆன்மா
    வீட்டில் இருப்பவர்
    எனலாமோ.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...  முன்னரும் இந்த ஆராய்ச்சி செய்ததுண்டு. தொடரும் என்று சொன்னதுமுண்டு...  அப்படி எல்லாம் பொறுமை வந்து விடாது..  அஞ்சேல்!

      புரிகிறது!

      செய்தியறை - நன்றி.

      அனாவசிய பதட்டமின்றி, ஆர்ப்பாட்ட செயற்கை இல்லாமல்  இருங்களேன் என்கிறேன்!

      உடலை எடுத்ததும் அக்குழுவித் துடைக்கப்படும் வீட்டில் இறந்தவர் நினைவும் சேர்ந்தே துடைக்கப்படுகிறது!  நீரினில் மூழ்கி நினைப்பொழிவது வாடிக்கை.  உசிதமும் கூட!

      நீக்கு
  3. ஜெஸி ஸார் சொல்கிற மாதிரி பிறவி, மறுபிறவி
    இவையெல்லாம் தத்துவ ஆராய்ச்சிகளா?

    அடுத்த சந்தேகம் தத்துவம் என்பதே ஆராய்ச்சி சம்பந்தப்பட்டதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தத்துவ ஆராய்ச்சியா, உண்மை அறியும் முயற்சியா?  உண்மை என்ற ஒன்று இருக்கிறதா?  உண்மை என்றால் என்ன?

      நீக்கு
    2. //புதன் கேள்விகளா? //

      அடடே... நல்ல ஐடியாவா இருக்கே...

      நீக்கு
    3. புரியாதவற்றை தத்துவம் என்று அடக்கிவிடுவதுதான் தத்துவம். இல்லையா ஜீவி சார்?
      Jayakumar

      நீக்கு
    4. இது ஒரு தொடர்கதை தொடரப் போகிறது.
      அங்கே செம வேலை இருக்கு இதுக்கெல்லாம்! (கவனம் ஜெகேஸிஜி)

      நீக்கு
    5. நான் அவற்றை தத்துபித்துவம் என்று சொல்வது வழக்கம்!!  முன்னர் எபியில் அப்படி சில தத்துபித்துவங்கள் வந்திருக்கின்றன.

      நீக்கு
  4. கேட்ட புதன் கேள்விக்கே பதிலைக் காணோம்.
    நீங்கள் தான் எபிக்கு வருவதையே குறைத்துக் கொண்டு விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு இப்பொழுது இரவு 10 மணி. நாளை பார்த்துச் சொல்கிறேன் KGG Sir.
      நீங்கள் அடுத்த புதனில் அதற்கு பதலளிக்கலாம். இப்பவே முன்னுரிமையாக இ ரிசர்வ் செய்து விடுங்கள்.

      நீக்கு
    2. 22 ஆகஸ்டு -- மசால் தோசை 50 பைசா என்ற பதிவில் அந்தக் கேள்வி இருக்கிறது. தங்கள் தகவலுக்காக..

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மொரார்ஜி தேசாய் காலத்தில் தங்க கட்டுப்பாடு இருந்தது தெரியும். இப்பொழுது கூட அந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா, என்ன?

    (ஹி..ஹி.. ஜீவி இந்த மாதிரி சாதாரண கேள்வியையெல்லாம் புதன் கேள்வி ஆக்க மாட்டான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Physical Gold
      According to the recent CBDT circular, regardless of marital status, men are limited to owning a maximum of 100 grams of genuine gold as jewellery. In contrast, married women can possess up to 500 grams, unmarried women up to 250 grams, and men, in general, up to 500 grams.24 Jun 2024

      நீக்கு
    2. எங்கு தங்குவதற்கு கட்டுப்பாடு?!

      நீக்கு
    3. ஜெ கே அண்ணா இந்த மாதிரி இருக்குதான் தங்கத்திற்குக் கட்டுப்பாடு அதாவது அணிவதற்கான கட்டுப்பாடு! அது சரி க்ராம் கணக்கு தங்கத்தின் கிரமா இல்லை நகையின் எடையா?!!!!!!!!!

      ஆனா கல்யாணத்துல ஒரு சிலர் அணியறத பார்க்கறப்ப கூடுதலா இருக்கும் போல இருக்கிறதே! இமிட்டேஷன் இல்லை உண்மையான தங்கம்தான் சொல்கிறேன்.

      கீதா

      நீக்கு

  7. In India, you can legally own any amount of gold. But, tax authorities might ask about the source of income if you hold a lot of gold (without proper documentation) - limits are: Married women: 500 grams. Unmarried women: 250 grams.6 Oct 2023

    பதிலளிநீக்கு
  8. Men & women 500+500 grams =1000 grams.
    So 125 பவுன்.
    திருமண ஆன ஆண்களுக்கு இவ்வளவு சலுகையா? பிரம்மசாரிகளே! இதற்காகவாவது மணமேடை மீது காதல் கொள்வீர்!

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். நியூஸ் ரூமுக்கு ஸ்ரீராமின் பங்களிப்பும் இருக்கிறது. அதை அவர் விளம்பர படுத்திக் கொள்வதில்லை. பாராட்டுகளில் அதிகமான பங்கு அவருக்கு உரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்திகள்தான் முக்கியம். 

      பானு அக்கா... சென்ற வாரம் வியாழனுக்கு நீங்கள் வரவில்லை.

      நீக்கு
  10. ஆஹா! ஸ்ரீராம் நாம அன்னிக்குப் பேசியதை வைத்து அதன் தொடர்ச்சியாகப் பதிவாகிடுச்சா!!

    ஆண்டாள் கூடச் சொல்றாங்க 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்' என்று!

    என் புரிதல்கள் வேறு அதை இங்கு என்னவோ பெரிய தத்துவார்த்த அறிவாளி மாதிரி நான் சொல்லப் போக....எதுக்கு வம்பு!

    சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதியில் அவர் சொல்லியிருந்ததும் அறிவியல் ரீதியாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது!

    என்றாலும் முதல் பகுதி நான் அப்பீட்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆஹா! ஸ்ரீராம் நாம அன்னிக்குப் பேசியதை வைத்து அதன் தொடர்ச்சியாகப் பதிவாகிடுச்சா!! //

      ஆமாம்.  சட்டுனு எழுத வேற கிடைக்கலை!

      // பெரிய தத்துவார்த்த அறிவாளி மாதிரி நான் சொல்லப் போக....எதுக்கு வம்பு! //

      அட...   சொல்லுங்களேன்...   நீங்க நல்லா யோசிச்சு ஆழமா சொல்வீங்க..

      நீக்கு
  11. முதல் பகுதியின் கடைசி வரி//

    நான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி வசனம் இதுவரை விட்டதில்லை விடவும் மாட்டேன். இதுல Risk factors கூடுதல் கேட்டேளா!!!!!
    அப்படியே ஒன்று இருந்தாலும் பொதுவாகச் சொல்லப்படுவதில்....நமக்கென்ன தெரியவா போகுது? ஸோ...No dialogues!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய் விட்டு சிரிக்க அனுமதி உண்டா? எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை!

      நீக்கு
  12. நியூஸ் ரூமில் முதல் செய்தியை அப்பகுதிக்குச் சென்று முழுவதும் வாசித்தேன். எதனால் குழந்தைகள் அப்படிச் சொன்னாங்க என்பதற்குக் காரணம் எதுவும் சொல்லப்படவில்லையே! என்னவோ தெரியலை மனசு கஷ்டப்பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிம்பிள் கீதா...   பல வருடங்களாக அப்பாவுடன் இருக்கிறார்கள்.  அவரும், அவர் அப்பா அம்மாவும் குழந்தைகளிடம்  அன்பாகத்தான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  13. இரண்டாவது செய்தி - கொடுமை. இப்படியான பெற்றோர்கள் இருப்பதால்தான் அடுத்த தலைமுறை பாவம் வழி தவறிச் செல்வதற்குச் சில குடும்பங்களில் காரணமாக அமைந்துவிடுகிறது.

    தனக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி!//

    அதை சொல்லுங்க!

    சீர்காழி அருகே சாலை விரிவாக்கச் செய்தி....என்னதான் சுற்றுச் சூழல்னு கூவினாலும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை! அவங்களுக்கு அவங்கவங்க சீட் தான் முக்கியம்.

    ஸ்ரீலங்கா பெயரைப் பார்த்தாலோ கேட்டாலோ உடனே எ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீலங்கா பெயரைப் பார்த்தாலோ கேடாலோ உடனே எனக்கு இறக்கை விரியத் தொடங்கும்! ஆனால் எங்க போக முடியும்?!

      விப்ரோ செய்தி - சூப்பர்!

      திருப்பதிக்குப் போன அந்த க்ரூப்ல ரெண்டு ஆண்களும் "பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு" மாதிரில்லா போட்டிருக்காங்க! அது சரி இத்தனையும் சுமந்து நடக்கறதுக்கு muscle mass பயிற்சிகள் எல்லாம் செஞ்சிருப்பாங்க போல!

      கீதா

      நீக்கு
    2. நியூஸ் ரூமை பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க....!  நன்று.

      நீக்கு
  14. ஸ்ரீராம் உங்க கவிதையை ரொம்ப ரசித்தேன். டாப்! உங்க கற்பனை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் ஆரம்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  முதலில் ஒரு பகுதி எழுதி விட்டு பிறகு இதையும் இன்னொன்றையும் எழுதிய நினைவு.  அந்த முதல் பகுதி கிடைத்தால் JKC ஸாருக்கு சந்தேகம் வந்திருக்காதோ என்னவோ...!

      நீக்கு
  15. நிலா நியூஸ் சுவாரசியமானது ஆச்சரியப்படுத்துகிறது. இப்படி மற்ற கோள்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போகுமோ? போனா என்ன ஆகும்? நிறைய யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் (பூமி) மட்டும் தனியாய் சுற்றிக் கொண்டிருப்போமோ...   அதையும் நம் அரசியல்வாதிகள் ஒரிஜினலாய் வைத்திருக்க மாட்டார்களே...  குறிப்பாக இந்தியா..

      நீக்கு
  16. தீராநதியில் எழுதியிருப்பவர் தமிழ்நதி என்பவரா? அவரது புகைப்படமா அது?

    அதைச் சொல்லுங்க ஆத்மதிருப்திக்காக எழுதுகிறோம்னு நம்மை நாமே ஆறுதல் சொல்லிக் கடந்து செல்வது!

    ஆ! இங்கு முதல் பகுதியின் கேள்வி வருதே ஆன்மா? ஆத்மா?
    மனத்திருப்தினு சொல்லிட்டா இப்படியான கேள்வி வராதில்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீராநதி, தமிழ்நதி...  யாமொன்றும் அறியோம் பராபரமே...   திடீரென அந்தப் புத்தகத்தின் விற்பனை அதிகரிக்கிறது என்றால் வாங்குபவர்கள் ஒன்று தாங்களும் இலக்கிய நதியில் முழுக்க விரும்புகிறார்கள், அல்லது அப்படி என்னதான் இருக்கிறது அதில் என்று பார்க்க முற்படலாம். 

      காவல் கோட்டமெல்லாம் எழுத்தா...ஹையோ...

      நீக்கு
    2. // ஆ! இங்கு முதல் பகுதியின் கேள்வி வருதே ஆன்மா? ஆத்மா? ..

      உடலை விட்டு பிரிந்தபின் அந்த ஆத்/ன்மா தான் படித்த அந்த புத்தகத்தின் நினைவுகளை என்ன செய்யும்?

      நீக்கு
    3. கூட்டுக்குள்ளே குயில் இருந்து என்ன பயன்?  குரலை இழந்தபின் குயில் இருந்து பயனில்லையே...

      நீக்கு
  17. பள்ளிப் பேருந்து மஞ்சள் நிறம் - பகுதி இங்கு வந்திருக்கோ முன்னர்? இல்லை வேறு எங்கேனும் வாசித்தேனா? ஆனா வாசித்த நினைவு இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸாப்பில் எத்தனையோ குழுக்கள்.  எங்காவது பகிரப்பட்டிருக்கும்.  ஆனால் இதை நான் பேஸ்புக்கிலிருந்து எடுத்தேன் என்று நினைவு.

      நீக்கு
  18. இடையில் காலியாக அச்சடிக்கப்படாமல் இருக்கும் காகிதம் மிகப் பெரிய தத்துவத்தைச் சொல்கிறதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. காலெட் - சுவாரசியமான செய்தி.

    ஐஐடி - செய்தி அந்தக் குவாண்டம் கம்ப்யூட்டர் வர எல்லாம் இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதுக்குள்ள என்னென்ன மாற்றங்கள் வருமோ! யாருக்குத் தெரியும்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான்.  நாம் நெரிசலான சாலை போக்குவரத்தைக் குறைக்க ஐந்தாண்டு திட்டம் போட்டு சாலை விரிவாக்கமோ பாலங்களோ..  பத்தாண்டுகளில் முடிக்கும்போது நெரிசல் இரு மடங்காகி தொல்லை மாறாமல் இருக்கும்.  அது போல!

      நீக்கு
  20. பானுமதி வெந்கடேஸ்வரன் - சரி செய்யுங்களேன்! :)

    மற்ற செய்திகளும் நன்று. தங்க மகன்/மகள் குறித்த செய்தியை நானும் எடுத்து வைத்திருந்தேன் - காஃபி வித் கிட்டு பதிவுக்காக! :)

    வீடு குறித்த கல்யாண்ஜி அவர்களின் கவிதை சிறப்பு! மிகவும் ரசித்தேன்.

    மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியான உங்களின் எண்ணங்களில், உடலும், உயிருமான அலசல் நிறைய யோசிக்க வைக்கிறது. (இதுபற்றி நாங்களும் நிறைய யோசிக்கிறோம். ஒருவேளை இப்படி நம்மை யோசிக்க வைப்பதுதான் ஏழாவது பிறவியோ.? :)) ) ஏழு பிறவி முடிந்ததும் இறைவனுடன் கலந்து சேர்வோம் என்றால், பிறவி பெருங்கடல் என்பது அவ்வளவு சிறியதா? இல்லை, ஏழேழு பிறவி என்றால், நமக்கு மொத்தம் நாற்பத்தொன்பது பிறவியா? இந்த உடலும், உயிருமான யோசனைகளின் இடையே இப்படியான சந்தேகங்கள் வேறு..! .

    ஆக மொத்தம் இந்த உடலுக்கு மதிப்பில்லையென்பது. உடலின் பல(ன்)ம் நமக்காகட்டும், பிறருக்காட்டும் சிறிதளவாவது பயனின்றி போகும் போதுதான் நம்மால் உணரப்படுகிறது. ஆனால், இந்த உயிர் நம்மை விட்டு போகும் வரை நமக்கு மதிப்பளித்து துணையாக இருந்து வாழ்ந்து விட்டு போகிறது.

    ஆயிரம் உறவுகள் வாழ்க்கையில் கூடவே வந்தாலும், எந்த ஒரு இடர் வரும் போதும் ,சுமந்து பெற்றெடுத்த அம்மாவின் அன்போடு கூடிய ஆறுதல் வார்த்தைகள் போல் எதுவும் வராது என்பதினால்தான்,
    இந்த உயிருக்கு ஆன்"மா" எனவும், ஆத்"மா"எனவும் ஒரு "மா" சேர்த்து சொல்கிறோமோ.?

    இன்னும் நிறைய யோசிக்க வைக்கிறது தங்கள் பகிர்வு. மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ல்லை, ஏழேழு பிறவி என்றால், நமக்கு மொத்தம் நாற்பத்தொன்பது பிறவியா? //

      ஆ...   இப்படி ஒண்ணு இருக்கோ...   அப்படியும் எங்கோ படித்த மாதிரி இருக்கிறதே...!!

      // இந்த உடலுக்கு மதிப்பில்லையென்பது. //

      கம்பியூட்டரோ, கட்டிலோ..  கடையாணி கழன்றபின் தூக்கி குப்பையில்தானே போடுகிறோம்.

      ஆன்'மா' ஆத்'மா' என்று உங்கள் அம்'மா' விளக்கம் பிரமிக்க வைக்கிறது. நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  22. ஆன்மா ஆத்மா வித்தியாசமில்லை.
    பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வது போல் வேறு யாரிடமும் இயலாது.
    புதைக்கப்பட்டவங்களுக்கு RIP. முஸ்லீம்கள் கடைசி தீர்ப்பு நாள் வரை புதைக்கப்பட்ட இடத்திலேயே இருப்பதாகவும் பாவம் செய்தவனை அந்த இடத்தில் கடவுள் நெருக்குகிறார் என்பதால் RIP
    எரித்தவர்களின் உறவினருக்கு 13ம் நாள் சுபம். 12வரை தீட்டு

    பதிலளிநீக்கு
  23. ஏழேழு ஜென்மத்துக்கும் உனக்கே உறவினனாகப் பிறக்கவேண்டும் --- கடவுள் சாப்பிட்டுவிட மாட்டார் என்ற நம்பிக்கையில் அவருக்கு உணவு படைப்பது போன்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தைரியமும் நம்பிக்கையும் எனக்குப் பிடித்திருக்கிறது!

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய தங்களின் கவிதை நன்றாக உள்ளது. வீடு கவிதையும் அருமை.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி அறை பக்கமும் படித்து பல செய்திகளை அறிந்து கொண்டேன்.

    கிலோ கணக்கில் தங்கம் அணிந்து வந்தவர்கள் ஏழுமலையானுக்கு எத்தனை கிலோ தந்தார்களோ.?

    பள்ளியின் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் அமையும் காரணத்தை எங்கோ படித்தாக நினைவு. ஆனால் இங்கும் படித்து தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி.

    நிலா பற்றிய விசித்திரமான விபரங்கள் அறிந்து கொண்டேன். பூமியின் பல மாறுதலுக்குள் அதாவது இன்னமும் கோடி ஆண்டுகளில் நாம் எத்தனைப் பிறவிகள் எடுத்திளைக்கப் போகிறோமோ?

    பொக்கிஷ பகிர்வுக்கு நன்றாக உள்ளது. தாய் வீட்டின் பெருமையை இப்படியும் சொல்ல வேண்டுமா அந்த பெண்மணி.? கஸ்டந்தான்..!

    தங்களின் இன்றைய பதிவு நன்றாக இருந்தது. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பூமியின் பல மாறுதலுக்குள் அதாவது இன்னமும் கோடி ஆண்டுகளில் நாம் எத்தனைப் பிறவிகள் எடுத்திளைக்கப் போகிறோமோ?//

      என்ன நம்பிக்கை!   ஆனாலும் அதைச் சொல்லுங்கள்..  இப்போது நமக்கென்ன கவலை!

      //நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது //

      ஆ...  அப்படியா? 

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  25. சிறந்த பதிவு.
    நிறைய அலசல்கள் ஆன்மா, ஆத்மா பற்றி.
    எங்கு இருந்து வந்தோமோ அங்கேயே மீண்டும் போவாதாய் சொல்லப்படுகிறது.
    இறைவனிடமிருந்து வந்தோம் என்று நம்பினால் மீண்டும் இறைவனிடம் சென்று விட்டார் என்பதை இறைவனடி சேர்ந்தார் என்கிறோம்.
    இயற்கையில் வந்தோம் என்றால் இயற்கையோடு கலந்து விட்டார் என்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை எய்தினார் என்று சிலர் சொல்வார்கள்.

      நீக்கு
    2. ஆம் அக்கா...  இதைக் கொண்டு வந்தோம், எதை எடுத்துச் செல்கிறோம் என்பார்கள்.  இயற்கை எய்தினார் நல்லதொரு வார்த்தைப் பிரயோகம்.  சிவலோகப்பதவி அடைந்தார், வைகுண்ட பதவி அடைந்தார் இயேசுவினுள் நித்திரையில் ஆழ்ந்தார் போன்ற வரிகள் அவர்கள் என்ன மதம், என்ன இனம் என்று தெரிய வைக்கும்!

      நீக்கு
  26. //அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது என்றெல்லாம் படித்திருக்கிறேன். //

    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்
    உண்மை. இதை நிறைய யோகிகள், ஞானிகள், சித்தர்கள் பேசி இருக்கிறார்கள்.

    காயமே இது பொய்யடா- வெறும்
    காற்றடைத்த பையடா

    காற்றாலான உடம்பு. காற்றுக்குள் காற்றாகக் கலந்து வரும் கடவுள். மூச்சின் மூச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே என்று சொல்லும்போது ஆன்மா தனது சட்டையை மாற்றுகிறது என்பார்கள். உடல் என்பது ஆன்மா போடும் உடை என்பது போல..

      நீக்கு
  27. மற்றவை படித்து விட்டு சிறிது நேரம் கழித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. ஆன்மா,ஆத்மா பற்றிய அலசல்கள் தொடரட்டும்.

    பொக்கிசம், வீட்டுகவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  29. நியூஸ் ரூம் செய்திகள் எத்தனைவிதமான மனிதர்கள் எத்தனை வகையான குணநலன்கள் என்று இருக்கிறது செய்திகளை வாசித்தவுடன்.
    இயல்பாய் இருக்க சொல்லும் உங்கள் கவிதை அருமை.
    வீடு படத்திற்கு கல்யாண்ஜி எழுதிய கவிதை உண்மை இது போன்ற வீடுகள் மனதை சங்கடப்படுத்தும்தான்.
    பொக்கிஷபகிர்வுகள் அருமை.
    சிரிப்பு தன் வீட்டு பெருமை சொல்லுவது ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  30. புன்னகைக்க வைத்த வசனம் அருமை.

    எனக்கு மழை வந்தால் சிலந்தி கூட்டின் இழைகள் அறுந்து விடுமோ என்று இருக்கும் மழை நின்றபின் போய் பார்ப்பேன், சிலந்தி வலை அப்படியே இருக்கும் புன்னகை வரும். அட்லாண்டாவில் சிலந்தி வலைகள் நல்ல வலிமையுடன் இருக்கும்.
    நம் ஊர் சிலந்தி கூடுகள் காற்று அடித்தாலே கலைந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் சிலந்திகளுக்கெல்லாம் போஷாக்கு பத்தாது! அது சாப்பிடும் பூச்சிகளும் போஷாக்கில்லாத பூச்சிகள்!

      நீக்கு
  31. //அடுத்த ஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் கூட இது மாதிரி உணர்ச்சி வசப்பட்டு டயலாக் விடுவார்கள். //

    நமபறோமோ இல்லையோ எனக்கும் மாமாவுக்கும் பூர்வஜன்ம பந்தம் என இரண்டு மூன்று ஜோதிடர்கள் சொல்லி இருக்காங்க. என் மாமனார் வீட்டில் தான் முதலில் பொருத்தம் பார்த்திருக்காங்க. அப்போவே அவங்க ஜோசியர் இந்தப் பெண் தான் உங்க வீட்டு மருமகள் என அடிச்சுச் சொல்லி இருக்கார். எங்க வீட்டிலேயோ அப்பா அவங்களைத் தொடர்பு கொள்ளவும் இல்லை,ஜாதகப் பொருத்தம் பார்க்கவும் இல்லை. மேலே மேலே அவங்களிடமிருந்து அழைப்பு வரவே அரை மனசாகப் பார்த்தார். எங்க ஜோசியரும் நீங்க பெண்ணைக் கொடுக்கலைனால் கூட அந்தப் பிள்ளை விடாப்பிடியாக உங்க பெண்ணைத் தான் கல்யாணம் செய்துப்பான் என்றாராம். அப்பாவோ சாவகாசமாக வேறே வரன் பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் எங்க ஜோசியர் வைகாசி மூணாம் தேதிக்கு உங்க பெண்ணின் கல்யாணம் இந்தப் பையனோடு நடக்கும்னு சொல்லி இருக்கார். அதுக்கப்புறமாத்க் தான் சித்தப்பாவின் தூண்டுதல் பேரில் அப்பா இவங்களைப் போய்ப் பார்த்துப் பெண் பார்க்க அழைச்சுப் பதினைந்தே நாட்களில் கல்யாணம் நடந்து முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய கேள்வி ஜோசியர் எதை வைத்து இதை எல்லாம் சொல்கிறார் என்றுதான்!  சரியா, தவறான்னு கண்டுபிடிக்க முடியாது.  அப்புறம் சென்று அவரைக் கேட்கவும் முடியாது!

      நீக்கு
  32. அதே மாதிரி எங்க ஜோசியர் இன்னும் சிலர், பின்னர் தென்காசியில் ஒரு சித்தர் (அகஸ்திய நாடி) எல்லோருமே ந்ன்KKஊ இதான் கடைசிப் பிறவி என அடிச்சு (என்னை இல்லை) சொல்லி இருக்காங்க. நான் அவ்வப்போது அவரிடம் ஹையா! ஜாலி1 அடுத்த பிறவிலே நீங்க என் தொந்திரவு இல்லாமல் இருப்பீங்க என்பேன். :) இது எவ்வளவு நிஜம்னு தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இது எவ்வளவு நிஜம்னு தெரியாது. //

      அதுதான்.  இதை யாரால் சொல்ல முடியும்?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!