ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 31 : நெல்லைத்தமிழன்

 

Hall of Public Audienceஐப் பார்த்த பிறகு அதனை விட்டுக் கீழிறங்கி புல்வெளியில் இருந்த பாதையில் நடக்க ஆரம்பித்தேன். மைதானத்தின் நட்ட நடுவே ஒரு சமாதி இருந்தது. அதனை நோக்கிச் சென்றேன்.

சிப்பாய் கலகமும், ஆக்ரா கோட்டையும். 

1857ல் நடைபெற்ற சிப்பாய் கலகம், கடைசியில் தோல்வியில் முடிந்தாலும் (இதனை முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்கிறார்கள்), அது தில்லி, ஆக்ரா, கான்பூர் மற்றும் லக்னோவில் பரவியிருந்ததுலக்ஹௌசி பிரபுவால் வட மேற்கு பிராந்தியத்திற்கு லெப்டிண்ட் ஜெனெரெல் பதவியில் நியமிக்கப்பட்டிருந்த ஜான் ரஸ்ஸல் கால்வின், ஆக்ரா கோட்டையில், சிறிய படையுடன் இருந்தார். முகலாயர்களிடமிருந்து பிரிட்டிஷாருக்கு ஆக்ரா கோட்டை வசமான பிறகு, அவர்கள் இதனை ஆயுதக் கிடங்காகவும், ராணுவ வீர்களுக்கான இடமாகவும் ஆக்கியிருந்தனர். அதற்காக பல கட்டிடங்களை (அதாவது முந்தைய அரண்மனை மற்றும் அதன் கட்டிடங்களை) அழித்தனர். 3 ஆண்டுகள் லெஃப்டிண்ட் ஜெனெரல் ஆக இருந்த ரஸ்ஸல் கால்வின், காலராவினால் ஆக்ரா கோட்டையில் இறந்தார். அவரது உடலை வெளியே கொண்டு செல்ல முடியாதவாறு வெளியில் சிப்பாய் கலகம் பரவியிருந்தது. அதனால் அவரது உடலை, ஆக்ரா கோட்டையிலேயே, பொதுமக்களை அரசர் சந்திக்கும் மண்டபத்தின் முன்பே புதைத்து அங்கு சிறு திறந்தவெளி கல்லறை அமைத்துவிட்டார்கள். சரித்திரப் புகழ் பெற்ற இடத்தை இடுகாடாக்கிய பிரிட்டிஷாரின் சிறுமைத்தனம் வெளிப்பட்டாலும், அந்தக் கல்லறை அப்படியே இன்றும் இருக்கிறது.

Hall of Public Audience முன்பு அந்தக் கல்லறை தெரிகிறதா?

ஜான் ரஸ்ஸல் கால்வினின் கல்லறை, ஆக்ரா கோட்டை. 


படிகளுடன் கூடிய பெரிய கிணறு. இதற்கான தண்ணீர், யமுனை ஆறு அருகில் இருப்பதால் ஊற்றுத் தண்ணீர்போலப் பெருகி இருக்கவேண்டும்.




அனேகமாக எல்லா இடங்களையும் பார்த்து முடித்த பிறகு அந்த வளாகத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தேன்.







நாம் நுழைந்த அமர்சிங் வாயில் வழியாகவே வெளியேறுகிறோம்.


'இங்கிருந்து அரசாண்டவர்களில் நான்தான், பரவாயில்லை ரகம். அகழிக்கு மேல் உள்ள இரும்புப் பாலத்தைத் தூக்குவதற்குள் பத்திரமாகச் சென்று வா' என்று என் காதில் அக்பர் பாதுஷா சொல்வதுபோல் தோன்றியது. அக்பர் கோட்டைக்கு வந்த நினைவுக்காக கோட்டை முன்பு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

முகலாயர்கள் சரித்திரம், அதாவது பாரத நாட்டின்மீது படையெடுத்த வெளிநாட்டவர்களின் சரித்திரம், படிக்க மிகவும் சுவாரசியமானது. பாரத நாடு என்பது தற்போதைய பாகிஸ்தான் முழுவதும் சேர்ந்தது என்பதை நினைவில் கொள்ளணும். அதனால்தான் தற்போதைய பாகிஸ்தானில் (லாகூர் மற்றும் பல இடங்களில்) முகலாயர் சம்பந்தமான சமாதிகள் அழகு செய்கின்றன.

பாரத அரசர்களுக்கும் முகலாய அரசர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு, பாரத அரசர்களிடையே இருந்த அறம்தான் (பெரும்பாலும்). மாற்றான் மனைவியைப் பெண்டாள்வது, தந்தை சகோதரர்களை அழிப்பது போன்றவைகளை பாரத தேச அரசர்கள் செய்ததில்லை

பஞ்சதுவாரகை யாத்திரையின் ஒரு சிறு பகுதியாக ஆக்ராவின் தாஜ்மலையும், ஆக்ரா கோட்டையையும் சுற்றிப் பார்த்தது, படங்களின் எண்ணிக்கையாலும், வரலாற்றின் முக்கியத்துவத்தாலும் நிறைய வாரங்கள் வந்துவிட்டதுபக்தி உலாவிலிருந்து முகலாயச் சரித்திரத்தில் நிறைய நேரம் செலவழித்துவிட்டோம். ஒன்று மன அமைதியை நிம்மதியைத் தருவது. இன்னொன்று, இப்படியெல்லாம் சம்பவங்கள் நடைபெற்றது இந்த இடத்திலா, என்ற பிரமிப்பு. சரி.. இனி நாம் பஞ்சதுவாரகாவின் பக்தி யாத்திரையைத் தொடர்வோம்.

தங்கியிருந்த இடத்திற்கு நடந்து வந்து சேர்ந்தேன். வெயில் மிகவும் அதிகம். ஆனாலும் மனதில் அக்பர் கோட்டையை முழுவதுமாகச் சுற்றிப்பார்த்த திருப்தி.  12 ½ மணி வெயில் என்றால் சும்மாவா? கோவில் வெளிச்சுவற்றில் பார்த்த ஒரு சிற்பம் கருத்தைக் கவர்ந்தது.

சிற்பத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா?

காய்ந்த துணிகளை மடித்து, லக்கேஜ்களை எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டேன்எல்லோரும் தயாராக வெளியில் காத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஆக்ரா பேதா (பூசனி இனிப்பு), தாஜ்மஹல் பளிங்குச் சிற்பங்கள், கண்ணாடியில் செய்யப்பட்ட காதணிகள் போன்ற பல பொருட்களையும் ஜரூராக, காலையில் சொன்ன விலையில் பாதியில் எங்களிடம் விற்க முனைந்தார்கள். நான் எந்தக் கடையிலும் (டூரிஸ்ட் இடங்களில்) வாங்கவேண்டிய பொருளைத் தவிர அதன் அருகிலிருக்கும் மற்ற பொருட்களுக்குத்தான் முதலில் விலை கேட்பேன். அப்புறம் கவனிக்காமல் இருந்தால், முதலில் விலை சொன்ன பொருட்களுக்கு புதிதாக குறைத்து விலை சொல்வார்கள். கடைசியில் அலட்சிய முகத்தோடு நான் வாங்கவேண்டிய பொருளுக்கு விலை கேட்டால், பெரும்பாலும் குறைத்து சரியான விலைதான் சொல்வார்கள். ஆர்வத்தோடு ஒரு பொருளின் விலையைக் கேட்டால், சரி..இவன் தலையில் கட்டிவிடவேண்டியதுதான், ரொம்பவே ஆசைப்படுகிறான் என்று நினைத்துக்கொண்டு பெரும்பாலும் அதிக விலைதான் சொல்வார்கள்.

மதியம் 1 ½ மணிக்கு பேருந்து கோகுலத்தை நோக்கிப் புறப்பட்டது. நான் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து தூரத்தில் தாஜ்மஹல் தெரிந்ததுநாம் சமாதிஎன்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும், 75 பில்லியன் ரூபாய் செலவழித்துக் கட்டப்பட்ட அந்த உலக அதிசயம், மிக அழகுதான்.

ஆக்ராவிற்கு கையசைத்துவிட்டு நாங்கள் அடுத்துச் செல்லவிருக்கும் கோகுலத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தேன். அதை அடுத்த வாரம் பார்க்கலாமா?

 (தொடரும்) 

54 கருத்துகள்:

  1. சரித்திரப் புகழ் பெற்ற இடத்தை இடுகாடாக்கிய//

    இருக்கலாம், ஆனா எல்லா இடமும் ஒருகாலத்துல இதற்கென்று இடம் வைக்கும்வரை கிடைத்த இடத்தில் புதைப்பது எரிப்பது. கேரளத்தில் வீட்டின் பின்புறம் புதைக்கும் வழக்கம்.உண்டு.

    நாம் இருக்கும் இடம் கூட ஒருகாலத்தில்.அப்படி இருந்த இடமாக இருக்கலாம். இப்ப வயநாடு பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு கேரளத்தில் வீட்டு தோட்டத்தில் எரிப்பதும் புதைப்பதும் சாதாரணம். கவுரமும் கூட. அன்னை தெரசா, மற்றும் சாய்பாபா அவரவர் இருந்த இடத்திலேயே புதைக்கப்பட்டனர்.
      Jayakumar

      நீக்கு
    2. வாங்க கீதா ரங்கன்(க்கா). முகலாய வம்ச அரண்மனை, அதன் நடுவில் ஆங்கிலேய தளபதியின் கல்லறை என்பது கொஞ்சம் ரசனைக்குறைவானதாகவே சரித்திர ஆசிரியர்கள் பார்க்கிறார்கள்.

      நீக்கு
    3. வாங்க ஜெயகுமார் சார். இந்த கலாச்சாரம் இந்துக்களிடையே பெரும்பாலும் இல்லை. காரணம் எரித்துவிடுவதால் இருக்கலாம்.

      நீக்கு
    4. மறுக்கிறேன். ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில்?
      Jayakumar

      நீக்கு
    5. ஆசார்யர்கள், குருமார்கள் (துறவிகள்) சம்ஸ்காரத்திற்கு என்று விதிகள் உள்ளன. அவர்கள் சரம உடல் அமர்ந்த நிலையில் கைகூப்பி அதில் தேங்காய் இருக்குமாறும் இன்னும் பலவித சாங்கியங்களுடன் அமர்ந்த நிலையில் இருத்தப்பட்டு, அதன் மீது சிறிய கோவில், அவர்களின் திருவுருடன் எழுப்பப்படும். இதனை பிருந்தாவனம் என அழைப்பர்.

      இதுவே அரசர், அரச மகளிரை (பெரும்பாலும் சைவ மதம்) புதைத்து அதன் மீது லிங்க உரு வைத்துக் கோயில் கட்டினால் அது பள்ளிப்படை என்றழைக்கப்படும்.

      நீக்கு
    6. திருவரங்கம் கோயில் பெரிய கோயில் என அழைக்கப்பட்டது. மிக மிகப் பெரிய வளாகம். இராமானுஜர் இறந்து சரமதிருமேனி ஊர்வலமாக வந்தபோது, அர்ச்சகர் முகேன என்று (அர்ச்சகர் ஆவேசம் வந்து அவர் வாயிலாக பெருமாளே ஆணையிடுவது) சொல்லும்படியாக வெளிச் சுற்றில் இருந்த மண்டபத்தில்தான் இராமானுசர் உடல் கிடத்தப்படவேண்டும் என்று சொல்லி அங்கே பிருந்தாவனம் அமைக்கப்பட்டது.

      இதுபோலவே மன்னார்கோவில் என்ற திருநெல்வேலி கோவில் ஒன்றில் குலசேகரப் பெருமான் சரம உடல் வைக்கப்பெற்று சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. ஞாயிறு பகுதியில் வரும்.

      நீக்கு
    7. காஞ்சி பரமாச்சார்யர் மற்றும் ஜெயேந்திர்ருக்கு காஞ்சிகாமகோடி பீடத்திலேயே இரு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

      நீக்கு
  2. மாற்றான் மனைவியைப் பெண்டாள்வது, தந்தை சகோதரர்களை அழிப்பது போன்றவைகளை பாரத தேச அரசர்கள் செய்ததில்லை//

    அப்படியா என்ன? யோசிக்க வைக்குது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி யோசிக்க வைத்ததே, இந்துக்களிடையே இத்தகைய செயல் பெரும்பாலும், அனேகமாக அறவே இருந்ததில்லை என்று சொல்கிறதல்லவா? இதை நான் நம் கலாச்சாரம் என்ற அளவில் காண்கிறேன். இதுபோல தூது வந்தவர்களுக்கு உயர்ந்த மரியாதை அளிப்பது

      நீக்கு
  3. அந்தப்படம் ராமர் லக்ஷ்மணன், சீதா, பர்ணசாலை பின் புறம். கீழே குகன்?

    கீதா

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம்.நல்லாருக்கு நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அமர்சிங் நுழைவாயில் படத்திற்குக் கீழே :

    இங்கிருந்து அரசாண்டவர்களின் நான் தான்....

    திருத்தம்: இங்கிருந்து அரசாண்டவர்களில் நான் தான்...

    பதிலளிநீக்கு
  6. சிற்பத்தில் இருப்பது யார் தெரிகிறதா?

    தெரிகிறது. குகன்

    வால்மீகி ராமாயணத்தில் எப்படியோ, இன்றைய வடகத்திக்காரர்கள், குஜராத்திகள் குகனுக்கு தங்கள் மனத்தில் என்ன ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறார்களோ?..

    'குகனுடன் ஐவரானோம்'
    என்று இராமன் டிக்ளேர் பண்ணுவதாக கம்பன் மிக உயர்வான இடத்தை குகனுக்கு இராமனின் மனத்தில் கொடுத்து மகிழ்கிறார்.

    பெருமாள் என்று அழைக்கப்படுபவர் இருவரே.

    ஒருவர் இளைய பெருமாள் லஷ்மணர்.

    இன்னொருவர்: குகப்பெருமாள்.

    கம்பராமாயணத்தில் குகனுக்கென்றே குகப்படலம் என்று ஓர் அத்தியாயத்தை ஒதுக்குகிறார் கவிச்சக்கரவர்த்தி.

    கம்பராமாயண குகப்படலத்தில் இராமனின் வருகை அறிந்த ஷணத்தில் அவரை வரவேற்க விரைந்த குகன், மீனும் தேனும் கொண்டு சென்றானாம். என்ன பசியில் அவர் இருப்பாரோ என்று பதைபதைத்து. அது தாயின் மனம் என்கிறார் கம்பர்.

    ஆம்.. வேட்டுவ குலத்தைச்
    சேர்ந்த குகனுக்கு தனது
    படைப்பில் மிக உயர்ந்த இடத்தைக் கொடுத்து மகிழ்ந்த கம்பருக்கு தமிழ் இலக்கியத்தில் இணை வேறு யார் உளர்? -- என்று வியக்க வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... தமிழ் இலக்கியங்களின் ரசனையே தனி. அதில் கவிஞர்கள் தமிழ் நிலத்துக்கே உரித்தானவற்றைக் கலந்து கொடுப்பர். இதனை சிலாகிக்க ஜீவி சாரைவிடப் பொருத்தமானவர் யார்?

      நீக்கு
    2. பொதுவாக இராமனுடன் தொடர்போ, அளவுக்கு மீறிய பக்தியோ இருப்பவர்களிடம் இந்த 'பெருமாள்' என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டுவிடும்.

      ஆழ்வார்கள் பன்னிருவரில், குலசேகர ஆழ்வாருக்கு, குலசேகரப் பெருமாள் என்றே பெயர், இத்தனைக்கும் தன் பத்து பதிகங்களில் மூன்று நான்கு பதிகங்களே இராமனைப் பற்றிப் பாடியிருந்தபோதும்.

      அவர் இராமனைப் பற்றி மிக அழகாக, ஒரு தாயின் நிலையில் தந்தையின் நிலையில் பாடியவைகள் உள்ளத்தை உருக்கும். ஒரு நாள் எங்கள் பிளாக்கில் எழுத ஆசை. ஶ்ரீராம் போன்றோ இல்லை உங்களைப் கோன்றோ எழுதும் திறமை இல்லாத்தால் கோனார் நோட்ஸ் போல் ஆகிவிடுமே என்ற அச்சம்தான் எழுதுவதைத் தடுக்கிறது.

      நீக்கு
    3. நானும் ரெடி நெல்லை. கம்பனின் மானுட நேயததை அவன் கண்ட இராமராஜ்யத்தைப்
      பற்றி தொடர்ந்து பின்னூட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்று நினைத்தவன் அத்துடன் நிறுத்திக் கொண்டேன். எழுதுபவர்களிலும் சரி, சரியான புரிதலுடன் வாசிப்பவரிலும் சரி எபி வர வர குறுகிக் கொண்டே வருகிறது.
      எது குறித்தும் விசாலமான பார்வையும் அது குறித்த தரமான விமர்சன வீச்சுகளும் அருகி வரும் நடைமுறைகளாகி விட்டன. இருக்கும் இடத்தில் நம் சிந்தனைகளையும் குறுக்கி அடைத்துக் கொள்ள வேண்டிய நிலை. மாற்றங்கள் வருமா என்று கணிப்பிற்கு காத்திருந்து பார்த்து வர கால அவகாசம் தேவையாக இருக்கிறது. பார்க்கலாம்.

      நீக்கு
    4. ஜீவி சார்... நல்ல எழுத்தை எல்லோருமே ரசிப்பார்கள். கம்பன், இராம காதையை எழுதும்போது தமிழ் கலாச்சாரத்துடன் நம் எண்ணங்களோடு எழுதியிருக்கிறான். இல்லாமலா, கம்பன் கழகம் என்று இராமாயணகாதையை மாத்திரமே எடுத்துக்கொண்டு பல தசாப்தங்களாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. கம்பநாட்டாழ்வான் என்றே அவர் குறிப்பிடப்படுகிறார் (ஆழ்வார்கள் அளவு இராமாயணத்தில் அவர் ஆழ்ந்துவிட்டதால்).

      துளசி ராமாயணத்தில் வருவதுபோல, கம்பரும், ராவணன், சீதையை பன்னசாலையோடு சேர்த்துத் தூக்கிக்கொண்டு சென்றான் என்கிறார். (வால்மீகி அப்படிக் குறிப்பிட்டதுபோலத் தெரியவில்லை)

      நீக்கு
  7. ​கோகுலம் பற்றிய செய்திகளையும், படங்களையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி யாத்திரைப் பகுதிகள் தொடரும் ஜெயகுமார் சார். நானும் மகள் திருமணம் அதைத் தொடர்ந்து பல வேலைகள் இருக்கும் என்று நிறைய பகுதிகளைப் பல மாதங்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்தேன். புதுப் பகுதிகளை எழுதும் நேரமும் வந்துவிட்டது.

      நீக்கு
  8. இறைத்தவாறு இருக்கும்
    இன்றைய படங்களில்
    மிக அழகு கோட்டைக்குள் செல்லும் அந்தக் குறுகிய
    பாதை படம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு ஒரு காரணம் உண்டு ஜீவி சார். வெளியிலிருந்து படையெடுப்பு நிகழ்ந்தாலும், கோட்டைக்குள் Z வடிவத்தில் குறுகலான பாதைதான். இரண்டுபுறச் சுவர்களிலும் உட்புறத்தில் அறையுடனும், ஆயுதங்களுடன் படைவீர்ர்களும் இருப்பர். படையெடுத்துவரும் குதிரைப்படையினர் மேடாக இருக்கும் இந்தக் குறுகலான பகுதியில் செல்லவேண்டும். கோட்டைக்குள் இருக்கும் படையோ எதிரே தாக்கவரும்போது தாழ்வான பகுதியை நோக்கிவரும். இப்படியெல்லாம் யோசித்துத்தான் இந்தப் பகுதி கட்டப்பட்டிருக்கிறது

      நீக்கு
    2. உங்கள் விவரிப்பு
      அந்தப் பாதையின் அமைப்பை கண்முன் நிறுத்துகிற
      து நெல்லை. நன்றி.
      சாண்டில்யனும் கூடவே ஞாபகத்திற்கு வந்தார்.

      நீக்கு
    3. இந்தப் பாதையிலும் ஒவ்வொரு அரை அடிக்கும் (அல்லது முக்காலடிக்கும்) சிறிய மேடாக (அதை மேடு என்று சொல்லக்கூடாது, 1 இஞ்ச் உயரத்தில் அரைக்கிண்ண வடிவில்.. அரைக்கிண்ணத்தில் உயரமான பகுதி 1 இஞ்ச் இருக்கலாம்) வரிசையாக அமைத்திருக்கிறார்கள். இதன் காரணம், மழை பெய்தாலும், குதிரை வேகமாகச் செல்லும்போது வழுக்கிவிடக் கூடாது என்று.

      நீக்கு
  9. படங்கள் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உள்ளன!

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    நீங்கள் பொருட்கள் வாங்கும் வித்தையை முன்பே எழுதி இருந்தால்.

    தேவகோட்டையில் நிறைய இடங்கள் வாங்கி போட்டு இருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி.

      இடங்கள் வாங்குவதைப் பற்றி - என் எண்ணம், நமக்கு எவ்வளவு விதிக்கப்பட்டிருக்கோ அதைவிட 1 செ.மீ அதிகம் இடம் நாம் வாங்க இயலாது. எனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தன. சில மிகவும் அருகாமையில் வந்தன, ஆனாலும் வாங்க இயலவில்லை. இடம் வாங்குவது மாத்திரம் நம் ஜாதகத்தில் இருக்கவேண்டும் கில்லர்ஜி.

      நீக்கு
    2. இடம் மாத்திரமல்ல, செல்வமும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் மகன், என் ஆபீஸ் வந்திருந்தபோது, என்னை பிட் காயின்ல இன்வெஸ்ட் பண்ணுங்க அப்பா என்றான். அப்போது நான் நினைத்திருந்தால், சிரமமே இல்லாமல், மாதத்திற்கு 2 பிட் காயினாவது வாங்கியிருக்கலாம். நான் சின்னப் பையன், இது மாதிரி கேம்பிளில் இறங்குவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று தெரியாது என்று நினைத்தேன். ஒருவேளை பத்து பிட் காயின்கள் மாத்திரம் வாங்கியிருந்திருந்தால்,.......

      நீக்கு
  12. /// நீங்கள் பொருட்கள் வாங்கும் வித்தையை முன்பே எழுதி இருந்தால்.

    தேவகோட்டையில் நிறைய இடங்கள் வாங்கி போட்டு இருப்பேன்.///


    கில்லர் ஜி அவர்களது கருத்தை வழி மொழிகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜிக்குக் கொடுத்த பதிலே உங்களுக்கும் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  13. சிறப்பான பதிவு...

    விவரங்களுடன் படங்களும் அழகு.. அழகு..

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீ ராமாயண சிற்ப தரிசனம்...

    புண்ணியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைவிட கிருஷ்ணன் விளையாடிய, லீலைகள் பல புரிந்த கோகுலத்திற்கு அடுத்த வாரம் செல்ல இருக்கிறோம் பதிவின் மூலமாக.

      நீக்கு
  15. /// இடம் வாங்குவது நம் ஜாதகத்தில் இருக்கவேண்டும் கில்லர்ஜி. ///

    விளக்கெண்ணெயைப் பூசிக் கொண்டு வீதியில் புரண்டாலும் ஒட்டுகின்ற மண் தான் உடலில் ஒட்டும்....

    இந்த மாதிரி பார்த்தும் கேட்டும் வளர்ந்தவன் நான்..

    இந்த விஷயங்களில் அன்றெழுதியவன் அழித்து எழுதப் போவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ நம் வாழ்க்கையை அசைபோட்டால் பல நிகழ்வுகளுக்கும், நம் தாழ்வு, உயர்வு, மீண்டும் தாழ்வு, சேர்த்த சொத்து, சேர்க்க மறந்த சொத்துக்கள்... என எவற்றிர்க்கும் நாம் நேரிடைக் காரணமல்ல என்பது புரிகிறதல்லவா?

      நீக்கு
  16. கோட்டை பற்றிய விபரங்களும் படங்களும் நன்று.
    ராம் அன்ட் கோ சிற்பம் அழகு. வருகிறோம் யாத்திரையில்......

    பதிலளிநீக்கு
  17. கோட்டை பற்றிய விபரங்களும் படங்களும் நன்று.
    ராம் அன்ட் கோ சிற்பம் அழகு. வருகிறோம் யாத்திரையில்......

    பதிலளிநீக்கு
  18. தாஜ்மஹல் பார்த்துவிட்டு விட்டால் போதும் என்று ஓடியது நினைவுக்கு வருகிறது. ஆக்ராவில் எதையும் பார்க்கவில்லை. கட்டுரை படித்ததும் டேல்ரிம்பில் எழுதிய கடைசி முகல் புத்தகம் நினைவுக்கு வந்தது.

    [ஜீவி அவர்களின் கம்ப வம்பு சுவாரசியம். குகனுக்கும் ராமாயணத்துக்கும் பொருத்தமே இல்லை என்று அடிக்கடி தோன்றும். வேறு எதையும் தமிழ்ப்படுத்தாத கம்பன் இதை நுழைப்பானேன் என்று நினைத்ததுண்டு.]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பாதுரை சார். அபூர்வ வருகை.

      நடந்த நிகழ்வுகள் இராமாயணம் என எண்ணிப் படிக்கும்போது இப்படி என் மனதில் தோன்றுவதில்லை.

      குகனோடு ஐவரானோம், வீடணனுடன் அறுவரானோம் வார்த்தைகள்தாம் மனதில் தோன்றுகின்றன

      நீக்கு
  19. அகலிகை கதையும் அதே. பொருந்தவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் பார்த்தால் சபரி, மற்றும் இன்னும் பல கிளைக் கதைகளும் இருக்கின்றன.

      நீக்கு
  20. படங்கள் அனைத்தும் அருமை. செய்திகளும் அருமை.

    ஆகரா கோட்டையில் ஜான் ரஸ்ஸல் கால்வினின் கல்லறை, பெரிய கிணறு பார்த்த நினைவு இல்லை. விவரங்கள் அருமை.

    //கோவில் வெளிச்சுவற்றில் பார்த்த ஒரு சிற்பம் கருத்தைக் கவர்ந்தது.//

    மிக அருமையாக குகன் கதையை சொல்லும் சிற்பம்.

    பதிலளிநீக்கு
  21. கோட்டை படங்கள் நன்று. பக்தி உலாவில் இப்படி வரலாறும் கலந்து - நல்லது. கோகுலத்தில் சந்திப்போம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். மற்ற பகுதிகள் எழுதணும். இரண்டு நாளா உட்கார்ந்தும் எழுதும் மூடு வரலை

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!