நெல்லைத்தமிழன் :
தமிழின் மகத்தான 10 நாவல்கள், 100 சிறுகதைகள் என்றெல்லாம் சொல்கிறார்களே. இதற்கான அளவீடு ஒவ்வொருவருக்கும் மாறுபடுமல்லவா? எதை வைத்து இந்த நாவல்தான் சூப்பர் என்று இவர்களால் சொல்ல முடிகிறது? (இனிமேல் இந்த மாதிரி கதை விட்டீங்கன்னா, வெண்முரசு அல்லது காவல் கோட்டம் நாவலை ஒரு இடத்தில் உட்கார்ந்து முழுவதும் படித்து அதில் வைக்கும் பரீட்சையில் பாஸானால்தான் நகர விடுவோம் என்று சொல்லணுமோ?)
# ஒவ்வொருவருடைய ரசனை ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும் கூட பொதுவான நோக்கில் ஒரு நல்ல கதை அல்லது ஒரு நல்ல நாவல் என்று சொல்லக்கூடிய தரம் கொண்ட கதையோ நாவலோ இருக்கத்தான் இருக்கும். எவ்வளவுதான் ரசனை வேறுபட்டாலும் பெரும்பாலான மக்கள் நல்லவை என்று ஒப்புக் கொள்வார்கள் என்ற மதிப்பீடு பொய்ப்பதில்லை. தேர்வு செய்பவர்கள் நமக்குப் பிடித்தவர்களானால் ஒரு உத்தரவாதம் மாதிரி. அதனால்தான் ஒரு சுஜாதாவோ சிவசங்கரியோ நல்ல கதை என்று சொன்னால் அதற்கு ஒரு மரியாதை இருக்கிறது.
உங்களுக்கு மிகவும் பிடித்த 3 நாவல்கள் பெயர்கள் என்ன? அவை திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுபவைகளாக இருக்கவேண்டும்.
# நான் மீண்டும் மீண்டும் படித்த நாவல் என்று சொல்வதானால் மோகமுள், அன்பே ஆரமுதே, பொன்னியின் செல்வன் : ஆங்கிலத்தில் Man and Superman, The Razor's Edge.
& பொன்னியின் செல்வன், ரா கி ர எழுதிய மூவிரெண்டு ஏழு, குமுதம் பத்திரிகையில் முன்பு வந்த பல சித்திரக் கதைகள் .
முன்னெல்லாம் பதிவர் விழா என்றெல்லாம் இருந்தது. பலரையும் சந்திக்கும் வாய்ப்பு பலருக்குக் கிடைத்தது. இப்போது பதிவர்களை சந்திப்பதே அபூர்வமாகிவிட்டதே. நீங்கள் சென்றிருந்த பதிவர் விழா பற்றிச் சொல்லுங்களேன்.
# நம் அபிமான இவர் அல்லது அவர் சந்திக்காமல் இருக்கும் வரை நமது உச்ச பட்ச ஆராதனைக்குரியவராக இருப்பார். நான் பதிவர்கள் சந்திப்பிற்குப் போனதில்லை.
& பதிவர் சந்திப்பு, பதிவர் விழா எல்லாம் எ பி ஆரம்பித்த சில வருடங்களுக்கு இரண்டோ மூன்றோ சென்றது உண்டு.
ஆனால் அங்கே வந்தவர்கள் பலரும் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதை விட - தங்களைப் பற்றியே ( சுயதம்பட்டம்) பேசிக் 'கொல்'பவர்களாக இருந்ததுதான் வேதனை.
== == ==== ====
படமும் பதமும் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
காருக்கும் உண்டோ
காந்த கண்ணும்
காக்கின்ற இமையும்?
காதலைக் கண்டால்
கண்சிமிட்டி சிரிக்குமோ?
= = = = = = =
ஸ்ரீராம் :
இலை தாங்கும் மொட்டு...
பூ விட்டு காய் விட்டால் கனம் தாங்குமா?
= = = = =
" டாய்.... கிளாரிட்டி இல்லாம என்னடா இது? "
" Toy Clarinet ங்க.. "
= = = = = = = = = =
நெல்லைத்தமிழன் :
என் மனைவியிடம், நீ செய்யும் முறுக்கு மாவு ரொம்பவே சூப்பர். அதில் முறுக்கு செய்வது உனக்கு ரொம்ப கஷ்டம். சூப்பி வேண்டுமானால் செய்துகொடு என்றதற்கு, நான் முறுக்கே செய்து தருகிறேன் என்றாள். அப்படீன்னா எனக்கு குறைந்தது 24 முறுக்காவது வேண்டும். என் கையில் கொடுத்துவிடவேண்டும். டப்பால போட்டிருக்கேன் என்று சொன்னால், அப்புறம் எனக்கு 24 முறுக்கு எனக்காகவே செய்தமாதிரி இருக்காது என்று சொல்லியிருந்தேன். அதற்காக அவள் முறுக்கு செய்த பிறகு ஒரு கம்பியில் கோர்த்து என்னிடம் கொடுத்தபோது நினைவுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
எலெக்டிரானிக் வேஸ்டை வைத்து ஒரு பெரிய ஓவியம் செய்திருந்ததை நான் புகைப்படம் எடுத்தேன் (Mall பெயர் சட்னு நினைவுக்கு வரலை). ஓவியம் நல்லா இருக்கு. ஆனால் எலெக்டிரானிக் வேஸ்டை வைத்து வேறு ஏதாவது செய்திருக்கலாம். இதுபோல வேஸ்ட் மெட்டீரியல் வைத்து அல்லது உடைந்த பீங்கான்களை வைத்து நிறைய சிற்பங்களை பாலக்காடு மலம்புழா அணைக்கட்டு அருகே பார்த்தேன். அந்தப் படங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.
சமீபத்தில்தான் வாட்சப் தகவலில் படித்தேன். பைசா நகர சாய்ந்த கோபுரம் 4 டிகிரிகள்தாம் சாய்ந்திருக்கிறதாம். அதற்கே அது உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஆனால் இந்த சிவன் கோவில் 9 டிகிரிகள் சாய்ந்திருக்கிறது. இதற்கு அதைவிட புகழ் கிடைத்திருக்கவேண்டாமா என்று. உடனே நான் வாரணாசி சென்றிருந்த பயணங்களின் புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்து இந்தக் கோயிலின் புகைப்படத்தைப் பகிர்கிறேன். இது மணிகர்ணிகா படித்துறைக்கு அருகே இருக்கிறது. (இது நம் முன்னோர்களின் திறமை என்று சொல்லவரவில்லை. கட்டிடத்தின் அடித்தளம், மணல்/களிமண் பரப்பினால் ரொம்ப வருடங்களாகவே சாய்ந்த நிலைக்குச் சென்றிருக்கலாம்)
KGG பக்கம் :
Jio Hotstar serials
After HUNT, and Criminal Justice serials,
நான் பார்த்தவை :
Special Ops
Hundred
The Freelancer
அது என்னவோ சின்ன வயதிலிருந்தே எனக்கு நகைச்சுவை கதைகளுக்கு அடுத்தபடியாக திகில் கதைகள், துப்பறியும் கதைகள், கோர்ட் சீன் கதைகள் எல்லாம் பிடிக்கும்.
ஜியோ ஹாட் ஸ்டார் தொகுப்புகளில் இந்த த்ரில்லர்கள் நிறைய கொட்டிக் கிடப்பதால் அதை என் ஆஸ்தான பெட்டகமாக எடுத்துள்ளேன். என்னென்ன பார்க்க வேண்டும் என்பதை பட்டியல் போட்டு வைக்க வேண்டும்.
இவற்றில் என்ன சௌகரியம் என்றால் டி வி யை பேசா மடந்தை ஆக்கிவிட்டு சப் டைட்டில்ஸ் படித்தே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
நல்ல பொழுதுபோக்கு.
க்ரைம் த்ரில்லர் ஆக்ஷன் சீரியல்கள் வரிசையில் உங்கள் (வாசகர்கள்) பரிந்துரைகளை கருத்துரை பகுதியில் குறிப்பிடவும்.
சொல்ல மறந்துவிட்டேன்:
முன் காலத்தில் பார்க்க நினைத்து, ஆனால் நேரம் கிடைக்காததால் பார்க்காமல் விட்ட சில படங்களை சென்ற வாரம் பார்த்தேன்.
1) Ajanabee
2) Anurodh
இரண்டுமே ராஜேஷ் கன்னா நடித்த படங்கள். சக்தி சமந்தா(?) தயாரிப்புகள் எதுவும் சோடை போனதில்லை என்று நினைக்கிறேன்.
முன் காலத்தில் இந்தி தெரியாமல் ஆராதனா, தோ ராஸ்தே, சச்சா ஜுட்டா, ஆன் மிலோ சஜனா, போன்ற படங்கள் பார்த்தது உண்டு. பாடல்களை மட்டும் ரசித்தது உண்டு.
இப்போ பாடல்கள் கேட்க முடியாவிட்டாலும் சப் டைட்டில்ஸ் மூலம் படத்தின் கதை வசனம் புரிந்துகொள்ள முடிகிறது.
இன்னும் சில ரா க படங்கள் பார்க்க வரிசையில் வைத்துள்ளேன்.
ராஜேஷ் கன்னா பற்றி குறிப்பிடுகையில், காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடராக எழுதிய 'பாலிவுட்டின் அமானுஷ்ய பங்களா' கட்டுரை ஞாபகம் வருகிறது.
ஜுஹு கடற்கரைப் பகுதியில் ராஜேஷ் கன்னா வாங்கிய ' டிம்பிள்' பங்களா எப்படி அவரின் வாழ்க்கையில் விளையாடியது என்பது பற்றிய தொடர் பதிவு அது. விரைவில் அந்தக் கட்டுரைத் தொடர், புத்தகமாக வெளி வர உள்ளது.
= = = = = = = = = = =
பாலிவுட்டின் அமானுஷ்ய பங்களா எனக்கு இரண்டை நினைவுபடுத்துகிறது.
பதிலளிநீக்குநான் கல்லூரி நாட்களில் நெல்லை அருகே தியேட்டரில் பார்த்து பல இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு பயந்த புரான் மந்திர் திரைப்படம்
என் தில்லி கஸின் பதின்ம வயதில் தில்லியில் அனேகமா பழைய தில்லியாக இருக்கலாம், சமாதிகள் இருந்த இடத்தில் விளையாடும்போது அங்கிருந்த வாள் ஒன்றை வீட்டுக்குச் சுமக்க முடியாமல் சுமந்து வந்து அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தன் அறையில் வைத்தானாமாம். அது மணிக்கொரு தடவை தூக்கும்போது எடை குறைய ஆரம்பித்ததாம். மறுநாள் ரொம்பவே எடை குறையவும் தூக்கிப் போட்டுவிட்டேன் பயந்துகொண்டு என்றான்
சுவாரஸ்யமான தகவல்! கருத்துரைக்கு நன்றி.
நீக்குநான் நெட்ஃப்ளிக்ஸில் பார்த்த FAUD தொடர் நினைவுக்கு வருது. அருமையான தொடர். Sniper சம்பந்தமான படங்களும் பிடிக்கும்
பதிலளிநீக்குவிரைவில் பார்க்கிறேன். நன்றி.
நீக்குகாரில் பெண் இருந்தால் கண்ணடிக்குமோ? இந்தக் காரே பெண்போலத்தானே இருக்கு
பதிலளிநீக்கு:))))
நீக்குமற்றவர்கள் தங்களைப் பற்றியே பேசினால் என்னவாம். அவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்துவிடுமல்லவா? அது சரி.. அந்தப் பதிவர்கள் லிஸ்டை ஸ்ரீராம் எப்போது வெளியிடுவார்?
பதிலளிநீக்குஸ்ரீராம் எங்கே இருந்தாலும் மேடைக்கு அழைக்கப்படுகிறார்
நீக்குடண்ட்டடாய்ங்...
நீக்குஇதோ வந்துட்டேன்...
உக்கும்... (தொண்டையை கனைத்துக் கொள்கிறேன்)
அதாவது...
நான் என்ன சொல்ல வர்றேன்னா....
சேச்சே....
என்ன கேட்க வர்றேன்னா....
நெல்லை 'அந்த பதிவர் லிஸ்ட்'டை என்று ஏதோ கேட்டிருக்கிறார்.
எந்த பதிவர் லிஸ்ட்?!
இதே கௌதமன் சாராக இருந்திருந்தால், ஆலிலையில் துயிலும் கடவுளின் பெயர் கொண்ட, லட்டு பிரசாதம் தரும் ஊரின் பெயரில் பாதியை உடைய என்றெல்லாம் கிசுகிசு பாணியில் எழுதியிருப்பார். ஸ்ரீராம் என்னவோ ஆட்டோவை நினைத்துத் தயங்குகிறாரோ
நீக்குஉங்களுக்கு கிசுகிசு வேண்டுமா நெல்லை?
நீக்குபப்பு என்று அன்புடன் அழைக்கப்படுபவரின் இயற்பெயரினரின் தந்தை பெயரைக் கொண்ட அந்த பதிவரை, கண்ணன் ஆதிசேஷன் பெயர் கொண்ட ஒரு வாசகரும், பாரதப்போர் தொடங்குமுன் கிருஷ்ணன் அருளிய உரையின் பெயரை முன்பாதியாகிடவும் பாற்கடலில் பள்ளிகொண்டவரின் பெயரை பின்பாதியாகவும் கொண்ட பதிவரும் சந்தித்து உரையாடியதாக தகவல்கள் கசிகின்றன!
ஹாஅஹாஅஹாஅஹாஹாஹ....ஹையோ ஹையோ சிரிச்சு சிரிச்சு கடவுளே! முடியலைப்பா...ஸ்ரீராம்.
நீக்குகீதா
ராகுலின் தந்தை ஸ்ரீராம் அவர்களை அக்காவும் நானும் சந்தித்ததில்லையே எனக் குழம்பிவிட்டேன். இதுதான் கிசுகிசுவின் வெற்றி. ஹேப்பிமேன் முந்திரி அல்வா எப்போது கிடைக்கும் உங்களிடமிருந்து ஸ்ரீராம்?
நீக்குமூவிரண்டு ஏழு நாவல் படித்ததில்லையே. அவ்வளவு நல்லா இருக்குமா? எதைப்பற்றிய நாவல் இது?
பதிலளிநீக்குயா கி ர குமுதத்தில் 1965 காலத்தில் தொடர்கதையாக எழுதினார்
நீக்குரா கி ர
நீக்குவியாழனுக்கும் புதனுக்கும் வித்தியாசம் தெரியாமல் எ பி மாறிவருகிறது. நெல்லையின் கேள்விகள் மட்டுமே இன்று புதன் என்பதை நினைவூட்டுகின்றன.
பதிலளிநீக்குகார் நோ பார்க்கிங்கில் இருப்பதாகத் தோன்றுகிறது. போட்டோ எடிட் செய்யப்பட்டதானோ அல்லது காரில் ஒரிஜினல் வரைவாக இருந்ததோ தெரியவில்லை. கண்களுக்கு இமைகள் இல்லாமல் எப்படி இமை முடிகள் தோன்றின.
நெல்லை முறுக்கு விற்க தொடங்கிவிட்டாரா?
Jayakumar
காலைலயே ஜெயகுமார் சார் கண் வைக்கிறாரே. நானே நான் மட்டுமே சாப்பிட்டேன். நல்ல ருசி. சில வாரங்களில் என் பெண் எனக்குச் செய்ததைப் பகிர்கிறேன். அவள் செய்தது மறக்க இயலாதது
நீக்குஆவலுடன் காத்திருக்கிறோம்
நீக்குNellai's daughter in India?
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா
நீக்குதிருச்செந்தூர் உவரி குல தெய்வ வழிபாடு நல்லபடியாக அமைந்தது..
பதிலளிநீக்குஅனைத்தும் அவனருள்..
__/\__
நீக்குகுலதெய்வக் கோயிலில் படுத்து உறங்குவதை விடவும் வேறு பாக்கியம் உளதோ...
பதிலளிநீக்குஇல்லை.
நீக்கு24 முறுக்குடன், புன் 'முறுவல்' உடன் வீற்றிருக்கும் நெல்லையின் படம் அருமை. ரசித்தேன்.
பதிலளிநீக்குநாங்கள் பதிவர்கள் விழா என்றால் ஒன்றே ஒன்றுதான் கந்துகொண்டோம். புதுக்கோட்டையில் நடந்த பதிவர் விழாவில்.
ஸ்ரீராம் பகிர்ந்திருக்கும் டாய் கிளாரிட்டி இல்லாத கிளாரினெட்டை ரசித்தேன்.
நெல்லை சொல்லியிருப்பது போல் பீங்கான் வேஸ்ட்களைக் கொண்டு கலை வடிவங்கள் பாலக்காடு மலம்புழாவில் உண்டு.
காசியில் இப்படி ஒரு சிவன் கோவில் இருப்பது புதியதாக அறிகிறேன். தண்ணீருக்குள் இருந்தால் கோவிலுக்குள் செல்வது எப்படி?
இந்த எலக்ட்ரானிக் வேஸ்ட் கொண்டு செய்ததும் நன்றாக இருக்கிறது,
சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் பகிர்நிருக்கும் கார் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
ராஜேஷ்கன்னாவுடன் அதைத் தொடர்ந்து வரும் தகவலும் புதியது.
துளசிதரன்
பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஎங்க வீட்டிலேயே அம்பத்தூரிலேயும் ஸ்ரீரங்கத்திலேயும் 2,3 பதிவர்கள் சந்திப்பு நடந்தது உண்டு. நம்ம ரங்க்ஸ் தான் உபசரிப்பை முழுதுமாக ஏற்றுக்கொண்டு எல்லோருக்கும் டிஃபன் வாங்கி வருவார். காஃபி அல்லது தேநீர் மட்டும் வீட்டில் போடுவேன். சென்னையில் இருந்தப்போ வீட்டுச்சமையல் தான் அதிகம் பண்ணி இருக்கேன். அங்கே அடிக்கடி யாரானும் வந்துட்டே இருப்பாங்க.
நீக்குநெல்லை அதென்ன கணக்கு 24!!!! உங்க கணக்கு சரியா எண்ணிப் பாருங்க நெல்லை...கம்பில 3 முறுக்கு கூடுதலா இருக்கு!!!!!!!!!! ஆ மறுபடியும் எண்ணினா 28!!!
பதிலளிநீக்குஇந்த சைஸ்ல இத்தனை செய்ய 2 கப் மாவு வேண்டியிருந்திருக்கும்னு நினைக்கிறேன். நான் செய்யும் கணக்குப்படி சொல்றேன்.
கீதா
கணக்குப் புலி !!
நீக்கு24 கேட்டேன். சின்னது பெருசுன்னு சொல்லிவிடலாம் கூட நாலு
நீக்குஎக்ஸ்டிரா முறுக்குகளை எனக்கு போர்ட்டர் ஆப் மூலம் அனுப்பவும்.
நீக்குமுறுக்கு சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. பச்சரிசி கை முறுக்கும் சரி...புழுங்கலரிசி கை முறுக்கும் சரி
பதிலளிநீக்குஅதிலும் எனக்கு நெல்லைப்பக்கம் செய்யும் புழுங்கலரிசி கை முறுக்கு ரொம்பப் பிடிக்கும். நம் வீட்டில் கிருஷ்ணஜெயந்தி தவிர மற்ற சமயங்களில் புழுங்கலரிசி முறுக்குதான் செய்வாங்க எங்க வீட்டில்.
மாமியார் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி தவிர வேறு எப்பவுமே முறுக்கே செய்யமாட்டாங்க. அதுவும் பச்சரிசி முறுக்கு மட்டும்தான்,
இப்பதான் நான் வீட்டில் செய்யறதே இல்லை. புழுங்கலரிசி முறுக்கும் செஞ்சு நாளாச்சு. போன தீபாவளிக்குச் செஞ்சு தில்லிக் கொண்டு போனதோடு சரி.
கீதா
Yummy yummy
நீக்குபானுக்கா பகிர்ந்திருக்கும் கார் ரொம்ப வித்தியாசமாக இருக்கு. ஒரு வேளை ஃபோட்டோவில் லைட் மேலே எடிட்டி செய்து வரைஞ்சிருப்பாங்களோ? இல்லை கார் ஓனர் அதில் இப்படி வைத்திருப்பாங்களோ!!
பதிலளிநீக்குஅதுக்கான அக்காவின் கவி சூப்பர்.
கீதா
கவி என்றால் குரங்கு என்று எங்கோ படித்தேன்.
நீக்குமந்தி சிந்து கனிகளுக்கு வான்'கவி'கள் கெஞ்சும்.
எதிரில் இருக்கும் பெண் வந்து இந்தக்காரில் அமர்ந்திருக்கும் ஏதாச்சும் ஆண்பிள்ளைதான் இப்படி வேண்டுமென்றே செய்கிறானோன்னு கண்டாடிய அடிச்சு உடைச்சிட்டா? ஹிஹிஹிஹி.....
பதிலளிநீக்குகீதா
:)))
நீக்குகுரங்குக்குட்டி மல்லாந்து கால் தூக்கி சரண்டர்னு உடல்மொழி கொடுத்திருச்சு...நாய் எதுவும் செய்யாது அதுவும் பரிசோதனை வேறு நடத்துதே!!
பதிலளிநீக்குபடம் ரொம்ப அழகா இருக்கு
கீதா
நானும் இந்த சிவன் கோவில் பத்தி வாசித்தேன் அது தண்ணீரில் அடியில் இப்படி ஆகி சாய்ந்திருக்கும் நீங்க சொல்லியிருப்பது போல், நெல்லை
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம், உங்க இலை தாங்கும் மொட்டு ஃபோட்டோ முதல்ல ஏதோ பூச்சியோன்னு நினைச்சுப் பார்த்தா அழகா இருக்கு மொட்டு. கவி வரிகளும் கலக்கல்!
பதிலளிநீக்குடாய் கிளாரினெட் = வரி வாசித்ததும் சிரித்தேன்.
எனக்கு அதை டக்குனு பார்த்ததும் துணி உலர்ட்தும் க்ளிப் அதை இப்படி வைச்சு ஃபோட்டோ எடுத்தீங்களோன்னு நினைச்சுப் பார்த்தா அதுல ஸ்வரம் மேல எழுதியிருக்கு.
கீதா
எனக்கு நகைச்சுவை கதைகளுக்கு அடுத்தபடியாக திகில் கதைகள், துப்பறியும் கதைகள், கோர்ட் சீன் கதைகள் எல்லாம் பிடிக்கும். //
பதிலளிநீக்குகௌ அண்ணா ஹைஃபைவ்! எனக்கும்...
ஆனா ஓடிடி இல்லாததால் நிறைய மிஸ்ஸிங்க்.
காலச்சக்கரம் - நடிகர்களின் அனுபவ அமானுஷ்யங்களையும் எழுதுகிறாரா!!!
கீதா
ஆம். அமானுஷ்யம் அவருடைய ஃபேவரைட் சப்ஜெக்ட்.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை படமும் படங்களும் நன்றாக உள்ளது. கண் சிமிட்டும் காரி(ர்)கை. ரசித்தேன்.
வேஸ்டான எலக்ட்ரானிக் பொருட்கள் ஒரியன் மாலில் நானும் பார்த்து போட்டோ எடுத்து வைத்துள்ளேன்.
மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா.? என்ற அன்னப் படத்தின் பாடல் சகோதரர் அவர்கள் அனுப்பிய படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது
போகிறப் போக்கில்
பூத்துக் காய்க்காமல்
இலை மீது
தலை சாய்த்ததேனோ..?
என யார் கேட்டு விடப்போகிறார்எள் என்ற தைரியம். அந்த பூவுக்கு.ரசித்தேன்.
தங்கள் பக்கமும் அருமை.இந்த திகில் மாளிகை நானும் படித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"சகோதரர் ஸ்ரீராம் அனுப்பிய படத்தை" என டைப் அடித்தேன். ஆனால், கருத்தை வெளியிட்டப் பின் ஸ்ரீராம் எப்படியோ நைசாக நழுவி விட்டார்.:)))
நீக்குபுரிந்தது.
நீக்குகேள்வி பதில்கள் படித்தேன்.
பதிலளிநீக்குகார் படமும், கவிதையும் பானுமதியா?
இலை தாங்கும் மொட்டு...//
பூ இதழ்களை உதிர்த்து விட்டு இருப்பது போல இருக்கிறது பூவின் நடு பகுதி மட்டும் இருப்பது போல உள்ளது.
கிருஷ்ணஜெயந்தி வரப்போகிறது கைமுறுக்கு அதை நினைவு படுத்துகிறது.
கைமுறுக்கு படம் நன்றாக இருக்கிறது.
குரங்கு நாயின் ஒரு காலை பிடித்து இருக்கிறது, இன்னொரு கையால் நாயின் வாயை பொத்தி இருக்கிறது.
அடுத்த படத்தில் குரங்கு நாயின் காதில் ரகசியம் சொல்வது போல இருக்கிறது. நாயும், பூனையும் நட்பாய் இருக்கிறது, குரங்கும் , நாயும் நட்பாக இருக்க கூடாதா?
நியாயமான சந்தேகம்!
நீக்குகெளதமன் சார் சொன்னது போல திகில் கதைகள், கிரைம் கதைகள்
பதிலளிநீக்குநகைச்சுவை கதைகள் என்று படித்தது ஒரு காலம். இப்போது கதைகள் படிப்பது குறைந்து விட்டது.
எனக்கும் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது.
நீக்குஎனக்கு மிகவும் பிடித்த நாவல் எனில் தேவனின் எல்லா நாவல்களும் பிடிக்கும். அதைத் தவிர்த்து கல்கியின் அமரதாரா, பொன்னியின் செல்வன், அநுத்தமாவின் நைந்த உள்ளம், கேட்ட வரம் ராஜம் கிருஷ்ணனின் அமுதமாகி வருக. (இதைத் தேடறேன், கிடைக்கலை) மறு வசிப்புக்காக.
பதிலளிநீக்கு