7.8.25

பிறப்பு இறப்பில் தொடரும் ஆத்மாவின் நீண்ட பயணம்

இறப்பு என்பது என்ன? ஆன்மாவை நாம் காண முடிவதில்லை, உடலைத்தான் காண்கிறோம். அப்படியென்றால் ஆன்மா எங்கு சென்றிருக்கும்?  உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. அத்வைத கோட்பாடு பிரகாரம் ஆன்மா பரமாத்மாவின் ஒரு பகுதியே. உடல் என்னும் கூட்டை நீங்கும் ஆன்மா பரமாத்மாவை சென்றடையும் அடுத்த பிறவி நேரும் வரை. இது என்னுடைய புரிதல்.


கடந்த புதன்கிழமை (நேற்று அல்ல!) பதிவில் JKC இந்தக் கேள்வியைக் கேட்ட மறுநாள் நான் 'உவுக்கு ஆயிரம் கண்கள்' புத்தகம் முடித்து அடுத்த புத்தகத்தை எடுத்தேன்.

படித்துக் கொண்டு வரும்போதே JKC யின் கேள்வி மனதில் நிழலாடியது.  காப்பிரைட் பிரச்னையால் புத்தகத்திலிருந்து அப்படியே போடமுடியாது.  படித்ததிலிருந்து சில பகுதிகளை சுருக்குகிறேன்.  பாதி புத்தகம்தான் வந்திருக்கிறேன்.

பிறப்பும் இறப்பும் ஆத்மாவின் பயணங்கள் ஒரு உடலை தேர்வு செய்து ஆத்மா ​அந்த உடலுக்குள் நுழைவது பிறப்பு​. நோயால் அல்லது மூப்பால் உபயோகமற்று போன அந்த உடலை விட்டு ஆத்மா வெளியேறுவது இறப்பு. (இது 'சட்டையை மாற்றும் ஆத்மா' கீதை வாசகத்துக்கு உதாரணம்) 

வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் முற்பிறப்பு மறு பிறவி என்பதையெல்லாம் பற்றி ஆராய்ச்சி செய்தபோது சில விஷயங்கள் சொல்லி இருக்கிறார்கள்.  ஆன்மா தான் போக வேண்டிய உடலுக்காக காத்திருக்குமாம். ஒரு சில சதிக் காரணங்களால் ஆத்மா பழைய உடலை விட்டு நீங்கியபின்,  மறுபடியும் அந்த குடும்பத்தில் சென்று பிறக்கும் காலத்திற்காக காத்திருக்குமாம்.  இடையில் வரும் வாய்ப்புகளை உதறிவிட்டு, அந்த குடும்பத்தில் பிறந்து பழிவாங்குவதற்கு தயாராகுமாம் 

சாதாரணமாக ஆத்மாவுக்கு உடனே மறுபிறப்புக்கான வாய்ப்பு கிடைக்கலாம்.  ஐந்து வருடங்களாக பார்க்கலாம். அதற்கு மேலும் கூட ஆன்மா காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டாம்.  அதே போல நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சொர்க்கம், தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகம் என்றொரு கருத்து நிலவுகிறது.  

ஆனால் இந்த ஆராய்ச்சியின் விளைவுகளாக பார்க்கும்போது எந்த நாளில் நன்மையும் தீமையும் ஒரே அளவில் இருந்து 'டிரா' ஆகிறதோ (!) அன்றுதான் மறுபடியும் பிறப்பு எய்தாத நிலை வருமாம்.  மற்றபடி நன்மைகள் அதிகம் இருந்தாலும் மறுபிறப்பு உண்டு... தீமைகள் அதிகம் செய்தாலும் மறுபிறப்பு உண்டு. இவைகளை எல்லாம் மறுபிறப்பை நம்பாத வெளிநாட்டு கிறித்துவ ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் சொல்வது.  

மனிதன் மனிதனாகவே பிறக்க வேண்டும் என்று கட்டாயம் அல்ல.  தீமைகள் அதிகம் செய்திருந்தால் ஆறறிவிலிருந்து ஐந்தறிவாகவோ அதற்கும் கீழோ பிறப்பெடுத்தால் அது ஆன்ம வீழ்ச்சி என்று சொல்கிறார்கள்.  அதேபோல செடிகொடிகளோ, புழுக்களோ ஐந்தறிவு ஜீவன்களாக பிறப்பெடுத்தால் அது ஆத்மாவின் உயர்ச்சி என்றும் சொல்கிறார்கள். கர்மாவை பொறுத்துதான் மறுபிறப்புகள் அமையும்.  

சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா.  சஞ்சித கர்மாவில் மனிதன் தலையிடவே முடியாது. அது என்ன நடக்குமோ நடந்தே தீரும்.  பிராரப்த தர்மாவில் சில விஷயங்களில் தலையிட நமக்கு உரிமை ஏற்படுகிறது.  அதன் மூலம் திருந்தி நல்லவனாக வாழ்வதற்கோ, இல்லை மேலும் மேலும் கெடுதல்கள் செய்து தீயவன் ஆவதற்கோ மனிதனால் முடிகிறது.  இந்தப் பிராரப்த கர்மாவைப் பொறுத்துதான் ஆகாம்ய கர்மா நடைபெறுகிறது.  

எப்போதும் நற்சிந்தையுடன் நற்செயல்களை செய்யும்போது கர்மவினைகளால் நாம் அதிகம் பாதிப்படைய வேண்டியது இல்லை. இதுதான் நமது மறுபிறவிக்கும் அங்கு அமையப்போகும் நிலைக்கும் காரணமாகிறது.  கர்மாவை தீர்க்க ஏற்பட்ட பிறவியில் சில சமயம் அதற்கான வழிவகைகள் எதுவுமே செய்யாமல் வாழ்க்கை பயணம் சாதாரணமாக அமைந்து விடுவதும் உண்டு.  இதற்கு விளக்கம் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை மூலம் விளக்குகிறார்.  தெருக்கூத்து பார்க்கச் சென்ற ஒரு பாமரன் பற்றி.  அவன் படுத்துக்கொண்டு ஓய்வாக  தெருக்கூத்து பார்க்க ஒரு பாயுடன் செல்பவன் தெருக்கூத்து ஆரம்பிக்காத நிலையில் தூங்கிவிடுகிறான்.  எழுந்து பார்க்கும் போது தெருக்கூத்து முடிந்து விடுகிறது.  பாயை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறான்.  அந்த பாய் தான் கர்மா என்கிற என்கிறார்.  

"இந்த உலகத்தில் ஒருவன் துன்பமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதற்கு காரணம் அவன் செய்த பாவம்தான் என்பது எல்லா நேரத்திலும் பொருந்தாது. சில சமயங்களில் ஒருவன் மேல்நிலைக்கு உயர்வதற்கும், அவன் ஆன்மாவை பக்குவப்படுத்துவதற்கும் இறைவன் துன்பங்களை தரும் சோதனைகளைத் தருவதுண்டு" என்பது அரவிந்தர் வாக்கு. ஆக, எல்லோருமே இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள்.   அரவிந்தருக்கு விவேகானந்தரின் ஆத்மா வந்து உபதேசித்ததாம், 'அரசியலை விட்டு ஆன்மீகத்தைப் பார்' என்று.   

'அதே போல உலகில் ஒருவன் தொடர்ந்து இன்பங்களே அனுபவித்து வருவது அவன் நல்லவன் என்பதனால் மட்டும் அல்ல, போக வாழ்க்கை மூலம் அவன் மேலும் மேலும் பாவங்களை செய்து மீள முடியாதவாறு வீழ்ச்சி அடையவும் அம்மாதிரி நடக்கலாம்' என்று மகான்கள் கூறுகிறார்கள் பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம்.   கண் காது மூக்கு போன்ற உபகரணங்கள் இல்லாமலேயே அவை செய்யக்கூடிய ஐம்புலனையும் உணரும் நிலை ஆவி நிலையில் சாத்தியமாகிறது.

உடலின் அழிவு மரணம் என்று கருதப்பட்டாலும் ஆன்மா அழிவதில்லை. அது பரிபக்குவ நிலையை அடையும் வரை. அதாவது அந்த ஆன்மா தோன்றியதற்கான காரண காரியங்களை அறிந்து. அவை அனைத்தும் நிறைவேறும் வரை அது மறுபடி பிறந்து இறந்து அழிந்து கொண்டுதான் இருக்கும்.  இது பற்றி கடோபநிஷத்திலும் வருகிறது.

இவற்றில் பெரும்பாலான கருத்துகள் நம் வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் வந்தது போல இருந்தாலும், இவை ஹெலன் வெம்பாக் என்பவர் வரவழைத்த ரூதர்போர்ட் என்பவர் ஆவி சொன்னவை.

நான் இதில் பெரும்பாலானவற்றை 'ஒரு யோகியின் சுயசரிதை' புத்தகத்திலும் படித்திருக்கிறேன்.  பாவம் செய்த ஆத்மாக்கள் இருள் வழியிலும், நல்ல ஆத்மாக்கள் ஒளி வழியிலும் பயணிக்கும்.

ஆவிகள் நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்துக்கு உடனே போகமுடியும், ஒத்த குணமுடையவர்களுடன் கூட்டமாக சேர்ந்து வாழும், நம்மிடையேவே உலாவும், ஆனால் நம் கண்களுக்கு புலப்படாது என்பதெல்லாம் அந்த வெளிநாட்டு ஆவியின் உபரித் தகவல்கள்.

நாம் காணும் பெரும்பாலான கனவின் புரியாத நிகழ்வுகள் கூட முற்பிறப்பின் நினைவுகளின் தாக்கமே என்கிறார் மறைமலை அடிகள்.  இதைப் படித்ததும், இனி என் கனவுகளை நெருக்கமாக தொடராகிப்போகிறேன்!  போலவே, பாஸ், மகன்களின் கனவுகளையும், என்ன வந்தது என்று கேட்டு, ஏதாவது லீட் கிடைக்கிறதா என்றும் பார்க்கப் போகிறேன்!

டாக்டர் வால்டர் செம்கிவ். அமெரிக்க ஆராய்ச்சியாளரான இவர் மகாத்மா காந்தி மறுபிறப்பெடுத்திருக்கிறார் என்றும் அமெரிக்காவில் சமூக ஆர்வலராக வாழும் வான் ஜோன்ஸ் தான் அவர் என்றும் கூறுகிறார். உருவாற்றுமை, நடத்தைகளில் ஒற்றுமை இருக்கிறது என்கிறார். அவருக்கு துணை இருப்பது அதுன் ரே என்கிற மூவாயிரம் ஆண்டு பழமையான மத குருவின் ஆவியாம்.  இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த மகா ஆவியையே தனது வழிகாட்டும் ஆவியாகவைத்துக்  கொண்டு பல்வேறு சிக்கல்களுக்கு விடை அறிந்து உள்ளாராம் டாக்டர் வால்டர்.  2009 இல் இந்தியாவிற்கு வந்திருக்கிறார் 'ஆரிஜின் ஆஃப் தி சவுல் அண்ட்  பர்பஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்' என்ற புத்தகத்தை இந்தியாவில் வெளியிட்டார்,  மகாத்மா காந்தியின் மறுபிறப்பு உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் எழுதியிருக்கும் புத்தகம் 'Born again'. 

கீழே கொடுத்துள்ள புத்தகங்களை இணையத்தில் டவுன்லோட் செய்யலாம்.  குறிப்பாக ஆர்ச்சிவ்'' தளத்திலிருந்து.  இறக்கி படிக்கும் பொறுமை உங்களுக்கிருந்தால் சுவாரஸ்யத்துக்கு கியாரண்ட்டி.

Life before life - Jim b. Tucker

You have been here - Edith fiore

A world beyond - Ruth mondkomeri 

Recalling past lives - The evidence from hypnosis -  Dr.  Helen Wambach

Life before Life -  same author

Return from heaven,
Children's past lives -  both by Carol Bowman

Twenty cases suggestive of Reincarnation -  Ian Stevenson

நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் இருக்கும் ஒரு நிகழ்வை கூகுள் செய்து எடுத்தேன்.  அந்நிகழ்வின் கேஸ் ரிப்போர்ட் இங்கே சென்று படிக்கலாம்.


சிறிதாக்கி ஸ்க்ரீன் ஷாட் எடுத்தேன்.  பெரிதாக்கி படிக்கலாம்!

எதற்குமே மறுபக்கம், அல்லது அதை எதிர்ப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா?  இதோ அப்படி ஒன்று...  பெரும்பாலும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இது போன்ற மறுபிறப்பு சமாச்சாரங்களை ஒத்துக்கொள்வதில்லை.

கீழே உள்ள படத்தை கேமிரானால் பாருங்கள்.  அது சில சுவாரஸ்யமான பக்கங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும்!


=================================================================================================
நீரில் அணையா நெருப்பு 

வீசப்பட்ட வார்த்தைகள் 
பதிலுக்காக 
காத்திருக்கின்றன 
வார்த்தைகளின் வெம்மையில் 
கருகிப்போன பதில்கள் 
கண்கலங்கி நிற்கின்றன 
வரப்போகும் பதிலைப் 
பொறுத்து 
இன்னும் அனல் வீசக் 
காத்திருக்கின்றன சில 
வார்த்தை நெருப்புகள் 

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\



முதசுரபியில் வெளிவந்த `திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்` என்ற பகுதியிலிருந்து...
...............................
*தொடர்ந்து தன் துறையில் முத்திரை பதிப்பவர் என்று யாரைச் சொல்லலாம்?
என். கேசவன், கன்னியாகுமரி.
அஞ்சல் அலுவலரை!
...
*ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளை அடக்க பெண்கள் ஏன் முன்வருவதில்லை?
எஸ்.மோகன், கோவில்பட்டி
எப்படியும் திருமணத்திற்குப் பின் காளைகளை அடக்கப் போவது தாங்கள் தானே என்ற தன்னம்பிக்கை காரணமாக இருக்கலாம்!
...
*கிரேசி மோகன் நகைச்சுவையில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
என். முத்துலட்சுமி, கோவை.
`சிவாஜி ஓவர் ஆக்டிங்கா?` என்ற கேள்விக்கு `சிவாஜியோடு ஆக்டிங் ஓவர்!` என்று அவர் சொன்ன பதில்.
...
*ஆன்மிக உணர்வு பெருகி வருகிறது, ஆனால் அசைவம் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறையவில்லையே?
எஸ். சண்முகம், திருவண்ணாமலை.
வள்ளலாரையும் புலால் உண்ணாமை எழுதிய வள்ளுவரையும் தொடர்ந்து உயர்த்திப் பிடித்தால், எதிர்காலத்தில் அசைவ உணவு உண்போரின் எண்ணிக்கை குறைந்து நீங்கள் `மட்டனற்ற` மகிழ்ச்சி அடைய வாய்ப்பு நேரலாம்!
...
*தற்போதைய தமிழ் சினிமாவில் நகைச்சுவை கேலிக் கூத்தாகிவிட்டது என்று காத்தாடி ராமமூர்த்தி கூறியிருப்பது பற்றி?
ஆர். குமரவேல், கும்பகோணம்.
நூறு சதவிகிதம் சரி. ரஜினி நடித்த பழைய தில்லுமுல்லு நம்மை எப்படியெல்லாம் ரசித்துச் சிரிக்க வைத்தது! அதே தில்லுமுல்லு அதே கதை. புதிய நடிகர்கள் நடித்து, புதிதாய்ப் படமெடுக்கப் பட்டு வெளிவந்தபோது அதில் இரட்டை அர்த்த வசனங்களையெல்லாம் சேர்த்து எப்படிக் கேலிக் கூத்தாக்கியிருந்தார்கள்! உதாரணங்கள் இன்னும் எத்தனையோ உண்டு.
...
*பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் சமையல் குறிப்புகளைச் செய்துபார்க்கலாமா?
ஆர். மல்லிகா, காஞ்சீபுரம்.
செய்து - பார்க்கலாம். செய்து சாப்பிடலாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
...
*மாணவர்களை எதற்கெடுத்தாலும் தூண்டி விடுவது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லதா?
டி.என். ரங்கநாதன், திருவானைக் கோவில்
அவர்களது நிகழ்காலத்திற்கே கூட நல்லதல்ல!
...
*கருணை என்றால் என்ன விலை என்று கேட்பவர்களை என்ன செய்வது?
ஆர். அகமத், பொள்ளாச்சி.
காய்கறிக் கடைக்குப் போய் கருணைக் கிழங்கு கிலோ என்ன விலை என்று அவர்களையே விசாரிக்கச் சொல்லலாமே!
...
*அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை நைசாகத் தவிர்த்துவிடுவது ஏன்?
அ.முரளிதரன், மதுரை.
நைசாகத் தவிர்க்கவில்லை. வெளிப்படையாகவே தான் தவிர்க்கிறோம்! அமுதசுரபி அரசியல் பத்திரிகை அல்ல. கலை இலக்கியப் பத்திரிகை. அமுதசுரபிக்கு எல்லாக் கட்சியிலும் வாசகர்கள் இருக்கிறார்கள்.
...
*விதியை மதியால் வென்றவர்கள் உலகில் இருக்கிறார்களா?
தி. மதிராஜா, சின்னபுங்கனேரி.
ஒருவர் கூட இல்லை. ஏனென்றால் விதியை மதியால் வென்றால், அப்படி வெல்லப்பட்ட பின் உள்ள நிலைதான் அவர் விதி என்றாகிறது! `எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும், தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும், வழுவிப் பின்னால் நீங்கியொரு வார்த்தையேனும் மாற்றிடுமோ? அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?` எனக் கேட்கிறார் உமர்கயாம். (கவிமணி மொழியாக்கம்.)
...
*எத்தனையோ நிகழ்ச்சிகள் நாட்டில் நடந்தாலும் கொடிகட்டிப் பறக்கிற உயர்தர நிகழ்ச்சி என்று எதைச் சொல்லலாம்?
என். ஆராவமுதன், திருச்சி.
சுதந்திர தின நிகழ்ச்சியையும் குடியரசு தின நிகழ்ச்சியையும் கொடிகட்டிப் பறக்கிற நிகழ்ச்சிகள் என்று கட்டாயமாகச் சொல்லலாம்!
...
*கொட்டித் தீர்த்த கனமழையின் போது உங்கள் நெஞ்சில் ஓடிய மழையைப் பற்றிய கவிதை வரிகள்?
கோ. அற்புதராஜ், பூவிருந்தவல்லி, சென்னை.
`மழை பாடுகின்றது. அது பலகோடித் தந்திகள் உடையதோர் இசைக்கருவி!` என்ற பாரதியின் வசன கவிதை வரிகள்.
...
*தமிழின் தற்காலக் கவிதை இலக்கியத்தில் நீங்கள் பெரிதும் ரசித்த காதல் கவிதை?
எல். வெண்ணிலா, மதுரை.
கவிஞர் மீராவின் `கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்!` என்ற கவிதை நூலில் இடம்பெற்றுள்ள கண்பார்வை தொடர்பான ஓர் இனிய கற்பனை....
`அன்பே!
நீ என்னைத் தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் இதயத்தில் முள் பாய்ந்தது...
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்?
எங்கே இன்னொரு முறை பார்த்துவிடு!` 

===========================================================================================

கந்தசாமி ஸார் இவரைப்பற்றி சொல்லி இருந்த பதிவில் நான் அதுபற்றி அளித்த பின்னூட்டத்திற்கு அவரே வந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை!  சாதாரணமாக சொல்கிறாரா, நீ கேட்டு எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை ன்னு சொல்கிறாரா என்று புரியவில்லை!


==============================================================================================


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கேலக்ஸி சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன்.  இதுதான் கிடைத்தது!

================================================================================================

மண்டைக்கனம் இல்லாமல் இருக்க...   காது நீளமாக....   வெட்கத்தினால் முகம் தாழ்கிறது என்று சொல்ல வைக்க...

கல்பனா என்ற பெயரை உடைய இந்தப் பெண் 'மின்சாரக் கண்ணா' பாடலை அதி அற்புதமாக ஒரிஜினல் போலவே பாடினார் என்று எல்லோரும் சிலாகித்திருந்தனர்.  என் கண்ணில் பட்டது...

அந்த ஜிமிக்கி!

==============================================================================================

==================================================================================================


============================================================================================

படித்த வித்யாசமான செய்தி..


கோலாரை சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை கண்டிராத புது வகை ரத்தம்

கோலார்: உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.  ர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு இதய நோயால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது ரத்த வகை, 'ஓ பாசிட்டிவ்' என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  ஆனால், அப்பெண்ணின் ரத்தத்தை பரிசோதித்த போது, அதன் வகை குறித்து தெளிவாக தெரியவில்லை. அவசர நிலையை உணர்ந்த டாக்டர்கள், வேறு வழியின்றி மிகுந்த எச்சரிக்கையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதற்கிடையில், அவரது ரத்த மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கும் அவரது ரத்த வகை புதுமையாக இருப்பதை கண்டறிந்தனர்.  இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள ஐ.பி.ஜி.ஆர்.எல்., எனும் சர்வதேச ரத்தப்பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.  இதன் முடிவுகள் தொடர்பாக, ரோட்டரி பெங்களூரு டி.டி.கே., ரத்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் அங்கித் மாத்துார் கூறியதாவது:  கோலார் பெண்ணுக்கு இருப்பது, புது வகை ரத்தம் என, ஐ.பி.ஜி.ஆர்.எல்., அங்கீகரித்துள்ளது. உலகிலேயே இந்த ரத்தம், வேறு யாருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் இந்த வகை ரத்தம் இல்லை.  கோலார் பெண்ணின் ரத்தம் குறித்து, பிரிட்டனில் 10 மாதங்களாக விரிவான ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூலக்கூறு பரிசோதனையில் இது புதிய ரத்த வகை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த புதிய ரத்த வகைக்கு, சி.ஆர்.ஐ.பி., என, ஐ.பி.ஜி.ஆர்.எல்., பெயர் சூட்டியுள்ளது. இதில், சி.ஆர்., என்பது குரோமர் என்பதை குறிக்கும். ஐ.பி., என்பது இந்தியா, பெங்களூரை குறிக்கும்.  கடந்த ஜூனில் இத்தாலியின் மிலனில் நடந்த சர்வதேச ரத்த மாற்ற சங்கத்தின் ஐ.எஸ்.பி.டி., 35வது பிராந்திய மாநாட்டில், புதிய வகை ரத்தம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஐ.பி.ஜி.ஆர்.எல்., வெளியிட்டது.

=============================================================================================


பொக்கிஷம்  :


இந்தக் காலத்தில் இவ்வளவு சுவாரஸ்யமாக புத்தகம் படிப்பவர் இருக்கிறார்களா ஃப்ரெண்ட்ஸ்?  நாம் சனிக்கிழமைகளில் வெளியிடும் நான் படிச்ச கதை போல 1964 65 களிலேயே விகடனில் வந்த எனக்குப் பிடிச்ச புத்தகம் பகுதிக்கான சிக்நேச்சர் படம்.




107 கருத்துகள்:

  1. முன் ஜென்மம், மறு பிறவி குறித்து கே.ஜி.ஜி.சாருக்கு கேள்வி அனுப்பிவிட்டு, எ.பி.யைத் திறந்தால், மறு பிறவி குறித்த கட்டுரை, என்ன ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...   முதல் பகுதியை படிக்காமலேயே ஸ்கிப் செய்து விட்டீர்களா?!!  அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  2. திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.
    ஜோக்குகளும், அதற்கான படங்களும் சிறப்பு!
    ஆழமான கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா. சில அனுபவங்கள் ஆழமானவை!

      நீக்கு
    2. பா வெ ​நீங்கள் குறிப்பிடும் கல்பனா பாடகியா அல்லது திரைப்பட நடிகையா? ஸ்ரீராம் குறிப்பிட்டது பாட்டு பாடிக்கொண்டிருப்பவரை.

      நீக்கு
    3. பாடகியே நடிகையாகவும் இருக்கலாம் அல்லவா?  மொத்தத்தில் அவர் நடிகர் ராகவேந்தரின் மகள் என்கிறார்!!

      நீக்கு
    4. What happened to Kannada actress Kalpana?
      Kalpana (Kannada actress) - Wikipedia
      Death. Kalpana died on 12 May 1979. Her suicide was attributed to multiple causes from health issues, poor financial condition to failed romance, though nothing was established. As per post-mortem reports, she had consumed 56 sleeping pills.

      நீக்கு
    5. இந்த கல்பனா அவங்களோட மறுபிறவியா இருப்பாங்களோ!  பெயரும் ஒரே மாதிரி இருக்குமாமே.....

      நீக்கு
    6. JKC குறிப்பிடும் கல்பனா கன்னட நடிகை. நான் ஏழாவது படித்தபோது வகுப்பு மாணவர்கள் இரண்டு ஆசிரியர்களோடு சுவர்ணாவதி அணையில் நடிகை கல்பனா வுடன் படமெடுத்துக்கொண்டோம். கொஞ்சம் வருடத்தில் அவங்க தற்கொலை செய்துகொண்டார் (இரண்டுக்கும் முடிச்சிடாதீங்க ஹாஹாஹா)

      இந்த கல்பனா சூப்பர் சிங்கரில் வரும் 40-45 வயதுப் பெண், அல்லது கொஞ்சம் குறைந்த வயது

      நீக்கு
    7. ஸ்ரீராம் சொல்லும் கல்பனா ஊர்வசியோட அக்கா . சின்னவீடு பட நடிகை. பாக்கியராஜின் தோல்விப்படம்

      நீக்கு
    8. எதை வைத்து நான் அந்த கல்பனாவைச் சொல்கிறேன் என்கிறீர்கள்?!!

      நீக்கு
  3. கல்பனா... ராகவேந்திரா என்னும் நடிகரின் மகள், ஹரிஷ் ராகவேந்திராவின் சகோதரி.ராகவேந்திரா சிந்து பைரவி, விக்ரம்(பழசு), வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களில் நடித்தவர். கல்பனா சமீபத்தில் தற்கொலைக்கு முயற்சித்து மீண்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ மை கடவுளே... இதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம்.

      நீக்கு
    2. அழகு மலராட அபிநயங்கள் கூட பாடல் காணொளி நினைவிருக்கா ஸ்ரீராம்?

      நீக்கு
    3. கீழே ஏற்கனவே சொல்லி இருக்கேன்.பாருங்க..

      நீக்கு
  4. இன்று முதல் பகுதி கொஞ்சம் கனமான பகுதி. வாசித்தேன். சுவாரசியம் அறிந்து கொள்ள. எழுதும் கதைகளில் கதாபாத்திரங்களுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள.

    ஆனால் இதை நான் இன்னும் புரிந்து கொள்ளும் பக்குவமோ வயதோ!!!!!!!!!!!!! எட்டவில்லை கேட்டேளா! ஸ்ரீராம்.

    பெரிய அறிவும் கிடையாது, இன்றைய பொழுது இந்த நொடி நல்லா போச்சா அம்புட்டுத்தான் என்று வாழ்பவள்.

    எனவே இதைப் பற்றி நான் என் கருத்தென்று எதுவும்சொல்லாமல் போகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..

      மனிதனுக்கு எப்போதுமே தான் அறியாத, அறிய முடியாத விஷயங்களில் ஆர்வம் இருக்கும்.  இதுவும் அப்படிதான்.  எனக்கு இதில் சுவாரஸ்யம் உண்டு.

      நீக்கு
    2. எனக்கும் சுவாரசியம் உண்டு ஸ்ரீராம். அறிவதற்கு. ஆனா இப்ப அதைப் பத்தி சொல்லும் அளவு அறிவு வரலைன்னுதான்...நல்லா தெரிஞ்சாதானே பேச முடியும்?

      நேத்து கூட ஒன்று வாசித்துக் கொண்டிருந்தப்ப....அதில் ஒரு ஆங்கிலத்தில்

      Until you make the unconscious conscious, it will direct your life and you will call it fate.

      இதைத்தான் தமிழில், விதியை மதியால் வெல்லலாம்னு சொல்றோமோமோ என்று தோன்றியது.

      இன்னும் அதை முழுவதும் வாசிக்கவில்லை....எனக்கு நிறைய கேள்விகள் உண்டு, கேள்விகள் எழும் போதுதானே அறியும் ஆர்வமும் சுவாரசியமும் கூடும், இல்லையா ஸ்ரீராம்?

      கீதா

      நீக்கு
    3. உண்மை கீதா...  'ஒரு யோகியின் சுயசரிதை'யில் கூட இது போன்ற பகுதிகள் வருகிறது. 

      நெல்லை சொல்வாரே ஒரு புத்தகம் அதில் இதைவிட அதிகள் கூட கொல்லப்பட்டிருக்கலாம்.  அந்தப் புத்தகம் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 

      புத்தகத்தின் பெயர், பதிப்பகம் தெரிந்தால் வாங்கி விடலாம்.

      நீக்கு
    4. இமயத்தில் இதய குரு ஸ்ரீஎம். சுவாமி இராமாவின் சுயசரிதை. கிரி டிரேடிங் மைலாப்பூரில் பார்த்திருக்கிறேன்

      நீக்கு
    5. வாங்க நெல்லை..  கிரி ட்ரேடிங் புத்தகம் விற்கும் இடம்.  பதிப்பாளர் யார் என்பதே கேள்வி.

      நீக்கு
    6. எங்கள் வீட்டில் ஆங்கிலத்தில் இருக்கு ஸ்ரீராம், என் கணவர் வாசித்த புத்தகம்.

      கீதா

      நீக்கு
    7. நாளை ஊருக்கு வந்ததும் வாட்சப்புகிறேன் ஸ்ரீராம்

      நீக்கு
    8. அதாவது வீட்டில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து விட்டு சொல்கிறேன் என்கிறீர்கள். இல்லையா?

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  6. ஸ்ரீரான் நீங்க கொடுத்திருக்கும் சுட்டிகளை அப்பால போய்ப் பார்க்கிறேன்.

    // பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம். //

    இது வாசித்ததுண்டு. மிகவும் பிடித்த சாரம். இதை வாசித்ததும் பள்ளியில் படிச்சப்ப நிகழ்ந்த ஒன்று நினைவுக்கு வந்தது.

    கருத்து எழுதினேன். பார்த்தா....ஆ பதிவாகவே போடலாம் போலவேன்னு அதை அப்படியே கட் பண்ணி தனியே வைத்துக் கொண்டுவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தானே கீதையில் பலனை எதிர்பாராமல் கடமையைச் செய் என்று சொல்கிறார்கள்!

      நீக்கு
    2. அதேதான். இருந்த அதுக்குத்தான் கருத்து....அடிச்சேன்...பதிவு போட்டிடறேன் இன்னிக்கே போட முடியுமான்னு பார்க்கிறேன் இல்லைனா நாளை.

      கருத்து எழுதி ரெடியா இருக்கே

      கீதா

      நீக்கு
    3. என்னை அறிந்தாய்...   எல்லா உயிரும் எனதென்றுக் அறிந்து கொண்டாய்...

      மன்னரும் நானே..  மக்களும் நானே..  மரம் செடி கொடிகளும் நானே..   - கண்ணதாசன்.

      நீக்கு
    4. அப்போ கண்ணனே கண்ணனை விரும்பி லவ் மேரேஜ் பண்ணிக்கிறாரா?

      நீக்கு
    5. பார்த்து நெல்லை.. கண்ணன் கண்ணைக் குத்தி விடப் போகிறார்....!!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி நல்ல சுவாரஸ்யமான தொகுப்பு டன் இருக்கிறது. மறு பிறவி, ஆன்மாவின் அலசல்கள் பற்றிய விஷயங்கள் என படிக்கும் போது நாம் அடுத்து என்னவோ என்ற கவலையும், ஆர்வமும் வருகிறது. "ஆமாம்!! உன்னுடன் இருந்த இந்தப்பிறவியில் சிறக்க நீ எதற்குத்தான் என்னுடன் ஒத்து வந்தாய்?" என்ற ஆன்மாவின் குரல்( புலம்பல்)மெல்லியதாக காதில் கேட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. நீங்கள் தந்த விஷயங்களில் பலவற்றும் உண்மைகள்தான். படித்து ரசித்தேன். எனக்குள்ளும் இதுபோன்ற கேள்விகளும், சிந்தனைகளும் தோன்றும்.

    மற்ற பகுதிகளும் அருமை. கவிதை நன்றாக உள்ளது. நெருப்பு கூட நீரில் சமயங்களில் அணைந்து விடும். நெருப்பை போன்ற வார்த்தைகள் சுட்டெரித்து கொண்டேதானே இருக்கும். ஆனால், வீசப்பட்ட வார்த்தைகளை பெறுபவர்கள் ஈரமான மனதுடையவர்கள் என்றால், கூடிய விரைவில் அணைத்து விட பார்ப்பார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா..   நீங்கள் சொல்லி இருக்கும் பகுதிகளுக்கு பதிவிலேயும் புத்தகத்திலும் சில விளக்கங்கள் உண்டு.  உங்களுக்கு நிறைய இன்பங்களைத் துய்க்க இடம் கொடுக்கப்படும்போது கட்டுப்பாட்டுடன் நல்லது செய்வதோ, இல்லை விரிக்கப்படும் வலையில் விழுந்து மேலும் கெடுதிகள் செய்வதோ தனியரின் கட்டுப்பாட்டில்.  அது அவர்களின் கர்மாவை பாதிக்கும், ஆவி உலகில் இடத்தை நிர்ணயிக்கும், அடுத்த பிறவியில் கணக்குகள் காட்டப்படும்.

      நீக்கு
  8. ஆனால் ஸ்ரீராம், முதல் பகுதியைப் பற்றிய விஷயத்தை அதிகம் வாசிக்கத் தோன்றினாலும் சுவாரசியம் வந்தாலும், எனக்கும் ஆர்வமும் இருந்தாலும்...கூடவே கொஞ்சம் பயமும் தோன்றும். எனவேதான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   எனில் விட்டு விடுங்கள்!  ரிஸ்க் எடுக்க வேண்டாம்.  சிலசமயம் சொல்வார்கள் தெரியுமா..  கருடபுராணத்தை வீட்டில் எப்போதும் வைத்துப் படிக்கக் கூடாது என்று...

      நீக்கு
    2. ஹாஹாஹா நெவர்....நான் அந்தப் புராணம் பக்கமே போக மாட்டேன். தேவையில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் மனதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!!!!

      கீதா

      நீக்கு
    3. கருடபுராணம் வீட்டில் படித்தால் விரைவில் வீட்டில் மரணத்தை வரவைக்கும் என்பார்கள். அப்பா கடைசி சில தினங்கள் அந்தப் புத்தகம் படித்தார். இறந்த வீட்டில் பத்து நாட்கள் கருமகாரியங்கள் போது படிக்கலாம்

      நீக்கு
    4. // இறந்த வீட்டில் பத்து நாட்கள் கருமகாரியங்கள் போது படிக்கலாம்//

      ஆம். இதோ.. இந்த மாதிரி புத்தகங்கள் படித்தாலும் அதே மாதிரி சொல்கிறார்கள். நான் என் தந்தை மறைந்த சமயம் க பு படித்திருக்கிறேன்.

      நீக்கு
    5. // மனதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!!!!
      //

      இல்லை.. சோகம், பயம் அதில் இல்லை. நான் கொஞ்சம் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  9. நேற்று ஒன்று வாசித்த போது ஆங்கிலத்தில் இந்த வரி, "until you make the unconscious conscious, it will direct your life and you will call it fate"

    இதை நாம தமிழில் "விதியை மதியால் வெல்லலாம்னு" சொல்வோமே இல்லையா....

    எனக்கு இதிலும் நிறைய கேள்விகள் உண்டு. நான் மேலே சொன்னதை இன்னும் முழுவதுமாக வாசித்து முடிக்கவில்லை. வாசித்து அறியும் சுவாரசியம் கூடியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிக்க வாசிக்க வெவ்வேறு சிந்தனைகள் நமக்குள் வருகிறது.  அதனால் பதிவும் இட முடிகிறது!

      ஆமாம், நேற்று ஒன்று நேற்று ஒன்று என்கிறீர்களே..  அது என்ன புத்தகம்?!

      நீக்கு
    2. அது மூளை மற்றும் உளவியல் பற்றிய புத்தகம் ஸ்ரீராம். என்னிடம் புத்தகம் இல்லை. என் தங்கை பெண் அனுப்பும் ஸ்க்ரீன் ஷாட்ஸை வாசிப்பேன். அப்புறம் நாங்க ரெண்டு பேரும் பேசுவோம்.

      அவளும் என் மகனும் ஒரே வயது! உங்களுக்குப் புரிஞ்சுருக்கும், ஸ்ரீராம்.

      சரி இதை எதுக்கு இங்கு சொல்றேன்...புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க...புரியாதவங்க நெல்லைகிட்ட கேட்டுக்கோங்க!

      கீதா

      நீக்கு
    3. இதுல ஒரு உண்மை இருக்கோன்னு தோணுது. என் மனைவி சில உணவு வகைகள் சாப்பிட்டபின் அலர்ஜியாகுமோ என சந்தேகப்படுவேன். அவள் அலர்ஜி பற்றி நினைக்காதீங்க என்பாள். அப்படி நினைக்காமல் இருந்தால் அலர்ஜி ஏற்படுவதில்லை. எண்ணங்களுக்கு ஏதோ சக்தி இருக்கிறது

      நீக்கு
    4. குரங்கைச் சாப்பிடும்போது மருந்தை நினைத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள் இல்லையா!!!!

      நீக்கு
  10. பதில்கள்
    1. முருகா...  வாங்க செல்வாண்ணா ..  வணக்கம்.

      நீக்கு
  11. ஆனால், பெர்சனலாக எடுத்துக் கொள்ளாமல் அதாவது அதை நம்மோடு தொடர்புப்படுத்திக் கொண்டு வாசிக்காமல் - மீண்டும் கீதை தாமரை இலைத் தண்ணீர் போல - திறந்த மனதோடு வாசித்தால் வாசிக்க முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்..   நான் வாசித்தேன்.  பகிர்கிறேன்.

      நீக்கு
  12. ​தற்போதைக்கு ஆன்மா பற்றிய கட்டுரையை பற்றிய விவாதங்களை ஒதுக்கி வைக்கிறேன். ஞானிகளாலேயே தீர்க்க முடியாமல் வழங்கிய "விண்டவர் கண்டிலர்" என்ற தீர்ப்பு இருக்கட்டும்.
    எ பி என்பது தற்போதைக்கு ஒரு அரட்டை அரங்கமாகத்தான் உள்ளது என்றால் அடிக்க வர மாட்டீர்கள். என்று நம்புகிறேன். தலையை பிய்த்து கொள்ளும் அளவுக்கு வாசகர்களிடம் தலை முடி இல்லை. இவ்வளவு கனமான மறுபிறவிக்கட்டுரையை யார் ஆய்வு செய்வார்கள்.

    எசப்பாட்டு.
    வார்த்தை நெருப்புகளும்
    காலம் என்ற நீறு பூத்தால்
    அணைந்து கரியாகும்
    பதில் என்ற காற்றை
    ஊதாமல் இருந்தால்

    திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் அரசு பதில், மற்றும் குருவியார் பதில்கள் என்ற இரண்டு பாணிகளையும் உட்கொண்டதாக இருக்கிறது.

    புது வகை ரத்தம் நம்பக்கூடிய ஒன்றாக எனக்கு தோன்றவில்லை.
    பொக்கிஷ ஜோக்குகள் ரசிக்க கூடியவை.






    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC  சார்...

      இது அப்படி ஒன்றும் ​பிரமாதமான / கனமான கட்டுரை அல்ல.  இதே போல அவ்வப்போது எழுதுவது, பகிர்வது உண்டு.  இரண்டு நாட்களுக்கு முன் கூட கமெண்ட்ஸ் செக்ஷனில் இரண்டு பழைய லிங்க்ஸ் பகிர்ந்திருந்தேன்.  பார்த்தீர்களா என்று தெரியவில்லை.  

      உங்கள் எசப்பட்டைதான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்!

      திருப்பூர் கிருஷ்ணன் சுவாரஸ்யமான எழுத்தாளர்.
      புதுவகை ரத்தம் ஆராய்ச்சி செய்துதானே சொல்லி இருக்கிறார்கள்..  இதில் ஏமாற்றி என்ன ஆகப்போகிறது?

      ஜோக்ஸ் ரசிக்கப்பட்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  13. கவிதை சூப்பருங்கோ ஸ்ரீராம்....

    விஷயங்கள் பல......வழக்கம் போல ....(நீங்க இந்த வாக்கியத் தொடரை முடித்துக் கொள்ளுங்கள்!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... வாக்கியத்தை எப்படி முடிப்பது என்று வாட்ஸாப்பில் தெரிந்து கொள்கிறேன்!!!

      நீக்கு
  14. ஏழ் பிறப்பும் சொர்க்கம் நரகம் இவையும் சொல்லப்படாத /நம்பிக்கை இல்லாத அந்நிய மதத்தினருக்கு என்ன விதமான ஆராய்ச்சி...

    இங்கே மட்டும் ஏளனம் செய்வதும் எள்ளி நகையாடுவதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்..   தமிழ்நாட்டில் மட்டுமென்றால் கூட பஹுத் அறிவு என்று சொல்லலாம்.  ஏனோ இந்தியா முழுதும் இந்த நிலை!

      நீக்கு
  15. திருப்பூர் கிருஷ்ணனின் பதில்களை ரொம்ப ரொம்ப ரசித்தேன். சொல்லாடலும் பிரமாதம்.

    அதில் நான் மேலே சொன்ன ஒரு கருத்திற்கான பதில் போன்று அவர் கொடுத்திருப்பது ஆஹா என்ன பொருத்தம்!!!!

    நானும் அந்த ஆங்கில விஷயத்தை முழுவதும் வாசித்துவிட்டு இதோடுப் பொருந்திப் போகிறதா அதில் என்ன சொல்லப்படுகிறது என்று பார்க்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  என்னவென்று நானும் போய்ப் படித்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
  16. பவா - அட!

    நேர்மறையாகவே எடுத்துக் கொள்வோம். வாசிக்கும் நேரத்தில் வாசிக்க முடியும் நேரத்தில், வாசிக்கும் திறன் இருக்கும் வரை வாசிக்கத்தானே வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உண்மைதான்.  பொதுவெளியில் 'இவரை நான் கேட்டதில்லை' என்று எழுதி இருப்பதை அவரே வாசிக்க நேரும்போது கொஞ்சம் மனதில் நெருடலாக இருந்திருக்குமோ என்று சந்தேகம்!

      நீக்கு
    2. இதுக்கு அப்புறம் வாட்சப்பில் சொல்கிறேன்.

      கீதா

      நீக்கு
  17. அந்ந்த பஸ் என்ன அடிவாங்கிச் சப்பியது போல இருக்கு? என்றாலும் பார்க்கும் போது ஏனோ ஓர் இனம்புரியாத சந்தோஷம் எட்டிப் பார்க்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழையகாலத்துப் படங்கள் பார்க்கும் போது தோன்றுவதுதான்...அந்த வெறிச் சாலை, கட்டிடங்கள் அதிகம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் இல்லாமல்....

      கீதா

      நீக்கு
  18. திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
  19. Galaxy சிறுகதைப் போட்டி - ஸ்ரீராம், போட்டிகளில் நடுவர்களின் விருப்பம் சிந்தனைகள் நம் எழுத்தோடு ஒத்துப் போக வேண்டும். என்றே தோன்றுகிறது. இப்ப சமீபத்திய போட்டிகளின் முடிவுகளைப் பார்க்கறப்ப. அதற்குத் தனித் திறமை வேண்டும் open mindedness.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலும் உண்மை.  அவர்களின் பார்வை, எதிர்பார்ப்பு, வாசக அனுபவம், ரசனை வேறு மாதிரி இருக்கலாம்.  எனக்கு ஏமாற்றமில்லை!

      நீக்கு
    2. உங்களுக்கு ஏமாற்றம் இல்லை என்பது தெரியுமே....

      //அதற்குத் தனித் திறமை வேண்டும் open mindedness.//

      ஸ்ரீராம் இது நான் சொன்னது, நடுவர்களுக்கு!!!!!!

      கீதா

      நீக்கு
  20. மறுபிறவி பற்றிப் பலவும் படித்திருக்கிறேன். ஜக்கி வாசுதேவ் மற்றும் அவர் கூட இப்போது இருப்பவர்களில் பலரும் முன் ஜென்மத்தில் அவர்கூட இருந்தவர்கள் என்று படித்தேன். புட்டபர்த்தி பாபாகூட கர்நாடகாவில் மீண்டும் பிறப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே

    பிறந்து பழி வாங்குவது எப்படிச் சாத்தியம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தெரியவில்லை.  ஜக்கி தன் முந்தைய மூன்று பிறவிகள் பற்றி சொல்லி இருக்க்கிறார். 

      ஆனால் புத்தகத்தில் நேர்மாறாக ஜக்கி முன் ஜென்மத்தில் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்று சொல்லி இருக்கிறார்.  அந்த மூன்று பிறவிகளோடு இது ஒத்துப்போகவில்லை.  ஆனால் இதை வால்டருக்கு சொன்னது மூவாயிரம் ஆண்டுகளாக மறுபிறவி எடுக்காத அதுன் ரே என்கிற எகிப்திய மதகுருவின் ஆவியாம்.

      நீக்கு
  21. கல்பனா ராகவேந்திரா - ஹரீஷ் ராகவேந்திரா (இவரும் பாடுவாரே) இருவரும் சிந்துபைரவியில் நடித்த ராகவேந்திராவின் வாரிசுகள். ராகவேந்திராவும் மிக நன்றாகப் பாடுவார்.

    கல்பனா வும் மிக நன்றாகப் பாடுவார். அவர் வாழ்க்கை என்னவோ கொஞ்சம் சிக்கலாகத்தான் இருப்பதாகப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட் கீதா.. 

      'நித்தம் நித்தம் என் நெஞ்சோடு இன்பக்கனா' என்கிற கூட்டுப்புழுக்கள் பாடலை நான் முன்பு பகிர்ந்திருந்தேன்.  எம் எஸ் வியோடு இணைந்து தலைவர் பாடியிருக்கும் அற்புதமான பாடல்.  அதில் அந்த ஆரம்ப ஆலாபனையை படத்தில் வாயசைத்து நடிப்பது ராகவேந்தர்தான். 

      வைதேகி காத்திருந்தாள் படத்தில்  'அழகு மலராட' பாடல் காட்சியில் ஜதி சொல்லி உயிரை விடுவார்!

      ஹரிஷ் ராகவேந்தர்தான் பாரதியார் படத்தில் 'நிற்பதுவே நடப்பதுவே' பாடலைப் பாடி இருப்பவர்.

      நீக்கு
    2. ஆமாம் ஹரீஷ் பாடியிருப்பது தெரியும்...

      வைதேகி காத்திருந்தாள் - ஓ அவரா அது.

      நித்தம் நித்தம் - வாயசைப்பு பற்றி நீங்க சொன்னதும் நினைவுக்கு வருது

      கீதா

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை. கவிதை பற்றி ஏற்கனவே கருத்துரையில் சொல்லி விட்டேன். சுடும் வார்த்தைகள் ஏற்படுத்தும் ஆறிய தழும்பு கூட அவ்வப்போது லேசாக வலிக்கத்தான் செய்யும்.

    திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

    கல்பனா என்றதும் முன்பு இந்த மாதிரி சினிமா பாட்டுக்கள் வரும் புரோகிராமில் பாடும் கல்பனா அவர்களின் நினைவு வந்தது. இவர் வேறு என்பதையும், இவரைப் பற்றிய விபரங்களையும் கருத்துரைகளில் அறிந்து கொண்டேன்.

    சிறுகதை போட்டியில் உங்கள் கதை வெளி வந்துள்ளதா? அல்லது வெறும் பாராட்டு பத்திரம் மட்டுமா?

    புது வகை ரத்தம் பற்றி நேற்றுத்தான் படித்தேன். இன்று விபரங்களுடன் செய்தியும் தங்கள் பதிவில் வந்து விட்டது. ஆச்சரியம். ஜோக்ஸ் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.

      // சிறுகதை போட்டியில் உங்கள் கதை வெளி வந்துள்ளதா? அல்லது வெறும் பாராட்டு பத்திரம் மட்டுமா? //

      தெரிவு செய்யப்படவில்லை.  அதனால்தான் உங்களுக்கு உங்கள் கலைமகள் கதைக்கும் ஆறுதல் கூறி இருந்தேன்.

      நீக்கு
    2. கமலாக்கா, இப்ப நம்ம செல்லப்பா சார் கதைப் போட்டி வைத்திருக்கிறார்.

      செல்லப்பா சாரின் தளத்தில் போய் பார்த்தீங்கனா விவரங்கள் விதிமுறைகள் இருக்கு.

      அக்கா கண்டிப்பாக உங்களுக்குப் பரிசு கிடைக்கும், உங்கள் எழுத்தினால். முயற்சி செய்யுங்கள். கலைமகள் கதையை நீங்கள் வெளியிடாமல் வைத்திருந்திருக்கலாம். ஏனென்றால் வேறு போட்டிகள் வரும் போது அதுக்கேத்தாப்ல கொஞ்சம் தட்டிக் கொட்டி அனுப்பலாமே.

      "சகோதரி கீதா ரெங்கன் உங்கள் பதிலைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் பரிந்துரைகளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிக்குச் சென்று பார்க்கிறேன் சகோதரி. சுட்டி கொடுத்ததற்கும் மிக்க நன்றி சகோதரி! வேறு கதை ஒன்றை எழுத முயற்சிக்கிறேன். மிக்க நன்றி சகோதரி தங்களின் ஊக்கத்திற்கும் என் மீதான நம்பிக்கைக்கும்!"

      அக்கா பாருங்க உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கேன்....உங்க பதிலை நானே கொடுத்து!!!!!!

      அக்கா இப்ப என்னை ஓட ஓட துரத்தப் போறாங்க. அதுக்குள்ள மிச்சம் மீதி கருத்தையும் போட்ட்டு ஓடுகிறேன்.

      கீதா

      நீக்கு
    3. https://chellappatamildiary.blogspot.com/2025/07/2025.html

      அக்கா இதுதான் சுட்டி

      கீதா

      நீக்கு
    4. கமலாக்கா, சும்மா உங்களை ஜாலியா கலாய்ச்சேன்....ஓகேவா....பழம் டீல்!!

      கீதா

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      ஹா ஹா ஹா. உண்மையிலேயே என் நேரத்தை மிச்சப்படுத்த விட்டீர்கள். நன்றி. நன்றி. என்னைப் போலவே கருத்துரை தந்து அசத்தி விட்டீர்கள். அதற்கே உங்களை மனமாற பாராட்டுகிறேன். எனக்கு இன்றிலிருந்து தொடர்ந்து வரும் மூன்று நாட்களுமே கொஞ்சம் பிஸிதான்.

      /கமலாக்கா, சும்மா உங்களை ஜாலியா கலாய்ச்சேன்....ஓகேவா....பழம் டீல்!!/

      இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது? ஆனால், என்னுடைய ஒரு வரியை நீங்கள் எழுதாமல் மறந்து விட்டீர்கள். என்னவென்று யோசிக்கிறீர்களா ?

      அதான்...
      அதான்...
      அதான்...
      ஆகா... நம் ஸ்ரீராம் சகோதரர் கவனித்திருந்தால் கண்டிப்பாக சொல்லியிருப்பார்.. ஏன் இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும்.

      அந்த வரி "நான் சொன்னது தவறாயின் என்னை மன்னித்து விடுங்கள்." என்பதுதான்.இப்போது .புரிந்து விட்டதா? ஹா ஹா ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. ஆஹா! கமலாக்கா, எப்படி இது விட்டுப் போச்சு.....நான் உங்களை இதுக்கு அடிக்கடி சொல்வேனே எதுக்கு அக்கா இந்த மன்னிப்பு என்றெல்லாம்!!!! எனக்குத் தெரியுமே இதுவும் சொல்வீங்கன்னு!!!! அது காப்பி பேஸ்ட் பண்ணும் போது காப்பி ஆகாமல் போயிருக்கிறது! இப்ப பார்க்கும் போதுதான் தெரிந்தது.,

      ஹான்....கூடவே "எனக்குப் பிடிக்காத வார்த்தை அது.....ஹாஹாஹாஹா...

      கீதா

      நீக்கு
    7. விட்டுப்போன வரியை நான் சொல்வதற்குள் நீங்களே இருவரும் மாற்றி மாற்றி சொல்லி விட்டீர்கள்!

      நீக்கு
  23. புதிய வகை ரத்தம் பற்றி நானும் செய்தி பார்த்தேன் ஆனால் அது என்ன செய்தி என்ற விவரங்கள் இப்பதான் பார்க்கிறேன்.

    மகனோடு பேச ஒரு புது விஷயம் கிடைத்துவிட்டது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  ஏதாவது சுவாரஸ்யமாய் இருந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

      நீக்கு
  24. இந்தக் காலத்தில் இவ்வளவு சுவாரஸ்யமாக புத்தகம் படிப்பவர் இருக்கிறார்களா ஃப்ரெண்ட்ஸ்?//

    அந்த சிக்னேச்சர் படம் போல இல்லைனாலும், பஸ்ஸில் போறப்ப வாசிச்சு, இறங்கும் இடத்தில் இறங்காமல் சென்றதுண்டு!!! மற்றொரு முறை, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு இல்லைனா திருவனந்தபுரம் போகணும் எக்ஸாம் எழுத....அப்ப ஐ இ எஸ் எக்ஸாமுக்காக பஸ்ஸில் கட்டுரைகள் வாசித்துக் கொண்டே போனதால பஸ் ஸ்டான்ட் போனப்புறம் கூட எக்ஸாமுக்கான புத்தகத்தை வாசித்துக் கொண்டே இருந்தேன் ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சோ...   ஸ்டாப்பிங் வந்தது கூட தெரியாமலா?

      நீக்கு
  25. ஜோக்ஸ் ரசித்தேன் ஸ்ரீராம், வயிற்றுவலி தவிர அந்த ஜோக் தெரிந்துவிட்டதால் ...

    கீதா

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  27. பிறப்பு இறப்பில் தொடரும் ஆத்மாவின் நீண்ட பயணம்//

    ஆமாம், நீண்ட பயணம் தான். மாணிக்க வாசகர் சொன்னது போல
    எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்து பெருமானின் பொன்னடிகளை கண்டு வீடு பேறு அடைய பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறோம்.
    இன்னும் வேறு ஒரு பிறவியா?
    கரைக்கால் அம்மையார் சொன்னது போல மீண்டும் பிறவா நிலைதான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
      பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
      கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
      வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
      செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
      எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

      என்கிறது திருவாசகம்.

      நீக்கு
  28. ஏழுதலைமுறைகள் தாத்தா நினைத்த காரியத்தை பேரன் முடித்து வைக்கலாம் என்பார்கள்.
    தாத்தா பள்ளி கட்ட வேண்டும் என்று நினைத்து இருப்பார். அதை அடுத்த தலைமுறையை சேர்ந்த பேரன் மூலம் அந்த விருப்பம் நிறைவேறும், பேரன் மட்டும் மல்ல பேத்திகூட அந்த நினைப்பை நிறைவேற்றலாம்.
    நல்ல நினைவு மட்டும் அல்ல . கெட்ட நினைவு கூட கெட்ட நினைவு கொண்டவரிடம் சென்று அதை நிறைவேற்றும் என்பார்கள்.
    அதனால் எப்போது நல்ல நினைவு வேண்டும் அதை வான் காந்தம் நிறைவேற்றும் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அப்படிதான் சொல்கிறார்கள். சில நினைவுகளை, பழக்க வழக்கங்களை அவர்கள் ஜீன்கள் கொண்டு வருகின்றன.

      நீக்கு
  29. கேட்பதை விட படிப்பது சுகம் என்ற பின் அவர் கதை சொல்லி அவருக்கு எப்படி இருக்கும். கேட்பது சுகம் என்றால் கேளுங்கள் என்று சொல்லி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பாக சொல்வது போல நீ கேட்காட்டா எனக்கொண்ணும் நட்டமில்லைங்கறார் போல!

      நீக்கு
  30. பொக்கிஷ பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  31. எனக்கும், திரு ஜெயகுமார் சந்திரசேகரன் அவர்கள் சொன்ன அபிப்ராயம்தான். அதே நம்பிக்கைதான். இறைவனின் ஒரு அம்சம்தான் என்பதைத்தான் நான் நம்புகிறேன். இறைவனைப் புரிந்து கொண்டுவிட்டால் நாம் இறைவனடி சேரலாம் பிறப்பறுக்கலாம் என்றே.

    ஆனாலும் இப்போதெல்லாம் வெளி வந்துள்ள பிக்பேங்க் தியரி போன்றவை சிறிதாகச் சில கேள்விகளை எழுப்புகின்றன (ஆங்கில இலக்கியப்பாடத்திலும் இருக்கின்றன. நிறைய கவிஞர்கள், இலக்கியம் எழுதுபவர்கள் பேசியவிஷயங்கள். நான் நோட்ஸ் தயாரித்த போது யோசிக்க வைத்தவை)

    1380 கோடி வருடங்களுக்கு முன்பு சூனியத்திலிருந்து உண்டான பிரபஞ்சம். அந்தப் பிரபஞ்சத்தில் அன்று உருவான சக்திகள் எல்லாம் நம் உடலில் உள்ள 7 ஆக்டிலியன் - ஆக்டில்லியன் என்றால் எவ்வளவு என்று பார்த்தால் தலை சுற்றுகிறது - 1 க்குப் பிறகு 27 பூஜ்ஜியம் - இதை 7 ஆக் பெருக்கிக் கொள்ளுங்கள் எத்தனை வரும்... இத்தனை செல்களால் உருவான நாம் இவை எல்லாம் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது ஆனால் உருமாறி இருக்கிறது என்றெல்லாம் வாசிக்கும் கேட்கும் போது மரணம் என்பது ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மட்டும் தான். என்று பார்க்கும் போதும், பெரும்பாலும் நாம் நம்முடைய பாகமான அந்த இறைவனை அடைகிறோம் எனும் போது என் சிந்தைகள் ஏறக்குறைய விஞ்ஞானத்திற்கும் இடம் கொடுக்கிறது என்று தோன்றுகிறது. இந்த நிலையே போதும் என்றும் நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் எனப்படும் அந்த சக்தியை அது நம்மை எப்படி இயக்குகிறது, எப்படி இயங்க விரும்புகிறது என்று தெரிந்து கொண்டால் பிறப்பறுக்கலாம்.   மரணம் எய்திய மனிதர் அந்நிலையை கொண்டாடுவார்கள், இன்ப நிலை அது என்கிறார்கள்.  ஆனால் மனித வாழ்வை முடித்துக்கொள்ள  மனிதனுக்கு மனம் துணிய மாட்டேன் என்கிறது!  பாவமும் புண்ணியமும் ஒரே எண்ணிக்கையில் வரும்போது பிறவா வரம் அடையலாம் என்கிறார்கள்.

      பிக்பேங் தியறியும் விஞ்ஞானமும் சம அளவில் முட்டிக்கு கொள்கின்றன.  இழுவிடையில் குறைய வேண்டிய வேகம் காரணமில்லாமல் அதிகரித்துக் கொண்டுபோய் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகும் அதிசயத்துக்கு மனிதனால் விடை கண்டு பிடிக்க முடியவில்லை.  கருந்துகள்கள் மர்மத்தை, வர்ம்ஹோல் மர்மத்ததை உடைக்க முடியவில்லை. இறைவன் உலகத்தைப் படைத்தார் என்றால் படைப்பதற்கு முன் இறைவன் எங்கிருந்தார் என்று கேட்கிறார்கள். 

      நன்றி துளஸிஜி.

      நீக்கு
  32. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பதில்கள் மிகவும் அருமை. மிகவும் ரசித்தேன்.

    இடையிடையே உள்ள செய்திகள், துணுக்குகள் எல்லாம் நன்று.
    நீங்கள் போட்டியில் கலந்து கொண்டீர்களா. நானும் கீதா வழி போட்டிகள் பலதும் பற்றி அறிந்தேன்.

    பேருந்து அக்காலத்துக்கார்களை நீளப்படுத்தியது போன்று இருக்கிறது. தள்ளுமாடன் வண்டி இது என்று பாட்டில் வருவது போன்று இருக்கிறது.

    புதுவகை இரத்தத்தின் பெயரே கடினமாக இருக்கிறது.

    பொக்கிஷ ஜோக்ஸ் எல்லாம் நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுவகை ரத்தத்தின் பெயரை அப்புறம் சுருக்கி விடுவார்கள்!  நன்றி துளஸிஜி.

      நீக்கு
  33. பாருங்க விட்டுப் போன கருத்து, அந்த ஓல்ட் ஜோக்ஸ் நீங்க பகிர்ந்திருப்பதை நானும் ஓல்ட் ஜோக்ஸ் என்று சொல்லிக் கொள்கிறேன்!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே பகிர்ந்தது என்கிறீர்களா கீதா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!