8.8.25

பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய

மனதில் நின்ற பாடல்களாக இல்லாமல் கேட்ட பாடல்களாக இரண்டு பாடல்கள் இன்று.

வானொலியில் அப்போது அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு ரசிக்கப்பட்டு காலப்போக்கில் கீழே அமிழ்ந்திருக்கும் பாடல்கள்.

இனிய பாடல்கள், மெலடி என்றெல்லாம் வகைப்படுத்தல் அந்தக் காலத்துக்கு இட்டுச் செல்லும் வகைப் பாடல்கள்.  பாடல்களுக்கு அந்த சக்தி உண்டல்லவா..

​ஓடும் நதி படத்தின் பெயர்.  சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் தாதா மிராசி இயக்கத்தில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி, ஷீலா நாகேஷ் நடித்த திரைப்படம்.

காலமகள் மடியினிலே ஓடும் நதி, மற்றும் குன்றத்தில் ஜோயில் கொண்ட நம்பி  நம்பி ஆகிய பி. சுசீலா பாடலும் இந்தப் படத்தில்தான்.

கண்னதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  பாடல்களை டி எம் சௌண்டஹர்ராஜன் பி சுசீலா பாடி இருக்கிறார்கள்.  முதல் பாடல் டி எம் எஸ் மட்டும்.

காட்சியில் ரவிச்சந்திரன், ஷீலா.  பல்லவிவியின் டியூனும், சரணத்தில் 'நடையில் நாட்டியம் ஆடுது ஆடுது' என்ற டியூனில் வரும் இடங்களும் ரசிக்க வைக்கிறது.  சாதாரணப் பாட்டு.  ஆனால் ஒருமுறை இப்போது கேட்டு விட்டால் இரண்டு நாட்களுக்கு இந்த டியோனில் ஏதாவது ஒரு இடத்தை முணுமுணுத்துக்கொண்டிருப்பீர்கள்!

தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு 
தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன்வண்டு 
தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு 
தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன்வண்டு 

வைரத்திலே தட்டு மலர்களிலே மொட்டு  பறவைகளில் சிட்டு 
பறக்குதடி பட்டு 
நடையில் நாட்டியம் ஆடுது ஆடுது பெண்ணொன்று 
இடையின் கோலத்தைத் தேடுது தேடுது கண்ணொன்று 
உஹுஹுஹுஹு பெண்ணொன்று உஹுஹுஹுஹு  கண்ணொன்று 
உஹுஹுஹுஹு பெண்ணொன்று உஹுஹுஹுஹு  கண்ணொன்று 
தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு 
தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன்வண்டு 

பூவிதழோ கிண்ணம் புன்னகையோ மின்னும் மாந்தளிரோ கன்னம் 
மனமிலையோ இன்னும் 
இழுத்துப் போகுது ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள் 
வளைத்துப்போடுது ஆசையில் ஓடிய எண்ணங்கள் 
உஹுஹுஹுஹு  உஹுஹுஹுஹு ம்..
உஹுஹுஹுஹு  உஹுஹுஹுஹு ம்..
உஹுஹுஹுஹு வண்ணங்கள் உஹுஹுஹுஹு எண்ணங்கள்
தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு 
தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன்வண்டு 
 
மரகதப்பூ மஞ்சம் மறக்குதடி நெஞ்சம்  விருந்து கொள்வேன் கொஞ்சம் 
விழுந்து விட்டேன் தஞ்சம் 
விழுந்த நெஞ்சினை வேடிக்கை பார்ப்பது கண்ணல்ல 
அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள் பெண்ணல்ல  
உஹுஹுஹுஹு கண்ணல்ல உஹுஹுஹுஹு பெண்ணல்ல 
உஹுஹுஹுஹு கண்ணல்ல உஹுஹுஹுஹு பெண்ணல்ல 

தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு 
தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன்வண்டு 


=============================================================================================


'' சரியா சொல்லுங்க ...அந்த வீடு தானா ?''

' அம்மா வேடத்தில் ' நடிக்கும் அந்த நடிகையின் உதவியாளர் திரும்ப திரும்ப கேட்க.....

பட மேனேஜரோ , உள்ளுக்குள் பொங்கி கொண்டிருக்கும் சலிப்பை வெளிக்காட்டாமல் 

'' ஆமா மேடம் ...அதே வீடு தான் ...நான் இப்போ சொன்ன அந்த முகவரியை சரியா குறிச்சுக்கிட்டீங்க இல்ல ? .....காலைல எட்டு மணிக்கு ஷூட்டிங் ...அம்மா கிட்ட சொல்லிடுங்க ..!''

அவர் முடிப்பதற்குள் , அவசரமாய் இடையே குறுக்கிட்டார் அந்த அம்மா வேட நடிகையின் உதவியாளர் ..

பின் மிக உறுதியான குரலில் , " சார் அம்மா வர மாட்டாங்க ...''

அத்துடன் டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட ...

மேனேஜருக்கு .அந்த அம்மா வேட நடிகையின் உதவியாளர் சொன்ன பதில் கேட்டு ஒரே குழப்பம் !

விஷயம் இது தான் ....

அதாவது , குறிப்பிட்ட அந்த படத்தில் பணியாற்றும் உதவி இயக்குனருக்கு அது தான் முதல் படம் ...!

கதைப்படி , மறு நாளைய ஷூட்டிங்கிற்கு உடனடியாக ஒரு பெரிய வீடு தேவைப்படவே ...

பட தயாரிப்பு மேனேஜரிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட .....அவருக்கோ வெளியுலக அனுபவம் மிகவும் கம்மி !...

எப்படியோ கஷ்டப்பட்டு அலைந்து , திரிந்து ஒரு ஆளை பிடித்து ...
அவர் உதவியுடன் ஒரு பெரிய வீட்டை கண்டுபிடித்து ..

.அவருக்கு கமிஷனையும் கொடுத்து விட்டு .....
பின்னர் அனைத்து ஆர்டிஸ்ட்டு களுக்கும் மறு நாளைய ஷூட்டிங் பற்றிய தகவல் சொன்னார் !

.....அந்த படத்தில் அம்மா வேடத்தில் நடித்து கொண்டிருக்கும் அந்த நடிகையை தொடர்பு கொண்டு ..

அவரிடமும் தகவலை சொல்ல முயன்றபோது ...

அவர் அப்போது வேறு ஒரு ஷூட்டிங்கில் இருந்ததால் .....அவரின் உதவியாளரை தொடர்பு கொண்டபோது ...

அவரோ , ' அம்மா வரமாட்டார் ' என்று திரும்ப திரும்ப சொன்ன போது ஏகத்துக்கு எரிச்சலும் , சலிப்புமாய் அவரை வாட்ட ...

செய்வதறியாது அவர் நின்றிருந்த போது ......

அம்மா வேட நடிகையிடமிருந்து போன் !

பதறிப் போன மேனேஜர் , உதவி இயக்குனரை விட்டு அவரிடம் பேச சொன்னார்.....!
அவரும் ரிசீவரை கையிலெடுத்து காதில் பொருத்தி கொண்டார் ..

அம்மா நடிகை அமைதியாக பேசினார் ;  '' சார் ....எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரியணும்! .....அதாவது , அந்த வீட்ல ஷூட்டிங் வைக்க என்ன அவசியம்னு தயாரிப்பாளர் கிட்ட கேட்டு சொல்லுங்க....அவ்வளவு தான் .''.
என்றார்.

அடுத்த கணம் ' மள மள ' வென்று அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்க ...வேகாத வெயிலில் அவரும் மேனேஜரும் நாயாக அலைந்த கதையை அவர் சொல்லி முடிக்க ....
இப்போது அம்மா நடிகை மிக அமைதியாக.. '' ஓகே ...... காலைல எட்டு மணிக்கு நான் ஸ்பாட்ல இருப்பேன்..” என்று சொல்லி போனை வைத்து விட்டார் :  சொன்னபடியே காலை எட்டு மணிக்கெல்லாம் ஷூட்டிங்கிற்கு வந்த அம்மா நடிகை ....

வீட்டு ஹாலில் யாருடனும் பேசாமல் தனியாக போய் அமர்ந்து கொண்டார் .....!  அவருக்குப் பின்னே பதட்டத்துடன் வந்த அவருடைய இணை (ஜோடி) நடிகர், நடிகையை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டார்.!

அங்கிருந்தோரை பார்த்து கோபத்துடன், “உங்களுக்கு ஷூட்டிங்குக்கு வேற வீடே கிடைக்கலையா..? இல்லைன்னா என்கிட்ட கேட்டிருக்கலாமே.. நான் அரேஞ்ச் பண்ணிருப்பனே..?” என்று கத்தி கூச்சலிட்டார் .....!

ஆனால் அவர் காரணம் எதுவும் சொல்லவில்லை ... !

அவரின் கோபத்துக்கான காரணம் மேனேஜருக்குப் புரியவில்லை...!
அதற்குள் இயக்குனரும் அங்கு வந்து விட .....அவரும் தனது பங்கிற்கு ..அந்த மேனேஜரை சகட்டு மேனிக்கு திட்டி , பளார் பளாரென்று அறைய......
அங்கே ஒரே களேபரம் ! 

அதற்குள்ளாக சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த நடிகை , இயக்குநரை சமாதானப்படுத்தி,  “விட்ருங்கண்ணே.. வேண்டாண்ணே.. நீங்க ஷூட்டிங்கை ஆரம்பிங்க. கேன்ஸல் பண்ணா எல்லார் பொழைப்பும் கெடும்...”  என்று சொல்ல..
இயக்குநர் அவரின் காலில் விழாத குறையாக அழுதுவிட்டு, ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்!.

மேனேஜருக்கு ஒன்றும் புரியவில்லை ... !

தலை சுற்றி , மயக்கம் போட்டு விழாத குறை !

மதிய உணவு இடைவேளையில் அந்த நடிகையிடமே அது பற்றி கேட்க , அவர் சாவதானமாக , “இது என்னோட வீடு..” என்றார் வெகு இயல்பாக...

ஆசை, ஆசையாக கஷ்டப்பட்டு குருவி சேர்ப்பது போல் சேர்த்துக் கட்டி, கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் அந்த வீட்டில் வாழ்ந்த அந்த நடிகை வேறு யாருமில்லை .....  நடிகை ஸ்ரீவித்யா தான் அவர் !



சில மாதங்களுக்கு முன்பாக தான் ஒரு நள்ளிரவில் ஸ்ரீவித்யா, அவருடைய காதல் கணவரால் அந்த வீட்டிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டிருந்தார். .....!

அந்த வீடு , தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து தன் பெயரில் கட்டிய வீடு. ...!
அதில் வசிக்க தனக்குத் தான் உரிமை உண்டு. ...அதனை மீட்டுக் கொடுங்கள் என்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீவித்யா புகாரும் கொடுத்திருந்தார் ....!
அதற்குள்ளாக ஸ்ரீவித்யாவின் கணவர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட,

ஸ்ரீவித்யாவும் கோர்ட்டுக்கு சென்று விட்டார்.....  வழக்கு நீதிமன்றத்தில் காத்திருந்தது...!

வெளி வியாபகம் எதுவும் அறியாத அந்த மேனேஜருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை ...!

அதனால் வந்த வினை தான் இது ! 

தனக்கு உரிமையான , தனது சொந்த வீட்டிலேயே , ஒரு மூன்றாம் மனுஷியைப் போல் நடமாடி ...எவ்வித விருப்பு , வெறுப்பும் காட்டாமல் .....முழு ஒத்துழைப்பு கொடுத்து ...

தன்னுடைய போர்ஷனை நல்லபடியாக நடித்து கொடுத்த ஸ்ரீவித்யாவை கண்டு .....
பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்த திராணியின்றி .....ஒரு நடைபிணம் போல அன்றைய ஷூட்டிங்கிலிருந்து ........கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினர் இயக்குனரும், சக நடிகர்களும் ! 


அபூர்வராகங்கள் படத்தில் அந்த அகல கண்களை சுழற்றி, நடிகர் கமலிடம்,
"கேள்வியின் நாயகனே…….. 

இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா .." எனக் கேட்பார். ..!


அந்த கேள்விக்கான பதில் அவரின் மரணத்துக்குப் பிறகு தான் கிடைத்தது. !

நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்ட திருமதி தங்கம் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பதிவிலிருந்து...



============================================================================================

அடுத்த பாடல் ரவிச்சந்திரனும், சரோஜா தேவியும் ஆடிப்பாடும் பாடல்.  அப்போது இந்த பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா ரொம்பப் பிரபலம்!

இந்தப் பாடலைக் கேட்டீர்கள் என்றாலும் அன்று முழுவதும் நீங்களும் அவ்வப்போது பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பாஎன்று பாடிக் கொண்டிருப்பீர்கள்!

காட்சியோடு கூடிய பாடல் இணைத்திருக்கிறேன்.

பாயப்பா பாயப்பா சொல்லும்போது ரவி, சரோஜாதேவி முகம் பார்க்கும் சுவாரஸ்யத்துக்காகவே இரண்டாவது சரணத்தில் இரண்டு வரி மிஸ்ஸிங் என்றாலும் இதை இணைத்திருக்கிறேன்!  விட்டுப்போன அந்த இரண்டாவது சரணத்தின் கடைசி வரிகளையும்,  காட்சி இல்லாமல் கேட்க ஆசைப்பட்டீர்கள் என்றால் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்!

பாயப்பா பாயப்பா என்று கத்த வைக்க வேண்டும் என்று MSV க்கு ஏன், எப்படி தோன்றியதோ...!

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
பூவை பார்ப்பதே வாசமா
ஆசை பார்வையால் தீருமா
பூவை பார்ப்பதே வாசமா
ஆசை பார்வையால் தீருமா
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய
.

ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே மன்னன்
பந்தாட வேண்டும்
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே மன்னன்
பந்தாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே சங்கம்
கொண்டாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே சங்கம்
கொண்டாட வேண்டும்

மூடும் கண்ணிலும் முன்னால் வரும்
மூன்று பாஷையும் தன்னால் வரும்
மூடும் கண்ணிலும் முன்னால் வரும்
மூன்று பாஷையும் தன்னால் வரும்
யோக மேடையில் மோக நாடகம்
ஆடிப் பார்க்கலாம் வா.........
.
(வா அந்த...)
.
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய

கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
மஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாக வேண்டும்
மஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாக வேண்டும்

கேள்வி ஞானத்தில் வாராதது
கேட்டுப் பார்த்த பின் தீராதது
போதும் என்பதே இல்லை என்று நாம்
வாழ்ந்துப் பார்க்கலாம் வா
.
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுப்பக்கம் எங்கே
பூவை பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய
பாயப்பா பாயப்பா பாய பாயப்பா பாயப்பா பாய

31 கருத்துகள்:

  1. பதிவின் தலைப்பு. பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் பாடலை நினைவுபடுத்தியது

    பதிவை 11 மணிக்குத்தான் படிக்கமுடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. சிலருக்கு இந்தப் பாடல் கேட்ட நினைவு இருக்கும். சிலர் கேட்டிருக்க மாட்டார்கள்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஓம் முருகா...   வாங்க செல்வாண்ணா...   வணக்கம்.

      நீக்கு
  3. குன்றத்தில் கோயில் கொண்ட நம்பீ நம்பீ
    எங்கள் குடும்பம் இருப்பதுன்னை நம்பி நம்பி...

    இளமையில் மனதில் நிலைத்து விட்ட பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நல்ல பாடல். சில வருடங்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
  4. ஸ்ரீ வித்யாவின் வாழ்வு அவராகவே தேடிக் கொண்டது...

    பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவம் நெகிழ்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதி அப்படி எழுதப்பட்டிருக்குமானால் அவர் என்ன செய்வார் பாவம்..

      நீக்கு
  5. அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.  உங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீவித்யா வீடு பற்றிய தகவல் மனதை பாரமாக்கி விட்டது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை பாரமாக்கி விட்டது ;
      கண்களை ஈரமாக்கி விட்டது!

      நீக்கு
  8. முதல் பாட்டு கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம் நல்ல ட்யூன்.

    நீங்க சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறேன். மனதில் நிற்கும் ட்யூன். சிம்பிள் பாட்டு தான் ஆனால் ட்யூன் தான்...ஸ்டெப்ஸ் போட வைக்கும்.

    இதிலிருந்து உடனே மாசிலா உண்மைக்காதலே பாட்டுக்குப் போனது மனசு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...    இந்தப் பாடல் கேட்கும்போது வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லையா கீதா?!!

      நீக்கு
  9. பாயப்பா பாடல் கேட்டிருக்கிறேனா இல்லையோ என்று தோன்றியது.

    அப்போதைய எம் எஸ் வியின் டிப்பிக்கல் பாடல்கள்! அவர் பாடல்களில் இந்த congo முக்கியமாகப் பயன்படுத்தியிருப்பார். அது முன்னிலையில் தெரியும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் ரேர் பாடல்தான்.  பாயப்பா கடைசியில் சொல்லும்போது சரோஜாதேவியின் முகத்தைப் பார்க்கவும்!

      நீக்கு
  10. இன்றைய இரண்டுபாடல்களும் மறந்துபோன பாடல்கள்தான். இப்பொழுது கேட்கும்போதுதான் முன்னர் கேட்ட நினைவிருக்கிறது.

    ஸ்ரீவித்யா சிறந்த ஓர் நடிகை. அவரின் கண்ணீர் பக்கங்கள் அறிந்த போது மனதுக்கு சங்கடமாகியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் கேட்ட நினைவு இருப்பது ஆச்சர்யம்தான். நன்றி மாதேவி.

      நீக்கு
    2. அழகு என்பது சோகமயமானது. பாவம் ஸ்ரீவித்யா.

      நீக்கு
  11. பாயப்பாவுக்கு எதிர் பதம் கேர்ள் அம்மாவா ?

    பதிலளிநீக்கு
  12. இப்படியான பாடல்கள் எப்போதுமே நம்மை அந்தக் காலத்திற்குக் கூட்டிச் செல்லும்.

    இப்போதைய புதுமை என்று பாடல்களைக் கேட்கும் போது...இடையில் இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ரசிக்க முடிகிறது.

    இப்பாடல்களைக் கேட்ட போது ரவிச்சந்திரனும் ஷீலாவும் இப்படியான படங்களில் நடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டார்களோ என்று தோன்றியது. எனக்குக் கொஞ்ச காலம் முன்புதான் தெரியவந்தது. ஷீலாவின் கணவர் ரவிச்சந்திரன் என்று.

    பாடல்களைக் கேட்டு ரசித்தேன்.

    ஸ்ரீவித்யாவைப் பற்றிய பகுதி மனதைத் தொட்டது. அவருடைய இறுதிக் காலங்கள் நினைவுக்கு வந்தது. அவரைப் பற்றிய திரைப்படம்....சாவித்ரி பற்றி தமிழ்லும் தெலுங்கிலும் வந்தது போல், மலையாளத்தில் ஒன்று வந்திருந்தது. ரஞ்சித் டைரக்ட் செய்திருந்த படம் பெயர் திரக்கதா. அனுப்மேனன் என்ற நடிகர். மிக நன்றாகச் செய்திருந்தார். பிரியாமணியும் நன்றாகச் செய்திருந்தார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவிச்சந்திரன் - sheela - வருமான வரி காரணமாக கல்யாணம் செய்துகொண்டு பிறகு divorce பெற்று பிரிந்தார்கள் என்று ஞாபகம்.

      நீக்கு
    2. வருமான வருக்காகவா?  அப்படியும் பிள்ளை பெற்றுக் கொண்டதில் குறைவில்லை!

      நீக்கு
  13. Ravichandran is a Tamil, born B.S. Raman in Kuala Lumpur, capital of the Federated Malay States. He moved to Tiruchirappalli, India in 1951, and studied at the St. Joseph's College.[3] He was married twice; he first married Vimala, with whom he has a daughter, Lavanya, and two sons, Balaji and Hamsavardhan. Thereafter, he married Malayalam actress Sheela, and had a son George Vishnu. After his divorce with the latter he got back to his first wife. His sons Hamsavardhan and George also took up acting as a career, with Hamsavardhan starring in the film Manthiran, directed by Ravichandran himself. Lavanya is married and has two daughters. His granddaughter Tanya Ravichandran debuted through Balle Vellaiyathevaa, playing alongside M. Sasikumar, Well known for her role in Karuppan a romantic action comedy film, in which she is playing alongside Vijay Sethupathi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவிச்சந்திரன் 'காதலிக்க நேரமில்லை' நடித்தபின், ஒருமுறை நாகைக்கு வந்தபோது பெண்களிடையே எப்படி ஒரு கிரேஸ் இருந்தது என்று விசு அடிக்கடி சொல்வார்!

      நீக்கு
  14. ஓடும் நதி படம் சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். கதை மறந்து விட்டது.
    சரோஜாதேவி இந்த பாடலுக்கு காதலிப்பது போல நடிக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் முகத்தில் சோகம் கலந்த சிரிப்பு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா..   பாடல் முடிவில் பாயப்பா சொல்லும்போது சரோஜா தேவியின் முகம் வினோதமாக இருக்கும் - பாடலுக்கு பொருத்தமில்லாமல் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு..  ஒருவேளை பாடலில் அந்த வரிகளை அப்படிதான் முகத்தை வைத்துக்கொண்டு உச்சரிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

      நீக்கு
  15. ஸ்ரீ வித்யாவின் நினைவுகள் மனதை கஷ்டபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சோக வாழ்க்கை வாழ்ந்தார். நன்றி கோமதி அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!