முதல் முறை ரசத்தை வைத்து சோதித்ததால் இதற்கு ரசரவா என்றே தலைப்பிட்டு விடுகிறேன். ரசமான ரவா என்று எடுத்துக் கொள்ளுங்கள்!
ரசரவா உப்புமா செய்து சுவைத்ததும், எதையும் காரசாரமாக எதிர்பார்க்கும் என் நாக்குக்கு அவ்வளவு மென்மையான சுவை திருப்தியைத் தரவில்லை. சரி வெந்தயக்குழம்போ, வத்தக் குழம்போ வைக்கும் ஒரு நாளில் இருக்கு கச்சேரி என்று தீர்மானித்துக் கொண்டேன்.
வியாழனன்று மணத்தக்காளி வத்தக்குழம்பு வைக்கப்பட. அதுவும் தேவையான அளவு சரியாக மிஞ்ச.. அதை மறுநாள் காலை சோதனைக்கு எடுத்துக் கொண்டேன்.
அப்புறம் என்ன, ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்று இருப்பதில் இருக்கும் வத்தக்குழம்பைக் கொட்டி குறைவதற்கு தண்ணீர் சேர்த்துக் கொண்டோம். பாஸ் தான் செய்தார். ஒவ்வொன்றையும் போட்டோ எடுக்கும்போது அலுத்துக் கொண்டார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவர் செய்த ஒரு புது டிஷ் விரைவில் அரங்கேறும் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!
நான் வெங்காயம் மட்டும் சேர்த்தேன். பெருங்காயமும்தான். சாப்பிடும்போது கேரட், பீன்ஸ் கூட கூட சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது. முந்திரிப்பருப்பும் சேர்க்கலாம். உப்பு சேர்க்கும்போது கவனம் தேவை. ஏற்கனவே குழம்பில் உப்பு இருக்கும். கொஞ்சம் புளியோதரை ஞாபகம் / வாசனை வரலாம். ஆனால் மகன்களும், மருமகளும் அப்படி வரவில்லை என்று சொன்னார்கள்.
அடுப்பிலிருந்து இறக்கும்போது நான் நெய் இரண்டு ஸ்பூன் விட்டேன். தேங்காய் எண்ணெய் விட்டாலும் நன்றாய் இருக்கும்.
குடும்பக் குழுமத்தில் படத்தை மட்டும் பகிர்ந்து, 'இது என்ன என்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு ரூபாய் பரிசு' என்று சொல்லி இருந்தேன். ஓரளவுக்கு உடனே கண்டு பிடித்து விட்டார்கள் என்றாலும் சரியாக இன்னதுதான் என்று யூகிக்க முடியவில்லை. அப்படி யூகிக்க முடியாது என்றுதான் படம் காண்பித்தேன்! தொண்ணூறு சதவிகிதம் சரியாகச் சொல்லி மாமா பெண் ஒரு ரூபாய்க்கு தகுதியானார். இன்னும் அவர் தன் ஜி பே நம்பர் தரவில்லை என்பதால் பரிசு அவரை சென்றடையவில்லை! அதேபோல எங்கள்பிளாக் குழுமத்திலும் அப்பாதுரை சரியான விடை கிட்டத்தட்ட சரியாகச் சொல்லி இருந்தார். கீதா ரெங்கன் கிட்டத்தட்ட விடைக்கு அருகில் வந்து விட்டாலும், யாராலும் வழிமுறையை யூகிக்க முடியவில்லை! அவனில் வைக்கவேண்டும் என்றெல்லாம் கீதா சொல்லி இருந்தார். எவனிலும் வைக்க வேணாம், அடுப்பில் வைத்தால் போதும்! ஹிஹிஹி...
==============
முதலில் செய்த ரசரவா உப்புமா. காத்திரமான நிறம், சுவை இல்லை என்பதால்தான் வத்தக்குழம்பு. மென்மையான சுவையே போதும் என்று நினைப்பவர்கள் ரசம் வைத்தே செய்யலாம்! ("இது வேற"
என்கிறீர்களா?!) அடுத்த தபா சாம்பாரை வைத்து செய்து பார்க்க வேண்டும்.. இருங்க.. இருங்க... எங்க ஓடறீங்க...
என்கிறீர்களா?!) அடுத்த தபா சாம்பாரை வைத்து செய்து பார்க்க வேண்டும்.. இருங்க.. இருங்க... எங்க ஓடறீங்க...

























சபாஷ்! ஆராய்ச்சி பலமாக இருக்கிறதே!
பதிலளிநீக்குஐஐடி ப்ரொஃபெசர் ஒருவர் க்ரிஸ்ப்பி தோசைக்கு விஞ்ஞான விளக்கம் கொடுத்திருந்ததைப் பார்த்தீர்களா? https://economictimes.indiatimes.com/news/new-updates/iit-madras-professor-reveals-the-18th-century-german-phenomenon-behind-perfect-crispy-dosa/articleshow/125634463.cms?from=mdr
பி.கு: அடுத்த வாரம் தயிர்ரவா உப்புமா ரெசிப்பி (மோர்கழி மாதிரி இருக்குமோ?) எதிர்பார்க்கலாமா?
வாங்க சூர்யா... அது ஏற்கனவே போட்டாச்சே...!! நீங்க சொல்லும் க்ரிஸ்பி தோசை ஆராய்ச்சி பார்த்து விட்டேன்.. JKC Sir அனுப்பியிருந்தார்.
நீக்குஇன்று ஒரு நாள் பயணம். காரில் படிக்க முடியலை. பிறகு வருகிறேன்
பதிலளிநீக்குவாங்க நெல்லை... grrrrr.... மொபைலில் வாசிக்கலாமே... சரி... அப்புறமாய் வாருங்கள். நல்லதொரு சுவையை தவற விடுகிறீர்கள்!!! ஹிஹிஹி...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்தனைகள்.
நீக்குநாங்கள் ஒன்று சொல்லுவோம். கிழவிக்கு மேக்கப் போடுவதுபோல. ரவா உப்புமா சாப்பிடுவதற்கே ஆளைத் தேடணும். இதுல அலங்காரமா?
பதிலளிநீக்குசெய்ய யோசிக்கிறேன்
எல்லாம் சாப்பிட்டு அலுத்த நாட்களில் ரவா உப்புமா தேவாமிர்தம் தெரியுமோ... தினமும் இட்லியே அலலது தோசையே சாப்பிட முடியுமா? இப்படியான அலங்காரங்கள் கவர்ந்து இழுக்கத்தான். வந்தாங்களே.. சாப்ட்டாங்களே.... ரசிச்சாங்களே...!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா முருகா... வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குபயப்படாம வாங்க...
முரட்டு சிங்கமாக இருக்கின்றது...
பதிலளிநீக்குபுரியலையே... ஏதோ உள்குத்துன்னு மட்டும் தெரியுது!
நீக்குஇப்போதெல்லாம் ரவா உப்புமா தான் ஒத்துக்
பதிலளிநீக்குகொள்கின்றது...
ஆதாம்.. அதேதான்... அதைதான் நானும் சொன்னேன். சமயங்களில் இப்படிதான்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவாக வந்த தங்களின் ரசரவா, வத்தாதரவா உப்புமாக்கள் இரண்டுமே படங்களுடன் செய்முறை விளக்கமாக நன்றாக உள்ளது.
புதுவித முயற்சிகளில்
ரசமான ரசனைகள் பெருகட்டும்.
ரவையை ஒதுக்குபவர்களின்
ரசனையில்லா கற்பனை
நினைப்பெல்லாம் நீங்கட்டும்.
அவலை வைத்து காரம் இனிப்பென
அமிர்தமாக செய்யும் போது
ரவைக்கு மட்டும் இதுவரை
இள(ங்)க்காரமா? இனி
இக்காரங்களின் வித்தியாசமான
சுவையுடன் நாங்களும் துப்பாக்கி
ரவையென சீறிப்பாய்ந்து
வந்திடுவோம். சுவையில் ஒரு
குறைவில்லையென
வரவேற்பீர்கள் எனவும்
நம்புகிறோம்.
மாறுபட்ட அசத்தலான சுவைகளுடன் வந்த திங்கப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ.. பாட்டாவே படிச்சிட்டீங்களா? சூப்பர்.. சூப்பர்...
நீக்குவரவா என்று கேட்ட
ரவாவை
உள்ளா'ரவா' என
கவிபாடி வரவேற்ற
கமலா அக்காவுக்கு ஜே...
:)))))
நீக்குரவா உப்புமா சாப்பிடுவதற்கே ஆளைத் தேடணும்.
பதிலளிநீக்குஇது சிறப்பு...
ஆனா இப்போ என்ன புதுசா இருக்குன்னு தட்டோட வந்தாங்களே..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் ரவைக்கு வ(வைத்த) ந்த சோதனைகளில் வென்று விட்டீர்கள். மழைகால காரசாரமானபுது முயற்சிகள் நன்றாக உள்ளது.
முதல் ரசரவா படம் மைசூர்பாகு போல உப்புமாவை கட் செய்து பார்க்கவே நன்றாக உள்ளது. வித்தியாசமாக செய்து உள்ளீர்கள். இரண்டாவது ரசரவா வுக்கு வழக்கம் போல மி. பொடியா? தேங்காய் சட்னி நன்றாக இருந்திருக்கும்.
நேற்று எங்கள் வீட்டில் காலை டிபன் வெங்காயம் நிறையபோட்டுரவா ரவா உப்புமா, தொட்டுகையாக தேங்காய் சட்னி வீட்டுக்கு வந்தவர்களுக்கும், எங்களுக்கும் டிபன் கொஞ்சம் பற்றாகுறையாக போய் விட்டது. அந்த அளவுக்கு "நான்" என ரவை பெருமிதபட்டுக் கொண்டது.
/இது என்ன என்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு ரூபாய் பரிசு' என்று சொல்லி இருந்தேன். /
பரிசு தொகை கொஞ்சம் அதிகமோ.?:))
/மாமா பெண் ஒரு ரூபாய்க்கு தகுதியானார். இன்னும் அவர் தன் ஜி பே நம்பர் தரவில்லை என்பதால் பரிசு அவரை சென்றடையவில்லை! /
அடாடா..! எவ்வளவு பெரிய தொகை இழப்பு அவருக்கு.. நிச்சயம் வருந்திருப்பார். ஹா ஹா ஹா.
படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நன்றாக உள்ளது. நானும் இதுபோல் செய்ய முயற்சிக்கிறேன். ரவை பிரியவளான என் நன்றி உங்களுக்கு.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதல் படவரிசை ரசரவா இல்லை... வத்தகுரவா .!
நீக்குரவா உப்புமாவுக்கு தேங்காய் சட்னி? ஓ...
//அடாடா..! எவ்வளவு பெரிய தொகை இழப்பு அவருக்கு.. நிச்சயம் வருந்திருப்பார். ஹா ஹா ஹா. //
ஹா ஹா ஹா அதான் எனக்கும் ஆச்சர்யம்.
// படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நன்றாக உள்ளது. நானும் இதுபோல் செய்ய முயற்சிக்கிறேன். ரவை பிரியவளான என் நன்றி உங்களுக்கு. //
நன்றி கமலா அக்கா
///வித்தியாசமான சுவையுடன்
பதிலளிநீக்குநாங்களும் துப்பாக்கி
ரவையென சீறிப்பாய்ந்து
வந்திடுவோம்.///
ஆனாலும் நெறஞ்ச பொறுமைசாலி...
யாருக்கு இந்தப்பாராட்டு. ரவைக்கா, ரவைக்கு அடிமையான எங்களுக்கா? . நன்றி சகோதரரே.
நீக்குஎன்ன கமலா அக்கா.. செல்வாண்ணா உங்களை 'ஆனாலும் நெறஞ்ச பொறுமைசாலி' ன்னு கலாய்க்கறார்!!
நீக்குஎன்னைத்தானா..! ரவையை கிண்டி கிளறியிருக்கும் உங்களுக்குந்தானோ என நினைத்தேன். ஹா ஹா ஹா பொறுமைசாலிகளுக்கு கொஞ்சம் புத்தி மட்டுதான். ஹா ஹா ஹா.
நீக்குவருத்தப்படாதீங்க கமலா அக்கா... ரவா உப்புமா சாப்பிடுவபர்களை உலகம் இப்படிதான் ஏளனம் செய்கிறது!
நீக்குரவா உப்புமா செய்து, அதற்கு குழம்பையோ,ரசத்தையோ தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு பதிலாக குழம்பு அல்லது ரசத்திலேயே உப்புமாவை கிண்டி விடுவதா..? நல்ல ஐடியா. விளக்கம் தராமல் படங்கள் மூலமே விளங்கிக்கொள்ளச் சொல்வது வித்தியாசம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... நாங்க வித்யாசமா யோசிப்போமில்ல...!
நீக்குகௌதம் ஜி... பல்லாண்டு நலமுடன் வாழ்க..
பதிலளிநீக்குஆம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் KGGG
நீக்குசகோதரர் கௌதமன் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் . வணக்கங்களும்.
நீக்குஎ. பியின் முக்கிய ஆசிரியரான அவர் பிறந்த நாளில், ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து அறிமுகப்படுத்தியிருக்கலாம். பரவாயில்லை...! முதல் "வத்த(ததா)ரவைக்கு" பிறந்தநாள் கேக் கட் பண்ணிய மாதிரி படம் போட்டு வாழ்த்தி விட்டீர்கள். அது பார்க்கவே ஒரு ஸ்வீட் மாதிரி இருப்பதும் ஒரு சிறப்பு. நன்றி.
// எ. பியின் முக்கிய ஆசிரியரான அவர் பிறந்த நாளில், ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து அறிமுகப்படுத்தியிருக்கலாம். பரவாயில்லை... //
நீக்குgrrrrr நீங்களே கிளப்பி விடுவீங்க போலிருக்கே...
ஆனாலும் நீங்களே சமாளிஃபிகேஷனும் கொடுத்து விட்டீர்கள்.. பரவாயில்லை!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த காரசாரமான ரவை உப்புமாக்களை தங்கள் ரசனைக்கேற்றபடி செய்த தங்கள் பாஸுக்கு வாழ்த்துகள்.
/அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவர் செய்த ஒரு புது டிஷ் விரைவில் அரங்கேறும் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!/
ரசித்து சுவைத்து( படங்கள், செய்முறைகளில் ) பார்க்க காத்திருக்கிறோம். விரைவில் வெளியிடுங்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா கமலா அக்கா.. உங்கள் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. ஊக்கமே உன் பெயர்தான் கமலா அக்காவா?!! விரைவில் அந்த டிஷுடன் வருவேன்! ஆனால் யாரும் ஓடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇரண்டு நாட்களாக இங்குப் சரி, மற்ற எவ்வித பதிவுக்கும் வர இயலாமல் போய் விட்டது. தங்கள் கணிப்பு சரிதான். மதியம் வாக்கில் வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// தங்கள் கணிப்பு சரிதான். //
நீக்குஎன்னவாயிருக்கும்?
தாவாங்கட்டையில் விரல்!
ஸ்ரீராம், ஆபத்பாந்தவர் ரவா உப்புமாவை அங்கீகரித்தாதவர்கள்....அதை விதம் விதமாகச் செய்யலாம் என்பதையும் ஏற்காதவர்களையும் பகிஷ்கரிப்போம்! இப்படிக்கு ஆபத்பாந்தவ அனாத ரட்சக ரவா உப்புமா சங்கத்தினர்!!!!
பதிலளிநீக்குஹிஹிஹிஹி என்னை அடிக்க வருவதற்குள் மீ அப்பீட்டு டு சனிக்கிழமை பதிவு.
கீதா
வாங்க கீதா... நீங்கதான் பொருளாளர். பொருளோடு பேசுகிறீர்களே...
நீக்கு