இந்தத் தொடர் எழுதும்போதே, தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்த கலைக்கூடத்தில் இருந்த சிற்பங்களைப் படமாகப் பகிர்ந்திருந்தேன். அவற்றை பாதுகாப்பாக இரும்பு கிராதிகள் போட்ட பெரிய அறையாகச் செய்து அதில் வைத்திருந்தார்கள்.
இவற்றை மக்கள் எல்லோரும் காணும்படியாக வரிசைப்படுத்தி ஒவ்வொன்றிலும் விவரங்கள் எழுதி வைத்திருந்திருக்கலாமே என்று நினைத்தேன். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருந்த கலைக்கூட த்தைப் பார்த்தபோது, ஆஹா நன்றாக வைத்திருக்கிறார்களே என்ற எண்ணம் ஏற்பட்டது.
இவற்றை எல்லாமே (அதாவது இன்னும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிலைகளை எல்லாம் திரட்டி) மிகப் பெரிய கலைக்கூட த்தை தஞ்சையிலே வைத்து, சோழ தேசத்தின் கலைச் செல்வங்களைக் காட்சிப்படுத்தலாம். பலரும் வருகை புரிந்து காண்பதற்கு வசதியாக இருக்கும். இல்லாவிடில், ஆங்காங்கு இருக்கும் கவனிப்பாரற்ற சிற்பங்கள் நாளடைவில் காணாமல் போய்விடும் அல்லது சிதைந்துவிடும்.
சரஸ்வதி மஹால் நூலகம், தர்பார் போன்றவற்றைப்பற்றி எழுதியபோதே நான் மராட்டிய மன்னர்களில் ஒருவரான சரபோஜி II அவர்களைப் பற்றி எழுதியிருக்கணும். தஞ்சையை சுமார் 180 ஆண்டுகள் மராத்திய மன்னர்கள் ஆண்டனர் (1675-1850) அதில், 1798லிருந்து சுமார் 34 வருடங்கள் ஆண்ட இரண்டாம் சரபோஜி மிக முக்கியமான மன்னர். கலைகளில் வல்லுனர் அவர். பல புலவர்களையும் கலைஞர்களையும் ஆதரித்தவர் அவர். இவர் காலத்தில் தன்வந்த்திரி மஹால் என்ற ஆராய்ச்சிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவ மனையில் ஆயுர்வேத, சித்த, ஆங்கில, யுனானி மருத்துவர்களும் இணைந்து பணியாற்றினர். மக்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த து. வைத்திய முறைகள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டு நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட து. தஞ்சை பெரியகோயிலில் விநாயகர் மற்றும் சண்டிகேசுவர ருக்கு சிறிய ஆலயங்கள் அமைத்தவரும் இவரே. 1820ல் காசி யாத்திரை சென்றுவந்த பிறகு, நூற்றி எட்டு சிவலிங்கங்களை அமைத்து வழிபட்டார். விநாயகர் கோவில் சுவர்கள் மண்டபங்களில் மராத்திய, போன்ஸ்லே வம்ச வரலாற்றை கல்வெட்டாகச் செதுக்கிவைத்துள்ளார். சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு இவர் ஏராளமாகச் செய்துள்ளார். தியாகையர், ச்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் போன்றோர் சரபோஜி காலத்தில்தான் வாழ்ந்தார்கள். சரஸ்வதி மஹால் நூலகத்தில் பழைய ஓலைச் சுவடிகளைப் புதுப்பித்தலும் (திரும்ப படியெடுத்து) புதிய ஓலைச்சுவடிகளை எழுதலும் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. 1827ல் 501 எழுத்தாணிகள் வாங்கப்பட்டதற்கான கணக்கைக் கொண்டு எத்தனை பேர்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிய இயலும்.
இப்போது தஞ்சை அரண்மனையில் உள்ள கலைக்கூடத்திற்கு வருவோம். ஆமாம் எப்போது தமிழகத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன? மணிமேகலையில்,
மண்ணிலும் கல்லினும் மரத்திலும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
என்று வந்துள்ளது. அதனால் சங்காலக் கோயில்களில் உள்ள வழிபடு தெய்வங்களின் உருவங்கள் சுதையாலும், மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டிருந்திருத்தல் வேண்டும். சிலப்பதிகாரம் மேலும், மாங்காட்டு மறையவன், திருவேங்கடமலையில் திருமாலின் நின்ற கோலத்தையும், திருவரங்கத்தில் கிடந்த கோலத்தையும் கண்ட தாகச் சொல்லுகிறது. இதிலிருந்து சிலப்பதிகாரக் காலத்து சிற்ப வளர்ச்சி நமக்குப் புரியும். (2000 வருடங்களுக்கு முற்பட்டவை இந்த இலக்கியங்கள்). சங்க காலத்தில் மரத்தால் செதுக்கப்பட்ட மெல்லிய பதுமைகள், தேர்களில் மரச்சிற்பங்கள் அழகிய வடிவத்தில் காட்சியளித்தனர், ஒரே பகலில் எட்டுத் தேர்களைச் செய்துமுடித்துவிடும் திறமை வாய்ந்த தச்சர்கள் இருந்தனர் என்றெல்லாம் இலக்கியங்கள் சொல்லும்போது, இந்தச் சிற்பக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாகவே தமிழகத்தில் இருந்துவந்தது, அதற்கான சிற்பிகளும் இருந்தனர் என்று அறியலாம். (ஏதோ நாம் செய்த புண்ணியம் சங்க இலக்கியங்களில் இவைகள் காணக்கிடக்கின்றன. இல்லையென்றால் இங்கிலீஷ்கார வந்த பிறகுதான் எல்லாமே நமக்குத் தெரியும் என்று பரப்பியிருப்பார்கள்).
நெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) அரசியின் கட்டில் நன்கு முதிர்ந்த யானைத் தந்தத்தால் செய்யப்பட்டது எனவும் அதில் நிறைய சிற்பவேலைப்பாடுகள் இருந்தன எனவும் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து சிற்பிகள் வடபுலத்துக்குச் சென்றதை திபத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல மகத நாடு, மராட்டியம் போன்ற பல இடங்களிலிருந்து சிற்பிகள் தமிழகம் வந்திருந்திருக்கின்றனர். யவனர்களின் (கிரேக்கர்கள்) சிற்பத் திறனை தமிழகம் போற்றியது (ஸ்ரீராமைப் பார்த்தால் யவனர் சாயல் தெரிகிறதோ?) இது எல்லாம் போகிற போக்கில் சொல்லப்படுபவை அல்ல. இலக்கியங்களில் காணக்கிடைப்பவை. (யவனர் இயற்றிய வினை மாண்பானவை, யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்). பாவை விளக்கு என்பதுகூட யவனர் நமக்கு அறிமுகப்படுத்தியதாம். இசைக்கருவிகளும் ஆதிகாலம் தொட்டு நம்மிடம் இருந்தன (பலா மரத்தில் செய்யப்பட்ட வீணை முதற்கொண்டு).
கோயில்களிலும் பலவகைகள் இருந்தன. குடிசையைப்போன்ற சிறிய கோயில்கள் குடிசைக்கோயில் எனப்பட்டன. கருவறை தரைத் தளத்தில் இல்லாமல் மேலே இருந்தால் மாடக்கோயில்கள் என்று அழைக்கப்பட்டன (கோச்செங்கட்சோழன் 70 மாடக்கோயில்களைக் கட்டினான், ஆனை புகா வண்ணம்), தூங்குகின்ற யானையைப் போன்ற உருவத்துடன் இருக்கும் கோயில்களுக்கு தூங்கானைமாடக் கோயில் என்று பெயர்.
தஞ்சை அரண்மனை நுழைவாயிலில் இருக்கும் இரண்டு சன்னிதிகள். இவை மிகப் பழமையானவையாக இருந்திருக்கவேண்டும். செய்நேர்த்தியுடன் கூடிய தெய்வச் சிலைகள் இவை.
கலைக்கூடத்திற்குள் செல்வதற்கு முன்பாக தற்போது சீர் செய்வதற்காக மூடப்பட்டுள்ள தர்பார் ஹாலுக்கு அருகில் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களைக் காணலாம். இவைகள் தனியார் வசம் உள்ளவை போலத் தெரிகின்றன. காரணம், அவற்றைப் பார்வையிடுவதற்காக மிகச் சிறிய தொகையை பார்வையாளர்களிடமிருந்து வாங்குகிறார்கள்.
அந்தப் பகுதிக்குச் செல்லும்போது மேலே இருந்த கூரை. ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்திருக்கவேண்டும்.
அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்ட எடைக்கற்கள். உங்களுக்குத் தெரியுமா, என் அப்பா இதுபோன்று எடைக் கற்களையும் அதற்கேற்ற சிறிய தராசு ஒன்றையும் வைத்திருந்தார். அது பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
இப்போது இவற்றைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படவில்லை. யாரேனும் இவற்றை அணிந்துகொண்டு (ராஜாவாகவே இருந்தாலும்) வந்தால், எந்த நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுவிடுவோம் எனத் தோன்றுகிறது. இன்றைக்கு மிக உயர்ந்ததாக நாம் நினைக்கும் ஒன்று, பிற்காலத்தில் மதிப்பிழந்து போகும் என்பதற்கான அடையாளம் இது.
கிருத்துவ பாதிரியார் கவாட்ஸ் மரணப் படுக்கையில் இருந்தபோது மன்னர் சந்தித்தது வரலாறு. (அதற்கான காரணங்கள் வேறு) ஆனால் இங்கு எழுதியிருப்பது, சரபோஜி மன்னர், கிறித்துவத்தையும் காப்பாற்றுவேன் என்று நெஞ்சில் கையை வைத்து உறுதி அளித்ததாக புருடா விட்டிருக்கிறார்கள்.
பல்வேறு வகையான அங்குசங்கள். இவற்றை உபயோகித்துத்தான் யானைகளைக் கட்டுப்படுத்தினார்கள்.
காபி திரிக்கும் மிஷின் (இதனை எங்கள் பெரியம்மா வீட்டிலும் பார்த்திருக்கிறேன்), பாக்கு வெட்டி போன்று பல்வேறு பொருட்களையும் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.
பழங்கால மரப் பெட்டகங்கள். இதுபோன்று ஒரு பெட்டகம் என்னுடைய அப்பாவின் பூர்வீக வீட்டில் இருந்த து. அதில் பழங்கால நாணயங்களும், நிறைய ஓலைச்சுவடிகளும் இருந்தன. நான் வெளிநாட்டில் இருந்து வெகேஷனில் ஊர் திரும்பியபோது என் அப்பா, அந்த வீட்டை விற்றுவிட்டேன் என்றார். ஓலைச்சுவடிகள் போன்றவை என்ன ஆகின என்று கேட்டதற்கு அவற்றை எடுத்துவரவில்லை என்றார். எனக்கு ரொம்பவே வருத்தம். அவற்றின் முக்கியத்துவத்தை நான் அவரிடம் முன்பே சொல்லியிருந்தால், அதாவது அவற்றின்மீது எனக்கு ஆர்வம் உண்டு என்று சொல்லியிருந்தால் எனக்கு அவற்றை எடுத்து வந்திருப்பார்.
இதனை எழுதும்போது முன்பு நிகழ்ந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. என் அப்பா ஆசிரியப் பணியில் இருந்தார். அவருக்கு நிறைய செய்திகளைப் படிக்கும், கேட்கும் ஆர்வம் உண்டு. முன்பு சோவியத் யூனியனிலிருந்து நிறைய புத்தகங்கள், செய்திப் பத்திரிகைகள் அவருக்கு வரும் (நான் 3வது படிக்கும்போதிருந்தே). அவர் அதில் முக்கியமான படங்களையும் செய்திகளையும் ஒரு பெரிய ஆல்பத்தில் ஒட்டிவருவார். இது இரண்டடிக்கு இரண்ட டி உள்ள, 100 பக்கங்களாவது கொண்ட ஆல்பம். இதுபோல அவர் இரண்டு ஆல்பங்களை வைத்திருந்தார். நான் திருவண்ணாமலைக்கு அவர் வீட்டிற்கு வெக்கேஷனில் சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன் (அப்போது நான் 12ம் வகுப்பு முடித்திருந்தேன்). பிறகு அவரிடம் அந்த ஆல்பத்தைப் பற்றிக் கேட்டபோது, அதனை அதில் ஆர்வமுடைய ஒரு ஆசிரியருக்குக் கொடுத்துவிட்டேன் என்றார். எனக்கு ரொம்பவே வருத்தம். என்னுடைய ஆர்வத்தை அவரிடம் சொல்லாமல் இருந்துவிட்டேனே என்று.
பெரிய அரண்மனை சமையல் பாத்திரங்கள். ராஜா மற்றும் அரசிகளுக்கு எதில் சமைத்திருப்பார்கள்? அதே உணவுதானா? தினமும் விருந்து என்றால் அவங்க உடல்நிலை என்னவாகும்? ஒருவேளை அரசர், இளவரசர்களுக்குத் தனி உணவா? எப்படி அவங்க உடம்பைப் பராமரிப்பாங்க? தினமும் பயிற்சியில் ஈடுபடுவாங்களே.. என்றெல்லாம் யோசனை தோன்றுகிறது.
மன்னர் சரபோஜி, பாதிரியாரைச் சந்தித்த நிகழ்வு மரத்தில் செய்யப்பட்டு பெட்டகத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காலம்னா, புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அந்தக் காலம் என்பதால் மரத்தில் செதுக்கியிருக்கிறார்கள்.
தானியப் பானைகளாக இருக்கும்.
அரண்மனை முரசு
கலைக்கூடத்தின் நுழைவாயிலே கலை நயத்துடன் திகழ்கிறது
15ம் நூற்றாண்டு விஷ்ணு, சிலை கிடைத்த இடம் கொக்கலாடி, விஜயநகரம். 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூர்ண புஷ்கலாவுடன் கூடிய ஐயனார், திருக்காவூர்.
16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி, கிடைத்த இடம் இராஜகோபாலஸ்வாமி கோயில், தஞ்சை. இரண்டாவது படம், நாக கன்னிகை. 17ம் நூற்றாண்டு, கிடைத்த இடம் குத்தாலம்.
16ம் நூற்றாண்டு, க்ஷேத்திரபாலர், கிடைத்த இடம் திருவலஞ்சுழி. 12ம் நூற்றாண்டு திருமூர்த்தி சிலை, கிடைத்த இடம் தாராசுரம்.
8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கோட்டூரில் கிடைத்த மஹாவிஷ்ணு சிலை.
10ம் நூற்றாண்டைச் சேர்ந்த துவாரபாலகர், தாராசுரம். அதே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துவாரபாலக்ர, திருத்துறைப்பூண்டி (அதற்கும் முந்தையதாக இருந்திருக்கவேண்டும்)
இரண்டாம் இராஜராஜனும் அவன் மனைவியும், 12ம் நூற்றாண்டு, தாராசுரம். இரண்டாவது சிற்பம், திரிபுராந்தகர், 12ம் நூற்றாண்டு, தாராசுரம்.
அந்தக் கலைக்கூத்தில் நிறைய சிற்பங்கள் தாராசுரத்தில் கிடைத்தனவாக இருந்தன. ஏற்கனவே தாராசுரம் வளாகத்தில் இருந்த சிற்பங்களை (தனியாக வைக்கப்பட்டிருந்தவை) நாம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் அந்தப் பகுதியே சிற்பங்களால் நிறைந்து இருந்தது என்று புரிந்துகொள்ள முடியும். எத்தனை கலைவடிவங்களை நாம் இழந்தோமோ… யாருக்குத் தெரியும்?
இனி அடுத்த வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
காலை வணக்கம், வாத்யாரே!
பதிலளிநீக்குவழக்கம்போல் இந்த வாரமும் அமர்க்களம்!
என்னடா, திருவாழிமார்பரைக் காணலையே! ன்னு நினைச்சேன் நேத்து பார்த்தேன். இன்றும்.
நீக்குபனி பொழியும் இடமோ? வந்துட்டு ஓடிப் போய் வீட்டுக்குள்ள புகுந்துடறீங்களோ! ஹாஹாஹா
கீதா
உண்மை. தவிரவும், தப்பித்தவறி சூர்யன் பகலில் தென்பட்டாலும், ஐந்து மணிக்கே சூர்யாஸ்தமனம்; இழுத்துப்போர்த்தி தாச்சுக்க வேண்டியதுதான். Lol
நீக்குஹாஹாஹா நினைச்சேன்!!! சிரித்துவிட்டேன்!
நீக்குபுரிகிறது. 4 மணிக்கே கொஞ்சம் கொஞ்சமா இருட்டத் தொடங்கிடுமே!
கீதா
வாங்க திருவாழ்மார்பன். (எனக்கு திருவண்பரிசாரமும், அலர்பேல் மங்கை உறைமார்பா பாசுரமும்தான் நினைவுக்கு வரும்). இன்று நீச்சல் டிரெயினிங் வகுப்புக்குச் சென்றிருந்தேன். வீட்டுக்கு வந்தும் குளிர் நடுக்கம் போகலை. பிறகுதான் கருத்துகளுக்கு பதிலெழுதணும். முதல் கருத்துக்கு நன்றி.
நீக்குஇங்கும் குளிர் உண்டு. காலையில் ஐந்து மணிக்குள் எழுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
நீக்குஆம் இந்த தடவை இங்கு குளிர் அதிகம். (ஆனால், சென்ற தடவையும் இப்படித்தான் சொன்னோமோவென்று நினைத்துக் கொள்வேன். நம் (என்) உடலின் மூப்பும் ஏறிக்கொண்டே செல்வதும் ஒரு காரணம் எனவும் நினைக்கிறேன். ) நானெல்லாம் ஒரு மாதமாக ஆறுக்கு குறைந்து எழவே இயலவில்லை
நீக்கு//உடலின் மூப்பும் ஏறிக்கொண்டே செல்வதும்// கமலா ஹரிஹரன் மேடம்...அது காரணம் கிடையாது என்று எனக்கு நானே அடிக்கடிச் சொல்லிக்கொள்வேன். காரணம் என்று நான் நினைப்பது, உடலை கொஞ்சம் ஃபிட் ஆக வைத்துக்கொள்வோம் என்று எண்ணி, இனிப்புகள், நெய்/எண்ணெய் போன்றவைகளைக் குறைத்துவிட்டதுதான். அதனால எப்போ இந்த மாதிரி எண்ணம் அதிகமா வருதோ (உடலில் fat content குறைந்துவிட்டது என்று), உடனே அடுப்படிக்குச் சென்று தோசைக்கு 2 ஸ்பூன் நெய் தொட்டுக்கொண்டுவிட்வேன் (பிறகு மறுநாள் கொஞ்சம் எடை அதிகரித்துவிட்டதே என்று கவலைப்பட்டுக்கொள்வேன்)
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
பதிலளிநீக்குஎத்தனை கலைவடிவான சிலைகள். பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.
அனைத்தும் கண்டு ரசித்தேன். வடக்கில் நான் பார்த்த அருங்காட்சியகங்கள் நினைவுக்கு வருகின்றன.
வாங்க வெங்கட் நாகராஜ். இல சமயம் தோன்றும், மூலவர் சிலையைச் செய்த சிற்பிக்கு எவ்வளவு பாக்கியம். காலமெல்லாம் மக்களை ஈர்க்கும் சக்தி அந்தத் தெய்வத்திற்கு ஏற்பட்டுவிடுகிறதல்லவா. சில சிற்பிகள் செய்த சிலைகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன.
நீக்கு//நெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) //
பதிலளிநீக்குஹாஹா...... நல்ல பஞ்ச்...... :) உணவில் உள்ள ரசனை காரணம் அப்படி சொல்லலாம்.
நான் கல்லூரியில் படித்தனோது ஆங்கிலத்தில் எழுதி தமிழாசிரியர் கிண்டல் செய்தது நினைவுக்கு வந்தது.
நீக்குதியாகையர், ச்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் போன்றோர் சரபோஜி காலத்தில்தான் வாழ்ந்தார்கள். //
பதிலளிநீக்குஇது அறிந்த நினைவு இருக்கு.
1827ல் 501 எழுத்தாணிகள் வாங்கப்பட்டதற்கான கணக்கைக் கொண்டு எத்தனை பேர்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிய இயலும்.//
அட! எழுத்தாணிகள் தேஞ்சுடுமோ? பென்சில் போல கூர்செய்து கொண்டே இருக்கணும் போல.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா.. சீழ்தலைச் சாத்தனார் நினைவுக்கு வரலையா? எழுத்தாணிகள் உடைந்திருக்கலாம். கீர்லாம் செய்யவேண்டியதில்லை. ஆணியாச்சே
நீக்குநெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) //
பதிலளிநீக்குஹாஹாஹா ஸ்ரீராம் சீக்கிரம் எழுந்து ஓடிவாங்க....பாருங்க...இன்னிக்கு ஒரு பஞ்சாயத்து கூட்டியே ஆகணும். பட்டிமன்றமே! என்னை நடுவாரகவோ பேசவோ கூப்பிடாதீங்க. நான் அப்பீட்டு. ஹிஹிஹி
கீதா
Actually , அது நெடுநாள் வாடை; ஓலையெல்லாம் பூசணம் பூத்து மக்கிப்போச்சுல்லா! ! ;-)
நீக்குஹாஹாஹாஹா.....சிரித்துவிட்டேன் திவாமா!!! அதுவும் எங்க ஊர் பாஷைல!!
நீக்குகீதா
ஓ...அது நெடுநாள் வாடையா? பொதுவா அயர்ன் பண்ணி வைத்த துணிகளையே, பல மாதங்கள் எட்டிப் பார்க்கவில்லை என்றால் எதனால் ஒரு மக்கிப்போன வாடை வருகிறது என்று யோசித்திருக்கிறேன்.
நீக்குநெல்லை, ஸ்ரீராமை கலாய்ச்சிருக்கீங்க..சிரித்துவிட்டேன். பஞ்சாயத்து...பஞ்சாயத்து.
பதிலளிநீக்குயவனர் போலவா இருக்கார் ஸ்ரீராம்?!!!!!! கூடவே ப்ராக்கெட்டுக்கு வெளில சொல்லியிருப்பதைப் பார்த்தால் ஸ்ரீராம் இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறாரோ ஆஹா!!!!!!
கீதா
அந்தப் பத்தி விவரணம் சூப்பர். எவ்வளவு இருக்கு இல்லையா தெரிந்து கொள்ள!
பதிலளிநீக்குகிரேக்கர்களுக்கும் நமக்கும் தொடர்பு உண்டுன்னு சொல்வதுண்டே..
//(கோச்செங்கட்சோழன் 70 மாடக்கோயில்களைக் கட்டினான், ஆனை புகா வண்ணம்), தூங்குகின்ற யானையைப் போன்ற உருவத்துடன் இருக்கும் கோயில்களுக்கு தூங்கானைமாடக் கோயில் என்று பெயர்.//
பிரமிக்க வைக்கும் தகவல்.
கீதா
சோழ அரசர்கள் நிறைய சிவாலயங்களையும் விண்ணகரங்களையும் கட்டியிருக்கிறார்கள். அவங்களோட பக்தி, அது சார்ந்து பலருக்கும் வேலைவாய்ப்பு, பக்தி எண்ணம் போன்றவற்றைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார்கள்.
நீக்குகிரேக்கர்களுக்கும் நமக்கும் தொடர்பா? நமக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் இனம் சார்ந்த தொடர்பு உண்டு. கிரேக்கர்கள் தமிழத்துக்கு வந்து வாணிபம் செய்தார்கள்.
தஞ்சை அரண்மனை நுழைவாயிலில் இருக்கும் இரண்டு சன்னிதிகள். //
பதிலளிநீக்குஅழகா இருக்கு பாருங்க, நெல்லை ஆனா டைல்ஸ் போட்டுக் கெடுத்துட்டாங்கன்னு தோணுது.
கீதா
நீங்க சொல்றது ஒரு விதத்தில் சரி. இன்னொரு விதத்தில்,கருவறை, மற்றும் பல இடங்கள்ல டைல்ஸ் போடறதுனால இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள இயலுகிறது என்பதையும் மறுக்க இயலாது. ரொம்ப சுலபமா mop செய்து சுத்தம் செய்துடறாங்க.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபரவால்ல தொகை வாங்கினாலும் ஒழுங்கா சீர் செய்தா போதும் பாதுகாத்தால் போதும்.
பதிலளிநீக்குஇன்றைக்கு மிக உயர்ந்ததாக நாம் நினைக்கும் ஒன்று, பிற்காலத்தில் மதிப்பிழந்து போகும் என்பதற்கான அடையாளம் இது. //
எல்லாமே அப்படித்தான் வாழ்க்கையே அப்படித்தான்.
மம்மூட்டி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பேட்டி எடுப்பவர் கேட்ட கேள்விக்கு. "என்னைக் கொண்டாடுவதெல்லாம் அடுத்த 10 வருஷம்? இல்லை 15? அதுக்கப்புறம் கண்டிப்பா மறந்துடுவாங்க வருடங்கள் போகும் போது."
கீதா
உண்மைதான் கீதா ரங்கன். காலவெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு சென்றுவிடும். காந்தி போய்ட்டாரா என்ற செய்தி கேட்டு மாரடைப்பால் இறந்தவர்கள் ஏராளம். இப்போ காந்தி போயிட்டார்னு சொன்னா, எந்தக் காந்தி, என்று கேட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க.
நீக்குகாபி திரிக்கும் மெஷின் பாட்டி வீட்டில் இருந்தது. அதில்தான் திரிப்போம். அப்புறம் அது என்னாச்சுன்னு நினைவில்லை. நான் 6 ஆம் வகுப்பு படித்த வரை.
பதிலளிநீக்குசந்தனம் அரைக்கும் கல் போல இருக்கு. இப்ப நான் சொன்னா சப்பாத்தி/போளி இடும் கல்!!!!
அதுக்குப் பக்கத்துல இரும்பு தோசைக்கல்லா? கவிழ்த்திப் போட்டிருக்காங்களோ!!!
கீதா
ஹாஹாஹா.... உங்களுக்கு இப்போ தோசை சப்பாத்தி நினைவு அதிகமாகிவிட்டது. காலை நடைப்பயிற்சி முடிந்ததும் பண்ணவேண்டுமா இல்லை பதிவுக்கு வருவதற்கு முன்னால் பண்ணினீங்களா?
நீக்குகாபி திரிக்கும் மிஷினை என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) வீட்டில் பார்த்திருக்கிறேன். காபி சாப்பிடும் பழக்கம் உள்ளவங்களுக்கு அது ரொம்ப முக்கியம்.
மரப்பெட்டி எங்க வீட்டிலும் முன்னர் இருந்தது. ரெண்டு மூணு. அப்புறம் நாங்க கூடக் கள்ளிப் பெட்டி வைத்திருந்தோம்.
பதிலளிநீக்குஓலைச்சுவடிகள் எல்லாம் இருந்ததா? அட!
//அவற்றின் முக்கியத்துவத்தை நான் அவரிடம் முன்பே சொல்லியிருந்தால், அதாவது அவற்றின்மீது எனக்கு ஆர்வம் உண்டு என்று சொல்லியிருந்தால் எனக்கு அவற்றை எடுத்து வந்திருப்பார். //
இதுதான் நெல்லை...நாம பல விஷயங்களைச் சரியாகக் கம்யூனிக்கேட் பண்ணாம விட்டிடறோம். அதனால் வரும் இழப்புகளும் உண்டு. இது எனக்கு அடிக்கடித் தோன்றும்.
கீதா
என் அப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும், எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் உண்டு என்று (அவருடைய ஆர்வம் எனக்கும் வந்திருக்கவேண்டும்). சில நாட்கள் முன்புகூட, அவரிடம் பேசவேண்டும் என்று நினைத்தேன், நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனால் அவர்தான் 2008ல் போய்ட்டாரே
நீக்குஅரசர் அரசிகளில் அரசர்கள் பயிற்சியில் கண்டிப்பா ஈடுபட்டிருப்பாங்க ஸோ அதுக்கான சாப்பாடாகத்தான் இருக்கும் அரண்மனை வைத்தியரும் இருப்பாரே. பயிற்சிகளுக்கும் ஆட்கள் இருந்திருப்பாங்க.
பதிலளிநீக்குநான் அரசிகளைப் பத்திதான் யோசித்ததுண்டு. உடம்பு ஊதிப் போய்டாதோ என்று.
ஆனா பாருங்க, நெல்லை, இப்ப சொல்லப்படற வியாதிகளை நாம என்னவோ புதுசு புதுசா சொல்றாங்களேன்னு பேசிக்கறோம்...அந்தக்காலத்துல பாரு இல்லவே இல்லைன்னு. அப்படி இல்லை. பூமி மனிதர்கள் வாழ்வு என்று வந்தாச்சுனா அப்பவும் வியாதிகள் இருந்தனதான் ஆனால் அவற்றின் பெயர்கள் வேறு...நிறைய பேசப்படவில்லை. ஏதோ மர்மமான வியாதியில் போய்ட்டார் என்று சொல்லி முடிச்சுடுவாங்க. விஷக்காய்ச்சல் அப்படி இப்படினு.
இப்பவும் கூடப் பாருங்க, இத்தனை டெக்னாலஜி வளர்ச்சி இருக்கும் போதே......கேரளத்து நதிகளில் ஒரு Naegleria fowleri எனும் ஒற்றை செல் மூளையைத் தின்னும் அமீபா ....ஒரு பாரசைட். நதிகளில் நீராடறவங்க குளங்களில் நீராடறவங்க திடீர்னு மருத்துவமனைகளில் அட்மிட் ஆறாங்க. இயற்கையாக இந்த அமீபா இருக்கும் ஆனால் நீர் நிலைகள் பாழாகும் போது இந்தப் பிரச்சனைகள் வருது.
முதலில் காய்ச்சல் எதனாலான்னு தெரியாம அப்புறம் கண்டறிஞ்சுருககங்க. அதனால இப்ப எச்சரிக்கை கொடுத்திருக்காங்க் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் குளிக்காம இருக்கறது நல்லது. இல்லைனா மூக்கை நன்றாகப் பாதுகாத்துக் கொண்டு முங்கணுமாம். இது ஒரு அரிதான வியாதியாம்....
ரிஸ்க்!
கீதா
ஐயோ... நதிகளில் குளித்தால் பிரச்சனையா? கங்கை போன்ற நதிகள் ஓடும் நதிகள், அதனால் பிரச்சனை அதிகமாக இருக்காது. பம்பை நதி கொஞ்சம் நிற்கும் நதி, சில இடங்களில். அதனால் contaminate ஆயிருக்க வாய்ப்பு. மக்களும் பழைய துணி போன்ற பல குப்பைகளை நதியில் போட்டு பாவம் சம்பாதித்துவிட்டு, அந்த நதியில் குளித்தால் புண்ணியம் கிடைத்துவிடும் என்று நம்பறாங்க.
நீக்கு//உடம்பு ஊதிப் போய்டாதோ என்று.// அரசிகள் நிச்சயம் தங்கள் உடலைப் பாதுகாத்திருபபாங்க(ன்னு நம்பறேன்). இல்லைனா
நீக்குஅற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.
என்பதுபோல ஒரு சில அரசர்கள் வேறு பெண்களைத் தேடிப் போய்விடமாட்டார்களா?
தானியப் பானைகள் பார்க்க தாழி போன்று ஹிஹிஹி
பதிலளிநீக்குகலைக்கூடம் நுழைவு வாயில் முதல் உள்ளே இருப்பவை வரை அழகோ அழகு. ஒவ்வொன்றும் பார்த்து ரசித்தேன். நேரில் போகும் வாய்ப்பு கிடைக்குமா தெரியலை.
கீதா
தானியப் பானையைப் பார்க்கும்போது தாழி நினைவா? என்னாச்சு?
நீக்குநேரில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் இப்போ உடனே உங்களுக்குக் கிடைக்காது என்று தோன்றுகிறது.
இதே போன்று ஈரோடில் இருந்ததை எடுத்து வைச்சிருக்கேன். ஆனால் அது பெரிய கலைக்கூடம் போல எல்லாம் இல்லை சும்மா ஒரு பெரிய அறையில் வைச்சிருக்காங்க. ஒரு வேளை இப்ப நல்லா ஆக்கிருப்பாங்களோ தெரியலை.
பதிலளிநீக்குபகிர வேண்டும் என்று நினைத்தேன். ஆனா எனக்கு உங்கள் அளவு அறிவு எதுவும் கிடையாது. புத்தகங்களும் கிடையாது. அனுபவங்களும் கிடையாது . அதைப் பற்றி வாசிக்கவோ தெரிந்து கொள்ளவோ. எனவே நான் பகிர்ந்தால் சும்மா படங்கள் ....நெல்லை கொடுப்பது போல இல்லைன்னு கருத்துகள் வந்துவிடும்.
எனவே எனக்கு ரொம்பத் தயக்கம் வருகிறது பதிவுகள் எழுத.
கீதா
கீதா ரங்கன்...நீங்க ரொம்பத் திறமையானவர். எனக்கு எப்போதுமே கம்பேரிசன் செய்தால் பிடிக்காது. உங்களை மாதிரி சமையல், ராகம் கண்டுபிடிப்பது, உடல் பற்றிய தெளிவு-என்ன என்ன பிரச்சனையை எப்படி எப்படித் தீர்க்கலாம் என்பது, மனோநலம் சார்ந்த சிந்தனைகள் என்று பல்வேறு திறமைகள் கிடையாது. நீங்க பரிசு பெற்ற கதாசிரியர் (யாரேனும், என்னோட கதையைத் தட்டிக் கொட்டி எழுதியிருக்காங்கன்னு இதுவரை சொல்லலை..ஹாஹாஹா. சும்மாச் சொன்னேன். நீங்க எழுதற ஏரியாவைப் பலர் தொட்டுக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்)
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா
நீக்கு1675-1850 இதில், 1798லிருந்து சுமார் 34 வருடங்கள் ஆண்ட
பதிலளிநீக்குஇரண்டாம் சரபோஜி மிக முக்கியமான மன்னர்...
இவரது காலத்தில் தான் அபிராமி அந்தாதி தோன்றியது...
வாங்க துரை செல்வராஜு சார். ஆதிபராசக்தி படத்தில் இந்தக் காட்சி உண்டு. உணர்வுபூர்வமான பகுதி அது.
நீக்குதஞ்சை மேல ராஜ வீதியில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் ஸ்யாமா சாஸ்திரி அவர்களது இல்லம்...
பதிலளிநீக்குநான் இதுவரை சென்றதில்லை. தஞ்சை வந்து உங்களை பிக்-அப் செய்துகொண்டால் பல இடங்களுக்கும் சென்று காண்பித்துவிட மாட்டீர்களா?
நீக்குவெகு சிறப்பு... படங்கள் எல்லாம் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு சார்... ஆமாம் கதை எங்கே
நீக்குமூன்றாண்டுகளில் இரண்டு முறை அரண்மனைக்கு
பதிலளிநீக்குசென்றுள்ளேன்...
நல்ல வாய்ப்பு உங்களுக்கு. நானும் பல முறைகள் சென்றுவந்திருக்கிறேன்.
நீக்குநெடுநல் வாடை
பதிலளிநீக்குஇன்றைய வழக்கில்,
நெடுநாள் வாடை
நெடுநாள் வடை
நடுநாள் அடை
(நடுராத்திரி பிரியாணி மாதிரி)
நடுநாள் அடை..நடுராத்திரி பிரியாணி..... என்னவோ எனக்கு பிரியாணி என்ற பெயரைக் கண்டாலே எரிச்சல்.. . ஒருவேளை புற்றீசல் மாதிரி எல்லா இடங்களிலும் பரவியிருப்பதாலா தெரியவில்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார ஞாயிறு பதிவும் மிக அருமையாக உள்ளது. எத்தனை செய்திகள்.. எத்தனை விபரங்கள் என பிரமிப்பு கொள்ள வைக்கிறது. சரபோஜி மன்னர் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த பணிகள் வியப்பில் ஆழ்த்துகின்றன.
பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்களும் சிற்பங்களும் மனதை கவர்கின்றன.
/பெரிய அரண்மனை சமையல் பாத்திரங்கள். ராஜா மற்றும் அரசிகளுக்கு எதில் சமைத்திருப்பார்கள்? அதே உணவுதானா? தினமும் விருந்து என்றால் அவங்க உடல்நிலை என்னவாகும்? ஒருவேளை அரசர், இளவரசர்களுக்குத் தனி உணவா? எப்படி அவங்க உடம்பைப் பராமரிப்பாங்க? தினமும் பயிற்சியில் ஈடுபடுவாங்களே.. என்றெல்லாம் யோசனை தோன்றுகிறது. /
உண்மை அந்த காலத்தில் பித்தளை பாத்திரங்களில் சமைப்பதுதான் பழக்கமென்றாலும், இந்த பெரிய கொப்பரைகளில் சமைத்தால் எவ்வளவு பேர் உணவருந்தலாம். என்ற எண்ணம் வருகிறது. அரசன், அரசி அவர்கள் குடும்பத்திற்கும் போக மீதமுள்ளவற்றை அவர்களின் நெருங்கிய பணிப்பெண்கள், உதவியாளர்கள் என உபயோகப்படுத்தியிருப்பார்களோ?
இந்த மாதிரி கொப்பரையில் எனக்கு பிறந்த வீட்டில் கல்யாணத்திற்கு சீர் பட்சணங்கள் வைத்து தந்தார்கள். இப்போது என்னிடம் இந்த கொப்பரையில்லை. ஆங்காங்கே வீடுகள் மாறும் போது தூக்கிச் செல்வது கடினமென்பதால் அது நாத்தனார் வீட்டிலேயே உள்ளது. இன்று இதைப்பார்த்ததும் பிடி வைத்த அந்த கொப்பரையும் அதன் மூடியான பெரிய தாம்பாளமும் நினைவுக்கு வந்தது.
உங்கள் ஆர்வத்தை உங்கள் அப்பாவிடம் வெளிப்படுத்திருந்தால், ஓலைசச்சுவடிகளின் விபரங்களை அறிந்து கொண்டிருக்கலாம். எங்கள் அப்பாவும், எழுத்தாணி கொண்டு ஓலைகளில் பல ஜாதகங்களை எழுதுவார். அந்தச்சுவடிகளும் எழுத்தாணியும் எங்குப் போயிற்றோ..? உங்கள் பதிவை படித்ததும் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அருமையான தஞ்சை கலைக்கூடம் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உங்கள் விளக்கமான கருத்து மகிழ்ச்சியை அளிக்கிறது.
நீக்கு//குடும்பத்திற்கும் போக மீதமுள்ளவற்றை // பஹ்ரைன் அரசர் அரண்மனையில்... அரசருக்கு எல்லாவிதமான உணவுகளும் மேசையில் இருக்குமாம். அரசர் அன்று அவருக்குத் தோன்றியதைச் சாப்பிடுவாராம். இது தவிர சட் என்று ஏதேனும் அவர் கேட்டால் உடனே தருவதற்கும் செஃப் டீம் தயாராக இருக்குமாம்.
அவர் எழுந்துகொண்டபிறகு, மிஞ்சினவை எல்லாம், அவர் உறவினர்கள் சாப்பிடுவார்களாம். அந்த உரிமைக்கே விசுவாசம் மிக முக்கியமான தகுதி.
//பிறந்த வீட்டில் கல்யாணத்திற்கு சீர் பட்சணங்கள் வைத்து தந்தார்கள்.// ஆஹா..நினைக்கவே எனக்கு ஆசை வருகிறது. இப்போல்லாம் சீர் பட்சணத்தையே 100 கிராம் அளவுக்குச் சுருக்கிவிட்டார்கள். அப்போல்லாம் அளவில் பெரியதாக இருக்கும் ஒவ்வொரு பட்சணமும் (மைசூர்பாக்கு அரைக்கிலோ ஒன்று)
உங்க அப்பா எழுத்தாணி உபயோகித்திருக்கிறாரா? சூப்பர். ஆமாம் அந்த எழுத்தாணியையோ இல்லை ஓலைச்சுவடிகளையோ நீங்கள் யாரேனும் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாமே அவருடைய நினைவாக?
/உங்க அப்பா எழுத்தாணி உபயோகித்திருக்கிறாரா? சூப்பர். ஆமாம் அந்த எழுத்தாணியையோ இல்லை ஓலைச்சுவடிகளையோ நீங்கள் யாரேனும் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாமே அவருடைய நினைவாக?/
நீக்குஆம்.. வைத்திருக்கலாம்.. ஆனால் எங்கள் அப்பாவாலேயே பத்திரப்படுத்த இயலவில்லை. நான் அப்போது மிக சிறிய வயது. வீடு எங்கள் தாத்தா கட்டிய பழங்காலத்து வீடு. பரண்கள் பலகையால் அமைக்கப்பட்டது. அதனால் அவை கரையான்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. அதன் பின் நோட்டுக்களும், பேனாவுமாக மாறி வந்த காலத்தில், ஓலையில் எழுதிய ஜாதககங்களையும் படிக்கவோ , எழுதிப் பெறவோ எவரும் விரும்புவதில்லை. இப்போதுதான் உங்களைப் போலவே எனக்கும், பல அரிதான பல பொக்கிஷங்களை தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது.என்ன செய்வது.?
// இவற்றை எல்லாமே (அதாவது இன்னும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிலைகளை எல்லாம் திரட்டி) மிகப் பெரிய கலைக்கூட த்தை தஞ்சையிலே வைத்து, சோழ தேசத்தின் கலைச் செல்வங்களைக் காட்சிப்படுத்தலாம். பலரும் வருகை புரிந்து காண்பதற்கு வசதியாக இருக்கும். இல்லாவிடில், ஆங்காங்கு இருக்கும் கவனிப்பாரற்ற சிற்பங்கள் நாளடைவில் காணாமல் போய்விடும் அல்லது சிதைந்துவிடும். //
பதிலளிநீக்குநம்மை அறநிலையத்துறை அமைச்சராக போடாமல் போனார்கள்! அதுதான் கஷ்டம்!!
ஒருவேளை நீங்களோ அல்லது நானோ அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருந்தால், இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவே நேரமோ விருப்பமோ இருந்திருக்காதோ ஸ்ரீராம்?
நீக்கு//(திரும்ப படியெடுத்து) புதிய ஓலைச்சுவடிகளை எழுதலும் //
பதிலளிநீக்குபடியெடுத்த புண்ணியவான்கள் என்னென்ன இடைச்செருகல்களை சேர்த்தனரோ... எதெதை தப்பாக எழுதினரோ... எதைஎதை நைஸாக விட்டு விட்டார்களோ... யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்...!
எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள் பல சேரும். இதில் ஆச்சர்யமில்லை. படியெடுக்கிறவர்கள் நல்ல புலமை பெற்றிருந்தாலும் தவறுகள் சகஜம். வேண்டுமென்றே விட்டுவிடுவது, அரசு தயாரிக்கும் பாடப்புத்தகங்களில்தான் சாத்தியம். அதுபோல வரலாற்றைத் திரித்து எழுதுவதும். ஆயிரம் வாக்குகளுக்காக திருப்பரங்குன்ற மலையையே பெயர் மாற்றும் இந்த கம்யூனிஸ்டுகள் போல.
நீக்கு// செய்யப்பட்டிருந்திருத்தல் //
பதிலளிநீக்குஅம்...மாடி.. என்ன வார்தையமைப்பு!
பார்த்தீங்களா... புதிய வார்த்தையமைப்பு.
நீக்கு// இல்லையென்றால் இங்கிலீஷ்கார வந்த பிறகுதான் எல்லாமே நமக்குத் தெரியும் என்று பரப்பியிருப்பார்கள்). //
பதிலளிநீக்குஇருந்தால் மட்டும் ஒப்புக் கொள்கிறார்களா என்ன!
அதைத்தான் கோயபல்ஸ் பிரச்சாரம் என்று சொல்வார்கள். பல ட்ரில்லியன் அளவு தங்கம் போன்றவை பாரதத்திலிருந்து பிரிட்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது என்று சமீபத்தில் படித்தேன். லண்டன் டவருக்கு என் பிரயாணத்தைப் பற்றி எழுதும் தொடரில் வரும்.
நீக்கு// நெடுநல்வாடையில் (ஸ்ரீராம் இதற்கு நெடுநாள்வடை னு கருத்து எழுதாம இருந்தால் சரிதான்) //
பதிலளிநீக்குஐயோ... நக்கீரரிடம் விளையாட முடியுமா? சிவனையே படுத்தியவர்! ஆனால் அதைப் படித்து அறியாததால் 'வடை போச்சே' என்று வேண்டுமானால் சொல்லலாம்! அதுவும் நக்கீரர் காதில் விழாமல்! பத்துப் பாட்டில் ஏழாம் பாட்டு என்பதால் நமக்கு இல்லை, எனக்கு ஏழாம் பொருத்தம்!
/? அரசியின் கட்டில் நன்கு முதிர்ந்த யானைத் தந்தத்தால் செய்யப்பட்டது எனவும் அதில் நிறைய சிற்பவேலைப்பாடுகள் இருந்தன எனவும் குறிப்பிட்டிருக்கிறது. //
பதிலளிநீக்குதமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.
// (ஸ்ரீராமைப் பார்த்தால் யவனர் சாயல் தெரிகிறதோ?) இது எல்லாம் போகிற போக்கில் சொல்லப்படுபவை அல்ல. இலக்கியங்களில் காணக்கிடைப்பவை. //
பதிலளிநீக்குஆ..... இலக்கியங்களிலேயா?!!
ஆமாம் ஸ்ரீராம். கீதா ரங்கன் அக்கா சொன்னார்கள் (அவருக்கு அக்கா கிடையாது. அவரேதான் எனக்கு அக்கா) ஸ்ரீராம் ரொம்ப சிவந்த நிறம் என்று. அப்படீன்னாக்க யவனர் கலப்புதான். நாங்கள்லா திராவிட நிறமல்லோ.
நீக்கு// பாவை விளக்கு என்பதுகூட யவனர் நமக்கு அறிமுகப்படுத்தியதாம். //
பதிலளிநீக்குஅப்போ அது அகிலன் இல்லையா? முன்னாலேயேவா? ஹிஹிஹி...
கும்பகோணம் அருகில் திருவிடைமருதூர் கோயிலில் தன்னுடைய காதல் நிறைவேறியதற்காக ஒரு பாவை விளக்கை (தன்னைப்போன்ற) கோயிலுக்கு ஒரு பெண் வழங்கியிருக்கிறாள்.
நீக்குஅகிலனின் பாவை விளக்கு சாஹித்ய அகாடமிக்காக எழுதப்பட்டதோ.
// காபி திரிக்கும் மிஷின் //
பதிலளிநீக்குஇதற்கு மெஷின் எதற்கு? அரைமூடி எலுமிச்சை சாறு, துளி தயிர் போதாதோ!!!
ஹா ஹா ஹா. வார்த்தை திரிக்கும் போட்டியில் உங்களை வெல்வார் யாருமில்லை என விளம்பலாம்.
நீக்கு:-))
நீக்குவார்த்தை விளையாட்டில் உங்களை அடித்துக் கொள்ள ஆள் ஏது?!
நெல்லையின் சரித்திர ஆர்வத்தினால் நமக்குப் பல்வேறு பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. அரண்மனையின் சிற்பங்கள் மட்டுமில்லாமல் அவற்றின் காலத்தையும் சேர்த்து நமக்குக் கொடுத்திருக்கார் நெல்லை. அந்த காஃபிப் பொடி மிஷின் என் மாமியாரிடமும் (கிட்டத்தட்ட இதே போல்) என்னிடமும் (காரைக்குடி மிஷின் என்பார்கள்) இருந்தது. நான் 1997 ஆம் ஆண்டு வரையிலும் காஃபிக் கொட்டையை வீட்டில் வறுத்துக் கொண்டு என்னோட மிஷினில் போட்டுத் திரித்துக் கொண்டு தான் காஃபி போட்டு வந்தேன். எத்தனை பேர் வந்தாலும் இப்படித் தான். கடையில் காஃபிப் பொடி வாங்கினதே இல்லை. 97 ஆம் ஆண்டிலிருந்தே என்னோட உடம்புப் படுத்தல் நீண்ட நாள் ஆஸ்த்மா மற்றும் ஆர்த்ரிடிஸ் வலி போன்றவை கடுமையாகப் பாதித்ததால் மருத்துவரோட கடுமையான எச்சரிக்கையால் அவை நிறுத்தப்பட்டன.
நீக்குகீதா சாம்பசிவம் மேடம், நான் பாராட்டுக்குத் தகுதியானவன் இல்லை, இருந்தாலும் உங்களின் ஆசியாக நான் எடுத்துக்கொள்கிறேன்.
நீக்குஇப்போ உங்களுக்கு இன்ஸ்டண்ட் காஃபிதானே.
அடடா.. உங்களுக்குப் பிடித்த காஃபிப் பொடியையே 30 ஆண்டுகளாக விலக்கிவைத்துவிட்டீர்களே.
அந்த சமையல் பாத்திரத்தை கங்காளம் என்றுதானே சொல்வார்கள்?
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். கங்காளம்னுதான் சொல்வாங்க. திருப்பதியில் கங்காளம் கங்காளமாக பிரசாதங்கள் வெள்ளிவாசலைத் தாண்டி வருவதைப் பார்த்திருக்கிறேன்.
நீக்குகல்யாணத்தில் கொடுத்தது. இதிலே பாதி அளவில் உள்ளதை அரை அடுக்கு என்பார்கள். அதுவும் இருந்தது. பெண்ணின் கல்யாணத்துக்குப் பின்னர் இவற்றை எல்லாம் விற்றோம். அரை அடுக்கு மட்டும் பெண்ணிற்குக் கொடுத்து அது இப்போ எங்கே இருக்குன்னே தெரியலை. என்னோட காஃபிக்கொட்டை மிஷினை 2012 ஆம் ஆண்டில் தான் ஸ்ரீரங்கம் வரும் முன்னர் விலைக்கு விற்றேன். அதே போல் தையல் மிஷினையும் 2009 ஆம் ஆண்டில் விற்றேன். கால் பிரச்னை அதிகமாக இருந்ததால் தையல் மிஷினில் ஃபெடல் பண்ணுவது கஷ்டம் என நம்ம ரங்க்ஸ் விற்று விட்டார்.
நீக்குசரஃபோஜி மன்னர் பற்றிய பதிவுகள் நமக்கும் நம்முடைய பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. இவர் காலத்திய ராம பட்டாபிஷேஹப் படம் தான் எங்க வீட்டில் இருப்பது என எங்க மாமனாரின் அண்ணாவும் அவருக்கு முந்தைய சில உறவினர்களும் சொல்லுவார்கள். மஹா கணபதி ஐயர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது என்பார்கள். ஓலைச்சுவடிகளெல்லாம் தூக்கிப் போட்டு விட்டார்கள்.
நீக்குகங்காளர் கயிலாய மலையாளர் என்ற திருவையாற்று சம்பந்தர் தேவாரம் நினைவுக்கு வந்தது. கங்காளம் என்பதற்கு எலும்பு(க்கூடு) என்ற பொருள்தான் இதுவரை நான் அறிந்தது.
நீக்கு'கங்காளத்தில் கங்காளம்' என்று அடுத்து துப்பறியும் கதை எழுதலாமோ? ;-)
ஆஹா.. எழுதலாமே... எழுதுங்களேன்...
நீக்குதிருவாழ்மார்பன் - நீங்க சொன்னப்பறம்தான் எனக்கு நினைவுக்கு வருது, சிவபெருமானுக்கு கங்காளமூர்த்தின்னு ஒரு பெயர் இருப்பது. அப்புறம் கூகிளிட்டால், எலும்பு என்பதுதான் கங்காளத்தின் முதன்மையான அர்த்தமாம்.
நீக்குஅதுசரி... கங்காளம் என்றதும் இதுவரை பெரிய பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்ல், புளியோதரை, தயிர்சாதம் என்ற பிரசாதங்கள் நினைவுக்கு வருவதை மாற்றி, கங்காளம் என்றதும் எலும்பு என்பதை நினைவுக்குக் கொண்டுவருகிறீர்களே..இது நியாயமா?
வாங்க கீசா மேடம். பழையகால பாத்திரங்களெல்லாம் இனி கிடைக்குமா? என் பெற்றோருடைய பாத்திரங்களும் என்னாச்சுன்னு தெரியலை. ஆனால் அவற்றை எப்படிப் பாதுகாப்பது? எதற்கும் உபயோகிக்க முடியாது, காரணம் சைஸ்.
நீக்குஅந்த பெரிய மரப்பெட்டிகளைப் போல என் அப்பா வீட்டில், பாட்டி வீட்டில் எல்லாம் பெரிய சைஸ் மரப்பெட்டிகள் இருந்தன. கள்ளிப்பெட்டி என்பார்கள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு. நெல்லையின் கடுமையான உழைப்பும் அதற்கேற்ற விஷய ஞானமும் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த வார்ட்ரோப் போன்ற மரப்பெட்டிகள் எங்க அப்பா வீட்டிலும் பழைய பெட்டி ஒன்று இருந்தது. பூர்விக வீட்டில் பல்லாண்டுகளாகக் கிடந்த பெட்டி. அதைத் திறந்தால் குடும்பத்தில் அகால மரணங்கள் நிகழக்கூடிய வாய்ப்புண்டு என்று சொல்லப் பட்டதால் திறக்கவே இல்லை. கடைசியில் நான்கைந்து ஆண்டுகள் முன்னால் தம்பியின் பெரிய பையருக்குக் கல்யாணம் தட்டிக் கொண்டே இருந்ததால் ஜோசியம் பார்த்து அந்தப் பெட்டியைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய முயன்றார்கள். என் அப்பாவின் தாயாதிகள் அனைவரும் குழுமப் பல்வேறு பூஜைகள், பரிகாரங்கள் செய்யப்பட்டு அந்தப் பெட்டி என் பெரியப்பாக்கள் பையர்கள், பேரன்கள், என் அப்பாவின் பையர்கள், பேரன்கள் என அனைவர் முன்னிலையிலும் திறக்கப்பட்டது. அதில் உள்ளே இருந்த குலதெய்வம் வெள்ளி நாகர் இன்னும் சில பூஜைப் பொருட்களைக் கண்டறிந்து ஒருவாறாக அப்பாவின் குடும்பத்தாருக்குப் பரம்பரை குலதெய்வம் என்ன என்பதைக் கண்டறிந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேல் குலதெய்வ வழிபாடு இல்லை என்பதால் அதற்கான பரிகாரங்களைச் செய்து இப்போ வருஷா வருஷம் கிராமத்துக்குப் போய்க் குலதெய்வ வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள்.
நீக்குInteresting.
நீக்குஇந்த நிகழ்வு எங்களுக்கு நேரடி ஒளிபரப்பு என் அண்ணா பையரால் செய்யப்பட்டது. :) ஆனால் அப்பாவின் வம்சத்தில் உள்ள கீழ் வாரிசுகளான என் அண்ணா, தம்பி, பெரியப்பா பையர்கள் யார் குடும்பத்திலும் ஆண் வாரிசுகளே இல்லை. என் அண்ணா பையருக்கும் குழந்தையே பிறக்காமல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார். தம்பியின் பெரிய பையருக்கு இனித் தான் திருமணம் ஆகணும். சின்னவர் திருமணம் முடிந்து ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. :(
நீக்கு//ஜோசியம் பார்த்து அந்தப் பெட்டியைத் திறந்து// அஷ்ட மங்கள ப்ரஸ்னமோ?
நீக்குகீசா மேடம்... உங்கள் குடும்பத்தில் இருந்த பழைய பெட்டியைப் பற்றிய விவரங்கள் ரொம்பவே ரசனையாக உள்ளது. அந்த பூஜைப் பொருட்கள், வெள்ளி நாகர் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதா?
நீக்கு//குழந்தை இல்லை// இந்தப் பிரச்சனைக்குப் பொதுவாக நாக தோஷம்தான் காரணம் என்பார்கள் கீசா மேடம். எங்கள் அப்பா காலத்திலும் (அவங்களுடைய தாத்தாவோ இல்லை பெரியப்பாவோ சிறிய வயதில் விளையாட்டாக தண்ணிப்பாம்பைக் கொன்றது நாக தோஷத்துக்குக் காரணம்) கல்லால் செய்த நாகரை வீட்டில் மேல் மச்சுவில், நெந் குவியலின் உள்ளே வைத்திருந்தார்கள்.
நீக்குஇருக்கலாம் திருவாழிமார்பன். அதோடு இல்லாமல் எங்க அப்பா வம்சம் "ஏஸ்வரக்குட்டியார் வம்சம்" என்பார்கள். அந்த வம்சத்தில் பிறந்தவர்களில் நாங்க 3 பேர் பெண்கள். என்னோட இரு பெரியப்பா பெண்கள், நான். சேர்த்து மூன்று பேர். எங்க மூணு பேருக்கும் தான் பிள்ளைகள், பெண்கள் திருமணம் ஆகிப் பேரன், பேத்தி எடுத்திருக்கோம். ஆண் வாரிசுகளில் சில அண்ணாக்களின் பெண்கள் திருமணம் ஆகியும் வாழவில்லை. என் சொந்த அண்ணா பெண்ணிற்கு 28 வயசில் தான் திருமணம் ஆச்சு. எட்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. அண்ணா பையரோ தத்து எடுத்திருக்கார். மற்றப் பெரியப்பா பேரன்களில் ஒருத்தருக்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை. மற்றவர்களுக்குக் குழந்தை இல்லை. பித்ரு சாபம், பெண் சாபம் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னென்னவோ பரிகாரங்களெல்லாம் பண்ணியாச்சு.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவாங்க நெல்லை, அந்த பூஜைப் பெட்டியும், நாகரும், குலதெய்வமான மாயாபண்டீஸ்வரருடைய படங்களோடு என் தம்பியிடம் கொடுத்திருக்காங்க. அவரோட மூத்த பையருக்குத் தான் 42 வயதாகியும் இன்னமும் திருமணம் ஆகவில்லை.
நீக்கு"ஈஸ்வரக்குட்டியார்" என்பது ஏஸ்வரனு வந்திருக்கு. எல்லோரும் பெயருக்கு முன்னால் :ஈஸ்வர" நு சேர்த்துப்பாங்க. என் அப்பா "ஈஸ்வர ராமகிருஷ்ணன்" இது மாதிரி எல்லோருக்கும்.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஉங்கள் வீட்டில் நடந்ததை படிக்கையில் மனது சங்கடப்படுகிறது. இது போல் குடும்பத்தில் யாரோ மூத்தவர்கள் செய்யும் சிறு தவறு, அல்லது தெய்வ குத்தங்கள் தொன்றுதொட்டு வந்து அக்குடும்பத்தின் அடுத்தடுத்த வாரிசுகளில் சிலரையாவது ஏதோ ஒரு வகையில் படுத்தும் போலிருக்கிறது. இதைதான் பூர்வ ஜென்ம வினைகள் என்று சொல்கிறோமோ..! இதையெல்லாம் பார்த்து தொடர்ந்து வந்ததும்/ வருவதும் எல்லாம் ஈஸ்வர சங்கல்பம் என வாழவும் மனது இடங்கொடாமல் தவிக்கிறதே ..! என்ன செய்வது.? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கீதா சாம்பசிவம் மேடம்... நீங்க எழுதியிருக்கிறது ஆச்சர்யமாக இருக்கிறது. நிச்சயம் நீங்க ப்ரசன்னம் மற்றும் மாந்த்ரீகர்களைப் பார்த்திருப்பீங்க, இதுபற்றி ஆலோசிக்க. பூர்வ ஜென்ம வினைகள்னு இல்லாமல் ஒரு குடும்பத்தின் கிளைகளுக்குத் தொடர்ந்து வருவது என்ன காரணமாக இருக்கும்?
நீக்கு/// படியெடுத்த புண்ணியவான்கள் என்னென்ன இடைச்செருகல்களை சேர்த்தனரோ... எதெதை தப்பாக எழுதினரோ... எதைஎதை நைஸாக விட்டு விட்டார்களோ...///
பதிலளிநீக்குஅப்படி இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு...
அன்றைக்கு மனசாட்சி என்னும் மகோன்னதம் இருந்தது...
ஆனால் பாருங்க...இப்போ அரண்மனைல, சரபோஜி மன்னர், கிறித்துவத்தை வளர்ப்பேன் என்று பாதிரியாரிடம் சத்தியம் செய்தார்னு எழுதி வைத்திருக்காங்க.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குஉங்கள் பதிவில் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. (அழகான பழங்கால படங்களின் வாயிலாகவும், தங்களின் படிப்பறிவின் வாயிலாகவும்) இத்தனையையும் படித்து, பதிவுககளுக்கேற்றபடி தொகுத்துத் தரும் உங்களின் சிரமங்கள் என்னை வியக்க வைக்கிறது. எனக்கொன்றும் இதில் சிரமமில்லை என நீங்கள் பகரலாம். ஆனால் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை படிக்கையில் உங்களைப் போல ஒரு சிறு துளியாவது நான் இல்லை என்பது பட்டவர்த்தனமாக புரிகிறது. எனவே இந்தப்பதிவில், உங்கள் எழுத்தாற்றல், நினைவாற்றல், படிப்பாற்றல் முதலிய திறன்களை கண்டு வியப்புடன் என் பணிவுடனான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா ஹரிஹரன் மேடம்... உண்மையிலேயே எனக்கு இன்றைக்கு பதிவைப் படிக்கும்போது இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்று தோன்றியது. இதனை எழுதிய பல மாதங்கள் ஆகிவிட்டன.
நீக்குஉங்கள் திறமை எங்கள் அனைவருக்கும் தெரியும். கவிதையிலும் புதிதாக எழுதுவதிலும், நகைச்சுவையுடன் எழுதுவதிலும் நீங்க சூப்பர். என்னைப் போல, கொஞ்சம் நெடிய பதிவாகவும் நீங்க எழுதுவீங்க. மிக்க நன்றி உங்களின் ஊக்கப்படுத்தும் தன்மைக்கு
உங்களின் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி சகோதரரே. கத்துக்குட்டியாக ஒரு வலைப்பூவை ஆரம்பித்து ஏதோ நான் எழுதும் என் ஆக்கங்கள் அனைத்திற்கும், உங்கள் அனைவரின் ஊக்கங்கள்தான் காரணம். அதற்கு என் பணிவான நன்றி உங்கள் அனைவருக்கும் எப்போதும் உண்டு.
நீக்குமாமனாரின் அண்ணா மிகவும் வித்வத் நிறைந்தவர். சம்ஸ்கிருதமும், தமிழும் நன்கு கற்றறிந்தவர். அவருடைய ஒரே மகன் அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை எழுதிட்டு, (நம்ம ரங்க்ஸுக்கு ஒரு வயது மூத்தவர்) காத்திருந்த சமயம் மழை நாளில் (தீபாவளி சமயம்) கும்பகோணம் அத்தை வீட்டுக்கு வந்தவர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து உடனேயே மரணம் அடைந்து விட்டார். அறுபதுகளின் ஆரம்பத்தில் இது நடந்திருக்கு. ஆகவே பெரியப்பா அதற்குப் பின்னர் மனம் கொஞ்சம் பேதலித்தாற்போல் ஆகிவிட்டார். புல்லாங்குழல் கச்சேரிகளெல்லாம் செய்து கொண்டிருந்ததாகச் சொல்லுவார்கள். செம்மங்குடியெல்லாம் நெருங்கிய நட்பு. பழைய ஃபோட்டோக்களெல்லாம் இருந்தன. தூக்கிப் போட்டாச்சு எல்லாத்தையும்.
பதிலளிநீக்குபுத்திர சோகம் என்பது மிகக் கொடுமையான சோகம் இல்லையா? கீசா மேடம்...
நீக்குசாந்த்வீபனி முனிவர், ஸ்ரீகிருஷ்ணர், குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்டபோது, செல்வம், முக்தி என்று பெரிதாக எதையும் கேட்காமல், அவர் மனத்தின் ஆசையான, இறந்துபோன மகன் உயிருடன் வேண்டும் என்று கேட்டார். புத்திர சோகம் என்பது எவ்வளவு பெரியது பாருங்க.
போட்டோக்களையெல்லாம் ஏன் தூக்கிப்போட்டீங்க. பையர்ட்ட சொல்லி டிஜிடலைஸாவது செய்திருக்கலாம். நினைவுகள் மீண்டும் வருமா?
ஃபோட்டோக்கள் எல்லாம், நாங்க தூக்கிப் போடலை நெல்லை. பெரியம்மா தன் ஒரே மகள் வீட்டில் வைத்திருந்தார். பெண்ணின் மாமனார் இதெல்லாம் வைச்சுக்கக் கூடாதுனு தூக்கிப் போட்டுட்டார். பஞ்சாயதன பூஜை விக்ரஹங்களையும் பெரியம்மா பெண்ணிடம் கொடுக்க அவங்க மாமனார் நம்மாத்துக்கு இதெல்லாம் சரியா வராதுனு சொல்லிப் பெரியம்மாவிடமே கொடுத்துட்டார். கடைசியில் அவை எங்களிடம் 2009/10 ஆம் ஆண்டுகளில் வந்து சேர்ந்தன. இப்போதும் எங்களிடம் இருக்கு. அதில் உள்ள பிள்ளையாரைத் தான் அவர் வந்ததும் நம்ம ரங்க்ஸ் பிள்ளையார் சதுர்த்திக்கு வைச்சிட்டிருந்தார். களிமண் பிள்ளையார் வாங்குவதை நிறுத்திட்டார். அதில் உள்ள வெண்ணை ஏந்தும் தவழ்ந்த கிருஷ்ணரைத் தான் கோகுலாஷ்டமிக்கு வைப்பேன். இப்போ இங்கே கத்தார் வருகையில் மைத்துனரிடம் கொடுக்கவானு கேட்டதில் அவங்க பொறுப்பு ஏத்துக்க முடியாதுனுட்டாங்க. வீட்டில் சுவாமி அலமாரி சின்னது. இதில் அவற்றை எல்லாம் வைக்க முடியாது என்பது ஒரு காரணம். மடி, ஆசாரம் இன்னொரு காரணம்.
நீக்குசாளகிராமங்கள் மட்டும் ஊரில் என் மாமனாரின் முன்னோரே கட்டிய பெருமாள் கோயிலில் கொடுத்திருக்காங்க. எங்க பையர் பிறந்த வருஷம் தான் அந்தக் கோயிலை அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது. என்றாலும் கும்பாபிஷேஹமெல்லாம் இப்போவும் எங்க பொறுப்புத் தான். இப்போக் கூட செப்டம்பரில் கும்பாபிஷேஹம் நடந்தது. மாமாவும் இல்லை. நாங்களும் போக முடியாது. கருடசேவைக்கு ரொம்ப முயன்றோம். கடைசியில் இப்போ செப்டெம்பரில் கருடசேவை நடந்திருக்கு. அதன் பின்னர் 2 முறை நடந்திருக்கு. இப்போ வைகுண்ட ஏகாதசியில் கருடசேவை இருக்கும்.
நீக்கு//அவர் மனத்தின் ஆசையான, இறந்துபோன மகன் உயிருடன் வேண்டும் என்று கேட்டார்//முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரம் புத்தகம்படி அவன் ராக்ஷதர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுப் பின்னர் கிருஷ்ணரால் மீட்கப் பட்டான். கண்ணன் வந்தான் தொடரில் இது பற்றி விரிவாக எழுதி இருப்பேன்.
நீக்குகீசா மேடம், சாளக்கிராமம், விக்ரஹங்கள் இவைகளைப் பிறர் வாங்கிக்கொள்ள பயப்படறாங்க, தொடர்ந்து பூஜை செய்யவில்லை என்றால் நம்மைப் பாதிக்குமே என்று. வெறும்ன சமயம் வாய்க்கும்போது ஒரு பூவோ இல்லை இலையையோ வைத்தாலும் போதும். நாம எதைச் சாப்பிட்டாலும், அதனை மனதால் அந்த விக்ரஹங்களுக்கு கண்டருளப்பண்ணுவது மாதிரி நினைத்துக்கொண்டாலே போதும்.
நீக்குநிறையபேர்கள் சாளக்கிராமங்களை தங்கள் வீட்டு வாத்தியாரிடமோ (அதாவது நமக்கு விசேஷங்களுக்கு பூஜை எல்லாம் செய்ய வருபவர்) கொடுத்துவிடுகிறார்கள், இல்லை கோயிலுக்கோ. எங்கள் வாத்தியார், தன்னிடம் நூறுக்கு மேல் சாளக்கிராமங்கள் இருப்பதாகவும் (இப்படிச் சேர்ந்தது), தினமும் ஏதோ இரண்டுக்கு ஆராதனம் செய்வதாகவும் சொல்வார்.
நீக்கு//முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரம் புத்தகம்படி// இந்த வெர்ஷன் நான் படித்ததில்லை. நான் இன்னொருமுறை செக் பண்ணிவிட்டு எழுதறேன். காரணம் நான் சொன்ன வெர்ஷன் பரவலாகச் சொல்வது, உபந்நியாசங்களிலும் சொல்லப்படுவது.
நீக்கு///யாருமில்லை
பதிலளிநீக்குஎன விளம்பலாம்.///
அல்லது
குழம்பலாம்...
இல்லையேல்
அரட்டையில் இருந்து
கிளம்பலாம்!..
ஹா ஹா ஹா... வார்த்தை விளையாட்டு சூப்பர். சுடச்சுட ஒரு கதையை எழுதுங்கள் துரை செல்வராஜு சார்.
நீக்குநன்றி நெல்லை அவர்களுக்கு..
நீக்குவருகின்ற வியாழன் அன்று இங்கே ஒரு வார்த்தை விளையாட்டு இருக்கின்றதே...
/// ஆனால் பாருங்க...இப்போ அரண்மனைல, சரபோஜி மன்னர், கிறித்துவத்தை வளர்ப்பேன் என்று குவார்ட்ஸ் பாதிரியாரிடம் ///
பதிலளிநீக்குஇருபது வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டது
சிவகங்கைப் பூங்காவில்
சிவகங்கை குளத்துக்கு அருகில் இது சம்பந்தப்பட்ட வழிபாட்டு மையம் உள்ளது..
///கங்காளத்தில் கங்காளம்'
பதிலளிநீக்குஎன்று அடுத்து துப்பறியும் கதை
மிச்சம் மீதி தூக்கமும் கெட்டு விடும்...
///மிக்க நன்றி துரை செல்வராஜு சார்...
பதிலளிநீக்குஆமாம் கதை எங்கே?..///
எனது நலன் ஒத்துழைக்க வில்லை...
இப்போதைய பதிவுகள் காட்டுப்பூனை வேலை!..
நரசிம்ம ஸ்வாமியிடம் வேண்டிக் கொள்ளுங்க...
நன்றி. ..
பதிலளிநீக்கு(100)
நூறிலொரு வார்த்தையாக என் கருத்தை எழுத்தில் கொண்டு வருவதற்குள், எண்ணிக்கையில் முந்தி வெற்றி பெற்ற சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.நூறு பூஜ்யங்களுடன் தனித்து இருக்க கூடாது என்பதற்காக கூடவே ஒன்றிரண்டும் வந்து விட்டது. நன்றி.
பதிலளிநீக்குநன்றியம்மா...
நீக்கு'கங்காளத்தில் கங்காளம்'
பதிலளிநீக்குஅரபு நாடுகளில் அதி உன்னத
உயர் நிலை விருந்துகளில்
கங்காளத்தில் கங்காளம்' பார்க்கலாம்...
அதாவது கங்காளமாகிய பெரிய பாத்திரத்தில் குட்டி ஆட்டின் கங்காளம்... அதாவது வெந்த ஆட்டின் எலும்புகள்
பதிவின் கடைசியில் இப்படி எழுதிட்டீங்களே துரை செல்வராஜு சார். நல்லவேளை, கங்காளத்தில், ஆட்கள் இல்லை. தப்பித்தோம்.
நீக்கு