தக்காளி சாதம்
துரை செல்வராஜூ ரெஸிப்பி

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி 400 கி
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி 4
பச்சை மிளகாய் 2
வீட்டுத் தயிர் 200 ml
இஞ்சி – பூண்டு விழுது ஒன்றரை tsp
புதினா கொத்தமல்லி - சிறிது
வீட்டில் தயாரிக்கப்பட்ட
கரம் மசாலா 3 tsp
மஞ்சள் தூள் அரை 3 tsp
பட்டை 2
கிராம்பு 2
பிரியாணி இலை- 2
ஏலக்காய் 2
முந்திரி 10
உலர் திராட்சை 10
நெய் 100 ml
சூரியகாந்தி எண்ணெய் சிறிதளவு
செய்முறை:
பாஸ்மதி அரிசியைக் கழுவி தனியாக பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்..
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை சுத்தம் செய்து வெங்காயத்தை மெல்லியதாகவும் தக்காளியைத் துண்டுகளாகவும் பச்சை மிளகாயை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்..
முந்திரி திராட்சையை வறுத்துக் கொள்ளவும்..
சற்றே அகலமான பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் இறக்கி வைத்து தயிரைச் சேர்த்து கிளறி விடவும்..
இதுவரை எந்த நிலையிலும் தண்ணீர் சேர்க்கவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்..
இதற்குள் பத்து நிமிடம் ஆகியிருக்கும்..
ஊறவைத்திருக்கிற பாஸ்மதி அரிசியை வடிகட்டி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி 700 மிலி வெதுவெதுப்பான நீருடன் அடுப்பில் ஏற்றவும்..
இத்துடன் - கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், உப்புடன் வதக்கி வைத்துள்ள தக்காளி விழுதையும் சேர்த்து கிளறி விடவும் ..
சற்று நேரத்தில் முதல் கொதி.. இரண்டாம் கொதி நிலையில் தண்ணீர் வற்றி வருகின்ற போது புதினா, கொத்தமல்லி முந்திரி திராட்சையைப் போட்டு அடுப்பை மிகவும் குறைத்து நெய்யை விட்டு பதமாக மீண்டும் கிளறி மூடி வைத்து விடவும்..
பத்து நிமிடம் கழித்து மூடியைத் திறக்கவும்...
கம கம என்று தக்காளி சாதம்..
அரிசி வேகின்ற கொதி நிலைகளை எழுத்தின் வாயிலாக அறிய முடியாது.. கண்ணால் கண்டு தெரிந்து கொள்ள வேண்டியதாகும்..
இது பழைமையான முறை..
தற்கால நீராவி அழுத்தச் சமையலர்களுக்கு இந்தப் பக்குவம் கிடைப்பது அரிது..
வற மிளகாய், நிறமி, டால்டா இவை இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது..
இதற்கு தயிர் பச்சடி ஏற்றது..
நாமே நமக்காகத் தயாரிக்கும் போது வெளியாட்களின் (செய்முறை) சுகாதாரக் குறைவுகள் பற்றிய சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை..
நமது நலம் நமது கையில்..
அருமையான தக்காளி சாதம் திங்க பதிவாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குஆரோக்கியமான சமையல். நன்று துரை செல்வராஜு சார்.
நல்வரவு
நீக்குமகிழ்ச்சி... நன்றி..
ஓம் முருகா!!
பதிலளிநீக்குகாலை வணக்கம், செல்வாண்ணா & இதர மஹாஜனங்களே!
இதர மஹாஜனங்களுள் ஒருவரான நானும் "வாங்க" திவாமான்னு....
நீக்குகீதா
மகிழ்ச்சி...
நீக்குநன்றி மஹா ஜனங்களே..
நாங்கள் பட்டை சோம்பு, கரம் மசால, இஞ்சி பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்துவது இல்லை, தக்காளி சாத்த்துக்கு.
பதிலளிநீக்குபயன்படுத்தினால் தக்காளி பிரிஞ்சி ஆகிவிடாதா?
முறையான பதிலை செல்வாண்ணா சொல்வார்.
நீக்குIn the meantime, Birinj என்றால் பெர்சிய (ஈரானிய) மொழியில் rice! பிர்யான் என்றால் வறுப்பது; பிரிஞ்ச் பிர்யான் (னி) என்றால் fried rice!!
திவாமா இந்த ஈரானிய அர்த்தத்தை நான் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். சும்மா இதென்ன பிரிஞ்சி, பிரியாணின்னு எப்படி வந்திருக்கும்னு தேடினப்ப.
நீக்குகீதா
எனக்கு அவ்வப்போது youtube feed இது போல randomஆக வரும்! மங்கோலிய இசை, இனுயிட் (எஸ்கிமொ என்று நாம் சொல்வது) வேட்டையாடல், போல கலந்து கட்டி களேபரமாக :-)
நீக்குசுவையான,ஆரோக்யமான, நாவில் நீர் ஊற வைக்கும் சமையல் குறிப்பு. கரம் மசாலாவும் சேர்த்து, தனியாகவும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்க வேண்டுமா?
பதிலளிநீக்குபட்டை சேர்த்தால்தான் 'பட்டையை கிளப்பமுடியும்' போலும் :-)
நீக்குஎங்களுக்கு பிடித்தது வேற 'பட்டை'! சிவசிவா, நெற்றியில் அணிவதை சொன்னேன் ;-)
ஹாஹாஹா பட்டை என்றதும் எனக்கு எப்பவுமே நினைவுக்கு வரும்....நாங்கள் ஒருவரை கேலி செய்தது....அவர் மாலையானால்....ஹிஹிஹி.....காலையில் நெற்றியில் பட்டை, பூஜை செய்வார். அப்புறம் கழுத்தில் பட்டை (டை) ஆஃபீஸ்.....மாலையில் வாயில் 'பட்டை'...தள்ளாட்டம்.
நீக்குகீதா
சில ஃப்ரென்ச், இத்தாலிய உணவுகளில் cooking wine சரளமாக சேர்க்கிறார்கள்; போதையெல்லாம் ஒன்றும் ஏறாது. சொன்னால்தான் தெரியும்.
நீக்குஉலகின் பல்வேறு மொழிகளிலும் கிட்டத்தட்ட 'டொமேட்டோ' என்பது போலிருக்க தமிழர்கள் மட்டும் ஏன் தக்காளி என்கிறார்கள் என்று சிந்தித்துப்பார்தேன். உர்துவில் (ஹிந்திக்காரர்களும் கூட) காய் (vegetable) என்பதை 'தர்க்காரி' என்கிறார்கள். மற்றெல்லாவற்றுக்கும் தெரிந்த பெயராயிருக்க, சந்தைக்கு கொண்டுவரப்ப்ட்ட இந்தப்புது காய்/கனிக்கு என்ன பெயர் என்ற கேள்விக்கு, 'யே பீ தர்க்காரி ஹை' என்ற பதில் கிடைத்திருக்கலாம். அவன் 'vegetable' என்ற பொருளில் சொன்னதை, நம்மாட்கள் 'ஓஹொ அதுதான் இதன் பெயர் போலிருக்கிறது' என்று அன்று முதல் தர்க்காரி ஆகி, நாளடைவில் தக்காளி ஆகியிருக்கலாம் என்று எண்ணுகிறேன். I need to copyright this idea first!! (C)
பதிலளிநீக்குபுதுசு!!!! (c) கிராண்டட்
நீக்குகீதா
நன்றி! நன்றி! இதை வைத்து எப்படி(யாவது) காசு பண்ணுவது என்று இனி ரூம் போட்டு யோசிக்க வேண்டும்!
நீக்குஎன்ன ஒரு ஆராய்ச்சி TVM!
நீக்குமுருகா சரணம்..
பதிலளிநீக்குஅனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குதுரை அண்ணா, தக்காளி சாதம் சூப்பர் போங்க!!!
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு குறிப்பு.
கீதா
மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
தக்காளிச் சாதத்தில் பொதுவாக வெங்காயம் மசாலா சேர்க்காமல், தக்காளியை தாளித்து வதக்கிக் கடைசியில் கொஞ்சம் வெந்தயப்பொடி, பெருங்காயப் பொடி தூவி 5 நிமிடத்தில் இறக்கி மூடி வைத்து சாதத்திற்கும் வேறு எதற்கேனும் பயன்படுத்தியது உண்டு அதுவும் குறிப்பாகப் பெரியவங்களும் இருக்கறப்ப செய்யும் போது.
பதிலளிநீக்குவெங்காயம் தக்காளி வதக்கி அதே போன்று கொஞ்சம் வெந்தயப்பொடி தூவி கலக்கி கொஞ்சம் மூடி வைத்துவிட்டு ....கலந்து
அப்புறம் மசாலா போடும் முறை தெரிந்து கொண்டு செய்யத் தொடங்கினேன், தோழியின் மகள் நம் வீட்டிற்கு வந்த போது, அவள் மசாலா சேர்த்ததை விரும்பினாள். நம் வீட்டிலும் எப்படிச் செய்தாலும் பிடிக்கும். மசாலா சேர்த்தும்.
நன்றாக இருக்கும்.
கீதா
///நம் வீட்டில் எப்படிச் செய்தாலும் பிடிக்கும்.. ///
நீக்குஅது தான் வேண்டும்
தி/கீதா சொல்லி இருக்கும் முறையில் தான் மாமியாருக்குத் தக்காளி சாதம் பண்ணிக் கொடுப்பேன். இதையே நன்கு சுருள வதக்கிக் கொண்டு விரத நாட்களில் அல்லது வெங்காயம் சேர்க்காதவர் எனில் அவங்களுக்கு தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கவும் கொடுப்பேன். கூடக் கொஞ்சம் தனியாவையும் எண்ணெயில் வறுத்துச் சேர்க்கலாம். சில சமயம் சாம்பார்ப் பொடி மட்டும் போட்டு நன்கு வதக்கிடுவேன். இங்கேயும் அடிக்கடி இப்படிப் பண்ணி வைச்சுப்பேன். வெங்காயம் போட்டு சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணினால் இதை வைத்துக் கொண்டு சாப்பிடுவேன். தோசைக்கும் எடுத்துப்பேன்.
நீக்கு///நாங்கள் பட்டை சோம்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்துவது இல்லை, தக்காளி சாதத்துக்கு.. ///
பதிலளிநீக்குஇது ஒரு சாதாரண செயல்முறை..
அவரவர் விருப்பம் போல மாற்றிக் கொள்ளலாம்
நான் இப்படியும் பண்ணி இருக்கேன். பட்டை, சோம்பு இல்லாமலும் பண்ணுவேன். அன்றைய தினம் மற்றும் சாப்பிடுபவரைப் பொறுத்து இது மாறுபடும்.
நீக்குதிருவாழி அவர்களது மேல் விவரங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி...
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
பதிலளிநீக்குகரம் மசாலாவும் சேர்த்து, தனியாகவும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்க வேண்டுமா?...
இந்த பக்குவத்திற்கு இதுவே
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குசுவையான தக்காளி சாதத்திற்கான சமையல் குறிப்பு....... பொதுவாக பட்டை, பிரியாணி இலை போன்றவை பயன்படுத்துவது குறைவு. இந்த முறையில் செய்து பார்க்க வேண்டும். நன்றி.
மகிழ்ச்சி...
நீக்குநன்றி வெங்கட்
அரிசியோடு கொஞ்சம் பாசிபபருப்பும் சேர்த்துக் கொண்டால் எப்படி இருக்கும்... ஹிஹிஹி.. நம்ம ஆராய்ச்சி நம்மளையே விடாது போல...
பதிலளிநீக்குகடவுளே... கீதா இப்ப வந்து "எஸ்... நான் இதை ட்ரை செய்திருக்கேன்" னு சொல்லாமல் இருக்கணுமே...
நீக்குநம்ம ஆராய்ச்சி நம்மளையே விடாது போல...
நீக்குஒரு சில புலவு முறைகளுக்குப் பாசிப்பருப்பு சேர்ப்பது உண்டு. ஆனால் தக்காளி சாதத்துக்கெல்லாம் இல்லை. கோவைப்பக்கத்து அர்சீம்பருப்பு சாதத்துக்குத் துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு சேர்ப்பது உண்டு.
நீக்குகீதா தானே பதில் சொல்லணும்? பண்ணிப் பார்த்திருக்கேன்னு. எந்த கீதாவா இருந்தா என்ன? இஃகி,இஃகி,இஃகி,இஃகி.
நீக்கு:-))
நீக்குஎபில, மாம்பழ சீசன் முடிந்ததும், மாங்காய் சீசன் முடிந்ததும் அது பற்றிய ரெசிப்பி விலாவாரியா வரும் . அதுபோல தக்காளி 60 ரூபாய் விற்கும் இப்போது தக்காளி சாத ரெசிப்பி. தக்காளி மாத்திரம் (வெங்காயமும்) ஏன் இப்படி ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கிறது?
பதிலளிநீக்குஅதானே எனக்கும் புரியலை!..
நீக்குருசி விலை அறியாது நெல்லை!
நீக்கு@ திருவாழி
பதிலளிநீக்கு/// இதை வைத்து எப்படி(யாவது) காசு பண்ணுவது என்று இனி ரூம் போட்டு யோசிக்க வேண்டும்!.. ///
செய்யுங்கள்...
எனக்கு இந்த யோசனை கைகூடி வருவதில்லை...
தக்காளியைச் சாறு எடுத்துக் கொண்டு அரிசியை வறுத்து ஊறவைத்துக் கொண்டு அந்தத் தக்காளிச் சாற்றில் சேர்த்துக் கொண்டு, மசாலாப் பொருட்கள் தாளிப்புடன் அந்த ஊற வைத்த அரிசியைச் சேர்த்து சமைத்துக் கொண்டு இறக்கும்போது கரம் மசாலாப் பொடி, கசூரி மேதி, ஜீரகப்பொடி சேர்த்துக் கொண்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்து அதில் சேர்த்து புதினா, கொத்துமல்லி இலை பொடியாக நறுக்கித் தூவிக்கலந்து கொண்டும் சாப்பிடலாம். சிலர் பச்சை வெங்காயத்தை மேலே தூவுவார்கள். அவரவர் விருப்பம். இதில் காரத்துக்கு மிளகாய்ப் பொடி எல்லாம் இல்லை. மசாலாப் பொருட்கள் தாளிப்பும், கடைசியில் கரம் மசாலாவும் தான். காரம் வேண்டும் என்பவர்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ!
பதிலளிநீக்குஇது குவைத்தில் இருந்த போது அதிக அளவு காரம்
பதிலளிநீக்குஇன்றி பழகிக் கொண்டது...
மகிழ்ச்சி.. நன்றி அக்கா
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
நீக்குதக்காளி சாதம் செய்முறையும் படமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபிள்ளைகள் வந்தால் இந்த முறையில் செய்து கொடுக்கலாம்.
மகிழ்ச்சி.. நன்றியம்மா
நீக்குநான் செய்யும் தக்காளி சாதம் மிக எளிமையானது வெங்காயம், தக்காளி கொஞ்சம் இஞ்சி, வதக்கி சாம்பார் தூள் கொஞ்சம் போட்டு வதக்கி கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கி சாதம் கலந்து விடுவேன் துளி நெய் போட்டு கிளறி விடுவேன் அவ்வளவுதான்.
பதிலளிநீக்குஆகா...
நீக்குபுதிய செய்முறைக்கு
மகிழ்ச்சி.. நன்றி
தக்காளி சாதத்துக்கு மசாலாக்கள் சேர்ப்பேன் தயிர் சேர்த்ததில்லை நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குசெய்து பார்க்கிறேன்.
நன்றாக இருக்கும்..
பதிலளிநீக்குசெய்து பாருங்கள்...
மகிழ்ச்சி.. நன்றி ..
இன்றைய பதிவில் கருத்துரை செய்த
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றி...
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான தக்காளி சாதம் நன்றாக உள்ளது. நான் இதுபோல் பாசுமதி அரிசியில் செய்தாலும், மசாலா அயிட்டங்கள் ஏதும் சேர்த்ததில்லை. வெறும் வெங்காயம் மட்டுந்தான் சேர்த்து செய்துள்ளேன்.
இதில் தயிர் சேர்ப்பது எதற்காக..? இந்த முறையில் நானும் ஒரு நாள் செய்து பார்க்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.