கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன்:
1. மற்றவர்களின் அனுபவம், அறிவுரைகள் தவிர, அக்கப்போர் செய்திகளால், யார் யாரை வைத்திருந்தார், டைவர்ஸ் ஆனது போன்ற தனிப்பட்ட வாழ்க்கை, யாருக்கு என்ன உபயோகம்? ஏன் அவற்றைத் தெரிந்துகொள்ள மக்கள் அலைமோதுகிறார்கள்?
# வம்பில் மனிதர்களுக்கு ஒரு தனியான சுவாரசியத்தை கடவுள் டிசைன் செய்திருப்பதாகத் தெரிகிறது.
$ நம் வீட்டில் கரண்ட் போனால் உடனே பக்கத்து வீட்டைப் பார்ப்பது இல்லையா? அது போலதான்! சம்பந்தமில்லாமல் ஒரு குட்டிக்கதை : அந்தத் தெருவுக்கு ஒரு விலைமாது வந்திருந்தாராம். ஒருநாள் மனைவி கணவனிடம் ஊர்வம்பு பேசினாளாம். "இந்தத் தெருவிலேயே ஒரே ஒரு ஆண்தான் அவளிடம் போகவில்லையாம். யாராயிருக்கும்?" கணவனும் யோசித்தானாம்.. "ஆமாம்.. யாராயிருக்கும்.. பக்கத்து வீட்டு சுப்புவாயிருக்குமோ.. அவன்தான் கொஞ்சம் பயந்த சுபாவம், கூச்ச சுபாவம்" என்றானாம்.
2. குளிப்பதற்கு ஷவர் கண்டுபிடித்ததன் காரணம் என்ன? தண்ணீர் சிக்கனத்திற்காகவா இல்லை மழையில் குளிக்கும் உணர்வுக்காகவா?
# சோம்பல் சுகம். சிரமமின்றி நீர் சரியாக நிரந்து விழுவது தரும் திருப்தி.
& மொட்டை மாடியில் முதன் முதலில் மழையில் குளித்த ஆசாமிதான் அந்த மழை இன்பத்தை தொடர்ந்து அனுபவிக்க shower கண்டுபிடித்திருப்பார். அப்போ bath tub கண்டுபிடிச்சவர் யாரு? eureka புகழ் கி மு ஆர்கிமிடிஸா ?
$ வீட்டில் ஷவர் இருந்தும் நான் ஷவரில் குளிப்பதே இல்லை. என்ன காரணமாயிருக்கும்?
3. யாராவது அப்பாவிக்கு துன்பமோ இல்லை அநீதியோ செய்திருக்கிறீர்களா?
# யோசித்துப் பார்த்தால் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
& செய்தது உண்டு. அறியாத வயதில். இப்போ நினைத்து வருந்தி என்ன பயன்?
$ நேற்று கூட செய்தேன். பல அப்பாவிகளை ஒரு கதை வெளியிட்டு வதைத்திருக்கிறேன்!
4. உங்களுக்குப் பொதுவாகப் பிடித்த காலை உணவு எது? நேரத்திற்குச் சாப்பிடும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறீர்களா?
# காலை உணவு தயிர் சேர்த்த ராகி உப்புக் கஞ்சியாகி பல நாட்கள் ஆகின்றன. நேரத்துக்கு சாப்பிடுவது தானாகவே அமைந்து விடுகிறது.
& தோசை & மிளகாய்ப் பொடி ( with or without எண்ணெய் ) பெரும்பாலும் நேரத்திற்குச் சாப்பிடுவது என் வழக்கம்.
$ 99%. காலை எட்டரை மணி. மதியம் ஒரு மணி. இரவு ஏழு மணி! பிடித்த உணவு என்பது மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் ஒன்றையே தொடர்ந்து சாப்பிட்டால் போர் அடித்து விடும்.
5. முன் போல மக்கள் காலையில் அல்லது மாலையில் கோயிலுக்குப் போகும் வழக்கத்தை ஏன் கடைபிடிப்பதில்லை?
# அசிரத்தை சோம்பல் மற்றும் மதியாமைதான். எதற்கானாலும் அடிப்படையானது மனதில் இருக்கும் விருப்பம்தான். கலிகால லட்சணம் இந்த அசிரத்தை.
& முன் காலத்தில் வீட்டிற்கு அருகிலேயே கோயில்கள் இருந்ததால் அடிக்கடி கோயில்களுக்கு சென்று வர முடிந்தது. இப்போ நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் அதற்கு எதிரே ஆஞ்சி கோவில் - விஷேச நாட்களில் செல்வது உண்டு. வழக்கத்தைக் கடைபிடிக்காததின் காரணம் : கோயில் அருகில் இல்லை & வயது அதிகம் ஆகிவிட்டது.
$ இதோ இந்த பதிலை டைப்பிடிக்கும் இந்த நேரம் (செவ்வாய் மாலை 5:50) கூட பாஸும் மருமகளும் கோவில் சென்றிருக்கின்றனர்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
இப்போது இருக்கும் நடிகர்களில் பாரதியாராக நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்? என் ஓட்டு தனுஷ் & சூர்யாவுக்கு.
# பாரதியாராக இன்னும் ஒருவர் நடிக்கத் தேவை என்ன இருக்கிறது ?
& ஏற்கெனவே பல பாரதியார்களை பாத்துட்டோம் - சிவாஜி முதல் கமல் (?) வரை. அதனால ஒரு சேஞ்சுக்கு பவர் ஸ்டார் சீனிவாசனை பாரதியார் வேடத்தில் பார்க்க ஆசை!
$ AI இருக்கும்போது இவர்களெல்லாம் எதற்கு?!
சிலர் உடைகள் குறிப்பாக உள்ளாடைகள் வாங்குவதில் குறிப்பிட்ட பிராண்ட்தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார்கள், நீங்கள் எப்படி?
# நானும் அப்படித்தான் - ஆனால் விலை நியாயமானதாக இருக்கவேண்டும்.
& எனக்கான உள்ளாடைகளை நானே தேர்ந்தெடுத்த காலங்களில் எது cheap & good குவாலிடி என்று பார்த்து தேர்ந்தெடுப்பேன். இப்போ எனக்காக பையனோ அல்லது பெண்ணோ தேர்ந்தெடுத்தால் அவர்கள் branded items மட்டுமே வாங்குகிறார்கள்.
$ ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்கள் இருந்தால் (பெண்களுக்கும் பொருந்தும்தான்) இன்னார் இந்த ப்ராண்ட் என்று வகைப்படுத்தி எடுத்து அணிவது சுலபமாகும். எல்லோரும் ஒரே நிறத்தில், ஒரே சைஸில், ஒரே பிராண்டில் வைத்திருந்தால் என்ன ஆகும்!
கீதா சாம்பசிவம் :
1) பெண்கள் அடுத்தடுத்து ஏமாந்து போய்த் திருமணம் ஆனவரையே திருமணம் செய்துக்கறதைப் பார்த்தால் நம்ம தமிழகத்து இளைஞர்கள் திருமணத்துக்குப் பெண்ணே இல்லாமல் திண்டாடுவது தான் நினைவில் வருது. இப்படி இருக்கையிலேயே ஏன் பெண்கள் ஏற்கெனவே திருமணம் ஆகிக் குழந்தை இருப்பவரைக் கல்யாணம் செய்து கொண்டு கஷ்டப்படணும்? சிலர் உயிரையே ஏன் விடணும்? இவ்வளவு ஏமாளிகளா படித்த பெண்கள்?
# அப்படி நடப்பதற்கு சில கட்டாயக் காரணங்கள் இருக்கலாம் என்பது என் ஊகம். வசதிபடைத்த பேரழகிகள் தாம் ஏமாறாமல் பாதுகாப்பாக இருப்பதுதான் முக்கியம் என்றெண்ணிச் செய்வதாக நான் நினைக்கிறேன். ஜாக்குலின் கென்னடி நினைவுக்கு வருகிறார்.
$ முன் போல இப்போது அவ்வளவு இப்படியான திருமணங்கள் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்.
2) அவங்க படிப்பு அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததுதான் என்ன? கொஞ்சமானும் விழிப்புணர்ச்சி இருக்க வேண்டாமா? இன்னொரு பக்கம் காதலன் இருந்தும் வேறொருவருடன் திருமணம் செய்துக்கச் சம்மதம் சொல்லிட்டுப் பின்னர் அந்த மணமகனை ஏன் கொல்ல வேண்டும்?
# நீங்கள் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தைப் பார்த்து இப்படிக் கேட்கிறீர்களோ ? விபரீதமான காரியங்களுக்கு இரண்டு விஷயங்கள் அடிப்படை. கடந்த காலத்தில் அருவருக்கத் தக்க நடவடிக்கை. இரண்டாவது கொடூர மனம்.
& கேதன் அகர்வால் - சியால் கோயல் - சேத்தன் சௌத்ரி விவகாரம்தானே? புரியாத புதிர். இதுவரை கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கேதன் சொத்து & சியால் + சேத்தன் காதல்தான் motive என்று தோன்றுகிறது. சியாலின் பெற்றோர்கள் பணம் & அந்தஸ்து பார்த்ததால் நிகழ்ந்த விபரீதம். 'விதியின் கொடூரம் :(((' 😭
$ இதற்கான விவரங்களை இப்போது ஃபேஸ்புக்கில் காலச்சக்கரம் நரசிம்மா தொடராக எழுதி வருகிறார்.
3) இன்றைய பெண்கள் என்னதான் எதிர்பார்க்கின்றனர்?
# வசதியாக உல்லாசமாக இருக்க வேண்டும் என்றுதான்.
& அது அவர்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை என்று தோன்றுகிறது.
$ சொன்னால் திட்டுவீர்கள்! அடிக்க வருவீர்கள்!
4) எழுபதுகளில் பெண்கள் குடும்பம், குழந்தைகள், மாமியார், மாமனார், மைத்துனர்கள், நாத்தனார்கள் என அனைவரையும் பார்த்துக் கொண்டு சிலர் வேலைக்கும் போனார்கள். ஆனால் இன்றைய பெண்களோ ஒரு குழந்தையை வளர்ப்பதே சிரமம் எனச் சொல்லிக் கொண்டு இருப்பதோடு அதையும் சரியாக வளர்ப்பதில்லை. செல்லம் கொடுத்துக் கெடுத்து விடுகின்றனர். இதெல்லாம் கடைசியில் எதில் போய் முடியும்?
# எல்லாவற்றுக்கும் கூலிக்கு ஆள் வைத்துக் கொண்டு அதனால் வரக் கூடிய உபத்திரவங்களை எதிர் கொள்வதில் முடியும்.
$ பெண்களை மட்டும் சொல்கிறீர்களே... அவள் கணவனும் அப்படிதான் நினைக்கிறான்!
5) குறைந்து கொண்டே வரும் இந்துக்கள் எண்ணிக்கை இப்படிப்பட்ட பெண்களினால் விரைவில் 10 அல்லது 20 சதத்துக்கு வந்துடுமோனு நினைக்கிறேன். எதிர்காலம் நினைக்கவே பயமா இருக்கு. நான் என்னமோ இருந்து பார்க்கப் போவதில்லை என்றாலும் வருங்காலம் கொஞ்சம் கவலை தருவதாகத் தான் இருக்கு.
# தேவையற்ற சாத்தியக் கற்பனைக் கவலைகள் நமக்கு இயல்பு.
$ அதீத பயம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.
=====
படமும் பதமும் :
ஸ்ரீராம் :
இப்போதெல்லாம் KBS பேருந்துகள் இப்படிதான் கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பேஸ்புக்கில் பாரதியார் படத்தோடு இந்த கம்பெனியின் பஸ்படம் ஒன்றை ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது!
நெல்லைத்தமிழன் :
கேரளாவில் பாரம்பரிய வல்லம் களி எனப்படும் படகுகளையும் அதில் போட்டிக்காகச் செல்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். தாய்வானில் இப்படிப்பட்ட படகுப்போட்டியைப் பார்த்தேன். கேரள படகுகள் போலவே இவையும் சிறிய ஆனால் நீளமான படகுகள். இந்த மாதிரி படகுப் போட்டிகள் இளைஞர்களுக்கு பொழுது போக்கு மாத்திரம் அல்ல, உடல் வலிமையை அதிகப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. ஆமாம் போட்டியில் கலந்துகொள்ள வந்துள்ளவர்கள் எப்படி இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசையா? அடுத்த படத்தில் அதுதான்.
நல்லா கட்டுமஸ்தா இருக்காங்களா? நான் படகுப்போட்டிக்குத் தயாராக நின்றுகொண்டிருப்பவர்களைச் சொன்னேன். போட்டியும் நன்றாக இருந்தது. வெளிநாடுகளில் நான் பார்த்த விசேஷம், அங்கு பார்வையாளர்களிடம் ஒரு ஒழுங்கு இருந்தது. (குறிப்பா தாய்வான் போன்ற தேசங்களில்). அதுபோல வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள் கொஞ்சம்கூட பயமில்லாமல், ஒரு நட்பான தேசத்தில் பயணிப்பதை உணர முடியும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிக மிகக் குறைவு என்பது ஒன்றுதான் குறை.
எ பி கமெண்ட் :
மூஞ்சிய மட்டும் ஃபோட்டோ எடுத்துப் போட்டா கட்டுமஸ்து என்றோ ச ஃபி என்றோ எப்படி சொல்லமுடியும் என்று எழுத ஆரம்பித்து .. பிறகு silent ஆகிட்டோம்!
"கட்டுமஸ்தா நீயிருந்தா எங்களுக்கென்னம்மா.. கட்டிக்கொள்ளப் போறவன்தான் இஷ்டப்படுவானம்மா..." SPB குரலில் வரும் பாடல் வரிகள்!
======
KGG பக்கம் :
சரோஜாதேவி :



பதிவுத் தலைப்பே ஏடாகூடமாக இருக்கிறதே
பதிலளிநீக்குஷவர், குளிப்பது, சரோஜாதேவி
வாங்க நெல்லை.. பயணத்திலிருந்து திரும்பியாச்சா?
நீக்குஒரு வார பயணம். ஆறு மணி முருடீஸ்வர் கோயில். காலை 10000 ஸ்டெப்ஸ் முடிக்கணும் என்பதால் மூன்றரைக்கு எழுந்தேன்
நீக்குவருக வருக! வாழ்க வளமுடன்
நீக்குநாரு சிவேதிதா கதைத் தலைப்பு ஏதும் ஞாபகம் வந்துவிட்டதா!
நீக்குவீட்டில் ஷவர் இருந்தும் உபயோகிக்காததன் காரணம் இன்னும் நீங்கள் குனிந்து நீரை மொண்டுவிட்டுக் குளிக்கும் அளவு அல்லது உட்கார்ந்து குளித்து எழுந்துகொள்ளும் அளவு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான். அல்லது சுடு நீர் குளிர் நீர் குழாய் எது என்பது மறந்து சட்னு தலைல வெந்நீர் கொட்டிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை
பதிலளிநீக்குஅப்படி இல்லை. ஷவர் ஆசை சிறுவயதில் இருந்தது. இப்போதெல்லாம் குளிக்க உள்ளே செல்லும்போது அது நினைவிலேயே இருப்பதில்லை. அதைவிட பொறுமை இருக்காது என்றும் தோன்றுகிறது!
நீக்கு:)))
நீக்குகதை வெளியிட்ட உங்களுக்கே இப்படீன்னா எழுதியவர் எந்த நோக்கத்துல எழுதியிருப்பார்?
பதிலளிநீக்குஅவர் உலகத்தை உய்ய எழுதி இருப்பார். இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு செய்தி சொல்ல முயன்றிருக்கிறார்!
நீக்குஓ நேற்றைய கதையா.....நிச்சயமாக அதில் செய்தி இருக்கிறது....அதைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் குழப்பி....அவ்வளவுதான்.
நீக்குகீதா
நம்பித் தனிமா வீட்டுல விட்டுட்டுப் போகமுடியாது. இருந்தும் உங்களை விட்டு விட்டுச் சென்றதற்குக் காரணம் இதை சொல்லித் திருத்தமுடியாது என்பதாலா?
பதிலளிநீக்குஇருக்கலாம்!
நீக்குபாரதியார் வறுமையில் வாடினவர்தான். ஏதோ பாரதியார் மேல பா.வெ மேடத்துக்கு துக்களியூண்டு மரியாதை இருப்பதால் ஓமகுச்சி ரேஞ்சுக்குப் போகாம தனுஷோடு நிறுத்திக்கொண்டாரோ?
பதிலளிநீக்குஇப்போதைய பிராஸ்தடிக் மேக்கப் உலகில் எதுவும் சாத்தியம். நான் கூட பாரதியார் வேஷம் போடலாம்.
நீக்கு:)))
நீக்குஉள்ளாடைச் சிந்தனை ஸ்ரீராம் சொல்வது வித்தியாசம். பிராக்டிகல் சிந்தனை. பயணங்களில் என்னுடைய இரண்டு உடைகளுக்கு இடையில்தான் உள்ளாடையை உலர்த்துவேன். அடையாளம் நோட் பண்ணிக்கொள்வேன்.
பதிலளிநீக்குஎனக்கான எந்த உடையும் பிறர் வாங்கித்தருவது பிடிக்காது. நிறம் மாடல் பிடிக்காமல் எந்த உடையையும் அணிவதில்லை, என் செலெக்ஷன் பெண்ணுக்கு சுமார் என்று தோன்றினாலும்
வீட்டில் உலர்த்தும்போதே குழப்பம் வரும் என்றால் கல்யாணம் விசேஷம் பயணம் போன்றவற்றில் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்!
நீக்குபெண்களைப் பற்றி கீசா மேடம் கேள்வி ஆச்சர்யம். மனதில் ஆசை வந்துவிட்டால் அங்கு மூளை லாஜிக் வேலை செய்யாது. பிரியாணி கடைக்காரனுக்காக தன் இளம் குழந்தைகளைக் கொன்று காதலித்து மணந்த கணவனைக் கொல்ல முயன்ற ஆயுளுக்கும் சிறையில் உள்ள தமிழச்சிகளின் நாட்டில் இருந்துகொண்டு இந்த கேள்வியா?
பதிலளிநீக்குதப்பு. அதனால்தான் இந்தக் கேள்வி.
நீக்குபெண்ணே தோசை விரைப்பாக இருக்கக் காரணம் நிறைய எண்ணெய் விட்டு வார்ப்பாங்க. வெண்ணெயும். தாவெண்கரே bபெண்ணெ தோசை ரொம்ப ஃபேமஸ். அதில் எனக்கு ஆர்வமில்லை. கர்நாடக தொட்டுகைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்
பதிலளிநீக்குநான் வாங்கியது சென்னையில். அவர் கல்லில் தோசை வார்ப்பதையே பார்த்தேன். நித்ய அமிர்தம். Self Service.
நீக்குBபெண்ணே தோசை விரைப்பாக இருக்கும்போதே சாப்பிடாமல் என்ன போட்டோக்கள் எடுப்பது வேண்டியிருக்கு என்று கமென்ட் வரலையா?
பதிலளிநீக்குபோட்டோ எடுக்காமல் எதையும் சாப்பிட ஆரம்பித்தால்தான் ஆச்சரியப்படுவார்கள்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநேற்று காலையில் வெளியே செல்லும் ஒரு ப்ளான் வந்து விட்டது. (ஒரு முருகன் கோவிலுக்கு.) செவ்வாயன்று அருமையான குமரன் தரிசனம் கிடைத்தது. அதனால் நேற்றைய கதை பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். பிறகு படித்து விட்டு வருகிறேன். (நிறைய பதிவுகள் இப்படி படிக்க காத்திருக்கின்றன.) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதையைப் படித்து மீண்டு(ம்) வருக!!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஅவனருள் வேண்டுவோம்
நீக்குநலமே விளைக
பதிலளிநீக்குஅதே, அதே
நீக்குவீட்டிற்கு அருகில் பிள்ளையார் கோவில் அதற்கே வாரம் ஒருமுறை - தான் மார்கழி நாட்களில் செல்வது உண்டு. வழக்கத்தைக் கடைபிடிக்காததன் காரணம் மூட்டு வலி & விதி...
பதிலளிநீக்குதிங்கள் அன்று பௌர்ணமி. நாளில் மதியம் வரை தஞ்சபுரீஸ்வரர் மற்றும் கோடியம்மன் தரிசனம்...
ஆஹா. கடவுள் அருள் என்றென்றும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. நேற்றைய பதிவுக்கு நான் வர இயலாமல் போய் விட்டதை தெரிவித்து விட்டு கேள்வி பதில்களை படிக்கையில், அங்கும் காலை, மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்வதை பற்றியதான கேள்வி பதில்கள். அருமை.
நேற்று காலையில் நாங்கள் சென்ற கோவிலில் ஏராளமான கூட்டம். வரிசையில் சென்றுதான் தரிசனம் செய்ய முடிந்தது. .இங்கு மாலையிலும் சில கோவில்களுக்குச் செல்லும் போதும் நிறைய மக்கள் கூட்டங்கள் இருப்பதை பார்த்துள்ளேன்.
முன்பெல்லாம் கோவிலுக்குச் சென்று இறை தரிசனம் முடித்தவுடன் வெளிப் பிரகாரங்களை சுற்றுவதே ஒரு உடற்பயிற்சி என நினைத்திருந்தனர். (தெய்வ நம்பிக்கையுடன் புண்ணியமும் உடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை.) இப்போது ஆங்காங்கே பார்க்குகள் , உடற்பயிற்சி மையங்கள் என வந்து விட்டன. அங்கும் காலை, மாலை வேளைகளில் கூட்டமாக உள்ளது. மக்களுக்கு எது மனதில் நல்லதென படுகிறதோ அதைச் செய்வது வாடிக்கையாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கருத்துரை. நன்றி.
நீக்கு/இங்கேயும் பார்க்கும்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இப்படி கஞ்சி போட்ட காவல்காரர் சீருடை போல இது நிற்பதற்கு மாவில் என்ன கலந்திருப்பார்கள்?!//
பதிலளிநீக்குபழைய சாதம்
Jayakumar
:)))
நீக்குஜெ கே அண்ணா நம்ம ஊர்ல சாதம் சேர்த்து அரைபபங்க இங்கு அவல்! பழைய சாதம் ஆப்பத்துக்கு சரியா இருக்கும் தோசைக்குப் போட்டா அது சாஃப்டா ஆகிடுமே!!! மெத்து மெத்துனு!
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஷவர் குளியல் கெடுதலென்று சொல்கிறார்களே .? எதையும் கண்டு பிடித்து விட்டு, பிறகு அது கெடுதலென்று சொல்வதும் நம் வாடிக்கையாகி விட்டதோ.?
படமும் பதமும் நன்றாக உள்ளது. சகோதரர் நெல்லைத்தமிழர் அனுப்பிய படங்களும், அதற்கு எபி சொன்ன பதிலும் சிறப்பு. (எபி சொன்ன பதிலை மட்டுந்தான் ரசித்தேன்.:)) )
சகோதரர் ஸ்ரீராம் அனுப்பிய வெண்ணைய் தோசை படங்கள் நன்றாக உள்ளது.(உதாரணம் அருமை) இங்கு வந்த புதிதில் முன்பு எப்போதோ ஒரிரு தடவைகள் வாங்கி சாப்பிட்டுள்ளோம்.
"நின்று" நிமிர்ந்திருக்கும் அந்த தோசையை, ஆற "அமர" சாப்பிட்டால், கடைசி வரை சாப்பிட முடியாமல் போய் விடும். இப்போதெல்லாம் தோசைகள் மாவில் ஏதாவது கலக்காமல் சிறப்பாக வர முடிகிறதா என்ன.? தசைகளின் விலைகளும் சற்று வானுயற பறக்க ஆசைப்படுகின்றனவே. .!
தங்கள் பகுதியான கதை பகிர்வு நன்றாக போகிறது . ஏகப்பட்ட உத்தரவுகளை பாபா வுக்கு வாரி வழங்கியிருக்கிறார் நாநா. அத்தனையையும் அவர் முடித்து விட்டு நாநா வின் வீட்டுக்குப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்கு//முன் போல மக்கள் காலையில் அல்லது மாலையில் கோயிலுக்குப் போகும் வழக்கத்தை ஏன் கடைபிடிப்பதில்லை?//
மாயவரத்தில் வீட்டுக்கு முன் காமாட்சி அம்மன் கோயில் சிறியது இருந்தது தினம் காலை , மாலை போவேன்.
பிள்ளைகள் கணவர் எல்லாம் வணங்கி விட்டுதான் பள்ளி, கல்லூரி செல்வார்கள்.
அப்புறம் வீடு மாறியதும் நாலு திசையிலும் பிள்ளையார் கோயில் இருந்தது. இரண்டு பிள்ளையாரை காலையில் தரிசனம், முன்பு இருந்த வீட்டுப்பக்கம் இருந்த புனூகீஸ்வரர் கோயிலுக்கு போகும் போது மாலையில் மற்ற இரண்டு பிள்ளையாரை தரிசனம் செய்து வருவேன்.
புனூகீஸ்வரர் கோயிலில் உள்ள தோட்டத்திற்கு (நந்தவனத்திற்கு) தண்ணீர் ஊற்றி வருவேன். கொஞ்ச கொஞ்சமாக கால் வலி ஆரம்பித்தவுடன் மெள்ள மெள்ள குறைந்து அறவே நின்று போனது.
பின் மதுரை வந்த பின் அய்யனார் கோயிலுக்கு தினம் காலை போய் வந்தேன். அங்கு கீழே விழுந்தவுடன் அதுவும் இப்போது இல்லை.
குடியிருப்பு வளாகத்திற்கு பிள்ளையார் வந்த பின் காலை, மாலை போனேன். அதுவும் இப்போது இல்லை. சங்கடஹரசதுர்த்திக்கு மட்டும் கீழே போய் வணங்கி வருகிறேன்.
நீங்கள் வணங்கும் கடவுளர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகள்.
நீக்குநன்றி சார்.
நீக்குஎன் மேனி அழுக்கை போக்க உபயோகிப்பது ஹாண்ட் ஷவர். சோப் போட முடியாத இடங்களுக்கும் தண்ணீர் அடித்து கழுவலாம்.
பதிலளிநீக்குJayakumar
:)))
நீக்குநெல்லை, இப்ப டாப்ல் போற சானல்களே நீங்க சொல்லியிருக்கும் விஷயங்களைப் பேசும் சானல்கள்....கன்றாவி சேனல்கள் உருப்படாத சானல்கள் டைவர்சை விடுங்க....ஒருவரின் மரணத்தைக் கூட அசிங்கமாகப் போஸ்ட்மார்ட்டம் செய்யும் பண்பு கெட்ட ஊடகங்கள்....இவங்கல்லாம் தமிழ்கலாச்சாரங்களாம்....நம்ம மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப முக்கியம் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறார்கள் இளைஞர்கள்!! உருப்படியா செய்தா வாழ்க்கை எங்கோ போகும்...
பதிலளிநீக்குநாம விலகி இருப்பதுதான் நமக்கு நம் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்.
கீதா
பொதுவாகவே பெரும்பான்மையோருக்ககு மத்தவங்க விஷயத்துல எட்டிப் பார்க்கும் மனோபாவம் மக்களுக்கு உண்டே அதனால்தான் ...
நீக்குகீதா
$ - ஸ்ரீராம் என்று தெரிகிறது......பதில் சிரித்துவிட்டேன்....கூடவே கூச்ச சுபாவம்!!! இது க்ளூ!!!
பதிலளிநீக்குகீதா
:)))
நீக்கு//இங்கேயும் பார்க்கும்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இப்படி கஞ்சி போட்ட காவல்காரர் சீருடை போல இது நிற்பதற்கு மாவில் என்ன கலந்திருப்பார்கள்?!//
பதிலளிநீக்குஅதுதானே! என்ன கலந்து இருப்பார்கள்? சாப்பிட முடிந்ததா?
தோசை படம் அழகு.
தாய்வானில் இப்படிப்பட்ட படகுப்போட்டி படங்கள் நன்றாக இருக்கிறது.
தாய்வானில் படகுப்போட்டி படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு$ நேற்று கூட செய்தேன். பல அப்பாவிகளை ஒரு கதை வெளியிட்டு வதைத்திருக்கிறேன்! //
பதிலளிநீக்குஓகே ஸ்ரீராமேதான்!!!!
4 - பெரும்பாலும் நேரத்துக்குச் சாப்பிடும் வழக்கம். பிடித்தது இல்லைன்னு எதுவும் இல்லை எல்லாமே....ஆனால் மாற்றி மாற்றிதான் இருக்கும்...
கீதா
கருத்துரைக்கு நன்றி
நீக்கு5 - ஒரு வேளை எல்லோரும் கட-உள் என்பதற்குப் பக்குவப்பட்டுட்டாங்களோ!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
:))
நீக்குபானுக்காவின் முதல் கேள்விக்கு நானும் ஏ ஐ என்று நினைத்த போது $ ஸ்ரீராமும் அதேதான் சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குஆனா இந்த ஏ ஐ சில சமயம் தர்மசங்கடமான பக்க விளைவிகளையும் குடும்பத்திற்குள் கொண்டு வருகிறது!!!
கீதா
:))) அடுத்த வாரம் சரோஜாதேவி பகுதி 6 ல ஒரு வாயாடி ஏ ஐ வரும் படிங்க.
நீக்குஉள்ளாடைகள் பற்றிய கேள்விக்கு.....அணிவதற்கு சௌகரியமாக ஏற்றதாக இருக்க வேண்டும் பருத்தியில். அது ஒன்றுதான்.
பதிலளிநீக்குஸ்ரீராமின் பதில் எங்கள் வீட்டில் எனக்கு சான்ஸே இல்லை ஹாஹாஹா...ஆனால் ஆண்களுக்கு ஏற்படுட்டதுண்டு. ஆனால் இப்பலாம் சைஸ்....வேறு ப்ரான்ட் என்று ...
கீதா
//சுயசரிதம்' புத்தகத்தில் உள்ள அத்தியாயங்களில் - அத்தியாயம் 5, 18 மற்றும் 43 - மூன்று அத்தியாயங்களையும் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்து விடுவது நல்லது. அது சரோஜாதேவி மெமரி கார்ட் பற்றி நான் சொல்ல இருப்பதை புரிஞ்சிக்க உதவும். //
பதிலளிநீக்குமெமரி கார்டில் என்ன இருக்கும்?
நாநாவின் திட்டம் என்ன தெரிந்து கொள்ள அடுத்த வாரம் தொடர்கிறேன்.
தொடர்வதற்கு நன்றி.
நீக்குகன்னடர்கள் தங்கள் பிரதேசத்தின் ஒருகாலத்திய ஹீரோக்களின் படங்களை இப்போது தீவிரமாகப் போஸ்டர்களிலெல்லாம் போட்டுத்தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். முதல்வர் சிவகுமாரின் chamchaa -க்களின் போஸ்டர்களில், அரசியல் தலைகளோடு கன்னட ஹீரோ கெம்பெ கௌடா படங்களும் ஆங்காங்கே மின்னுகின்றன. ஆட்டோக்காரர்களைப்பற்றி கேட்கவேண்டாம்: என்றென்றும் கன்னட அசட்டு சினிமா ஹீரோக்கள் படங்கள், சிலைகள், ஊதுபத்திகள் தான்...(ஹீரோ வொர்ஷிப்பில் தமிளனும் குறைஞ்சவனில்லை என்பது தெரிந்ததே!)
பதிலளிநீக்கு:))) நீங்க டெல்லியில் இருப்பதால் தப்பித்தீர்கள்!
நீக்குடெல்லியில் இப்போது 40 டிகிரி. Feels like 53 , as reported in national dailies . நான் எப்படி அங்கே இருக்கமுடியும் இப்போ! செப்டம்பர், அக்டோபர் வரட்டும்.. பார்க்கலாம்...!
நீக்குஸ்ரீராம் அந்தப் பேருந்து படம் செம 3 டி எஃபெக்ட்!!!! ரொம்ப நல்லாருக்கு
பதிலளிநீக்குஸ்ரீராம் பென்னே தோசைன்னு இல்ல மற்ற தோசைகள் கூட இப்படித்தான் கஞ்சி போட்டது போலச் செய்கிறார்கள். தோசை கொஞ்சம் தடிமனாக இருக்கு. ஸோ மடித்தாலும் டக்குனு ஒடிந்துவிடாது சப்பாது. ரெண்டாவது, இங்கு தோசைக்குப் பச்சரிசி தோசா ரைஸ் என்று விற்கிறார்கள் பெரும்பாலும் ஐ ஆர் 8 பச்சை. அரிசி. அப்புறம் கொஞ்சம் வெந்தயம் சர்க்கரை சேர்க்கறாங்க இந்தக் கலர் வருவதற்கு...அப்புறம் கடலைப்பருப்பும், அவலும் சேர்க்கறாங்க.
அப்புறம் மெதுவா தீயில் வார்ப்பாங்க. ஒரு பக்கம் தான் வார்ப்பாங்க திருப்பிப் போட மாட்டாங்க. உங்களுக்குத் தோசை வர எவ்வளவு நேரமாச்சு!!!!?
நான் வீட்டிலும் செய்யறப்ப ரோஸ்ட் வேணும்னா மெதுவாக,,,,ஒரு பக்கம் மட்டும் வார்ப்பேன் மூடி போடு!
கீதா
நெல்லை படங்கள் பிரமாதம்...தாய்லாந்து கிட்டத்தட்ட நில அமைப்பும் கூட கேரளம் போலதானே இருக்கும்ல?!!
பதிலளிநீக்குகீதா
கௌ அண்ணா, கதை எங்கே எதைப் பற்றிப் போகிறதுனு யோசிக்கிறேன். கூடவே டெக்னாலஜி எல்லம் கலந்து கட்டி வருகிறது.
பதிலளிநீக்குகீதா
தில்லை அகம் இங்கு சைட் பாரில் அப்டேட் ஆகவே மாட்டேங்குது ஏனென்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஇன்று பதிவு போட்டிருக்கிறேன் விருப்பமுள்ளவங்க பார்க்கலாம்.
https://thillaiakathuchronicles.blogspot.com/2026/06/beemanagari-3-thiruvanparisaram.html.html
கீதா