நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 31
நாம் பிள்ளை உறங்காவல்லி தாசரைப் பற்றி வியாக்கியானங்களில் வேறு என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை அடுத்த வாரம் தொடர்வோம் என்று சென்ற வாரம் முடித்திருந்தேன். நம்பிள்ளையின் வியாக்கியானத்தில் கூறப்பட்டுள்ள அந்தச் சம்பவங்கள் தவிர தனியாக பிள்ளை உறங்காவில்லி தாசரின் வரலாறு கிடையாது. அதனால் அத்தகைய குறிப்புகளைக் கொண்டு, பிள்ளை உறங்காவில்லி தாசர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் ஒருவாறு அனுமானிக்க இயலும்.
திருவிருத்தத்தில் 99ம் பாசுரத்திற்கான வியாக்கியானத்தில் நம்பிள்ளை, பல்வேறு நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் ஒன்றாக கூரத்தாழ்வான் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார்.
கூரத்தாழ்வான் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு விளக்கம் அருளிச் செய்யும்போது, பிள்ளை உறக்காவில்லி தாசர், அப்பாசுரங்களில் மிகவும் மனம் ஒன்றி எம்பெருமானின் எல்லா இடங்களிலும் இருக்கும் தன்மை பற்றியும் எளிமை பற்றியும் பலவற்றைப் பேசி, கண்ணீர் உகுப்பாராம். அதைக் கண்டு, கூரத்தாழ்வான், சாஸ்திரங்கள் பலவற்றைப் பற்றிப் படித்து, அவற்றை நன்றாக விளக்கி மனதில் தரித்து நிற்கச் செய்யவல்ல எங்களைப் போல அல்லாமல், எம்பெருமானின் குணங்களைப் பற்றிக் கேட்ட உடனேயே நெஞ்சம் உருகி கண்ணீர் மல்கும்படிப் பிறந்திருக்கும் உங்கள் பிறவியே மேன்மையானது என்று சொல்வாராம்.
இதனை எழுதும்போது கூரத்தாழ்வான் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது (இன்னும் கூரத்தாழ்வான் வாழ்க்கையைத் தொடரவில்லை, இராமானுஜரைச் சேர்ந்த பிறகு). கூரத்தாழ்வான் காட்டுமன்னார் கோயிலில் (அப்போது வீரநாராயணபுரம்) பெரிய திருமொழி திவ்யப் பிரபந்தத்தைச் சிலருக்கு சந்தை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய மடியில் அவரது மகள் உட்கார்ந்துகொண்டிருந்தாள் (அல்லது அருகில். இந்த ஒரு இடத்தில்தான் கூரத்தாழ்வானின் பெண் பிள்ளை பற்றி வருகிறது. கூரத்தாழ்வானுக்கு பெண் குழந்தை இருந்ததாக எங்கேயும் சொல்லப்படவில்லை) அப்போது மூன்றாம் பத்து ஏழாம் பதிகத்தில் முதல் பாசுரம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் பதிகம், நல்ல துணைவனான திருமாலும், அவனுடன் சென்ற தன் மகளும் திருவாலியைச் சென்று சேர்ந்திருப்பார்களோ என தாய் புலம்புவது போன்ற பாசுரங்களைக் கொண்டது. (இதற்கு அர்த்தம், தன் மகளைக் காணவில்லையே, அந்தத் திருமால் தன் மகளைக் கொண்டு சென்றிருப்பானோ என்று நினைப்பது). அந்தப் பாசுரத்தைப் பார்த்துவிடலாமா?
##கள்வன்கொல் யான்அறியேன்* கரியான்ஒரு காளைவந்து*
வள்ளிமருங்குல் எந்தன் *மடமானினைப் போதவென்று*
வெள்ளி வளைக் கைப்பற்றப்* பெற்ற தாயரை விட்டகன்று*
அள்ளல் அம் பூங்கழனி* அணியாலி புகுவர்கொலோ!
பொருள்: அவன் ஒரு திருடனா என்பது எனக்குத் தெரியவில்லை. கரிய நிறத்தில் ஒரு காளை போன்ற இளைஞன் இங்கு வந்து, கொடி போன்ற மெல்லிய இடையை உடைய, மருட்சி மிக்க மானைப் போன்ற, வெள்ளி போன்ற பிரகாசமான வளையல்களை கைகளில் அணிந்திருக்கின்ற என் மகளுடைய கைகளைப் பற்றிக்கொள்ள, தன்னை வளர்த்த தாயை விட்டுப் பிரிந்து, வளமான, அழகிய மலர்கள் நிறைந்த வயல்களைக் கொண்ட திருவாலி திவ்யதேசத்துக்குச் சென்றிருப்பாளோ என்று வருத்தமுடன் புலம்புவதான பாசுரம் இது.
விளக்கம்: கள்வன் கொல்? – திருடனாக இருப்பானோ? ஆழ்வார், எம்பெருமான் தன் அடியார்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதால், திருடனாக உருவகப்படுத்துகிறார். கரியான் - கரிய நிறமுடையவன், வள்ளி-கொடி, மருங்குல்-பெண்களின் இடை, வெள்ளி வளை – வெண்மையான வளையல்கள், அள்ளல் – சேறு. இங்கு வளப்பமான வயலைக் குறிக்கிறது. அம் – அழகிய, பூங்கழனி – மலர்கள் நிறைந்த வயல்கள்
இந்தப் பாசுரத்தை கூரத்தாழ்வான் சொல்லிக்கொண்டிருந்தபோது, அந்தப் பெண் பிள்ளையின் கணவன் அங்கே வந்து அவளை அழைத்துச் சென்றுவிட்டான். அதை, நாயகியை அந்த எம்பெருமான் அழைத்துச் செல்வதாகவே நினைத்த கூரத்தாழ்வான், மேலே சந்தை சொல்வதைத் தொடர முடியாமல் மயங்கி விழுந்துவிட்டார். பாசுரங்களின் பொருள் மீது அப்படிப்பட்ட தீராக் காதல் கொண்டிருந்த அத்தகைய கூரத்தாழ்வானே புகழும்படியான பக்தி கொண்டிருந்தவர் பிள்ளை உறங்காவில்லி தாசர்.
நம்பிள்ளையின் வியாக்கியானத்தில் திருவாய்மொழி பாசுரம் 4ம் பத்து, 6ம் திருவாய்மொழியில் 6வது பாசுரத்திற்கு வியாக்யானம் எழுதும்போது, ஒரு ஐதிஹ்யம் எடுத்துக்காட்டப்படுகிறது.
முதலில் அந்தப் பாசுரம் என்ன என்று பார்த்துவிடுவோம். (6ம் திருவாய்மொழி, தீர்ப்பாரை யாம் இனி என்று தொடங்கும்)
தணியும் பொழுதில்லை* நீரணங்காடுதிர் அன்னைமீர்,*
பிணியும் ஒழிகின்றது இல்லை* பெருகும் இதுவல்லால்,*
மணியின் அணிநிற மாயன்* தமரடி நீறுகொண்டு,*
அணிய முயலின்* மற்றில்லைகண்டீர் இவ்வணங்குக்கே.
இறைவனின் பிரிவால் நாயகி நிலைகுலைந்து போயிருக்கிறாள். அவளது உடல் மற்றும் மன மாற்றங்களைக் கண்டு அஞ்சிய அவளது தாய், இது ஏதோ தெய்வக் குற்றமோ இல்லை பேய் பிடித்திருக்கிறதோ என்று நினைத்து, ‘வெறியாட்டு’ போன்ற சடங்குகளைச் செய்து அந்தப் பிணியைத் தீர்க்க முயல்கிறாள். (இந்த மாதிரி பாசுரங்கள் ஆழ்வார் தன்னை நாயகியாகவும், இறைவனை தலைவனாகவும் நினைத்துக்கொண்டு பாடும் பாடல்கள்)
பொருள்: அன்னைமார்களே… இந்தப் பெண்ணின் நோய், நீங்கள் செய்யும் இந்தச் சடங்குகளால் தணியப்போவதில்லை. இவளது நோயும் இவளை விட்டு நீங்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் செய்யும் இந்த வீண் சடங்குகளால் அதிகரிக்கவே செய்யும். நீலமணி ஓன்ற அழகான நிறத்தை உடைய அந்த மாயக் கண்ணனின் அடியார்களின் பாத தூசியை எடுத்து இந்தப் பெண்ணின் நெற்றியில் இட்டு இந்த நோயைக் குணப்படுத்த முயலுங்கள். இவளது நோய் தீர பெருமாள் அடியார்களுடைய பாததூளிகளைத் தவிர வேறு எந்த மருந்தும் இல்லை.
விளக்கம்: மாயன் தமர்-மாயக் கண்ணனின் அடியார்கள், அடி நீறு கொண்டு – அவர்களின் பாதங்களில் இருக்கும் தூசியைக் கொண்டு, அணங்கு- பெண்
எம்பெருமானை அடைவதற்கு வேறு எந்தச் சடங்குகளாலும் பயன் இல்லை. அதற்குப் பதிலாக அவனது அடியார்களின் திருவடிகளைப் பணியவேண்டும் என்பது உட்பொருள்.
இந்தப் பாசுரத்தின் விளக்கத்தில், பெரியவாச்சான் பிள்ளை ஒரு ஐதிஹ்யம் குறிப்பிடுகிறார். பிள்ளை உறங்காவில்லிதாசரின் மருமகன்கள் வண்டர், சொண்டர் என்று முன்பே பார்த்தோம். முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகன் அகளங்கன் சோழ அரசனாக இருந்தபோது, வண்டரும் செண்டரும் அவனுடன் சென்றுகொண்டிருந்தனர். வழியில் ஒரு ஜைன ஆலயத்தையும் அதன் மீது வைக்கப்பட்டிருந்த சிங்கத்தின் சிலையையும் கண்ட அகளங்கன், பெருமாள் திருக்கோயில்களிலும் அத்தகைய சிலைகள் வைப்பது வழக்கம் உண்டு என்பதால், வேடிக்கை செய்ய, அவர்கள் இருவரையும் பார்த்து, இது பெருமாள் கோயில், அதனால் வணங்குங்கள் என்று சொல்ல, வைணவர்களான அவ் இருவரும் அதனை உண்மை என்று எண்ணி அந்த ஆலயத்தை வணங்கினார்கள். பிறகுதான் அவர்களுக்கு அது ஜைன ஆலயம் என்று தெரிந்தது. அதனால் அதிர்ச்சியுற்ற அவ் இருவரும் மயங்கி விழுந்தனர். இதை அறிந்த பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் பாதம் பட்ட மண்ணை எடுத்து அவர்கள் நெற்றியில் இட, அவர்கள் இருவரும் உணர்வு பெற்றார்கள் என்று எழுதியிருக்கிறார்.
வைணவர்களான அவ் இருவரும், ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை வழிபட்டுவிட்டோமே, தவறு செய்துவிட்டோமே என்று எண்ணி மயங்கினார்கள் என்று அர்த்தம். இதன் மூலம் தவறுதலாக அந்நிய தெய்வங்களை வணங்கிவிட்டால் அதற்குப் பரிகாரமாக வைணவர்களின் திருவடியை வணங்கினாலே போதும் என்பதை பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளி உறங்காவில்லி தாசர் வரலாற்று நிகழ்வு மூலமாகக் குறிப்பிடுகிறார்.
திருவாய்மொழி, 1ம் பத்து, ஐந்தாம் திருவாய்மொழியில் (வளவேழ் உலகின் முதலாய என்று தொடங்கும் திருவாய்மொழி) 11ம் பாசுரத்தின் விளக்கத்தில் நம்பிள்ளை, பிள்ளை உறங்காவில்லி தாசரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். முதலில் அது என்ன பாசுரம் என்று பார்த்துவிடுவோம்.
##'மாலே! மாயப் பெருமானே!* மா மாயனே!' என்றென்று*
மாலே ஏறி மாலருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பாலேய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்*
பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க்கு* இல்லை பரிவதே
பொருள்: திருமாலே… வியக்கத்தக்க குணங்களை உடையவனே, பெரிய அற்புதங்களைச் செய்தவனே என்று எம்பெருமானின் பலப் பல திருப்பெயர்களைச் சொல்லித் துதித்துக்கொண்டு, இறைவன் மீது எல்லையற்ற அன்பும் பக்தியும் பெருகி அதிலேயே ஆழ்ந்துபோய், அந்த எம்பெருமானின் திருவருள் காரணமாகவே நிலையான ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த, பால் போன்ற தூய தமிழ்ப் புலவர்களும், இசையோடு பாடுபவர்களும், பக்தர்களும் போற்றிப் பாடுகின்ற ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாசுரங்களை முறையாகக் கற்றுப் பாடவல்லவர்களுக்கு, ‘எம்பெருமானைப் பிரிந்துவிட்டோமே’ என்ற கவலை ஒரு போதும் இல்லை.
விளக்கம்: பாலேய் தமிழர்-பாலின் சுவை போன்ற தமிழில் வல்லவர்கள், இசைகாரர்-ஒரு பாடலை இசைகூட்டிப் பாடும் திறமை பெற்றவர்கள், பத்தர் பரவும்-எம்பெருமானின் பக்தர்களால் தினமும் சொல்லப்பட்டு அவனின் பெருமையைப் பரப்புபவர்கள், பரிவது-துன்பம், அச்சம், கவலை போன்றவை. ஆழ்வாரின் பாசுரங்கள் வெறும் தமிழ் கவிதைகள் மாத்திரம் அல்ல, அவை இசைகளுடன் கூடியதும், பக்தர்கள் அதன் பொருளை உணர்ந்து பக்தியோடு ஓதக்கூடியவைகள் என்பது பொருள்.
நம்பிள்ளை தன் வியாக்கியானத்தில், கூரத்தாழ்வார், பாலேய் தமிழர் என்பதற்கு தமிழில் மிக வல்லமை பெற்ற ஸ்ரீ பராங்குச நம்பி போல்வார் என்றும், இசைகாரர் என்பதற்கு எம்பெருமானது திரு முன்பு ஆழ்வார் இயற்றிய பிரபந்தங்களை இசையுடன் பாடும் திருவரங்கப் பெருமாள் அரையர் போல்வார் என்றும், எம்பெருமானுக்கு ஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மிகவும் பரிவோடு இருக்கும் பிள்ளை உறங்காவில்லி தாசரைப் போல்வாரை பத்தர் என்றும் சொல்வார் என்று சொல்லியிருக்கிறார்.
குருபரம்பரையை எத்தனை முறை படித்தாலும் பெயர்களில் குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாது. இராமானுஜரின் சித்தி பையன் கோவிந்த பட்டர். அவரை உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்பர். பிற்பாடு அவர் வைணவ மதத்திற்கு வந்த பிறகு அவருடைய குணநலத்தால் அவருடைய அடியார்கள் அவரை ‘எம்பெருமானார்’ என்றே அழைத்தனர். இராமானுஜர் இருக்கும்போது அந்தப் பெயர் கூடாது என்பதற்காக ‘எம்பார்’ என்று அழைக்கப்பட்டார். இவரே இராமானுஜருக்குப் பிறகு வைணவ தரிசனப் பிரவர்த்தகர். இவருடைய தம்பி சிறிய கோவிந்தப் பெருமாள். சிறிய கோவிந்தப் பெருமாளுக்குத் திருமணம் ஆகி அவருக்குப் பிறந்த பையனுக்கு இராமானுஜர், ‘பராங்குச நம்பி’ என்று பெயர் வைத்தார். பராங்குச நம்பி தமிழில் பெரும் புலமை பெற்றவர். அவரைத்தான் ‘பாலேய் தமிழர்’ என்று கூரத்தாழ்வான் குறிப்பிடுகிறார்.
இதே பாசுரத்திற்கு, ஆளவந்தார் பொருளுரைக்கும்போது, முதன் முதலில் தமிழில் அழகிய பாசுரங்களை அருளிச் செய்த முதலாழ்வார்களான, பொய்கையார், பூதத்தார், பேயாரை ‘பாலேய் தமிழர்’ என்றும், தன் சேர வீணையை மீட்டி இனிய இசையாலே எம்பெருமானைப் பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரை ‘இசைகாரர்’ என்றும், எம்பெருமானுக்கு யாரால் என்ன தீங்குநேரிட்டுவிடுமோ என்ற அச்சத்தில், பொங்கும் பரிவுடன் பெருமாளுக்கு ‘திருப்பல்லாண்டு’ பாடிய பெரியாழ்வாரை ‘பத்தர்’ என்றும் குறிப்பிடுவாராம்.aa
பெரியாழ்வார் திருப்பாணாழ்வார்
பெரியாழ்வாரின் திருவரசு, கள்ளழகர் கோயிலின் (திருமாலிருஞ்சோலை) அருகில் அமைந்துள்ளது.
பிள்ளை உறங்காவில்லி தாசரைப் பற்றிய செய்திகள் இன்னும் முடியவில்லை. அடுத்த வாரம் தொடர்வோம்...
===============================================================================
நான் (JKC) படிச்ச கதை - கதை முழுதும் கற்பனையே.
தாமஸநாசினி
தெலுங்கு கதையாசிரியர்: எண்டமூரி வீரேந்திரநாத், மொழி பெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
முன்னுரை
சில ஆண்டுகளுக்கு முன் பாக்கெட் நாவல் என்ற மலிவு விலை புத்தகங்கள்
சந்தையில் சக்கை போடு போட்டன.. சினிமா எப்படி பாட்டு, டான்ஸ், பைட் என்று நிஜம்
அல்லாத அம்சங்களுடன் ஒரு நிஜக் கதையைச் சொல்கின்றதோ, அது போன்று திகில், அமானுஷம்,
கவர்ச்சி வர்ணனைகள் என்று கலந்து எழுதப்பட்ட
நிஜப்புனைவுகள் இந்நாவல்கள்.
தெலுங்கில் எண்டமூரி விரேந்திரநாத், தமிழில் ராஜேஷ் குமார், ஜாவர்,
மலையாளத்தில் கோட்டயம் புஷ்பநாத் ஆகியோர் இம்மாதிரி புனைவு புதினங்கள்
எழுதுபவர்களில் பிரபலம்.
விரேந்திரநாத்தின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு குமுதம்
பத்திரிக்கையில் தொடர் கதைகளாக வெளி வந்திருக்கின்றன.. அவ்வாறு தான் நான் குமுதம்
வாயிலாக விரேந்திரநாத் பற்றி அறிந்து கொண்டேன்.
sirukathaigal.com இல் தேடியபோது, தமிழில் கௌரி கிருபானந்தன் என்பவர் மொழி பெயர்த்து
பதிப்பித்த இவருடைய ஒரு தொடர் கதை, இரண்டு சிறுகதைகள் கிடைத்தன. அவற்றில்
ஒரு சிறுகதை தான் ‘தாமஸநாசினி’.
எண்டமூரி விரேந்திரநாத் எழுத்தாளர், சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்,
சினிமா டைரக்டர், TV மெகா தொடர்கள் தயாரிப்பு இயக்குனர் என்று பன்முகம் கொண்டவர்.
கௌரி கிருபானந்தன் (பிறப்பு: செப்டம்பர் 2,
1956) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து தெலுங்கிற்கும்
தெலுங்கிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு
எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் எழுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத்
தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது
பெற்றவர்.
தெலுங்குத் திரைப்படங்களுக்கு தமிழில் 'சப்
டைட்டில்' அளிக்கும் பணியையும் செய்து வருகிறார்.
கணவர் கிருபானந்தன் இலக்கிய ஆர்வலர்,
எழுத்தாளர். நண்பர் சுந்தர்ராஜனுடன் இணைந்து 'குவிகம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி
வருகிறார்.
தாமஸநாசினி என்ற சமஸ்க்ரித தலைப்பின் பொருள் மனிதனின் மூன்று
குணங்களில் ஒன்றான தமஸ் குணத்தை அடக்குவது என்று நினைத்தேன். ‘தமஸோ மா ஜ்யோதிர்
கமயா’
சரி கதையைப்பார்ப்போம். புகுமுன், ஒரு முழம் பூ
எடுத்துக்கொள்ளுங்கள்; அவ்வை சண்முகியில் செல்லப்பா (டெல்லி கணேஷ்) செய்வாரே அது
போல் காதில் சுற்றிக் கொள்ளுங்கள். மெல்ல எட்டிப் பாருங்கள் இந்த
சுடுகாட்டுக்குள்.
தாமஸநாசினி
“அனுபந்தம் க்ஷ்யம் ஹிம்ஸா மனபேக்ஷ்யச பௌருஷம்.”
என் உடல் நடங்கியது. தொலைவில் எங்கிருந்தோ மைக்கில் அந்த சுலோகம் ஒலித்துக்
கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டிவிட்டது. சுலோகத்தைக் கேட்டு உடல் நடுங்குவதாவது
என்று உங்களுக்கு சந்தேகம் வரக் கூடும். நான் இருந்த நிலைமை அப்படிப்பட்டது.
வெட்டியானுக்கு பணம் கொடுத்து ஏதோ ஒரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பிவிட்டு
நள்ளிரவு இரண்டு மணிக்கு சுடுகாட்டில் பிணத்தைத் தோண்டி வெளியே எடுக்கும்
முயற்சியில் நான் ஈடுப்பட்டிருக்கும் போது, “தான் செய்யும் காரியங்களுக்கு
பின்னால் ஏற்படும் சுகதுக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் செய்யப்படும்
காரியங்கள்தான் தாமஸ கர்மாக்கள்” என்ற பொருள் அடங்கிய சுலோகம் ஒலித்த போது என்
உடல் நடுங்கியதில் வியப்பு எதுவும் இல்லை. நள்ளிரவில் நான் எதற்காக பிணத்தைத்
தோண்டி எடுக்கிறேன் என்று தெரிந்து கொள்ளணும் என்றால் என் கடந்த காலத்தைப் பற்றி
உங்களுக்குத் தெரியவேண்டும்.
“இடிந்து போன பாலத்தின் கட்டுமான பணியில் உங்களுடைய பிரமேயமும் இருக்கிறது
என்ற சந்தேகத்தின் காரணமாக உங்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்கிறோம்.”
ஆபீசிலிருந்து வந்த கடிதத்தைப் பார்த்த போது எனக்குச் சிரிப்புதான் வந்தது.
இந்த நாடகமெல்லாம் வெறும் கண்துடைப்பு என்றும், எதிர்க்கட்சிக்காரர்களின் கோபத்தை
தணிப்பதற்காக செய்யும் முயற்சி என்றும் எனக்குத் தெரியும். இந்த விஷயத்தை எங்கள்
கூட்டாளியான அமைச்சரே சுயமாக தெரிவித்தார்.
பாலம் இடிந்து போன விபத்தில் நூறுபேர் வரையிலும் இறந்து போயிருக்கிறார்கள்.
அதில் தொண்ணூறு பேர் கட்டட தொழிலாளிகள். பாதி கட்டும் போதே பாலம் இடிந்து
போய்விட்டது. அதுவும் ஒரு விதத்தில் அதிர்ஷ்டம்தான். முழுவதுமாக கட்டி முடித்த
பிறகு இந்த விபத்து நடந்திருந்தால் இன்னும் அதிகமாக மக்கள் உயிரை
இழந்திருப்பார்கள். கட்டடம் சுமார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால்
இவ்வளவு சீக்கிரமாக, பாதி கட்டும் போதே இடிந்து போய்விடும் என்று மட்டும்
எதிர்பார்க்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் நாங்கள் எல்லோரும் பணி நீக்கம் செய்யப்
பட்டோம். ஆனால் எல்லோரையும் விட முக்கியமானவர், ஏறக்குறைய கோடி ரூபாய் வரையிலும்
சுருட்டிக் கொண்ட அமைச்சர் மட்டும் எப்போதும் போல் இருந்தார். பாலம் இடிந்து போன
விபத்தில் உங்களுக்கும் பங்கு இருப்பதால் உங்களை பாராளுமன்றத்திலிருந்தும்,
அரசியலிலிருந்தும் சஸ்பென்ட் செய்கிறோம் என்று யாரும் அமைச்சருக்கு ஆர்டர்
கொடுக்கப் போவதில்லை.
அதான் அவர் தைரியமாக நடமாடிக் கொண்டிருந்தார். எங்களுக்கு தைரியம்
சொன்னதோடு ஆறுமாதங்களில் நிலைமை சரியாகிவிடும் என்று உறுதிமொழியும் தந்தார்.
அவருக்கு கோடி என்றால் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து ஐம்பது லட்சங்கள். அதில்
என்னுடைய பங்கு ஐந்து லட்சம்.
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு நான் ஒன்றும் வருத்தப்படவில்லை..
சொல்லப் போனால் நானே ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொள்வதாக இருந்தேன், பிசினெஸ்
விஷயங்களைப் பார்த்துக் கொள்வதற்காக. சொல்ல மறந்துவிட்டேன். சீ·ப் இன்ஜினியராக
வேலை பார்த்து வந்தாலும் எனக்கு மேலும் சில வியாபாரங்கள் இருந்தன. லாட்டரி கமிஷன்
வியாபாரமும் இருந்தது. அதில் நல்ல வருமானம் இருக்கும் என்ற விஷயம்
பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
ஆபீஸ் போக வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டதால் ஒருநாள் சாவகாசமாக
உட்கார்ந்துகொண்டு என் சொத்து முழுவதும் இவ்வளவு இருக்கிறது என்று கணக்குப்
பார்த்தேன். ஒரு மணி நேரம் பிடித்தது. மகளுக்கு வரதட்சிணையாக கொடுத்த இருபது
லட்சங்களையும் செர்த்துக் கொண்டால் இரண்டரை கோடி என்று தெரிந்தது. இது சம்பளம்
இல்லை. மேல் வரும்படி மட்டும்தான். வியாபாரத்தின் மூலமாக வந்த வருமானம் மேலும் ஒரு
கோடியாவது இருக்கும். இறந்து போன என் மனைவியின் நகைகளின் மதிப்பு ஐம்பது லட்சம்
வரையிலும் இருக்கும். அவளுக்கு நகைகள் மீது மோகம் அதிகம். அவள் இறந்து போனபிறகு
அந்த நகைகளின் மீது மருமகளுக்கு ஒரு கண் இருப்பது எனக்குத் தெரியும். இந்த விஷயமாக
அமெரிக்காவில் இருக்கும் என் மகளுக்கும் இந்தியாவில் இருக்கும் மருமகளுக்கும்
நடுவில் ஒரு மௌனப் போர் நடந்து கொண்டிருந்தது. ஆயில் விஷயத்தில்
அமெரிக்காவுக்கும், இராக் நாட்டுக்கும் நடுவில் போர் நடக்கவில்லையா? அது போலத்தான்.
சாதாரணமாக மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆகாது என்று சொல்லுவார்கள். ஆனால்
என் மனைவியும் மருமகளும் வெளிப்பார்வைக்கு ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள்.
உள்ளுக்குள் தனிப்பட்ட முறையில் திட்டங்களைத் தீட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஆனால் என் மனைவிக்கு கேன்சர் நோய் வந்த பிறகு என் மருமகள் போர் புரிவதை
நிறுத்திவிட்டாள். ரஷ்யா பலவீனமடைந்து விட்டதென்று தெரிந்த பிறகு அமெரிக்கா நட்பு
கரத்தை நீட்டியது போல். அந்த இருவரும் என் தாயை எதிரியாக நினைத்தார்கள்.
வயோதிகத்தில் இருக்கும் என் தாய்க்கும், கேன்சர் நோயாளியான என் மனைவிக்கும்
தன்னால் பணிவிடை செய்ய முடியவில்லை என்று என் மருமகள் புகார் செய்தாள். அவளுடைய
வாதம் எனக்கும் சரியென்று பட்டது. இரவில் தாயின் ஓயாத இருமல் சத்தம் … அவளுக்கு
பணிவிடை செய்ய அடிக்கடி சேவை இல்லத்திலிருந்து தாதிகளை வரவழைப்பது …. இதெல்லாம்
எரிச்சலாக இருந்தது. அதே செலவில் என் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன்.
இப்பொழுது மயானத்தில் நான் தோண்டுவது அந்த தாயின் பிணத்தை வெளியில் எடுப்பதற்காகத்தான்.
மருமகன் போன் செய்தான். அமெரிகாவில் ஏதோ வியாபாரம் தொடங்கப்
போகிறானாம். ஐம்பது வட்சம் முதலீடு செய்தால் அடுத்த வருடமே மும்மடங்காக திரும்பக்
கிடைத்துவிடுமாம். அனுப்புவதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நான்
சம்பாதிப்பது குழந்தைகளுக்காகத்தானே.
ஆனால் இதில் ஒரு சின்ன பிரச்னை இருந்தது. என் சொத்து முழுவதும் என்
குழந்தைகளுக்குத்தான் என்றாலும் மருமகனுக்கு அத்தனை பணம் அனுப்புவதில் என்
மகனுக்கு விருப்பம் இல்லை. அவனுக்குத் தெரியாமல் அனுப்ப வேண்டும். எப்படி
அனுப்புவது?
என் பிரச்னைக்குக் கடவுளே ஒரு வழி காண்பித்தார். சில நாட்களுக்கு
முன்புதான் லாட்டரியில் கோடி ரூபாய் சரி விழுந்ததாக தகவல் தெரிந்தது. எனக்கு
லாட்டரி ஏஜென்ஸி இருப்பது உங்களுக்குத்தான் தெரியுமே. விற்றுப் போகாத
டிக்கெட்டுகள் இருந்தால் அப்படியே விட்டு வைப்பது என் வழக்கம். அப்படி தங்கிவிட்ட
டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அந்தச் செய்தியை பேப்பரில்
பார்த்த போது மகிழ்ச்சியில் என் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டாற்போல் இருந்தது.
கோ….டி…ரூ …..பா…ய்…ப …ரி..சு!
உடனே அந்த டிக்கெட்டுக்காக தேடினேன். கிடைக்கவில்லை. என்னுள்
பதட்டம் அதிகரித்தது. நெற்றி முழுவதும் வியர்வை அரும்பியது. அப்பொழுதுதான்
நினைவுக்கு வந்தது, அந்த லாட்டரி சீட்டு என் தாயிடம் இருக்கிறதென்று.
முதியோர் இல்லத்தில் இருந்த என் தாயை குசலம் விசாரித்து விட்டு
வருவதற்காக போன போது அன்றுதான் அவளுடைய பிறந்தநாள் என்று தெரிந்தது. பரிசாக என்ன
கொடுப்பது என்று புரியாமல் கைவசம் இருந்த மீந்துபோன லாட்டரி டிக்கெட்டுகளை
கொடுத்தேன். சமயத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட என் மூளையை நானே மெச்சிக்
கொண்டேன். அம்மா முறுவலித்தாள். தன்னுடைய பிறந்தநாளை மகன் மறந்துபோனதற்காகவோ
அல்லது பூக்களுக்கு பதில் மீந்து போன லாட்டரி சீட்டுகளைத் தந்து பெற்றக் கடனை
தீர்த்துக் கொண்டதற்காகவோ.
எதுவாக இருந்தால் என்ன? அந்த டிக்கெட்டுகளில் ஒரு
டிக்கெட்டிற்குதான் பரிசு கிடைத்திருக்கிறது. பிணத்தைப் புதைக்கும் போது அந்த
நபருக்கு பிடித்த உடைகளுடன், விருப்பமான ஓரிரண்டு பொருட்களுடன் புடைப்பது
எங்களுடைய வழக்கம். இப்பொழுதுதான் நான் பிணத்தைத் தோண்டுவது அந்த உடையில்
இருக்கும் லாட்டரி சீட்டுகளுக்காகத்தான்.
பிணத்தைத் தோண்டியெடுப்பது என்ற முடிவுக்கு வருவதற்கு நான் ரொம்ப
யோசிக்க வேண்டியிருந்தது. இதற்கு ரொம்ப தைரியம் தேவை. நள்ளிரவில் மயானத்தில்
தோண்டுவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. அதிலும் யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக
செய்ய வேண்டும். கூலி ஆடகளை வைத்து, பட்டப் பகலில் வெளிப்படையாக செய்ய
வைக்கலாம்தான். ஆனால் விஷயம் தெரிந்தால் எல்லோரும் முகத்திற்கு நேராகவே
ஏசுவார்கள். “இந்த நிலை எங்களுக்கு வந்தால் பத்துக்கோடி பரிசு விழுந்தாலும்
நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யமாட்டோம்” என்று வசனம் பேசுவார்கள். ஆனால் உண்மை
என்னவென்று அவரவர் மனச்சாட்சிக்குத்தான் தெரியும். இந்தப் பிரச்னைகள் எல்லாம்
எதுக்கு என்றுதான் நானே தோண்டுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
தோண்டும் போது தூசி கிளம்பியதில் இருமல் வந்தது. சமீபத்தில்
அடிக்கடி இருமல் வந்து கொண்டிருந்தது. “டி.பி.யாக இருக்குமோ?” என்று மருமகள்
மகனிடம் சந்தேகத்தை வெளியிட்டது ஒரு நள்ளிரவு நேரத்தில் என் காதில் விழுந்தது.
அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். முன் ஜாக்கிரைதையுடன் இருப்பதில் தவறு
இல்லையே?
என் மகளுக்கும் இந்தச் செய்தி தெரிந்தவிட்டது போலும். உடம்பை
கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி கரிசனத்துடன் கடிதம் எழுதினாள். மாப்பிள்ளை
மட்டும் அமெரிக்காவில் எவ்வளவு முன்னேற்பாடாக உயில் எழுதி வைப்பார்களோ, அப்படி
வைக்காததால் அம்பானி குடும்பத்தினர் எப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்கிறார்களோ
உதாரணம் காட்டி கடிதம் எழுதி என் கடமையை மறைமுகமாக நினைவுப் படுத்தினான்.
யோசனையில் மூழ்கியிருந்தபடி தோண்டும் வேலையைத் தொடர்ந்தேன். பிணம்
வெளிப்பட்டது. அவசர அவசரமாக உடைகளில் தேடினேன். கத்தையாக இருந்த லாட்டரி சீட்டுகள்
தென்பட்டன. நடங்கும் விரல்களால் அவற்றில் தேடினேன். நடுவில் தென்பட்டது. அந்த எண்
எனக்கு மனப்பாடம்தான். அந்த நம்பரேதான்.
பத்திரமாக அதை சட்டைப் பையில் வைத்துக் கொண்டே என் தாயின்
முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். கண்கள் இருக்கவில்லை. ஆனால் அந்தக்
குழிகளிலிருந்து தன் இதயவாசல் வழியாக என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல்
தோன்றியது. பூச்சிகள் தின்னத் தொடங்கிவிட்டாலும் அந்த முகம் அமைதியாக தென்பட்டது.
“கண்ணா! என் பின்னாலேயே உன் பயணம். என்றாவது ஒரு நாள் முதியோர்
இல்லத்தில் சேர்க்கப்பட்டு நீயும் அனாதைப் பிணமாக இங்கே வந்து சேரத்தான் போகிறாய்”
என்று சொல்லுவது போல் தோன்றியது.
திடீரென்று காற்று பலமாக வீசியது. எங்கள் கண் முன்னாலேயே பாலம்
இடிந்து விழுந்த போது அதில் சிக்கிக் கொண்டு இறந்து போன கட்டடப் பணியாளர்களின் மரண
ஓலம் போல் இருந்தது அந்தக் காற்றின் பேரிரைச்சல். அவர்களுடைய மனைவி குழந்தைகளின்
அழுகைக் குரல்கள் எங்கும் எதிரொலிப்பது போன்ற பிரமை.
மயானம் எனக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருந்தது. சமாதிகளே போதி
மரங்களாக மாறின. எரியும் சிதையின் நெருப்பு ஞானதீபமாக ஒளி வீசியது.
என் அகக் கண் திடீரென்று திறந்துகொண்டது. வயோதிகத்தில் அடியெடுத்து
வைக்கும் இந்த வயதில் எந்த தவிப்புடன் என் தாயின் பிணத்தைத் தோண்டியெடுக்க
முற்பட்டேனோ அந்த பேராசை பிசாசாக மாறி என்னைச் சுற்றி நாட்டியம் புரிவது போல்
தோன்றியது. மருமகள் அணிந்து கொண்டிருந்த என் மனைவியின் நகைகள் … மருமகனின்
வியாபாரத் திட்டங்கள்…. இவற்றுக்காகவா நான் தவித்தேன்?
“ராஜாவாகவே இருந்தாலும் போகும் போது எதையும் மூட்டைக் கட்டிக்
கொண்டு போக முடியாது” என்ற பொன்மொழி நினைவுக்கு வந்தது. கண்ணுக்குத் தெரியாத
விலங்குகள் அறுந்து விட்டது போன்ற உணர்வு!
மெதுவாக திரும்பினேன். பகவத்கீதையின் சுலோகம் இன்னும் ஒலித்துக்
கொண்டிருந்தது. இந்த முறை எனக்கு பயமாக இருக்கவில்லை. இறந்துபோன ஒவ்வொரு கூலியின்
குடும்பத்தினருக்கும் நஷ்ட ஈடாக ஒரு லட்சரூபாயைத் தருவதற்கான வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்த லாட்டரி சீட்டு வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரியவைத்தது.
ஜெயிலில் கூட அதே உணர்வுதான் எனக்கு அமைதியைத் தரப்போகிறது.
தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத்.
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
– ஆகஸ்ட் 2007.
பின்னுரை.
எண்டமூரி
ஏமாற்றிவிட்டார்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். நள்ளிரவாம். சுடுகாட்டுப் பக்கத்தில் சுலோகம் ஒலிக்கிறதாம். நம்ப முடியாத துவக்கம்.
இது மட்டுமா? ஒரு pwd சீப் என்ஜினீயர் வெட்டியானை அனுப்பி விட்டு பிணத்தை தோண்டி எடுக்கிறாராம்.
பிணம் அவருடைய அம்மாவுடையதாம். பிணத்துடன் லாட்டரி சீட்டு வைத்துப் புதைத்தார்களாம். ஒரு கோடி பரிசாம். மனம் திருந்தி இறந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகையாக கொடுக்கப் போகிறாராம். ஒரு அபத்தத்தை மறைக்க மேலும் மேலும் அபத்தங்கள், ஆக மொத்தக் கதையே அபத்தம்.
பின் ஏன் இக்கதை வாசகர்களிடையே வெற்றி பெற்றது? சொல்லிய முறை. சினிமாத்தனமாக ஒரு விறு விறுப்பை உண்டாக்கி கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் வைத்து சப்பென்று முடித்து விட்டார் ஆசிரியர்.
கண்ணில் பட்ட சில அபத்தங்கள்.
நள்ளிரவில்
பிணம் தோண்டுவது.
அம்மாவை
எரியூட்டாமல் பரிசு சீட்டுடன் புதைத்தார்களாம்.
அம்மா
முதியோர் இல்லத்தில் இருக்கும் போதே
லாட்டரி சீட்டுகள் கொடுத்தாராம்.
அதில்
ஒன்றுக்கு பரிசு கிடைத்த செய்தி இவருக்கு தெரிய வந்ததாம்.
தாங்கலையே சாமி. மீதத்தையும் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.
ஓம் அசதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
குருபரம்பரைக் கதைகள்.. அப்பா.. தல சுத்துது!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் சார். நான் சரியா எழுதலையா இல்லை நிகழ்வுகள் அதீதமாக இருக்கிறதா?
நீக்குசில நிகழ்வுகள் இப்படி நிகழ்ந்திருக்குமா? எனத் தோன்ற வைக்கிறது. விட்டுவிடுவதா இல்லை எழுதலாமா என்ற யோசனையும் வருகிறது. இருப்பதை எழுதுவோம், பின்னால் பார்த்துக்கொள்ளலாம் எனவும் தோன்றுகிறது. சில நேரங்களில், பிரபலமானவர்களைப் பற்றி இப்கோ நாம் எழுதும்போது எஒஞ்சம் அதீதமாக எழுதுவோம் இல்லையா? உதாரணமா, பெங்களூரிலிருந்து எம்ஜி ஆர் தெஆரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் சாலையில் சூட்டில் வெறும் காலுடன் நடந்துகொண்டிருந்த சிறுவனைப் பார்த்து கண்ணீர் உகுத்தார், தான் சின்ன வயதில் பட்ட கஷ்டங்களெல்லாம் அவர் நினைவுக்கு வந்தன. அவற்றைக் கூட இருந்தவர்களிடம் பகிர, அவர்களும் வருத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டனர், சென்னை வந்ததும் உடனே இலவச செருப்புத் திட்டத்தை ஆரம்பித்தார் என மசாலா சேர்த்து எழுதினால் படிப்பவர்கள், ஆஹா என ஒன்றலாம், ஆனால் நடந்ததா என்ற கேள்விக்குச் சரியான பதில் கிடைக்குமா?
நீக்குஉங்கள் எழுத்தைக் குறை சொல்லவில்லை. நான் மலைத்தது பழக்கப்படாத பேர்கள், பெயர்/ஆள்க்குழப்பங்கள் பற்றி. வாய்வழியாக காலம் காலமாக வந்துகொண்டிருக்கும் கதைகள் இப்படித்தானே இருக்கும். அதுவும் நாம் பாரம்பர்யத்தின் ஒரு பகுதிதான். தோஷமில்லை.
நீக்குஇடையிடையிலே, சொல்லிச் செல்வோரில் சிலர் மிகைப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. தங்கள் குருவைப்பற்றி மற்றவர் உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்காகவும் கொஞ்சம் கூட்டிவைத்திருக்கலாம்! அதற்காக பரம்பரைக் கதைகளைச் சொல்லாமல் விட்டுவிடமுடியுமா!
கருத்தைப் படிப்பீங்களோ (திரும்ப வந்து) என்ற சந்தேகம் இருந்தது.
நீக்குஉறங்கா வில்லி - குரு பரம்பரையில் பல பெயர்கள் 'இட ஆகு பெயர்களாக இருக்கலாம் அல்லது குலத் தொழிலையும் அவர்களுடைய இயல்பையும் சேர்த்து வைத்த வழங்கு பெயராக இருக்கலாம். உதாரணமா, நடுவில் திருவீதி பிள்ளை, நஞ்சீயர், நம்பிள்ளை போன்ற பல பெயர்கள்... அவர்களுடைய உண்மையான பெயர் என்ன என்பதை ரொம்பவே ஆராய்ந்து பார்த்து (பல புத்தகங்களைப் பார்த்து) இது இருக்கலாம் என்று எழுதுகிறேன்.
வில்லி என்பதற்கு அர்த்தம் 'பாம்பு பிடிப்பவர்' என்று என் வீட்டிற்கு வந்த ஒருவர் இயல்பாகச் சொன்னார். இருளர் ஜாதி.அதனால் எனக்கு இவர் (உறங்காவில்லி தாசர்) வேடுவர் குலத்தைச் சேர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. 'உறங்கா' என்பதும் எப்போதும் கண்ணுறங்காது ஜாக்கிரதையாக பாம்பு பிடிக்கும் அல்லது வேடுவத் தொழிலைச் செய்ததாக இருந்திருக்கலாம். எப்போதும் எழுதும்போது கொஞ்சம் மிகைப்படுத்துதல் உண்டு.
இது பற்றி உதாரணங்களுடன் எழுதினால் பலரின் கோபத்தைச் சம்பாதிக்கணும், biased ஆ எழுதுகிறேன் என்று. ஸ்வாமி மணவாள மாமுனிகள் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் அதீதமாக எழுதியிருக்கிறார்கள் என்று தோன்றும்.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா... வாங்க துரை செல்வராஜு சார்.
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குவாழிய நலம்
நீக்குநெல்லை அவர்களின் கைவண்ணம் சனிக்கிழமை தரிசனம்...
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குஉள் நாட்டுக்குள்ளேயே அந்நிய தெய்வங்கள் வந்து விடுகின்றன!
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். ஒவ்வொரு சமயத்திற்கும் பிற சமய தெய்வங்கள் அந்நியம் எனக் கூறுவது வழக்கம்தானே. நாமே, இன்னொரு வீட்டைச் சேர்ந்தவர் வந்தால், அந்நியர்களுக்கு முன்னால் ஒழுங்கா நடந்துக்கோ எனச் சொல்லத்தானே செய்கிறோம்.
நீக்குபாசுரங்களில் சில வார்த்தைகளைத் தொங்றது நட்சத்திரக்குறி வந்துள்ளது. அது ஏன்? என்ன பொருள்? உச்சரிப்புக்காக என்றால் எப்படி உச்சரிக்க வேண்டும்?
பதிலளிநீக்கு* தொங்றது = தொடர்ந்து
நீக்குநாலு வரிகளில் பாசுரம் என்றால் முதலிரண்டு வரிகளை ஒரு குழுவும் மீதி இரண்டு வரிகளை இன்னொரு குழுவும் சேவிப்பார்கள். எட்டு வரிகள்னா, நாலு நாலு. ஒரு வரியைச் சேவிக்கும்போது இடையில் gap அந்த நட்சத்திரக் குறி. இந்த இடைவெளி எங்க விடணும், ஒரு வரி என்பது எதுவரை, என்பதில் இடத்திற்கு இடம் வேறுபாடு உண்டு.
நீக்குஇன்று பாஸின் சித்தி வீட்டுக்கு சென்றிருந்தேன். சனிக்கிழமைகளில் சித்தியின் மகன் பெரிய அளவில் பூஜை செய்வாராம். இன்று அது மாதிரி பூஜை செய்த பிறகு அவர்கள் இணைந்து பாசுரங்கள் படித்தார்கள்.் ஒரு இரண்டு வரியை அவர் பாராமல் சொல்ல, தொடர் இரண்டு வரிகளை சித்தியும் மருமகளும் பாராமல் சொன்னார்கள். சரியாக இன்று நான் இங்கு படித்தது நினைவுக்கு வந்தது.
நீக்குஆஹா... பாருங்க.. எதிலும் ஒரு உபயோகம் இருக்கிறது.
நீக்குபாலேய் தமிழர் விளக்கம் அருமை. ப்ரபந்தப் பாசுரங்கள் தமிழுக்கு ஒரு பெரும் கொடை.
பதிலளிநீக்குஉண்மை. சமீப காலங்களில் (வாரங்களில்) திருமுறைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன், அப்பர் மற்றும் சிவ்வாக்கியர். என்ன மாதிரியான சொல்வீச்சு, பொருள் பொதிவு. பக்தி இலக்கியங்கள் போல நம்மை மேம்படுத்துவதில் எதுவும் வரவே வராது,
நீக்குதிருநாவுக்கரசர் பாடல் ஒன்று சாம்பிளுக்கு
நீக்குபூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே
அருமை.
நீக்குபூக்களுக்கு அணிகலனாக விளங்குவது தாமரை. ஒரு பசுவிற்கு அணிகலன் (அல்லது பெரும் மதிப்பாக) ஆக விளங்குவது, அது தரும் பொருட்கள் சிவனுக்கு அபிஷேகமாக ஆவது. அரசனுக்கு, ஒருத்தருக்கு என்று நீதியை மாற்றாமல் நடுநிலையாக நீதி வழங்குவது அணிகலன். அதுபோல நாவுக்கான அணிகலன், நமச்சிவாயம் என்று சொல்வதே.
நீக்குகுவிகம் சுந்தர்ராஜனின் திருமதிதான் கௌரி என்பது வியப்பு. ஆனால் சு.. வை இப்போதுதான் தெரியும். திருமதியை நாம் அந்தக் காலத்திலேயே அறிவோம். மொழிபெயர்ப்புக்கு ஒரு சாகித்ய அகாடமி பரிசு உண்டு என்பதே தகவல். அதிலும் அதை இவருக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதும் சிறப்பு.
பதிலளிநீக்குகௌரி கிருபானந்தன் இல்லையோ? சுந்தரராஜன் எங்கிருந்து வந்தார்? அவர் யார்?
நீக்குஆமாம் மன்னிக்கவும். குழம்பி விட்டேன்.
நீக்குஎண்டமூரியின் கதைகள் பிரபலமானவை.
பதிலளிநீக்குநானும் ஒரு அபத்தம் சொல்லி விடுகிறேன்!
பிணத்தின் கண்களே போயிருக்குமாம். மண்ணில் புதைக்கப்பட்ட பேப்பர் லாட்டரி சீட்டு பத்திரமாக அரிக்காமல் இருக்குமாம்!
இன்னும் எதுவுமே படிக்கலை. படிக்க ஆரம்பிக்கலை. ஆனால் என்டமூரி பற்றிய கருத்தைப் பார்க்கலாம்னு வந்தப்போக் கண்களில் பட்டது இது. நான் முதலில் படிச்சது "துளசி" தான்.. அதுவும் நான் முதல்தரம் ராஜஸ்தான் போயிருந்தப்போ "குங்குமத்தில்" (? என நினைக்கிறேன்.) வந்திருக்கு. மாமனார் சஷ்டி அப்தபூர்த்திக்காகக் கிராமம் வந்திருந்தப்போ அங்கே வந்த சில உறவினர்களுடன் அம்மா இந்தக் கதை பத்திப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். படிக்க ஆசைதான். ஆனால் குங்குமம் எல்லாம் அப்போ ராஜஸ்தானுக்கு வராது. நாங்களும் எங்களுக்குப் பேப்பர் போடுபவரிடம் தமிழ்ப் புத்தகங்களும் வரவைக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். அவங்களும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் இன்னும் சரியாக ஆரம்பிக்க முடியலை எனவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்க குமுதம், கலைமகள், கல்கி, விகடன், துக்ளக் இந்தப் புத்தகங்கள் மட்டும் சந்தாக் கட்டி வரவழைத்துக் கொண்டிருந்தோம். சில இதழ்கள் வரவே வராது. அந்தக் குறிப்பிட்ட அலுவலகத்துக்குக் கடிதம் எழுதிக் கேட்டால் கை விரிச்சுடுவாங்க. நாங்க அனுப்பிட்டோம்னு அனுப்பிய ரசீது வரும். பின்னர் 78 இல் நாங்க சிகிந்திராபாத் மாற்றலில் கிளம்பும்போது புத்தகங்கள் வர ஆரம்பித்தன. :(
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய குரு பரம்பரை விளக்கங்கள் அருமை. ஒருவருக்கே பல பெயர்கள் இருப்பதால், (அவரவர்களின் நல்ல செயல்பாட்டில் அது சிறப்பாக வந்து சேர்ந்து விடுமென தோன்றுகிறது) கருத்தில் வைத்து படிக்க வேண்டும்..
பாசுரங்கள், அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது. முதல் பாசுரத்தை படிக்கும் போது, "சூடித்தந்த சூடர்கொடி கோதை நாச்சியாரின்" நினைவு வந்தது. நேற்று மாலை திருமால் பெருமை திரைப்படத்தில் ஆண்டாளின் அற்புத பக்திப் பகுதியை மட்டும் கண்ணீர் மல்க பார்த்தேன். வசனங்கள் மனதை கொள்ளை கொண்டன. வளர்ப்பு மகள் மீது தந்தை கொண்ட பாசமும், அதை உணர்த்தும் சிவாஜி அவர்களின் நடிப்பும் மனதை விட்டு அகலாதவை.
முழு சரணாகதியால் இறைவனின் அருள் பெற்ற அடியார்களின் பாத துளிகள் எத்தனை சிறப்பானது என்பதை தங்கள் எழுத்தால் உணர முடிகிறது. பாசுரங்களும் , அதன் பொருள் உணரும் போது நம் மனதிலும் பரவசம் உண்டாகிறது.
பெரியாழ்வாரின் திருவரசு கண்டு வணங்கி கொண்டேன். திருமங்கலத்தில் இருந்த போது அழகர் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு ஒரிரு தடவைதான் கிடைத்தது. அதுவும் சுற்றங்களோடு செல்லும் போது அவர்களின் பிற பயணங்களுக்கு ஏற்றார் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதால், அவசர வழிபாடுதான் கிடைக்கிறது. எல்லாம் "அவன்" செயல்தானே.!! உங்களின் பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி. உறவினர்களுடன் கோயில்களுக்குச் சென்றால் அவர்களின் சௌகரியத்தைப் பொறுத்தும் நாம் நடந்துகொள்ளணும்.
நீக்குநான் ஜனவரியில் (?) மதுரை திருநெல்வேலி என் அண்ணுடன் சென்றிருந்தபோது நாங்கள் 1-3ம் வகுப்புகள் படித்த பரமக்குடி எங்கள் பயணத் திட்டத்தில் இருந்தது. ஆனால் அன்றைய பயணம் ரொம்ப நேரமாகிவிட்டதால் தவிர்த்துவிட்டோம். இருவருக்கும் போகணும் என்ற ஆசை ஆனால் நடக்கவில்லை.
திராவிட வேதம் தளத்தில்
பதிலளிநீக்குதிருப்பாசுரங்களின் சில வார்த்தைகளுக்கு
இடையே நட்சத்திரக் குறி கண்டிருக்கின்றேன்...
அது ஏன்? என இப்போது தெரிந்து கொண்டேன்..
ஹரி ஓம்..
ஒரு கோயில்ல நாம பிரபந்தம் சேவிக்கிறோம் என்றால், அங்குள்ளவர்கள் எல்லோரும் ஒரே புத்தகமோ இல்லை அந்த ஊரில் சேவிக்கும் முறையில் இருந்தால்தான் சேவிக்க இயலும். இல்லைனா, நாம ஒரு இடத்துல நிறுத்தி, அல்லது இன்னும் நீட்டிச் சேவித்தால், கொஞ்சம் அந்நியமாகத் தெரிவோம்.
நீக்குஇந்தப் பிரச்சனை பல இடங்களிலும் வரும்.
உங்களிடம் அல்லது, சிவன் கோயில் வழக்கங்களில் நல்ல பரிச்சையம் உள்ளவர்களிடம் ஒரு கேள்வி.
நீக்குசிவனுக்கு பசுவின் பொருட்களான பால். தயிர் நெய் தவிர வேறு பொருட்களை வைத்து அபிஷேகம் நடக்குமா? (பஞ்சகவ்யம் போன்று)
எல்லா அபிஷேஹப்பொருட்களும் வாங்கிக் கொடுப்போம். எல்லா ஸ்வாமிக்கும் இந்த மாதிரி அபிஷேஹப்பொருட்களை வைத்தே அபிஷேஹம் பண்ணுவாங்க. எங்க ஊர் சிவன் மட்டுமில்லாமல் வைத்தீச்வரன் கோயில், மற்றும் சில சிவன் கோயில்களில் பண்ணி இருக்கோம். சிதம்பரத்தில் நடராஜருக்கு அபிஷேஹம் பண்ணும் தினங்கள் ஆனித்திருமஞ்சனமும், மார்கழித் திருவாதிரையும் தான். மற்ற நாட்களில் தீக்ஷிதர்கள் வைத்துப் பூஜை செய்யும் ஸ்படிக லிங்கத்துக்கு; ஒவ்வொரு காலத்திலும் அபிஷேஹ ஆராதனைகள் உண்டு.
நீக்குபஞ்சகவ்யம் என்பது பசுவின் பால், நெய், தயிர், கோமூத்திரம், பசுஞ்சாணி ஆகியவற்றில் இருந்து தயாரிப்பது. சுத்திகரிப்புக்குத் தயாரித்து உடனே கொடுப்பார்கள். செடிகளுக்குப் போடும் பக்ஷத்தில் இதோடு கூட இளநீர்க்காய்கள், வாழைப்பழங்கள் எனச் சேர்ப்பாங்க. அது ஒரு பெரிய அளவிலான தயாரிப்பாக இருக்கும் சாணமே குறைந்த பக்ஷமாக 5 கிலோ, மூத்திரம் 3 லிட்டர்னு தேவைப்படும். அது தேவையானால் பின்னால்.
நீக்குஇப்போது புரிந்துவிட்டது கீதா சாம்பசிவம் மேடம். மிக்க நன்றி
நீக்குகுரு பரம்பரைக் கதைகள் அனைத்துமே சுவாரசியமானது. அதிலும் உறங்காவில்லி தாசர் பத்தி முன்னரே பல முறை படிச்சிருந்தாலும் இப்போ இன்னும் தெரிந்து கொண்டேன். பெரியாழ்வாரின் திருவரசு அழகர் கோயிலில் இருப்பது ஆச்சரியம். ஏனெனில் அவர் அதிகம் கூடலழகரைத் தானே சேவித்தார். பல்லாண்டு பாடியதும் அவருக்குத் தான் இல்லையோ?
பதிலளிநீக்குபாலேய் தமிழரின் சொல்லாடல் தக்க சந்தர்ப்பங்களில் யார் யாரைச் சொல்லி இருப்பாங்க என்பதெல்லாம் மிகச் சிறப்பாகப் பொருத்தமாகச் சொல்லி வருகிறீர்கள். இந்த எம்பார் என்னும் பெயர் எப்படி வந்ததுனு தெரியாமல் இருந்தது. இன்னிக்குப் புரிந்து கொண்டேன்.
பாசுரங்களும் அவற்றின் விளக்கங்களும் நன்றாய் இருக்கின்றன. இன்னொரு சந்தேகம். நம்மாழ்வாருக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம்? கூரத்தாழ்வார் பற்றியும் அவர் பெண் பற்றியும் இன்னிக்குத் தான் படிச்சேன். மொத்தத்தில் நல்லதொரு பதிவுக்கு நன்/றி.
வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.
நீக்குஆழ்வார்களில் முக்கியமானவர் நம்மாழ்வார். விச்வக்ஷேனருக்கு அடுத்தபடியா நம்மாழ்வாரைத்தான் சொல்வாங்க. அவருக்குப் பின்னர்தான் மற்ற ஆழ்வார்கள். காரணம் வேதங்களை 'தமிழ் மறையாக' திருவாய்மொழி போன்றவற்றைக் கொடுத்ததன் காரணமாக.
மிக்க நன்றி
பாசுரங்கள், விளக்கங்களும் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குஒருவருக்கு இத்தனை பெயர்களாக என படிக்கும் போது எண்ணத் தோன்றியது.
படங்கள் கண்டோம். படங்கள் பகிர்வுக்கு அழகு கூட்டுகின்றன.
கதையில் ...." சீட்டு கறையான் அரிக்காமல் கிடந்தது." மிகைப்படுத்தப்பட்டாலும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் கொடுக்க நினைப்பது அவரின்மனமாறுதலை காட்டுகிறது.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி.
நீக்குகதை படிச்சேன். என்டமூரியில் சில தொடர்கள் படிச்சிருக்கேன். நினைவில் இருப்பவை "துளசி" பின்னர் வந்த" மீண்டும் துளசி" நான் மீண்டும் துளசி படிச்ச பின்னரே தேடிப்பிடித்துத் துளசியைப் படிச்சேன். மற்றவை படிக்கலை. ஆனால் ராபின் குக்? அல்லது ராபின்சன் குக்? யாரோ ஒருத்தர் எழுதின "Fever novel ஐ அப்படியே காப்பி அடித்து ஒரு நாவலை என்டமூரி எழுதி இருந்தார். நான் இந்த ஃபீவர் நாவலை ஏற்கெனவே படிச்சிருந்ததால் இது புரிஞ்சது. ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். இதுவும் குங்குமத்திலேயோ அல்லது குமுதத்திலேயோ வந்ததுனு நினைக்கிறேன். அப்புறமாப் படிக்கிறதை நிறுத்திட்டேன்.
பதிலளிநீக்குஇந்தக் கதையும் வழக்கம் போல் நம்பவே முடியாத சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. புதைத்த உடலைத் திருப்பி எடுப்பதற்குத் தனி ஒரு ஆளால் முடியுமா என்பதே சந்தேகம். இவர் எடுக்கிறாரம். எடுத்து அந்த லாட்டரிச் சீட்டையும் சுடுகாட்டு இருட்டில் கண்டு பிடிக்கிறாராம். என்னவோ போங்க, இப்போல்லாம் படிக்கும் பழக்கமே குறைஞ்சுடுத்துனு வருத்தப்படும்போது இந்த மாதிரி எழுத்தை எல்லாம் எப்படிப் படிக்கிறதாம்?
பதிலளிநீக்கு@ஸ்ரீராம், மொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகடமி பரிசு வாங்கினவங்க பலர் இருக்காங்க. அதுவும் தமிழில் சரஸ்வதி ராம்நாத்னோ என்னமோ பெயரில் ஒரு பெண்மணி, பின்னர் த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி ஆகியோரும் உண்டுனு நினைக்கிறேன். ஆனால் அவங்க இரு சகோதரர்களும் வங்காள மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தாங்க. வி.ஸ்.காண்டேகரின் மராத்தி நாவல்கள் அனைத்துமே ஸ்ரீநிவாசாசார்யா என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டதே. இவங்களுக்கு எல்லாருக்குமே சாகித்ய அகடமி பரிசு கிடைச்சிருக்கு. நான் அதிகம் காண்டேகர், த.நா.குமாரசாமியின் மொழி பெயர்ப்பில் தாகூரி வங்காள நாவல்கள் எனப் படிச்சிருக்கேன். தாகூரின் "கோரா"வும் "புயல்" நாவலும் மிகவும் பிரபலமானது. புயல் தான் சாவித்திரி, ஜெமினி நடிச்சு வந்த காத்திருந்த கண்களோனு நினைக்கிறேன்.
ஆக மொத்தம் பாடத்தைப் படிக்காமல் குண்டு குண்டு நாவல்களாக அல்லது தொடர்கதையாகப் படிச்சிருக்கீங்க போலிருக்கு கீசா மேடம்.
நீக்குஎத்த்னை தரம் சொல்லி இருக்கேன் நெல்லை! அப்பா ஸ்கூலுக்கே வந்து எல்லா டீச்சர்களிடமும் தலைமை ஆசிரியை உள்பட நான் படிக்கிறதே இல்லை. வீட்டில் எப்போவும் ஆனந்த விகடன், கல்கி, குமுதம் மற்றும் நாவல்கள் தான் படிக்கிறானு சொல்லுவார் எனச் சொல்லி இருக்கேன். ஆனால் நான் வகுப்பில் எப்போதுமே முதல் 2 இடத்துக்குள் இருந்ததால் எந்த ஆசிரியைக்கும் என் மேல் எந்தவிதப் புகாரும் இருந்ததில்லை. ஆகவே அப்பா என் படிப்பை எப்படியாவது நிறுத்தணும்னு நினைச்சும் எப்படியோ எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிஞ்சது. பின்னர் படிச்சதெல்லாம் கல்யாணம் ஆனப்புறமாக் குழந்தைகளும் பிறந்தப்புறமாப் படிச்சேன். சென்ட்ரல் ஹிந்தி டைரக்டரேட் வழியா ஹிந்தியில் பிஜி. டிப்ளமா கோர்ஸ் பண்ணினேன். ஹிந்தி பிரசார சபா ஹிந்தியையும் விடவில்லை. எல்லாமே கல்யாணம் ஆனப்புறமாக் கூட்டுக் குடும்பத்தில் தான். :)
நீக்குஉங்களுடைய ஆர்வம், அயரா உழைப்பு என்னை வியக்கவைக்கும். வெறும்ன பாடப்புத்தகங்களையே படித்து என்ன பிரயோசனம்? தொடருங்கள் உங்கள் படிப்பை. அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்கு//எம்பெருமானின் குணங்களைப் பற்றிக் கேட்ட உடனேயே நெஞ்சம் உருகி கண்ணீர் மல்கும்படிப் பிறந்திருக்கும் உங்கள் பிறவியே மேன்மையானது என்று சொல்வாராம். //
பதிலளிநீக்குநம்பிள்ளை உறங்காவில்லி தாசரை பற்றி சொன்னதை கேட்டதும்
//காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது//
திருஞானசம்பந்தர் தேவாரம் நினைவுக்கு வருகிறது.
இறைவனின் புகழை கேட்கும் போதும் படிக்கும் போது அடியார்கள் அவர் மேல் உள்ள அன்பால் மனம் கசிந்து கண்ணீர் மல்குவதை படிக்கும் போது நமக்கும் விழியோரத்தில் கண்ணீர் துளிர்க்கிறது.
ஆமாம். நமக்கு அந்த பக்தி உணர்வு வந்துவிட்டால் மனம் இளகிவிடும், நம்மை அறியாமலேயே கண்களில் நிர் வந்துவிடும். அந்த Bபாவ பூர்வம் வரணும்.
நீக்கு//திருடனாக இருப்பானோ? ஆழ்வார், எம்பெருமான் தன் அடியார்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதால்/
பதிலளிநீக்குபாசுரமும், விளக்கமும் அருமை.
அடியவர்களின் உள்ளம் கவர் கள்வன் தானே! இறைவன்
‘//பராங்குச நம்பி’ என்று பெயர் வைத்தார். பராங்குச நம்பி தமிழில் பெரும் புலமை பெற்றவர். அவரைத்தான் ‘பாலேய் தமிழர்’ என்று கூரத்தாழ்வான் குறிப்பிடுகிறார். //
பாலேய் தமிழறுக்கு விளக்கமும் அருமை.
//முதன் முதலில் தமிழில் அழகிய பாசுரங்களை அருளிச் செய்த முதலாழ்வார்களான, பொய்கையார், பூதத்தார், பேயாரை ‘பாலேய் தமிழர்’ என்றும், தன் சேர வீணையை மீட்டி இனிய இசையாலே எம்பெருமானைப் பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரை ‘இசைகாரர்’ என்றும், எம்பெருமானுக்கு யாரால் என்ன தீங்குநேரிட்டுவிடுமோ என்ற அச்சத்தில், பொங்கும் பரிவுடன் பெருமாளுக்கு ‘திருப்பல்லாண்டு’ பாடிய பெரியாழ்வாரை ‘பத்தர்’ என்றும் குறிப்பிடுவாராம்.aa //
பெயர் காரண விளக்கம் அருமை.
கூடல் அழகர்பெருமாள் கோயிலில் பரம்பொருள் விளக்கம் சொல்லி பொற்கிழி பெற்ற வரலாறு சித்தரிக்கப்பட்டு கதையும் சொல்லப்பட்டு இருக்கும். படங்கள் அருமை.
பதிவு அருமை.
கூடலழகர் தரிசனம் பலமுறை கிட்டியிருக்கிறது.
நீக்குஅங்கு பிரசாத ஸ்டாலும் உண்டு, அழகர்கோயில்்தோசையும் உண்டு.
கதை சுடுகாட்டில் பாடம் கற்று கொண்டாதாக சொல்கிறது.
பதிலளிநீக்குநம்பமுடியவில்லை என்றாலும் மனம் திருந்தியதை பாராட்டலாம்.
பெரியாழ்வாரின் திருவரசு,பார்க்க இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை கிருத்திகைக்கு போகும் போது எல்லாம் திருவரசு செல்லும் வழி கதவு அடைத்து இருக்கும். அவர் திருநட்சத்திரம் அன்று திறந்து இருக்கும் என்று நினைக்கிறேன். காரில் போகும் போது தரிசனம் செய்து கொண்டே போவோம்.
பதிலளிநீக்குஎனக்கு ஆச்சார்யார்களின் திருவரசு இப்போதும் இருக்குமானால் சேவித்துவிடவேண்டும் என்று ஆசை. அப்படித்தான் பெரிய நம்பியின் திருவரசைச் சேவித்தேன்.
நீக்கு