வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
இடைக்காலச் சோழர்களின் 13ம் தலைமுறை சோழ அரசனாக வீர ராஜேந்திரச் சோழன் பட்டத்திற்கு வந்தான். இவன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து சோழ சாம்ராஜ்யத்தை அரசாண்டான் (சோழ கேரள மாளிகை என்பது அரண்மனையின் பெயர்). இவனுக்கு ஒரே மகன் அதிராஜேந்திரன். இந்த வீர ராஜேந்திரனின் இன்னொரு பெயர் கரிகாலன் .
தொக்க சகனில் தொளாயிரத்துத் தொண்ணூற்றின்
மிக்க கரிகால் வயவேந்தன் பக்கம்
அலைக்கும் புனற்பொன்னி ஆற்றணையை இட்டான்
மலைக்கும் கொடைக்கரத்தான் வந்து
என்ற பழைய செய்யுளின் மூலம், சக ஆண்டான 990 அதாவது கிபி 990 +78-1068ல் கரிகாலன் கல்லணை கட்டினான் என்பது தெரிகிறது. அந்த ஆண்டில் கரிகாலன் என்ற மறுபெயரைக் கொண்ட வீர ராஜேந்திரன் சோழப்பேரரசனாக இருந்தான். எனவே வீர ராஜேந்திரன், தன் குடிகளின் நன்மையைக் கருதி வேளாண்மையை வளப்படுத்த காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினான் என்பது தெரிகிறது.
ஒரே பெயர், முதலாம், இரண்டாம் என்று தொடர்ந்து வருவதால் வரலாறு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும். அதிலும், அந்தப் பெயருடன் ராஜகேசரி, பரகேசரி என்ற பட்டங்களைச் சேர்த்துவிட்டால் முழுக் குழப்பம்தான். புரியும்படிச் சொல்வதானால்,
ராஜராஜ சோழனுக்குப் பிறகு ராஜேந்திர சோழன் அரசனானான். ராஜேந்திரனுக்கு மூன்று புதல்வர்கள். ராஜாதிராஜன், ராஜேந்திரன், வீர ராஜேந்திரன். ஒரு அரசன் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே, தகுந்த நேரத்தில் தன் மூத்த மகனைப் பட்டத்து இளவரசாக்கிவிடுவான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அரசன் இறக்கும் வரை அவன் சாம்ராஜ்யத்தின் அதிபதி. இருந்தாலும் அரசனுக்கு முடியாமல் போகும் சமயத்தில் பட்டத்து இளவரசன் அரச அதிகாரங்களை மேற்கொள்ளுவான். கல்வெட்டுகளில் ஆண்டு பொறிக்கும் அதிகாரமும் இளவரசனானால் கிடைக்கும். ஆனால், ‘ஆட்சியின் 5ம் ஆண்டு’ என்பதுபோல் இருந்தால், அவன் அரசனான பிறகு வரும் ஐந்தாம் ஆண்டு என்று புரிந்துகொள்ளவேண்டும்.
கங்கை கொண்ட சோழனான இராஜேந்திர சோழன் காலத்திற்குப் பிறகு அவனது மூத்த மகன் ராஜாதிராஜன் அரசனானான். (அப்பா அரசனான ஆறு வருடத்தில் இவனுக்கு இளவரசுப் பட்டம்) . ராஜாதி ராஜன், தான் அரசனான சுமார் ஆறு வருடங்களில் தனது தம்பியான ராஜேந்திரனை இளவரசனாக்குகிறான். 1054ல் அரசனான ராஜேந்திரன், தன்னுடைய மகனான இராஜேந்திரனை (பாட்டனின் பெயர் கொண்டவன்) தான் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் இளவரசனாக்குகிறான். வீரம் கொண்டிருந்த இளவரசன் இராஜேந்திரன், தன்னை தன் தந்தையிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட ராஜமகேந்திரன் என்ற பெயரைக் கொள்கிறான். சில போர்களில் வென்ற இராஜமகேந்திரன் இளவரசனாக இருக்கும்போதே உயிர் துறந்தான். அதனால் அரசன் ராஜேந்திரன் இறந்த தும், அவனுடைய தம்பி வீர ராஜேந்திரன் 1063ல் அரசனாகிறான். (அப்பா…இப்பவே கண்ணைக் கட்டுதே)
சுருக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், கங்கைகொண்ட சோழன் ராஜேந்திர சோழனுடைய ஆட்சிக்குப் பிறகு, அவனுடைய மூன்று மகன்கள் ஒவ்வொருவராக ஆட்சிக்கு வந்து அரசனாகிறார்கள். (இடையில் இரண்டாவது மகனின் மகன் இளவரசனாக்கப்பட்டு ஆட்சிக்கு வராமலேயே இறக்கிறான்). மூன்று மகன்களில் கடைசியான வீர ராஜேந்திரச் சோழனின் மகன் அதிராஜேந்திரன் 1067ல் இளவரசுப் பட்டம் அடைகிறான். இவர்களது பட்டங்களுடன், ஆட்சிப் பெயர்களுடன் கீழே கொடுத்திருக்கிறேன். படித்துக் குழம்பிக்கொள்ளுங்கள்.
முதலாம் ராஜராஜ சோழன் கிபி 985-1014 (தஞ்சை பெரிய கோயில் எழுப்பியவன்)
முதலாம் இராஜேந்திர சோழன் கிபி 1012-1044 (கங்கைகொண்ட சோழன்)
இராஜாதிராஜ சோழன் கிபி 1018-1054 (முதல் மகன்)
இரண்டாம் இராஜேந்திர சோழன் கிபி 1051-1063 (இரண்டாம் மகன்)
இளவரசன் இராஜமகேந்திர சோழன் கிபி 1055- (இரண்டாம் இராஜேந்திர சோழன் மகன்)
வீர ராஜேந்திர சோழன் கிபி 1063-1070 (கங்கைகொண்ட சோழனின் மூன்றாம் மகன்)
அதிராஜேந்திர சோழன் கிபி 1067-1070
இராஜகேசரி முதலாம் ராஜராஜ சோழன்
பரகேசரி முதலாம் இராஜேந்திர சோழன்
இராஜகேசரி இராஜாதிராஜ சோழன்
பரகேசரி இரண்டாம் இராஜேந்திர சோழன்
இராஜகேசரி இளவரசன் இராஜமகேந்திர சோழன்
இராஜகேசரி வீர ராஜேந்திர சோழன்
பரகேசரி அதிராஜேந்திர சோழன்
இதில் இராஜகேசரி பட்டம் கொண்ட இராஜமகேந்திர சோழன் அரசனாகவில்லை என்பதால், அடுத்து பட்டத்திற்கு வந்த அவன் சிற்றப்பன் வீர ராஜேந்திர சோழன், இராஜகேசரி பட்டத்தைப் பெற்றுக்கொள்கிறான். இந்தப் பட்டங்களும் யார் யாருக்குப் பிறகு அரசாண்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவியது.
இராஜராஜ சோழன் பெரிய பேரரசை உண்டாக்கிவைத்தான். அவன் மகன் ராஜேந்திர சோழன் அதனை விரிவுபடுத்தினான். கங்கை வரை தன் படைத்தலைவரை அனுப்பி பகைவர்களை வென்று கங்கை நீரைச் சுமந்துகொண்டுவரச் செய்து தான் உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் திருக்குளத்தில் விடச்செய்தான். அவனுடைய காலத்திற்குப் பிறகு, அவனுடைய மூன்று மகன்களும் ஓய்வின்றி, வடக்கு, தெற்கு, மேற்கில் போர்கள் பல புரிந்து நாட்டைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். ராஜேந்திர சோழனின் மூன்று மகன்களும் அவனுடைய வீரத்திற்குக் குறைவில்லாத வீரம் கொண்டிருந்தனர்.
கங்கைகொண்ட சோழன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சோழன், தன் மகளான அம்மங்கா தேவியை, வேங்கி நாட்டு மன்னன் இராஜராஜ நரேந்திரனுக்குக் கொடுத்து உறவு ஏற்படுத்திக்-கொண்டதைச் சென்ற வாரம் கண்டிருந்தோம். அதனால் கீழைச் சாளுக்கிய நாடு எப்போதுமே சோழ தேசத்துடன் உறவால் பிணைக்கப்பட்டிருந்த து. மேலைச் சாளுக்கிய நாட்டிற்கு, எப்போதுமே கீழைச் சாளுக்கிய நாடும் தங்களுடன் சேர்ந்து முன் காலத்தில் இருந்துபோல் அகண்ட சாளுக்கிய நாடாக இருக்கவேண்டும் என்பது தீராத ஆசை. இந்த சமயத்தில் (1062) கீழைச்சாளுக்கிய மன்ன ன் இராஜராஜ நரேந்திரன் (ராஜேந்திர சோழனின் மருமகன்) மறைந்துவிடுகிறான். இதனை உபயோகப்படுத்தி, மேலைச்சாளுக்கிய மன்ன னான ஆகவமல்லன், தன் படைத் தலைவனைப் பெரும் படையோடு கீழைச் சாளுக்கிய தேசத்தைக் கைப்பற்ற அனுப்புகிறான். வீர ராஜேந்திரன், தங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள கீழைச் சாளுக்கிய அரசைக் காக்குபொருட்டு படையைத் தலைமை தாங்கிச் சென்று சாளுக்கியப் படையைத் தோற்கடித்தான், படைத்தலைவனையும் கொன்றான். இதன் பிறகும் சாளுக்கிய மன்ன ன் ஆகவமல்லன் நேரிடையாக கிருஷ்ணா துங்கபத்திரா நதிக்கரையில் சோழ மன்னுடன் போர் புரிந்தான். அந்தப் போரிலும் வீரராஜேந்திரன் வெற்றிபெற்றான். இதுபோல மொத்தம் ஐந்து முறை மேலைச் சாளுக்கிய மன்னனுடன் சோழ மன்ன ன் வீரராஜேந்திரன் போர் புரிந்து வெற்றிபெற்றான். அவனுடைய 7 வருட ஆட்சியில், ஐந்து முறை சாளுக்கிய அரனிடம் மாத்திரமே போர் புரிந்திருக்கிறான். இது தவிர பாண்டிய மற்றும் ஈழ நாட்டுப் போர்கள். தான் அரசனான ஐந்தாம் வருடம் தன் மகனான அதிராஜேந்திர சோழனுக்கு இளவரசுப்பட்டம் கட்டினான். (இவையெல்லாம் இளவரசன் அல்லது அரசனாகும்போது வைத்துக்கொள்ளும் பெயர்கள்).
வரலாறு குழப்புகிறது அல்லவா? அதனால், எவ்வாறு சாளுக்கிய சோழர்கள் பட்டத்திற்கு வந்தார்கள் என்பதை அடுத்த வாரம் வைத்துக்கொள்வோமா? அதுவரை அகண்ட சோழ நாட்டுப் படத்தைப் பார்த்துவைத்துக்கொள்ளுங்கள்.
கோவிலில் இருக்கும் சிற்பங்களை முன்பு புகைப்படங்கள் எடுத்திருக்கின்றனர். அவற்றையும் அந்த அலுவலகத்தில் கண்டேன்.
இந்த மாதிரி, சிற்பங்களைப் படமெடுத்து அவற்றை ஆவணப்படுத்தினால் பிற்காலத்தில் அவை காணாமலோ சிதைவுறவோ ஆகாமல் இருக்கும் நன்மை உண்டு.
கல்வெட்டுக்களைப் பார்த்தாலே இது இராஜராஜ சோழன் காலத்திற்கும் முந்தைய கல்வெட்டு என்று தெரிந்துவிடுமே… இதைத்தான் ஐராவதீஸ்வரர் கோயிலில் பார்த்தேன்.
தூண் எவ்வளவு உயரமானது. அதில் ஒரு அடிக்கும் குறைவான சதுரப் பகுதியில் கையளவைவிடக் குறைவான பிள்ளையாரைச் செதுக்கியிருக்கிறார்கள். எப்படிப்பட்ட திறமை, கற்பனைவளம்.
இதுவரை நாம் வரலாற்றில் பார்த்திருப்பது, கங்கைகொண்ட சோழனின் மூன்று மகன்களும் ஒருவர் பின் ஒருவராக சோழ நாட்டை அரசாண்டனர். மூன்றாவது மகனான அதிராஜேந்திர சோழன் 1067ல் இளவரசனாக்கப்பட்டான். முன்பே சொல்லியிருக்கிறேன், ராஜேந்திர சோழனின் மகள் கீழைச் சாளுக்கிய அரசன் இராஜராஜ நரேந்திரன் மனைவியானாள். அந்த கீழைச் சாளுக்கிய அரசன் 1962ல் இறந்துவிடுகிறான். அதற்குப் பின்னான ஐந்து போர்களில், வீர ராஜேந்திர சோழன் (மூன்றாவது மகன்) மேலைச் சாளுக்கியர்களை, அதிலும் கடைசி இரண்டு போர்களில் சாளுக்கிய அரசனான ஆகவமல்லனை முற்றிலும் தோற்கடித்து கீழைச் சாளுக்கியத்துக்கு அரணாக நின்றான் என்று. மிகுதியை அடுத்த வாரம் பார்ப்போம். அப்போது எப்படி சோழ தேசம், சாளுக்கிய சோழர்கள் கைக்குச் சென்றது என்று தெரியும்.
(தொடரும்)
= = = = = = = = = = =
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்
நீக்குவணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇன்றைய யுகாதி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான. வாழ்த்துகள். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். தமிழக அரசுக்கு ரூ என்பது தமிழ் வார்த்தையில் முதலாவதாக வராது உரூபாய் என்றே வரும் எனத் தெரியவில்லையே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்
நீக்குஅனைவருக்கும் உகாதி நல் வாழ்த்துக்கள்
ஆமாம் உகாதி ஸ்பெஷல் உணவு என்ன என்ன?
நீக்குபொக்கிஷங்களாக புகைப்படங்களும், அறிவு விருத்திக்காக வரலாற்று செய்திகளும் நிறைந்த இன்றைய பதிவு கொஞ்சம் தெளிவாக சோழ வரலாற்றை கூற முயற்சிக்கிறது. நன்று. ஆனாலும் போர் இல்லாத ஆண்டே இல்லை என்று வரும்போது, கொஞ்சம் சலித்து விடுகிறது. போர் புரியவே இவர்கள் அரசனாகவும், இளவரசர்களாகவும் இருந்தனரோ என்ற ஐயம் எழுகிறது.
பதிலளிநீக்கு
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்... போர்கள் அரசர்களுக்கு ஓரளவு இன்றியமையாதவை. வலிமை உள்ளவர்களால்தான் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க முடியும். கல்வெட்டுகளில் போர் சம்பந்தமான செய்திகளே அதிகம் என்பதால் போரை வைத்து ஒவ்வொரு அரசனின் ஆட்சிக்காலச் செய்திகளை அறிந்துகொள்கிறார்கள். போர்களே இல்லாமல் ஆட்சி செய்தவர்களும் உண்டு. ஆனால் அதற்குப் பிறகான அரசர்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் வலிமை மிகவும் குன்றியிருக்கும். எல்லைகள் சுருங்கிவிடும். சிற்றரசர்களும் பேரரசர்களுக்குக் கட்டுப்படமாட்டார்கள். இதனைத்தான் வரலாறு கூறுகிறது
நீக்குவாலிப வயதை அடைந்ததும், உடனே நாட்டின் ஒரு பகுதிக்கு, படையின் பெரிய பகுதிக்குத் தலைவனாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் இளவரசர்கள். போர்ப்பயிற்சியும் கிடைக்கும், வெற்றியையும் அடைவார்கள். இவைதான் அவர்கள் அடுத்ததாக நாட்டைத் தலைமைதாங்கும் இடத்திற்கு அவர்களை இட்டுச்செல்லும். வெற்றிபெறுபவனையே அடுத்த அரசனாகப் பலரும் ஏற்றுக்கொள்வர்.
நீக்குவணக்கம் நெல்லைத் சகோதரரே.
பதிலளிநீக்குதங்களது தொடரும் பயணங்கள் சிறக்க அன்புடன் இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்லபடியாக இறைவனின் தரிசனங்கள் அனைத்தும் கிடைத்ததா? வாழ்த்துகள்.
தங்களது இன்றைய கோவில் பதிவும், படங்களும் வழக்கம் போல நன்றாக உள்ளது சிற்ப படங்களை அழகாக எடுத்துள்ளீர்கள். அன்னை அபிராமியின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். இறைவன் நம் அனைவருக்கும் துணையாக இருந்து அவரின் நல்லருளை நமக்கெல்லாம் தருமாறும் பிரார்த்தித்தும் கொள்கிறேன்.
இன்னமும் ஒவ்வொரு படங்களையும் பெரிதாக்கி பார்த்து விட்டும், சரித்திர கால நிகழ்வுகளை படித்து விட்டும், பிறகு வருகிறேன். இன்று யுகாதி ஆகையால் கொஞ்சம் வேலைகள் அழைக்கின்றன. எனவே இப்போதே பதிவை முழுவதுமாக, ரசித்துப் படிக்க நேரம் அமையவில்லை. மன்னிக்கவும்.வேலைகளை முடித்து விட்டு மதியம் வாக்கில் கண்டிப்பாக அருமையான பதிவை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உகாதிக்கு என்ன என்னவற்றைச் செய்தீர்கள் என்று சொல்லுங்கள். பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல் போல உகாதிக்கு ஏதேனும் சிறப்பு உணவு உண்டா?
நீக்குஎன்னுடைய முக்திநாத் யாத்திரை நன்றாக முடிவடைந்தது. கடைசி நாள் அன்று தாஜ்மஹலுக்கும் சென்றிருந்தோம். (நானும் மனைவியும் மாத்திரம், இடவு 9 1/2 க்குமேல்தான் இரயில் என்பதால் ஒரு டாக்சியை ஏற்பாடு செய்து மதுரா ஜன்மஸ்தான் சென்றுவந்தோம். ஜன்மஸ்தானில் 40 நிமிடங்கள் இருந்து பாராயணம் செய்தது மனதுக்கு உவப்பாக இருந்தது (அங்கெல்லாம் நிற்கவிடமாட்டார்கள்). மதுரா தரிசனம் இது நான்காவது முறை என்று நினைக்கிறேன்.
உகாதிக்கும் மாங்கா பச்சடி, போளி உண்டு, நெல்லை. வேப்பம் பூ கண்டிப்பாகச் சேர்த்து உண்டு. இங்க பச்சை வேப்பம் பூ பறிச்சாங்க நம்ம தெருல. கடையில் விற்பனையில் இருந்தது.
நீக்குபி வீட்டிலும் உண்டு, பு வீட்டிலும் உண்டு நம்ம வீட்டில். திருக்குறுங்குடி கோயிலில் இன்று பஞ்சாங்கம் வாசிப்பது பெரும்பாலும் மாலையில்.... நம்ம வீட்டு உபயம். இப்ப வரையில்.... முன்பு அப்பா. இப்ப என் தம்பி.
ஊரில் இருந்த வரை அப்பா போவார். இரவு வர 9.30...10 ஆகிடும் சில சமயம். 11 மணி கூட ஆகிடும். கோயில் பிரசாதம் புளியோதரை, தயிர்சாதம் கொண்டு வருவார். அதுக்காகவே, குறிப்பாகப் புளியோதரைக்காக நாங்க பட்டாளம் காத்துக் கொண்டிருப்போம். திருக்குறுங்குடி கோயில் புளியோதரை செமையா இருக்கும். இப்பலாம் எப்படின்னு தெரியலை....தம்பி உபயம் என்றாலும் அங்கேயே விநியோகம் நடந்துவிடும் என்று நினைக்கிறேன் எடுத்துக் கொண்டு வர யாரும் அருகில் இல்லையே இப்ப.
கீதா
நான் திருக்குறுங்குடி கோயிலின் அரவணை அப்பம்தான் கொஞ்சம் சாப்பிட்டிருக்கிறேன் (தந்தவர் இரவு 8 மணிக்குக் கொடுத்தார். நான் ஓரமா கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பிறகு மீதியை சாப்பிடணும் என்று எங்கள் பையில் எங்கோ வைத்துவிட்டு மறந்துவிட்டேன்). புளியோதரை நல்லா இருக்குமா? நான் சாப்பிட்டதில்லை. அந்த ஜீயருடன் நான் ஒரு படம் எடுத்துக்கொண்டுள்ளேன்.
நீக்குகல்வெட்டுகள் முந்தைய காலத்தவை போன்றுதான் இருக்கின்றன.
பதிலளிநீக்குஒரே ஒரு கல்வெட்டில் மட்டும் கிமு என்று இருப்பதாகத் தோன்றியது ஆனால் பெரிசு பண்ணிப் பார்த்ததும் இல்லையோ என்றும் பட்டது. வலப்புற ஓரமான கல்லில் சில எழுத்துகள் புரிவது போல் இருந்தாலும் முழுவதும் தெரியவில்லை.
கீதா
கல்வெட்டில் 'கிமு'வா? இது என்ன புதுக் கண்டுபிடிப்பு? ஹா ஹா ஹா.
நீக்குகல்வெட்டு படிப்பது என்பதும் ஒரு கலைதான். எனக்கு அதனைக் கற்றுக்கொள்ள ரொம்பவே ஆசை உண்டு. இன்னொன்று தெரியுமா? கல்வெட்டுகளில் பலவித பாஷைகளும் கலந்திருக்கும் (சில பல கல்வெட்டுகளில்)
ஆமாம் பலவித பாஷைகளும் கலந்திருக்கும்.
நீக்குகிமு வராதுன்னு தெரியும் ஆனா டக்குனு பார்க்கறப்ப கண்ணுக்குத் தெரிஞ்சுச்சு. அதான் பெரிசு பண்ணி பார்த்தப்ப அது இல்லைனு...
கீதா
Wish you all a Happy Ugadhi
பதிலளிநீக்குMay God shower all their blessings
K. Chakrapani
உகாதி வாழ்த்துகளுக்கு நன்றி சக்ரபாணி சார். உங்கள் குடும்பத்திற்கும் எங்கள் வாழ்த்துகள்
நீக்கு// கல்வெட்டுக்களைப் பார்த்தாலே இது இராஜராஜ சோழன் காலத்திற்கும் முந்தைய கல்வெட்டு என்று தெரிந்துவிடுமே… //
பதிலளிநீக்குஎப்படி? எதை வைத்து கண்டுபிடிப்பது?
கல்வெட்டு ஆரம்பிக்கும் விதத்தை, பிறகான மெய்கீர்த்திகள் போன்றவற்றை வைத்து. இராஜராஜன் காலத்திற்குப் பிறகுதான் தமிழ்கல்வெட்டுகள் அதிகம். அதாவது கல்வெட்டில் தமிழ் எழுத்துகள். ராஜராஜனின் கல்வெட்டுகள், ஸ்வஸ்திஸ்ரீ என்று ஆரம்பித்து மங்கல வார்த்தைகளுக்குப் பிறகு தமிழுக்குத் தாவிவிடும். இதுபற்றி வரும் பதிவுகளில் விளக்கமாக வரும்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
வாங்க துரை செல்வராஜு சார்
நீக்குஅன்பின் யுகாதி நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் உகாதிப் பண்டிகை சிறப்பு வாழ்த்துகள்.
நீக்கு///அந்த கீழைச் சாளுக்கிய அரசன் 1962ல் இறந்துவிடுகிறான். ///
பதிலளிநீக்கு?????...
//அந்த கீழைச் சாளுக்கிய அரசன் 1962ல்// 1062 என்பது தட்டச்சுத் தவறினால் 1962 என்று வந்துவிட்டது. கேஜிஜி சார்தான் தவறைத் திருத்தணும்.
நீக்கு///இவர்களது பட்டங்களுடன், ஆட்சிப் பெயர்களுடன் கீழே கொடுத்திருக்கிறேன். படித்துக் குழம்பிக் கொள்ளுங்கள்///
பதிலளிநீக்குஆகா!..
விஜயாலய சோழர் காலத்திலிருந்து கொடுத்திருக்கலாம்..
இப்போ நாம சாளுக்கிய சோழர்கள் வரலாற்றை நோக்கிச் செல்வதால் நான் இராஜராஜ சோழனிலிருந்து ஆரம்பித்தேன். (நம்ம எல்லாருக்கும் தெரிந்தவன்). வரலாற்றில் என்னை ஆச்சர்யப்படுத்தியது, சோழ அரசர்களிலேயே உச்சத்தைத் தொட்ட இராஜேந்திர சோழனின் மூன்று மகன்களும் ஒருவர் பின் ஒருவராக அரசாண்டு, அத்துடன் சோழ ஆட்சி முடிவுக்கு வந்ததுதான்.
நீக்குராஜேந்திரன், வீரராஜேந்திரன் அடியாத்தி எத்தனை பெயர்கள் டி.ராஜேந்தர்தான் வரவில்லை.
பதிலளிநீக்குஇருப்பினும் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே
வாங்க கில்லர்ஜி. எப்போதுமே நகைச்சுவை உணர்வு உங்கள் கூடப் பிறந்தது. அதனை விட்டுவிடாதீர்கள்
நீக்குஇப்போ டி ராஜேந்தர் நிலைமையைப் பார்த்தீங்களா? பாவம். மிக நல்ல மனிதர் அவர்
1054ல் அரசனான ராஜேந்திரன், தன்னுடைய மகனான இராஜேந்திரனை (பாட்டனின் பெயர் கொண்டவன்) //
பதிலளிநீக்குரா வோடு இ சேர்த்தால் வேறு பெயராகிடுமோ? அப்பா பிள்ளை இல்லையா இதில் தாத்தா பெயர் ?
ஹப்பா பெயரை மாற்றிக்கிறான்...
அப்பா…இப்பவே கண்ணைக் கட்டுதே)//
ஹாஹாஹா நிஜமாகவே கண்ணைக் கட்டுது.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. ரா, இரா னுலாம் எழுதறது என்னோட தவறு. எல்லாப் பெயர்களுமே இரா என்று துவங்கணும்
நீக்குஅதானே பார்த்தேன் இராஜன்னு வரணுமேன்னு...ஒருவேளை இப்படி இருக்குமோன்னு தோன்றியது. அதான் கேட்டேன்
நீக்குகீதா
இராஜேந்திர சோழனின் 3 மகன்கள் வரை சொல்லியிருப்பது புரியுதுதான்
பதிலளிநீக்குஅதுக்கு அப்பால கண்ணைக்கட்டுது...நினைவில் வைக்கணுமே
கீதா
ஆமாம் கீதா ரங்கன். தங்களுக்கு என்று தனிப்பெயரை வைத்திருந்தால் குழப்பம் நேராது. பாட்டனார் பெயர், முப்பாட்டனார் பெயர் என்று வைத்துக்கொண்டு, இரண்டாம், மூன்றாம் என்று சேர்த்துக்கொள்வதால்தான் குழப்பம். நமக்குமே (இதற்கு முந்தைய தலைமுறை வரை), தலைமகன் வழியில், பாட்டன் பெயர், தன் மகனுக்கு தன் அப்பா பெயர் என்று வைப்பதுதானே வழக்கம்.
நீக்குஅதற்காக பெண்களுக்கு இப்படிப் பெயர் அமையாது. அதாவது மூன்றாவது கீதா ரங்கன் என்று பெயர் வராது, ஏனென்றால் ரங்கன் என்ற தனிப் பெயர் சேர்ந்துவிடுகிறது அல்லவா?
நீக்குஇராஜராஜ சோழன் படத்துல முத்துராமன் தானே வேங்கிநாட்டு அரசனாக வருவார் இல்லையா?
பதிலளிநீக்குகீதா
அவனவன் உணர்ச்சி பூர்வமாக வரலாற்றை எழுதுகிறான், இந்த அக்கா என்னவென்றால் திரைப்படத்திற்குத் தாவுகிறது. உண்மைதான்... வேங்கிநாட்டு அரசன். ஆமாம் லக்ஷ்மிதானே குந்தவையாக நடிப்பது?
நீக்குஉங்களுக்குத் தெரியுமா? இந்தப் படத்தை நான் பரமக்குடி ரவி தியேட்டரில் பார்த்தேன். அப்போது நான் சின்னப் பையன் (2ப்பு). நடிகர்களெல்லாம் ஒரு அறையில் மேக்கப்போட்டு ரெடியாக திரைக்கு வந்ததும் லைட்டை அணைப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.
சிற்பங்கள் பேசுதடி....
பதிலளிநீக்குபடங்கள் செமையா இருக்கு எல்லாமே துல்லியமாக சூப்பராக இருக்கின்றன. தூண்களும் அதிலுள்ள வடிவங்களும் என்ன சொல்ல? நடனச்சிற்பங்கள் இருக்கும் தூணுக்குக் கீழ உள்ளவை ரொம்ப அழகு.
கீதா
சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் ஒவ்வொன்றிலும் ஒரு தனித்தன்மை தெரியும். எப்படிப்பட்ட சிற்பிகள், எப்படிப்பட்ட வடிவமைப்பாளர்கள் வாழ்ந்திருந்திருக்கின்றனர் நம் தமிழகத்தில்.
நீக்குஅனைவருக்கும் உகாதி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவீரராஜேந்திரன் ,
அதிராஜேந்திரன் வரை வரலாற்றை நன்கு கூறிக்கொண்டு செல்கிறீர்கள்.
சிற்பங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. பார்த்து வியக்குமாறு இருக்கிறது.
அடுத்து ....சரித்திரம் காண வருகிறோம்.
வாங்க மாதேவி அவர்கள். கருத்துக்கு நன்றி
நீக்குஉகாதி பண்டிகை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்
நீக்குவரலாறும் கோயில் படங்களும் அருமை.
பதிலளிநீக்குவருடம் தட்டச்சு பிழையில் 1962 என்று வந்து இருக்கும் யாரும் பார்த்து சொல்லவில்லையோ திருத்த வில்லையே என்று நினைத்தேன், சகோ துரை செல்வராஜு சொல்லி இருக்கிறார்.
கெளதமன் சார் பார்க்கவில்லை போலும் இன்னும்.
சட் என்று கண்ணில் பட்டிருக்காது. நானும் தட்டச்சு செய்யும்போது கவனிக்கவில்லை
நீக்குஅர்த்தநாரி சிலை அருமை. கால்பகுதியில் ஆடை வித்தியாசம் அருமை.
பதிலளிநீக்குஆனால் மூன்று முகங்களுடன் அர்த்தநாரி சிலை அரிது எங்கும் காண கிடைக்கா காட்சி.
அங்கு இருந்த படத்திலும் ஒரு தலையை வைத்து நான்கு நாட்டியப் பெண்களை டிசைன் செய்திருப்பதும் அழகாக இருந்தது. இதற்கெல்லாம் சிற்பியின் கற்பனைத் திறன் மிகவும் அவசியம்
நீக்குதூண் சிற்பங்கள் எல்லாம் அழகு. அபிராமி அம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி கோமதி அரசு மேடம்...
நீக்கு