ஞாயிறு, 9 மார்ச், 2025

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 10 நெல்லைத்தமிழன்

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

அடுத்த வரலாற்றுச் செய்தியாக நான் எடுக்க நினைப்பது கொஞ்சம் கடினமான ஒரு தலைப்புநம்மில் (தமிழர்களில்) பெரும்பாலானவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாத, அரை குறையாகத் தெரிந்துகொண்டு ஒரு சமூகத்தையோ இல்லை ஒரு பகுதியையோ சாடுகின்ற தன்மையை உருவாக்கிய ஒரு தலைப்பு.

அதற்கு முன்பு நாம், தமிழர் (இடையில் ஒரு கமா இருக்கிறது. ஏதேது சீமான் இங்கு எங்கு வந்தார் என்று சந்தேகப்படாதீர்கள்) மரபுடன், பலப் பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் இருக்கின்றோம்மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் பொது ஆண்டுக் கணக்கால்தாம் நாம் நம் தொல் மரபைக் குழப்பிக்கொள்கிறோம். அதாவது கிமு என்று குறித்தாலே, அது ஏதோ புராண காலம் என்ற நினைப்பு நமக்கு வந்துவிடுகிறது. அந்த பொது ஆண்டுகணக்கு என்பது மேற்கத்திய நாடுகளுக்கு, ஆண்டுக்கணக்கை அறிவதற்கு உபயோகப்படலாம். நம் நாட்டிற்கான ஆண்டுக்கணக்கு என்பது, யுகங்களுடன் தொடர்புடையது. அந்தக் கணக்கின்படி நாம் கலியுகத்தின் ஐயாயிரம் ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம்

இன்றைக்கு உலகத்தில் உள்ள நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியை வைத்துக்கொண்டு, நம் நாட்டையோ அல்லது நம் மரபின் தொன்மைத்தன்மையையோ நாம் கணக்கிடக்கூடாது. எல்லோருக்கும் தெரிந்த உதாரணம், இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி பொன் வேய்ந்தபோது, லண்டன் என்பது மீன்பிடித் துறைமுகம்அமெரிக்கா தோன்றிய சில நூற்றாண்டுகள்தாம் ஆகின்றனஉலகத்தின் தோற்றுவாய் பாரதம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பாரதம் என்றாலே இப்போதுள்ள எல்லை அளவீட்டை நம் மனக்கண்ணில் கொண்டுவரக்கூடாது. நம் பாரதம் பெர்ஷியாவின் எல்லை வரை பரவியிருந்த து. இலங்கையும் அதில் ஒன்று. கிழக்குப் பகுதியில் நாம் தற்போதுள்ள பிலிப்பைன்ஸ் வரை நம் கலாச்சாரம் பரவியிருந்த துசில நூல்களில், பார த்தின் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரிஷிகள், பலசாலிகள்/அசுரர்கள் மெக்சிகோ, வடபுலத்தில் பெர்ஷியா போன்ற இடங்களிலும், ஏன் யூதேயா நாட்டிலும் பரவியிருந்தனர் என்று சொல்கிறதுஒரு பதிவில், பரமாச்சார்யார், யூதர்கள் மொழியில் கடவுள் தோத்திரங்களுக்கும் வேதங்களுக்கும் உள்ள ஒலி, அர்த்த ஒற்றுமைகளையும், எப்படி யூதர்கள் தோத்திரங்கள் வேதங்களின் சிதைந்த வடிவம் என்பதைத் தன்னைப் பார்க்கவந்த யூதர்களுக்கு நிரூபித்தார் என்பதையும் படித்தேன். அவ்வளவு தூரம் செல்லவேண்டாம். (இந்த இட த்தில் எனக்கு மெக்சிகோவில் நான் பார்த்த ஒரு இடத்தைப் படங்களுடன் எழுத நினைக்கிறேன். அது தொடர் பதிவுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் யோசிக்கிறேன். மற்ற இடங்களைப் பற்றிய செய்திகளைப் படித்தால்தான்/கண்டால்தான் பாரதத்தின் கலாச்சார, அறிவுசார் தொன்மை எவ்வளவு ஆயிர வருடங்களுக்கு மேற்பட்டது என்பது நமக்குத் தெரியும். )

அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், மூடர்கள் உளறும், ‘பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள், ஜாதியை தமிழர்களிடையே புகுத்தினார்கள், ஜாதி என்பதே ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை அடிமைப்படுத்த பிராமணர்கள் செய்த சதிஎன்பதையே புதிய  டமிலர்கள் நம்பிக்கொண்டிருப்பார்கள்.

வட மொழியில் ஆதி காவியம் பாடிய வால்மீகி, புறநாநூற்றிலும் ஒரு பாடல் பாடியுள்ளர் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். வால்மீகியார் காலம் கிமு 8ம் நூற்றாண்டு என்று வரையறுத்திருக்கிறார்கள். பாரதப் போரில், சேர மன்னன் சேரலாதன் ஒரு தரப்பார் சார்பாக க் கலந்துகொள்ளாமல், இரு திறத்துப் படைகளுக்கு உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, படைவீரர்களுக்கு குருக்ஷேத்திரத்தில் (சேரர் அளம்-கேரளம் எங்கே இருக்கிறது, உத்திரப் பிரதேசத்து குருக்ஷேத்திரம் எங்கே இருக்கிறது) தினமும் உணவு தயாரித்தானாம். இவனது பெயர் பெருஞ்சோற்றுச் சேரலாதன்என்று புறநானூற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இராமாயண கால நிகழ்ச்சிகள் பல, அகநானூறு மற்றும் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது

கிபி 3ம் நூற்றாண்டில் பல்லவர்கள் தொண்டைநாட்டைக் கைப்பற்றி, அதனை ஆண்டனர். சோழநாடு மற்றும் பாண்டிய நாடு, களப்பிர ர் ஆட்சியில் இருந்த து. கிபி 400-450ல், சோழநாட்டை களப்பிரர் குல மன்னன் அச்சுத விக்கந்தன் என்பான் ஆண்டான் என்று பௌத்தத் துறவியான புத்ததத்தர் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

இந்த பௌத்த த் துறவி புத்த தத்தர் காலம் கிபி 400-450 என்று கொள்ளலாம். அவர் சொல்வது, ‘நான் என் மாணவி சுமதி யின் தூண்டுதலால் கண்டதாசன் கட்டிய புத்த விகாரையிலிருந்து அபிதர்மாவதாரம் என்ற இந்த நூலை எழுதினேன். காவிரிப் பூம்பட்டினம் அரண்மனைகள் பலவற்றை உடையது, நிறைய செல்வந்தர்கள் இருந்தனர், மிக அழகிய பூஞ்சோலைகள் நிரம்பியது இந்த மாநகரம்என்றெல்லாம் நூலின் குறிப்பில் கூறியுள்ளார். அவரே விநயவிநிச்சயம் என்ற நூலில், இந்த நூல், புத்த சீடர்களுக்காக எழுதப்பட்டது, சோழ நாட்டில் உள்ள பூதமங்கலத்தில் வேணுதாச விகாரத்தில் தங்கியிருந்தபோது எழுதினேன். அச்சுத விக்கந்தன் என்ற களப்பிர மன்னன் உலகை ஆண்டபோது இந்த நூலைத் தொடங்கி எழுதி முடித்தேன் என்கிறார்.

இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. களப்பிர மன்னர் உலகைஆண்டபோது என்று குறித்திருப்பதால், சேர சோழ பாண்டியர்களை வென்று அந்தப் பகுதி முழுவதுமே களப்பிர மன்னர்கள் நான்கு நூற்றாண்டுகளாக ஆண்டுவந்தனர் என்பது. களப்பிர மன்னரைத் தோற்கடித்து பாண்டிய அரசை மீட்டவன் கடுங்கோன் என்ற பாண்டிய அரசன். இது நடந்தது கிபி 6ம் நூற்றாண்டுஅதே சமயத்தில், 7-8ம் நூற்றாண்டு வரை, பல்லவ அரசர்கள் தொண்டை நாட்டில் கோலோச்சியிருந்ததால், களப்பிர மன்னர்கள் சேர,சோழ,பாண்டிய நாட்டை 4 நூற்றாண்டுகளாக ஆண்டுவந்தனர் என்று கொள்ளலாம்.

வரலாற்றில் என்ன வேண்டுமானாலும் அடித்துவிட முடியாது. ஆனால் பட்டயங்கள், இலக்கியங்கள் (பெரியபுராணம் போன்றவை) சொல்வதை வைத்து ஓரளவு அறுதியிடலாம். சரி களப்பிரர் காலம், கிபியில் வந்தது (இதனை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்). நாம் சொல்ல வந்தது, தமிழின், தமிழரின் தொன்மை. அதற்குள் செல்ல அடுத்த வாரம்தான் முடியும் என்று தோன்றுகிறது.

கோயில் எப்படி இருக்கிறது என்பது ஒரு படத்தில் தெரிகிறதா?












எத்தனை வித நாட்டியப் பெண்கள் ஒவ்வொரு தூணிலும்.



மிகச் சிறிய இடங்களிலும் அழகிய சிற்பங்கள். இந்தத் திறமை  1500 ஆண்டுகளுக்கும் முன்பு இருந்திருக்கிறது.









களப்பிரர் காலத்தில் புத்ததத்தர் என்ற பௌத்த சன்னியாசி எழுதியதை வைத்து இரண்டு செய்திகள் சொல்லியிருந்தேன். மூன்றாவது செய்தி, ‘சுமதிஎன்ற பெண் பெயர்நல்ல மதியுடையவள். பெயர் வடமொழி என்று சொன்னாலும், அவள் பௌத்த மதத்தினைச் சார்ந்தவள். ‘சுமதிஎன்ற பெயர் 17 நூற்றாண்டுகள் பழமையான பெயர்.   கிருஷ்ணன், இராமன் போன்ற பெயர்கள் ஐயாயிரம், ஏழாயிரம் வருடப் பழமை கொண்டது என்பதையும் கருத்தில் கொள்ளவும்

சோழநாட்டில் பூதமங்கலம் எங்கே இருக்கிறது என்று யோசிக்கிறீர்களாஇந்த பூதமங்கலம், பெரிய புராணம் கூறும் போதிமங்கை என்ற இடம். இங்குதான் சம்பந்தர், பௌத்தர்களோடு வாத த்தில் வென்றார்.

திருத்தெளிச்சேரியை அடைந்து வழிபட்டுப் போதி மங்கை அருகே ஞானசம்பந்தர் வரும்போது, அவரது முத்துச் சின்னம், காளம், `பரசமயகோளரி வந்தான் பாலறாவாயன் வந்தான்` என முழங்கிய ஓசை கேட்ட புத்த நந்தி, தேரர் குழாத்துடன் வந்து தங்களோடு வாதிட அழைத்தான். ஞானசம்பந்தருடன் வந்த அடியவர் ஒருவர் அவர் அருளிய தேவாரங்களில் `புத்தர் சமண்கழுக் கையர்` என்ற பாடலைப் பாடி `புத்தன் தலை இடி வீழ்ந்து உருளுக` என உரைத்த அளவில் புத்த நந்தியின் மேல் இடி வீழ்ந்தது. உடன் தேரர்கள் அஞ்சி அகன்றனர். சாரி புத்தன் என்பான் தர்க்க வாதம்புரியுமாறு ஞானசம்பந்தரை அழைத்த போது அந்த அடியவரைக் கொண்டே வாதிடச் செய்து வெற்றி கண்டார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கிச் சைவரானார்கள். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்” (சாக்கியமுனி புத்த விஹார் என்ற பிளாக்கிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ள செய்தியைத் தந்துள்ளேன்)

அடுத்த வாரம் தொடரலாமா?

நெல்லைததமிழன் குறிப்பு : 

உங்கள் பின்னூட்டத்தில்,  சோழர் வரலாற்றுப் பதிவுகள் படிக்க ஆர்வமாக இருக்கிறதா அல்லது பதிவுகள் போரடிக்கின்றனவா  என்று எழுதுங்கள். (நன்றி.. நெல்லைத்தமிழன்)

எ பி ஆசிரியர் குறிப்பு: 

1) தொடரலாம் என்று சொன்னால், மேலும் 12 வாரங்களுக்கு சோழர் சிற்பக் கட்டுரை தொடரும். அதற்குப்பின் நெல்லைத்தமிழனின் மெக்ஸிகோ பயணக்கட்டுரை 14 வாரங்கள் வரும். அதற்குப்பின் மீண்டும் சோழர் கால சிற்பங்கள் கட்டுரைகள் வரும். 

2) மாற்றம் தேவை என்று கருத்துரையில் பெரும்பாலோர் பதிவு செய்தால், மெக்ஸிகோ பயணக்கட்டுரை 2 வாரம், சோழர்கால சிற்பங்கள் இரண்டு வாரங்கள் என்று மாற்றி மாற்றி வெளியிடலாம் என்று யோசனை. 

எனவே, உங்கள் விருப்பத்தை பின்னூட்டத்தில் தவறாமல் குறிப்பிடவும். 

= = = = = = = = = = = =

50 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. ​நெல்லை ஆரம்ப காலத்தில் படங்களுக்கு முக்கியத்துவம் தந்து படங்களால் பதிவை சிறப்பித்தார். படங்களால் சொல்ல முடியாத விவரங்கள் ஒரு சில செய்திகள் உரைநடை கட்டுரையாக அமைந்து பதிவின் தலைப்புக்கேற்ப அமைந்தது.

    பொன்னியின் செல்வன் தாக்கமோ, அல்லது தாராசுரம் கோயிலின் மகிமையோ அவரை சோழ சரித்திரம் பக்கம் திரும்ப வைத்தது. அதன் படி சுருக்கமாக சோழ சரித்திரத்தை வாசகர்களுக்கு இலவச இணைப்பாக கோயில் படங்களுடன் தந்தார்.

    தற்போது சரித்திர பாடத்தை விரிவாக நடத்த தீர்மானித்துள்ளார். அப்போது தலைப்பு மாற வேண்டும். இரண்டு பகுதியாக, முதல் பகுதி சரித்திரம், இரண்டாம் பகுதி கோயில் கோயில் சமபந்தப்பட்ட படங்கள் என்று மாற வேண்டும்.

    என்னுடய ஆலோசனை.

    சரித்திரமும் தொடரட்டும் கோயில் உலாவும் தொடரட்டும். சரித்திரத்தை செவ்வாய் அன்று "செவ்வாய் சரித்திரம்" என்று புதிய பகுதியாக்கலாம். சிறுகதையை சனியில் போடலாம். நான் படிச்ச கதை என்ற தலைப்பில் கட்டுரை தேவை இல்லை. அதை நிறுத்தி விடலாம்

    நெல்லை தொடர்ந்து எழுத அவரை ஆசிரியர் குழுவில் நிரந்தர உறுப்பினர் ஆக்கலாம்.

    கோயில்கள் சரித்திரத்தை பாதுகாத்தாலும் கோயில்களின் மூலம் சரித்திரத்தை முழுமையாக அறியமுடியாது, ஆக தலைப்பில் இருந்து விலகி செல்ல வேண்டி உள்ளது. ஆக இரண்டு தலைப்புக்கள் தேவை. சிந்திக்கவும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நான் சிறிது எழுத்து நிறைய படங்கள் என்றுதான் ஞாயிறு பகுதியில் எழுதிவந்தேன். தாராசுரம் போன்ற கோயில்களின் படங்கள் சுமார் 220 (மிக அதிகமிருக்கலாம்) பகிர்ந்தால், அந்த த் தொடர் பத்து வாரங்களுக்கு வரும். ஆனால் படங்களையே பார்த்தால் போரடிக்கலாம் இல்லை அதே படத்தை வேறு கோணத்தில் பார்ப்பதுபோலத் தெரியலாம் என்பதால் நான் சரித்திரத்தைத் தொட ஆரம்பித்தேன். அது என்னை முழுமையாக ஈர்த்துவிட்டது. அதனால் பதிவுகளில் சரித்திரம், என் கருத்து போன்றவை 20 சதம், 20-22 படங்கள் என்று மாற்றியிருக்கிறேன்.

      சரித்திரப் பாடம் என்று எழுதவில்லை. காரணம் நான் படித்தவைகளில் 20 சதம்தான் சுருக்கமாகத் தருகிறேன். இல்லையென்றால் அது வரலாற்றுப் பாடமாகிவிடும்.

      கோயில்களின் மூலம்தான் நாம் பெரும்பாலும் சரித்திரத்தை அறியமுடியும். காரணம் ஒவ்வொரு கோயிலிலும் உள்ள கல்வெட்டுகள்தாம் நமக்கு கதையைச் சொல்கின்றன.

      நீக்கு
    2. எபியில் ஒரு நாள் எழுதுவதே பெரிய வேலையாக எனக்குத் தெரியுது (மெக்சிகோ பயணம் போன்றவற்றை எளிதாக எழுதிடலாம். யாத்திரையும் அப்படியே. காரணம் ரொம்ப சரித்திரம் தேவையில்லை, புராணங்கள் பக்கம் நான் செல்வதில்லை. ஆனால் இந்த மாதிரி சோழர் வரலாறு என்பது நிறைய படித்தால்தான், அதிலும் பல புத்தகங்கள் படித்தால்தான் ஒரு குன்சா எழுதமுடியும். ரொம்ப சுருக்கமாச் சொன்னால் நல்லாவும் இருக்காது. இதை ஒரு பதிவு எழுதும்போது புரிந்துகொண்டேன் (திருநாவுக்கரசர் வரலாற்றை இரண்டு பத்திகளில் எழுதும்போது, நான் நல்லா சொல்லலை என்று புரிந்தது. அவரது வரலாற்றை நெடியதாகப் படித்தால்தான் மிகச் சரியாக இருக்கும்)

      நீக்கு
  3. இந்தக் கோவிலை நான்குமுறை பார்திருந்தும் இப்போதும் படத்தில் பார்க்கும்போதும் ஏதோ ஏனென்று தெரியாத ஒரு பரவசம் மனதில் வருகிறது.

    வரலாற்றை எழுத நிறைய சிரமம் எடுத்திருக்கிறீர்கள்.  நிறைய படித்திருக்கிறீர்கள்.  அப்படிதான் அத்திமலைதேவனும் கைக்கு வந்ததோ...  அத்திமலைதேவன் மிக மிக அருமையான நூல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். பெரியகோவில் தாராசுரம் கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பல சோழர்காலக் கோவில்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மனதில் பெருமித உணர்வு வரும்

      நீக்கு
  4. இந்த வரலாற்றையும், தாராகாசுரம் போன்ற பழமை வாய்ந்த கோவில்களையும் பார்க்கும்போது இதுவே தொடரட்டும் என்கிற ஏக்கம் வருகிறது.  ஆனால் ஒன்றையே தொடர்ந்து செய்தால் கொஞ்சம் மாறுதலுக்கு இன்னொன்று நடுவில் வந்தால் தேவலாம் என்றும் தோன்றுகிறது. 

    என்ன செய்ய, நெல்லையின் எழுத்து, படங்கள் நேர்த்தி இப்படி குழம்ப வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​தாராசுரத்தை தாரகாசுரனுக்கு தாரை வார்த்துக்கொடுத்து ஸ்ரீராம் தாரகாசுரனுக்கு விமோசனம் தந்துள்ளார்.

      Jayakumar

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா...

      சாதாரணமாக கீதா அக்கா வரும்போது இம்போசிஷன் எழுதச் சொல்வார்.  அவர் சொல்லாமலேயே எழுதி விடுகிறேன்!  பெஞ்ச் மேல் நின்றுகொண்டுதான் எழுதினேன்!


      தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம்  தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம்  தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம்  தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம்  தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம்  தாராசுரம் தாராசுரம் தாராசுரம் தாராசுரம் 

      நீக்கு
    3. ஹா ஹா ஹா. தட்டச்சின் தவறுதலுக்கு நாற்பது தடவை கோவிலின் பெயரை உச்சரித்து புண்ணியம் தேடிக் கொண்டீர்கள். நல்லதொரு வழி முறை. வாழ்த்துகள்.

      நீக்கு
    4. கோவில் சிற்பங்கள் தொடர்ந்து வெளிவரும்போது அயர்ச்சி ஏற்படும் என நான் நினைத்தேன். வாரம் ஒருநாள்தானே, தொடர்ச்சி விட்டுப்போகக்கூடாது என்பது முக்கியம் என எபி ஆசிரியர் கேஜிஜி சார் நினைக்கிறார். அதிலும் அர்த்தம் இருக்கிறது

      நீக்கு
    5. தாராசுரத்தையும் கோவில் நுழைவாயில் போல அழகாக ஸ்ரீராம் அமைத்திருக்கிறார்

      நீக்கு
    6. தங்களின் அனுமானம் நல்ல விதமானது. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்." என்ற வாக்குப்படி (இன்னம்பூர் எழுத்தறிவித்த ஈசனும் நினைவுக்கு வந்தார்.) நீங்கள் எழுத்தையே இறைவன் குடி கொண்டிருக்கும் கோவிலின் நுழைவாசல் ஆக்கியது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நன்றி சகோதரரே.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்

      நீக்கு
    2. இதனை இப்போது தொட்டமளூர் அப்ரயமேயரைச் சேவித்துவிட்டு எழுதறேன் (ஒரு மிக மூத்த பதிவரின் குடும்பத்தோடு ஹாஹாஹா)

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      ஹா ஹா ஹா. ஆகா.... நீங்களும் ஒரு க்ளு தந்து விட்டீர்களா .? ஒரு வேளை நான் யூகிக்கும் அந்த பதிவரின் பதிவில் நீங்களும், அவர் குடும்பமும் சென்று வந்த விபரங்கள் வரும் வரை காத்திருக்கிறேன். இல்லை, நீங்களே கூட ஞாயறு பதிவில் ஒரு இடைவெளி பதிவாக இதை எழுதி வெளியிடலாம்.

      கோவிலில் இறைவனின் நல்ல தரிசனம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    தங்களின் இந்த வார கோவில் பதிவும் அருமையாக உள்ளது. தாங்கள் எழுதும் சரித்திரங்கள் படிக்க நன்றாக உள்ளன. தாராசுரம் (கவனம், கவனமென உள்ளுணர்வு எச்சரிக்கிறது.:)). ) கோவிலின் படங்களும், கூடவே சோழ மன்னர்களின் வரலாறும் ஒவ்வொரு வாரமும் ஞாயறையே பொலிவுற செய்கிறது. இதற்காக நீங்கள் மிகவும் சிரமப்படுக்கிறீர்கள் என்பதையும் உணர்வேன். இருப்பினும் நாங்கள் அறிந்திராத சில வரலாற்று தகவல்களை நீங்கள் தொகுத்து தரும் போது அவை படிக்க மிக ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. உங்களின் இந்த கடும் முயற்சிக்கும், தங்கள் அற்புதமான எழுத்து நடைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இறைவன் அருளால், இவ்விதமாகவே தொடர்ந்து சரித்திர பதிவுகளை தாருங்கள் என விரும்பி கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      சோழர் சரித்திரம் கோயில் சரித்திரம் என எழுத எழுத சென்ற கோயில்களையெல்லாம் சேர்த்து எழுதிக்கொண்டிருக்கிறேன். டிராஃப்டில் உள்ளதே வருட இறுதி வரை வரும் எனத் தோன்றுகிறது. உங்கள் உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி

      வரும் வாரம் நெடிய முக்திநாத் யாத்திரையில் இருப்பேன். திரிவேணி சங்கமம், அயோத்யா, நைமிசாரண்யம் கோரக்பூர் கண்டகி நதி, காட்மண்ட் பசுபதி நாதர் கோயில் முக்திநாத் என நெடிய பயணம். எல்லாம் நன்றாகச் செல்லவேண்டும்

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உங்களது வரும் வாரத்திய பிரயாணம் நல்லபடியாக அமைந்து தெய்வ தரிசனங்கள் அருமையாக கிடைத்திட நானும் மனதாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். இதில் என்னுடைய ஒரு சுயநலமும் அடங்கியுள்ளது. நீங்கள் பிரயாணத்தில் சென்ற இடங்களைப் பற்றிய தகவல்களையும், படங்களையும், முறையே உங்களின் பதிவுகளின் மூலம் நானும் தெரிந்து, பார்த்து ரசித்து அங்கெல்லாம் சென்று வந்த அனுபவங்களை பெறலாம் இல்லையா. ? தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்

      நீக்கு

  7. நெல்லை! நீங்கள் இந்தத் தொடருக்கு சம்பந்தப் பட்டதாகக் கருதும் அளவில் தந்திருக்கும்
    இந்த சரித்திரத் தகவல்களில் வாசகர்களுக்கு அவர்கள் ஆழ்ந்து வாசிப்பார்களேயானால் கேள்விகள் எழாமல் இருக்க முடியாது. அப்படியான கேள்விகள் தாம் நீங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்து முயற்சி எடுத்து எழுதுவதற்கான உணமையான பிரதிபலனுமாகும். கேள்விகள் எழுந்தால் தான் அதுவே ஒரு தூண்டுகோலாகி புதுப்புது தகவல்கள் சேர்க்க உங்களிடமும் ஆர்வம் பிறக்கும். மேலோட்டமான வாசிப்பில் இந்தத் தொடர் அமிழ்ந்து போய் விடக்கூடாது என்று மனதார விரும்புகிறேன். அதற்கான என் முயற்சிகளை நிச்சயம் தருவேன். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். பல இடங்களில் கேள்விகள் எழவேண்டும் அப்போது விவரமாக பதில் எழுதலாம் என நானும் பல இடங்களில் நினைத்திருந்தேன். நானாக வளவளவென எழுதுவதைவிட அது பெட்டர் எனத் தோன்றியது.

      உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  8. திரு. நெல்லை தமிழன் அவர்கள் தொடறலாம்.

    அப்படியே. தாராசுரம் சுவாமிமலை ரூட்டில். திருவலஞ்சுழி என்ற புராதனமான இடம் ஒன்று இருக்கிறது. அங்கு வீற்றிருக்கும் பிள்ளையாரின்
    தும்பிக்கை. வலது பக்கம் வளைந்து இருப்பதால் அந்த பெயர் வந்தது. மேலும் அது. வெள்ளை கல்லினால் ஆனதால் அதை வெள்ளைபிள்ளையார் என்றும் செல்வார்கள்.
    முடிந்தால் அங்கும் சென்று
    புகைப்படங்களுடன் அங்குள்ள
    சிறந்த அம்சங்களை பகிர்ந்ததில் நன்றாக இருக்கும்
    நன்றி
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சக்ரபாணி சார். எனக்கு அந்தக் கோயில் தரிசனம் வாய்த்திருக்கிறது.

      பல இடங்களில் முக்கிய கோயிலைவிட அங்கிருக்கும் சிறிய கோயில் மிகுந்த புகழைப் பெறுவதுண்டு. அதில் ஒன்று திருவலஞ்சுழி. இன்னொரு உதாரணம் பட்டீஸ்வரம் துர்கை. தேனுபுனுரீஸ்வரர் கோயிலைவிட ரொம்ப கூட்டம்.

      திருவலஞ்சுழி கோயில் பின்னால் சிவன் அம்பாள் சன்னதி கோயில் சிற்பக்கலை மிகவும் நல்லா இருக்கும். அதுவும் இந்தப் பகுதியில் வரும்

      நீக்கு
  9. உங்கள் சரித்திர பதிவுகளை தொடர்ந்து தாருங்கள். நன்றாக தருகிறீர்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.

    கோவில் நிறைந்த படங்களுடன் சுற்றி வந்த உணர்வை தருகிறது. சிற்பங்களின் நுட்பமும் ஆச்சரியப்பட வைக்கிறது.

    உங்கள் தலயாத்திரை இறையருளால் அருமையாக அமைய வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
  10. வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் தலைப்பும் அருமை. வரலாறு மில அருமை.
    சரித்திர பாடம் நடத்தி கொண்டே கோயிலை சுற்றி காட்டியது மிக அருமை.

    //கோயில் எப்படி இருக்கிறது என்பது ஒரு படத்தில் தெரிகிறதா?//

    கோயில் எப்படி இருக்கிறது என்று இந்த படத்தில் நன்றாக தெரிகிறது.
    அழகாய் எடுக்கப்பட்ட படம்.

    வெளிச்சம் தரும் சாளரங்கள் வித விதமாய் அழகு. தூண்களின் சிற்பங்கள் அழகு.

    சரித்திர சொல்லும் தாராசுரம் கோயில் பதிவு முடிந்தவுடன்

    மெக்ஸிகோ பயணக்கட்டுரை தொடரலாம் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. அன்பர்கள் அதிகமாக எதை விரும்புகிறார்களோ அதையே கொடுக்கலாம்.


    //இதனை இப்போது தொட்டமளூர் அப்ரயமேயரைச் சேவித்துவிட்டு எழுதறேன் (ஒரு மிக மூத்த பதிவரின் குடும்பத்தோடு ஹாஹாஹா)//

    தொடரட்டும் உங்கள் தலயாத்திரைகள்.
    மூத்த பதிவரும் பதிவு எழுதட்டும் நீங்களும் எழுதுங்கள்.

    தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். நன்றி உங்கள் உற்சாகமூட்டும் கருத்திற்கு

      சோழர் காலக் கோயில், தஞ்சை கும்பகோணம் என்று எடுத்துக்கொண்டால் எழுத எழுத பதிவுகள் தொடர்கின்றன. கௌதமன் சார் எது சரியாக வரும் என நினைக்கிறாரோ அப்படியே வெளியிடட்டும். அவருக்குத் தெரியாததா?

      நீக்கு
    2. வாங்க கோமதி அரசு மேடம். நன்றி உங்கள் உற்சாகமூட்டும் கருத்திற்கு

      சோழர் காலக் கோயில், தஞ்சை கும்பகோணம் என்று எடுத்துக்கொண்டால் எழுத எழுத பதிவுகள் தொடர்கின்றன. கௌதமன் சார் எது சரியாக வரும் என நினைக்கிறாரோ அப்படியே வெளியிடட்டும். அவருக்குத் தெரியாததா?

      நீக்கு
  11. சரித்திரம் சொல்லும் தாராசுரம் கோயில் பதிவு முடிந்தவுடன்

    பதிலளிநீக்கு
  12. இராமயணத்தை யாத்த வால்மீகி முனிவர் புற நானூற்றிலும் ஒரு பாடல் இயற்றியுள்ளார் என்ற கூற்று
    சரியல்ல என்பதே என் எண்ணம்.

    வால்மீகி வாழ்ந்த காலம் கி.மு.3000
    என்று வரலாற்றாசிரியர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். யுகங்கள் கணக்கில் சொன்னால் இதுவே துவாபர யுகத்திற்கு முற்பட்ட காலம்.

    புற நானூறு பல்வேறு காலத்து தொகுப்பு பாடல்களைக் கொண்டது எனினும் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தது அது.

    வால்மீகியார் பெரும் தவத்தில் இருந்த காலத்து அவரை கறையான் புற்று மூடி மறைத்ததால் வால்மீகி என்ற பெயர் கொண்டு அழைக்கப் பட்டார் என்கின்றனர்.

    அப்படியாயின் அவர் இயற்பெயர் என்ன?

    அக்னி சர்மா என்று குறிப்பிடுகின்றனர்.

    தற்காலத்தில் கூட புழக்கத்தில் இருக்கின்ற சர்மாக்கள் பெயர் வரிசையில் வால்மீகி மாமுனிவரின் பெயரைச் சேர்க்க என் மனம் ஒப்பமாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்.. படிக்கும்போதும் எனக்கு ஆச்சர்யத்தையும் அதீத கற்பனை என்ற எண்ணத்தையும் தோன்றச்செய்தது. இதுபற்றி பிறகு எழுதுகிறேன்

      நீக்கு
    2. ஔவையார் போல ஒரே பெயரில் பல புலவர்கள் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு

      நீக்கு
  13. வால்மீகி என்ற புலவர் எழுதிய புற நானூற்றுப் பாடலும் துறவறத்தின்
    மகிமையைச் சொல்லும் பாடல் என்பது மிகவும் அர்த்தமும் ஒப்புமையும் கொண்ட பாடல் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

    அது என்ன பாடல்?.. புற நானூற்றின் 358-வது பாடல் அது.

    ஆர்வம் கொண்டவர்கள் தேடி வாசித்துத் தான் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  14. சங்கப்புலவர்களில் வால்மீகி என்ற பெயரா என்று ஆச்சரியப்படுபவர்களும் இருப்பார்கள். சொல்லப் போனால்
    சமஸ்கிருத சொற்களையும், புலவர்கள் பெயர்களையும் உள்ளடக்கிய செம்மாந்த பெருமை கொண்டவை தான் பண்டைய தமிழ் இலக்கியங்கள்.

    பதிலளிநீக்கு
  15. இவ்வளவையும் சொல்லி விட்டு பழந்தமிழர் வணங்கிய கடவுளர்களும் இன்றும் நாம் வழிப்பாட்டில் கொண்டுள்ள தெய்வங்கள் தாம் என்று பிரகடனப்படுர்துவதில் ஓர் அலாதியான பெருமிதமும் உள்ளடங்கியிருக்கிறது தான்!
    தெய்வ வழிப்பாட்டிலும் விடுபட்டுப் போய்விடாத ஒரு தொடர்ச்சி வழிபாட்டு உணர்வு தலைமுறை தலைமுறைதாக நீண்டு கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்.. அருமையான பாயின்டைப் பிடித்திருக்கிறீர்கள். அது மட்டுமல்ல புதிய தெய்வங்களுக்கும் இடம் கொடுத்து இந்துமதமா பரவலானவர்களையும் அணைத்திருக்கிறது. நிறைய உதாரணங்கள் உண்டு

      நீக்கு
  16. தங்களது வரலாற்று தகவல்கள் சுவாரஸ்யமான இருக்கிறது.

    மெக்சிகோ விடயங்களை அறிந்து கொள்ளவும் ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.. அப்போ அப்போ, மெக்சிகோ, தாய்வான், தாய்லாந்த்து, பாரிஸ், லண்டன், இந்தோநேஷியா, பிலிப்பைன்ஸ், கல்ஃப் தேசங்கள் என என் பயணத்தைப் பற்றி எழுதுவேன். நன்றி

      நீக்கு
  17. /// நம்மில் பெரும்பாலானவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாத, அரை குறையாகத் தெரிந்து கொண்டு ஒரு சமூகத்தையோ ஒரு பகுதியையோ சாடுகின்ற தன்மையை ///

    சில விஷயங்களில் உண்மையைப் பேசுவதே இன்றைய கால கட்டத்தில் ஆபத்தானதாக இருக்கின்றது...

    சில நரிகள் கிளப்பி விட்ட வேத காலத்திற்கு முந்தைய ஆய்வுகள் பற்றி இன்றைய ஆட்கள் சிலர் உயர்த்திப் பேசுகின்ற வார்த்தைகள் மனதை வருத்துகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... உயர்த்திப் பேசுகின்ற வார்த்தைகள்... இந்தப் பகுதி எனக்குப் புரியவில்லை.

      நீக்கு
    2. அதைப் பற்றி இங்கே எழுத இயலாது.. வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவோம்..

      நன்றி..

      நீக்கு
    3. நரிகள் என்றால் நரிகள் தான்..

      நீக்கு
  18. ஆகச் சிறந்த பதிவு..
    படங்கள்..

    மகிழ்ச்சி 😃

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க தஞ்சைக்கார்ர். எந்தப் பகுதி, புறம்படியில் எந்தப் பக்கம் என்று தெரிந்துகொள்ள ஆசை. உங்களுக்குத் தெரியுமா? தஞ்சை மாமணிக்கோயில் 16ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியின்போதுதான் தற்போதுள்ள இத்துக்கு மாற்றப்பட்டது, அதற்குச் சான்றுகள் இப்போதும் நீலமேகப் பெருமாள் வருடத்துக்கு ஒரு முறை தஞ்சை உட்புறத்துக்கு வருகிறார்.

      நீக்கு
    2. தெரியும்..

      நீலமேகப் பெருமாள் வருடத்துக்கு ஒரு முறை வைகாசி திருவோணத்தில்
      தஞ்சையின் உட்புறத்துக்கு வருகின்றார்...

      நீக்கு
  19. வரலாற்று விஷயங்களுக்கு உழைத்திருக்கிறீர்கள் நெல்லை. அதுவும் எல்லாவற்றையும் நினைவில் வைத்து ஒப்பிட்டு எழுதுவது என்பது தனிச் சிறப்பு என்பதோடு அதற்கு நல்ல நினைவாற்றல் ப்ளஸ் நேரம் ஆர்வம் எல்லாம் மிக மிக முக்கியம். அதை நன்கு பயன் படுத்தியிருக்கீங்க நெல்லை. பாராட்டுகள்.

    படங்கள் அத்தனையும் ரசித்தேன், இன்று பார்த்தவற்றிற்கும் இதக்கும் சொல ஒற்றுமைகள் இருப்பதாகப்படுகிறது குறிப்பாகச் சிற்பங்களில்.

    தாராசுரம் நேரில் போய்ப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

    //எத்தனை வித நாட்டியப் பெண்கள் ஒவ்வொரு தூணிலும்.//

    ஆமாம்....குட்டி குட்டி சிற்பங்களும் கூட செம.

    இதை முழுவதும் முடித்துவிட்டு அடுத்த பயணக் கட்டுரை தொடங்கலாம் நெல்லை. ஏனென்றால் வாசிப்பவர்களுக்கு டச் விட்டுப் போகும். ஞாயிறு மட்டும்தானே பதிவு.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!