வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
இலக்கியங்களில் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கிபி 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சேரன் செங்குட்டுவன் காலம் கிபி 2ம் நூற்றாண்டு. கரிகாலன் காலம் கிமு 1ம் நூற்றாண்டு. இந்த வரலாற்றைப் படிக்கும்போது கிடைத்த சுவாரசியமான தகவல். கிமு 2ம் நூற்றாண்டில் இலங்கையை சுமார் 80 வருடங்கள் தமிழர்கள் ஆண்டனர். மீண்டும் சுமார் 20 வருடங்கள் கிமு 1ம் நூற்றாண்டில் ஆண்டனர்.
மநுநீதிச் சோழன், கரிகால் பெருவளத்தான் (இவர்களில் இரண்டு கரிகாலர்கள் இருக்கின்றனர். முதலாம் கரிகாலன், இரண்டாம் கரிகாலனுக்கு இரண்டு தலைமுறை முந்தையவன்) போன்றோர் கிமு 2ம் நூற்றாண்டில் (மற்றும் இரண்டாம் கரிகாலன் கிமு முதல் நூற்றாண்டில்) வாழ்ந்திருக்கின்றனர்.
முற்காலச் சோழர்கள், கிமு 3ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து கிபி 300 வரை ஆண்டிருந்திருக்கின்றனர்.
கிமு 3ம் நூற்றாண்டுக்கு முன்பு – சிபிச் சோழன், முசுகுந்தன், காந்தன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்
கிமு 3ம் நூற்றாண்டு – செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
கிமு 2ம் நூற்றாண்டு – மநுநீதிச் சோழன், முதல் கரிகாலன்
கிமு 1ம் நூற்றாண்டு – இரண்டாம் கரிகாலன். இவன் இமயம் வரை சென்றவன்
கிபி 1 முதல் 150 வரை – நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் (மூவருமே ஒருவராக இருக்கலாம்), கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன் மற்றும் சிலர்
கிபி 150-300 – நெடுமுடிக் கிள்ளி, இளங்கிள்ளி
இந்த மாதிரி ஆண்டு வரையறை, இலக்கியங்களை வைத்து (அதில் உள்ள செய்யுள்கள் குறிப்பிடுவதை வைத்து) ஓரளவு வரையறை செய்கின்றனர். இதில் தவறுகள் இருக்கலாம். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த உ.வெ. சாமிநாதையர் அவர்கள், அப்போதே பல தமிழ் இலக்கிய நூல்கள் அழிந்துபட்டிருந்தன என்று குறிப்பிடுகிறார். அதனால் கால வெள்ளத்தில் கடந்த 3500 ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான முக்கியமான நூல்களை நாம் இழந்திருக்கிறோம். அதனால் வரலாற்றைச் சரியாக வரையறை செய்வது இயலாது.
நம் சரித்திரப் பாட த்தை இத்துடன் நிறுத்திக்கொண்டு, தாராசுரம் கோயிலில் கீழ்கண்ட சிற்பங்கள் எங்கு இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி … ஏய் ஏய்… திரைப்படப் பாடல்களை இங்கு கொண்டுவராதே. ஒரு பக்கம் பார்த்தால் எருதின் தோற்றம், மறுபக்கம் யானையின் தோற்றம். ஒரே உருவத்தில். என்னே நம் சிற்பிகளின் கைவண்ணம் (ஆயிரம் ஆண்டுகள் பழமையானது)
கோயிலின் உள் நுழைந்தபிறகு (த்வஜஸ்தம்பத்திற்கு முன்பு) நம் வலது புறத்தின் மூலையில் தொல்லியல் துறை அலுவலகம் போன்று வெளி மண்டபத்தில் இரும்பு கிராதிகளால் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பெரிய இடத்தில், ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்திருந்த இட த்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக் கற்களை வைத்திருக்கின்றனர். நான் ஆர்வத்தோடு அவர்களை அணுகி அந்தச் சிற்பங்களைக் காணவா என்று கேட்ட தற்கு அவர்கள் அனுமதி தந்தனர். பலரும் இந்த இட த்தைப் பார்ப்பதில்லை. அங்கு நான் கண்ட சிற்பங்கள் மற்றும் விவரங்களை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.
இதனைக் கண்டபோது எனக்கு வந்த சந்தேகம், இந்த ஐராவதீஸ்வரர் கோயிலையே சாளுக்கியச் சோழன் அமைத்த தா அல்லது அந்த இட த்தில் அதற்கு முன்பே ஏதேனும் கோயில் இருந்த அது தொடர்பான கல்வெட்டுகளும் இருந்து, அவன் முழுமையாகச் சீரமைத்துப் புதிதாகக் கட்டியதாக இருக்குமோ என்று.
நமக்கு தமிழ் கல்வெட்டுகளில் Reference Guide என்பதுபோல அமைந்துள்ளது இராஜராஜன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகள். கிட்ட த்தட்ட பாடப்புத்தகம் போன்று மிக அழகாகச் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் அவை. அவனுடைய காலத்துக்கு நூற்றாண்டுகள் பிற்பட்ட கோயில்களின் கல்வெட்டுகள் அதனைவிட மேம்பட்டதாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை. ஐராவதீஸ்வரர் கோயிலில் தொல்லியல்துறை வசம் இருக்கும் கல்வெட்டுச் சிதைவுகள் காலத்தால் முற்பட்டவை போன்று எனக்குப் பட்டது (இருப்பதில் சிலவற்றில்)
எவ்வளவு அழகான பிள்ளையார் சிலை. இது கோயிலின் வெளிப்புற மாடத்தில் இருந்த தோ இல்லை தனிக் கோயிலில் இருந்ததோ தெரியவில்லை. பின்னணியில் பழங்கால சுவரோவியங்கள் தெரிகின்றனவா?
தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்று பல கல்வெட்டுகளை நான் இங்கு காணவில்லை. உடைந்த நிலையில் சில பல கல்வெட்டுகளைக் கண்டேன். எல்லாக் கல்வெட்டுகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை போன்று தோன்றவில்லை. சில, காலத்தால் மிகவும் முற்பட்டது என்றே தோன்றியது.
ஐராவதீஸ்வரர் கோயிலைக் கட்டியது இரண்டாம் ராஜராஜ சோழன் . ‘சோழன்’ என்ற பெயர் இருந்தாலும் இவன் சோழ மரபில் வந்தவனல்லன். இவனைச் சாளுக்கிய சோழன் என்கிறார்கள். அது என்ன என்பதுதான் நம் அடுத்த வரலாற்றுச் செய்தி.
சாளுக்கிய அரசு, கீழைச் சாளுக்கிய அரசு, மேலைச் சாளுக்கிய அரசு என்று இரண்டாகப் பிளந்துகிடந்த து. (தொடரும் படங்களில் பார்க்கவும்). சாளுக்கிய அரசு மிகவும் பெரியது. சாளுக்கிய அரசர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவன் இரண்டாம் புலிகேசி. (கிபி 600-640). இரண்டாம் புலிகேசி வடக்கே ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்து அவரைத் தெற்கு நோக்கி முன்னேறவிடாமல் செய்தான். இருந்தாலும் இவன் நரசிம்மவர்ம பல்லவனால் தோற்கடிக்கப்பட்டான். சாளுக்கியர்கள் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். (அப்போது வாதாபியும் அழிக்கப்பட்டது, புலிகேசியும் அழிக்கப்பட்டான்). கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய அரசன், இரண்டாம் நந்தி வர்ம பல்லவனையும் தோற்கடித்து காஞ்சியைக் கைப்பற்றினான். எந்த ஒரு பேரரசும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடித்ததில்லை. காரணம் அந்த அரசினைத் தலைமை தாங்கும் அரசனின் வீரம் விவேகம் போன்றவைகள்தாம். இவை பரம்பரை பரம்பரையாக வருவன அல்ல.
இராட்டிரகூடர்கள் எழுச்சிபெற்ற சமயம், சாளுக்கிய அரசு பொலிவிழந்து மறைந்தது. பிறகு 10ம் நூற்றாண்டில், தைலப்பா என்பவனின் கீழ், கல்யாணியை (பசவகல்யாண் என்ற இடம்) தலைநகராக க் கொண்டு மேலைச் சாளுக்கிய அரசு உருவானது. அதே சமயம், இன்னொரு பிரிவினர், வேங்கியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டனர். அவர்கள் கீழைச் சாளுக்கிய அரசு. இந்த இரண்டு அரசுகளும் ஒன்றிணைந்தால் அது தெற்குப் பகுதிக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்பதால், சோழர்கள், கீழைச் சாளுக்கிய அரசுடன் எப்போதும் தொடர்பும் உறவும் கொண்டிருந்தனர். மேலைச் சாளுக்கிய அரசோ, கீழைச் சாளுக்கிய அரசை விழுங்க தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தது.
கீழைச் சாளுக்கியர்கள் இதனால் சோழர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். உதாரணமாக அரிஞ்சய சோழன், கீழைச் சாளுக்கிய மன்னன் வீமனுடைய மகள் கல்யாணியை மணந்துகொண்டிருந்தான். பேரரசன் இராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை (இராஜராஜனின் அக்காள் பெயரும் குந்தவை நாச்சியார்தான். அவள் மீது கொண்டிருந்த அன்பால், மகளுக்கு அவள் பெயரையே வைத்திருந்தான் இராஜராஜசோழன்) கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தன் மணந்திருந்தான். பிற்பாடு, ராஜேந்திர சோழன் (ராஜராஜனின் தவப்புதல்வன், கங்கைகொண்ட சோழன் என்று அழைக்கப்படுபவன்) தன் மகளான அம்மங்கா தேவியை, வேங்கி நாட்டு மன்னன் இராஜராஜ நரேந்திரனுக்குக் கொடுத்து உறவு ஏற்படுத்திக்-கொண்டான். இதனால் வேங்கி நாடு (கீழைச் சாளுக்கிய நாடு) பல விதங்களில் நன்மை பெற்றது.
இந்த வரலாற்றை வரும் வாரங்களில் தொடர்வோம்.
(தொடரும்)
காக்க காக்க கனகவேல் காக்க.
பதிலளிநீக்குநோக்க நோக்க நொடியில் நோக்க
நீக்கு/// ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்திருந்த இட த்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக் கற்களை வைத்திருக்கின்றனர். நான் ஆர்வத்தோடு அவர்களை அணுகி அந்தச் சிற்பங்களைக் காணவா என்று கேட்ட தற்கு அவர்கள் அனுமதி தந்தனர். பலரும் இந்த இட த்தைப் பார்ப்பதில்லை. ///
பதிலளிநீக்குமுத்திரை பதிக்கப்பட்ட நிகழ்வு...
டாரா சொரம் டெம்பிள் நாங்களும் விசிட் பண்ணினோம்... என்ற மிதப்பில் தான் பலரும் ...
தங்களது ஆர்வமே தங்களது பலம்..
வாழ்க நலம்..
வாங்க துரை செல்வராஜு சார். மிக்க நன்றி
நீக்குஇன்று காத்மண்டுவில். இதோ பல கோயில்களுக்கும், பசுபதிநாத் கோயில் உட்பட
நீக்குபடங்களைவிட வரலாறு சுவாரஸ்யமாக இருக்கிறது!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். அடிமடீலயே கைவைக்கறீங்க.இது ஞாயிறு படப்பதிவுகள்
நீக்கு//தைலப்பா என்பவனின் கீழ்//
பதிலளிநீக்குஇவர்தான் தலப்பாக்கட்டி பிரியாணியை அறிமுகப்படுத்தினாரோ!!!!!
ஸ்ரீராம் அவர்களுக்கு எதிலெல்லாமோ ஆர்வம் ஏற்படுகின்றது...
நீக்குதலப்பா கட்டியை எவன் அறிமுகம் செய்திருந்தால் என்ன?...
தலப்பாவுக்குள்ள என்ன இருந்ததோ யாருக்குத் தெரியும்!
ஸ்ரீராம்.. காலையிலேயே பசி வந்துவிட்டதா?
நீக்குஅருமையான பசுபதிநாதர் தரிசனம், பாழாகிவிட்ட பாக்மதி நதி, பாலாஜி தரிசனம் என இன்று பொழுது விடிந்தது
இளஞ்செட்ச்சென்னி தேரோட்டுவதில் கில்லாடி என்று சாண்டில்யன் மூலம் படித்திருந்தேன்.
பதிலளிநீக்குசெருப்பாழி என்றால் என்ன? அதை அவன் ஏன் எறிந்தான் என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?
உங்கள் இரண்டு கேள்விளுக்கும் பிறகுதான் வந்தபிறகு பதிலெழுதணும் ஸ்ரீராம். பயணத்தில்
நீக்குநரசிம்மவர்ம பல்லவன்-புலிகேசி சண்டையை நான் சாண்டில்யன் மூலமும் காலச்சக்கரம் நரசிம்மா மூலமும் படித்திருக்கிறேன். அவரவர் பாணியில் சுவாரஸ்யமாய் எழுதியிருந்தார்கள் இருவரும். சாண்டில்யன் சொன்ன உக்ரோதயம் தான் அத்திமலை தேவனுக்கு ஆதார பொருள்.
பதிலளிநீக்குகாலச்சக்கரம் நரசிம்மா, காதல் வருணணை, வெறும் பேச்சுக்கள் என காலம் கடத்தாமல் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார்
நீக்குஇரண்டாம் புலிகேசியின் மகன் பெயரும் விக்ரமன்தான். அவன்தான் பின்னாட்களில் பல்லவர்மேல் படையெடுத்து வந்து பழிதீர்த்துக் கொண்டானோ?
பதிலளிநீக்குசரித்திர பாடம் நன்றாக இருந்தாலும் யாருக்குப் பின் யார் ஆண்டார், எந்த பகுதிகள் எந்த காலத்தில் யாருடைய ஆதிக்கத்தில் இருந்தன போன்ற விவரங்களை மனதில் தக்க வைக்க முடியவில்லை. வயதும் காரணம் ஆக இருக்கலாம்.
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல் அருமையாக உள்ளன.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். முதலாம், இரண்டாம்... ஒரே அரசனைப் பலவித பெயர் கொண்டு குறிப்பிடுவது என வரலாறே கொஞ்சம் குழப்பம்தான்
நீக்குவாங்க ஜெயகுமார் சார். முதலாம், இரண்டாம்... ஒரே அரசனைப் பலவித பெயர் கொண்டு குறிப்பிடுவது என வரலாறே கொஞ்சம் குழப்பம்தான்
நீக்குசமீப காலமாக மறதி கூடிவிட்டது. பைப்பை மூட மறந்து விடுவது, பேன் ஆப் பண்ண மறப்பது போன்ற தவறுகளால் பாஸிடம் திட்டு வாங்க வேண்டி இருக்கிறது.
நீக்குஎனக்கு அவ்வளவாக மறதி இல்லை. ஆனால் மனைவி சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதில்லை என்பதால் சிலசமயம் அவள் கடுப்படிப்பாள்
நீக்குவரலாற்றைப் படிச்சாச்சு! எக்ஸாம் உண்டா? மீ அவுட்!!! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குபடங்கள் செம அதில் சில நல்ல தெளிவாக இருக்கின்றன. கல்லின் நிறம் கருமையும் வெள்ளையும் கலந்து அழகு. சில மங்கிய நிலையில்.
எருதும் யானையும் கலந்து கட்டி செம கற்பனை அக்கலைஞர்களுக்கு அப்போ! பாருங்க, நாம இப்ப செய்யறது எதுவும் புதுமை இல்லை. எல்லாமே இங்கு இருப்பதுதான்.
அப்படத்திற்கு மேல கொஞ்சம் தொப்பை உள்ள சிற்பம் அதன் இடப்புறம் கீழ பிள்ளையார் போஅ இருக்கு இத்துனூண்டு சைஸில். அந்தச் சிற்பம் ?
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. மிகச் சிறிய இடத்தில் அருமையாகச் செதுக்கியிருக்கிறார்கள். அதே காலத்தில் காமாசோமாவென சாதாரணமாக அமைக்கப்பட்ட கோயில்களும் உண்டு
நீக்குபழங்காலச் சுவர் ஓவியங்கள் தெரிகின்றன பிள்ளையாரின் பின்னால்...ஓவியங்கள் அழிந்து வருகின்றன என்பதும் தெரிகிறது.
பதிலளிநீக்குபிள்ளையார் க்யூட். கொண்டு வைக்கப்பட்டது போல்தான் தெரிகிறது, நெல்லை. தந்தம் கூட கொஞ்சம் உடைந்து மழுங்கியிருக்காப்ல இருக்கு.
வெவ்வேறு பிள்ளையார்சிலைகள் போல...
அண்ணனும் தம்பியும் இருக்காங்க அப்பா இடம் ஆச்சே!!
Raja Raja chozhan himself அதுக்குப் பிறகு லைட் அடிச்சு....மறைந்து அடுத்தப்ல sanskrit நு வந்திருக்கு. அவரேகற்றுக் கொண்டதாகவா அல்லது ப்யன்படுத்தியதாகவா? என்ன சொல்லியிருக்காங்கன்னு தெரியல
கீதா
வெளிநாடுகளில் இன்னும் செம்மையாக வைத்திருந்திருப்பார்கள். நான் பாரிஸில் மூவர் மியூசியத்தில் ஒரு சிற்பத்தைத் தொட்டேன் அங்கிருந்த கைடே பதறிவிட்டார்
நீக்குதூண்கள் செமையா இருக்கு. நுணுக்கமான வேலைப்பாடுகள். தம்மாத்துண்டு கேப்குள்ளா உருவச் சிற்பங்கள்...ஹப்பா...செம.
பதிலளிநீக்குதூணில் ஒரு சிற்பம் பார்த்ததும்..அதில் ஒல்லியான கால்கள்..ஒய்யார போஸ்.....ஒரு வேளை இங்கிட்டு பார்த்து தான் பார்பி டால் பண்ணிருப்பாங்களோன்னு தோன்றியது. டக்குனு.
இப்பலாம் ஃபோட்டோ ஷூட்க்கு இல்லைனா நடன ஷூட் கு பலவித போஸ்களில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்வது போல ..பெண் உருவங்களை ஒவ்வொரு போஸிலும் செதுக்கியிருக்காங்க...செம...
கீதா
பல கோவில்களில் நாட்டியப்பெண்கள் சிற்பங்கள் பார்த்து இப்படீல்லாம் ஆட முடியுமா? ஆடினால் கால் கோணிக்கொள்ளாதா என்று தோன்றும்
நீக்குசாளுக்கிய அரசு பற்றி பள்ளியில் படித்த நினைவு வருது...மேலை கீழை...
பதிலளிநீக்குநம்ம நரசிம்மா புஸ்தகத்துலயும் இந்த சண்டை பற்றி வருமே...
கடைசிபாரா படித்த நினைவுருக்கு...
படங்கள் எல்லாம் செமையா இருக்கு, நெல்லை
கீதா
நரசிம்மா அவர்களின் நாவல்களில் உங்களுக்கு எது மிகவும் பிடித்தது கீதா ரங்கன் க்கா?
நீக்குவரலாறை நன்றாக சொல்லிக்கொண்டு போகிறீர்கள்.
பதிலளிநீக்குதாராசுரம் சிற்பம் படங்கள் நன்றாக உள்ளன.
// ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்திருந்த இட த்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக் கற்களை வைத்திருக்கின்றனர்....// இவற்றை எல்லாம் எமக்கும் காண தந்ததற்கு நன்றிகள். சிற்பங்கள் நீங்கள் கூறியதுபோல காலத்துக்கு முந்தியனவாகவும் தெரிகிறது. சுவர் ஓவியங்களும் கண்டோம்.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி. நேற்று காத்மண்டிலிருந்து ஜனக்புரி (நேபாள்) பிரயாணத்தினால் உடனே பதிலெழுத இயலவில்லை
நீக்குவரலாறு அருமை.
பதிலளிநீக்குஐராவதீஸ்வரர் கோயில் போனால் உங்கள் பதிவை கையேடாக எடுத்து போனால் ஒன்றையும் விடாமல் பார்த்து வரலாம்.
சிற்பங்கள் , தூண்கள், கல்வெட்டுக்கள் என்று அனைத்தையும் அழகாய் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.
பழங்கால சுவரோவியங்கள் தெரிகின்றனவா?//
தெரிகிறது, முன்னே இருக்கும் பிள்ளையார் அழகு
மயிலேறி விளையாடி வா என்று அழைத்த முருகன் அழகு.
என் கணவர் கல்வெட்டுக்கள், பற்றி படித்த போது சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் கல்வெட்டில் கால ஆராய்ச்சி என்று நிறைய எழுதிய நோட் இருக்கிறது ஒரு நாள் பதிவு போட வேண்டும்.
வாங்க கோமதி அரசு மேடம். மிக்க நன்றி. கல்வெட்டு பதிவு கண்டிப்பாக போடுங்க. அரசு சார் பல்கலை வித்தகர்
நீக்குஒரு பக்கம் பார்த்தால் எருதின் தோற்றம், மறுபக்கம் யானையின் தோற்றம். //
பதிலளிநீக்குமீனாட்சி அம்மன் கோயிலில் உண்டு இது போல.
தொல்லியல் துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் சிற்பங்கள் எல்லாம் அழகு. அதில் ஒரு சிலையில் காதுகளில் குச்சியை விட்டு காட்டுவார் . உங்களுக்கு காட்டினாரா அந்த சிற்பத்தை . அதைப்பற்றி அவர் சொன்னது எனக்கு மறந்து விட்டது.
உழவாரசெய்யும் கருவியை தோளில் சுமந்து அப்பர் கை கூப்பி நிற்கும் சிலை அருமை. கையில் தாளத்தோடு சம்பந்தர் இருக்கிறார். சுந்தரர் இருக்கிறார். நாகராஜர், அல்லது ராகு என்று அழைக்கப்படுபவர் இருக்கிறார். சாஸ்தா , மற்றும் அனைத்து கலை நுணுக்கத்துடன் உள்ள அனைத்து சிலைகளின் படங்களும் அருமை.
மிக்க நன்றி
நீக்கு