ஞாயிறு, 16 மார்ச், 2025

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 11 நெல்லைத்தமிழன்

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

சென்ற வாரம் தமிழர்களின் தமிழ் இலக்கியங்களின் தொன்மையைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்து களப்பிரர் காலத்துக்குச் சென்றுவிட்டேன் (பாரதப் போர் என்று ஆரம்பித்து). தொன்மையை இந்த வாரம் காணலாம் (முழுமையாகவா? தெரியவில்லை)

தமிழகத்தில் முதல், இடை, கடைச் சங்கங்கள் இருந்தன என்பது நமக்குத் தெரியும். இலக்கியங்களையும், புதிய தமிழ் இலக்கியங்கள் உருவாகாத களப்பிரர் காலத்தையும் நோக்கும்போது, கடைச்சங்க காலம் என்பது கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ம் நூற்றாண்டு இறுதிவரை இருக்கலாம் என்று அறுதியிட்டிருக்கின்றனர். அதாவது கடைச்சங்ககால நூல்கள் தோன்றி, தொகுக்கப்பட்ட காலம் சுமார் 6 நூற்றாண்டுகள் என்று சொல்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியம் என்ற நூலில் சமண பௌத்தர்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அதனால் இது கிபி மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தைய நூலாகும். வடமொழியாளர் தமிழகம் புகுந்த காலம் கிமு 1000 ஆண்டு என்று ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்ட இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.  (உங்கள் நினைவுக்காக எழுதுகிறேன்கிமு 5, கிமு 4, கிமு 3, கிமு 2, கிமு 1, கிபி 1, கிபி 2, கிபி 3…. என்ற வரிசையில்தான் நூற்றாண்டுகள் வரும். ஆக்ஸ்போர்ட் சொல்வது, வடமொழியாளர் தமிழகம் புகுந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், நம்முடைய கோவில் வரலாறுகள் சொல்வது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பாண்டவ அரசர்கள் அஞ்ஞான வாசத்தில் வந்திருக்கின்றனர், அவர்கள் கேரளப் பகுதிகளில் கோயில்கள் கட்டியிருக்கின்றனர் என்று. ஆங்கிலேயர்களுக்கு நம் புராண இதிஹாச நூல்கள் பற்றியும் கோயில் வரலாறுகள் பற்றியும் முழுமையான புரிதல் இருந்திருக்க வாய்ப்பில்லைதமிழகத்தில் வடமொழி வடவர்கள் மூலம் புகுந்திருந்தால், அது தமிழர்களிடையே நன்கு வேரூன்ற 3-4 நூற்றாண்டுகளாவது ஆகியிருக்கவேண்டும்.

தொல்காப்பியரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர்என்று சொல்கின்றனர். இது வடமொழி இலக்கண நூல்இந்த ஐந்திர இலக்கண நூலுக்கு மிக மிகப் பிற்பட்ட து பாணிணீயம் இலக்கண நூல். பாணிணி காலம் கிமு 7ம் நூற்றாண்டுபாணிணி இலக்கண நூல்தான் வடமொழிக்கு வடநாட்டில் இருந்த இலக்கண நூல். (அது தமிழகத்தில் அப்போது பரவியிருந்திருக்காது. பரவியிருந்தால், தொல்காப்பியரை பாணிணீயம் நிறைந்த தொல்காப்பியர்என்று சொல்லியிருப்பர். ) தொல்காப்பியர் காலத்தில் கபாடபுரம் கடல்கோளால் அழிந்தது என்று சொல்லியிருக்கிறார் இறையனார் தன் களவியல் நூலில்.  (மூன்று கடல்கோள்கள் நிகழ்ந்தன என்று இலங்கை மகாவம்சம் சொல்கிறது. கிமு 2350ல், கிமு 5ம் நூற்றாண்டில், கிமு 3ம் நூற்றாண்டில்). அதனால் தொல்காப்பியர் காலம் கிமு 5ம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

தொல்காப்பியத்தில்,

வடசொற் கிளவி வடஎழுத் தொரீ இ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

சிதைந்தன வரினும் இயந்தது வரையார்

என்று வடமொழி மற்றும் ப்ராக்ருத கலப்புக்கு தொல்காப்பியர் விதிகள் செய்திருக்கிறார்.

தொல்காப்பியர் தன்னுடைய பேரிலக்கண நூலில் நூற்றுக்கு சுமார் இருபது சதவிகிதம் தமக்கு முன்பிருந்த புலவர்கள் பற்றிச் சொல்கிறார்.

உதாரணம் யாப்பென மொழிவர் யாப்பறி புலவர்

அப்படியென்றால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பல இலக்கணப் புலவர்கள் இருந்திருக்கவேண்டும். இலக்கியங்கள் இல்லாமல் இலக்கணம் இல்லை. அதனால் நூற்றுக்கணக்கான இலக்கிய நூல்கள் இருந்திருக்கவேண்டும் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்என்பது பழஞ்சொற்றொடர்அதனால் கிமு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் இலக்கியங்களும் இலக்கணங்களும் இருந்திருக்கவேண்டும். அதற்கு முன்பே வடமொழிக் கலப்பும் இருந்திருக்கவேண்டும்.

என்னுடைய அனுமானம், தமிழ் மொழியில் வடமொழி கலப்பு வந்து ஐயாயிரம் ஆண்டுகளாகவாவது இருந்திருக்கவேண்டும். இதற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை எனினும்பாரதக் கதையில் பாண்டவர்கள் தமிழகம், கேரளப் பகுதிகளுக்கு வந்ததும், கோயில்கள் கட்டியதும், இராமாயண காலத்தில் இலங்கை சென்றதும் இருப்பதால்ஐயாயிரம் என்று குறுகிய காலத்தை நான் குறித்திருப்பது பொருத்தமுடையதாகவே எனக்குத் தோன்றுகிறது.







பல்லவர்கள் காலம் கிபி 3ம் நூற்றாண்டிலிருந்து 7-8ம் நூற்றாண்டு வரை என்று பார்த்திருக்கிறோம். களப்பிரர் காலம் கிபி 3ம் நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டு வரை. பாண்டிய நாட்டில் களப்பிரர் அழிக்கப்பட்டு பாண்டிய அரசனின் கை ஓங்கியது (கிபி 590)  6ம் நூற்றாண்டில்சோழ நாட்டில் சிம்மவிஷ்ணு பல்லவன் காலத்தில்(கிபி 575)  களப்பிரர் அழிக்கப்பட்டு அது பல்லவநாட்டைச் சேர்ந்ததாக இருந்ததுகளப்பிரர்கள் சிற்றரசராகி பாண்டிய மன்னன் கீழ் சில பகுதிகளை ஆண்டனர் என்று வரலாறு சொல்லும். கிபி 350ல் முடியிழந்த சோழ மன்னர்கள், கிபி 875 வரை தலைதூக்க முடியவில்லை. பிறகுதான் பிற்காலச் சோழர்கள் அரசுக்கு வருகிறார்கள்.

கிபி 675ல் சமணர்கள் கழுவேற்றம் பற்றி (பாண்டிய அரசு மதுரை) குறிப்புகள் இருப்பதால், பாண்டிய நாட்டை ஆண்டுவந்த களப்பிரர் முதலில் பௌத்தராகவும் பிற்காலத்தில் சமண மதத்தைச் சார்ந்தும் இருந்தார்கள் என்று கொள்ளலாம். சோழ நாட்டில் பௌத்தம் தழைத்தோங்கியது.  (இதை எழுதும்போது திருவாரூர் கோயிலில் பார்த்த பௌத்த சிலையும், நம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் சோழநாட்டில் பௌத்தம் புத்தகமும் நினைவுக்கு வருகிறது). இதைப் பற்றி இன்னும் நிறைய செய்திகளுடன் எழுதலாம் ஆனால் படிப்பவர்களுக்கு போரடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. வரலாற்றில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.














பல்வேறு நாட்டியச் சிற்பங்களை இன்றைய பகுதியில் பார்த்திருப்பீர்கள். 1200 ஆண்டுகள் பழைமையான கோயில்களிலும் நாட்டியச் சிற்பங்கள் உண்டு. நாட்டிய இலக்கணப் புத்தகங்கள் மிகவும் பழைமையானவை (அதுவும் கிமுவிற்கு நம்மை இட்டுச்செல்லும். கிமு 1500க்கு முன்பு). அந்த மாதிரி கோணத்தில்தான் நாம் தமிழ் மொழியையும் அத்துடன் இயைந்த வடமொழியையும் அணுகவேண்டும்.

தொல்காப்பியர் இலக்கணத்துக்குப் பிற்பட்ட காலத்தில் முளைத்த தமிழ் நூல்கள், வடமொழியைத் தவிர்த்து நல்ல தமிழில் அல்லது தமிழ் இலக்கணத்துக்கு உரித்தான சொற்களுடன் இயற்றப்பட்டன என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்இது பற்றி வரும் வாரங்களில் காணலாம்.

(தொடரும்) 

38 கருத்துகள்:

  1. தமிழைப் பற்றிய ஆய்வு அழகு.. அரிய குறிப்புகள்..

    பதிலளிநீக்கு
  2. கோயிலின் படங்கள் வழக்கம் போல அழகு.. அருமை...

    பதிலளிநீக்கு
  3. வரலாறும் தமிழுமாக இன்றைய பதிவு சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குமே இந்தத் தேடல் பிடித்திருந்தது. எப்படி தமிழகத்தில் வடமொழி மிகவும் விரவியிருக்கிறது என்று அறிய விரும்பினேன்

      நீக்கு
    2. சமஸ்கிருதத்தை வடமொழி என்று குறிப்பிடுவது அவ்வளவு சரியல்ல . சமஸ்கிருதம் என்றே தெளிவாக எழுதுவது நல்லது. ஹிந்தி மொழியின் தோற்றம் தெரியாத சிலர், ஹிந்தியைச் சொல்கிறீர்களோ என்று தற்கால நிகழ்வுகளின் தொடர்ச்சியாக நினைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

      நீக்கு
    3. வாங்க ஜீவி சார். வடமொழி என்றாலே சமஸ்கிருதம்தான். ஹிந்தி மொழி மிகவும் சமீபத்தையது.தென்னக மொழிகளான மலையாளம் தெலுங்கு போன்றவற்றையும்விடக் காலத்தால் பிற்பட்டது என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கும்.

      நீக்கு
    4. இந்த சப்ஜெக்ட் உங்களுங்குப் பிடித்த சப்ஜெக்ட். நீங்க ரொம்ப நல்லா எழுதுவீங்க

      நீக்கு
    5. தமிழும் சமஸ்கிருதமும் இரட்டைக் குழந்தைகள் மாதிரி. இரண்டுமே ஆதிப் பழமை வாய்ந்தவை.

      வடபுலத்திலிருந்து வந்த மொழியா சமஸ்கிருதம் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு.

      சங்ககாலப் புலவர்களில் சமஸ்கிருத பெயர் கொண்டவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று ஒரு ஆர்வத்தில் தேடினேன். தங்கள் தகவலுக்காக நெல்லை.

      நீக்கு
    6. வட புலத்திலிருந்து வந்ததா? நல்ல யோசிக்க வைக்கும் கேள்வி ஜீவி சார்

      நீக்கு
  4. ​படங்கள் துல்லியமாக உள்ளன. வரலாறு ரொம்பவும் பின் சென்று கி மு வில் துவங்குகிறது. இதனால் வரலாறு கன்னித்தீவு போன்று நீண்ட கதையாக அமைய வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது. நடுவில் கிளைக்கதைகளில் பிறழாமல் இருந்தால் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். வரலாறு நீளாது அந்த அந்த வாரத்துடன் தேடல் முடியும்.

      கிளைக்கதைகள் தொடர் நாவல் ஆகாமல் தடுக்கும்

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இந்த வார ஞாயிறு கோவில் தரிசன பகிர்வும் அருமை.

    தமிழை பற்றி நல்ல விவரணையான வரலாற்று கட்டுரை. படித்து அறிந்து கொண்டேன். தகவல்களை சேகரித்து எழுதிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது. கிமு, கி. பி யென பல்வேறு வரலாறுகள் படிக்க சுவாரஸ்யம் அளிப்பவையாக உள்ளது. தொடரட்டும் தங்களது இந்தப்பணி.

    கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சிற்பங்களில் பெருமான்மை நடனக் கலையை சிறப்பை விளக்குகிறது. தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு ரசித்துப் படிக்கும்படி இருந்திருக்கும் என நினைக்கிறேன். நம் தமிழ் எல்லாமே ஓலைச்சுவடிகள் என்பதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் எழுத்து எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்ய இயலவில்லை

      நீக்கு
    2. கண்டிப்பாக பதிவு ரசித்துப் படிக்கும்படியாகத்தான் இருந்தது. சில, பல பெரிய பழங்கால கோவில்களில் கல்வெட்டு பகுதிகளில் நம் பழைய தமிழை காணுகிறோமே..! ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் என்பது அரிதுதான். தங்களது தேடல்கள் வியப்பளிப்பதுடன், பிரமிக்கவும் வைக்கிறது. தங்களது இந்த விடாமுயற்சி தேடல்களுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  7. வணக்கம் நெல்லைத் சகோதரரே

    தங்களது சுற்றுலா தெய்வீக பயணம் எப்படி போய் கொண்டிருக்கிறது.? நலமாக சென்று தாங்கள் விரும்பிய இடங்களில் நன்றாக பயணித்து, பல தெய்வ தரிசனங்கள் பெற்று வர நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பிரயாணங்கள் நடுவேயும், பொறுப்புடன் நீங்கள் அனைவருக்கும் பதிலளித்து வரும் முறைக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று பெங்களூரிலிருந்து கிளம்பி இன்று நள்ளிரவு பிரயாக்ராஜ் சென்று சேருவோம். நாளை காலை திரிவேணி சங்கம ஸ்நானத்திலிருந்து யாத்திரை துவங்கும். நன்றி

      நீக்கு
    2. நேற்று பெங்களூரிலிருந்து கிளம்பி இன்று நள்ளிரவு பிரயாக்ராஜ் சென்று சேருவோம். நாளை காலை திரிவேணி சங்கம ஸ்நானத்திலிருந்து யாத்திரை துவங்கும். நன்றி

      நீக்கு
    3. தங்களது பிரயாண தகவலை விளக்கமாக குறிப்பிட்டமைக்கு நன்றி சகோதரரே.

      நீக்கு
  8. கடைச்சங்ககால நூல்கள் தோன்றி, தொகுக்கப்பட்ட காலம் சுமார் 6 நூற்றாண்டுகள் என்று சொல்கின்றனர்.//

    யம்மாடியோவ்...பிரமிப்பாக இருக்கிறது. அத்தனையும் இப்போது வரை இருக்கிறதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. ரொம்ப பிசியாக இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

      சென்ற நூற்றாண்டில் வெளியான நூல்களைப் படிக்கவே ஆளில்லை. நான் சிலபல பழைய நூல்களை-செய்யுள் படித்தால் ஒண்ணும் புரியலை. நல்லவேளை இணையம் இருக்கு ரொம்பத் தேடி கொஞ்சம் புரிஞ்சுக்க முடியுது

      நீக்கு
    2. இணயத்தில் தான் தேடித் தெரிஞ்சுக்கறதுதான் நானும். கல்லூரியில் இருந்தவரை நூலகம் தமிழ் ஆசிரியை நல்ல தோஸ்து எனக்கு அவங்க தருவாங்க படிக்க,.... இப்ப இணையம் தான்.

      ஆஆனா அப்ப மண்டையில் நின்றவை இப்ப நிக்க மாட்டேங்குது. என் ஆர்வமும், மூளையும் வாய்ப்பும் மழுங்கப்படிக்கபப்ட்ட குறை எனக்கு நிறைய உண்டு.

      கீதா

      நீக்கு
    3. யாரும் மழுங்கடிக்க முடியாது. நம்ம ப்ரையாரிட்டி மாறிடுச்சு. அவ்ளோதான். நீங்க உணவு பிஸினெஸ்ல சக்கபோடு போடலாம். அந்த உணவுக்கு காசு வாங்கும் கான்சப்ட் உங்க இரண்டுபேருக்கும் பிடிக்கலை.

      நீக்கு
  9. பாணினி பற்றி படித்த நினைவு.

    என் தமிழ் ஆசிரியை, தமிழில் வடமொழிக் கலப்பு பற்றி - ஆசிரியை நிறைய பாடத்திற்கு அப்பாற்பட்டு சொல்வதுண்டு அப்படி - சொல்லியதில் “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” இதைச் சொல்லியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்காக என்னோட வயசு உங்க டீச்சரைவிட அதிகம்னு நினைக்காதீங்க. உங்களைவிட சின்னப் பையன் நானு. ஸ்ரீராமைப் பார்த்ததில்லை என்பதால் அவர் என்னைவிட எவ்வளவு பெரியவர்னு தெரியலை

      நீக்கு
    2. அட! அப்ப கின்னஸ்ல போட்டிடலாம்...இந்தச் சின்னப் பையனுக்கு இப்பலாம் போடுறாங்களே 2 வயதில் திருக்குறள் முழுவதும் சொல்வது, மூன்று மாதத்திலேயே உலகம் தெரியுதுன்னு அப்படி தம்மாத்துண்டு பையனுக்கு தொல்காப்பியர்னு எல்லாம் எழுதுவதாகப் போட்டிடலாம்!!!!!

      கீதா

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொல்காப்பியர் இலக்கணத்துக்குப் பிற்பட்ட காலத்தில் முளைத்த தமிழ் நூல்கள், வடமொழியைத் தவிர்த்து நல்ல தமிழில் அல்லது தமிழ் இலக்கணத்துக்கு உரித்தான சொற்களுடன் இயற்றப்பட்டன என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். //

      ஆம்.....எங்க பள்ளி தமிழ் ஆசிரியை சங்கரவடிவு ஆசிரியையும், கல்லூரி தமிழ் ஆசிரியையும் இதைக் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு.

      கீதா

      நீக்கு
    2. ஆனாலும் சமஸ்கிருதச் சொல்லை தமிழ் எழுத்துல எழுதியிருக்காங்க. தேஜஸ் - தேசு, வைஷ்ணவர் -வைட்டணவர், பூஜை-பூசை, பக்தி -பத்தி என்றெல்லாம். என்னுடைய அனுமானம் திருக்குறளே பத்து பனிரண்டு நூற்றாண்டுக்குள்தாம்

      நீக்கு
    3. ஆனாலும் சமஸ்கிருதச் சொல்லை தமிழ் எழுத்துல எழுதியிருக்காங்க. தேஜஸ் - தேசு, வைஷ்ணவர் -வைட்டணவர், பூஜை-பூசை, பக்தி -பத்தி என்றெல்லாம். என்னுடைய அனுமானம் திருக்குறளே பத்து பனிரண்டு நூற்றாண்டுக்குள்தாம்

      நீக்கு
  11. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

    நாட்டிய சிற்பங்களின் அழகு மயங்கவைக்கிறது.

    பழைய வரலாறுகளும் கண்டோம்.
    உங்கள் தலயாத்திரைகள் சிறப்பாக அமைய வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். எனக்கும் நாட்டியச் சிற்பங்கள் ரொம்ப அழகாக இருப்பதாகத் தோன்றியது

      உங்கள் வேண்டுதலுக்கு நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!