ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 08 நெல்லைத்தமிழன்

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

சென்ற வாரம் கண்டராதித்தர் எப்படி நாட்டு அரசனானார் என்ற வரலாற்றைச் சொல்லவந்தவன், “மூன்றாம் இந்திரன் மகனான நான்காம் கோவிந்தன் அரசனாகி குந்தள நாட்டை அரசாள்கிறான்.” என்று முடித்திருந்தேன். அவன் பராந்தக சோழனின் மருமகனாகிவிட்டான் (அவனுடைய மகளை மணந்துகொண்டதன் மூலம்)   இப்படி உறவினர் ஆகிவிடுவதால் பெரும் போர் என்று வரும்போது படைகள் உதவிக்கு வரும். ஆனாலும் காலம் ஒரு அரசனை நிம்மதியாக விட்டுவிடாதில்லையா?

இந்த நான்காம் கோவிந்தன் பேரழகன்.  918ல் இளவரசனாக ஆன இவன், பின்னால் அரசனாகி 938 வரை ஆட்சி புரிந்தான். குந்தள அரசனின் செயல்கள் அவனுக்கு மக்களிடத்தில் ஆதரவைப் பெற்றுத்தரவில்லை. அரசாங்க அதிகாரிகளும் குறுநில மன்னர்களும் அரசனிடத்தில் வெறுப்புடன் இருந்தனர். குந்தள இராச்சியத்தில் நான்காம் கோவிந்தனுக்கு அதரவு வெகுவாகக் குறைந்திருந்தது. இந்தச் சமயத்தில் கீழைச் சாளுக்கிய மன்னர்களான யுத்தமல்லனுக்கும் இரண்டாம் வீமனுக்கும் மனவேறுபாடு உண்டாகி அவர்களிட த்தில் பகை மூண்டது. இந்த நிலையில் 934ல் நான்காம் கோவிந்தன், யுத்தமல்லனுக்கு ஆதரவாகக் களம் இறங்கி, இரண்டாம் வீமனுடன் போர் புரிந்தான். இந்தப் போரில் நான்காம் கோவிந்தன் தோல்வியுற்றான்ஏற்கனவே மக்கள் ஆதரவு மிகக் குறைந்திருந்தது. இதில் இன்னொருவனுக்காக படை நடத்திப் போர் புரிந்து தோற்றதனால் உள்நாட்டில் மதிப்பும் குறைந்தது. இதைப் புரிந்துகொண்ட  அமோகவர்ஷனின் மகன் மூன்றாம் கிருஷ்ணதேவன் (அதாவது நான்காம் கோவிந்தனின் சிறித தகப்பனின் மகன்) உள்நாட்டில் குழப்பம் விளைவித்து இராஷ்டிரகூட அரசுரிமையைக் கவர்ந்து தன் தகப்பனான அமோகவர்ஷனை அரசனாக்கினான். (935ல்). அரசை இழந்த நான்காம் கோவிந்தன், தன் மனைவியான வீரமாதேவியுடன் சோழ ராஜ்ஜியத்துக்கே வந்து தன் மாமனாரான பராந்தக சோழனுடன் தங்கியிருந்தான்

கிபி 939ல் அமோகவர்ஷன் இறந்தான். அது வரையில் மாமனார் வீட்டில் (அரண்மனையில்) தங்கியிருந்த நான்காம் கோவிந்தன், இரட்டை மண்டலத்தின் அரசுரிமையை மீண்டும் பெற அதுவே தக்க சமயம் என்று நினைத்து தன் மாமனாரின் உதவியைப் பெற்றான்சோழப்படையும் போருக்குப் புறப்பட்டது. இதற்கிடையில் அரசனாகியிருந்த மூன்றாம் கிருஷ்ணதேவனின் அக்காள் கணவனும், கங்க நாட்டை ஆண்டுகொண்டிருந்த இரண்டாம் பூதுகன் என்பவன், மூன்றாம் கிருஷ்ணதேவனின் உதவிக்கு வந்தான். இந்த இரண்டு படைகளும் இரட்டை மண்டலத்தில் தங்களுக்கு எதிராக வந்த சோழப்படையுடன் போர் புரிந்து சோழப்படையைத் தோற்றோடச் செய்தன. வெற்றிபெற்ற மூன்றாம் கிருஷ்ண தேவன், இராட்டிர கூடத்தின் அரசுரிமையைக் கைப்பற்றினான்தங்களுக்கு எதிராக பராந்தகச் சோழன் படைகளை அனுப்பியதால், மூன்றாம் கிருஷ்ணதேவனின் பகைவனாக பராந்தகச் சோழன் ஆனான்கங்க நாட்டின் தென் பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் பிருதீவிபதி என்பவன் பராந்தகச் சோழனின் நண்பன்அதனால் கங்கநாட்டின் தென் பகுதி சோழனுக்கு ஆதரவாகவும் அதன் வட பகுதி, மூன்றாம் கிருஷ்ணதேவனின் மாப்பிள்ளை (அக்காள் கணவன்) இரண்டாம் பூதுகனால் ஆளப்பட்டு வந்ததால் சோழனுக்கு எதிராகவும் இருந்தது. ஏற்கனவே பராந்தகனால் வாணர்கள் நாடும், வைதும்பராயர்கள் ஆண்டிருந்த பகுதியும் வெற்றிகொள்ளப்பட்டிருந்ததால், அவர்களும் மூன்றாம் கிருஷ்ணதேவனிடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தார்கள்.   (இந்த வாணர் குலத்து வந்தியத்தேவன் தான் பிற்காலத்தில் இராஜராஜசோழனின் தமக்கை குந்தவியின் கணவனாக ஆகி, சோழ ராஜ்ஜியத்திலேயே தங்கிவிடப் போகிறவன்)

கிபி 940ல் கங்க நாட்டின் தென் பகுதியை ஆண்ட இரண்டாம் பிருதிவிபதி இறந்தான். அவனுடைய மகனான விக்கியண்ணன், ஏற்கனவே இறந்துவிட்டான் என்பதால், இராஜ்ஜியத்துக்கு அடுத்த அரசன் இல்லை. கங்க மன்னன் இரண்டாம் பூதுகன், தென் பகுதியையும் தன் ஆளுகையின் கீழ் எளிதாகக் கொண்டுவந்துவிட்டான் (ஏற்கனவே சோழர் படை முந்தைய வருடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்திருந்தது)

கிபி 940ல், சோழமன்னன் பராந்தகன், வடக்குப் பகுதியில் பல்வேறு எதிரிகளைச் சம்பாதித்துவிட்டான். அதைவிடப் பெரிய பிரச்சனை, அந்த எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். இதன் அடுத்த கட்டம், படைபலத்தைப் பெருக்கி, சோழ அரசோடு நேரிடையாகப் போரிட வருவதுதான். இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது என்று முன்பே உணர்ந்திருந்த  பராந்தகன்இதனால் சோழ சாம்ராஜ்யத்துக்குப் பெரும் பிரச்சனை வரும் என்று யூகித்து, தன்னுடைய மகன் இளவரசன் இராஜாதித்தனை  936ல் தென்னார்காடு திருக்கோவலூர் அருகில் பெரும் படையோடு  இருக்கச் செய்திருந்தான். அவனும் அங்கிருந்தவாறே சோழ சாம்ராஜ்யத்தின் வடக்குப் பகுதியைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். அவனுகு உதவியாக அவனுடைய தம்பியான அரிகுலகேசரியும் அங்கிருந்தான். (இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஆங்காங்கு இருக்கும் கோயில் கல்வெட்டுகளை வைத்துத்தான்)

மூன்றாம் கிருஷ்ணதேவன் (கல்வெட்டுகள் இவனை கன்னர தேவன் என்று சொல்லும்) பராந்தகச் சோழன் தனக்கு எதிராகப் படை அனுப்பிப் பொருததை மறக்கவில்லை. அதனால் அரசுக்கு வந்ததும் பெரும் படை திரட்டுவதில் முனைந்தான். இதற்கு அவனுக்கு 8 ஆண்டுகள் ஆகியிருந்தன. இளவரசன் இராஜாதித்தன் கிட்டத்தட்ட பனிரண்டு வருடங்கள் திருக்கோவலூர் அருகே பெரும் படையுடன் இருந்தான். அப்போது பல இடங்களில் கோயில்கள் எடுப்பித்திருக்கிறான். அவனுடைய தம்பியும் கோயில்கள் எடுப்பித்திருக்கிறான்சோழர் படைத்தலைவனும் ஒரு கோயில் எடுப்பித்திருக்கிறான் (943ல்).  அப்படியென்றால் ஓரளவு அமைதியாகவே அப்போது இருந்திருக்கிறது என்று அர்த்தம்


கோவில் வெளிச்சுவற்றில் சிறிய சிறிய அழகிய சிற்பங்கள், அனைத்தும் புராணங்களுடன் சம்பந்தப்பட்டவை

தெய்வச் சிற்பத்தின் கீழே சிம்ம உருவங்கள் எவ்வளவு அழகாக அமைந்திருக்கின்றன என்று பாருங்கள்.

எனக்கு எப்போதுமே கோயிலில் இருக்கும் கணபதி சிற்பமோ இல்லை உருவங்களோ இருந்தால் படமெடுக்கப் பிடிக்கும். காரணம், கல்கி அவர்கள் தன் நாவலில், பல்லவர் காலத்தில்தான் கணபதி வழிபாடு நம் தமிழகத்தில் ஆரம்பித்தது, அப்போதுதான் கணபதி சிற்பங்கள்/சந்நிதி கோயில்களில் வர ஆரம்பித்திருந்தது என்று எழுதியிருந்தார். அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை, அர்த்தமில்லாத கற்பனை என்று நினைத்தேன்.

சுதைச் சிற்பத்தை சரி செய்திருக்கிறார்களோ?

 


காலத்தினால் ஏற்பட்ட சிதைவுகளா இல்லை படையெடுப்புகளினாலா?


சட் என்று பார்க்கும்போது பௌத்த அல்லது சமண தீர்த்தங்கரர்கள்/ சன்னியாசிகள் போலத் தெரியவில்லை? நம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, சோழதேசத்தில் பௌத்தம் என்று சிறப்பான ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

949ல் தன்னுடைய பெரும் படையுடன், கூடவே கங்கநாட்டு மன்னனாகிய இரண்டாம் பூதுகனின் துணையுடன், இராட்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ண தேவன், தொண்டை மண்டலத்தை நோக்கிப் படையுடன் வந்தான். திருக்கோவலூரின் அருகே படையுடன் இருந்த இளவரசன் இராஜாதித்தன் சோழ தேசம் சார்பாக இந்தப் போரில் இறங்கினான். ஒரு பக்கம் பெரும் வீரம் கொண்ட இளவரசன் இராஜாதித்தன். மறுபுறம் இராட்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணதேவன் தலைமையில் வந்த பெரும் படை. இதில் அவனது மாப்பிள்ளை இரண்டாம் பூதுகனும் அவன் படையும் அடக்கம்இருவரும், அரக்கோணத்திற்கு அருகே தக்கோலம் என்ற இடத்தில் மோதிக்கொண்டனர்.

இதுவே வரலாற்றில் பெரும் போர் என்று குறிப்பிடப்படும் தக்கோலப் போர். இந்தப் போரில் யார் வெற்றிபெறுவார்கள் என்று கணிக்கவே முடியாதபடி பெரும் போர் நடைபெற்றதாம். சோழப் படையின் பெரும் வீரம் இந்தப் போரில் வெளிப்பட்டதுபோரின் முடிவில், கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் விட்ட அம்பு, யானை மீது நின்றுகொண்டிருந்த இளவரசன் இராஜாதித்தன் மீது பாய்ந்து இராஜாதித்தன் இறந்தான். சோழர் படை மனக்கலக்கம் அடைந்தது. இராட்டிரகூடப் படை உத்வேகம் பெற்றது. அந்த தக்கோலப் போரின் வெற்றியினால் தென்னார்க்காடு பகுதி (அப்போது திருமுனைப்பாடி நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி) மற்றும் தொண்டை நாடு, இராட்டிரகூடர் வசம் வந்தது. சில கல்வெட்டுகளில் இராஜாதித்தன் போரில் வென்று, அவன் கவனக் குறைவாக இருந்தபோது பூதுகன் விட்ட அம்பால் யானை மீதிருந்த அவன் மாண்டான் என்று குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகள் பூதுகன் போரின்போது இராஜாதித்தனை அம்பால் வீழ்த்தினான் என்கின்றன. அதனால்தான் இராஜித்தன், யானை மீது துஞ்சிய தேவர் என்று கல்வெட்டுகளினால் அறியப்படுகிறான்.


சிவனின் அழகிய ஓவியம். 



949ம் வருடத் தக்கோலப் போரில் கன்னர தேவன் வெற்றி பெற்றாலும் திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டைமண்டலத்தையும் முழுமையாக இராட்டிரகூடப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு அவனுக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. கிபி 955லிருந்து 968ல் மூன்றாம் கன்னர தேவன் இறக்கும் வரையில் திருமுனைப்பாடி மற்றும் தொண்டை மண்டலம் இராட்டிரகூட இராஜ்ஜியதின் பகுதியாக இருந்தது.

தக்கோலப் போரினால் சோழர்கள் சாம்ராஜ்யம் சுருங்கியது எனலாம். பட்டத்து இளவரசனும் வீரனுமான இராஜாதித்தன் மறைந்தது பராந்தகச் சோழனை நிலைகுலையச் செய்தது. 950ல் தன் இரண்டாம் புதல்வனான கண்டராதித்தனை இளவரசனாக்கினான்இதுவே சிவபக்தியில் மூழ்கி இருந்த கண்டராதித்தனை சோழ இளவரசனாகவும், பிறகு மூன்று வருடங்களில் சோழ அரசனாகவும் ஆனதன் வரலாறு.

யாருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ, பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கிறதோ அவர்களே அரசனாக முடிகிறது (தற்காலத்தில் தலைவனாக முடிகிறது).



அழகிய எருதுச் சிற்பம். மிகச் சிறிய அளவிலேயே எழிலுடன் திகழ்கிறது. 




லிங்கோத்பவர். இவர்தான் நம் மனக்கண்ணில் நாம் லிங்க உருவைத் தரிசனம் செய்யுபோது வரவேண்டும். 

வலது பக்கம் வாள் கேடயத்துடன் இருக்கும் வீரனின் சிற்பம் உள்ளங்கை அகலமே உடையது. எவ்வளவு சிறிய இடத்தில் அழகிய சிற்பத்தைச் செதுக்கியிருக்கிறார்கள்.


நடந்த சோழர் வரலாற்றிற்கு நானும் ஒரு சாட்சி என்று ஐராவதீஸ்வரர் கோயில் விமானம் சொல்கிறதோ?

இந்த வாரம் கண்டராதித்தர் அரசனான வரலாறும், தாராசுரம் கோயில் படங்களும் அதிகமாகிவிட்டதோஅடுத்த வாரம் தொடர்வோமா?

(தொடரும்) 

18 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இந்த வாரத்திய வரலாற்று பதிவு (கோவில் தரிசன பதிவு) மிக அருமையாக உள்ளது. எப்படி இவ்வளவு விபரமாக சரித்திர வரலாற்றை படித்து சேகரித்து தொகுக்கிறீர்கள் என நிறைய வியப்பு வந்தது. பாராட்டுக்கள்.

    நன்றாக புரியும்படி விளக்கமாக சொல்லியுள்ள தங்களின் எழுத்துக்களை விரும்பி படித்து ரசித்தேன். நடுவில் தாங்கள் எடுத்த கோவில் படங்களுக்கு பின்புள்ள இன்னும் பாதியையும் படித்து விட்டு வருகிறேன். தாங்கள் எடுத்த படங்களும் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறு ரொம்ப அதிகமாகி போரடிக்க வைக்கிறதோ கமலா ஹரிஹரன் மேடம்? பெயர்க்குழப்பங்கள் அயர்ச்சியைத் தருகிறதோ?

      நீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. ​இரண்டாம், நான்காம், மூன்றாம் என்னும் குழப்பங்களை எப்படி குழப்பமில்லாமல் எழுதுகிறீர்கள்? இப்படி விளக்கமான வரலாற்றைக் கொடுக்க உதவி  நீலகண்ட சாஸ்திரி நூல் உதவியா? என் நூல் அல்லது என்னென்ன நூல்கள் உதவின?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நான்கு புத்தகங்களைப் படித்து எனக்குப் புரியும் விதத்தில் ரொம்ப போர் மற்றும் உறவுமுறைகளை, அவர்கள் மனைவியர் குழந்தைகளைக் கொண்டுவராமல் எழுத முயல்கிறேன் ஸ்ரீராம்.

      அனைத்துப் புத்தகங்களுக்கும் நீலகண்ட சாஸ்திரி மற்றும் அவரவரின் interpretation அடிப்படையாக இருப்பதை உணர முடிகிறது.

      நீக்கு
  5. படங்களும் தகவல்களும் நன்று.
    இறுதியில் இருக்கும் படம் பூமியோடு எடுத்த விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  6. அழகிய சிற்பங்கள் வியக்க வைக்கின்றன..

    வரலாறுகள் அறிந்து வருகிறோம். மிகவும் நன்றாக கூறிவருகிறீர்கள்.

    ஐராவதீஸ்வரர் கோபுரம் விமானம் மிகவும் அழகாக இருக்கிறது. வணங்கிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  7. ​/யாருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ, பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கிறதோ அவர்களே அரசனாக முடிகிறது (தற்காலத்தில் தலைவனாக முடிகிறது).//
    அருமையான உண்மை.
    படங்கள் வழக்கம் போல் துல்லியமாக, அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  8. ​https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh_bzhZg_5g21Alr_TsY4Y6QewE1_4SpwJia-36dXfxcitGC-BleToVVXqrSOqFeyzsDkpUA91HlXTKvzqvK7jo84k6P11mdFUhQqP70Ch5znJwq3lEhNKP_XatTg0pdT-xT3jWO6EOszAKDNLmQJrUgjJDs1lXc2EK0MNNwb9QyYpjQG7EVPj4Dkx2yT32

    அந்தக் காலத்திலே தீப்பெட்டி?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. வரலாறு பார்த்துக் கொண்டேன்...சிலது மனதில் பதிய அதாவது, 1, 2 4 எல்லாம் இப்ப குழப்பமாக ஹிஹிஹிஹி... மறந்து போகும் என்பதாக ...பரவால்ல...நமக்கு அடுத்தாப்ல படங்கள்தான்...

    ஆனா உங்க முயற்சி அபாரம் நெல்லை. இத்தனையும் திரட்டி எழுதியிருக்கீங்க பாருங்க அதுக்கே பெரிய சபாஷ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. குட்டி குட்டிச்சிற்பங்கள் வாவ்!!! நெல்லை எப்படித்தான் இதெல்லாம் செதுக்கினாங்களோ!! அப்படி வியப்பா இருக்கு. மினியேச்சர் டிசைன்ஸ்!

    ஆஅமாம் சிம்ம உருவங்கள் செம அழகு. எனக்கென்னவோ இந்தச் சைனாக்காரங்க இங்க இதெல்லாம் பார்த்துதான் அவங்க ஊர் சிலதெல்லாம் செஞ்சிருப்பாங்களோன்னு!!! ஹிஹிஹி அந்த டிராகன் எல்லாம்...பாருங்க நம்ம புத்திய...அவங்க ஒரிஜினலா செய்திருந்தா கூட என் புத்தி போறத பாருங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அந்தக் குட்டிச் சிற்பங்கலுக்கு எவ்வளவு அழகா இப்படி வில் வைத்திருக்கும் உருவ்னகள் அதுக்கும் கீழ இன்னும் சிறிதான ஒயில் இடுப்புடன் வாவ்!!

    நெல்லை எனக்கும் பிள்ளையார் தோஸ்தை எங்க பார்த்தாலும் எடுத்துவிடுவேன். அனுமதிக்கப்பட்டால்.

    அதுக்குக் கீழ அந்தச் சிற்பம் சரி செய்யபப்டிருக்கு என்பதற்கும் மேலாக அதன் வடிவத்தைப் பாருங்க....ஓ மை கடவுளே!! தலைக்கிரீடம்? அதன் அழகைப் பாருங்க...ரசித்துப் பார்த்தேன். வலது கைல என்னது அது? கண்ணகி வைச்சிருக்காப்ல இருக்கு? இப்பலாம் யுவதிகள் அதாவது இந்த விழாவுக்கு வருவாங்களே செலிப்ரிட்டீஸ்னு அவங்க ஹேன்ட்பேக் போட்டுக் கொள்வது அபூர்வம் கைல ஒரு சின்ன ஹேன்ட் பேக் வடிவில் தொங்கவிட்டுக் கொண்டு இல்லைனா இப்படி வளையங்கள் வைத்துக் கொண்டு வருவது போல இருக்கு!

    சிற்பம் ஒய்யாரம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கொஞ்சம் காலத்தினாலும் ஏற்பட்டிருக்கும், நெல்லை.

    சட் என்று பார்க்கும்போது பௌத்த அல்லது சமண தீர்த்தங்கரர்கள்/ சன்னியாசிகள் போலத் தெரியவில்லை?//

    சட்டென்று இல்லை நெல்லை, அச்சிற்பங்கள் அதைக் குறிப்பதுவேதான்....நம்ம முனைவர் ஐயா இதெல்லாம் பார்த்து ஆராய்ந்தும் எழுதியிருப்பார்.

    தக்கோலப்போர் மட்டும் நினைவிருக்கிறது.!

    சிவனின் அழகிய ஒவியம் இப்ப கொஞ்சம் அழிஞ்சுருக்கோ?

    கீழே தக்ஷிணாமூர்த்தி செம அழகு...

    சிவபக்தனான அதில் மூழ்கியிருந்த கண்டராதித்தான் இளவரசன் ஆனதும் அக்கதையும் நினைவிருக்கிறது. ஹப்பா வயசாகலை நமக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. எருதுச் சிற்பம் அழகு அந்த ௳னிகள் கூட அழகா செஞ்சிருக்காங்க

    உள்ளகை அளவு ச் சிற்பம் கூட சூபர்..

    க்டைசிப் படம் அட்டகாசம், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!