வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
முதலாம் பராந்தகச் சோழன் பல போர்களில் வெற்றிபெற்ற போதும் ஒரு சில முக்கியப் போர்களில் தோல்வியும் அடைந்தான். அதில் ஒன்று ஈழ அரசுக்கு எதிராகப் படையனுப்பி, ஈழத்தில் சோழர் படைத்தலைவன் மாண்டதால் பெற்ற தோல்வி.
அதைவிடப் பெரும் தோல்வி, பட்டத்து இளவரசன் தலைமையில் சென்ற படை தக்கோலத்தில் இராட்டிரகூடர்களிடம் தோல்வியுற்றது. இதில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, தன் படைத்தலைவனிடம், சோழ இளவரசனைச் சுற்றியுள்ள படைகளைப் பிரிக்கும்படியான திட்ட த்தைத் தந்து தகுந்த இடைவெளியை உருவாக்கி, நேரடியாகச் சென்று யானை மீதிருந்து போரிட்ட இராஜாதித்தன் மீது சரமாரியாக அம்பினால் தாக்கியது. (அல்லது ஒரு அம்பினால் இராஜாதித்தனை வீழ்த்தியது). நெஞ்சில் நேரடியாக அம்பு தாக்கி அங்கேயே மரணமடைந்தான் இராஜாதித்தன். அதுவே சோழர் படையை நிலைகுலையச் செய்து, முதல் தோல்வியைப் பெறச்செய்தது. தக்கோலப் போரே சோழ சாம்ராஜ்யத்தைச் சுருங்கச் செய்தது.
இணையத்திலிருந்து சில படங்களை இங்கு கொடுப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
திருநாவலூர் சிவன் கோயில். இங்கு பல கல்வெட்டுகள் இராஜாதித்தன் மற்றும் அவன் படைத்தலைவர்கள் அளித்த மானியம் பற்றி உள்ளன.
நீங்கள் கண்டுபிடித்ததை விட இன்னும் பல்வேறு செய்திகள் இருக்கின்றன என்று சொல்கிறதோ ஐராவதீஸ்வரர் கோயில் விமானம்?
பல கோயில்களில் கல்வெட்டுகள் பல
உதிர்ந்துகொண்டுவருகின்றன. அவைகளை
ஏற்கனவே படியெடுத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதுவம் தவிர கல்வெட்டுகள் மீது பெயிண்ட்
அடித்துவிடுகிறார்கள், கோயிலைப்
புதுப்பிக்கிறார்களாம். சிற்பங்கள்
மீதுகூட பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளைப் பார்க்கும்போது வருத்தம் மேலிடுகிறது. ஏற்கனவே கண்ணுக்கு முன்னால் இருக்கும்
கல்வெட்டுகளைப் படியெடுத்திருப்பார்கள் என்று நம்புவோம். வரலாற்று ஆசிரியர்களே என்ன சொல்கிறார்கள் என்றால், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்ட
கல்வெட்டுகளின் படி இவற்றை யூகித்து எழுதியிருக்கிறோம். இந்த வரலாறு முற்றிலும் முழுமையானது அல்ல. நாளை புதிய கல்வெட்டுகள், பட்டயங்கள் தென்படும்போது வரலாற்றுச் செய்திகள்
மாறுபடலாம் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அழகிய சிற்பங்களுடன்/வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் விதானத்தைத்
தாங்கிக்கொண்டிருக்கின்றன.
ஜன்னல்கள் (சாளரங்கள் என்று எழுது என்று மனது சொல்கிறது) அமைக்கப்பட்டு வெளிச்சம் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன (கற்களில்).
கோயிலின் வெளிப் பிராகாரத்தில் இந்த மாதிரி சிறு சன்னிதிகள் போன்று அமைந்திருந்தன. அவற்றில் சிவலிங்கங்களும் பலிபீடங்களும் இருந்தன. கோயில் கட்டப்பட்ட காலத்தின் என்ன என்ன இருந்தன என்பதை யாரே அறிவர்?
இரண்டாவது தூணில் உள்ள நாட்டியச் சிற்பம் எனக்கு பார்வதி, சிவனிடம் நடனமாடித் தோற்றதை நினைவுபடுத்தியது.
இந்தத் தூண்களில் பட்டைகளுடன் கூடிய செதுக்கல்களைக் கவனித்தீர்களா? வெறும்ன கல்லின் மீது சிறு சிறு சிற்பங்களுடன் விட்டிருக்கலாம். ஆனால் வித்தியாசம் காண்பிப்பதற்காக பிரகார மண்டபத்தில் இத்தகைய அலங்காரத் தூண்களை அமைத்திருக்கிறார்கள்.
எத்தனையோ சிவலிங்கங்கள். அனேகமாக இந்தப் பகுதியில் தொல்லியல்துறையால்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும். அனைத்தையும் அருகருகே வைத்திருக்கிறார்கள்.
பல இடங்களில் (தனியாருக்குச் சொந்தமான வயல்வெளிகள். அவை எப்படி தனியாருக்குச் சொந்தமாயின? கோயில் நிலங்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்) கிடைத்த சிலைகளை அப்படியே மியூசியத்துக்கோ (சரபோஜி மன்னர் அருங்காட்சியகம்) அல்லது இந்த மாதிரி கோயில்களிலோ வைத்துவிடுகிறார்கள். தொல்லியல் துறைக்கு, பழைய சிலைகளை அழியாமல் பாதுகாக்கும் வாய்ப்பு. தனியாருக்கோ, தன் நிலங்களில் அகழ்வாராய்ச்சி செய்து தங்களுக்குப் பிரச்சனை வரக்கூடாது என்ற நிலை.
நான் சோழ நாட்டுப் பகுதிகளில் பயணிக்கும்போது பல வயல்வெளிகளில் மண்டபங்களைக் கண்டிருக்கிறேன். அதுபோல தஞ்சையில் ஒரு மண்டபம்/கோயில் போன்ற அமைப்பை, வீட்டாக்கி வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். யாரும் ஆட்சேபணை எழுப்பவில்லை என்றால் மெதுவாக கட்டிடம் உதிரும், அங்கு புதிய கட்டிடம் உருவாகி பட்டா வாங்கப்பட்டுவிடும் என்று தோன்றுகிறது.
வரலாற்று ஆர்வலர்கள், சோழ வரலாற்றை எடுத்துக்கொண்டு, அந்த அந்தப் பேரர சர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களுக்குச் சென்று மிஞ்சியுள்ள வரலாற்றைப் பாதுகாக்க உதவ வேண்டும். அவற்றை சுற்றுலாத் தலங்களாக ஆக்கவேண்டும். அப்போதுதான் அவற்றைப் பத்திரமாக அடுத்த தலைமுறைக்கும் கொண்டுபோக முடியும்.
சரி… அடுத்த வாரம் தமிழர்
வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம். தமிழர்கள் பெரும்
நாகரீகம் மிக்கவர்கள்,
பாரதீயர்கள்
நாகரீகத்தின் தொட்டிலாக இருந்தவர்கள் என்றெல்லாம் சொல்கிறோமே.. அதில் உண்மை இருக்கிறதா? இல்லை வெற்றுப் பெருமையா
என்பதைப் பார்ப்போம்.
(தொடரும்)
படங்கள் அழகாக உள்ளன.
பதிலளிநீக்குதமிழர் வரலாறு என்பதைக் காட்டிலும் தமிழ் மன்னர்கள் வரலாறு என்று தான் வகைப்படுத்த வேண்டும். பொருளாதார பரவலுக்கு அன்றைய ஒரு மார்க்கம்/செலவினம் தான் கோயில்கள் கட்டுவது. புண்ணியமும் கூடும் என்ற நம்பிக்கையும் கூடுதல் சிறப்பு.
வரலாறு முக்கியம் தான். ஆனால் வரலாறு மட்டுமே முக்கியம் என்பதில்லை. கட்டுரைகள் பல்சுவையுடன் விளங்கட்டும்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்.
நீக்குகோயில் கட்டுவது, அதில் பூசைகள், விழாக்கள், பிரசாதம் என்பதெல்லாம் பரந்த பொருளாதாரத்திற்கு உதவின. கோயில்களும் அந்த அந்த ஊரை நடத்துவது, ஆவணக் காப்பகம், தானியங்கள் சேமித்துவைக்கும் கிடங்கு, பொருள் பாதுகாப்பு எனப் பல்வேறு செயல்களுக்கும் காரணியாக இருந்தன.
தெய்வ நம்பிக்கை கொண்டு ஒழுகும்போது ச்ச்சரவுகள் குறையும், நாட்டு மக்களும் அமைதியாக இருப்பர்.
நீக்குஇந்திரா காந்தி, கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி இத்தனை இந்தியர்களைப் பரவசப்படுத்துவதை ஆச்சர்யமாகப் பார்த்து, நாட்டு மக்களுக்கு விளையாட்டும், அதன் வெற்றியும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டாராம். ஒருவேளை அவர் இன்றிருந்தால் BCCIஐயும் அரசுடமையாக்கியிருப்பார்.
முருகன் திருவருள் முன்னின்று காக்க
பதிலளிநீக்குமுருகன் அனைவரையும் காக்கட்டும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் தரிசன பகிர்வு எப்போதும் போல அ அருமையாக உள்ளது. சரித்திர விவரணம் நன்றாக உள்ளது.அக்கால மன்னர்களின் வெற்றி தோல்விகள், மனதுக்கு இப்போதும் முறையே சந்தோஷங்களையும், வருத்தங்களையும் தருகிறது என்பது உண்மைதான். அந்தளவிற்கு நாம் இப்போதும் அவர்களின் அரசியல் சாதக, பாதகங்களை விரும்புகிறோம் என நினைக்கிறேன்.
/நீங்கள் கண்டுபிடித்ததை விட இன்னும் பல்வேறு செய்திகள் இருக்கின்றன என்று சொல்கிறதோ ஐராவதீஸ்வரர் கோயில் விமானம்?/
உயிரோட்டமுள்ள வரிகள். அவைகளின் உணர்வுகளுக்குள் உயிரோட்டங்கள் என்ற ஒன்று இருக்குமில்லையா? அதை உண்மையென புரிந்து கொண்டவர்களால்தான் இப்படி எண்ணவும், நினைக்கவும் தோன்றும்.
விமானம் அழகாக உள்ளது. தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமையாக உள்ளது.
கற்களில் செய்யப்பட்ட சாளரங்கள் எவ்வளவு உறுதியாக பார்க்கவே எவ்வளவு அழகாக உள்ளது. இப்போது இதைப்போல அமைத்து கட்டினால், அது எவ்வளவு வருடங்கள் பாதுகாப்பானதாக வாழும் என்பதை யாரறிவார்..?
குட்டி, குட்டியாய் சிவலிங்கங்கள் நிறைய கோவிலில் நானும் பார்த்துள்ளேன். அவைகளின் மூலங்கள் பற்றிய கதைகளை யாரிடத்தில் கேட்பதென்பது தெரியாமல் போகும்.
இன்றைய பதிவு அர்மையாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
போரும் மக்களில் ஒரு பகுதியை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் உத்தியோ? சாதாரண ஜனங்களும் வெற்றி தோல்வியால் பாதிக்கப்படுவார்களே.
நீக்குஎனக்கு, நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உணர்வு இருக்கும் என்ற நம்பிக்கை. அதிலும் செடிகள், கொடிகள் மரங்கள்.
இப்போது கட்டப்படுவதெல்லாம் நாற்பது வருடங்கள் தாங்கத்தான். அதற்குள் வாங்கியவர்கள் காலம் முடிந்துவிடும்.
மிக்க நன்றி
வணக்கம் சகோதரரே
நீக்கு/எனக்கு, நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உணர்வு இருக்கும் என்ற நம்பிக்கை. அதிலும் செடிகள், கொடிகள் மரங்கள்./
ஆம்.. உண்மை.. நானும் அப்படித்தான் உணர்வேன். ஒரு செடி வளர்த்தால் கூட " நீ நன்றாக வளர்ந்து வா" என்று அதனிடம் பேசுவேன். அதுவும் புரிந்து கொண்டாற் போல வளரும். சமைக்கும் முன் மனதளவில் இன்று சமையல் உங்களால் சிறப்புறவேண்டுமென கையில் எடுக்கும் சாமான்களிடம் (மளிகை) மனதுக்குள் சொல்வேன் வெளியில் சொன்னேன் என்றால், இது என்ன பைத்தியகாரத்தனமென எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், எனக்கு இதனால் ஒரு மன ஆறுதல் கிடைக்கும். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கு ஒரு செண்டிமெண்ட் உண்டு கமலா ஹரிஹரன் மேடம். நான் கிச்சனில் நுழைந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்று மனதில் தோன்றும் (அதாவது நான் இதனை கடவுள் இதனைச் செய் என்று சொல்வதாக நினைத்துக்கொள்வேன்). காரணம், பல முறை இன்று சமையல்/டிபன் இதைச் செய்யலாம் என்று நினைத்து கிச்சன் போய் வேலையை ஆரம்பித்தபிறகு மாற்றியிருக்கிறேன். எனக்கு நான் சொல்வது உண்மைனு தெரியுது ஆனால் பசங்க கலாட்டா பண்ணுவாங்க (இப்போல்லாம் கிச்சனில் எதுவும் செய்வதில்லை)
நீக்குதாங்கள் சேகரித்த வரலாற்று செய்திகள் ஆச்சர்யப்பட வைக்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது தமிழரே....
வாங்க கில்லர்ஜி. நன்றி
நீக்குவரலாறுகள் கண்டோம்.
பதிலளிநீக்குஐராவதீஸ்வரர் ஆலய சிற்பங்கள் பல கதைகளை கூறி நிற்கின்றன சிற்ப வேலைப்பாடுகள் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.இவற்றை எல்லாம் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
நிறைந்த படங்களுடன் காத்திரமான பகிர்வாக தந்துள்ளீர்கள் கண்டு மகிழ்ந்தோம்.
தமிழர் வரலாறு காணாத வருகிறோம்.
வாங்க மாதேவி அவர்கள். இந்த வருடம் முழுமைக்கும் எழுதுமளவு படங்களும் கோயில்களும்-சோழர் காலத்தையது, இருக்கிறது. பார்ப்போம் எவ்வளவு முடிகின்றது என்று. நன்றி
நீக்குவரலாறு அருமை.
பதிலளிநீக்குகோயில் படங்கள் அனைத்தும் அருமை.
இணையத்திலிருந்து எடுத்து போட்ட படங்களும் நன்றாக இருக்கிறது.
//எத்தனையோ சிவலிங்கங்கள். அனேகமாக இந்தப் பகுதியில் தொல்லியல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும். அனைத்தையும் அருகருகே வைத்திருக்கிறார்கள்.//
இந்த கோயிலில் தொல்லியல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை வைத்து இருப்பார்கள்.
சில கோயில்களில் அருகருகே சிவலிங்கள் வைத்து இருப்பார்கள் அது யார் யார் பூஜித்த லிங்கங்கள் என்று பேர் எழுதி வைத்து இருப்பார்கள்.
அகத்தியர் பூஜை செய்தது, வருணன் பூஜித்த லிங்கம் என்று பேர் குறிப்பிட்டு இருப்பார்கள்.
இப்போது இயற்கை கல் ஜாலி ஓர்க் என்று செய்வதை அன்றே வெகு அழகாய் கல் சாளரங்கள் செய்து அசத்தி இருக்கிறார்கள். கலைவேலைப்பாட்டுடன் அவை இருக்கும் ஒவ்வொரு இடத்தில். படங்கள் எல்லாம் மிக துல்லியமாக இருக்கிறது.
தமிழர் வரலாற்றைப்பார்க்க தொடர்கிறேன்.
வாங்க கோமதி அரசு மேடம். சோழர் வரலாற்றைப் படிக்க எனக்குமே சுவாரசியமாக இருக்கு. சமீபத்தில், இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிப்படைகளிலிருந்து கற்களை எடுத்து இன்னொரு கோயிலை அமைத்தார்கள், எப்படி அந்த இரட்டைக் கோயில் பள்ளிப்படை என அனுமானிக்கப்பட்டது என்பதெல்லாம் சுவாரசியம், அடுத்த பயணத்தின்போது சென்று பார்க்கத் தூண்டுகிறது.
நீக்குபடங்களை ரசித்ததற்கு நன்றி
அது என்ன ராசியோ தெரியவில்லை, தக்கோணம் பூமி போர் பூமியாகவே இருந்திருக்கிறது. என் இளமை காலத்தில் இராணிப்பேட்டை ஒரு குட்டியூண்டு நகரம். அதுவே இப்பொழுது மாவட்டம் ஆகியிருக்கிறது. இந்த மாவட்டத்து அரக்கோணம் வட்டத்தில் ஒரு சிற்றூராக தக்கோலம் இருக்கிறது. இருப்பினும் புராணப் பெருமை வாய்ந்த தக்கோலத்தின் புராதனப் பெயர் திரு ஊறல் என்று அழைக்கப்பட்டதாக தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. ஜலநாதீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கிறார். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடல் பெற்ற திருத்தலம் இது.
பதிலளிநீக்குதக்கோணம் -- தக்கோலம்
நீக்குஎன்று திருத்தி வாசிக்கவும்.
வாங்க ஜீவி சார். தக்கோலம் எந்தப் பிரிவில் அமைந்திருக்கிறது என்று இன்று பார்க்க வேண்டும். யானைமேற்றுஞ்சிய தேவர் போர் நடந்த இடம். இன்னும் பல இடங்கள் போர்கள் நடந்தனவாக்க் குறிப்பிடப் படுகின்றன.
நீக்குநானும் குருக்ஷேத்திரம் என்ற யுத்த பூமி மிகுந்த வளர்ச்சிபெற்று மக்கள் கட்டிடங்கள் நிறைந்த இடமாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
சிரம்ப்பட்டு எடுத்த படங்கள் சிறப்பு நெல்லை. தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்கள் ஆத்மபூர்வமான எழுத்துக்களுக்கும் முயற்சிக்கும் நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி. தகவல்களில் தவறு இருக்குமாயின் குறிப்பிடத் தவறாதீர்கள். நன்றி
நீக்குவரலாற்றுச் சான்றுகளுக்கு இணையத்திலிருந்து எடுத்துப் போட்டது, அதாவது உங்க உழைப்பு சூப்பர் நெல்லை. அது போல வரலாற்றைத் திரட்டித் தொகுத்து கொடுக்கறதும். ஏன்னா எனக்கு எழுதறதுக்கே ஹப்பாடா என்று இருக்கு. உங்கள் உழைப்பும் ஆர்வமும் இன்னும் பெருகட்டும்.
பதிலளிநீக்குஉண்மைதான் அந்தக் கோபுரம் என்னென்ன ரகசியங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறதோ! என்ன அழகு இல்லையா?
கீதா
சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் சென்ற கீதா ரங்கன் க்கா... வாங்க.
நீக்குசிலவற்றைப் பற்றிப் படிக்கும்போது, அந்த இடம் எங்கே இருக்கிறது, இணையத்தில் கிடைக்குமா என்றெல்லாம் தேடுவேன். போகும் வாய்ப்பு இருக்கிறதா எனவும் யோசிப்பேன். நம் ஆர்வத்தைப் பொறுத்தது அது.
எழுதறது கொஞ்சம் கடினமான வேலை. எவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்து, படித்து, புரிந்துகொண்டு எழுதுவது சொல்லுங்க.
சிற்பங்களுக்குப் பெயின்ட் அடிபப்தெல்லாம் அராஜகம்.
பதிலளிநீக்குஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலிலும் கூட பல சிற்பங்கள் பொலிவிழந்து என்ன உரு என்று காண முடியாமலேயே இருக்கு. அந்கும் இந்தத் தூண்களைப் பார்த்து மரத்தில் இப்படிச் செஞ்சிருக்காங்களோ என்று வியந்தேன். பல பல வருடங்களுக்கு முன் பார்த்தது இப்ப பார்த்தப்ப பல வித்தியாசங்கள் இருப்பதாகப் பட்டது. பராமரிப்பு இல்லவே இல்லை.
உங்க படத்துல தூண்களின் அழகும் சிற்பங்களின் நுணுக்கமும் வடிவமும் இப்பவே இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படி இருக்குனா அப்ப செதுக்கி புத்தம் புது பொலிவோடு இருந்தப்ப எப்படி இருந்திருக்கும் இல்லையா?
கீதா
சிற்பங்களுக்கு, கல்வெட்டுகளுக்கு பெயின்ட் அடிப்பது அராஜகம்தான்.
நீக்குநான் திருப்புல்லாணி அருகிலிருந்த, மிக மிகப் பழைமையான சிவன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். தரிசனம் வாய்க்கவில்லை. ஆனால் ஓதுவார் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. 30-32க்குள் இருக்கலாம். என்ன தமிழ் என்ன தமிழ். அவரிடம், என்ன இப்படி பெயின்லாம் அடிச்சு புதுக் கோயில் போலப் பண்ணியிருக்காங்க. பழைமை காணாமல் போகுதே என்றேன். இப்படிச் செய்தால்தான் அடுத்த நாற்பது வருடங்களுக்குத் தாங்கும்னு சொன்னாங்க என்றார். தலத்தின் பெருமையான பெரிய இலந்தை மரத்தையும் காண்பித்தார்.
அவை சாளரங்கள்தானே நெல்லை! அப்படியே சொல்லலாமே
பதிலளிநீக்குஅந்தச் சாளரங்களை எல்லாம் எப்படி யோசித்துச் செதுக்கி செய்திருக்காங்க நடுவில் ஓட்டை வடிவம் எல்லாம். என்னைக் கவரு ஒரு அம்சம்.
அந்த நடனச் சிற்பத்தின் கீழ் பட்டையாக டிசைன்....அது ஓம் என்று வரும் ஓ அமைப்பாக இருக்குமோ? என்று நினைத்தால் அப்படியும் இல்லை. அது சுத்தி இப்படி ஒரு அழகான டிசைன்! கோலங்கள்ல போடறாப்ல சில மார்பிள் வடிவங்களிலி இப்படி டிசைன் இருக்கும் தூண்களில். அது பொல மரத்தில் வேலைப்பாடுகளில்.
ஊரில் பாட்டியின் பழைய வீட்டில் நாங்கள் ஒன்றாக இருந்து வளர்ந்த வீட்டில் நடை, ஹால் ஒரு பகுதி வரை மரம் தான் அதில் கதவு மிகவும் கனமான மரம் பல நுண்ணிய வேலைபபடுகள் இருக்கும் அது போல மேல் சட்டத்தில் மரத்தில் இப்படியான டிசைன்கள். அப்ப வீட்டில் ஏது மொபைல் அல்லது கேமரஆ? இல்லைனா அதை ஃபோட்டோ எடுத்து வைத்திருப்பேன். இப்பவும் நினைவிருக்கு பச்சை வர்ணத்தில் இருக்கும் ஆழ்ந்த பச்சை.
கீதா
ஆமாம் கீதா ரங்கன். எங்கள் பாரம்பர்ய வீட்டில் கதவு ஒரு அடிக்கும் அகலமானது, அழகிய டிசைன்களுடன். காரணம் அந்தக் காலத்து தீவட்டிக் கொள்ளையர்களை எதிர்கொள்ள. என் தாத்தா வீட்டில் கட்டிப்பிடிக்க முடியாத வழுவழு தூண் நடுக் கூடத்தில். அதைப் படமெடுத்திருக்கிறேன். பகிர்கிறேன்.
நீக்குஎங்க பாட்டி வீட்டிலும் வழ வழ குண்டு தூண்தான் வாழைப்பழ குலை உச்சியில் வைச்சாப்ல டிசைன் இருக்கும்....
நீக்குகீதா
தஞ்சையில் ஒரு மண்டபம்/கோயில் போன்ற அமைப்பை, வீட்டாக்கி வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன்.//
பதிலளிநீக்குஇப்படி திருநெல்வேலி, எங்க ஊர்ப்பக்கங்களிலும் நான் பார்த்ததுண்டு அப்போவே. ஆனா செம கல். அத்தனை ஸ்ட்ராங்கா இருக்கும். வீடு கொஞ்சம் இருட்டடிச்சாப்ல இருக்கும் ஆனா தனி aesthetic sense அதில் தெரியும். இப்ப தெரியவில்லை நீங்க சொல்லிருக்காப்ல பட்டா போட்டு அடுக்கு மாடி இல்லைனா நவீன வீடாகக் கூட மாறியிருக்கலாம். அந்தத் தூண்களில் விளக்கு ஏற்றும் படி கூட இருக்கும்.
இங்கு பழைய எலஹங்கா பகுதியில் இப்படியானவற்றைப் பார்க்கலாம் இப்பவும். பாழடைந்த மண்டபம் அதற்குள் கோவில் என்று
கீதா
ஆக்கிரமிக்கப்பட்ட அந்த இடங்கள் இப்போதும் இருப்பது நல்லதுதான். நேற்று அத்திமலைத் தேவன் நாவலை விரைவாகப் படித்தபோது அதுவும் பல செய்திகளைச் சொல்லிற்று. காலச்சக்கரம் நரசிம்மா, பிரம்மதேசம் என்ற கோயிலைப் பற்றிச் சொல்லி குழப்பிவிட்டுவிட்டார். இன்று எழுதிக் கேட்கணும்.
நீக்குபிரம்மதேசம் அம்பாசமுத்திரம் பக்கம் இருக்கற கோவிலாச்சே....நானும் அத்திமலைத் தேவன் வாசித்தேனே...ஓ திரும்ப வாசிக்க வேண்டும். ஒரே எட்டுல அவருடையது 3, 4 வாசித்தேன். ஸோ எல்லாம் மீண்டும் போய்ப் பார்க்க வேண்டும்
நீக்குகீதா
அவர் சொல்வது, பிரம்மதேசத்தில்தான் ராஜேந்திர சோழன் மறைந்தான் என்று. காஞ்சி, தஞ்சை பிரதேசங்களில் இருந்த ராஜேந்திரசோழன் ஏன் திருநெல்வேலி பக்கம் சென்றான்? அல்லது அவர் சொல்லும் பிரம்மதேசம் என்ற கோயில் காஞ்சியில் இருந்து, தற்போது இல்லையா? தெரியவில்லை.
நீக்குபிரம்மதேசம் என்ற கோயிலை, நான் யதேச்சையாகச் சென்று பார்த்தேன் (கல்லிடைக்குறிச்சியிலிருந்து மன்னார்கோயில் செல்லும் வழியில்). என்ன அருமையான மிகப் பெரிய கோயில் அது. ஒரு பதிவில் படங்களுடன் எழுதுகிறேன்.
படங்கள் எல்லாம் செமையா இருக்கு நெல்லை. அந்தத் தூண்கள், சிற்பங்கள் படங்கள் எல்லாம் செம
பதிலளிநீக்குகீதா
நன்றி ரங்கனதிட்டா கீதா ரங்கன்.
நீக்குகணையாழியில் வெளிவந்த உங்கள் கதைக்கும் இங்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல திறமைகள் உள்ளவர் நீங்கள். பாராட்டுகள்.
நீக்குநன்றி சேட்டா!!!!
நீக்குரங்கனதிட்டா கீதா ரங்கன்.//
ஹாஹாஹா
கீதா
//அவற்றில் சிவலிங்கங்களும் பலிபீடங்களும் இருந்தன. கோயில் கட்டப்பட்ட காலத்தின் என்ன என்ன இருந்தன என்பதை யாரே அறிவர்?//
பதிலளிநீக்குஅந்த படம் அழகாய் எடுத்து இருக்கிறீர்கள். சிவலிங்கத்தின் மேல் , மற்றும் பலிபீடத்தின் மேல் மட்டும் வெளிச்சம் தெரிவது மிக அருமை.
தூண் சிற்பங்கள் எல்லாம் அருமை.
//இரண்டாவது தூணில் உள்ள நாட்டியச் சிற்பம் எனக்கு பார்வதி, சிவனிடம் நடனமாடித் தோற்றதை நினைவுபடுத்தியது.//
அந்த நாட்டிய பெண் ஆடியது போல காலை தூக்கி ஆட முடியாமல்தான் சிவனிடம் தோற்றுபோனார் அன்னை.
நடன மங்கை நன்றாக காலை தூக்கி ஆடுகிறார்.
வாங்க கோமதி அரசு மேடம். அந்த நடனச் சிற்பத்தைப் பார்த்தவுடன் பார்வதியை அந்த நடனத்தின்மூலம் சிவன் தோற்கடித்த வரலாறு நினைவுக்கு வந்தது. நன்றி
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு. தாராசுரம் மற்றும் காவிரிக்கரையோர ஆலயங்கள் பார்க்க ஆர்வம் உண்டு. தமிழகம் வந்தபிறகு தான் இதற்கெல்லாம் வேளை வரும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட். தமிழகத்தில், அதிலும் திருச்சி வந்துவிட்டால், நீங்கள் காணவேண்டிய ஏகப்பட்ட அருமையான பழைமையான கோயில்கள் ஏராளமாக உண்டு. அதுவரை நாங்கள் பார்த்திராத பல பகுதிகளை நீங்கள் சென்று எழுதினால்தான் உண்டு.
நீக்கு