ஞாயிறு, 2 ஜூலை, 2017

ஞாயிறு 170702 : சௌ சௌ சுரைக்காய் அவகேடோ






இறங்கி விலை விசாரிக்க நேரமில்லை.  அவர்முன் தட்டில் இருக்கும் அவகேடோ பழம் ஒன்றின் விலை ரூ.  150.



நல்லவேளை.......



 ஓட்டுநர் இடது பக்கத்தில் இருந்தார்...



 ஓடுகிற காரிலிருந்து இந்தப்பக்கம் ஒரு க்ளிக் ..... 1



 அந்தப்பக்கம் மறுபடி ஒரு க்ளிக்....



 இந்தியாவின் சுத்தமான மாநிலத்தின் கரையிலிருந்து....



.......................சில காட்சிகள்.



 எவ்வளவு நேரம் இங்கேயே நின்றோம் தெரியுமா?  கடும் போக்குவரத்து நெரிசல்.



 வளைத்து வளைத்து இங்குதான் எடுக்கவேண்டியிருந்தது.  சின்னச்சின்ன மாற்றங்கள் வந்தபோது 'டக்'கென ஒரு "க்ளிக்"!



 அடடே...  அங்கேயும் இதே காய்கறிகள்தான்!!!  மினி சூப்பர்மார்கெட்!



 என்னவாம் அங்கு இப்படி உற்றுப் பார்க்கிறார்....!  சிக்கிமிலிருந்து வந்து சிலிகுரி நோக்கிப் போகிறவர்கள் எல்லோரும் அய்யாவைத் தாண்டித்தான் போகவேண்டும்!





தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


36 கருத்துகள்:

  1. நறுக் விளக்கத்துடன்
    அருமையான புகைப்படங்கள்
    மிகவும் இரசித்தோம்
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  2. அவகேடா பழம் முதல் அனைத்தையும் கண்டோம். புகைப்பட ரசனைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அவகேடோ பழம் இங்கே விற்பதை விட - விலை குறைவாகத் தான் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  4. படங்கள் நல்லா இருக்கு. ஆனால் பழைய படங்கள் ரிபீட் ஆகுது. புதன் புதிர் மாதிரி எங்கள் ஞாபகசக்திக்கு ஒன்றும் சோதனையில்லையே? த ம +1

    பதிலளிநீக்கு
  5. அவகேடோ பத்தின சமையல் குறிப்பாக்கும்னு நினைச்சுட்டு வந்தேன்! :)

    பதிலளிநீக்கு
  6. எங்கள் வீட்டின் பின் புறத்தில் ஒரு மரத்தில் அவக்கடா காய்த்து மாங்காய்கள் போல் தொங்குகிறது அதன் பழத்தை பட்டர் ஃப்ரூட் என்கிறார்கள் பழத்தை ஸ்கூப் செய்து அதை பாலில் அடித்து ஃப்ரீசரில் வைத்துச் சாப்பிட்டால் ஐஸ்க்ரீம் போல இருக்கிறது என்கிறார்கள் ஒரு பழம் ரூ 60க்கு விற்றார்கள் எனக்கு அதன்ருசி பிடிக்க வில்லை ஒரு தகவலுக்காக

    பதிலளிநீக்கு
  7. இந்த சௌ சௌவுக்கு பெங்களூர் கத்தரிக்காய் என்னும்பெயரும் உண்டு நீலகிரியில் இதனை மேரக்காய் என்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  8. #எல்லோரும் அய்யாவைத் தாண்டித்தான் போகவேண்டும்#
    அய்யா மாமூல் வாங்காமல் விடுவாரா :)

    பதிலளிநீக்கு
  9. 150 ரூபாயா? இது என்ன அவக்கேடு!

    பதிலளிநீக்கு
  10. கண்ணுக்கினிய காட்சிகள் பகிர்வுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. அவக்கேடோ, அவக்கடா என்றெல்லாம் அழைக்கப்பட்டு அவஸ்தைக்குள்ளாகும் இந்த காய் அல்லது பழத்தின் பூர்வீகம் மெக்ஸிகோ. மெக்ஸிகோவின் பழங்குடியினர் இதனைக் கண்டுபிடித்து வெகுவாக உபயோகித்தனர். ஸ்பேனிஷ் ஆக்ரமிப்பாளர்கள் இதனைக் கவனித்து தங்கள் நாட்டிற்குக் கொணர்ந்தார்கள். பிறகு ஐரோப்பாவின் பிறபகுதிகள், ஏனைய கண்டங்களில் பரவ ஆரம்பித்தது. சரியான உச்சரிப்பு அவக்காதோ. க்யூபாவில் நிறையக் கிடைக்கும். க்யூபர்கள் சாலட்-ஆக இதனை அதிகம் உபயோகிக்கிறார்கள். காங்கோவில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் உயர்ந்து நின்றிருந்தது அவக்காதோ மரம். ஆனால், ஜிஎம்பி-சாரைப்போலவே எனக்கும் இதன் ருசியில் நாட்டமில்லை!

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் அழகு.
    ஒரே மாதிரி படம் சின்ன சின்ன மாற்றங்களை ரசித்தேன். முன்பு குமுதம் பத்திரிக்கையில் ஆறு வித்தியாசங்கள் வருமே அது போல் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி துரை செல்வராஜூ ஸார். அந்தப்பழம் அங்கே என்ன விலை?

    பதிலளிநீக்கு
  14. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

    பதிலளிநீக்கு
  15. நன்றி நெல்லைத்தமிழன்.. // சில படங்கள் ரிப்பீட் //

    கீழே கோமதி மேடம் சொல்லியிருப்பது போல சிறு மாற்றங்கள் உண்டு.

    :))))

    பதிலளிநீக்கு
  16. வாங்க கீதாக்கா... ரொம்பப் பசியோ! ஞாயிற்றுக்கிழமையே திங்கக்கிழமையைத் தேடுகிறீர்கள்!

    :)))))

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஜி எம் பி ஸார்... நான் இந்தப் பழத்தைப் பார்த்ததே இல்லை. சொல்லப்படும் கருத்துக்களிலிருந்து எனக்கு இதன் ருசி பிடிக்கும் என்றும் தோன்றவில்லை!

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஜி எம் பி ஸார். பெங்களூர் கத்தரிக்காய் என்றொரு பெயர் இருப்பது தெரியும். தலைப்புக்காக அந்தப் பெயரை மட்டும் போட்டேன்!

    பதிலளிநீக்கு
  19. வாங்க பகவான்ஜி.. மாமூல் வாங்குவாரா தெரியாது. ஏனென்றால் இவர்களிடம் வாங்கவில்லை! நீங்கள் சென்று வந்தபோது இவரைப் பார்த்தீர்களா? என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  20. வாங்க வாசுதேவன் ஸார்...

    //150 ரூபாயா? இது என்ன அவக்கேடு! //

    ஹா.... ஹா..... ஹா...

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஏகாந்தன் ஸார். பழம் பற்றிய விவரங்கள் தந்ததற்கு நன்றி. நான் இந்தப் பழத்தைப் பார்த்ததே இல்லை!

    பதிலளிநீக்கு
  23. நன்றி கோமதி அரசு மேடம்... ஆறு வித்தியாசங்கள்! ஹா... ஹா... ஹா.. ஆமாம், அங்கேயே நீண்ட நேரம் காரில் காத்திருந்தபோது பொழுது போகாமல் ஒரு பெண்மணி வெளியில் துணி காயப்போட வந்தபோது எல்லாம் எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  24. அவகேடோ பழத்தை ஸ்கூப் செய்து அதை பாலில் அடித்து சில்லரில் வைத்துச் சாப்பிடலாம்..
    ஆனால் மலேசிய துரியன் பழத்தைப் போல உடல் வெக்கையைத் தூண்டி விடும்.. உஷார் ..

    அவகேடோ பழத்தில் பல ரகங்கள் உள்ளன..
    ஒற்றைப் பழம் விற்கப்படும் விலைக்கு நம்முடைய மதிப்பு 40 அல்லது 50 ரூபாய் தான்..

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அழகு..நதியா அழகோ அழகு!.....அவக்கேடோ பட்டர்ப்பிரூட் சுவை கிடையாதுதான்....ஆனால் மில்க் ஷேக் எனக்குப் பிடிக்கும். எனக்குத்தான் சுவையே தெரியாதே.ஹிஹிஹி..... அவக்கேடோ விலை...கேடு..ஆ ம்....அதிக விலை....ஆனால் உடலுக்கு நல்லது.....
    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஆஆஆஆ...நதியோ என்று ரைப்பியது.நதியா என்று என் மொபைல் ரைப்பி விட்டது..அதுக்கு கூட நதியா ரொம்ப பிடிக்கும் போல..( அதிரா இல்லை இதைப் பார்க்க மாட்டார்.இல்லைனா அவரோட கொஞ்சம் மல்லுக்கு காட்டியிருக்கலாம்..ராயல்டி விஷயமாக.....ரைப்பியது..!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அவகேடோ தனிப்பட்ட ருசி எதுவுமில்லாமல் வெண்ணெய்போன்று இருக்கும்.இரும்புச் சத்து உள்ளது. அதன் உள் விதையை எடுத்து விட்டால்,சதைப்பகுதி கறுத்துவிடும். டாக்டர்கள் பரிந்துரைப்பது.தனிப்பட்ட புளிப்போ,இனிப்போ,மணமோ இல்லாதது . ஒரு முறை பின்னூட்டமிட்டு காணாமற் போய்விட்டது. சௌசௌவிற்கு நேபாலிில் ஸ்கூல் என்று பெயர்.
    மற்றபடங்களிற் சில சிறு வித்தியாஸங்களில்தான் வித்தியாஸமிருக்கிறது. மற்றபடங்கள் அழகு. சுரைக்காய் வடமானிலங்களில் பிஞ்சாகக் கிடைக்கும். அவகேடோ மும்பையில் கிடைக்கிறது. விலை அதிகம்தான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்துள்ளேன்.அதீத தமிழ் பற்றும், சமூக சிந்தனையும் கொண்ட நான் அவ்வப்போது நகைச்சுவைப்பதிவுகளையும், மொக்கைக் கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளேன்.

    உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்வேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  29. சௌசௌ சுரைக்காய் அவகேடோ வைத்து ஏதோ ரெசிபியாக்கும் என்று நினைத்து வந்தேன். :))) அவகேடோ இங்கும் விலை கூடுதலான பழம்தான். ஒரு பழம் மூன்று டாலர். எனக்கும் மகளுக்கும் மிகவும் பிடித்தது. கணவருக்கும் மகனுக்கும் மிகவும் பிடிக்காதது. :)))

    பதிலளிநீக்கு
  30. அழகான படங்கள். அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!