Friday, July 21, 2017

வெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குதே...


     மலேஷியா வாசுதேவன் இளையராஜா  வருவதற்கு வெகுகாலம் முன்னரே தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், இளையராஜாதான் அவரைப் பிரபலப்படுத்தினார்.  அவரின் இசையில்தான் மலேஷியா வாசுதேவனின் பெரும்பாலான நல்ல பாடல்கள் வெளியாகின.  

     பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் அவருக்கு பிரபலத்தைத் தந்தது.  பின்னர்  பல பாடல்கள் பாடியிருந்தாலும் சி எஸ் ஜெயராமன் குரலில் ஒரு பாடலை முயற்சி செய்தார்.  படம் மணிப்பூர் மாமியார்.  படம்வெளிவரவில்லை.  ஆனால் பாடல் பிரபலம்.  இது போன்ற பாடல்களை பிரபலப்படுத்தியதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தானத்திற்கு அதிக பங்கு உண்டு.  அதை இங்கு இணைக்கிறேன்.  உடன்  பாடுபவர் எஸ் பி ஷைலஜா.

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு சொடுக்கவும்!

18 comments:

துரை செல்வராஜூ said...

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே!..

- விடியற்காலையில் அருமையான பாடல்!..

கோமதி அரசு said...

அருமையான பாட்டு .
பாடல் பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடல் இந்தப் பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். மிகவும் ரசித்துக் கேட்ட பாடல். நீங்கள் சொல்லியிருப்பது போல் இலங்கை வானொலி மூலம்தான் பேருந்து நிலையத்தில், பெட்டிக்கடைகளில் ஒலித்துக் கேட்டு ரசித்த பாடல். படத்தின் பெயர் இப்போதுதான் அறிந்தேன். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு ஆனந்தத் தேன் காற்று விடியும் காலையிலேயே மீண்டும் தாலாட்டி விட்டது!!!!

கீதா

நெல்லைத் தமிழன் said...

நல்ல பாடல். நல்ல தேர்வு காலையில் கேட்க. என் ஹாஸ்டல் காலத்தை நினைவுபடுத்தியது. இளையராஜா முழுமையா எம் எஸ் வி ஸ்கூலிலிருந்து முழுவதும் வேறுவகையான இசையினால் இளமைக் காலத்தை இனிமையுறச் செய்தார். த ம

KILLERGEE Devakottai said...

அற்புதமான பாடல் மிகவும் பிடித்ததும்கூட...

Nagendra Bharathi said...

அருமை

விஜய் said...
This comment has been removed by the author.
விஜய் said...

அருமையான காணொளி
தமிழ் செய்திகள்

ஸ்ரீராம். said...

நன்றி துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அரசு மேடம்.

ஸ்ரீராம். said...

நன்றி கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லைத்தமிழன்

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

ஸ்ரீராம். said...

நன்றி விஜய். விஜய்... நீங்கள் இந்த பதிலைப் படிப்பீர்களா தெரியாது. என்றாலும் சொல்லி விடுகிறேன். நீங்கள் பதிவையே படித்து கருத்திடுகிறீர்களா, இல்லை வெறும் விளம்பரத்துக்காக எல்லா தளங்களிலும் பின்னூட்டம் இடுகிறீர்களா என்றும் தெரியவில்லை. உங்கள் செய்தி தளம் தினமணி. அதைத் திறந்து படிப்பது கடினமான அனுபவமாயிருக்கிறது. ஏகப்பட்ட பாப் அப்ஸ்.. விளம்பரங்கள்... லோட் ஆகவே நேரம் எடுப்பதோடு, செய்திகள் நழுவி நழுவி ஓடுகின்றன. செங்கோட்டை ஸ்ரீராம் அங்கு பொறுப்பில் இருந்தவரை இருந்ததில்லை.

Geetha Sambasivam said...

நீங்க சொல்லலைனா சி.எஸ். ஜெயராமன் பாடினதுனே நினைச்சிருப்பேன். இந்த மாதிரிப் பாட்டெல்லாம் கேட்டதே இல்லை. :)

காமாட்சி said...

கேட்க அருமையாக இருக்கிறது இருவர்,குரலும்,பாட்டும். அன்புடன்

Bagawanjee KA said...

இந்த பாடலை இசை நிகழ்ச்சியில் அவர் நேரிலும் பாடியதை கேட்ட நினைவுகளை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!