திங்கள், 31 ஜூலை, 2017

திங்கக்கிழமை 170731 : சக்கவரட்டி (பலாப்பழ அல்வா) - ​ நெல்லைத்தமிழன் ரெஸிப்பி






      எனக்கு ரொம்பப் பிடித்தது, மாங்காய், பலாப்பழம், நுங்கு. இவைகளை எங்கு பார்த்தாலும் வாங்கணும்னு கை துறுதுறுக்கும். இந்த ஊர்ல, நாம விரும்பற வெரைட்டி கிடைக்கலைனாலும், மாங்காய் வருஷம் முழுவதும் கிடைக்கும். எனக்கு ஊறுகாய் மாங்காய் அல்லது பங்கனப்பள்ளி காய்தான் இஷ்டம். இங்க நீலன் அடிக்கடி வரும்.  நுங்கு இங்க வர வாய்ப்பே இல்லை. அபூர்வமா, முழு நுங்கை இங்கு ஹைபர் மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன்.  (அது உள்ள 3 நுங்கு இருக்கும்). அது ஒண்ணு கிட்டத்தட்ட 200 ரூ. (கட்டுப்படியாகுமா?).  பலாப்பழம் அந்த அந்த சீசன்ல நிறைய வரும். விலை ஜாஸ்திதான். இருந்தாலும் பசங்க இங்க இருந்தப்போ பாதிப் பழமாவது வாங்குவேன்.  நானும் ஊருக்குப் போகும்போது, என் பெண் எனக்கு பலாப்பழம் வாங்கித்தருவாள் (வெளில சுளையாக விற்பார்களே அதுவோ அல்லது பழமுதிர்ச்சோலையில் பாக்கெட்டோ)


      பலா, காயா இருக்கும்போது (அதாவது பழமாறதுக்கு முந்தின ஸ்டேஜ்), சுளைகளை எடுத்து, கொஞ்சம் உப்புத் தண்ணீர் தெளித்து, வெளிச்ச எண்ணெயில் (தேங்காய் எண்ணெய்) பொரித்தெடுத்தால், பலா சிப்ஸ் தயார். ரொம்ப நல்லா இருக்கும். எல்லா இந்தியக் (கேரளக்) கடையிலும் இது கிடைக்கும்.  பலாப்பழச் சுளையை வைத்து பலாப்பழ அல்வா (சக்க என்பது பலாவின் மலையாளப் பெயர். அதை வெல்லத்தோடு நல்லாக் கிளறிச் செய்யறதுனால, சக்க வரட்டி) செய்வாங்க, இல்லைனா சக்கப் ப்ரதமன் (பலாச்சுளையை வைத்துச் செய்யும் பாயாசம்). வேற எதுவும் நான் கேள்விப்பட்டதில்லை.  (வரட்டி என்றதும் கொஞ்சம் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது!!! - ஸ்ரீராம் )





      ஒரு வாரம் முன்பு (மே மாதம் கடைசியில் எழுதும்போது) என் ஆபீசில் வேலை பார்க்கும் நண்பர், எனக்கு பலாப்பழம் பிடிக்குமே என்று ஊரிலிருந்து ஒரு பலாப்பழம் கொண்டுவந்து தந்தார். கொஞ்சம் கஷ்டப்பட்டு முழுப்பழத்திலிருந்து சுளைகளை எடுத்தேன். அதை வெறும்ன சாப்பிட்டுத் தீர்க்க முடியாது என்பதால், சக்கவரட்டி செய்யலாம் என நினைத்துச் செய்தேன்.  (நீங்கள் மே மாதம் செய்தாலும் எங்களுக்கு ஜூலை இறுதியில்தான் கிடைக்கிறது! - ஸ்ரீராம்)



      இன்னைக்கு நான் சக்கவரட்டி எப்படிச் செய்தேன் என்று சொல்கிறேன். இதுக்கு நேரம்தான் எடுக்குமே தவிர, ரொம்ப சுலபமானது.



தேவையானவை: பலாச்சுளைகள். அதுக்கு ஏத்த மாதிரி வெல்லம்.  நான் ஒரு கிலோ சுளைக்கு, ½ கிலோக்குக் கொஞ்சம் கம்மியா வெல்லம் போட்டேன். (அதுவே ஜாஸ்தி இனிப்பா இருந்ததுன்னு ஆபீஸ் நண்பர்கள் சொன்னார்கள். அப்போ 300 கிராம் போதுமானதாக இருக்கும்) 4 ஸ்பூன் நெய். கொஞ்சம் ஏலக்காய் (பொடித்தது). வேறு எதுவும் வேண்டாம். ஆனால், Traditionalஆ கேரளத்தில் இதற்கு சுக்கு சேர்ப்பார்கள். முந்திரி போடலாம். திராட்சை தேவையில்லை. நான் சுக்கு சேர்ப்பதில்லை. ஏன்னா, அது பலாப்பழ அல்வாவின் சுவையைக் குறைத்துவிடும் (சுக்கு சேர்ப்பதற்கு மருத்துவரீதியான காரணம் இருந்தாலும்).   (மருத்துவ ரீதியான காரணம் என்றால்?  நான்கு அல்லது ஐந்து சுளைகள் சாப்பிட்டாலே வயிறு மந்தமாகி விடும்.  ஒரு கிலோ சுளைகள் என்றால்?  சுக்கு அதைச் சமன் செய்யுமோ! - ஸ்ரீராம்)





     பொதுவா, கேரளத்தில் பலாப்பழத்தை வேகவைத்து அரைப்பார்கள். இல்லைனா வதக்கி மசித்துக்கொள்வார்கள். ஆனால் இது எனக்குப் பிடிப்பதில்லை. செய்யும் அல்வாவில், பலாப்பழ வாசனையும் அதன் சுவையும் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். இப்போ செய்யும் விதம்.



     பலாச்சுளையில், 1/3 எடுத்து பொடியாக கட் பண்ணிக்கொண்டேன். 1/3ஐ மிக்சியில் அரைத்துக்கொண்டேன். 1/3ஐ அப்படியே வைத்துக்கொண்டேன்.  வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர் விட்டு பாகுப்பதத்துக்குச் சிறிது முன் ஸ்டேஜ் வரை காய்ச்சிக்கொண்டேன். இங்கு கிடைக்கும் வெல்லம் தூசு துரும்பு இல்லாதது 





     இப்போ கிட்டத்தட்ட வெல்லம் ரெடியானபின், அரைத்து வைத்த பலாப்பழம், கட் பண்ணின சுளைகள், பெரிய துண்டுகளாக இருக்கற சுளைகள் எல்லாவற்றையும் வெல்ல ஜலத்தில் போடவும். அப்போவே ஏலக்காய் தூளையும் போட்டுடலாம். அப்புறம் கிளறவேண்டியதுதான். அடுப்பு நிதானமான சூட்டில் எரியட்டும்.  நான் நான்-ஸ்டிக் கடாயை உபயோகப்படுத்தி, ஒரு தடவை கிளறுவேன், அப்புறம் டி.வி. பார்க்கப்போயிடுவேன். ஒவ்வொரு 5-10 நிமிடத்துக்கு ஒரு தடவை வந்து 1 நிமிடம் கிளறிவிடுவேன்.  எப்போ நல்லா கட்டியாகற மாதிரி இருக்கோ அப்போ, கொஞ்சம் நெய்யைவிட்டு கிளறவும். சுருண்டு வருவது தெரியும். அந்த ஸ்டேஜில்  அடுப்பை அணைத்துவிடவும்.



     அதை அப்போதே ஒரு பாத்திரத்துக்கு மாற்றிவிடலாம். சக்கவரட்டி தயார்.  இப்போ பலாப்பழ சீசன். செய்ய மறந்துடாதீங்க.


      நான் இரண்டு முறை செய்து, முழுப் பழத்தையும் காலியாக்கினேன். அலுவலகத்தில் நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க.
பின் குறிப்பு:



     பலாச்சுளைகளை வெல்லக் கரைசலில் போடும் சமயம், சுக்குப் பொடியைச் சேர்க்கலாம். இதுதான் டிபிகல் கேரள செய்முறை. எனக்குப் பிடிக்காது.




     முழு சுளைகளோ அல்லது கட் செய்த சுளைகளோ, பெரும்பாலும் கேரளாவில் போடமாட்டார்கள். எல்லாவற்றையும் அரைத்துவிடுவார்கள்.  ஆனால் நான் செய்யும் முறை இன்னும் சுவையாக இருக்கும்.

அல்வான்னா, கோதுமை அல்வாதான். அதுல முந்திரி, பாதாம் போடறதெல்லாம் என்னைப் பொருத்தவரை அலங்காரத்துக்குத்தான். சில சமயம், அளவுக்கு அதிகமான முந்திரியைப் போட்டு முந்திரி அல்வா என்றும் சொல்வார்கள். பலாப்பழ அல்வாவில், முந்திரி போடவேண்டாம். (மதுரையில் "ஹேப்பிமேன்" என்று ஒரு கடையில் கிடைக்கும் முந்திரி அல்வா ரொம்பவே ஃபேமஸ் நெல்லை..  முந்திரிகளுக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் அல்வாவும் இருக்கும்! - ஸ்ரீராம்)





     பாலக்காட்டில், பலாப்பழ சீசனின்போது சக்கவரட்டி செய்வார்கள். அது ரொம்ப நாள் இருக்காது. சீசன் முடியப்போகும் சமயம் (மே மாதம். ஜூனில் மழை ஆரம்பித்துவிடும். பழத்தின் சுவை குறைந்துவிடும்) கொஞ்சம் அதிகமாகவே கிளறி, கெட்டி அல்வா பதத்துக்குக் கொண்டுவருவார்கள். அது 6 மாதம் வரை தாங்கும்.



       படத்துல அழகுக்காக, சக்கவரட்டியைச் சுத்தி, சுளைகளை, சூரியகாந்திப் பூ போல வைத்துள்ளேன். 


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.




தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே.....

49 கருத்துகள்:

  1. பலாப்பழம் எனக்கு மட்டும் தான் பிடிக்கும். எப்போவானும் சுளைகள் வாங்கறதோடு சரி. இதிலே சக்கவரட்டிக்கு நான் எங்கே போக? :)

    பதிலளிநீக்கு
  2. சுலபமா இருக்கும் போலிருக்குதே.. சாப்பிட.

    பதிலளிநீக்கு
  3. நிறையவே சாப்பிட்டிருக்கிறேன்..

    இது இல்லாத கேரளக்கடைகளைக் காணமுடியாது - குவைத்தில்..

    பதிலளிநீக்கு
  4. நிறைய முறை சாப்பிட்டிருக்கிறேன். செய்து பார்க்கும் அளவுக்கு பொறுமை இருந்ததில்லை! :)

    பதிலளிநீக்கு
  5. கேரளத்தில். நேந்திரங்காய், பலாச்சுளையை எண்ணெயில் வறுத்து அதை வெல்லப்பாகில் போட்டு எடுப்பதைதான் சக்கரைவரட்டி என்று சொல்வார்கள் என்று நினைத்தேன்.
    பலாப் பழ அல்வாவை சக்கவரட்டி என்பார்கள் என்பது தெரியாது. செய்முறை விளக்கமும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. பலா, காயா இருக்கும்போது (அதாவது பழமாறதுக்கு முந்தின ஸ்டேஜ்), சுளைகளை எடுத்து, கொஞ்சம் உப்புத் தண்ணீர் தெளித்து, வெளிச்ச எண்ணெயில் (தேங்காய் எண்ணெய்) பொரித்தெடுத்தால், பலா சிப்ஸ் தயார்.//

    இது போல் வறுத்து வெல்லப்பாகில் போட்டு இனிப்பும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. துளசி: ஆஹா! சக்க வரட்டி!! நாவில் நீர் ஊறுகிறது. எங்கள் ஊரில் இது சீசனில் செய்து வைத்து நிறைய பதார்த்தங்கள் செய்வோம்....ரொம்பப் பிடிக்கும்..நெல்லைத்தமிழன்...

    கீதா: எனக்கு ரொம்பப் பிடித்தது, மாங்காய், பலாப்பழம், நுங்கு. இவைகளை எங்கு பார்த்தாலும் வாங்கணும்னு கை துறுதுறுக்கும். // ஆஹா!!! என் கையும் ...நெல்லை...ரொம்பப் பிடிக்கும் சக்க வரட்டியும் ரொமப்வே பிடிக்கும். நானும் சமீபத்தில் செய்தேன்...

    ஸ்ரீராம் இது மே மாதத்தில் செய்திருந்தாலும் வர்ஷம் முச்சோடும் நல்லா இருக்கும்...ப்ரிசேர்வ் நு சொல்லலாம். இருங்க இன்னும் படிச்சுட்டு வரேன்...

    பதிலளிநீக்கு
  8. நெல்லை சக்க வரட்டி, சக்கப் பிரதமன்....சக்கைப் பழம் போட்டு செய்யப்படும் வட்டையப்பம் (இங்கிலீஸுல சொல்லணும்னா ஜாக்ஃப்ரூட் ஸ்டீம்ட் பான் கேக்!!) சக்கப் பழ இலையப்பம்....அப்புறம் சக்கைப் பழத்தில் கூட்டு (என் அப்பா வழிப் பாட்டி செய்வதுண்டு அதில் சக்கக் கொட்டையும் போட்டு) சக்கைப் பழ தோசை....சிப்ஸ் நீங்களே சொல்லிட்டீங்க....இருங்க இன்னும் வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. செம டெக்கரேஷன் நெல்லை!!! ரொம்ப அழகா இருக்கு உங்கள் கற்பனைத் திறன்...மீண்டும் எனக்கு என் பள்ளி, கல்லூரி நினைவுகள் வந்துருச்சு...வெஜ், ஃப்ரூட் டெக்கரேஷன் போட்டிகள் வைப்பார்கள். பள்ளியில் தோழிகள் கலந்து கொள்ளூம் போது அவர்களுக்குச் செய்து கொடுத்ததுண்டு. பள்ளியில் நான் கலந்து கொண்டதில்லை...ஏனென்றால் நாமதானே வாங்கணும்...வீட்டுல அதுக்கெல்லாம் பைசா கிடைக்காது...கல்லூரி வந்தப்புறம் பொருளாதாரம் எடுத்ததால் எங்கள் டிபார்ட்மென்ட் நாங்கள் இது போன்ற போட்டிகள் வைக்கக் கூடாது என்று கூவுவோம்!!! சிக்கன டிபார்ட்மென்டாச்சே!!! நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்...எனவே வீட்டோடு சரி...நெல்லை உங்கள் ஆர்வம் பிரமிக்க வைப்பது மட்டுமல்ல எல்லாத்துலயும் கலக்கறீங்கப்பா...பாராட்டுகள்!!! அப்படியே பார்சல் அனுப்பறதுக்குத்தான் இவ்வளவும் சொல்லிருக்கேனாக்கும்!!!ஹஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நெத எங்கள் வீட்டில் பாட்டி வருஷம் முழுவதும் வைத்துக் கொள்வது போல் நன்றாகப் பாகு வைத்துக் கிளறி வைத்துவிடுவார்கள். நான் இப்ப அப்படிக் கிளறினாலும் ஃப்ரிட்ஜில் வைத்து விடுவது உண்டு...

    // பொதுவா, கேரளத்தில் பலாப்பழத்தை வேகவைத்து அரைப்பார்கள். இல்லைனா வதக்கி மசித்துக்கொள்வார்கள். ஆனால் இது எனக்குப் பிடிப்பதில்லை. செய்யும் அல்வாவில், பலாப்பழ வாசனையும் அதன் சுவையும் இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.//

    யெஸ் யெஸ் எனக்கும் அதே..வரிக்கன்/வருக்கை சக்கை என்றால் (இப்போது நீங்கள் காட்டியிருக்கும் பழம்)..எங்கள் வீட்டிலும் பாட்டிகள் சிறிய துண்டுகளாகக் கட் பண்ணித்தான் செய்து பார்த்து வழக்கம்....எனவே மீ டூ..அதுவே நல்லா மசிஞ்சுரும்...நிறைய பேர் கூழன் சக்கையைப் பயன்படுத்துவார்கள் அது பிய்க்கும் போதே ரொம்பவும் மென்மையாக இருக்கும். சுளை எடுப்பதும் வெகு எளிது....கூழன் சக்கை கிடைத்தால், அரைகக் வேண்டியதும் இல்லை.என் பாட்டிகள் கண்டிப்பாக வரட்டி செய்து வைத்துவிடுவார்கள். நானும் தான்...சாப்பிடுவதை விட அது நன்றாக இருக்கும் என்று... திருவனந்தபுரத்தில், ஊரில் இருந்த பொழுது. ....நான் வரிக்கன்/வருக்கை சக்கையில் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் ....அரைக்கவும் கூட மாட்டேன்...அப்படியே அது வதக்கிச் செய்யும் போது மசிந்தும் துண்டுகளாகவும் இருக்கும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நெ த அது சரி பரவால்லயே உங்கள் நண்பர் முழு பழத்தை ஃப்ளைட்டில் கொண்டு வந்தாரா? அது ஒண்ணே செக்கின் லக்கேஜ் ஆகியிருக்குமே...!!!!! ஹஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஹைஃபைவ் நானும் சுக்குப் பொடி போட மாட்டேன் நெ த!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. த ம போட்டேன்..முதல்ல எரர்னு வந்துருச்சு..அப்புறம் போட்டப்ப சுத்துக் கிட்டே இருக்கு...வந்துருச்சானு பாருங்க ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஸூப்பர் ஐயிட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  15. பலாப்பழமும் பிடிக்கும், அல்வாவும் பிடிக்கும். இந்த பக்கம் கொஞ்சம் பார்சல் பண்ணிவிடுங்க

    பதிலளிநீக்கு
  16. பலாப்பழமும் பிடிக்கும், அல்வாவும் பிடிக்கும். இந்த பக்கம் கொஞ்சம் பார்சல் பண்ணிவிடுங்க

    பதிலளிநீக்கு
  17. சூப்பர்!! இதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் சக்க பிரதமனோ??

    பதிலளிநீக்கு
  18. வாய்க்கு ருசியான ரெசிபி

    பதிலளிநீக்கு
  19. பலாப்பழம் பிடிக்கும்தான். வரட்டி, தொரட்டின்னு பேரப்பாத்தா வயித்தக் கலக்குதே!

    பதிலளிநீக்கு
  20. சக்க வரட்டின்னா அல்வாவா. செய்முறை,பிரஸன்டேஷன் என்று அசத்தி விட்டீர்கள்.சுலபமா இருக்கு. எர்ணா குளத்தில் ஒரு வருஷம் பிள்ளையோடு இருந்திருக்கிறேன். சாப்பிட்டுள்ளேன். பாகில் போட்டெடுத்த வறுவல் மிகநன்றாக இருக்கும். அதுதான் அப்போது
    என் ஃபேவரட். சர்க்கரை,நெய் அதிகம் சிலவில்லை. வருஷம் முழுவதும் வைத்துக் கொள்ளலாம். இங்கெல்லாம் அதிகம் வரதில்லை. மலையாளிகள் கடை பரிச்சயம் உண்டு. பலாச்சுளையாவது கிடைக்கிறதா பார்க்க வேண்டும். சூரிய காந்திமாதிரி பளிச்சென்ற இனிய பதிவு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. வெளியிட்டதற்கு நன்றி எங்கள் பிளாக் ஶ்ரீராம். பிறகு வந்து பதிலெழுதறேன்.

    பதிலளிநீக்கு
  22. இனிப்பிலே சுக்கா ?பொருத்தமா படலையே :)

    பதிலளிநீக்கு
  23. "நான்கு அல்லது ஐந்து சுளைகள் சாப்பிட்டாலே வயிறு மந்தமாகி விடும். ஒரு கிலோ சுளைகள் என்றால்? சுக்கு அதைச் சமன் செய்யுமோ!" - ஸ்ரீராம், வயிறு மந்தமாகும், கேஸ் டிரபிள் வரக்கூடாது என்பதற்காகத்தான் சுக்கு, கேரளத்தவர்கள் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், 4-5 சுளை சாப்பிட்டாலே மந்தமாகிறது என்று சொன்னீங்கன்னா எனக்கு ஆச்சரியம். நானெல்லாம், 20 சுளை சாப்பிட்டால்தான், 'அதுக்குள்ள முடிஞ்சுடுத்தா' அப்படின்னு முன்னால தோணும்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். சுளையாவது சாப்பிடறீங்களே. எல்லா பலாச்சுளைகளும் நல்லா இனிப்பா இருக்காது. நான் எப்போதும், 10 ரூபாய்க்கு (இப்போலாம்) 1 சுளை கொடுத்தாலும் போதும் என்று சொல்லி சாப்பிடுவேன் (சாப்பிட்டுப் பார்க்கிறேன் என்றெல்லாம் சொன்னா, விற்கறவன் கடுப்பாயிடுவான்). நல்லா இருந்தா மட்டும்தான் ஜாஸ்தி வாங்குவேன். சென்னைல, 1/4 கிலோ சுளை, 40 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை ஆகும்.

    பதிலளிநீக்கு
  25. வருகைக்கு நன்றி அப்பாதுரை ('த்' இல்லை ஸ்ரீராம்) சார். சாப்பிடுவதற்கு மட்டும்தான் சுலபம். இந்த முழுப் பழத்தையும் உரித்து சுளை எடுக்க எனக்கு 3 மணி நேரம் ஆனது. முதுகு வலி. அப்புறம் தரையை, அதன்மீது வைத்த நியூஸ் பேப்பரை எல்லாம் சுத்தம் செய்யணும். கத்தியை கிளீன் செய்வது ரொம்பக் கடினம் (பிசின்லாம் ஒட்டி அது ஒரு பெரிய வேலை). அப்புறம் வீடு முழுக்க பலாப்பழ வாசனை 2-3 நாளைக்கு இருக்கும். பெரிய வேலைதான்.

    பதிலளிநீக்கு
  26. வாங்க துரை செல்வராஜு சார். நீங்க தவறா சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கறேன். 'சக்கவரட்டி' அரபு நாடுகள்ல கிடைப்பதில்லை. 18 வருடங்களுக்கு முன்பு, துபாயில், (பர் துபாய் அஸ்டோரியா ஹோட்டல் ரோடு) ஒரு நாடார் கடை ஒன்றில் சக்கவரட்டி டப்பாவில் விற்பதைப் (ஒரு டப்பா 3 1/2 திர்ஹாம்) பார்த்து 10 டப்பா வாங்கினேன்.

    நீங்கள் சொல்வது அனேகமாக, அரிசி அல்வாவாக இருக்கும். அது எல்லா கேரள காய்/கனி விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும். அது என் பையனுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த அல்வா கேரளத்தில் மட்டும்தான் செய்கிறார்கள். அங்கிருந்து அரபு வியாபாரிகளுக்கு, வாழை இலை சுற்றிய ஓலைப்பெட்டியில், 8-10 கிலோ சைசுல வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... இப்படியும் ஒன்று இருக்கிறதா!.. உண்மையில் குழம்பி விட்டேன்... ஆனாலும் மேலும் ஒரு தகவல் கண்டு மகிழ்ச்சி..

      கடைகளில் பார்த்தது வேறாக இருக்கலாம்.. நாட்டுக்குச் சென்று திரும்பும் சேட்டன்கள் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்..

      நீக்கு
  27. வருகைக்கு நன்றி வெங்கட். நமக்காகவேதானே, பெண்களைப் (மனைவியை) படைத்துள்ளார்கள். வேணும்னு சொன்னீங்கன்னா, ஸ்ரீரங்கம் போகும்போது ரெடியாக இருக்கப்போகிறது.

    பதிலளிநீக்கு
  28. நன்றி கோமதி அரசு மேடம். நேந்திரங்காய் வைத்து வெல்லம் போட்டு செய்வதற்குப் பெயர், 'சர்க்கரை வரட்டி'. பலாச்சுளையில் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை. (ஏன்னா, அது நைந்துவிடும்). 'சக்க' என்பது பலாப்பழத்தைக் குறிக்கும். அதனால் இது 'சக்க வரட்டி' அல்லது தமிழில் 'பலாப்பழ அல்வா'

    பதிலளிநீக்கு
  29. வருகைக்கு நன்றி மி.கி.மா (நீங்கள் தமிழில் பின்னூட்டமிடுவதில்லை)

    பதிலளிநீக்கு
  30. புலவர் ஐயா.. வருகைக்கு நன்றி. 'உண்ண ஏன் அனுமதி கேட்கிறீர்கள்? சமீபத்தில் படித்தேன், 'அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது' என்று மருத்துவர்கள் சொல்வது சதி. எதைச் சாப்பிட்டாலும், செல்லும் நாள் வந்துவிட்டால் அதனை யாராலும் நிறுத்தமுடியாது என்று.

    பதிலளிநீக்கு
  31. கருத்துக்கு நன்றி தில்லையகத்து துளசிதரன். உங்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், பாலக்காடு மீண்டும் செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  32. நீண்ட கருத்துக்களுக்கு நன்றி கீதா ரங்கன். நான் வட்டையப்பம், இலையப்பம், சக்கைப் பழக் கூட்டு, சக்கைப் பழ தோசை - இவைகளையெல்லாம் சாப்பிட்டதில்லை. சக்கைப்பழ தோசை நன்றாக இருக்கும்னு எனக்குத் தோணுது (ஜாஸ்தி வெல்லம்போட்டு, நெய்யில் வார்த்தால், கிராம்பு, ஏலம் வாசனையோட). சக்கவரட்டி பண்ணின மறு'நாளே சக்கப்ப்ரதமனும் பண்ணவேண்டும் (எங்கள் பிளாக்குக்கு) என்று நினைத்து 20 சுளைகளைத் தனியாக எடுத்து வைத்திருந்தேன். அப்புறம் நேரமும் செய்யும் எண்ணமும் வரவேயில்லை. அதேபோல், பாயச வகைகள் என்று ஒன்று 'எங்கள் பிளாக்'குக்கு எழுதவேண்டும் என்று, என்னென்ன பாயசம் செய்யணும்னு லிஸ்ட் White Boardல் எழுதிவைத்து 4-5 மாதங்களாகிவிட்டன. இன்னும் செய்யவில்லை.

    "பார்சல் அனுப்பறதுக்குத்தான் இவ்வளவும் சொல்லிருக்கேனாக்கும்" - நீங்க வேற.. எங்க ஊர் கீதா ரங்கன் இதையெல்லாம் படித்து, இந்த ஆளுக்கு ஸ்வீட்தான் பிடிக்கும், அதனால் எப்பவாவது சந்திக்கும் வேளை வரும்போது, 'புளிக்காய்ச்சல்' கொடுக்காமல், ஸ்வீட் கொடுப்போம் (இல்லைனா ஏற்கனவே சொன்ன சேவை கொடுப்போம்) என்று மனதில் வைத்துக்கொள்வார்கள் என்றுதான் அடிக்கடி இனிப்புவகைகளை எழுதறேனாக்கும்.

    பதிலளிநீக்கு
  33. கீதா ரங்கன் - கூழன் சக்கை விலை குறைவு. அதை சுளையாக சாப்பிடமுடியாது. அதனால் அதனை சக்கவரட்டிக்கு உபயோகப்படுத்துவார்கள். யார் எழுதியது என்பது மறந்துவிட்டது, ஆனால் சிவப்பு நிற பலாச்சுளையை நான் பார்த்ததில்லை. எங்கேயாவது கிடைத்தால் வாங்கி சாப்பிட்டுப்பார்க்கவேண்டும். அதேபோல் நாகர்கோவிலில் மினி பலாப்பழங்கள் இருக்கிறதாம் (அதன் பெயர் தெரியவில்லை). அதனையும் டேஸ்ட் செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. வருகைக்கு நன்றி ராஜி. நான் 'நிஷா' இல்லை. அதனால் என்னிடம் கடையும் கிடையாது, பார்சல் அனுப்பும் வசதியும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  35. கீதா ரங்கன்- அவர் முழுப்பழத்தையும் (அது ரொம்பப் பெரிய பழம்) தஞ்சையிலிருந்து எனக்காகக் கொண்டுவந்தார். நான் பயணம் வரும்போது, எனக்கு அங்கிருந்து 50-60 கிலோ வரை கொண்டுவரமுடியும். போனதடவை, பூசணி, வாழைக்காய்,மாங்காய், புடலங்காய், 4-5 கிலோ மாம்பழம்லாம் கொண்டுவந்தேன்.

    பதிலளிநீக்கு
  36. வருகைக்கு நன்றி ஆதிவெங்கட். 1/2 மூடி தேங்காய். அதில் 1/2 கப் தண்ணீர் விட்டு அரைத்து பாலைத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் 3/4 கப் தண்ணிர் விட்டு அரைத்து அந்தப் பாலைத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். மீதியிருக்கும் தேங்காயில் இன்னும் ஒருமுறை 3/4 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து அந்தப் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். வெல்லம், இரண்டாவது+மூன்றாவது பால் சேர்த்துக் கொதிக்கவைத்து, அதில் பலாச்சுளை 5 போட்டு நன்றாக வேகும் அளவு கொதிக்கவையுங்கள் (சிலர் சுளையை வதக்கிக்கொண்டு சேர்ப்பார்கள். சீக்கிரம் வேகட்டுமே என்று). அப்புறம் எப்போதும்போல் முந்திரி போன்றவற்றைச் சேர்த்து, கடைசியில் முதல் 1/2 கப் பாலைச் சேர்த்து, உடனே அடுப்பை அணைத்துவிடவும். சக்கப் பிரதமன் ரெடி.

    பதிலளிநீக்கு
  37. வருகைக்கு நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

    பதிலளிநீக்கு
  38. வருகைக்கு நன்றி ஏகாந்தன்.. நல்ல தமிழ்ப்பெயர்தான் பிடிக்கும்னா, பலாப்பழ அல்வான்னு சொல்லிக்குங்க. (தொரட்டி என்றதும், நான் மாங்காய், புளியங்காய் பறிக்க உபயோகப்படுத்திய துரட்டி ஞாபகம் வந்தது. இப்போது உள்ள தலைமுறை 'தொரட்டி'யைப் பார்த்திருப்பாங்களா என்பதே சந்தேகம்)

    பதிலளிநீக்கு
  39. வாங்க காமாட்சியமா. வளவனூர் அக்ரஹாரத்தில் ஆரம்பித்த பிரயாணம் நிறைய இடங்களைப் பார்க்கும் வாய்ப்புக்களுடன் தொடர்வது ரொம்ப சந்தோஷம்.

    "பாகில் போட்டெடுத்த வறுவல் மிகநன்றாக இருக்கும்." - நீங்கள் நேந்திரத்தை கட் செய்து பாகில் போட்டுச் செய்யும் 'சர்க்கரை வரட்டி'தானே சொல்கிறீர்கள்? ஓணத்தன்னைக்கு சத்யாவில் (முழு லஞ்ச்) கண்டிப்பாக இருக்குமே.

    வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, மலையாளிகள் கடை, ஸ்ரீலங்கன் கடை, அதற்கு அப்புறம் குஜராத்தி/சிந்தி கடைகள் - இவைகள் இல்லையென்றால், இந்திய உணவுப்பொருட்கள் எங்கு கிடைக்கும்? அதற்காகவே அவர்களைப் பாராட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  40. வாங்க பகவான்ஜி. கேரளத்தவர்கள் இதற்கு சுக்கு சேர்ப்பார்கள் (காரணம், உடம்புக்கு நல்லது, பலா+வெல்லக் கலவை உடம்புக்கு ஒன்றும் செய்யக்கூடாது என்று)

    பதிலளிநீக்கு
  41. ஸ்ரீராம்- "வெளில சுளையாக விற்பார்களே அதுவோ அல்லது பழமுதிர்ச்சோலையில் பாக்கெட்டோ" - என் பெண் வெளியில் விற்றாலும், அல்லது பழமுதிர்ச்சோலையில் விற்றாலும், நான் ஊருக்கு வந்திருந்தால் வாங்கிவிடுவாள். நுங்கு (ஏப்ரல்/மே), மாங்காய், பருப்பு/ஜீனியில் செய்யும் இனிப்பு போளி-பேக்கரியில் கிடைக்கும் வகை - இதுவும் நான் சொல்லாமலேயே எனக்கு வாங்கிவருவாள். (பெண்களுக்கு உள்ள அந்த அந்யோன்யம் பசங்களுக்கு அவ்வளவா கிடையாது. பெண்கள் Express பண்ணுவாங்க. ஆண்களுக்கு மனசுலதான் வச்சுக்கத் தெரியும், அல்லது அவங்க, சிஸ்டர் பண்றதைப் பார்த்து சில சமயம் Copy பண்ணுவாங்க)

    பதிலளிநீக்கு
  42. ஒவ்வொரு சீசனிலும் சக்க வரட்டி செய்வதுண்டு அவ்வப்போது அதில் இருந்து சக்கப் பிரதமனும் செய்வதுண்டு எனக்குப் பிடித்த பழம்

    பதிலளிநீக்கு
  43. ஜி.எம்.பி சார். வருகைக்கு நன்றி. எனக்கு பெங்களூரில் பிடித்த விஷயமே, பலாப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள் நிச்சயமாகக் கிடைப்பதே. பலாப்பழம் அனேகமாக எப்போதும் கிடைக்கும். மற்றபடி, சென்னை உணவு அங்கு கிடைக்காது என்பதுதான் என் கவலை (வீட்டில் செய்யலாம் என்று சொன்னபோதிலும், எனக்கு வெளியில் ஆப்ஷன் இல்லை என்ற நினைப்பே கஷ்டமாக இருக்கு). மற்றபடி, போளி, முருக்கு போன்ற நொறுக்குத் தீனியைப் பற்றிக் கவலை இல்லை பெங்களூரில். இந்தத் தடவைகூட, எம்.டி.ஆரில் தோசை சாப்பிட்டேன். எனக்குப் பிடிக்கலை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!