Thursday, January 7, 2010

இன்றைய செய்திகள் 2010 ஜனவரி 7

 1. உயர்கல்வியில் தனியார்: கபில்சிபல் விருப்பம் ( தற்போது ஒவ்வொரு 100 மாணவர்களிலும், 12 பேர் மட்டுமே உயர் கல்வியில் சேர்கின்றனர். இந்த எண்ணிக்கையை வரும் 2020ம் ஆண்டு, 30 ஆக அதிகரிப்பதே அரசின் நோக்கம் !)
 2. இடைத்தேர்தல் : இந்திய கம்யூ., முடிவு ( பெண்ணாகரம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆதரிக்கும்,)
 3. ஸ்ரீநகரில் பயங்கரவாத தாக்குதல்.
 4. பொன்சேகாவுக்கு தமிழர் கூட்டணி ஆதரவு ( இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.)
 5. திருப்பதி கோவில் நகைகள் : நீதிபதி தகவல் ( விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கின்றன.)
 6. எம்.எல்.ஏ., சகோதரர் மாயமான பின்னணி ( மதுரையில் மாயமான தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் நித்யானந்தத்தை (வயது 54) கண்டுபிடிக்குமாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை தபால்தந்தி நகரில் வசித்த இவர், ஜன., 2, அதிகாலை முதல் காணவில்லை. தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல். நித்யானந்தம் சகோதரர்களுக்கு மதுரையில் ஆறு கடைகள் உள்ளன. இதில், "அனிதா மெட்டல் ஸ்டோர்' என்ற கடையை, அவர் நிர்வகித்து வந்தார். சமீபத்தில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, நரம்பியல் டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். கடையை அவரது மகன் நிர்வகித்து வரும் நிலையில், மனநலம் பாதிப்பால், வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர் என்பதால், கோவில் பகுதிகளில் கண்காணிக்குமாறு, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல்)
 7. அழகிரி முயற்சியால் தொழிற்சாலைகள் ( மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது)
 8. அறிவை பரப்பும் ரயில் : நெல்லை வருகை ( 208 நாட்கள் 18 ஆயிரம் கி.மீ., பயணிக்கும் இந்த ரயிலில் வெள்ளை நிறத்தில் 16 பெட்டிகள. ஒவ்வொரு பெட்டியிலும் வானிலை மாற்றம், உயிரியல், பிரபஞ்சம், மூளை செயல்பாடுகள், விண்வெளி துறையில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து நவீன மல்டிமீடியா கருவிகளுடன் விளக்குகின்றனர்)
 9. ராஜூவின் பினாமிகள் யார்? திடுக் தகவல் (  ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர்கள், தங்கள் தோட்டத்தில் பணியாற்றியவர்கள் பெயரில் ஏராளமான சொத்துக்கள் வாங்கிய திடுக்கிடும் தகவல்கள் )
 10. லஞ்சம் : பெண் தாசில்தாருக்கு காப்பு ( நாகையில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை, போலீசார் கைது செய்தனர்)
 11. சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில் ( சீனாவில் உலகத்தின் அதிவேக ரயில், பயணி ஒருவர் புகைபிடித்ததால் தீப்பிடித்ததாக கருதப்பட்டு நடுவழியில் நின்று விட்டது. 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டன. இந்த ரயிலில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் கழிப்பறையில் கூட புகை பிடிக்க அனுமதியில்லை. இந்த விதியை மீறி குளிரை தாங்க முடியாத ஒரு பயணி சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். புகை மூட்டத்தால் ரயிலில் இருந்த சென்சார் கருவி, தீப்பற்றியதாக நினைத்து எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் ரயிலின் டிரைவர்கள் வண்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்) 

13 comments:

kggouthaman said...

// சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்.//
ரயில் உடனே நின்றது. சிகரெட் புகைத்தால் - இதயமும், மூச்சும் சீக்கிரம் நின்றுவிடும்.

kggouthaman said...

// ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர்கள், தங்கள் தோட்டத்தில் பணியாற்றியவர்கள் பெயரில் ஏராளமான சொத்துக்கள்.//
அந்தக் கால டி எம் எஸ் - தனிப்பாடல் - "கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் ...." அது போல, "பணியாளர் ஆனாலும் ராஜு தோட்டத்தில் பணியாற்றுவேன்!"

ராமலக்ஷ்மி said...

தொகுத்து வழங்கியமைக்கு நன்றி!

kggouthaman said...

// லஞ்சம் : பெண் தாசில்தாருக்கு காப்பு.//
அது தங்கக் காப்பாக இருந்தால் சந்தோசப் பட்டிருப்பாரோ?

maddy73 said...

"சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்"

When will this happen in India..?

kggouthaman said...

// "சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்"

When will this happen in India..?//
maddy sir, நம்ம ரயில் எல்லாம் சிகரெட் புகை இல்லாமலேயே நடுவழியில் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுவது உண்டே!

tamiluthayam said...

அழகிரி முயற்சியால் தொழிற்சாலைகள் ( மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது)
அறிவிப்போடு எல்லாமே நின்று போகும். ஐடி பூங்காக்கள் என்னாச்சு. நாங்குனேரியில் தொடங்கப்படுவதாக தொழிற் பேட்டை. யாரை ஏமாத்த இந்த அறிவிப்புகள்

tamiluthayam said...

( இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.)
ஜெயித்து வரும் கட்சி, தங்களை ஆதரிக்காத தமிழர்களை, தேர்தலுக்கு பிறகு பழிவாங்காம்ம இருக்கணுமே.

Anonymous said...

// சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். புகை மூட்டத்தால் ரயிலில் இருந்த சென்சார் கருவி, தீப்பற்றியதாக நினைத்து எச்சரிக்கை ...//
எங்க ஊரு ஊதல் உலகநாதன் சொல்வது என்ன என்றால் - இதுவரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மோக் டிடக்டர்களில் அதி நவீனமானது - என் மனைவி மோப்ப மோகனா. இவர் நான் ஸ்மோக் செய்ததை புகை இல்லாதபோது கூட டிடக்ட் செய்து - அந்த சென்சார் ரயிலை நிறுத்தியது போல் - என் சாப்பாட்டையே நிறுத்தி வைத்துவிடுவார்!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// திருப்பதி கோவில் நகைகள் : நீதிபதி தகவல் ( விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கின்றன.)//
உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் அடிக்கடி திருப்பதி வந்து போவதால் - இந்த செக்கிங் அவ்வப்போது செய்து வைப்பது நல்லது!

கலையரசன் said...

நல்லது...

அப்பாதுரை said...

a fan asked george burns: "mr.burns, you oughta stop smoking. it will slowly kill you, ya know?"

burns said: "i should know. i am 87 and i've been smoking since 13"

கடைக்குட்டி said...

ம்ம் நெக்ஸ்ட்டு ???

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!