திங்கள், 18 ஜனவரி, 2010

காஃபி கலக்கல்

ஆண்கள் சமையல் வாரத்தை, காபியுடன் இனிதே ஆரம்பிப்போம்.


காபி தயாரித்தல்தான் ஆண்கள் எல்லோரும் முதலில் கற்கும் அடுப்படி அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.


மக்கள் எல்லாவற்றையும் மூன்று மூன்றாகப் பிரித்து அடையாளம் காணுவது மரபு. சங்க காலம், கற்காலம், பொற்காலம் என்றெல்லாம் (என்னுடைய) தூக்கத்திற்கு நடுவே எங்கள் சமூக பாட ஆசிரியர் ராஜசுந்தரம் கூறியவை, கதம்பமாக நினைவுக்கு வருகிறது.


அதுபோல - சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியை எடுத்துக்கொண்டால், காபிக் காலத்தை - கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.
1) கரியடுப்புக் காலம்.
2) மண்ணெண்ணெய் ஸ்டவ் காலம்
3) இலவச காஸ் அடுப்புக் காலம்.
4) Microwave oven / Induction stove காலம்.


நான் இந்த நான்கு வகை அடுப்புகளிலும் நானே தயார் செய்த காபியைப் பருகி ஆனந்தித்தவன்.


இதில் நான்காவது கால அடுப்பில் காபி தயாரித்தல்  மிக மிக எளிதானது. ஒரே நிமிடத்தில் காபி தயார் செய்து, அதை மூன்று நிமிடங்கள் ஆனந்தமாக, ருசித்துச் சாப்பிடலாம்.
'பாத்திரமறிந்து காபி போடு' என்னும் புதுமொழிக்கிணங்க, உங்களிடம் என்ன பாத்திரம் இருக்கு (எவர்சில்வர் / ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரமா அல்லது பிளாஸ்டிக் / கண்ணாடிப் பாத்திரமா) என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் இதை, சுலபமாக - கீழ்க் கண்ட சோதனை மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்:


உங்களிடம் உள்ள பாத்திரத்தை, சுமார் ஒரு மீட்டர் உயரத்திலிருந்து கீழே போடவும்.


ஒன்று: பாத்திரம் கீழே விழுந்ததும் எழும் ஓசை, கே வி மகாதேவன் இசை அமைத்த ஏ பி நாகராஜன் பட பாடல் (உதாரணம் 'மன்னவன் வந்தானடி ஈ ஈ தோழி) பி சுசீலா பாட ஆரம்பிக்கும் முன் எழும் தாம்பாள ஓசையை ஒத்திருந்தால், அந்தப் பாத்திரம் எ சி / ஸ்டெ. ஸ்டீல் என்று அறிந்துகொள்ளுங்கள்.


இரண்டு: போட்டமாத்திரத்தில், பாத்திரம் துள்ளல் இசைக்கு (குத்துப் பாட்டுக்கு) குத்துப் போடும் உங்கள் அபிமான நடிகை போன்று - குதித்தால் - அது பிளாஸ்டிக் பாத்திரம்.


மூன்று: போட்டவுடன் - சிலிங் என்ற சத்தத்துடன் பீஸ் பீஸாகி- உங்கள் காலைப்  பதம் பார்த்தால், அது கண்ணாடிப் பாத்திரம் - உடனே ஓடிச் சென்று அதே போல ஒன்றை, கடையிலிருந்து வாங்கி வந்துவிடுங்கள். இல்லையேல் உங்களுக்கு உங்கள் அம்மா / மனைவி / பெண் / இவர்களில் யாராவது ஒருவரிடமிருந்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடமிருந்தோ - உங்கள் தாய் மொழியில் அர்ச்சனை நடைபெறும். 


எவர்சில்வர் / எஸ் எஸ் பாத்திரங்கள், கரியடுப்பு முதல் (மைக்ரோ வேவ் அவன் தவிர மீதி) எல்லாவற்றுக்கும் ஒத்து வரும். பிளாஸ்டிக் / கண்ணாடிப் பாத்திரங்கள் மைக்ரோ வேவ் அவன் தவிர வேறு எதற்கும் லாயக்குப் படாது. 


செய்முறை - மிகவும் எளிய விஷயம் தான். 
* முதலில் பாத்திரத்தில் பாலையோ / நீரையோ / அல்லது இவை இரண்டையும் ஏதேனும் ஒரு விகிதாச்சாரத்தில், வேண்டிய அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். 


* அந்தப் பாத்திரத்துடன் கூடிய பா / நீ / பா + நீ - யை, அதற்கேற்ற அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்ற வைத்து  / ஆன் செய்து - (மொத்தத்தில்) கொதிக்க வைக்கவும். 


* பால் பொங்கும் பொழுது அல்லது நீர் கொதிக்கும் சமயம், அந்த அடுப்பை அணைத்துவிடவும்.


* அடுத்தபடியாக, ஒரு டம்ப்ளரில், இரண்டு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடரும் போட்டு, இரண்டையும் கலக்கிக் கொள்ளவும்.


* அதற்குப் பிறகு சூடான அந்த பா/ நீ / பா நீ யை இந்த சர்க் + கா ப கலவை மேலே ஊற்றி, அந்தக் கலவையை, நன்றாக நுரை வரும் வரை ஆற்றி,


* அதற்குப் பிறகு அதை வாயிலே மெது மெதுவே ஊற்றி, வயிற்றுக்கு மிதமான சூட்டில் அனுப்பவும்.


நான் தினமும் செய்து அருந்துவது, வெந்நீர் + சர்க்கரை + நெஸ்கபே கிளாசிக் - எல்லாம் சேர்ந்து எழுபத்தைந்து மி லி. 


பாத்திரம் : கண்ணாடி பாட்டில் - டாபர் ஹனி காலி பாட்டில் - மூடி இல்லாமல்.

அடுப்பு : மைக்ரோ வேவ் அவன். 
இதோ சில படங்கள். 
25 கருத்துகள்:

 1. இந்த விளையாட்டுக்கு நான் வரலைங்கோ....

  பதிலளிநீக்கு
 2. கரியடுப்பில் எ.சி பாத்திரத்தை வைப்பதா? இதை 'உத்தரவு' வாங்க்கிக் கொண்டு தான் எழுதினீர்களா?

  பதிலளிநீக்கு
 3. காபியில் பாலா? பாலில் காபியா? சிலபேர் சுவருக்கு அடிக்கும் பெயின்ட் போல் திக் காபி பேர்வழி என்று காபி போடுவார்கள். எங்கள் வீட்டில் காபி சாப்பிட அழைக்கும் போது, "வேண்டாம் மாமி" என்று அலறி ஓடிய நண்பன் விஜயன் நினைவு வருகிறது. பழவந்தாங்கல் விஜயன் - இன்னும் ப.தாவில் தான் இருக்கிறாயா?

  பதிலளிநீக்கு
 4. விறகு அடுப்பை மறந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி தேனம்மை,
  சை கொ ப - அப்போ நீங்க - கொத்துப் பரோட்டா செய்தல் பற்றி எழுதி engalblog@gmail.com க்கு அனுப்புங்க.
  அப்பாதுரை - கரியடுப்பில் எ சி பாத்திரம் ஏற்றியது எங்க அம்மா மேற்பார்வையில். அதற்கப்புறம் அந்தப் பாத்திரத்தை சுத்தமாகத் தேய்த்துக் கொடுத்துவிட்டேன்.
  நான் சொல்லியிருப்பது இன்ஸ்டன்ட் காபி கெட் அப்பு. எனவே பாலைக் காய்ச்சி ஊற்றிடுவீரே என்பதுதான் பதம்.
  பழவந்தாங்கல் வாசகர்கள் விஜயன் என்று யாரையாவது தெரியும் என்றால், அவருக்கு அப்பாதுரை என்று யாரையாவது தெரியுமா என்று கேட்டு, எங்களுக்குத் தெரிவியுங்கள்.
  ரவிச்சந்திரன் - கரியடுப்பில் காபி, விறகடுப்பில் வெந்நீர் என்பதுதான் வழக்கம்.

  பதிலளிநீக்கு
 6. Good description by a 'coffee maker' with 'nakaichuvai'. Thanks.

  -------------------------
  1) கரியடுப்புக் காலம்.
  2) மண்ணெண்ணெய் ஸ்டவ் காலம்
  3) இலவச காஸ் அடுப்புக் காலம்.
  4) Microwave oven / Induction stove காலம்.

  --> Chronologically, 3rd was after the 4th.

  --We wrongly use the term 'எ.சி பாத்திரத்தை'. It is actually Stainless Steel. 11 yrs back, when I first went out of TN & used the term 'Ever Silver' -- nobody (North indians) could understand. We use the term 'ES' in a similar way of using the term 'assault' wrongly. Please correct me if I am wrong. Thanks

  பதிலளிநீக்கு
 7. A small correction in the chronological order..
  The following order looks right(to me).

  1) கரியடுப்புக் காலம்.
  2) மண்ணெண்ணெய் ஸ்டவ் காலம்
  3) காஸ் அடுப்புக் காலம்.(bought by paying money)
  4) Microwave oven / Induction stove காலம்.
  5) இலவச காஸ் அடுப்புக் காலம்.

  பதிலளிநீக்கு
 8. மாடி எழுபத்துமூன்று - நீங்க சொல்லறது சரிதான். ஆனா நாங்க சொன்ன இலவச காஸ் - சாண எரிவாயுன்னு வெச்சிக்குங்களேன்!

  பதிலளிநீக்கு
 9. அடாடா... என்ன அருமையான recipe! காபி என்றதும் ஞாபகம் வருகிறது. 'ஒரு மாதிரியான' பெண்ணைப் பார்த்து 'அவ இன்ஸ்டன்ட் காபி மாதிரி' என்று ஒருத்தர் சொன்னார். புரிந்தால் சிரியுங்கள், இல்லாவிட்டால் ஏன் என்று கேட்காதீர்கள்.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 10. நீங்க காபின்னு சொல்றிங்க. ஆனா எனக்கென்னமோ வாய கொப்பளிக்க கொடுத்த சுடுதண்ணி மாதி இருக்கு

  பதிலளிநீக்கு
 11. எல்லா விளக்கும் விளக்கல்ல என்றார் திருவள்ளுவர். துள்ளுவதெல்லாம் மைக்ரோவேவ் உபயோகத்துக்கு அல்ல. சில பாலிதீன் வகைகள் மோசமான வாயுக்களை வெளியிடக்கூடும். ஓவனில் உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்தாலொழிய உபயோகிக்காதீர்கள்.

  பீங்கானில் செய்திருந்தால் கூட அழகான ஆர்ட் வேலைகள் செய்ய உலோகம் கலந்த வர்ணம் தீட்டியிருந்தால், ஓவனை ஆன் செய்தவுடன் மினி இடி மின்னல்களைப் பார்க்கலாம். பூவேலை செய்யாத ப்ளைன் பீங்கான் [சைனா] உபயோகியுங்கள் உள்ளே உலோகத் தகடு பொருத்தி - நாகூர் தர்கா முன் விற்பார்களே அவற்றை உபயோகித்தாலும் அதே வெடிதான் என்றாலும், நிறுத்திக் கதவைத் திறந்தபின் கூட நாட்டு வெடிகுண்டு ஸ்டைலில் துகள்கள் நம் மீது பாயலாம்.

  ஆகையால் தோழர்களே, ஓவனுடன் கொடுக்கப் பட்ட பாத்திரங்களையே பயன் படுத்திப் பயனடைவீர்.

  பாட்டி உபயோகித்த பித்தளை பில்டரினால் காப்பிக்கு சுவையும் மணமும் கூடுவது பற்றி யாரோ ஒரு பேப்பர் கூட எழுதியிருப்பதாகக் கேள்வி.

  பதிலளிநீக்கு
 12. சுவாரசியமான பதிவு!
  காபி என்றாலே அது பில்டர் காபிதான்! மத்த எல்லாம் அதுக்கப்பறம்தான். சொல்லி கொடுக்கறதுதான், கொடுக்கறீங்க, அழகா பில்டர் காபி போட சொல்லி கொடுக்க கூடாதா?
  நான் எல்லாம் அக்மார்க் முத்திரை காபி பிரியை கிடையாது. கல்யாணத்துக்கு அப்பறமாதான் காபி போட கத்துண்டேன், குடிக்கவும் ஆரம்பிச்சேன். இப்போ நான் போடற பில்டர் காபிக்காக எங்க வீட்டுக்கு வரவங்களும் உண்டு. 'அம்மா தாயே, நீ காபி போட்டு குடிக்க சொல்றதா இருந்தா நான் உங்க வீட்டு பக்கமே வரமாட்டேன்னும் சொல்றவங்களும் உண்டு. எதுவானாலும் காபி போடறது ஒரு கலைதான்! அது சிலபேருக்குதான் கைவந்த கலையாகிறது!

  பதிலளிநீக்கு
 13. tamiluthayam நீங்க சொல்லறது படத்தில் பாட்டிலில் உள்ள வஸ்துவைப் பார்த்து என்றால், அது சரிதான். ஏனென்றால் - அது தண்ணிதான். பக்கத்திலேயே இன்னும் கலக்காமல் சர்க்கரையும் இன்ஸ்டன்ட் காபி பொடியும் இருக்கின்றனவே.

  பதிலளிநீக்கு
 14. //மாடி எழுபத்துமூன்று - நீங்க சொல்லறது சரிதான். ஆனா நாங்க சொன்ன இலவச காஸ் - சாண எரிவாயுன்னு வெச்சிக்குங்களேன்!//

  ok sir. np.
  ரொம்ப உயரத்தில் இருப்பவனல்ல நான் அதுவும் எழுபத்திமூனாவது மாடி ("மாடி எழுபத்திமூணு").
  என்னை 'மாதவன்' அல்லது 'maddy73' என அழைக்குமாறு வேண்டுகிறேன். - நன்றி.
  ஸ்ரீராம் சார், "படம் பார்த்து கண்டுபிடியுங்கள் !" ( http://madhavan73.blogspot.com/2010/01/blog-post_18.html )
  மேலும் முயற்சி செய்யலாமே.. நீங்க இதுவரை இரண்டைச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 15. k_rangan சொல்வது சரிதான். மைக்ரோ வேவ் ஓவனுக்கு அவங்க கொடுக்கின்ற மஞ்சள் பிளாஸ்டிக்குதான் சரியான பாத்திரம். ஆனாலும் நான் எந்த பிளாஸ்டிக்கையும் நம்பாம, தேன் பாட்டிலைப் பயன்படுத்தி பல ஐட்டங்கள் செய்வது உண்டு. கண்ணாடியின் உருகு நிலை எண்ணூற்று ஐம்பது டிகிரி செல்சியஸ் என்று தெரிந்ததால் இந்தத் தெம்பு. சதுர அமைப்புக் கொண்ட தேன் பாட்டில் - அதிவெப்ப நிலையிலும் விரிசல் விடுவதில்லை.

  பதிலளிநீக்கு
 16. Actually when I typed maddy73 in Tamil keyboard, I got "மட்டி௭௩' which sounded more offensive. O K - hereafter we will try calling you 'மாதவன்' / 'maddy' .. !!
  ஒ கே யா?

  பதிலளிநீக்கு
 17. Super.

  Reminds me of my father-in-law who does not even know how to switch off the gas stove !! And used to say

  "ராஜம், பால் பொங்கறது பாரு !!"

  ஆணும் சரி / பெண்ணும் சரி, இப்போது எல்லாம், கல்யாணம் ஆனவுடன் தான் இதை கற்றுக்கொள்கிறோம் !

  இப்போது ஒரு சில பத்து பாத்திரம் தேய்ப்பது முதல், டிஷ் வாஷர் போடுவது, துணி தோய்ப்பது, மடிப்பது, வார கடைசியில் சில சமயம் சமைப்பது வரை - ஆனால் - ஏன் நான் என் அம்மாவுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை என்று அடிக்கடி தோன்றும் ! அப்பா விடமாட்டார்கள் அது வேற விஷயம்

  பதிலளிநீக்கு
 18. //நான் தினமும் செய்து அருந்துவது, வெந்நீர் + சர்க்கரை + நெஸ்கபே கிளாசிக் - எல்லாம் சேர்ந்து எழுபத்தைந்து மி லி.//
  அப்போ நீங்க தினமும் டிகாஷன்ல சக்கரை போட்டு குடிக்கறேன்னு சொல்லுங்க!

  மைக்ரோ வேவ் ஓவனுக்கு எப்பவுமே கண்ணாடி அல்லது பீங்கான் பத்திரம்தான் நல்லது. பொதுவாகவே பிளாஸ்டிக் நெருப்பில் உருகும் தன்மை உடையது. கடைகளில் இதற்காக கொடுக்கும் பிரத்யேக பிளாஸ்டிக் பாத்திரங்கள் கூட, கொஞ்சம் அதிகமாக சூடு செய்தால், அதில் உள்ள கெமிகல்ஸ் உணவுடன் கலக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பாத்திரங்களை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

  பதிலளிநீக்கு
 19. //நான் தினமும் செய்து அருந்துவது, வெந்நீர் + சர்க்கரை + நெஸ்கபே கிளாசிக் - எல்லாம் சேர்ந்து எழுபத்தைந்து மி லி.//


  நமக்கு எல்லாமே 250 மில்லி ஆவது வேண்டும் !!

  பதிலளிநீக்கு
 20. ம்ம் காபி போடுறது மட்டுமா ? புருஷ லட்சணம்...’’

  நாங்க பேச்சலர்ஸ் சமைக்க எவ்வளவு கஷ்டப்படுறோம் தெரியுமோ?

  பதிலளிநீக்கு
 21. யார் இந்தப் பதிவு போட்டதுன்னே சொல்லல.அவ்ளோ பயம் இருக்கு.அதுவரைக்கும் சந்தோஷம்.

  ஒரு பாத்திரத்தைக் கீழ போட்டு உடைச்சோ நெளிச்சோ உடைச்சோ பாத்துத்தான் உங்களைப்போல இருக்கிறவங்களுக்கு சமைச்சுத் தரணும்ன்னா வீட்ல எவ்ளோ பாத்திரம் நீங்க வாங்கிக்குடுக்கணும் !ம்ம்ம்....!

  "இன்ஸ்டன்ட் காபி" ....உங்க தயாரிப்பை விடச் சுலபமா காஃபி பவுடரைக் கொழுவிவிட்டு பட்டனை அமுக்கி மெஷின்ல அடிச்சில்ல குடிக்கிறோம் நாங்க.இது எப்பிடி !

  பதிலளிநீக்கு
 22. Why have you left out the ubiquitous coffee maker?

  பதிலளிநீக்கு
 23. பில்ட்டர் காபியே காபி மற்றெல்லாம் வெறும்
  பில்ட் அப் கொடுத்தவை.

  திடீர்ப் பொடி கலந்து போடுவது காப்பியே அல்ல என்னும் காபி பக்தர்களை எனக்குத் தெரியும். பிரபல எழுத்தாளர் ஆர். கே. நாராயணன் அவரது தயார் வெள்ளைத்துணியில் வடிகட்டிப் போடும் காபியே அசல் காபி என்று பிடிவாதமாக எழுதி இருக்கிறார். பித்தளை பில்டரை தேயும்வரை தேய்த்து பளபளப்பு ஏற்றி அதில் போட வேண்டும் டிகாஷன். ஆனால் பித்தளை டபரா டம்பளர் சில சமயம் ஒரு மாதிரி வாசனை வரும். எனவே காபி குடிக்க எவர் சில்வர் டபரா டம்ளரே சிறந்தது. காபியின் பரம பக்குவம் அதில் கலக்கும் சர்க்கரையின் அளவைப்பொறுத்து இருக்கும். அவரவருக்கு சரியான அளவில் சக்கரை போடுவது ஒரு கலை. அது அன்பான அம்மா, மனைவி, அக்கா தங்கை இவர்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு ஏன்? என் காபிக்கு எவ்வளவு சர்க்கரை என்று என்னை விட என்னுடைய திருமதிக்கு தான் சரியாகத் தெரியும். பாலில் டிகாஷன் கலக்க வேண்டுமா, டிகாஷனை முதலில் ஊற்றி பின்பு பால் கலக்க வேண்டுமா, சர்க்கரை எல்லாவற்றுக்கும் முதலாவதாகவா அல்லது ஆகக் கடைசியிலா என்று காபி கலப்பதில் சூட்சுமகள் பல உண்டு நண்பர்களே.

  பதிலளிநீக்கு
 24. சூடு ஒரு முக்கியமான பகுதி - சூடு போதாவிட்டால், ஒரு மாதிரி, பீடி இலைத்துகள் வாசனை வருகிற மாதிரி இருக்கும். எவர் சில்வர் அல்லது வெள்ளி டம்பளர் தான் காப்பியின் ருசியைக் கெடுக்காது. பித்தளை டம்பளர்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவா?
  அம்மாவின் specifications-ல் அரைக் கோட்டை, முழுக்கொட்டை, வறுக்க, அரைக்க உபயோகப்படும், சாதனங்களும், முறைகளும், அரைத்த பொடியின் grain size, இவற்றுடன், பில்டரில் போடப்படும் பொடியின் அளவு, குடை எனப் படும் distributor உபயோகம், முதலில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு, அதன் வெப்ப நிலை, அது ஊற்றப் படும் விதம், இவை தவிர, பவுடர் பால், பசும் பால், எருமைப் பால், பதப் படுத்தப் பட்ட பால் இவற்றின் தன்மை கொண்டும், போடப்படும் சர்க்கரையின் அளவு, கலக்கப் படும் விதம் [ஆற்றல், கலக்கல்] நுரை வேண்டுமா வேண்டாமா என்ற வாதங்களை எல்லாம் தாண்டி, அம்மா எப்போ காப்பி தருவா என்று எங்க வைக்கும் பானம் எங்கள் அம்மாவின் காப்பி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!