திங்கள், 4 ஜனவரி, 2010

யாரங்கே?


ஹேமா அவர்கள் அடிக்கடி, போடோவில் யாரு - ஸ்ரீராமா அல்லது கௌதமனா என்று கேட்பதால் - நாங்க கௌதமன் போட்டோ வேண்டும் என்று கேட்டிருந்தோம் - அவரு, இதுல எங்கியோ நான் இருக்கேன், தேடிப்  பிடிங்க என்று சொல்லி இதை அனுப்பி வைத்தார். யாராவது இதில் அவரைக் கண்டுபிடித்தால், எங்களுக்கும் சொல்லுங்க.

27 கருத்துகள்:

  1. தேடிக் கண்டுபிச்சவங்க அப்படியே ஜூம் பண்ணி எனக்கும் சொல்லிடுங்க!

    :-))

    பதிலளிநீக்கு
  2. KGG சார்? நான் கண்டு பிடிச்சுட்டேன். ஆனா யாருக்கும் சொல்லமாட்டேன்!

    பதிலளிநீக்கு
  3. அதோ.. அங்க.. வெள்ளை சட்டை போட்டவருதானே???

    பதிலளிநீக்கு
  4. இதைவிட அந்தப் படமே தேவல.
    அந்தக் கற்பனையோடவே இருந்திடலாம்.அதுதான் ஸ்ரீராம் கௌதம்ன்னு.

    பதிலளிநீக்கு
  5. அந்த குட்டிப் பொண்ணோட அக்காவை நமக்கு தெரியும்ங்கோ.... அவங்க நம்ம கிளாஸ் மேட்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  6. யோவ் வலையாபதி - நீ நாகப்பட்டினம் பக்கம் போயிருக்கேன்னு சொன்ன உடனேயே நெனச்சேன் - ஏதாவது ஏடாகூடம் பண்ணுவே ...என்று!
    அது என்ன நானே இந்தப் படத்தை அனுப்பி வெச்சதா எழுதி இருக்கே? எங்கே புடிச்சே இந்தப் படத்தை?

    பதிலளிநீக்கு
  7. கௌதமனாலேயே கூட அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க முடியாத ஒரு தெளிவு உங்கள் படத்தில். இதை எல்லாம் பார்க்கும் பொழுதுதான் நாம் இப்பொழுது உபயோகிக்கும் சாதனங்களின் மகிமை புரிகிறது.

    பதிலளிநீக்கு
  8. அந்த டைகட்டி நிக்கிறதுதான கௌதம் சார்?

    பதிலளிநீக்கு
  9. அன்னிக்கு kgg class கட் அடிச்சிட்டார். இந்த போட்டோ உள உள..

    பதிலளிநீக்கு
  10. ரொம‌ப வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து நான் ப‌டிச்ச‌ பாலியை பார்க்கிறேன்.ப‌ட‌த்தை பெரிய‌ அள‌வில் போட்டிருந்தாலும் ப‌ர‌வாயில்லை ஜூம் ப‌ண்ணிபார்க்க‌லாம்!!
    அதென்ன‌ங்க‌ முத‌ல் வ‌ருட‌ மெக்கானிக‌ல்??

    பதிலளிநீக்கு
  11. வசந்த் சார் - கௌதமனுக்கு டை கட்டத் தெரியாது. ஒருமுறை அவர் டை கட்டிக்க முயற்சி செய்தபொழுது, முடிச்சு இறுகி மூச்சு முட்டி நாக்கு வெளியே வந்துவிட்டதாம்!

    பதிலளிநீக்கு
  12. கலையரசன், கருப்பு வெள்ளை புகைப் படத்தில் - அண்டங்காக்கா கலர் கறுப்புச் சட்டைப் போட்டால் ஒழிய, மீதி யாவையுமே வெள்ளை / அல்லது டினோபால் வெள்ளையாகத்தான் காட்சியளிக்கும். எனவே படத்தில் வெள்ளை சட்டை அணியாதவர் யாரும் இல்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  13. ஹேமா நீங்க - ஆர்க்குட்ல, ஃபேஸ் புக் ல, டிவிட்டர்ல எல்லாம் கௌதமனைப் பார்க்கலையா?

    பதிலளிநீக்கு
  14. ஜவஹர் சார் - படத்துல ஒரு பொண்ணும் நிக்குதுங்கறதே நீங்க சொல்லிதான் எங்களுக்குத் தெரியுது!

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை சொல்வது ஒரு வகையில் சரிதான்; போட்டோ எடுத்த அன்று எனக்கு ஜுரம் - அதனால் லீவு போட்டிருந்தேன் - பாலிடெக்னிக் மெகானிகல் பிரிவு லீடர் (பெயர் சோமு என்று ஞாபகம்) தனியாக ஒரு நண்பரை வீட்டுக்கு அனுப்பி - போட்டோ செசனுக்கு மட்டும் வந்து நிற்கச் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  16. வடுவூர் குமார் - நீங்க வி டி பி யில் படித்தது எந்த ஆண்டு, எந்த பிரிவு? அப்பவும் இந்தக் கட்டிடம் இப்படித்தான் இருந்ததா - அல்லது மாற்றங்கள் ஏதேனும் உண்டா?

    பதிலளிநீக்கு
  17. வடுவூர் குமார் - படத்தின் மீது கிளிக்கிப் பார்த்தீர்களா? - முதல் வருட என்று எங்கேயும் போட்டிருக்கவில்லையே? - ஃபைனல் இயர் என்றல்லவா மேலே போட்டிருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  18. ஈரோட் நாகராஜ் சார் - உண்மை - அவர் படித்த மூன்று ஆண்டுகளிலும், அவரை, எந்த ஆசிரியரும் "Get out of the class room" என்று சொன்னதில்லையாம் - எனவே அவரு கிளாஸ் ரூம் உள்ளேயே இருந்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்!

    பதிலளிநீக்கு
  19. நான் படித்த பச்சையப்பன் கல்லூரியில் போலீஸ் ஸ்டேஷன் வந்துதான் எங்களை படம் எடுக்கவேண்டும் !! விடுங்க விடுங்க.

    வாரம் ஒன்பது பத்து (!!) படம் பார்ப்பதால் தியேட்டருக்கு கூட சான்ஸ் உண்டு !

    பதிலளிநீக்கு
  20. pilot premnath, justice gopinath, hitler umanath maadhiri, student saainath? [just joking]

    பதிலளிநீக்கு
  21. kggouthaman said... போட்டோ எடுத்த அன்று எனக்கு ஜுரம்

    விசயம் வெளிய வருதுயா..

    பதிலளிநீக்கு
  22. சத்தம் போடாதீங்க.நான் இன்னும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன் !

    பதிலளிநீக்கு
  23. கண்டு பிடிச்சுட்டேன்! கண்டு பிடிச்சுட்டேன்!
    உட்காந்து இருப்பவர்கள் வரிசையில், படத்தின் வலது பக்கத்தில் இருந்து இரண்டாவதாக உட்காந்திருப்பவர்.

    சரிதானே கௌதமன்? அப்ப உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், உங்களை நிச்சயமாக உட்கார வைத்து இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  24. // படத்தின் வலது பக்கத்தில் இருந்து இரண்டாவதாக உட்காந்திருப்பவர்.
    சரிதானே கௌதமன்? //
    மீனாக்ஷி,
    படத்தின் வலது பக்கம் என்று நீங்க சொல்வது எந்தப் பக்கம் - படத்தின் மேலே எழுதப்பட்டுள்ள எழுத்துக்களில் - வலிவலம் பக்கமா அல்லது நாகப்பட்டினம் பக்கமா? அந்தக் காலத்தில், ஆசிரியர்கள் அனைவரும் புகைப்படத்தில் உட்காருபவர்களாகவும் மாணவர்கள் நிற்பவர்களாகவும்தான் இருப்பார்கள். எனவே கௌதமன் நிற்பவர்தான். ஆனா உங்க ஸ்டேட்மெண்டில் ஒன்று சரி.

    பதிலளிநீக்கு
  25. வலிவலம் பக்கம்தாங்க நான் சொல்றது. நாகபட்டணம் பக்கம் இருக்கறவரை பாத்தாலே ஆசிரியர்ன்னு நல்லாவே தெரியுதே. தலைல முன்னாடி வேற அவருக்கு முடியையே காணோம். அவரை நான் கௌதம்னு சொன்னா, பணம் செலவானாலும் பரவாயில்லைன்னு கௌதம் நேரேயே வந்து என்னை திட்டிட்டு போய்டுவாரு.:)

    பதிலளிநீக்கு
  26. People having very good eye-sight can go to http://kasusobhana.blogspot.com for viewing the legend of the group photo you see in this blog.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!