# கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி
* அப்போ, மத்த இடங்களில் மெதுவா மின் உற்பத்தியா?
# சிறைவளாகத்தில் செம்மொழி பூங்கா
* செந்தமிழ்த் திருடர்களுக்கா?
# சிறைவளாகத்தில் செம்மொழி பூங்கா
* செந்தமிழ்த் திருடர்களுக்கா?
# ஆந்திராவில் பந்த் : இயல்பு பாதிப்பு
* பந்த் இல்லேன்னா மட்டும் என்ன கிழிச்சிடப் போறாங்க?
# புதுக்கட்சி துவங்குகிறார் கல்யாண் சிங்
* உமாபாரதி இப்போ எங்கே இருக்கிறாரோ - அங்கே அப்புறம் போய்ச்சேருவாரோ?
# செலவு பழக்கம் : மரபணு காரணம்.
* சேமிப்புப் புழக்கம் --- இடைத் தேர்தல் காரணமோ?
# தேர்வுதாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
* தேர்வு எழுதுவதையே புறக்கணித்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!
# கொசுவை ஒழிக்க புதிய யுக்தி.
* பல்லி வளர்ப்பதோ?
# முடிந்து போன விஷயம் : இளங்கோவன்
* இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே!
# கஞ்சா வழக்கிலிருந்து சிறுவன் விடுவிப்பு
* இருந்த கொஞ்சா நஞ்சா நம்பிக்கையும் போச்சு (இளைய தலைமுறை மீது)
# பணம் திரும்பத்தாக்கும் காலம் : வைகோ
* பணம் திரும்பாது போகும் காலம்?
# குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி
* டீ குடித்துவிட்டு - தூங்காமலேயே இருந்துவிடுவதோ?
கொஞ்ச மாத்தணும், இன்னும் தினசரி சிரிசிரியாகிவிடும்!
பதிலளிநீக்குநம்பர் மூணு! உமாபாரதி போய்ச் சேருவதற்கு இன்னொரு சரணாலயம் கெடச்சாச்சு!
நம்பர் நாலு!
செலவுப் பழக்கம் - இடைத்தேர்தல் வருதுன்னு அர்த்தம்!
சேமிப்புப் பழக்கம்-மரபணு காரணம்! ஆனா இன்னிக்கு இருக்கறது அதிசயம்!
நம்பர் அஞ்சு-உண்ணா விரதம் நடத்தினா உண்ணும் விரதம் போட்டிக்கு ஆரம்பிச்ச மாதிரி,
விரக்கடையால் அளந்து பேப்பர் திருத்தும் ஆசாமிகளுக்குப் பதிலா,
மெஷினை வச்சு சென்டிமீட்டர்ல அளந்து போடவா முடியாது!
கடைசி டயலாகுக்கு,
காதுல பஞ்சை வச்சு அடைச்சுக்கிறது இல்லே வேற இடம் பாத்துப் போய் விடுவது! அப்பத்தான் நம்ம குறட்டை சத்தம் தெளிவாக் கேக்கும்!
நாட்டு நடப்பு சிரிப்பா சிரிக்கு என்பதைச் சொல்லும் பதிவு:)!
பதிலளிநீக்குநாறுக்கு நாலு போல இருக்கு!!
பதிலளிநீக்கு:-)
நல்ல சிரிப்பு...
பதிலளிநீக்கு# கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி
பதிலளிநீக்கு* அப்போ.. (குளம்)ஆத்துல (கூடம்)படுக்கையறைல மெதுவா "உற்பத்தி" இருந்தா நாட்டுக்கு நல்லதுங்கறாங்க..
# சிறைவளாகத்தில் செம்மொழி பூங்கா
* அடுத்த மாநாட்டுக்கு ரெடி பண்wrong-அ
# ஆந்திராவில் பந்த் : இயல்பு பாதிப்பு
* பந்த் - இயல்பு பாதிப்புன்னா, "மாமூல்" வாழ்க்கை தான்.. ஜாலி...
# புதுக்கட்சி துவங்குகிறார் கல்யாண் சிங்
* கல்யான் கிங் இல்ல, நிம்மதி..
# செலவு பழக்கம் : மரபணு காரணம்.
* அணு அணுவா சேமிக்கறது தானே மரபு..
# தேர்வுதாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
* பணி - புறக்கணி; திருத்து - நிறுத்து.
# கொசுவை ஒழிக்க புதிய யுக்தி.
* எல்லாக் கொசுக்களுக்கும் கான்க்ராஸ்ல உறுப்பினர் கார்டு குடுத்து, கோஷ்டிகளா பிரிச்சா.. அடிச்சுண்டு....
# முடிந்து போன விஷயம் : இளங்கோவன்
* விஷயம் முடிஞ்சாலும், சமாச்சாரம் முடியலையே!!
# கஞ்சா வழக்கிலிருந்து சிறுவன் விடுவிப்பு
* அஞ்சா சிறுவன்; எஞ்சா நம்பிக்கை.
# பணம் திரும்பத்தாக்கும் காலம் : வைகோ
* திரும்பத் திரும்ப தாக்கும்...
# குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி
* முன்னாடியே இருக்கு, ear plug!!
அடி ஆத்தீ!
பதிலளிநீக்குகி மூ வும் ஈ நா வும் - என்ன போடு போடறாங்க பாருங்க! ஈ நா சிறப்புப் பாராட்டுகள்.
கலக்கலுங்க...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநல்ல பதிவு
வாழ்த்துகள்
ஆரம்பமே அசத்தல்.....
பதிலளிநீக்குஉங்ககிட்ட நான் இன்னும் எதிர் பாக்குறேன்.. :-)
பதிலளிநீக்கு(என்னவோ தெரியல என்னோட பதிவுக்கு சமீபத்துல எல்லோரும் இதுதான் சொல்றாங்க.. அதான்...)
நாம் எல்லாவற்றிலும் துரிதம் தான் குழந்தை முதல் !!
பதிலளிநீக்குமின்சாரம் இல்லாவிட்டாலும் சம்சாரம் இல்லாவிட்டாலும் - பக்கத்து வீட்டு சம்சாரம் போதும் நமக்கு !!!
இப்போது கார்பன் எமிஷன் கூட நாமும் சீனாவும் அதிகம் என்று கிழிக்கபட்டோம் !
//# கொசுவை ஒழிக்க புதிய யுக்தி.
பதிலளிநீக்கு* பல்லி வளர்ப்பதோ?//
இது நல்லாயிருக்கு.எங்க வீட்டுக்குப் போன் பண்ணி இப்பவே அப்பாகிட்ட சொல்றேன்.முடிஞ்சா ஸ்ரீராம் பேர்ல விளமபரம் குடுக்கச் சொல்லவா ?