திங்கள், 11 ஜனவரி, 2010

புதிர்க்கதை அப்பாடா முடிந்ததே~

 
கெட்ட கனவிலிருந்து திடுக்கிட்டு எழுந்தார் குடிமகன்.  என்ன ஆச்சரியம், எதிரில் குரு. அவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போது எப்படி வந்தது தூக்கம், கனவு?
 
குருவும் வியப்போடு சொன்னார், " நண்பா, நான் இப்போது கண்ட காட்சி கனவா நினைவா என்று திகைக்க வைக்கிறது!  நாய் நரி கட்சி தலைவர்கள் நல்லவர்கள் ஆகி..."
 
வெகு விரைவில் இவர் அவர் இருவருக்கும் ஒரே காட்சி தோன்றிய அற்புதம் (இது கூட செய்யா விட்டால் அப்புறம் குரு என்ன திறன் என்ன! ) புரிந்து சற்று நேரம் வாளாவிருந்தனர்.
 
" அய்யா நாம் இப்போது அடுத்த ஆப்ஷனை கற்பனையில் / கனவில் பார்க்க முயல்வோமா"
 
"செய்யலாம், ஆனால் இந்த நாய் நரி இரண்டும் நட்பானால் என்ன ஆகும் என்பதற்கு கனவு காட்சி எல்லாம் தேவையே இல்லையே. இரண்டும் சேர்ந்து ஊரையே விற்று சொத்து வாங்கி சேர்த்து விடும்.  இவர்களை ஒழித்துக் கட்டினால் அடுத்த தளத்தில் உள்ள தலைமைக் குஞ்சுகளுக்கு வால் முளைத்து கொம்பு வளர்ந்து முட்ட வரும்."
 
"அப்போ என்னதான் செய்யலாம் என்கிறீர்கள்?"
 
குரு ஏக்கப் பெருமூச்சு விட்டார். " அடிப்படையில் தவறு இருக்கும் போது மேல் பூச்சு வைத்தியம் செய்து என்ன பயன்?  அடிப்படை மாற்றம்  வேண்டுமானால் ஆசிரியர் போலீஸ்காரர் இரண்டு தளத்தவரும் சரியாக இயங்கி சமூக மாற்றம் செய்ய அடிகோல வேண்டும்.  தொழில் தெரியாத ஆசிரியரும் கை சுத்தம் இல்லாத காவலரும் பெரும்பான்மையாக இருக்கும் போது இது எப்படி சாத்தியம்? மாற்றலுக்கு பயப்படாத அதிகாரி, மேல் வரும்படிக்கு ஏங்காத அலுவலர், கொள்ளை லாபத்துக்கு ஆசைப்படாத வியாபாரி இதெல்லாம் எப்படி சாத்தியம்?" 
 
"அய்யா பின் நமக்கெல்லாம் விமோசனமே இல்லை என்கிறீர்களா?"  குடிமகன் முகத்தில் ஒரு கலவரம். 
 
"இருக்கிறது அப்பனே, இருக்கிறது.  ஊழல் ஆரம்பித்து எவ்வளவு வருஷம் இருக்கும்? ஒரு ஆயிரம் ஆண்டுகள்?  சீக்கு பிடிக்க ஒரு நொடி போதும்.  அதை சரி செய்ய பல நாட்கள் ஆகும்."
 
"மருந்தை சொல்லுங்கள் பிரபோ!"
 
"என் ஒருவனால் என்ன கிழித்து விட முடியும்? நான் மட்டும் பால் ஊற்றி என்ன பயன் என்று கேட்காமல் தனி ஒரு நபராக மாற முயன்று வெற்றி காண வேண்டும்.  தனி மரம் தோப்பாகாது.  ஆனால் தோப்பு என்பது    தனி மரங்களால் ஆனது. "
 
"நன்றி குருவே"  என்று சொல்லி புறப்பட்ட குடி மகன் தன்னில் மாற்றம் வருமா, எப்போது வரும் என்று வரும் என்று வியந்து வினவியவாறு நடக்கத் தொடங்கினார்.
சுபம் ??

3 கருத்துகள்:

 1. இந்தக் குருவை நம்பினா இவ்வளவு தானா? :) நமக்குத் தெரிஞ்சதை நம்ம கிட்டயே திருப்பிச் சொல்லி காசு வாங்குகிற கன்சல்டன்ட் மாதிரியா?

  தனி மனிதன் பேரியக்கமானதும் உண்டு. காந்தி. மன்டேலா. தெரசா. பிரபாகரன். எம்.ஜி.ஆர். பெரியார். சில சூபர் இயக்கங்கள். சில டப்பாக்கள்.

  தனி மனித வேகம் இயக்கமா மாற நீங்க சொல்லுறது போல நம்பிக்கையும் நேரமும் வேண்டும். அதே சமயம், நாய் நரி இல்லாத வாழ்க்கையும் போரடிச்சுடும்.

  பதிலளிநீக்கு
 2. /
  "நன்றி குருவே" என்று சொல்லி புறப்பட்ட குடி மகன் தன்னில் மாற்றம் வருமா, எப்போது வரும் என்று வரும் என்று வியந்து வினவியவாறு/

  வினவினா மட்டும் போதுமா? வெறும் வினவு விவகாரமாகவும், குப்பையாகவும் தான் இருக்கும்.

  முயற்சி செய்யப் போவது யார்? குருவா, சீடனா, அல்லது இங்கே வந்து கதை கேட்பவர்களா?

  எவாராக இருந்தாலும், மாற்றம் முயற்சிகளில் இருந்து ஆரம்பிக்கிறது!

  பதிலளிநீக்கு
 3. the approach to the solution, that change comes from within is novel. we all tend to look outside for any solution and expect magical results from others. but accept our own inefficiencies as part of the system and take the least effort in terms of rectifying the same. many a number of times, we think that to change from within ourselves is something to be ashamed of and do not even consider the option, at times of conflicts...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!