அடுத்த கட்டம் என்ற வார்த்தை எல்லாத் துறைகளிலும் பயன்படுகிற வார்த்தை. மனித வாழ்க்கை முதல் நாளிலிருந்து ஒவ்வொரு கட்டமாய் முன்னேறிக் கொண்டு வந்திருக்கிறது. ஆடை உடுத்தா நிலையிலிருந்து இலை ஆடை உடுத்தத் துவங்கி, நெருப்பின் பயன் அறிந்து...அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் கொண்டே இருப்பது வாழ்க்கை.
கமல் தனது படங்கள் மூலம் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகக் கூறுவார்கள்..பாலச்சந்தர், பாரதிராஜா, ஸ்ரீதர் போன்றவர்கள் அபபடி ஒரு அடுத்த கட்டத்தை திரையுலகில் உருவாக்கியவர்கள். இசையில் பழைய முறைகளை மாற்றி அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்போது A R ரெஹ்மான் புதுமைகள் செய்வது இப்போதைய அடுத்த கட்டம்.
எழுத்துலகில் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் முதல் நெடுங்கதை, பொதுவாக கதையுலகில் திகம்பர சாமியார் முதல் துப்பறியும் கதை என்று தொடங்கி பின்னர் கல்கி முதல் தமிழ்வாணன் சுஜாதா என்று அடுத்தடுத்த மாற்றங்கள் வந்த வண்ணமிருந்தன.
சுழற்றி சுழற்றி டயல் செய்யும் பழைய தொலைபேசி படிப் படியாக முன்னேறி செல்ஃபோன் வரை வந்து அதுவும் 3G என விரிவடையும் நேரம்...
இப்படி எல்லா துறைகளும் முன்னேற்றப் பாதையில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும்போது அரசியலில் மட்டும் தலைகீழ். சுதந்திரம் அடைந்தபிறகு எவ்வளவோ அடுத்தகட்டங்கள் அரசியலிலும் உண்டு சில நல்லவையாய், பல அல்லவையாய்...மேடை நாகரீகம், பேச்சு நாகரீகம், எழுத்து நாகரீகம் எல்லாம் கடைப் பிடிக்கப் படும் வழக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன....மேடைப் பேச்சுக்கள் உண்மை பேசுதல் என்ற நிலையிலிருந்து மாறத் தொடங்கி நாகரீகமாகப் பேசுவதும் குறையத் தொடங்கியது.
இவ்வளவு பீடிகையும் போட்டது இந்த கடைசி பாராவுக்குதான்...! பேச்சு நாகரீகம் குறைந்தாலும் கூட அம்மாதிரி மேடையில் பேசுபவர்கள் கட்சியின் இரண்டாம் கட்டம் கூட அல்ல மூன்றாம் அல்லது நான்காம் கட்டப் பேச்சாளர்கள்தான் அம்மாதிரிப் பேசப் பணிக்கப் படுவார்கள். பெரிய தலைவர்கள் தரம் கேட்டு பேச, குறைந்தபட்சம் பொதுவிலாவது பேசத் தயங்குவார்கள்...ஆனால் நமது நாட்டு முக்கியத் தலைவர் ஒருவர், அவர் முன்னாள் பிரதமர் வேறு, கர்நாடக மாநில ஆளும் முதல்வரை தரம் கெட்ட வார்த்தைகளால் தயங்காமல் திட்டி இருக்கிறார். கேமிரா முன்னால் பேசுகிறோம், மக்கள் பார்ப்பார்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம், தயக்கம் சிறிதுமில்லை. (இவர்தான் இப்படிப் பேசுகிறார் என்று பார்த்தால் முதல்வர் 'இன்னொருமுறை அவர் அப்படிப் பேசினால் நானும் திருப்பித் திட்ட தயங்க மாட்டேன்..' என்கிறார்!)
அரசியலில் அடுத்த கட்டம் என்பது தொடங்கப் பட்டுள்ளது...முன்னேற்றப் பாதையில் அல்ல. புதிர்க் கதை குரு ஏன் நழுவ மாட்டார்...?
ஹூம் - பிரதமர் போன்ற பெரும் பதவிகள் வகித்தவர் - பேட்டை ரவுடியைவிட கீழ்த்தரமான வார்த்தையை பேசுவதா? நீங்க சொன்னது சரிதான் - வேறு எல்லா துறையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்பொழுது - அரசியலில் மட்டும் - சுதந்திரம் அடைந்த பிறகு - நாகரீகம் படிப்படியாக தேய்ந்துவருவது வருந்தத்தக்கது.
பதிலளிநீக்குவினாஷகாலே விபரீத புத்தி.. (நன்றி..: கௌதமன்)
பதிலளிநீக்குஅரசியல் ஒரு சாக்கடை .
பதிலளிநீக்குஇதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது ..
ம்ம்மம்ஹூம்! கவுடா இதிலும் செகண்ட் தான்!
பதிலளிநீக்குமாநில சுயாட்சி எங்கே இருக்கிறது என்று கேட்ட சட்ட மன்ற காங்கிரஸ் உறுப்பினருக்கு, அவர் ஒரு பெண், பாவாடை நாடாவுக்குள் இருப்பதாகப் பதில் சொன்னது, ஜெயலலிதாவை, அவருடைய அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆபாசமாக சட்டமன்றத்திலேயே அர்ச்சித்தது, இதில் எல்லாம் தமிழ்நாடு தான் முன்னோடி!
அப்ப கவுடா?
நாற்காலி, இல்லை கிடைத்த இடம் எதுவானாலும் குறட்டை விட்டுத் தூங்கியிருப்பார், இப்போது தான் முழித்திருக்கிறார் போல :-))
கூவத்த கிளீன் பண்ண முடியுமா ?
பதிலளிநீக்குஇத்தனை வயதுதான் ஆனதற்கு நாவடக்கமில்லாமல் பேச்சு. குமட்டுகிறது. இப்படி அரசியல் பண்ணி சாதிப்பது என்ன?
பதிலளிநீக்குசட்ட சபையிலேயே சேலையை புடித்து இழுத்த பயலுவ, இவனுங்க கிட்ட நாகரீகத்த எதிர்பாக்குற அளவுக்கு நீங்க அப்பாவியா ?
பதிலளிநீக்குஇன்னைக்கு சட்ட சபைல நடந்த கூத்த படிச்சு பாருங்க.
இது அரசியல்... இதுவே அரசியல்... இது தான் அரசியல்...
பதிலளிநீக்குவார்த்தையில் ஏது நாகரீகம் அனாகரீகம்? தேவைப்பட்டா உபயோகிக்கத்தான் வார்த்தைகள் இருக்கின்றன. இருந்தாலும், வூட்டுக்கு வூடு வாசக்கா.
பதிலளிநீக்குஉண்மை அரசியலில் நாகரீகம் குறைந்துதான் போய்விட்டது
பதிலளிநீக்குஎழுதுறதோ எழுதுறீங்க - அப்படி என்ன தான் சொன்னார்னு எழுதக்கூடாதா? தெரிஞ்சுக்குவோம்ல?
பதிலளிநீக்குதேவைபட்டால் உபயோகிக்கதான் வார்த்தைகள் என்றால் எதற்காக வள்ளுவர் முதற்கொண்டு பலர் இனியவையே பேசவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
பதிலளிநீக்கு//இனிய உளவாக இன்னாத கூறல்........//
//தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்.....//
இக்குறளெல்லாம் எவ்வளவு உண்மை, அல்லவா!
அரசியல்ல நாகரிகத்தை எதிர்பார்க்கறீங்களே.......................நீங்க இவ்ளோ அப்பாவியா?
பதிலளிநீக்குகுரோம்பேட்டைக் குறும்பன்,
பதிலளிநீக்குஉண்மை. நம் நாட்டில்தான் இப்படியா...எல்லா ஊரிலும் இப்படிதானா...
*************
*************
maddy73,
நன்றியை உங்களுக்கு சொல்லலாமா அல்லது நாங்களே வைத்துக் கொள்வதா?
******************
******************
மந்திரன்,
சாக்கடையை சுத்தம் செய்ய வழியே இல்லையா? இவர்கள் எல்லாம் எப்போது நாகரீகம் படிப்பார்கள்?
கிருஷ் சார்,
பதிலளிநீக்குஅவராவது ஏதோ மறைபொருளாகப் பேசினார். பாவாடை என்ற வார்த்தை வராமல் நாடாவை அவிழ்த்தால் தெரியும் என்றார்.இவர் கேமிரா முன்பு 'அந்த' வார்த்தையை எவ்வளவு சாதாரணமாகப் பேசினார்? (அப்பாதுரை கவனிக்க..."அந்த வார்த்தை'...!)
*********************
********************
பின்னோக்கி,
கூவத்தைக் கூட கிளீன் பண்ணுவதாக இவர்கள்தான் சொன்னார்கள்
நன்றி வானம்பாடிகள்,
பதிலளிநீக்குஇவர்கள் அரசியலை ஒரு பிழைப்பாக நடத்திக் கொண்டிருக்கையில் நாகரீகம் எங்கு எதிர்பார்ப்பது?
*******************
******************
அனானி,
எதிர்பார்க்க முடியாதுதான்...அஆனால் நீங்கள் உங்கள் பெயர் சொல்லி வரலாமே..
tamiluthayam,
பதிலளிநீக்குஒரு அரசியலையே தாங்க முடியவில்லை. மூன்று முறை சொன்னால் பீதியாகிறது..!
******************
******************
துரை,
நியாயமான வாதமா இது? உபயோகிக்கத்தான் எல்லா வார்த்தையும் என்று யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் 'எந்த' வார்த்தை வேண்டுமானாலும் பேச முடியுமா என்ன?
உண்மை தேனம்மைலக்ஷ்மணன்,
பதிலளிநீக்குஆனால் மாறுதல் எப்படிக் கொண்டு வருவது?
*************
*************
ஆஹா மீனாக்ஷி,
எங்கள் சார்பில் உங்கள் பதில்...நீங்கள் சொல்வது சரி...
******************
*****************
பெ.சொ.விருப்பமில்லை,
உங்களுக்கேதான் தெரியுமே..எங்களை ரொம்ப நல்லவங்கனுதானே சொல்வாங்க... !
எடியூரப்பாவிற்கு எதிராக தனிப்பட்ட முறையில் எழுத , குறிப்பிட முடியாத தகாத வார்த்தையையும் பயன்படுத்தினார். இது கர்நாடக மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.இதற்கு பா.ஜ., தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, "என்னுடைய பேச்சுக்கள் எடியூரப்பாவை புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்' என, தேவகவுடா கூறினார்.
பதிலளிநீக்குfrom today's Dinamalar 12/01/10
வாதத்தில் ஏது நியாயம் அனியாயம்? (மாட்டிக்கிட்டீங்களா?)
பதிலளிநீக்குஎண்ணத்தைத் தெரிவிக்கத் தான் வார்த்தை. தெரிவிக்கும் விதம் அவரவர் விருப்பம். just my view.
வள்ளுவர் சொன்னதெல்லாம் சரிதான். இப்படிச் சொன்னா இது மாதிரினு..they are morals. அதுக்காக காய் கவரக்கூடாதுனு ஒண்ணும் இல்லையே? தேபை என்றால் பதறி முகம் சுளிக்கும் மனம் வேம என்பதை இலக்கியமாக ஏற்றுக்கொள்கிறது. எது கனி, எது காய்? யார் சொல்வது?
'எழுத்தில் வெளியிடமுடியாத' போன்ற செயற்கையான வரைமுறைகளை பாசாங்குடன் கட்டிக்காப்பதால் தான் திவாரிகள் உருவாகிறார்கள் (மொழுக்கு என்ன காரியம் செய்கிறது?!).
பேசியதை வைத்து நாகரீகம் அனாகரீகம் பண்பாடு கெட்ட நல்ல என்ற judgment பேதமை என்று நினைக்கிறேன். இந்திரா காந்தி புன்னகை செய்தால் சாவுமணி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். how to judge?
பதிலளிநீக்குthat is my judgment :)
பதிலளிநீக்கு// செயற்கையான வரைமுறைகளை பாசாங்குடன் கட்டிக்காப்பதால் தான் திவாரிகள் உருவாகிறார்கள் (மொழுக்கு என்ன காரியம் செய்கிறது?!//
பதிலளிநீக்குதுரை சார் - இந்த இடத்தைப் படிக்கும்பொழுது உண்மையிலேயே வாய்விட்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன்!
அரசியலில் கட்சித் தலைவர் அநாகரீகத்தில் எட்டடி பாய்ந்தால் - கட்சியில் உள்ள எடுபிடிகள் பதினாறடி, முப்பத்திரண்டு அடி என்றெல்லாம் பாயத் தொடங்கிவிடுவார்கள். கண்ணியம் இல்லாத அரசியல் பேச்சுகள் ஒரு மாநிலத்தை / தேசத்தை விரைவாகக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிடும். பெரிய பதவி வகித்தவர்கள், அந்தப் பதவியின் கண்ணியத்தைக் கடைசி வரை காப்பாற்றவேண்டும். தரம் தாழ்ந்து பேசக் கூடாது. இதுதான் எங்கள் அபிப்பிராயம்.
பதிலளிநீக்குஎந்த வார்த்தையாக இருந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளவது என்பது சொல்லுபவரையும், சொல்லும் இடத்தையும், விதத்தையும், கால நேரத்தையும் வைத்து மாறுபடுவது இல்லையா. ஒருவரின் கண்ணியம் என்பது அவர் நடத்தையில் தீர்மானமாவதைப் போல், அவர் பேசும் வார்த்தைகளாலும் தீர்மானமாகிறது தானே! அதனால் நாம் எங்கு, எதை, எப்படி பேச வேண்டும் என்று எப்பொழுதுமே சிந்தித்த பின் பேசுவதுதான் சிறந்தது.
பதிலளிநீக்குமீனாக்ஷி அவர்கள் மிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறார். ஆமாம் - எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டின் முக்கிய மூன்று சுழிகள். எண்ணங்கள்தாம் சொல் வடிவம் பெறுகின்றன, சொற்கள்தாம் பிறகு செயல் வடிவம் பெறுகின்றன. எண்ணங்கள் வருவதை தடுத்து நிறுத்திவிட முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும். ஆனால் - அந்த எண்ணங்களைப் பகுத்தறிந்து, அவற்றுள் மற்றவர்களுக்கும் தனக்கும் நன்மை பயக்கக்கூடிய எண்ணங்களை மட்டும் இனிமையான சொற்களால் வெளிப்படுத்தவேண்டும். இந்த வெளிப்பாடுகள், நல்ல செயல்கள் பல நடந்தேறுவதற்கு கருவிகளாக உதவும்.
பதிலளிநீக்கு