வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஆவலைத் தூண்டாத புதிர்க்கதை பகுதி 3:


{தன் முயற்சியில் சற்றும் சோர்வடையாத விக்ரமாதித்தன் மாதிரி புதிர்க் கதை தொடர்கிறது!  ஆதரிக்கா விட்டாலும் திட்டாத அனைத்துக் கட்சி தோழர்களுக்கும்  (ச்சே, பழக்க தோஷம்,) அனைத்து அன்பர்களுக்கும் நன்றி வணக்கம்.)


நாய்க்கட்சி நரிக்கட்சி தலைவர் இருவரையுமே  முதலில் நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பக்தர். 


சொய்ங்! காட்சி மாற்றம்.


நரிக்கட்சி தலைவர் திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். சத்யம் கம்பெனி தலைவர் மாதிரி தான் செய்த அனைத்து ஊழல்களையும் பட்டியலிட்டு " என் பாவத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் " என்று பொது மன்னிப்பை மனதுக்குள் விழைந்து மக்களுக்கு விண்ணப்பம் செய்தார்!


நாய்க்கட்சி தலைமையும் நல்லவர் ஆகிவிட்டதால் நிலைமை விசித்திரம் ஆகி விட்டது.  தலைமை தான் செய்த முறைகேடுகள் நரிக்கட்சி ஆளுக்கு சற்றும் குறைந்தவை அல்ல என்று அறிக்கை விட்டார்.  தன்னையும் மன்னிக்கச் சொல்லி வேண்டுகோள் செய்து கொண்டார்.


கட்சிகளின் இரண்டாம் மட்டத் (மட்டமான என்றும் பொருள் கொள்ளலாம்) தலைமைகளுக்கு இந்த மாற்றம் வேப்பங்காயாகக் கசந்தது.  கட்சியைக் களை நீக்கி முன்பு இருந்த (!!??) நல்லாட்சி தருவது என்று தீர்மானித்து தலைமையை போலீஸ் வசம் ஒப்படைக்கலாமா அல்லது பைத்தியம் என்று அறிவித்து நாடு கடத்தலாமா என்று தீர்மானிக்க ஒரு உயர் மட்டக் (மீண்டும் மட்டம்) குழு அமைத்தார்கள்.


சொய்ங்! காட்சி மாற்றம்.


தொடரும். தொடருமா? தொடரலாமா? 

5 கருத்துகள்:

  1. வாலறுந்த நரி கதையில், வால் இல்லாமல் இருப்பது எவ்வளவு நல்லது தெரியுமா என்று சமாளிக்க முயல்வது போல, இந்தக் கதையில், நாயும் வாலறுந்து வால் இல்லாமல் இருப்பது எவ்வளவு நல்லது தெரியுமா என்று சேர்ந்து கொள்கிறது!

    ஏற்கெனெவே தெரிந்த சினேரியோ தான்!

    நரிக் கூட்டம், வாலறுந்த நரியை விரட்டி அடிப்பதாக அடுத்துக் கதை போகிறது! நாயக் கூட்டமும் கூட அதையே தான் செய்யும், இல்லையா?

    இங்கே தலைவர்கள், சமுதாயத்தின் தகுதிக்கேற்றவர்களாகவே ரெடிமேடாகக் கிடைக்கிறார்கள் என்பது பரிதாபமானால், அவர்களை உருவாக்குகிற சமுதாயமும் பரிதாபமானது தானா?

    சாக்கடையாக இருக்கும் இடத்தில் புழுக்களும், கொசுக்களும் வியாதியைப் பரப்புவதற்காகத் தான் பிறக்கும். மருந்தோ மூலிகையா வேண்டுமானால், முதலில் சாக்கடையாக இருப்பதிலிருந்து மாறுவதில் தான் ஆரம்பமாகிறது!

    பதிலளிநீக்கு
  2. நீங்களாச்சு ....
    நாயாராச்சு....நரியாராச்சு !

    பதிலளிநீக்கு
  3. தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம், ஆனால், என்னைப் பொறுத்தவரை, கதையின் சுவாரசியம் குறைந்து விட்டது போல் தோன்றுகிறது.

    இதற்கு மேலும் நீங்கள் எழுதினால், அது கதை அல்ல..............நிஜம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!