புதன், 6 ஜனவரி, 2010

எங்கள் செய்திகள் - உங்கள் கமெண்டுகள் ...

நேற்றைய 'எங்கள் செய்தி & எங்கள் கருத்தை'விட வாசகர்கள் கமெண்டுகள் நன்றாக இருந்ததாக சோபனா கூறினார். எனவே - நாங்க இன்று மௌனவிரதம். வாசகர்கள் - குறிப்பாக கிருஷ், ஈ நா -- உட்பட எல்லோரும் - இன்றைய செய்திகளைப் படித்து அவர்களுடைய கருத்துக்களை பதியுங்கள். செய்தி எண் உங்க வசதிக்காகக் கொடுத்திருக்கிறோம்.
  1. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் (பயங்கரவாத கொள்கைகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.)
  2. ஊட்டி மலை ரயில் சேவை துவங்கியது
  3. அப்பாவுக்கு எதிராக 13 வயது மகன் புகார் (அம்மாவை வரதட்சணை கேட்டு, அப்பா, தாத்தா உள்ளிட்டோர் அடித்து சித்திரவதை செய்தனர்.)
  4. தியாகராஜசுவாமிகளுக்கு இசையஞ்சலி
  5. விஸ்கியை விரும்பிய தாட்சர்
  6. மத்திய அரசை கண்காணிக்கிறது பா.ஜ.!
  7. போராட்டத்தை தொடர சாய ஆலைகள் முடிவு (முழு அளவு மானியத் தொகையும் கிடைத்தால் மட்டுமே, தொழிலை நடத்த முடியும்.)
  8. கவுடா மீது எடியூரப்பா பாய்ச்சல் (ஆட்சி கவிழும் என, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான அவரது கட்சியினர் பகல் கனவு காண்கின்றனர்.)
  9. செயல் இழந்த ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,கள். ( மதுரை முழுவதிலும் உள்ள ஸ்டேட் வங்கிகளின், பெரும்பாலான ஏ.டி.எம்.,கள் செயல்படவில்லை. )
  10. டில்லியை வாட்டுகிறது குளிர்.

18 கருத்துகள்:

  1. குரோம்பேட்டைக் குறும்பன்6 ஜனவரி, 2010 அன்று 8:40 AM

    // மத்திய அரசை கண்காணிக்கிறது பா.ஜ.!//
    பா ஜ வை கண்காணிக்கிறது காங்கிரஸ் ...
    ஹூம் - மக்களைக் கண்காணிக்கத்தான் யாரும் இல்லை!

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்6 ஜனவரி, 2010 அன்று 8:44 AM

    // முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான அவரது கட்சியினர் பகல் கனவு காண்கின்றனர்..//
    அவர் பிரதமராக இருந்த அல்ப சொல்ப நாட்களில் - மேடையிலே அவர் தூங்குவதை - தொலைக்காட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. பகல் கனவு வரத்தான் செய்யும்!

    பதிலளிநீக்கு
  3. // டில்லியை வாட்டுகிறது குளிர். //
    மக்களை வாட்டுகிறது விலைவாசி உயர்வு.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. News item dt. 6th Jan'10 from www.dinamalar.com "சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது : அ.தி.மு.க., வெளிநடப்பு"

    --- My Comment
    "அ.தி.மு.க. வெளிநடப்பு தொடங்கியது ", இப்படி சொன்னாலே போதாதா?

    பதிலளிநீக்கு
  6. ஜனநாயகம் ஒருசில கேவலமான அரசியல் வியாதிகளிடம் சிக்கியதால், ஜனத்திற்கும், இந்த ஜனநாயகத்திற்கும் தான் அச்சுறுத்தல்.

    பதிலளிநீக்கு
  7. //செயல் இழந்த ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,கள்//


    ஏ.டி.எம் மட்டுமல்ல... அந்த வங்கிகள் ஒழுங்காக செயல்பட்டு பல வருடம் ஆகிவிட்டது... சவாலுக்கு வேண்டுமானால், அதன் கிளை ஒன்றில் நுழைந்து விரைவாக ஒரு புதுக் கணக்கு ஆரம்பியுங்கள் அல்லது ஒரு DD ஒரு மணி நேரத்துக்குள் எடுத்துவிட்டு வெளியே வாருங்கள் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  8. அரிச்சந்திரன் மீண்டும் பிறந்து விட்டாரா//////////////
    அரிச்சந்திரன் மீண்டும் பிறந்து விட்டாரா

    பதிலளிநீக்கு
  9. அப்பாவுக்கு எதிராக 13 வயது மகன் புகார்'''''''''''''''''
    அரிச்சந்திரன் மீண்டும் பிறந்து விட்டாரா

    பதிலளிநீக்கு
  10. Blogger ரோஸ்விக் சொன்னது :

    /கிளை ஒன்றில் நுழைந்து விரைவாக ஒரு புதுக் கணக்கு ஆரம்பியுங்கள் அல்லது ஒரு DD ஒரு மணி நேரத்துக்குள் எடுத்துவிட்டு வெளியே வாருங்கள்/

    சவாலாக இல்லை,ரோஸ்விக்! உங்க ஏரியா வார்ட் கவுன்சிலர், ச ம உ, வட்டம், மாவட்டம், நகராட்சி, அரசு அலுவலகங்கள் எதற்கு வேண்டுமானாலும் ஏதோ ஒன்றிற்காகப்போய் நின்று பாருங்கள்!

    அனுபவம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டைக் குறும்பன்6 ஜனவரி, 2010 அன்று 12:33 PM

    ரோஸ்விக் அவர்கள் கூறுவது சரிதான். நான் சமீபத்தில் - பல்லாவரம் ஸ்டேட் பேங்க்கில் என்னுடைய பி பி எப் - அக்கவுண்டை மேலும் ஐந்து வருடங்கள் நீட்டிப்பதற்கு மற்றும் பி பி எப் அக்கவுண்ட் பாஸ் புக் எண்ட்ரீஸ் போடவும் சென்று - ஒன்றரை மணி நேரத்தை வீணாக்க வேண்டி வந்தது. எண்ட்ரி போடுபவர் எக்ஸ் எம்ப்ளாயீ போலிருக்கிறது - அவர் மட்டும் உடனே வேலையைச் செய்து முடித்துவிட்டார். தலைமை மேலாளர், அக்கவுண்ட் நீட்டிப்பிற்கு பாரம் இருக்கிறது என்றார்; தலைமை கணக்காளர், வெள்ளை பேப்பரில் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அக்கவுண்ட் எண் கொடுத்தால் கூட - டேட் ஆப் மெசுரிடி - கம்பியூட்டரில் பார்த்துச் சொல்ல மறுத்தார். வெள்ளை பேப்பர் யாரிடமும் இல்லை. வெளியில் வாங்கிய பேப்பரில் எழுதிக் கொடுத்தபின், கம்பியூட்டரில் பார்த்து, அந்த அப்ப்ளிகேஷன் மீது - அக்கவுண்ட் விவரங்கள் எழுதிக்கொண்டார். இவ்வளவையும் மீறி ஸ்டேட் பாங்க இந்தியாவின் முதன்மை வங்கியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு நல்ல விஷயத்தையும் கூறிவிடுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னால், தாம்பரம் ஸ்டேட் பாங்கில், எ எம் ஐ இ - வருடச் சந்தா கட்ட - ஒரு நாள் காலை ஒன்பது முப்பதுக்கு - பாரம் கொடுத்தேன்; மூன்றே நிமிடங்களில் வேலை முடிந்து, ரசீது பெற்று ஒன்பது முப்பத்து மூன்றுக்கு வெளியே வந்தேன்!

    பதிலளிநீக்கு
  12. "ஊட்டி மலை ரயில் சேவை துவங்கியது"

    அப்போ இனிமேல் டிக்கெட் வாங்க வேண்டாம். சேவைதானே..

    "விஸ்கியை விரும்பிய தாட்சர்"

    தாட்சர் : "எங்க ஊருக்கு பிராந்தி எல்லாம் டார்ச்சர்ங்க..."

    "போராட்டத்தை தொடர சாய ஆலைகள் முடிவு"

    சாயாம போராடவும்

    "கவுடா மீது எடியூரப்பா பாய்ச்சல்"

    கவுடா 'சட்'டென நகர்ந்து கொண்டதால் எடியூரப்பா கீழே விழுந்தார்..

    பதிலளிநீக்கு
  13. 1. அரசியல்வாதிகளை விட ஜனநாயகத்துக்கு வேறு யாரும் பங்கம் விளைவிக்க முடியாது !

    2. வீட்டு "சேவை" மாதிரி உதிர் உதிரா-ம இருந்த சரிதான் !

    3. பையனுக்கே கல்யாணம் பண்ணி தான் மாமானார் ஆக வேண்டிய வயதில் இன்னும் அம்மாவையும், மாமானரையும் வரதட்சிணைக்கு கொடுமை படுத்தும் இவனையும் இவன் அப்பனையும் !!

    5. நம்மூரு அரசியல்வாதிகள் பட்டைசாராயம் தான் விரும்புவாங்க !

    6. அவுங்க நிலைமை அதைவிட கவலைக்கிடமாக இருக்கு - அது மறந்துப்போச்சா ! அவுக ஆளுங்களையே கண்காணிக்க சொல்லுங்க

    7. எப்படியும் மான்யம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் - கலர் சாயங்களை நதியில் சேர்ப்போம்; துணி போகும்வரை சாயத்தை மற்ற துணிகளுக்கு பரப்புவோம் !

    9. ஒரு நடை நடந்தால் சிவகாசியில் பணம் பிரிண்ட் பண்ணி கொடுப்பாங்க

    10. எல்லா இந்திய அரசியல்வாதிகளும் டெல்லியை மற்ற நேரத்தில் வாட்டும்போது - ஒரு மூணு மாசம் குளிர் தான் வாட்டடுமே !

    பதிலளிநீக்கு
  14. //டில்லியை வாட்டுகிறது குளிர்//

    அவங்க சப்பாத்தியை வாட்றாங்க. குளிர் அவங்கள வாட்டுது. முற்பகல் செய்யின், பிற்பகல்
    விளையும்ங்கறாங்களே, அது இதானோ!

    பதிலளிநீக்கு
  15. //கிருஷ்ணமூர்த்தி said...
    Blogger ரோஸ்விக் சொன்னது :

    /கிளை ஒன்றில் நுழைந்து விரைவாக ஒரு புதுக் கணக்கு ஆரம்பியுங்கள் அல்லது ஒரு DD ஒரு மணி நேரத்துக்குள் எடுத்துவிட்டு வெளியே வாருங்கள்/

    சவாலாக இல்லை,ரோஸ்விக்! உங்க ஏரியா வார்ட் கவுன்சிலர், ச ம உ, வட்டம், மாவட்டம், நகராட்சி, அரசு அலுவலகங்கள் எதற்கு வேண்டுமானாலும் ஏதோ ஒன்றிற்காகப்போய் நின்று பாருங்கள்!

    அனுபவம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்! ///


    அண்ணே! எனது பின்னூட்டத்திற்கு தங்களிடமிருந்து பதில் வரும் என்று மிகச் சரியாக என் மனம் எண்ணியது. அது நடந்துவிட்டது. :-))

    நான் மேலே சொன்னவை அந்த செய்திக்கான கமெண்ட். அது என் அனுபவமும் கூட.

    நீங்கள் சொல்லியிருப்பது பல மணி நேரம் ஆனாலும் எதுவும் பெற முடியாத ஒன்று. அந்த பேங்க்-லயாவது ஒரு சில மணி நேரங்கள்ல நடக்கக்கூடியது. ஆனா, இவங்ககிட்ட அதை எதிர் பார்க்கவும் முடியாது. அரசு இயந்திரங்கள் செயல்படும் லட்சணம் ஊர் அறிந்தது தான்.

    அதற்காக... அவனெல்லாம் வேலையா செய்கிறான்... என்ன செய்யச் சொல்கிறாய் என்பது எவ்வகையில் பொருந்தும்? நீங்கள் எந்த வங்கியில் பனி புரிந்தீர்கள் என்பது தெரியாது. ஆனால், மேலே குறிப்பிட்ட வங்கியில் நான் பட்ட அனுபவங்கள் நிறைய. நான் அனைவரையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை.

    சில அரசு வங்கிகளின் செயல்பாடுகள் அவ்வாறு இருக்கத்தான் செய்கின்றன. வாடிக்கையாளர் சேவை என்பதை நான் அங்கு பெற்றதில்லை.

    பதிலளிநீக்கு
  16. //ஊட்டி மலை ரயில் சேவை துவங்கியது.//

    ஒரு டிக்கட்டுக்கு ஒரு சுவெட்டரும் ஒரு கம்பளிப் போர்வையும் இலவசம்.



    //டில்லியை வாட்டுகிறது குளிர்.//

    இங்க குளிர்ன்னா எங்க கண்ணைக் காதை மூக்கைக் காணோம்ன்னு தேடுறோம்.அப்புறம் சூட்டில வாட்டினாத்தான் அங்கங்க சரியா இருக்குன்னு தெரியுது.அங்க மனுசரை வாட்டாம டில்லியைத்தானே வாட்டுது.பரவால்ல.

    பதிலளிநீக்கு
  17. வாடிக்கையாளர், வாடிக்கையாளர் திருப்தி, சேவை என்பதெல்லாம் இங்கே நடைமுறையில், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சூடாகும் சச்சரவுகளாகவும், புகார்களாகவும் மாறுவதைப் பார்த்த அனுபவம் நிறைய உண்டு. அப்படி வரும் புகார்களைத் தங்களுக்கு வேண்டாதவன் என்றால், தூக்கு தண்டனையாக மாற்றிவிடும் வந்கிக்களுமுண்டு. அப்போது கூட வாடிக்கையாளருக்கு,தான் எதிர்பார்த்த சேவை கிடைக்காது! ஒரு பலி அல்லது ஒரு எலியைப் பார்த்த காமெடி தான் மிஞ்சும்.

    நான் பணிபுரிந்த வங்கி மிகவும் கர்நாடகமானது! அங்கே இந்த வார்த்தைகளுக்கு, நேரத்துக்கு, ஆளுக்குத்தகுந்த மாதிரி வியாக்கியானம் செய்யப் படும்.

    ஒரு வங்கியில் வேலை செய்தவன் என்ற ஒரு காரணத்திற்காகவே, நான் அந்த பதிலைச் சொல்லவும் இல்லை.

    வங்கிகளையோ, வங்கி ஊழியர்களையோ நியாயப் படுத்தவோ போகிற போக்கில் நர்சிம் மாதிரிப் பதிவர்கள் எதையோ சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்றோ நான் நினைப்பதில்லை. A spade is a spade! குறை இருந்தால் ஒத்துக் கொள்ளவும் தயங்கியது இல்லை.


    எந்த ஒரு விஷயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன.அந்த ஒரு அடிப்படை விஷயத்தைப் புரிந்து கொண்டால்,விஷயத்தை எப்படி அணுகுவது என்ற தெளிவு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  18. குரோம்பேட்டை குறும்பன், தன்னை அறியாமலேயே இந்தப் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லியிருக்கிறார்.

    கால இடைவெளி! இந்த இடைவெளியில் அதிகரித்திருக்கும் வேலைப்பளு!

    கணினிமயமானாலுமே கூட, பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதிகரித்து வரும் நடைமுறைகள் என்பது ஒருபுறம். வேலையை துரிதமாகச் செய்வது என்பதைவிட சரியாகச் செய்வது என்பதே இன்றைக்கு முக்கியமானதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!