Friday, January 8, 2010

ஏமாறச் சொன்னது நானோ...?

மும்பை - நாசிக் ரோடில் கோவில் கட்ட வேண்டும் என்று சொல்லி புதுமையான முறையில் ஒரு வசூல் செய்தார்களாம். அந்தச் சாலையை தாண்டிச் செல்லும் வண்டிகள் ஆளுக்கு ஒரு செங்கல் மட்டும் கொடுங்கள் ... இது கோவில் கட்ட உங்கள் கைங்கர்யம் என்று சொல்லப் பட்டதாம்.

ஐம்பது, நூறு என்று கேட்டால்தான் யோசிப்பார்கள். செங்கல்தானே...எங்காவது வாங்கிக் கொண்டு அந்த இடத்தைத் தாண்டும் வழியில் அவர்கள் குறிப்பிட்டுள்ள இடத்தில் வைத்து விட்டு சென்று விடுவார்கள், தாண்டிச் செல்லும் வண்டியின் டிரைவர்கள், ஏன் கிளீனர்கள் கூட.

செங்கல் வைக்க வேண்டிய இடம் என்று குறிப்பிடப் பட்டிருந்த இடத்துக்கு இரண்டு பக்கமும் ஓரிரு கிலோ மீட்டர் இடைவெளிகளில் செங்கல் விற்கும் கடைகள் தோன்றின. ஒரு செங்கல் ஒரு ரூபாய்! எனவே இதுவும் கஷ்டமில்லை. எங்கும் தேடி அலையவும் வேண்டாம். தாண்டிச் செல்பவர்கள் அனைவரும் வாங்கிக் கொண்டு போய் சாலை வரி போல நினைத்து அங்கு வைத்து விடுவது வழக்கமாயிற்று.

இதில் என்ன செய்தி என்கிறீர்களா? வைக்கப் படும் செங்கல்கள் அவ்வப்போது அங்கிருந்து காலி செய்யப் பட்டு விற்பனை செய்யுமிடத்துக்கு வந்து விடும்...தொடர்ந்து விற்பனை செய்யப் படும்! கண்டு பிடிக்கப் படும் வரை லாபம். ஒரு செங்கலுக்காக தேடிச் சென்று விசாரிக்க யாருக்கு பொறுமை, நேரம் இருக்கிறது...! இது எப்படி?
------------------------------------
ஹோசூர் அருகே தாவர விதைகள் விற்பனை செய்யும் இடம். கொஞ்சம் விதைகள் வாங்கிய ஒருவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கடைக் காரரிடம் நீட்டுகிறார். அதைத் தொட்டு வாங்கிய கடைக் காரர் ஒரு வித மயக்க நிலைக்கு செல்கிறார்.

மீண்டும் நினைவு வந்தபோது உணர்ந்தது கல்லாப் பெட்டியில் இருந்த பணம் அத்தனையையும் எடுத்து அந்த கஸ்டமர் கையில் தந்து அனுப்பி இருக்கிறார். அவர் எங்கு போனார் என்பதும் தெரியவில்லை. எப்படி சாத்தியம்?
-----------------------------------
எத்தனையோ முறை பஸ்ஸில் பயணம் செய்யும்போது பார்த்திருக்கலாம். சில அட்டைகளுடன் பஸ்ஸில் ஏறும் ஒருவர் எல்லார் மடியிலும் அந்த அட்டைகளை போட்டுக் கொண்டே போவார்.

அனுபவப்பட்டவர்கள் அதை உடனே எடுத்து அருகே கீழே வைத்து விட்டு தீவிரமாக வெளியே 'வேடிக்கை' பார்க்கத் தொடங்கி விடுவார்கள். இந்தப் பக்கம் இடியே விழுந்தாலும் திரும்ப மாட்டார்கள்!

விவரம் புரியாத புதியவர்கள் அந்த அட்டையை எடுத்து படிக்கத் தொடங்கினால் மாட்டினார்கள். பக்கத்து ஊர் டாக்டர் ஒருவர் 'இந்த அட்டையை வைத்திருப்பவர௪ செவிடு, மற்றும் ஊமை' என்று அதில் சான்றளித்திருப்பார். விநியோகம் முடிந்து பிரயாணிகள் அருகே 'வசூலுக்கு' வருவார் அந்த 'செவிட்டூமை'. குறிப்பாக அட்டையை எடுத்துப் படித்தவர் பக்கம்..... விவரமாக இருக்கிறோம் என்று அவரிடம் என்ன கேள்வி கேட்டாலும் ஒரே பதில்தான்..சைகைதான்...நாக்கையும் செவியையும் தொட்டுக் காட்டி 'இல்லை' என்று பரிதாப சைகை காட்டுவார். பஸ் கிளம்பும் வரை இது தொடரும்.

எத்தனை வழிகள்....

13 comments:

goma said...

நல்லவேளை.அந்த செங்கல்களைக் கொண்டு தனக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ளாமல் இருந்தாரே....

பின்னோக்கி said...

கொஞ்சம் அசந்த கிட்னியவே சுட்டுடறாங்க. தூங்கும் போது கூட கண்ண மூடாம தூங்க பழகணும் போல. நீங்க நல்ல ஐடியா எல்லாம் குடுத்துருக்கீங்க. இத எவனும் இங்க பண்ணிடக் கூடாது :)

கிருஷ்ணமூர்த்தி said...

ஏமாறுபவர்களும் ஏமாற்றுகிறவர்களும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய சங்கதி முதலாவது!

கன்யாகுமரியில், விவேகானந்தர் பாறையில் இன்றைக்கு பிரம்மாண்டமாய் எழும்பியிருக்கிற நினைவுச் சின்னம், தொடக்க நிலையில் ஒரே ஒரு ரூபாய் என்று நாடுமுழுவதும் மக்களிடம் வசூலித்து எழுப்பப்பட்டதாகவும், இயக்கமாகவும் இருக்கிறதே!

அதே மாதிரி, சுயஉதவிக் குழுக்கள், micro finance என்ற கன்செப்டுமே சிறு அளவில் தொடங்கப்படுவது கூட பிரம்மாண்டமாக மாறலாம் என்பது தானே ஸ்ரீராம்!

maddy73 said...

இதில் என்ன செய்தி //என்கிறீர்களா? வைக்கப் படும் செங்கல்கள் அவ்வப்போது அங்கிருந்து காலி செய்யப் பட்டு விற்பனை செய்யுமிடத்துக்கு வந்து விடும்...தொடர்ந்து விற்பனை செய்யப் படும்! கண்டு பிடிக்கப் படும் வரை லாபம். ஒரு செங்கலுக்காக தேடிச் சென்று விசாரிக்க யாருக்கு பொறுமை, நேரம் இருக்கிறது...! இது எப்படி? //

This is not new. I heard some so called 'big-big' hospitals-attached medical shops do this technic. (medicines in place of 'bricks' - Dr. prescribe more medicines/saline -- it's bought from campus medical shops & given to nurses.. & back to medical shops.. (this is shown in 'Ramana' movie)


// goma said.. நல்லவேளை.அந்த செங்கல்களைக் கொண்டு தனக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ளாமல் இருந்தாரே.//

Rotating logic will fetch more than one house.., why to stop the business with just 1 house.

வரதராஜலு .பூ said...

ரமணா படத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான கடையில் மருந்து வாங்கி வந்து கொடுத்தால் திரும்பவும் கடைக்கே மருந்தே செல்லும். அதமாதிரிதானா இதுவும்

அப்பாதுரை said...

பிராட்வே பஸ் நிலையத்தில் 60 பஸ்சுக்குள் நானும் நண்பன் சுரேசும் உட்கார்ந்திருந்த போது அட்டையைப் போட்டுச் சென்றவருடன் சுரேஷ் சைகை மொழியில்,அடுத்த அட்டையை எடுக்கக்கூட நேரம் கொடுக்காமல், ஏதேதோ சொல்லிக் கொண்டு போக, வந்த கோபத்தில் அட்டையை சுரேசிடமே விட்டுவிட்டு மற்றதைப் பொறுக்கிக் கொண்டு போன காட்சி நினைவுக்கு வருகிறது.

ஒரு பழைய படத்தில் பஞ்சர் ரிபேர் என்று கடை வைத்திருக்கும் நாகேஷ், சுற்றுப்புற வண்டிகளில் காற்றை இறக்கிவிட்டு வாடிக்கை பிடிப்பார்.

சாய்ராம் கோபாலன் said...

பல தரப்பட்ட சோம்பேறிகளின் கூடாரம் நம் பெருமை மிகு பாரத நாடு (விட்டால் துரை அவரின் ப்ளோகில் சொன்ன "வார்த்தை" வரும் !)

பணத்தை எப்படி எல்லாம் பிடுங்குவது என்று பிரதமர் முதல் முதல்வர் வரி, குடிமகன் முதல் கோவில் வரை.

இதுக்காகவே யோசிப்பாங்களோ !

சாய்ராம் கோபாலன் said...

//பணத்தை எப்படி எல்லாம் பிடுங்குவது என்று பிரதமர் முதல் முதல்வர் வரி, குடிமகன் முதல் கோவில் வரை"

Read as

"முதல்வர் வரை, குடிமகன் முதல் கோவில் வரை"

பிரியமுடன்...வசந்த் said...

சோம்பேறிகள் உடல் உழைப்பை மறந்த வீணர்கள் ம்ஹ்ஹும் நாம் ஏமாறுற வரைக்கும் இவங்க நம்ம கூடவே வந்துட்டுத்தான் இருப்பாங்க அதிலும் அந்த பஸ் பிரயாணத்தில் வரும் செவிட்டூமைகள் உண்மையாகவே உதவி கேட்போரின் வயிற்றிலும் அடிக்கிறார்கள் என்ன செய்ய?

எங்கள் said...

வருக goma,

பேசாமல் ஆளுக்கொரு மரக் கன்று வைக்க சொல்லலாம்...

----------
---------

உண்மைதான் பின்னோக்கி,

ஆனால் நாங்கள் ஐடியா கொடுத்துதான் அவங்களுக்கு தெரியணுமா என்ன?!

-------------
------------

கிருஷ் சார்,

இவற்றில் நல்ல பார்ட்டும் உண்டுதான்... நல்லவர்களிடையே உள்ள களைகள்...

---------------
----------------
maddy73,

கான்செப்ட் ஒண்ணுதான். நல்லாதான் சொன்னீங்க...

எங்கள் said...

வரதராஜலு...
நீங்கள் சொல்வது சரிதான். நவம்பர் ஆருக்குப் பின் உங்கள் வலைத்தளத்தில் ஒன்றும் போடவில்லையா?

-----------------
------------------
துரை,

வல்லவனுக்கு வல்லவன்? சுரேஷை சொல்கிறேன்...

எங்கள் said...

சாய்,
ஏமாத்தறது எல்லா நாட்டுலயும் உண்டு பாரத நாட்டை மட்டும் சொல்லுவானேன்?
துரை ப்ளாக் வார்த்தை...அது மட்டும் வேணாமே...!

-------------------
---------------------

வசந்த்,
நீங்க சொல்றாமாதிரி போலிகளின் உபயத்தால் உண்மையான விஷயங்களுக்கு எப்பவுமே தொல்லைதான்...

ஹேமா said...

எங்கள் நாடுகள் உருப்படாத காரணங்களில் இவைகளும் ஒன்று.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!