Wednesday, January 20, 2010

பாட்டில் இட்லி படங்கள்.பாட்டிலில் ஒரு கரண்டி இட்லி மாவு ஊத்தியாச்சு!


இதோ - நிலக்கடலை, பாதாம் போட்டாச்சு. அதற்குமேல் இன்னும் ஒரு கரண்டி மாவு ஊற்றியாச்சு.இரண்டு நிமிடங்கள், பாட்டில் மைக்ரோ வேவ் ஓவன் உள்ளே - மூடி இல்லாமல்.

வெளியே எடுத்து, அட! இதோ தயார் இட்லி. மூடியணிவிக்கப்பட்ட பாட்டில் - சற்று ஆறட்டும். ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்கவேண்டும் - ஐந்து நிமிடங்கள்.இதோ ஸ்பூனில் எடுத்தாச்சு - சமத்தா சாப்பிடுங்க!  

12 comments:

maddy73 said...

இட்லில பாதாம், கடலைப் பருப்புக்களா? முதன்முறையா கேள்விப் படுகிறேன். உங்கள் அடுத்த recipe (பதிவு), காஞ்சிபுரம் இட்லியா?
நடக்கட்டும், நடக்கட்டும்..

எங்கள் said...

மாதவன், இதையே நீங்க காஞ்சிபுரத்தில் செய்து சாப்பிட்டால் அது காஞ்சிபுரம் இட்லி !! இட்லி சாப்பிடும்போது கடலை போட்டது இல்லியா நீங்க? நாங்க இட்லி செய்யும்போது கடலைப் போட்டிருக்கோம். கொஞ்சம்தான் வித்தியாசம்!
முன்பு கட்டுரையில் சொல்லியிருந்தபடி, தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய்,
பச்சைப் பட்டாணி - கொத்தமல்லித் தழை -- எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளில் கைக்குக் கிடைத்தவற்றை, வாய்க்குப் பிடித்தவற்றை எல்லாம் போட்டு செய்து பாருங்கள்.

maddy73 said...

//மாதவன், இதையே நீங்க ---> காஞ்சிபுரத்தில் செய்து சாப்பிட்டால் அது காஞ்சிபுரம் இட்லி !!//
அதான் சங்கதியா?
வெள்ளத்தை 'பாகு'(ஆய்த எழுத்து, எழுதத் தெரியல, சாரி) மாதிரி 'மைசூர்ல' காய்ச்சினா, அது _____________ .
பெங்களூர்ல வெளைஞ்ச கத்திரிக்காய். அதே மாதிரி, ________

//நாங்க இட்லி செய்யும்போது கடலைப் போட்டிருக்கோம். //
---> அந்த கடலையா?

//இவைகளில் கைக்குக் கிடைத்தவற்றை, வாய்க்குப் பிடித்தவற்றை எல்லாம் போட்டு செய்து பாருங்கள்.//
-----> ருசிக்க மட்டுமல்ல, ரசிக்கவும் செய்தேன். நன்றி.

எங்கள் said...

Madhavan, For aayudha ezhuththu, type q and a space - in Tamil keyboard.
இதோ இ ஃ துதான் !!
வெல்லப் பாகை எங்கே காய்ச்சினாலும் அது வெல்லப்பாகுதான்! ஆனா மைசூர் ரசத்தில் வெல்லம் போடுவார்களாமே? அப்படியா?

maddy73 said...

//Madhavan, For aayudha ezhuththu, type q and a space - in Tamil keyboard.//

Thanks for the info.

'வெல்லம்' is right. sorry for typing 'வெள்ளம்'.

I tried to say 'மைசூர் ஃபாகு' & பெங்களூர்கத்தரிக்காய்(அதாவது 'செளச்செள')

Anonymous said...

ஆமாம் இட்டிலி பாட்டிலுக்கு மூடி எதுக்கு? அதை ஏன் போட்டுக் கழட்டனும்?

kg said...

சரியாகச் சொன்னீர்கள் அனானி,
சூடு ஆறும் பொழுது வாக்குவம் சீல் போட்ட மாதிரி ஒட்டிக் கொண்டு திறப்பது கடினமாகிவிடும் என்று தோன்றுகிறது.

எங்கள் said...

பாட்டில் இட்லி யை சூடாக வெளியே எடுத்தவுடன், மூடி அணிவிப்பது, அதிலிருந்து வெளியேறும் ஆவியைத் தடுத்து, அதனை இட்லி மேலேயே பரவ விடுவது. இந்த ஸ்டெப், அந்த இட்லியை நீராவியில் வேகவிட்டது போல ஒரு நீராவி மனம் அதனோடு கலக்கத்தான். ஆரம்ப நாட்களில், நான் மூடி போடாமல் இட்லியை ஆற விட்டதுண்டு. அதற்குப்பின்தான் இந்த மூடி போட்டாற்றும் கண்டுபிடிப்பு. மூடி போட்டு ஒரேயடியாக ஆற விடக்கூடாது. கை பொறுக்கும் சூடு நிலைக்கு பாட்டில் இறங்கிவரும்போழுது, மூடியைக் கழற்றி, ஸ்பூன் கொண்டு இட்லி சம்ஹாரம் செய்யவேண்டும்.

ஹேமா said...

அடக் கடவுளே ...போத்தலுக்குள்ள இட்லியா !அதுவும் பாதாம் அதிசய உலகம்தான் !

அப்பாவி தங்கமணி said...

ஸ்ரீராம் - ஏன் இந்த கொலைவெறி? இப்படி ஒரு இட்லி recipe நான் வாழ்க்கைல கேட்டதில்ல (இனியும் வேண்டாம்). பாட்டில் இட்லியா? கொடுமைடா சாமி. அதுவும் முழுசு முழுசா பாதாம் பருப்பு வேற... எஸ்கேப்.... (சூப்பர் hilarious ஸ்ரீராம்)

எங்கள் said...

அப்பாவி தங்கமணி - சிரிப்பாக நாங்க எழுதி இருந்தாலும், இது சீரியஸ் மேட்டர்தான். இதற்கு முந்தைய பதிவில் பாட்டில் இட்லி செய்யும் முறையை சாங்கோபாங்கமாக விவரித்திருக்கோம். படிச்சுப் பாருங்க, பண்ணிப் பாருங்க. நாங்க நிறைய இந்த மாதிரி பண்ணிச் சாப்பிட்டிருக்கோம்.

மோ.சி. பாலன் said...

நல்ல ஐடியா !
இட்லியின் மீது வேட்டி(?)த்துணியின் சுருக்கங்கள் தெரிய சாப்பிட்ட காலங்கள் நினைவுக்கு வருகிறது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!