திங்கள், 27 பிப்ரவரி, 2017

திங்க"க்கிழமை 170227 :: வாழைப்பழ கோதுமை மாவு அப்பம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


நான் சமையல் செய்வது ரொம்ப
சுலபம் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தேன். ரெசிப்பியைப் பார்து ரொம்ப ஈஸியாகச் செய்துவிடலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் எனக்கு உணவு செய்ய ஆரம்பித்தபிறகுதான் (‘நமக்கு நாமே திட்டம்போல’), ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது சமையலுக்கும்தான். நல்ல சமையல் செய்பவர்களே சில நாட்களில் சொதப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்கும் பல நாட்கள் நான் செய்வது, நினைத்ததுபோல் வராது. ரொம்ப மோசம்னா குப்பைக்கூடைக்குப் போய்விடும். அப்படி ஆனது, சிதம்பரம் கொத்சு, பதிவுலகத்தில் பார்த்த கொத்தமல்லி சாதம் போன்றவை. நவம்பர்ல வாழைப்பழம் போட்டு கோதுமை மாவு அப்பம் பண்ணலாம் என்று ஆரம்பித்தேன். அப்பம் மாவு ரொம்ப நீர்க்க இருந்துவிட்டது போலிருக்கு. அப்பம் ரொம்ப மென்மையாக இருந்தாலும் அதன் வடிவம் நன்றாக இல்லை.  அதுபோல சில வாரங்களுக்கு முன்பு பஜ்ஜி பண்ணலாம் என்று நினைத்தவன், பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக ஈனோ சால்ட் போட்டால் என்ன என்று தோன்றியது. ஒரு சிறிய பாக்கெட் ஈனோ சால்ட் போட்டு பஜ்ஜி பண்ணினால், அது பயங்கரமாக எண்ணெயைக் குடித்துவிட்டது. கடைசில அதுவும் குப்பைக்கூடைக்குத்தான் போச்சு. (சொதப்பின அப்பத்தையும் பஜ்ஜியையும் கீழே கொடுத்திருக்கிறேன்)





ஆனாலும் எல்லா ஆண்களும் சமையல் செய்யத் தெரிந்துகொள்வது நல்லது. என்னைப் பொருத்தமட்டில், சமையல் வேலை செய்வது சுலபம். அதில் கஷ்டம் என்னன்னா, 2-3 வேளைக்கும், 365 நாளுக்கும் இன்னைக்கு என்ன பண்ணலாம் என்று முடிவு பண்ணுவதுதான். அதைவிடக் கஷ்டம், நம்ம பசங்க, பண்ணின சில ஐட்டங்களை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவதும், பிடித்தவற்றை முழுவதுமாகச் சாப்பிட்டுவிடுவதும் (அவங்க உங்களுக்கு வச்சுக்கோங்க என்று சொன்னாலும் பெற்ற மனது அப்படி இருக்காது. தனக்கு வைத்துக்கொள்ளாமல் மற்றவர்கள் ஆசையாகச் சாப்பிடுவதையே பெருமையாக நினைக்கும் மனது. இது அம்மாக்களுக்குதான் பொருந்தும். அப்பாவுக்கு இந்தமாதிரி மனது இருப்பது இயல்பானது அல்ல). மற்றபடி ஆபீஸ், பேங்க் மற்ற வீட்டு வேலைகள்தான் கஷ்டம்.





நவம்பர்ல பண்ணின அப்பம் நினைச்சமாதிரி வரலைங்கறதுனால, சென்னைலேருந்து திரும்பி வந்த வாரம் செய்துபார்த்தேன். அதுவும் புதுசா வாங்கின வெள்ளை மண்டைவெல்லம் வேற கொண்டுவந்திருந்தேன். இந்தத் தடவை ரொம்ப நல்லா வந்தது.  வாழைப்பழ அப்பம் செய்முறையை இப்போ பார்க்கலாம்.



கோதுமை மாவு 1 ½ கப். அரிசி மாவு 3 மேசைக்கரண்டி. துருவின தேங்காய் 1 ½ மேசைக்கரண்டி. நல்ல வாழைப்பழம் ஒன்று.  மண்டை வெல்லம் 1 கப்.



வெல்லத்தை மூழ்கும் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும்.  வாழைப்பழத்தை மிக்சியில் அடித்து கூழாக்கிக்கொள்ளவும்.



கோதுமைமாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி போட்டுக் கலந்துட்டு, அதில் வெல்ல ஜலம், வாழைப்பழக்கூழ்விட்டு, அதோட 1 ஸ்பூன் நெய் விட்டு தோசைமாவு போலக் கலந்துகொள்ளவும். மாவு இட்லி மாவுபோல கெட்டியாக இருக்கக்கூடாது. மெல்லிய தோசைக்குக் கரைப்பதுபோல நீர்க்கவும் இருக்கக்கூடாது.




வாணலில் எண்ணெய்விட்டுச் சுடவைக்கவும். (நான் சரியான பதத்துக்கு சூடாகிவிட்டதா என்று பார்க்க, அப்பளத்தை ஒடித்து எண்ணெயில் விட்டுப்பார்ப்பேன். கொஞ்சம் பொரியும்போல சூடு சரியாக இருக்கும்).  ஒரு கரண்டி அப்பம் மாவு எடுத்து நடுவில் விடவும். அது வாணலியின் அடியில் போய்விடும். அப்புறம் சூடாகி மேலெழும்பி, வாழைப்பழம் சேர்த்திருப்பதால் நன்றாக உப்பலாக வரும். சரியான பதத்தில் திருப்பிப்போட்டு எடுக்கவும்.  ஒரு தடவையில் ஒரு அப்பம்தான் போடவேண்டும். இல்லாட்டா சரியான பதத்திலோ அல்லது வடிவத்திலோ வருவது கடினம்.  நான் செய்தபோது அனுப்பியிருந்த படத்தைப் பார்த்துவிட்டு என் ஹஸ்பண்ட் ‘யம்மி’ என்றாள். 



குறைந்த நேரம்தான் இதற்கு ஆகும் (அப்பம் போட்டு எடுப்பதற்கு நேரம் ஆகும். ஆனால் தயாரிப்பு நேரம் குறைவு). செய்து பாருங்கள்.
அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

58 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் வீட்டில் செய்து பார்க்கிறோம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு செய்முறை விளக்கம். பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  3. எங்கள் வீட்டில் இதை போண்டா என்போம் அதை நீங்கள் அப்பம் என்று சொல்லி இருக்கீங்க,,,,, அடுத்து இதே முறையில் மாவை கரைத்து அதில் முந்திரி பருப்பை உடைத்து போட்டு தோசை கல்லில் நெய் ஊற்றி சூட்டு எடுப்போம் இதை கோதுமை அடை என்போம், இந்த அடையை சுட்டு தரும் போது இதை இந்தியன் ஸ்டைல் பேன் கேக் என்று சொன்னால் என் பெண் சாப்பிடுவாள்.

    பதிலளிநீக்கு
  4. தினமும் என்ன சமைப்பது என்று பளான் பண்னுவதுதான் மிக கடினம்... அதனால் நான் என்ன சமைப்பது என்று முன்மே யோசிக்காமல் சமைக்கும் நேரம் வரும் போது ப்ரிஜ்ஜை திறந்து ஒரு பார்வை விட்டால் அந்த நாளுக்கான ஐடியா கிடைத்துவிடும் எங்கள் வீட்டில் சமையல் செய்வது என்பது இரவில் மட்டுமே.. அது நாள் ஒரு நாள் இரவு ரைஸ் சமைத்தால் அடுத்த நாள் இரவு டிபன் கண்டிப்பாக செய்ய வேண்டும் அதுதான் எங்காத்து மாமி ரூல்ஸ் இதில் என்ன கூத்து என்றால் மாமிக்கு பிடிக்கும் சமையைல் எனக்கு என் பெண்ணிற்கும் அதிகம் பிடிக்காது எங்களுக்கு பிடிக்கும் சமையல் மாமிக்கு பிடிக்காது அதுநாள் பல நாள் சமைக்கும் போது மண்டையை பிச்சு கொள்வேன்

    பதிலளிநீக்கு
  5. இப்படி நான் படும் கஷ்டங்கள் அதிரா மற்றும் ஏஞ்சலுக்கு கிடையாது ஏனென்றால் அவங்களும் எங்ககாத்து மாமி மாதிரி சாப்பிடமட்டும்தான் கிச்சன் போவார்கள் என்று எனக்கு செய்தி வந்து இருக்கிறது,

    பதிலளிநீக்கு
  6. இப்ப நான் என்ன சமைக்கலாம் என்று நினைத்து குழம்ப்பும் போது எங்கள் ப்ளாக் பக்கம் வந்து இது வரை வந்த குறிப்புக்களை பார்க்கும் போது அதில் ஏதாவது ஒனரை தேர்ந்தெடுத்தி அதையே நாம் இன்று செய்யலாம் என்று முடிவு செய்வேன் அதனால் சில நாட்களில் என்ன சமைப்பது என்று முடிவு செய்ய மிக எளிதாக இருக்கிறது


    எங்கள் ப்ளாக் தளத்தில் எனக்கு பிடித்தது இந்த பகுதிதான்

    பதிலளிநீக்கு
  7. இதை நாங்கள் சப்பாத்திபோல் குழைத்து சுடுவோம், வாயைப்பய ரொட்டி என்போம்ம், நவராத்திரி காலத்தில் நிச்சயம் செய்வது வயக்கம்:). அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. ////Avargal UnmaigalFebruary 27, 2017 at 9:03 AM
    இப்படி நான் படும் கஷ்டங்கள் அதிரா மற்றும் ஏஞ்சலுக்கு கிடையாது ஏனென்றால் ////
    இதுக்கு மேல எல்லாம் படிக்க தேவல்ல..... அஞ்சூஊஊஊ ஓடியாங்கோ தேMஸ் குளிர்ந்தாலும் பறவாயில்லை... நடுவில் இறங்கி ட் ரக்டரோடே தள்ளிடலாம்...

    ஸ்ஸ்ஸ் நேக்கு ஸ்கூல் ஹொலிடே முடிஞ்சுது அதனால என் தொல்லை குறையப்போகுது உங்களுக்கு:).. ஈவினிங் வாறேன்ன்ன்...

    பதிலளிநீக்கு
  9. எங்கம்மா இந்த கோதுமை அப்பம் செய்வாங்க நெல்லை தமிழன் சகோ ..

    நம்மூர் மஞ்சள் வாழைப்பழம் இங்கே கிடைப்பதில்லை ..சில வெரைட்டி ஸ்ரீலங்கன் கடைகளில் இருக்கு அது குட்டியா இருக்கும் நம்மூர் மஞ்சள் பழம்தான் இதுக்கு நல்லா வரும் ...இதே அப்பத்தை நான் கச்சாயமா முழு கோதுமை ஊறவைச்சி அரைத்து செஞ்சிருக்கேன் (நாமளே நமக்கு சமைக்க தெரியும்னு இங்கே சொல்லிக்கொண்டால்தான் உண்டு :)

    அம்மா ஒன்றிரண்டு உலர் திராட்சை உடைத்த முந்திரி போடுவாங்க ....இந்த மாவை தோசையாவும் சுடலாம் ..

    பதிலளிநீக்கு
  10. @அவர்கள் உண்மைகள் :) கர்ர்ர்ர்ர்ர் :) இந்த அப்பாவி ரெண்டு பொண்ணுங்களை வெறுப்பேற்றலைன்னா தூக்கம் வராதே உங்களுக்கு
    ஒரு விஷயத்தில் நாங்க அதுவும் நான் கொடுத்து வைச்சவள் .எங்க வீட்ல ஒரே சட்டம் அதையும் நானே போடுவேன் நான் செய்ரதை கண்ணை மூடிட்டு அப்படியே சாப்பிடுவாங்க என்னனு கூட கேக்க மாட்டாங்க மாட்டாங்க அப்பாவும் பொண்ணும் :) ..ஏன்னா எங்க வீட்ல நீங்க சொன்னீங்களே சாப்பிட மட்டும் கிச்சன் போற ஆட்கள் அந்த அப்பாவும் மகளுமே :)
    உங்க ஊர் மாதிரி தமிழ் ரெஸ்டாரண்ட்ஸ் இங்கில்லை அதனால் எனக்கும் வசதியா போச்சு :)..
    மாமிக்கு இன்னும் கொஞ்சம் விவரம் பற்றலை அவங்க மெயில் குடுங்க நான் training கொடுக்கறேன்

    பதிலளிநீக்கு
  11. @நெல்லை தமிழன் ..இங்கே உள்ள வங்காளியரும் குஜராத்தி பஞ்சாபியரும் அனியன் பஜ்ஜி நம்மூர் மெதுபக்கோடா மாதிரி செய்வாங்க ..வட்ட பஜ்ஜி சரிவரலன்னா வெங்காயத்தை நறுக்கி போட்டு செய்திருக்கலாம் ..எனக்கு எப்பவுமே வெங்காயத்தை வட்டமா நறுக்கும்போது லேயர் வெளியே விழும் அதனால் உருளை ஸ்பினாச் எல்லாம் போட்டு காய்கறி பஜ்ஜி செய்வேன் ..
    அந்த ஈனோ நீர்க்கும் தனமையுள்ளது ..அதை இட்லிக்கு போடறாங்க சிலர் அதனால்தான் ஓவரா எண்ணெய் குடிச்சிருக்கு ..

    பதிலளிநீக்கு
  12. @அதிரா இருங்க டிராக்டர் எல்லாம் வேணாம் ..மாமிக்கு கொஞ்சம் டியூஷன் எடுக்கப்போறேன் ..
    அதாவது கணவருக்கு ஓட்டு மேலே ஏற வைப்பது ஜன்னல் வழியே இறக்கி விடுவது இன்னும் நிறைய இருக்கு :) டெய்லி மிரட்டி வாக்கிங் போக வைப்பது இப்படி நிறைய டிப்ஸ் தரணும் மாமிக்கு

    பதிலளிநீக்கு
  13. முயற்சி திருவினையாக்கும் என்பது உங்கள் விஷயத்தில் சற்று "உப்பலாக" பலித்திருக்கின்றது.அருமையான பலகாரம், செய்முறை தெளிவாக உள்ளது. படங்களை பார்க்கும்போதே, நாவில்....

    நாங்கள் self rising flourல் செய்து சாப்பிட்டிருக்கின்றோம்.

    அது என்ன மண்டை வெல்லம்?... என் மண்டைக்கு விளங்கவில்லை.

    கோ.

    பதிலளிநீக்கு
  14. அப்பம் செய்முறை படங்களுடன் அருமை.
    பழம் போடாமலும் செய்வேன்.

    //தனக்கு வைத்துக்கொள்ளாமல் மற்றவர்கள் ஆசையாகச் சாப்பிடுவதையே பெருமையாக நினைக்கும்
    மனது//
    அம்மாக்களின் மனதை அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. சிறந்த செய்முறை வழிகாட்டல்
    உண்டு சுவைப்போம்

    பதிலளிநீக்கு
  16. //ஸ்ஸ்ஸ் நேக்கு ஸ்கூல் ஹொலிடே முடிஞ்சுது அதனால என் தொல்லை குறையப்போகுது உங்களுக்கு:).. ஈவினிங் வாறேன்ன்ன்...//

    அதிரா இந்த வயதிலும் நீங்கள் முதியோர் பள்ளிக்கு கட் அடிக்காமல் செல்லும் உங்களின் செயல் என்னை வியக்கவைக்கிறது....ஆமாம் அங்க யாராவது தமிழ் கற்றுக் கொடுத்தால் கண்டிப்பாக கற்றுக் கொள்ளுங்கள் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  17. //மாமிக்கு கொஞ்சம் டியூஷன் எடுக்கப்போறேன் ..///

    ஏஞ்சலின் மாமிக்கு நீங்கள் டியூஷன் எடுக்கப்போகீறீர்களா? ஹாஹாஹா எலி தானே வந்து பொறியில் மாட்டிக் கொள்ள வருகிறது...மாமி கொஞ்சம் நஞ்சம் இல்லை ஒரு லைன் நீங்க சொல்லி தந்தீர்கள் என்றால் அடில் இருந்து 1000 கேள்விகள் கேட்பார்.

    ஏஞ்சலின் இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. இந்த மதுரைத்தமிழன் படும் கஷடத்தில் இருந்து அவருக்கு கொஞ்சம் விடுதலை தர நீங்கள் எடுக்கும் துணிகார முடிவை எண்ணி வியக்கின்றேன்


    எதற்கும் மாமிக்கு பாடம் எடுக்கும் முன் நீங்கள் குடும்பத்தோட ஒரு அழகிய போட்டோ ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அதுதான் நீங்கள் கடைசியாக நீங்கள் எடுக்கும் அழகிய முகம் கொண்ட புகைப்படமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  18. ///அது என்ன மண்டை வெல்லம்?... என் மண்டைக்கு விளங்கவில்லை.//


    என்ன கோவில் பிள்ளை மண்டை வெல்லம் என்று தெரியாத நீர் எல்லாம் விசுவின் நண்பராக இருக்கவே லாயக்கு இல்லை..

    சரி சரி உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன் அதன் பின் அது உங்கள் மண்டைக்கு புரிகிறதா என பார்ப்போம்..


    உங்களுக்கு வெல்லம் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் அந்த வெல்லத்தை அதிரா அல்லது ஏஞ்சலின் மண்டையை போல கொஞ்சம் நெளிந்த வடிவமாக இருந்தால் அதை மண்டை வெல்லம் என்பார்கள்..


    ஆமாம் அவர்கள் மண்டை எப்படி ருக்கும் என்று தெரியவில்லை என்றால் அவர்களிடம் கேளுங்கள் அவர்கள் தங்களின் தலையை புகைப்படமாக எடுத்து அனுப்பி வைப்பார்கள்

    பதிலளிநீக்கு
  19. @avargal unmaigal கர்ர்ர்ர் :) எதுக்கு எங்க அப்பாவி இன்னொசண்ட் குழந்தைங்க மண்டை தலை அதான் தினமும் பூரி கட்டைல அடிவாங்கும் உங்க மன்டையை படமெடுத்து அனுப்புங்க

    பதிலளிநீக்கு
  20. @ avargal unmaigal //மதுரைத்தமிழன் படும் கஷடத்தில் இருந்து அவருக்கு கொஞ்சம் விடுதலை தர//


    ஓஹோ அப்படியா ..எனக்கு கண்ணே தெரியாம போனாலும் பரவாயில்லை நீங க நிம்மதியா இருக்க கூடாது ..அதனால் டியூஷன் கான்சல்ட் மாமி :)

    பதிலளிநீக்கு
  21. நோஓ அஞ்சு ... பிளீஸ் வாபஸ் வாங்கிடாதீங்க.... முன்னேவைத்த காலை பின்னே எடுத்திடாதீங்க... நடுக்கமெனில் இந்தாங்கோ என் முன்னங் காலை சொறி டங்கு ஸ்லிப்ட்... முன்னங் கையை பிடிச்சுக்கோங்க....

    மாமி ரெம்ம்ம்ம்ப நல்லவங்க... நம்மைப்போலவே அப்பாஆஆஆஆஆவி.... அதனால்தான் நம்மை நெருங்கி பழக விடாமல் , றுத் குறுக்கே நிக்கிறார்ர்ர்.... அவரை நம்பாதீங்க..... பெயரில் ட் ருத் என இருப்போரெல்லாம் உண்மையில் ட் ருத் இல்லை:) ஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்சப்பா இப்போதான் நேக்கு நிம்மதி.... நல்லா திட்டிட்டேன்ன்ன்ன்ன்ன் மீ எஸ்கேஏஏஏஏஏஏப்.

    பதிலளிநீக்கு
  22. ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை கண்ட்ரோல் செய்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=IP3c11mDBCc

    பதிலளிநீக்கு
  23. நன்கு தேறிய கனிவான முரட்டு வாழைப்பழத்தின் தோலியை உரித்து விட்டு, கை விரல்களால் 2 அல்லது 3 பாகங்களாகப் புட்டு (பழத்தைப் பற்களால் கடித்துக் கடித்து எச்சில் செய்யாமல்), அப்படியே வாயில் புட்டுப் போட்டு ருசித்துச் சாப்பிட வேண்டும்.

    வேறு எந்த முறையிலும் வாழைப்பழத்தினை சமையலுக்கெல்லாம் பயன் படுத்தக்கூடாது.

    பஞ்சாமிர்தம், ஃப்ரூட் சாலிட் உள்பட நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. சாப்பிட விரும்புவதும் இல்லை.

    எனினும் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கக்கூடும் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. வெளியிட்டமைக்கு நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம். உங்க கமென்ட் இல்லைனா, உங்களுக்கு விருப்பமானது இல்லை என்று எண்ணிக்கொள்வேன். என்ன.. டயட்டா?

    பதிலளிநீக்கு
  25. நன்றி கவிஞர் ரூபன்.

    நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்

    பதிலளிநீக்கு
  26. நன்றி வெங்கட். மனைவி வெளியூரில் இருந்தால், நம்மதான் இந்தமாதிரி பண்ணிச் சாப்பிடவேண்டியிருக்கு. நீங்க ஸ்வீட் செய்து பார்க்கிறமாதிரி தெரியலை. (அதான் 'சிக்'குனு இருக்கீங்க)

    பதிலளிநீக்கு
  27. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  28. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... "ஹா ஹா ஹா ஹா"வா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ஸ்ரீரங்கம் வரும்போது ('நீங்கள் இருவரும் இருக்கும்போதுதான் வருவேன்), இந்த 'ஹாஹாஹா' வை உங்கள் வீட்டில் சாப்பிட்டுச் சோதித்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை - உங்கள் பின்னூட்டங்களுக்கு.

    உருண்டையா செய்தாதானே அது போண்டா. அது சரி... வாய்க்குள்ள போனா, எதுனாலும் தூள் பக்கோடாவாக ஆகிவிடுமே.

    ப்ரிஜ்ஜைத் திறன்தால் பல ஐடியா வரும். அதில், இது இவர்களுக்குப் பிடிக்காதே, இது மனைவிக்கு ஒத்துவராதே என்றெல்லாம் யோசித்தால்தான் கஷ்டம். எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை. எனக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் (ingredients, vegetables, fruits) அதைத்தான் வாங்கிவருவேன். அன்னைக்கு (அப்போ) என் மனசுல என்ன சாப்பிடணும்னு தோணுதோ, அதைத்தான் செய்வேன்.

    உங்கள் கஷ்டம் என்பது, மனைவி செய்யும் சமையலைச் சாப்பிடுவதா அல்லது நீங்கள் சமையல் செய்வதா அல்லது நீங்கள் சமைச்சு அதை நீங்கள் சாப்பிடுவதா? தெளிவாகப் புரியவில்லை.

    நெட்டில் இருக்கும் சமையல் குறிப்புகள் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். முன்னோடிகளுக்கும் அனுபவஸ்தர்களுக்கும் இந்தச் சமயத்தில் (பேச்சலர் சார்பாக) நன்றி தெரிவிச்சுக்கறேன்.

    பதிலளிநீக்கு
  30. நன்றி அதிரா. உங்க 'பயக்க வயக்கம்' தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  31. நன்றி ஏஞ்சலின். கேரளத்தவர்கள், ஸ்ரீலங்கன்வாசிகள், சில ஊர்களில் பாண்டிச்சேரிக்காரர்கள் கடைகள் இல்லையென்றால், வெளிநாட்டில் நமக்குப் பிடித்த காய்கறிகளும் மசாலாக்களும் கிடைப்பது அரிது. எங்க போனாலும், இவங்க கடை எங்க இருக்குன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டால், நமக்குப் பிரச்சனை இல்லை. இவங்களை விட்டால், குஜராத்தி கடை.

    பதிலளிநீக்கு
  32. நன்றி ஏஞ்சலின். வெங்காயத்தை வட்டமாக நறுக்குவதே ஒரு திறமைதான். எப்போ பொறுமை இல்லையோ அப்போ நீங்க சொன்னமாதிரி கட் பண்ணி செய்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  33. நன்றி கோயில் பிள்ளை. நீங்கள் அடிக்கடி எழுதுவதில்லை உங்கள் தளத்தில்.

    வெல்லத்தில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் என்று இரண்டு உண்டல்லவா? உருண்டை வெல்லம் 'மண்டை' போல் இருப்பதால், 'மண்ட வெல்லம்' என்ற சொல்வழக்காகிடுச்சு. அதுலயும், வெள்ளையா இருந்தா, (இள மஞ்சள் நிறம்) அதுல உப்பு சேர்த்திருப்பார்கள். ரொம்ப கருப்பாவும் இல்லாம, அடர்ந்த சிவப்பு+ப்ரௌன் இயல்பான நிறத்தில் இருப்பது நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி கோமதி அரசு மேடம். 'அம்மாவின் அந்த அன்பு' பிள்ளைகளுக்கு, அவர்கள் அம்மா/அப்பா ஆகும்போதுதானே புரியும். உங்கள் தளத்தில், நவம்பரில் எழுதிய "பிள்ளை லோகாச்சாரியார் வைபவம்" என் மனதில் இருக்கிறது. ஜோதிஷ்குடிக்கு என் ஹஸ்பண்டுடன் செல்லவேண்டும் என்பது என் அவா. (இந்த வருடத்துக்குள்ளாக)

    பதிலளிநீக்கு
  35. நன்றி ஜீவலிங்கம்.

    நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  36. நன்றி கோபு சார். நீங்கள் வாழைக்காய் பழத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். (அதுக்குப் பேர் என்ன? கதலி, ரஸ்தாளி, பூவன் இல்லை. நாட்டுப்பழமா?). என் ஹஸ்பண்ட், வாழைப்பழத்தில், தேங்காய், வெல்லம், ஏலக்காய், தேன்(?) போட்டு 'மதுவர்க்கம்' என்று செய்வாள். நன்றாக இருக்கும். என்ன... பஞ்சாமிருதம்கூட சாப்பிடவில்லை என்று சொல்லிட்டீங்களே... சிறுமலைப் பழத்தில் செய்யும் பஞ்சாமிருதமோ, அல்லது கோவிலில் பலாப்பழச் சுளையுடன் கூடிய பஞ்சாமிருதமோ எவ்வளவு நல்லாருக்கும். நீங்க நிறைய ஐட்டங்களை மிஸ் பண்ணுகிறீர்களே...

    சிறு வயதில், திருக்கோஷ்டியூர் கோவிலில் கொடுத்த பஞ்சாமிருதமும், பழனி கோவில் பஞ்சாமிருதமும் என் நினைவில் இருக்கிறது. (சில வருடங்களுக்கு முன்புதான், பஞ்சாமிருதத்தில் நெய்யும் சேர்ப்பார்கள் என்று தெரியும். அதற்கு முன்னால், என்ன பஞ்சாமிருதம் சாப்பிட்டால் வெயிட் அதிகமாகிறதே என்று யோசித்திருக்கிறேன். அப்புறம்தான் பஞ்சாமிருதம் சாப்பிடுவதை விட்டேன்)

    பதிலளிநீக்கு
  37. ஆண்களுக்கு சமையல் செய்வதை விட பாத்திரங்கள் கழுவுவதுதான் ரொம்பசிரமம் நல்ல வேளை எங்கள் வீட்டில் எல்லாச் சமையலும் மனைவியின் கை வண்ணமே இந்த ஸ்வீட் போண்டா அல்லது அப்பம் என் மனைவி செய்து சாப்பிட வேண்டும் ஆஹா ஓஹோ அருமை.

    பதிலளிநீக்கு
  38. அட! அதே ரெசிப்பி நெல்லைத் தமிழன்!! இதில் பழம் சேர்க்காமல் கொஞ்சம் ரவை, அரிசி மாவு சேர்த்து மாமியார் செய்வார்கள். நான் நம்ம சைடு படி பழம் சேர்க்காமலும், சேர்த்தும் செய்வேன். புளிப்புப் பழம்தான் பாட்டி சேர்த்துப் பார்த்ததுண்டு எனவே நானும் அதையே பின்பற்றுகிறேன். இதிலேயே கேரளத்து வகையும் எங்கள் வீட்டில் செய்வதுண்டு. உன்னி அப்பம்....அரிசி ஊற வைத்து அரைத்து பழம் சேர்த்து, வெல்லம் (அடுப்பில் வைத்துக் கரையவிடாமல், தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி அதையே அரிசியில் சேர்த்து அரைத்து) சேர்த்து, தேங்காய் சிறிது சேர்த்து சேர்க்காமால் குழிப்பணியாரக் கல்லில் ஊற்றி எடுப்பது...

    இதே ரெசிப்பியையும் குழிப்பணியாரக் கல்லில் ஊற்றி உருண்டையாக எடுப்பதுண்டு..

    நல்ல ரெசிப்பி...மிகவும் பிடித்த ரெசிப்பி..ஆனால் என்னால் அதிகம் சாப்பிட முடியாதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  39. துளசி: இது எங்கள் ஊர் உன்னி அப்பம் போல்....ஆனால் அது அரிசியில் செய்வது...நன்றி நெல்லைத் தமிழன் ரெசிப்பிக்கு

    கீதா: நிறைய கமென்ட்ஸ்க்கு அதுவும் மதுரை, ஏஞ்சல், அதிரா அவர்களின் கமென்ட்ஸுக்குக் கலாய்த்துப் பதில் அளிக்க நினைத்தாலும், தாமதமாகிவிட்டதால் விட்டுவிட்டேன்..ஹும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  40. இப்போ எதேச்சயாப் பார்க்க நேர்ந்தது. நன்றி ஜி.எம்.பி சார். எப்போ, "என் மனைவி செய்து சாப்பிட வேண்டும் ஆஹா ஓஹோ அருமை" இப்படி சொல்றீங்களோ, அப்போ நீங்க பிழைக்கத் தெரிந்தவர்தான். வீட்டில் விதவிதமான சாப்பாட்டுக்குக் குறைவு வராது.

    பதிலளிநீக்கு
  41. நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். நானும் எங்க ஊரில் செய்கிறமாதிரி உன்னியப்பத்துக்கு செய்முறை தேடிக்கிட்டிருக்கேன். இங்கு கொஞ்சம் ஹார்டா (அரிசி அப்பம் மாதிரி, ஆனால் கேரள ஸ்டைல்ல, தேங்காய் சிறிய சில் போட்டு அப்பக்குழியில் போட்டு எடுப்பது) அருமையாக் கிடைக்கும் (வேற யாரு... கேரளத்தவர்கள் செய்து பாக்கெட் போட்டு விற்பார்கள்). சமீபத்தில் சென்னையில் அம்பிகாவிலும் இன்னொரு கடையிலும் வாங்கினேன். சுத்தமாக நன்றாக இல்லை.

    பதிலளிநீக்கு
  42. நன்றி தில்லையகத்து துளசி சார். பாலக்காட்டில் ஹரிஹரனில் சாப்பிட்டது பெரியதாகவும் சாஃப்டாகவும் இருந்தது. இந்த ஊரில் செய்யும் உன்னியப்பம் கொஞ்சம் கடினமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    பாலக்காட்டு எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது (இருமுறை வந்ததில்). இனி வெறும்ன ஒருதடவை வரணும்போல் தோணுகிறது (வேற என்னத்துக்கு... அங்கு கிடைக்கும் சிப்ஸ், சாப்பாடு போன்றவைகளுக்குத்தான்).

    பதிலளிநீக்கு
  43. How To use Hangout Video calls free

    Google Hangout பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=aor8wBEWypc

    பதிலளிநீக்கு
  44. வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84

    பதிலளிநீக்கு
  45. அந்த காலம் முதல் இன்று வரை நமக்கு பிடித்த பாடல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=0lgJhG36peg

    பதிலளிநீக்கு
  46. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

    https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

    பதிலளிநீக்கு
  47. நன்றி தமிழன் ரெசிப்பிக்கு

    பதிலளிநீக்கு
  48. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    பதிலளிநீக்கு
  49. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    பதிலளிநீக்கு
  50. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!