வெள்ளி, 20 ஏப்ரல், 2018

வெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....



   1992 இல் வெளிவந்த படம்.  

   பிரபுவும் குஷ்பூவும் ஜோடியாக நடித்த படம்.  படத்தில் ஒன்றும் இல்லை.  கொஞ்சம் இளமையான குஷ்பூ!  படத்தின் பெயர் பாண்டித்துரை.



   இளையராஜாவின் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியமும், ஸ்வர்ணலதாவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  (குறிப்பு :  நான் படம் பார்க்கவில்லை)  உங்களுக்கும் பிடிக்கலாம்!



   ஆரம்ப இசையே துள்ளலாக ஆரம்பித்து நகரும்.  அங்கிருந்தே பாடலை ரசிக்கத் தொடங்கி விடலாம்.  வரிகளில் பெரிதாக ஒன்றுமில்லை.  அநேகமாக கங்கை அமரன் எழுதிய பாடலாக இருக்கும்.  வாலியாக இருந்திருந்தால் வார்த்தைகள் இன்னும் கொஞ்சம் வசீகரமாக இருந்திருக்கும்!   



   இளையராஜாதான் ஆட்சி செலுத்துகிறார் பின்னணி இசையிலும், பாடல் டியூனிலும்.  ஓரளவு காட்சியை ரசிக்கலாம்.  வழக்கம்போல பாடலின் முழு இனிமை தெரிய பாடலைத் தனியே கேட்பது நலம்.





தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு 
தூர நின்னே நீதான் என்னைத் தூண்டி போட்ட ஆளு 

மாடி வீட்டு மானா கூரை வீட்டில் வாழும்?
வீடு வாசல் எல்லாம் நீதான் எந்த நாளும் 
மானம் காக்கும் சேலை போல 
மாமன் வந்து 
கூடும் நாளே 
வெட்கம் ஏறும் மேலே 


கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வா வா 
கச்சேரி வைக்கையிலே கண்மலரும் பூவா 
முத்துப்போல மெட்டுப்பாட 
முத்துமாலை கட்டிப்போட 
வந்தேனே 


சோளக் கதிரு ஒண்ணு சேலை கட்டி ஆடும்..
மீனக் குருவி வந்து மால கட்டி போடும் 
மாமன் மனசுக்குள்ள மொட்டு விட்டேன் நாந்தான்  
வாலவயசுப்புள்ள வார்த்தை எல்லாம் தேன்தான்..
பாசம் பந்தம் எங்கே போகும்...
போனால் தீயாய் தேகம் வேகும் 
தீராதம்மா மோகம்..








31 கருத்துகள்:

  1. ஹாஹா.... இன்னிக்கும் நான் தான் ஃபர்ஸ்ட்..

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். நடைப்பயிற்சி கிளம்பியாச்சா?

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. குட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார். தஞ்சையில்தானே இன்னும்?

    பதிலளிநீக்கு
  5. நல்ல பாடல். எனக்கும் பிடிக்கும் இந்த பாடல்.

    பதிலளிநீக்கு
  6. // ஆம்....
    30/4 வரையிலும்...//

    ஓ... கொண்டாடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கொண்டாட்டம்...

      பிள்ளைகளுடன் இருக்கும் மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும் - ஏதோ ஒரு பாரம் மனதில்!...

      நீக்கு
  7. கீதா ரெங்கன் இணைய இணைப்பு சரியில்லை... ஹோகயா என்று நேற்றே வாட்ஸாப்பில் சொல்லி இருந்தார். அதுதான் ஆலைக்கு காணோம்! காலை வணக்கம் கீதா ரெங்கன்!

    பதிலளிநீக்கு
  8. //நல்ல பாடல். எனக்கும் பிடிக்கும் இந்த பாடல்.//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  9. திருத்தத்துடன் மீள் பின்னூட்டம்!!!!

    கீதா ரெங்கன் இணைய இணைப்பு சரியில்லை... 'ஹோகயா' என்று நேற்றே வாட்ஸாப்பில் சொல்லி இருந்தார். அதுதான் ஆளைக் காணோம்! காலை வணக்கம் கீதா ரெங்கன்!

    பதிலளிநீக்கு
  10. // ஏதோ ஒரு பாரம் மனதில்!... //

    ஊர் கிளம்பும் நாள் நெருங்குகிறதே என்றோ?

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும். பாடல் பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டது. நன்றி ஸ்ரீராம்.

    நீங்க அனுப்பின லிங்க் வேலை செய்து படித்தேன். நேற்றைய விஷயம் அருமையான
    கதை. திருமதி ரங்க நாயகி நல்ல எழுத்தாளர்.
    நன்றி மா
    @கீதா சாம்பசிவம், என்னையும் நினைத்துக் கொண்டது மனசுக்கு இதமா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. இன்னிக்கு மறுபடியும் தாமதமாக எழுந்தேன். காஃபிக் கடமை ஆத்தும்போதே ஆறு மணி! அதான் வரலை. இந்த மாதிரி எல்லாம் படம் வந்திருக்குனு உங்க மூலமாத் தெரிஞ்சுக்கறேன். நான் என்ன நினைச்சேன் என்றால் பிரபுவும் குஷ்புவும் "சின்னத்தம்பி" படத்தில் தான் முதல் முதலாகச் சேர்ந்து நடித்தார்கள் என்று. :) சினிமா விஷயங்களில் உங்களை வெல்ல முடியாதோ!!!!!! :)))))) கையில் வைச்சிருக்கீங்க தகவல்களை!

    பதிலளிநீக்கு
  13. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னை யாருமே தேடலை! :))))) இதைப் பார்த்தா அதிரடிக்குக் கொண்டாட்டமா இருக்குமே!

    பதிலளிநீக்கு
  14. பதிவில் குஷ்புவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  15. // பதிவில்.........//

    யாரும் சண்டைக்கு வந்திடப் போறாங்க!?.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் பாடல், இசை அனைத்தும் அருமையாக இருக்கிறது. பாடல் கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை. பிரபு குஷ்பு இணைந்து நடித்த படங்கள் அந்த நேரத்தில் அதிகமாக வந்தது என நினைக்கிறேன். ஸ்வர்ணலதாவின் இனிமையான குரலில் பாடலை மீண்டும் ஒருமுறை கேட்க வைத்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. //வாலியாக இருந்திருந்தால்... //

    வாலியின் வார்த்தைக் கோர்வைகள் சினிமாப் பாடல்களுக்குத் தான் லாயக்கு. கவிதைகள் என்ற பார்வைக்கு பல்லிளிக்கும்.

    ஆனால் கங்கை அமரனோ சகல கலா வல்லுனர். இவரது அட்டகாசமான நிறைய
    சினிமாப் பாடல்களையும் உதாரணத்துக்கு எடுத்துக் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  18. ஐ லைக் திச் சாங்க்.

    இதே படத்தில் இன்னொரு பாட்டும் வரும்... என் மாமனோட மனசுன்னு அதும் என்னோட ஃபேவரிட்

    பதிலளிநீக்கு
  19. எப்படித்தான்பாடல்களை நினைவில் வைத்து போடுகிறீர்களோ

    பதிலளிநீக்கு
  20. பாடல் பகிர்வு அருமை.
    கேட்டு இருக்கிறேன் பாடலை.
    படம் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  21. தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு..//

    அவளைப் பார்த்த நாளில்கூட தேனும்,பாலும் தான் நினைவுக்கு வந்ததாமா? அதுல டேஸ்ட் சரியில்லைன்னுவேறு சொல்கிறான்.. என்ன மாதிரி ஆண் இவன் ?

    பதிலளிநீக்கு
  22. கங்கை அமரன் நல்ல பாடல்கள் இயற்றி உள்ளார் ஆனால் டப்பாங்குத்து பாடல்கள் பிரபலமாகி விட்டது

    பதிலளிநீக்கு
  23. அருமையான பாடல்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  24. குஷுபுவா அது??!! ஹா ஹா ஹா ஹா…பார்த்தா தெரியவே இல்லை..(சும்மானாலும் இப்படிச் சொல்லனூம்ல!!)
    பாடல் நன்றாக இருக்கிறது. கேட்டதுண்டு. எஸ்பிபி வாய்ஸ் செம...சொல்லணுமா?!!! ஸ்வர்ணலதா நல்ல பாடகி. அவர் மறைவு மிகப் பெரிய இழப்பு. அவர் குரல் கேட்டுப் பல வருடங்கள் ஆயிற்று.
    கீதா

    ஸ்ரீராம் இந்தக் கருத்து இங்க வர வேண்டியய்து வேர்டில் காப்பி எடுத்து போடும் போது மாறிவிட்டது ...என்னடா கமெண்டை காணலையேனு பார்த்தா அங்கிட்டு...அதை இங்குட்டு கொண்டுவந்துட்டேன் ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  25. இப்பாடல் கேட்டதில்லை. பாலக்காட்டில் அதன் பின் தான் நான் பள்ளியில் சேர்ந்த சமயம். இது போன்ற படம் அப்போதெல்லாம் பாலக்காட்டிற்கு வராது. பாடல் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!