வியாழன், 12 ஏப்ரல், 2018

திருட்டுக்கரும்பு..





சமீபத்தில் நியூயார்க் பரதேசி பதிவில் ஆலைக்கரும்பு, பொங்கல் விற்பனைக்கு கரும்பு பற்றி எழுதி இருந்தார்.  அவர் அந்த ஊரில் வளர்ந்தவர் என்பதால் ஆலைக்கரும்பு அவருக்கு கேட்காமலேயே கிடைத்து விட்டது.  ஆலைக்கரும்புதான் சுவையாக இருக்கும் என்று எழுதி இருக்கிறார்.  இது கருப்பு நிறமாக இல்லாமல் சற்று வெளுத்தாற்போல இருக்கும்.
எங்களுக்கு அப்படி இல்லையே....! 



இப்போதெல்லாம் கரும்பு சாப்பிடுவதில்லை.  சிறுவயதில் தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்த காலத்தில் எங்கள் குடியிருப்பைத் தாண்டித்தான் சர்க்கரை ஆலைக்குச் செல்லவேண்டும்.  எனவே எங்கள் குடியிருப்பைத் தாண்டி லாரிகளிலும், டிராக்டர்களிலும் கரும்புகள் செல்லும்.

லாரிகளில் கரும்பு உருவுவது சிரமம்.  வேகமாகச் செல்லும்.  உயரமாக இருக்கும்.  அதிலிருந்தும் ஓரிரு நண்பர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று உருவ முற்பட்டதுண்டு.  வெற்றி பெற்றதாக நினைவில்லை.  ரொம்பக் கஷ்டம்.



ஆனால் டிராக்டர்களில் அல்லது சிறு வண்டிகளில்  செல்லும் கரும்புகளை உருவுவது சுலபம்.  எனக்கு எப்போதுமே கரும்புகளில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இந்த த்ரில்லுக்காக சில சமயம் கூடவே ஓடி, கரும்புகளை உருவி கீழே போட்டதுண்டு..  இறுக்கக் கட்டி இருப்பார்கள்.  திறமையாக உருவ வேண்டும்.  உருவமுடியாமல் தோல்வியடையும் சம்பவங்களும் உண்டு.  பின்னால் வரும் வண்டிக்காரர் சில சமயம் மௌனப் பார்வையாளர்களாக இருப்பார்கள், சிலசமயம் குரல் கொடுப்பார்கள்.

எங்கள் ஏரியாவைத் தாண்டும்போது உஷாராக இருப்பார்கள்.  சாலையோரம் காத்திருக்கும் எங்களைக் கண்டுவிட்டால் உடன் உட்கார்ந்திருக்கும் நபர் எழுந்து நின்று பின்னால் பார்த்தபடியே செல்வார்.  அது மாதிரி சமயங்களில் இடப்பக்கம் நாங்கள் இருந்தால், வலப்பக்கத்திலிருந்து நண்பர் சைக்கிளில் கிளம்புவான்.  சமயங்களில் வேண்டுமென்றே ஒரு கோஷ்டி ஒரு பக்கமும், கரும்புருவும் கோஷ்டி இன்னொரு பக்கமும் இருக்கும்.

உருவப்பட்டு கீழே விழும் கரும்புகளை உடனடியாக அப்புறப்படுத்தி குடியிருப்புக்குள் தூக்கிப் போட்டுவிட வேண்டும்.  அதுதான் நல்லது.  அதே போல ஒன்றன் பின்னாக ஒன்றாக இரண்டு மூன்று டிராக்டர்கள் வரும்.  அதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அப்படி வரும் பட்சத்தில் சீரியஸாக நாங்கள் அந்த வண்டிகளை பார்க்காதது போலப் பேசிக்கொண்டிருந்த விட்டு கடைசி வண்டி தாண்டியதும் கிளம்புவோம்!

பின்னால் வந்த வண்டியைப் பார்க்காமல் அவர்களால் நீண்ட தூரம் துரத்தப்பட்டதும் உண்டு.  உருவப்பட்ட வண்டியே திடீரென நின்று ஓட்டுனரோ, உடன் வருபவரோ துருவத்தி வருவதும் உண்டு.  இந்தத் திருட்டுகள் இளமையின் குறும்புகள் அவ்வளவுதான்!  

மாங்காய் திருடிய,  திருடி மாட்டிக்கொண்ட அனுபவங்கள் ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன்!


படங்கள் :  நன்றியுடன் இணையத்திலிருந்து...


=======================================================================================================

திங்கட்கிழமைகளில் தினமணியில், ஞாயிறுகளில் 'ஹிந்து தமிழி'ல் புத்தக விமர்சனங்கள் வரும்.  அவற்றிலிருந்து வாங்க வேண்டும் என்று சொறிய வைக்கும் புத்தகங்களைக் குறித்துக் கொள்வேன்.  அப்புறம் வாய்ப்பு கிடைக்கும்போது அப்போதும் அந்த ஆவல் மிச்சமிருந்தால் வாங்குவேன்!  

சென்ற மாதம் 18 ஆம் தேதி படித்த புத்தக விமர்சனம் ஒன்று உடனே அந்தப் புத்தகத்தை வாங்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது!  
வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்




சவுக்கு சங்கர் எழுதியிருக்கும் உளவு உணவு அரசியல் புத்தகமும் குறித்து வைத்திருக்கிறேன்.


=========================================================================================================


விதம் விதமான மலர்களை படம் எடுத்து வைத்திருக்கிறேன்.  அவ்வப்போது ஒவ்வொன்று இங்கு பகிரப் போகிறேன்.

அந்த வகையில் இந்த வாரம் இந்தப் பூ.  முகநூலில் மதுரைத்தமிழன் உருவாக்கியிருக்கும் 'க்ரூப்'பில் இந்த பூவைப் பகிர்ந்திருந்தேன்.  நண்பர் ஒருவர் சங்குப்பூ என்று சொல்லி இருந்தார்.

பூவைப் பாருங்கள்...  நடுவில் உற்றுப் பாருங்கள்..   ஷூஸ் அணிந்த இரு கால்கள் தெரிகிறதா?  ஒரு பக்கத்தில் பார்க்கும்போது தண்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கவோ, அல்லது அங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்க்க ஒருவர் 'முள்ளு கிள்ளு குத்திவிடப் போகிறது' என்று காலணி அணிந்து  உள்ளே செல்வது போல இருக்கிறது.  இன்னொரு கோணத்தில் உள்ளேயிருந்து பார்த்துவிட்டு வெளியே வருவது போல...!








==============================================================================================

சென்ற வார தினமலர் வாரமலரில் நான் பார்த்தது / படித்தது இது.  இது நீங்களா DD?!!






========================================================================================================

91 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்..

    பதிலளிநீக்கு
  3. கணினி சண்டித்தனம் பண்ணுதோ ஸ்ரீராம்....என் கணினியில் 6.01 ஆகும் போது வருகிறது பதிவு. அதற்கு முன் 6 ஆகி சில நிமிடங்களில் வரும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இது ஷெட்யூல் செய்யப்படும் பதிவுதானே கீதா? ஆறு மணிக்குதான் ஷெட்யூல் செய்கிறேன். என்ன ஆகிறது என்று தெரியவில்லை. இனி 5.59 க்கு ஷெடியூல் செய்து பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. கடைசி கண்ணில் பட்டது..

    டிடி போலத்தான் தெரிகிறது இல்லையா ஸ்ரீராம்.!!

    கருத்து சரிதான்..ஆனால் பெரும்பாலும் என்று சொல்ல முடிவதில்லை...இது சப்ஜெக்டிவ்...இதில் பல கருத்துகள் சொல்லலாம்.... இப்போதைய தலைமுறைப் பெண்கள் வித்தியாசமானவர்கள். அவர்களை இதில் சேர்க்க முடியாது. இரண்டாவது கணவர் அந்த நிர்வாகத் திறனை பெண்களிடம் கொடுத்தால் மட்டுமே..ஒரு சிலர் ஈகோ காரணமாகத் தாங்களே நிர்வகிப்பதும் உண்டு....

    .எத்தனையோ குடும்பங்களில் மனைவிகள் ஒன்றுமே தெரியாமல் ஜஸ்ட் கிச்சனை மட்டும் பார்த்துக் கொள்ள கணவரே மிக அழகாகக் குடும்பத்துச் செலவுகளை செய்து வந்தவர்கள், வருபவர்களையும் பார்க்கிறேன். (இதில் ஈகோ இல்லாமல்....)

    கீதா

    பதிலளிநீக்கு
  6. டிடி இல்லை. இனிஷியல் மாறுகிறதே! :) அதிலே ஆர்.டி. அப்புறமாப் பெண்களே எல்லாவிதங்களிலும் திறமையானவர்கள். மாறாகச் செலவாளிகளான பெண்களும் உண்டு. அகலக்கால் வைத்துவிட்டுக் கணவனுக்குத் தெரியாமல் சேமிக்கிறேன் என்னும் பெயரில் சீட்டுப் போடுதல், நகைச்சீட்டுக் கட்டி ஏமாறுதல், பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள் என்று பெரிய பட்டியலே இருக்கு! ஆகத் திறமை என்பது அவரவரின் இயற்கையான அடிப்படைக் குணத்தைப் பொறுத்தே அமையும். ஆண்களிலும் திறமையாகக் குடும்ப நிர்வாகம் செய்பவர்கள் உண்டே!

    பதிலளிநீக்கு
  7. கரும்பு எல்லாம் எனக்குச் சின்ன வயசில் சாப்பிடக் கிடைத்தது இல்லை. கரும்பைக் கடிச்சுச் சாப்பிடும் அனுபவம் முதல் முதலாகக் கல்யாணம் ஆகித் தலைப்பொங்கல் அன்னிக்குக் கிடைச்சது. சாப்பிடத் தெரியாமல் சாறை மேலெல்லாம் வழிய விட்டுக் கொண்டதை எல்லோரும் பார்த்துச் சிரித்தனர். அதே போல் இளநீரும்! மாமனார் தோப்பிலிருந்து பறித்து வந்த இளநீர் தான் முதல் முதலாகக் குடித்தது! அதுவரைக்கும் இளநீரின் சுவையே தெரியாது என்று சொன்னால் நம்பித் தான் ஆகணும்.:)))))

    பதிலளிநீக்கு
  8. ஏனெனில் எங்க பிறந்த வீட்டில் முழுத்தேங்காய் வாங்குவதே அரிது. பிள்ளையார் சதுர்த்தி அன்றும், வரலக்ஷ்மி விரதம் அன்றும் தான் வாங்குவார்கள். மற்ற நாட்களில் தேங்காய் உடைத்து நிவேதனம் என்றே செய்ததில்லை. உடைக்கும் அன்று தேங்காய்த் தண்ணீர் குடிக்க முடியாது. நிவேதனம் என்பதால். எடுத்து வைத்திருக்கும் நீரையும் அம்மா ரசத்திலோ, பாயசத்திலோ சேர்ப்பார். அன்றாடச் சமையலுக்குத் தேங்காய்க் கீற்றுகள் தான் வாங்குவோம். எனக்குத் தெரிந்து காலணாவுக்கு ஒரு கீற்று என விற்றது பின்னர் ஐந்து பைசாவுக்குப் பெரிசு ஒண்ணு, சின்னது ஒண்ணு என மாறிப் பின்னர் நாலணா என நான் கல்யாணம் ஆன புதுசில் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
  9. புதிய பகுதி... சுவாரஸ்யமாகவே இருக்கிறது.கரும்பு... "மலரும் நினைவுகள்...."

    பதிலளிநீக்கு
  10. சங்குபுஷ்பம் வெகு அழகு ஸ்ரீராம்....ஆமாம் கால்களில் ஷூ அணிந்திருப்பது போல் நான் கால்கள் போல் இருக்கே என்று சொல்ல நினைத்து வாசித்தால் நீங்கள் அதற்கு ஷூவே அணிவித்துவிட்டீர்கள் ஹா அஹ ஹாஹாஹா...எனக்கு வெளியே வருவது போல் தோன்றுகிறது...கொஞ்சம் மேலே பார்த்தால் உடம்பு நீட்டமாக தலையுடம் கைகள் இல்லாமல் இருபப்து போலவும் படுகிறது...

    அழகு அழகு...நானும் நிறைய மலர்கள் எடுத்து வைத்திருக்கிறேன் ஸ்ரீராம்...மூன்றாவது விழிப்பார்வையில் அப்புறம் வெளியிடவே இல்லை....

    உங்க படங்களை எல்லாம் பகிருங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அகலக்கால் வைத்துவிட்டுக் கணவனுக்குத் தெரியாமல் சேமிக்கிறேன் என்னும் பெயரில் சீட்டுப் போடுதல், நகைச்சீட்டுக் கட்டி ஏமாறுதல், பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள் என்று பெரிய பட்டியலே இருக்கு! ஆகத் திறமை என்பது அவரவரின் இயற்கையான அடிப்படைக் குணத்தைப் பொறுத்தே அமையும். ஆண்களிலும் திறமையாகக் குடும்ப நிர்வாகம் செய்பவர்கள் உண்டே!//

    அக்கா அப்படியே ஹைஃபைவ் தட்டுங்க!! இதே இதே தான் எனது கருத்தும்..சொல்ல நினைத்துக் கட் பண்ணிட்டேன் சிலதை.....ஹப்பா எனக்கு கீதாக்கா வந்துடாங்க சப்போர்ட்டுக்கு இப்ப நம்ம மேல கல்லெறிஞ்சாலும் நாம் ரெண்டு பேருமே பாராசூட் போட்டு அங்கிட்டு எங்கியாவது குதிச்சுரலாம்...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கரும்பு திருடியதை க்ரைம் கதைபோல சுவாரஸ்யமாக சொல்லிய தங்களது ரசனையை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. வடக்கே இந்த ஆலைக்கரும்பு தான் பயிரிடுவார்கள். நம் ஊர் கருப்புக் கரும்பு பயிரிடுவதில்லை. ஆலைக்கு எடுத்துச் செல்வ்தை கிராம்ப் புறங்களில் கேட்டால் கொடுத்து விடுவார்கள் - திருட்டுத்தனமாக உருவ வேண்டியதில்லை.

    பஞ்சாப் பகுதிகளில் கரும்பு பயிரிட்டு, வெட்டியவுடன் அதே நிலத்திலேயே வெல்லம் காய்ச்சுவார்கள் - கரும்பும் வெல்லமும் சாப்பிடக் கேட்டால் - “எவ்வளவு வேணுமோ சாப்பிடுங்க!” என்று சொல்வார்கள்! எவ்வளவு சாப்பிட்டு விட முடியும்.....

    பதிலளிநீக்கு
  14. சங்கு பூ - காலணி அணிந்த உருவம்! ... அழகு!

    இந்த பூ போலவே சிவப்பு நிறத்தில் பூங்காவில் ஒரு பூவினைப் பார்த்தேன் - மரத்தில் பூக்கிறது. முடிந்தால் புகைப்படம் எடுத்துப் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - பெயரே வித்தியாசமாக இருக்கிறது!

    படிக்காத புத்தகங்கள் நிறையவே வீட்டில் - இப்போதெல்லாம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டுவிட்டேன் - பராமரிப்பது சிரமமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. இது நீங்களா DD?

    எனக்கும் இதே தான் தோன்றியது பெயர் படித்தவுடன்....

    பதிலளிநீக்கு
  17. சிறுவயதில் கருப்பு நிற கரும்பு வாங்கு சுவைத்தது ஞாபகத்திற்கு வருகிறது,, ஆனால் இப்போது அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லை

    பதிலளிநீக்கு
  18. குடும்பத்தை குதூகலமாக்குவது, யார் பண விஷயத்தை மேனேஜ் பண்றாங்களோ அவங்க அவசியச் செலவு, சேமிப்பு என்று properஆ மேனேஜ் பண்ணினால் அது குடும்பத்தை குதூகலமாக்கும். பணம் இருக்கிறவர் தேவையற்று செலவு செய்தால் குடும்பத்துக்கு கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  19. நான் சின்ன வயதிலிருந்தே கறுப்பு நிறக் கரும்புதான் பார்த்திருக்கிறேன். 25 வருஷமாத்தான் பச்சை/வெள்ளை கரும்பு பார்க்கிறேன். இது ஆலைக் கரும்பு. பொங்கலுக்கு இப்போதும் கருப்பு கரும்புதான்.

    பதிலளிநீக்கு
  20. நான் 250-300க்பும் அதிகமான புத்தகத்தை இலவசமா கொடுத்துட்டேன். அதில் நிறைய படிக்காத புத்தகங்களும் அடங்கும். இனிதான் புதிய புத்தகங்கள் வாங்கணும். ஒண்ணு படித்துமுடித்து அடுத்தது.

    பதிலளிநீக்கு
  21. இது ஷெட்யூல் செய்யப்படும் பதிவுதானே கீதா? ஆறு மணிக்குதான் ஷெட்யூல் செய்கிறேன். என்ன ஆகிறது என்று தெரியவில்லை. இனி 5.59 க்கு ஷெடியூல் செய்து பார்க்க வேண்டும்!//

    ஹா ஹா ஹா அப்ப 58 க்குக் க்யூ கட்டணும்!!!!

    நேற்றைய பதிவும் கூட என் கணினியில் 6.01 வரை பார்த்துவிட்டுப் போனேன்...வெளியாகியிருக்கவில்லை. அப்புறம் பார்த்தால் துரை அண்ணாவின் கமென்ட் அதே நேரத்திற்கு வெளியாகியிருந்தது... நீங்க சொல்றா மாதிரி ஷெட்யூல்ட் தானே...என்னவோ.....ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  22. குடும்பத்தை குதூகலமாக்குவது, யார் பண விஷயத்தை மேனேஜ் பண்றாங்களோ அவங்க அவசியச் செலவு, சேமிப்பு என்று properஆ மேனேஜ் பண்ணினால் அது குடும்பத்தை குதூகலமாக்கும். பணம் இருக்கிறவர் தேவையற்று செலவு செய்தால் குடும்பத்துக்கு கஷ்டம்.//

    யெஸ் அதே அதே நெல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. சின்னவயதில் கிராமத்தில் வாழும் பாக்யம் இருந்ததால், நிறைய கரும்புகளைக் கடித்துத் தின்றிருக்கிறேன். நண்பர்களோடு இதில் போட்டி! ‘வாசல்ல துப்பாதீங்கடா.. அந்தப்பக்கமா போய்த் தின்னுங்கடா!’ என்று அப்பா விரட்டியிருக்கிறார்.

    இளம்பச்சை, மஞ்சள், பர்ப்பிள் நிறக்கோடுகளைக்கொண்ட கரும்புகள் எங்கள் கிராமத்தில் வளர்ப்பார்கள். நாமக்கரும்பு என்பார் என் அம்மா. பின் கருப்புக் கரும்பும் வந்து சேர்ந்தது. ஜூஸியாக தித்திப்பாக இருக்கும். கரும்புக்கொல்லைக்குப் போனால் கிராமத்துக்காரர்களை ஒன்றை எடுத்துத் தூக்கிப்போடுவார்கள் - தின்னுட்டுப்போங்கடா!
    திருடவாய்ப்புகொடுத்ததில்லை. ஆனால் சின்னவயதின் திருட்டின்பம் அனுபவிக்கவேண்டாமா? அதற்காக யாருமில்லா மாந்தோப்புக்குச் சென்று மரம் மரமாய் ஏறுவோம். ஒருவன் பறித்துப்போட கீழே உள்ளவர்கள் எடுத்துக்கொண்டு ரோட்டோரப் பாலத்தில் வந்து உட்காருவோம். எவனாவது ஒருவனின் ட்ரவுசரில் உப்புப்பொட்டலம் இருக்கும். கல்லுப்பு. கல்லில் அடித்து உடைத்த மாங்காய்த்துண்டில் தேய்த்துத் தின்போம். ’ஸ்வர்கம் பக்கத்தில்...’ என்று பாட மறந்திருக்கிறோம். உண்மையிலேயே சொர்கத்தில் இருந்தததினால் !

    பதிலளிநீக்கு
  24. எப்போதும் சிவப்பும், மஞ்சளுமாகப் பார்த்துவிட்டு நீலப்பூ என்பது குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சங்குப்பூவா இது?

    எங்கேதான் கால்பதிப்பது என்பதற்கு கணக்கே இல்லையா? சங்குப்பூவில் அனுஷ்காவின் காலுக்கு என்ன வேலை ?

    பதிலளிநீக்கு
  25. வேங்கை, நங்கூரம், ஜீன் - என்ன தலைப்பு இது? இந்த லட்சணத்தில் படம் வேற..!

    பதிலளிநீக்கு
  26. @ கீதா: ..இப்ப நம்ம மேல கல்லெறிஞ்சாலும் நாம் ..//

    கல்லெறிக்குப் பயந்து கருத்தை மாத்திப்போட்டுக் கதய ஓட்டுறீங்க. புரியுது.. புரியுது !

    பதிலளிநீக்கு
  27. சங்கு புஷ்பம் வெகு அழகு! ஷீ அணிந்து பெரியவர் ஒருவர் வெளியே கிளம்புகிறாறோ?
    வீட்டில் கரும்பு விளைவித்ததால் போட்டி போட்டுக் கொண்டு நிறைய சாப்பிட்டிருக்கிறோம். வெங்கட் சொல்லியிருப்பதை போல வெல்லம் காய்ச்சுவதை பார்த்திருக்கிறேன். வெல்ல பதத்திற்கு முந்தைய பதத்தில் குழம்பு போல வரும். அது எங்கள் தாத்தாவிற்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் கொடுத்தனுப்புவார்கள். வெகு சுவையாக இருக்கும்.
    நானும் முன்பெல்லாம் பத்திரிகைகளில் வரும் விமரிசனங்களை படித்து சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருந்தேன். இப்போது புத்தகங்கள் வாங்குவது குறைந்து விட்டதால் அப்படி செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  28. கருப்பு திருட்டு - குறும்பு...

    வரவு எட்டணா... செலவு பத்தணா...
    அதிகம் ரெண்டணா..
    கடைசியில் குந்தணா... குந்தணா...

    நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது...
    ஐயா நிம்மதி இருக்காது...

    அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது...
    அம்மா உள்ளதும் கிடைக்காது...


    இப்படி பாடல் வரிகள் இல்லாததால், அவர் நான் இல்லை...

    பதிலளிநீக்கு
  29. திதி - துந்தணா துந்தணா என்றுதானே வரணும்.

    பதிலளிநீக்கு
  30. அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  31. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ஸ்வாரஸ்யமாய் இருக்கும் போலத் தெரியுது....

    கரும்பு தின்பதில் சிறிய வயதில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை...கரும்பு கூட விளையாட்டுத் திருடு உருவுவது உண்டா....அட! மாங்காய் பசங்க திருடுவது பார்த்திருக்கேன்...ஆனா வீட்டுக்குள்ளதான் திருட்டு வேலை எல்லாம் கூட்டுக்குடும்பம் என்பதால் தம்பி தங்கைகள் எல்லோருடும் சேர்ந்து செஞ்சு மாட்டிக்கிட்டு...எல்லாம்...

    வெளில அப்படி அனுபவம் இல்லாம போச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இப்படி பாடல் வரிகள் இல்லாததால், அவர் நான் இல்லை...//

    அதானே பாடல் இல்லாமல் டிடியா...இது தோன்றாமல் போய்விட்டதே!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கல்லெறிக்குப் பயந்து கருத்தை மாத்திப்போட்டுக் கதய ஓட்டுறீங்க. புரியுது.. புரியுது !//

    ஹா ஹா ஹா ஹா ஹா..கருத்த மாத்தலை கொஞ்சமா சொல்லிப்போட்டு போய்டட்டேன் அம்புட்டுத்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  34. கரும்பு தமிழ்நாட்டில் இருந்தவரை சிறு வயதில் கொஞ்சம் சுவைத்தது உண்டு

    சங்குபுஷ்பம் பூ ரொம்ப அழகாக இருக்கிறது.

    அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  35. ஆமாம் சங்குபுஷ்பத்தில் நீங்கள் சொல்லியிருப்பது போல் நடுவில் கால்கள் போல இருப்பது ரொம்ப அழகாகவும் இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  36. என்னாதூஊஊஊ ஸ்ரீராம் கரும்பு லொறியைக் கலைச்சாரோ? ஷோட்ஸ் போடும் காலத்திலா:)... இளமை அனுபவம் என்றும் இனிமை. அப்போகூட நிறைய தக்கினிக்குகள்:) பாவிச்சிருக்கிறீங்க.. எப்போதும் ஆர் கையிலும் மாட்டுப்படேல்லைத்தானே?:).

    கரும்பு தின்னக் கைக்கூலி வேணுமோ எனப் பழமொழி எல்லாம் இயற்றினாலும்.. எனக்கதில் நாட்டமில்லை... எல்லோரும் சாப்பிடும்போது நானும் சாப்பிட்டிருக்கிறேன் அவ்வளவுதான். கனடாவில் ஒருதடவை ஆன்ரி கூட்டிப்போய் கரும்புச்சாறு உடனெ பிழிந்து தந்தார்கள் வாங்கி தந்தா.. என்னால் ஒரு வாய்கூடக் குடிக்க முடியவில்லை.

    ஊர் வீட்டில் சும்மா ஒரு துண்டை அப்பா ஊன்றி விட்டார்... அது வளர்ந்து பெரீயா இடம்பிடிச்சு அப்படியே குட்டித் தோட்டம்போலாகி பெரிய மொத்தம் நீளமா வளர்ந்து, முடிவில் கடைக்காரரை கூப்பிட்டு விட்டு லொறியில் வெட்டி எடுத்துப் போனார்கள்.. அப்படியே அழிச்சுவிட்டிட்டோம்ம்.

    பதிலளிநீக்கு
  37. உங்கள் புத்தக வாசிப்பு அருமை. எனக்கும் படிக்க முடியாட்டிலும் தமிழைக் கண்ணால் கண்டாலே வாங்கிடோணும் என துள்ளுவேன்... இப்போது நான் வாசித்துக் கொண்டிருப்பது “பாரி மலைக் கொடி”:).. எழுதியவர் யார் தெரியுமோ?:).. சரி எதுக்கு அதெல்லாம் இப்போ:).

    உந்த நீல மலர் மிகவும் மருத்துவத் தன்மை வாய்ந்ததாமெல்லோ.. தமிழ் மருத்துவத்தில் ரீ வி யில் காட்டினார்கள். ஊரில் பார்த்திருக்கிறேன். நாகலிங்கப்பூ பார்த்திருக்கிறீங்களோ? நான் பார்த்திருக்கிறேனே.....

    சகோ டிடி யின் பெயர் என் நில் அல்லவோ முடியும் இது எல் இல் முடிஞ்சிருக்கு அதைப் பார்த்ததும் நினைச்சேன் அவர் இவரில்லை:) என.

    பதிலளிநீக்கு
  38. ///ஏகாந்தன் Aekaanthan !April 12,

    எங்கேதான் கால்பதிப்பது என்பதற்கு கணக்கே இல்லையா? சங்குப்பூவில் அனுஷ்காவின் காலுக்கு என்ன வேலை ?///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அபச்சாரம் அபச்சாரம்:) ஏகாந்தன் அண்ணன் உடனேயே ஸ்ரீராம ஜெயம் 108 தடவை சொல்லிப் பாவத்தைப் போக்கிடுங்கோ:)... ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  39. ///ஸ்ரீராம்.April 12, 2018 at 6:04 AM
    இது ஷெட்யூல் செய்யப்படும் பதிவுதானே கீதா? ஆறு மணிக்குதான் ஷெட்யூல் செய்கிறேன்///

    உங்கள் கொம்பியூட்டரில் என்ன நேரம் இருக்கோ அதன்படிதானே வெளியாகும். இன்றும் 6 மணிக்குத்தானே வெளி வந்திருக்கு .. இதில் கீதாவுக்கு என்ன பிரச்சனை கர்ர்ர்ர்ர்ர்ர்:).. கீதா உங்கள் நேரம்தான் தவறாக் காட்டுதூஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  40. Neela sangupoovirku karunkuvalai nnu per illaiyo?
    Karumbu narukki kooda sakkai poda oru paper bagoda dhan saptu pazakkam!!
    Ungal anubavangal swarasyam!

    பதிலளிநீக்கு
  41. வாரமலரில் வந்திருந்த கருத்தை நான் லட்சியம் செய்யவில்லை. அது DD யா என்று தெரிந்து கொள்ள மட்டுமே வெளியிட்டிருந்தேன். அது அவர் இல்லை என்றும் 99 சதவிகிதம் தெரியும். அவர் பத்திரிகைக்கு அனுப்ப மாட்டார். அதுவும் சாதாரண கேள்வியை. அப்படியே அனுப்பினாலும் தினமலருக்கு அனுப்பி மாட்டார்! முன்னரே சொல்லி இருக்கிறார், தினமலர் செய்தி எல்லாம் போடாதீங்க ஸ்ரீராம்னு!

    நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  42. வாங்க கீதாக்கா... DD என்பது இனிஷியல் சேர்ந்தது இல்லை. திண்டுக்கல் தனபாலன் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறோம். அதை ஆரம்பித்து வைத்ததும் நான்தான் தெரியுமோ?

    பதிலளிநீக்கு
  43. கீதா க்கா... கரும்பின்மேல் எனக்கும் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. கரும்புத்திருட்டு கூட நண்பர்களுக்காகவும், விளையாட்டாய்க் கிடைத்த த்ரில்லுக்காகவும்தான்!

    பதிலளிநீக்கு
  44. கீதாக்கா.... இளநீர் சாப்பிட்டதே இல்லை என்பது ஆச்சர்யம் கீதாக்கா... எனக்கு விருப்ப பணம் அது! நாங்களும் தேங்காய் பாதை வாங்கியிருக்கிறோம் சமையலுக்கு. அப்பாவின் காசு டப்பாவில் பத்து தேதிக்கு மேல் அதற்குத்தான் காசு இருக்கும்!

    பதிலளிநீக்கு
  45. நன்றி பாரதி... இது புதிய பகுதி இல்லை...

    பதிலளிநீக்கு
  46. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  47. கீதா.. இந்தப் பூவின் அழகு என்னை உடனே படம் எடுக்க வைத்தது. அப்புறம் நிறைய பூக்களைப் பட எடுத்து வைத்திருக்கிறேன். வாரம் ஒரு பூ மலரும்!!!

    சேமிப்பு பற்றிய உங்கள் அனைவரது கருத்துகளையும் கவனமாகப் படித்து வைத்துக் கொண்டேன்!!

    பதிலளிநீக்கு
  48. வாங்க கில்லர்ஜி. திருடியது க்ரைம்தானே? அதுதான்... ஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
  49. வாங்க வெங்கட்... மதிய வணக்கம்!!!

    பதிலளிநீக்கு
  50. வெங்கட்.. ஆலைக்கரும்பு பயிரிடும் இடங்களில் அப்படி இருக்கலாம். வண்டிகளில் எடுத்துச் செல்லும்போது அளவு குறைந்தால் அந்த அப்பாவி வண்டிக்காரர்கள் அல்லவா கஷ்டப்படுவார்கள்? பாவம்.. இப்போது நினைக்கும்போது நியாயம் தெரிகிறது! பூவின் படம் பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  51. நானும் புத்தகங்கள் வாங்குவதை ரொம்பவே குறைத்துக்கொண்டு விட்டேன் வெங்கட். இந்த விமர்சனம் படித்தீர்களோ? அது ஆவலைத் தூண்டியது!

    பதிலளிநீக்கு
  52. வாங்க மதுரை.. நாங்களும் கடையில் பொங்கல் சமயங்களில் வாங்கியது கருப்புக் கரும்புதான். இது திருட்டுக்கரும்பு!

    பதிலளிநீக்கு
  53. வாங்க நெல்லை.. . குதூகலக் குடும்பக் குறிப்புகள் அருமை.

    //நான் 250-300க்பும் அதிகமான புத்தகத்தை இலவசமா கொடுத்துட்டேன். அதில் நிறைய படிக்காத புத்தகங்களும் அடங்கும்.//

    பரவாயில்லை. அந்த அளவுக்கு மனோதிடம் வந்திருக்கிறதே... எனக்கு வர மாட்டேன் என்கிறது!

    பதிலளிநீக்கு
  54. வாங்க கீதா... ஷெட்யூல் டைமிங் பற்றி அதிரா சொல்லி இருப்பதையும் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  55. வாங்க ஏகாந்தன் ஸார்.. உங்கள் கரும்பு நினைவுகளை எல்லாம் தூண்டி விட்டேன் போல...இனிக்கும் நினைவுகள் என்று சொல்லலாமா? அப்படி ஒரு நாவல் உண்டு தெரியுமோ? கோமகன் எழுதியது! மாங்காய் திருடிய அனுபவம்தான் எனக்கு அதிகம். நாய்களால் துரத்தப்பட்டிருக்கிறேன். மோட்டார் ரூமில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  56. ஸா......... ர்... அது அனுஷ் கால் மாதிரியா தெரிகிறது? ஐயோ... சொக்கா... எனக்கு தெரியவில்லையே...!

    //வேங்கை, நங்கூரம், ஜீன் - என்ன தலைப்பு இது? இந்த லட்சணத்தில் படம் வேற..!//

    அந்த விமர்சனத்தைப் படித்துப் பார்த்தீர்களோ?

    பதிலளிநீக்கு
  57. வாங்க பானு அக்கா.. பூ ரொம்ப அழகு இல்லையா? இதை விட அழகாக இன்னொரு பூ படம் எடுத்து வைத்திருக்கிறேன். பின்னர் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  58. நன்றி டிடி. அதுதானே.. பாடல் வரிகள் இல்லாமல் டிடியா!! அது நீங்களாய் இருக்காது என்று நானும் நினைத்தேன். பதிவுக்கு தெரியாது பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  59. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்

    பதிலளிநீக்கு
  60. வாங்க துளஸிஜி. நன்றி. கேரளாவில் கரும்பு சுவைப்பதில்லையா? கிடைக்காதா என்ன?

    ஆச்சர்யமான பூவின் உருவம்... இல்லை?

    பதிலளிநீக்கு
  61. வாங்க அதிரா..

    //எப்போதும் ஆர் கையிலும் மாட்டுப்படேல்லைத்தானே?:).//

    ஆமாம் என்று சொல்லத்தான் ஆசை! கரும்பு எனக்கும் ரொம்பப் பிடிப்பதில்லை. சும்மா த்ரில்! ஆனால் கரும்புச்சாறு ஒரு சீஸனில் நிறையாக குடித்துக் கொண்டிருந்தேன். இஞ்சி, எலுமிச்சை எல்லாம் வைத்து பிழிவார்கள். மதியம் ஆனதும் சொம்பில் வாங்கி வந்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் குடிப்போம். நான் வெளியில் செல்லும்போதெல்லாமும் குடிப்பேன்!

    பதிலளிநீக்கு
  62. அதிரா..

    //உங்கள் புத்தக வாசிப்பு அருமை. //

    அது சரி.. இன்னும் வாங்கவே இல்லையே... பாரி மலைக்கொடி? யாராக்கும் எழுதியது? கூகிளில் கண்டு பிடிக்க முடியவில்லையே...!!

    நாகலிங்கப்பூ பார்த்திருக்கிறேன்.


    //உடனேயே ஸ்ரீராம ஜெயம் 108 தடவை சொல்லிப் பாவத்தைப் போக்கிடுங்கோ:)...//

    ஏன் அதிரா? ஏன்?

    பதிலளிநீக்கு
  63. ஸ்ரீராம் - அந்த அளவுக்கு மனோதிடம் வந்திருக்கிறதே. - அப்படியெல்லாம் இல்லை. வேறு வழியில்லை. தூரப் போட (குப்பை பாக்சில்) மனசு ஆகவில்லை. வேற ஆப்ஷன் என்ன என்ன என்று பார்த்தேன். சொன்னால் மலைத்துவிடுவீர்கள். கிட்டத்தட்ட 1000 (ஆயிரம்) டிவிடிக்களை குப்பைத் தொட்டியில் போட்டேன். என் நல்ல நேரம்.. குழந்தைகள் (பதின்ம வயது) என் பசங்க புத்தகங்களை சும்மா எடுத்துக்கொண்டார்கள். தமிழ் மன்றத்துல 100+ தமிழ் புத்தகங்கள் கொடுத்தேன். குப்பையில் போட சோனி வீடியோ கேமரா (2000ல் வாங்கியது) பாக்கி இருக்கு. இன்னும் அங்க வச்சுட்டு வந்திருக்கேன். ம்.

    பதிலளிநீக்கு
  64. /இந்தத் திருட்டுகள் இளமையின் குறும்புகள் அவ்வளவுதான்! //

    எனக்கு இப்படி அனுபவங்கள் இல்லை .
    பப்லுவை மட்டும் ஒளிச்சி வளர்த்த அனுபவம் இருக்கு :)
    நான் 10 வயசு வரை கிராமத்தில் வளர்ந்தேன் எங்க வீடு கரும்பு தோட்டம் கிட்ட ஆனா அது ஆலை வெரைட்டி இல்ல .இங்கே ஏசியன் கடைல Barbados கரும்பு கிடைக்குது ஆனா நம்மூர் ருசி இல்லை

    பதிலளிநீக்கு
  65. சங்குப்பூ !! ஹெர்பேரியம் நினைவு வருது .
    ஒவ்வொரு மலரையும் கூர்ந்து கவனிச்சா நிறைய டிசைன் தெரியும் .

    எனக்கு எப்படி தோணுதினா bride in her wedding dress :) and படத்தை தல கீழ பார்க்க மர கிளையில் தோகை யுடன் மயில் :)

    பதிலளிநீக்கு
  66. நாங்களும்தான் கரும்பை திருடி இருக்கோம்.

    படத்தில் இருப்பது சங்குப்பூதான் சகோ. சனிபகவானுக்கு படைக்கப்படும் பூ. எங்க வீட்டில் இருக்கு, ஆனா, ஷூக்காலை இன்னிக்குதான் பார்க்குறேன்.

    பதிலளிநீக்கு
  67. கரும்பு தின்றால் வாயில் புண் வருகிறது. அதனாலென்ன,.

    சின்ன வயசில் நிறைய சாப்பிட்டாச்சு.
    பொருளாதாரம் நிதானம் நிறைந்தவர்கள்
    பொறுப்பாகச் செய்யணும்.

    பதிலளிநீக்கு
  68. //குப்பையில் போட சோனி வீடியோ கேமரா (2000ல் வாங்கியது) பாக்கி இருக்கு//

    எங்கள் வீட்டில் பெரிய குப்பைத்தொட்டி இருக்கிறது!!!!

    //தமிழ் மன்றத்துல 100+ தமிழ் புத்தகங்கள் கொடுத்தேன்//

    பெருமூச்சைக் கிளப்புகிறீர்கள் நெல்லை!

    பதிலளிநீக்கு
  69. வாங்க ஏஞ்சல்..

    என் பையன்கள் வளர்ந்த விதம் பார்க்கும்போது அவர்கள் இளமையின் குதூகலங்களை அனுபவிக்கவில்லை என்று தோன்றும். எங்கள் தீபாவளியில் சுமார் நானூறு வீடுகள் கொண்ட குடியிருப்பில்.. எத்தனை எத்தனை நண்பர்கள்? எவ்வளவு விளையாட்டுகள்? எவ்வளவு சண்டைகள், பொறாமைகள், சோகங்கள்,நட்புகள்... இப்போது நினைத்துப் பார்க்கும்போது என் இளமையில் நான் எதையும் இழக்கவில்லை. எனக்கு சுதந்திரம் கொடுத்த என் அம்மாவை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

    படத்தை ரொம்ப வித்தியாசமா பார்த்திருக்கீங்க... முழுப்படத்தையும் கற்பனையோடு பார்த்துருக்கீங்க.. ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  70. வாங்க ராஜி.. சனி பகவானுக்கு உகந்த பூவா? செய்தி எனக்கு!

    பதிலளிநீக்கு
  71. ஆமாம் வல்லிம்மா... கரும்பு தின்றால் வாயில் புண் வரும் இல்லை? நினைவுக்கு வருகிறது. பூ பற்றிய பாராட்டு வரிகளுக்கு நன்றிகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  72. வணக்கம் சகோதரரே

    இதை செங்கரும்பு என்று சொல்வார்கள் என நினைக்கிறேன். தங்களது கரும்பு மலரும் நினைவலைகள் சுவாரஸ்யம். அந்த வயதில் நண்பர்களோடு இந்த வீர விளையாட்டுகள் நன்றாகத்தான் இருந்திருக்கும் இல்லையா? ரசித்தேன். கரும்பு தின்ன கூலியா..என்று சொல்வார்கள்.ஆனால் கரும்பு திங்க பல்லில் நல்ல பலம் வேண்டும். கரும்பு சாறு உடல் சூட்டை கொடுக்கும். அதனால் கரும்பை மறந்தாச்சு. பொங்கலுக்கு சாஸ்திரத்திற்கு வாங்குவதோடு சரி..

    தங்களுடைய புத்தக வாசிப்புக்கு பாராட்டுக்கள். அட்டை படமே படிக்க தூண்டுகிறது.

    குடும்பத்தை கணவன் மனைவி இருவருமே கலந்தாலோசித்து நிர்வகித்தால் நல்லதுதான்.இல்லையா?

    சங்கு பூ அப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் தங்களை மாதிரி ரசனையோடு ஷுகால்களுடன் பார்த்ததில்லை. ஊதா கலரில் பூ ரொம்ப அழகாயிருந்தது. அதற்கு ஊடகங்களும். கற்பனைகளும் மிகவும் அற்புதமாயிருந்தது. மற்ற பூக்களையும், காண ஆவலாய் உள்ளேன்.

    அனைத்தும் அருமை..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  73. ///ஸ்ரீராம்.April 12, 2018 at 3:21 PM
    ஸா......... ர்... அது அனுஷ் கால் மாதிரியா தெரிகிறது? ஐயோ... சொக்கா... எனக்கு தெரியவில்லையே...!////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நீங்க தமனாவை ஓரப் பார்வை பார்த்தமையால் இப்பூடி ஆகிட்டுது போல:)...

    அது கண்ணதாசன் அங்கிளுடையது ஸ்ரீராம்.

    நெல்லைத்தமிழன் வீட்டுக்கு கிட்ட எனில் தமிழ்ப் புத்தகங்களை நான் வாங்கியிருப்பேன்... முன்பு அருமை தெரிய வில்லை, இப்போ தமிழ் புத்தக கடை ஒன்று கிடைக்காதா எனும் ஆசையா இருக்கெனக்கு:) வாசிக்காட்டிலும் அடுக்கி அடுக்கி வைத்து அழகு பார்க்க விருப்பம் தமிழ்க் கதைப்புத்தகங்கள்.

    பதிலளிநீக்கு
  74. அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்வன் முதல் பாகமாவது முடித்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  75. எங்க ஊர் மாதிரி எழுந்தவுடன் எங்கள் பிளாக் பார்த்தால் அன்றைய இடுகை வந்திருக்காது. ஶ்ரீராம் காலை 4 மணிக்கு ஷெட்யூல் செய்ய வேண்டும். ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  76. நெல்லை...

    நாலுமணிக்கு நான் எழுந்து விடுகிறேன். ஆனால் வேலையின் சௌகர்யத்துக்காக ஆறுமணிக்கு ஷெட்யூல் செய்கிறேன்!

    //அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்வன் முதல் பாகமாவது முடித்துவிட்டீர்களா?//

    ஹா... ஹா.... ஹா....

    அதுசரி.. மற்ற புத்தகங்கள் முடிக்காமல் இருந்தால் பரவாயில்லையா? அவர்கள் இதை மட்டும்தான் சொன்னார்கள் என்பதால் இதைக் கேட்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  77. அதிரா....

    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நீங்க தமனாவை ஓரப் பார்வை பார்த்தமையால் இப்பூடி ஆகிட்டுது போல:)...//

    இல்லையே... தமன்னாவா? யார் அது அதிரா?

    //அது கண்ணதாசன் அங்கிளுடையது ஸ்ரீராம்.//

    ஆம், தெரிந்து கொண்டேன். லண்டனிலிருந்து ஒரு உளவாளி நேற்றே துப்பு கொடுத்திருந்தார்!

    பதிலளிநீக்கு
  78. ஆலைக்கரும்பு சாப்பிட்டு இருக்கிறேன்.
    லாரியில் போவதை குழந்தைகள் உருவி எடுப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
    நீங்களும் சிறு வ்யதில் அந்த குறும்பு செய்து இருக்கிறீர்களா?

    புத்தகப் பகிர்வு அருமை.

    சங்கு பூ என் மாயவர வீட்டுத்தோட்டத்தில் நிறைய பூக்கும், வெள்ளை , நீலம் எல்லாம் உண்டு.
    நீலத்தி அடுக்கு சங்கு பூ வைத்து இருந்தேன்.
    சனிக்கிழமை சனி பகவனுக்கு கட்டி கொடுப்பேன்.
    பூவை உற்றுப் பார்த்து உங்கள் பகிர்வு அருமை.
    தனபாலன் நான் அவரில்லை என்று சொல்லிவிட்டார்.

    நேற்று உறவினர் வீடு போனதால் இங்கு வர முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  79. வரவுக்கு மேல் செலவு செய்யும் பெண்களும், சேமிக்கும் பெண்களும் கலந்து தான் இருக்கிறது இந்த உலகில்.
    சேமிக்கும் பெண்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.

    பதிலளிநீக்கு
  80. ///நெ.த. said...
    அம்மா தாயே அதிரா, பொன்னியின் செல்வன் முதல் பாகமாவது முடித்துவிட்டீர்களா?//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தூசு தட்டித்தட்டி அடிக்கி வச்சிருக்கிறேன்:).. ஆனா என்னமோ தெரியல்ல தொடர்ந்து படிக்க முடியல்ல மனதிலும் பதியுதில்ல.. பாதியில் விட்டால்.. பின்பு தொடர முடியாமல் மீண்டும் படிக்கும் நிலைமை வந்திடுது:)) சாண் ஏற முழம் சறுக்க்குது:))..

    ஆனா கண்ணதாசன் அங்கிளின் புத்தகம் எனில் கையில் எடுத்தால் வைக்க முடிவதில்லை.. அவ்ளோ தத்துவமா கொட்டி எழுதுவார்:)...

    இப்போ என்னிடம் ஒரு 45...50 புத்தகங்கள் இருக்கும் அடுக்கி வச்சிருக்கிறேன்.. பயந்திடாதீங்க.. இன்குளூடிங் கல்கி.. குமுதம் ஹ ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  81. //ஸ்ரீராம். said...
    அதிரா....

    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது நீங்க தமனாவை ஓரப் பார்வை பார்த்தமையால் இப்பூடி ஆகிட்டுது போல:)...//

    இல்லையே... தமன்னாவா? யார் அது அதிரா?///

    ஆங்ங்ங்ங் நெல்லைத்தமிழன் ஓடியாங்கோ பார்த்தீங்களோ இனி உங்களுக்கு டென்ஷனே இல்லை:)) ஸ்ரீராம் மறந்திட்டார்:)) நல்ல பிள்ளைக்கு ஒரு சூடு:)) பார்த்தீங்களோ:)).. வாழ்க்கையில் தடுமாற்றம் வருவது சகஜம் தானே:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))

    //அது கண்ணதாசன் அங்கிளுடையது ஸ்ரீராம்.//

    ஆம், தெரிந்து கொண்டேன். லண்டனிலிருந்து ஒரு உளவாளி நேற்றே துப்பு கொடுத்திருந்தார்!///


    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா என் செக்:) க்கு சலரியைக் கூட்டோணும்:)) ஒழுங்கா வேர்க் பண்றா.... :))..

    அது என் வாழ்வில் எப்ப என்ன சம்பவம் நடந்தாலும் அது ஒரு கதையாகவே ஆகிடுது:) அப்படித்தான் இக்கதை படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்துது அதுதான் அவவுக்கு தகவல் கொடுத்தேன்.. அதை புளொக்கில் உங்கள் எல்லோருக்காகவும் சொல்லிடுறேனே:))..

    இன்னொரு கண்ணதாசன் அங்கிளின் புத்தகமும்.. குட்டிப் புத்தகம் ஆனா 20 தடவைகு மேல் படித்திருப்பேன்.. அதை விமர்சனம் செய்யோணும் என ஒரு விருப்பம்[அதனால் இப்போ பெயர் சொல்லவில்லை].. எல்லாத்துக்கும் பொறுமையும் நேரமும் அமியுதில்லையே...:(.

    //அதுசரி.. மற்ற புத்தகங்கள் முடிக்காமல் இருந்தால் பரவாயில்லையா? அவர்கள் இதை மட்டும்தான் சொன்னார்கள் என்பதால் இதைக் கேட்கிறீர்கள்!!///

    மற்றவை படிச்சிடுவேன் என ஒரு நம்பிக்கை அவருக்கு ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  82. அரக்கோணத்தில் இருந்தபோது கரும்பை ஒரு வெட்டு வெட்டி இரு முனைகளிலும் இருவர் இழுப்பார்கள் அப்படி இழுக்கும் போது யார் பக்கம் கரும்பின் தோல் பாகம் கம்மியாக இருக்கிறதோஅவர்கள் வெற்றி பெற்றவர்கள் இது ஒரு சூதாட்டம் போல நடை பெறும் பார்த்திருக்கிறேன் இப்போதெல்லாம்கரும்பு தின்ன முடியாதே

    பதிலளிநீக்கு
  83. திருட்டுக் கரும்பு தின்னும் வேளை
    கரும்பு தின்னக் கூலியா கேட்கிறாய்? என்பார்களே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!