செவ்வாய், 31 டிசம்பர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : எங்கிருந்தாலும் வாழ்க -  கீதா சாம்பசிவம் 




எங்கிருந்தாலும் வாழ்க 
கீதா சாம்பசிவம் 
-------------------------------------

ராகவனும், நானும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்த காரணத்தினால் நெருங்கிய நண்பர்கள் ஆனதோடு அல்லாமல் குடும்ப நண்பர்களாகவும் ஆகிவிட்டோம். ராகவன் மனைவி சித்ரா ரொம்பக் கெட்டிக்காரி! கலகலப்பான சுபாவம் கொண்டவள். எங்களுடன் முக்கியமாக என் மனைவியுடன் நெருங்கிப் பழகி வந்தாள். இரண்டு குழந்தைகள். இரு குழந்தைகளுமே நன்கு படித்து வந்தனர். 

பெண்ணுக்குக் கல்யாணமும் செய்து விட்டான் ராகவன். ஆனால் அவர்கள் கல்யாணம் பற்றியோ அவர்கள் கல்யாண நிகழ்வுகள் பற்றியோ இருவருமே வாயைத் திறந்ததில்லை. 

ஒரு முறை எங்கள் கல்யாண ஃபோட்டோக்களைப் பார்த்த ராகவனும், சித்ராவும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் வாயே திறக்கவில்லை. அப்போது என் பையன்விளையாட்டாக, "மாமா, உங்க கல்யாண ஃபோட்டோக்களை இன்னும் எத்தனை நாட்கள் ரகசியமாக வைச்சுக்கப் போறீங்க?" என்று கேட்டான். 

ராகவன் பொதுவாகச் சிரித்து வைத்தாலும் அதில் ஏனோ ஓர் சங்கடம். கலக்கம். இத்தனைக்கும் ராகவனும், சித்ராவும் உறவினர்கள் தான். பெற்றோர் பார்த்துச் செய்து வைத்த திருமணம் தான் என்பது இருவரின் பெற்றோரின் பேச்சில்லிருந்து புரிந்தது. ஆனாலும் அவர்களும் திருமண நாள் குறித்தோ அது பற்றி விரிவாகப் பேசுவதையோ தவிர்த்தனர்.  

அலுவலகத்தில் கிடைக்கும் சுற்றுலாச் சலுகையில் இருவரும் இப்போது காசிக்கு வந்திருந்தோம். ராகவனின் பெற்றோர் காலமாகி விட்டனர். எனக்கு முதலிலேயே அப்பா காலம் ஆகி அம்மா இருந்தாள். அவளும் இரண்டு வருடங்கள் முன்னர் காலமாகிவிட முன்னோர்களுக்குக் காரியம் செய்ய வேண்டி இருவருமாகப் பேசித்திட்டம் போட்டுக் கொண்டு வந்திருந்தோம்.

காசிக்கு வந்ததில் இருந்து அந்த சாஸ்திரிகள் ஏற்பாடு செய்த வீட்டில் தான் தங்கி இருந்தோம். ஒரு பெரியவர் தான் சமையல் பண்ணிப் போடுகிறார். நன்றாகவே சமைக்கிறார். ஆனால் அவரைப் பார்த்தால் தொழில் முறை சமையல்காரராகத் தெரியவில்லை. ரொம்பப் பெரிய மனுஷராகவே தெரிந்தார். அவர் உடலும், ஆஜானுபாகுவான தோற்றமும் பளிச்சென்ற உடையும்! அவர் பிறப்பாலோ தொழில் முறையாலோ ஏழையோ, சமையல் காரரோ அல்ல என்பதை உணர்த்தியது. ஆனால் அவரிடம் இதை எப்படிக் கேட்க! தயக்கமாக இருந்தது. 

அன்று காலை செய்ய வேண்டிய பித்ரு காரியங்களை முடித்த பின்னர் கங்கைக்கரையில் போய்ப் பிண்டம் கரைக்கச் சென்றபோது படித்துறையில் அந்த மனிதர் உட்கார்ந்திருந்தார்.

 இரு கைகளையும் கூப்பிய வண்ணம் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக அவர் அமர்ந்திருந்த கோலம்! 




எனக்கு என்னவோ செய்தது. ஆனாலும் அவரை எதுவும் கேட்கவில்லை. நான் சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பி விட்டேன்.  என்னுடன் வந்திருந்த எங்கள் சிநேகிதர்களான ராகவனும் அவன் மனைவியும் கூட அன்றைய காரியத்தை முடித்துவிட்டுப் பிண்டம் கரைத்து விட்டு வந்தனர்.  

எப்போதும் கலகலவெனப் பேசும் சித்ரா அங்கே வந்ததில் இருந்தே அமைதியாக இருந்ததை அப்போது தான் கவனித்தேன். ராகவன் முகமும் சரியாக இல்லை.  அப்போது தான் அந்தப் பெரியவர் அதான் அந்த சமையல்காரப் பெரியவர் கங்கையிலிருந்து குளித்து முடித்த கோலத்தில் வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த ராகவன் மனைவி சித்ராவுக்கு ஏனோ முகம் மாறியது. 

ராகவனும் சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதும், ராகவன் அவளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொன்னதையும் கவனித்தேன். என் மனைவி கண்களால் என்னைக் கேள்வி கேட்க நான் உதட்டைப் பிதுக்கினேன்.

நானும் வந்ததில் இருந்து பார்த்து வருகிறேன். நாங்கள் இரு குடும்பங்களும் காசிக்குச் சென்று மூதாதையர்க்குச் செய்யவேண்டியதை நிறைவேற்ற வேண்டிக் கிளம்பும்போதெல்லாம் சித்ரா சாதாரணமாகத் தான் பேசிக் கொண்டு வந்தாள். ஆனால் இங்கே இந்தத் தங்குமிடம் வந்து அதிலும் அந்த சமையல்காரரைப் பார்த்ததும் அவள் சரியாக இல்லை என்பது புரிந்தது. 


ராகவனுக்கும் ஏதோ ஒரு கலக்கம் கண்களில் தெரிந்தது என்றாலும் சமாளித்துக் கொண்டு விட்டான். குசுகுசுவென்ற குரலில் சித்ராவிடம் ஏதேதோ பேசி அவளைச் சமாதானம் செய்வதும் புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. கணவன், மனைவிக்குள் ஆயிரம் அந்தரங்கம் இருக்கும். ஆனால் இது தனிப்பட்டதாய்த் தெரியாமல் அந்தப் பெரியவர் சம்பந்தப் பட்டதாய் இருக்குமோ?

ஆயிற்று! நாங்கள் வந்த வேலைகள் எல்லாம் நல்லபடி முடிந்து திரிவேணி சங்கமம், அக்ஷயவடம், கயா ஸ்ராத்தம் எல்லாம் முடித்து அன்று காலை தம்பதி பூஜையும் முடிந்து சாப்பாடும் ஆயிற்று. நாளைக் காலை கிளம்ப வேண்டும். இருவரின் பொருளாதார நிலையும் நன்றாகவே இருந்ததால் நாங்கள் இருவருமே விமானத்தில் தான் காசிக்கு வந்திருந்தோம். நாளைக்காலை ஒன்பது மணிக்குக் கிளம்பும் விமானத்தில் நாங்கள் கிளம்பவேண்டும்.  

அன்று மாலை தன் நாத்தனார் மற்றும் உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக வேண்டி கங்கைச் செம்பு இன்னும் வாங்க வேண்டும், ஏற்கெனவே வாங்கியது போதாது எனச் சித்ராவும் அவள் கணவரும் கிளம்பக் கூடவே என் மனைவியும் தானும் போய் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாள். எனக்கு அலுப்பு! அதோடு அடுத்த நாள் ஊருக்கும் கிளம்பணும். 

ஆகவே வாங்கிய பொருட்களை எல்லாம் சரியான முறையில் பாக்கிங் செய்து வைக்கணும் என்று வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். அப்போது அந்தப்பெரியவர் மீண்டும் அங்கே வந்தார். எங்களுக்குப் பயணத்தின் போது வழியில் சாப்பிட உணவு தயாரிக்க வேண்டுமா எனக் கேட்டார்.   அவரைப் பார்த்ததுமே சித்ராவின் கலக்கமும், ராகவனின் தடுமாற்றமும் நினைவில் வந்தது. மெல்ல அவரை அழைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சுக் கொடுத்து அவர் வாயிலிருந்து விஷயங்களை வரவழைக்க முயன்றேன்.

பெரியவர் பெருமூச்சுடன் சொன்னார். "நான் நல்ல வேலையில் இருந்து பணி ஓய்வு பெற்றவன். தெரியுமா?" என்றார்.

"அப்படித் தான் நினைத்தேன் சார்!"  இது நான்!

"நான் ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கேன் தெரியுமா?" அவர்

உங்களுக்கு உறவு என யாருமில்லை என்று சொன்னார்களே!" இது நான்.

பெரியவர் ஒரு கணம் என்னைப் பார்த்தார். பிறகு மெல்ல அந்தத் தங்குமிடத்தின் பின்னே இருக்கும் கங்கைக்கரையை நோக்கி நடந்தார். அடக் கடவுளே, மெல்ல மெல்லப் பேச ஆரம்பித்தவர் இப்போ எங்கேயோ போறாரே! சுதாரித்த வண்ணம் நானும் அவரைத் தொடர்ந்தேன். 

கரையோடு சிறிது தூரம் போன அந்தப் பெரியவர் குறிப்பிட்ட அந்தப் படித்துறை வந்ததும் படிகளில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு இரு கைகளையும் கூப்பிய வண்ணம் அழ ஆரம்பித்தார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

அவரைப் பார்த்து, "ஐயா! ஐயா! என்ன ஆச்சு?" என்று கேட்டேன். 

பெரியவர் என்னைப் பார்த்து, "ஐயா, கிடைத்தற்கரிய பொக்கிஷத்தைத் தவற விட்ட பெரும்பாவி நான்!" என்றார்.  நான் மௌனமாக இருந்தேன். சற்று நேரம் விம்மிய பெரியவர் மெல்லத் தானே பேசிக்கொள்வது போல் பேச ஆரம்பித்தார். அவர் கண் முன்னே இறந்த கால நிகழ்வுகள் தெரிகின்றன எனத் தோன்றியது. மெல்லத் தனக்குள்ளே பேசிக் கொள்பவர் போலப் பேசினார்.

"அது நடந்து 40 வருஷம் இருக்குமா? ஆமாம், இருக்கும்! நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பெரிய குடும்பம் என்றால் எண்ணிக்கையிலும் பெரிய குடும்பம். நான் ஒருத்தன் தான் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். என்னை நம்பி அப்பா, அம்மா, ஒரு தங்கை, இரண்டு தம்பிகள் இருந்தனர்.  என்னை விடப்பெரிய அக்காவுக்கும், அடுத்த தங்கைக்கும் திருமணம் ஆகி இருந்தது. 

அப்போது தான் என் பெரிய தங்கை மூலம் எனக்கு ஒரு வரன் வந்தது. அந்த வரனின் ஜாதகத்தைப் பார்த்து எல்லோருமே அந்தப் பெண் எனக்கு ஏற்றவள் என்றும், அவளால் என் குடும்பத்துக்கு முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் சொன்னார்கள். என் பெற்றோர் என்ன நினைத்தார்கள் என்பதைப் பற்றி நான் தெளிவாகக் கேட்டு அறிந்து கொள்ளவில்லை. 

பொதுவாக எல்லோருக்கும் சம்மதம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். பெண் பார்த்துப் பிடித்துப் போய்த் திருமணமும் நிச்சயம் ஆயிற்று.  என் கடைசித் தங்கை ஏனோ அழுது கொண்டே இருந்தாள். ஆனால் எனக்கிருந்த மனப்பூரிப்பில் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது எவ்வளவு தவறு என்பது பின்னால் தான் தெரிந்தது!"என்று சொன்ன பெரியவர் மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டார். முகத்தை மூடிக் கொண்டு சற்று நேரம் விம்மினார்.

"திருமணத்துக்கு முதல்நாள் சடங்குகள் முடிந்ததுமே எங்க அப்பா, அம்மா, அக்கா, தங்கைகள், தம்பிகள் நடுவில் ஏதோ கசமுச! வழக்கமான சம்பந்திக் குறைகளாக இருக்கும் என்று மிதப்புடன் நினைத்துக் கொண்டு பெண் வீட்டவரிடம்," எங்க பக்கத்து மனிதர்களை எல்லாம் சிறப்பாகக் கவனிக்க வேண்டும்." என்று கட்டளை போல் சொன்னேன். 

மறுநாள் காலை! சீக்கிரம் முஹூர்த்தம்! அப்போதே என் கடைசித் தங்கை, "ஓ"வென்று அழுவதாகச் சொல்லிக் கொண்டார்கள். எல்லோரும் சேர்ந்து அவளிடம் காரணம் கேட்டிருக்கிறார்கள். எதுவுமே சொல்லாமல் அழுது கொண்டிருந்திருக்கிறாள். என் அம்மாவின் முகமும் சரியாக இல்லை. கண்ணீர் பெருக ஊஞ்சலில் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ததும், என் அத்தைமார் அம்மாவைக் கண்டித்ததையும் கண்டேன். அப்போதும் எனக்கு ஏதும் புரியவில்லை. 


என் மேல் அளவு கடந்த ஆசை வைத்திருக்கும் என் அம்மா எனக்குக் கல்யாணம் என்றதும் சொல்லத் தெரியாமல் அழுகிறாள் என்றே நினைத்தேன்.   அவசரம் அவசரமாக அடுத்தடுத்து காசி யாத்திரை, மாலை மாற்றல், ஊஞ்சல் என நடந்து முடிந்து மணமேடைக்கும் வந்தோம். கல்யாணப் பெண் என்னருகே அமரும்போது தான் நடந்தது அது! 

என் கடைசித் தங்கை கல்யாணப்பெண்ணின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக மணையிலிருந்து அகற்றினாள். "என் அண்ணா பக்கம் உட்கார நீ யார்? உட்காரக் கூடாது!" என அவளை  அங்கிருந்து தள்ளிவிட்டாள். கல்யாணத்துக்கு வந்த மொத்தக் கூட்டமும் ஸ்தம்பித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு, " எங்க அண்ணா பக்கம் நாங்க தான் உட்காருவோம். நாங்க தான் அண்ணாவோடு பேசுவோம். அண்ணாவும் எங்களுக்குத் தான் எல்லாம் செய்வார்! நீங்க வந்து உங்க பெண்ணைக் கொடுத்து எங்களைப் பிரிக்க நினைக்கிறீங்களா? அது நடக்கவே நடக்காது!" என்றாள். 

ஆவேசமாகப் பேசியதால் அவளுக்கு மூச்சு இரைத்தது. என் அப்பா, அம்மா வாயே திறக்கவில்லை. பெண் வீட்டிலிருந்து யாரோ இதை முன்னாலேயே சொல்லி இருக்கலாமே, கல்யாண ஏற்பாடு பண்ணி இவ்வளவு தூரம் வந்தப்புறமா இப்படிச் செய்யலாமா எனச் சொல்ல, அப்போது என் அம்மாவோ, "நான் என்னவென்று சொல்லுவேன்!  நான் பெற்ற என் மூத்த பிள்ளையைத் தூக்கி உயிரோடு உங்க பெண்ணுக்கு தாரை வார்க்கணுமேனு நானே மன வேதனையில் இருக்கேன். நான் வாய் விட்டு அழவில்லை. எங்க பெண் அழுதுவிட்டு உண்மையையும் சொல்லி விட்டாள்".எனச் சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தார். 

அப்போது,"  உங்க பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணணும்னு நீங்க தானே எங்களைத் தேடி வந்தீங்க!" என என்கடைசித் தங்கை மறுபடி சொல்லப் பெண்ணின் தந்தை," என் பெண்ணுக்கு வரன் கிடைக்காமலா நான் இந்த சம்பந்தம் தேடி வந்ததாக நினைத்தீர்களா? இப்போவே என் பெண்ணுக்கு வேறு ஒரு பிள்ளையோடு திருமணம் செய்து வைக்கிறேன்." என்று சொல்லி விட்டார்.

உடனே என் அம்மாவும்," என் மூத்த பிள்ளையை உயிரோடு தூக்கி உங்க பெண் கையில் கொடுக்க நானும் தயாரில்லை." என்று சொல்லிவிட்டார். அவ்வளவு தான். அங்கே நிலவிய சூழ்நிலையே மாறி விட்டது.  திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள். நாதஸ்வரம் நின்று போயிற்று. சாஸ்திரிகள் மந்திரம் சொல்லுவதா, வேண்டாமா, மேலே சடங்குகள் நடக்குமா, நடக்காதா என்னும் சங்கடத்தில் இருந்தார். இதற்குள்ளாக சமையல்காரர்கள் வரை விஷயம் போய் அவர்களும் இங்கே என்ன நடக்கிறது எனப் பார்க்க வந்துவிட்டார்கள். 

பையனின் தந்தை வாய் திறந்து பேசுவார் என அனைவரும் எதிர்பார்க்க அவர் வாயே திறக்கவில்லை. அவருடைய சொந்தங்கள் எல்லாம் மேலே கல்யாணத்தை நடத்தலாம் என்னும்படிப் பேச அவரோ மனைவியைக் கூட்டிக் கொண்டு தங்கி இருந்த இடத்துக்குக் கிளம்பிவிட்டார். கூடவே அவர்களுடைய மற்றப் பெண்கள், பையன்களும்.

ஆனால் பெண்ணின் அப்பா அசரவே இல்லை.  பெண்ணின் சொந்தத்தில் ஓர் பிள்ளை ஏற்கெனவே பார்த்து வைத்திருந்தார்களாம். ஜோசியர் கருத்தின்படி   ஜாதகப்படி ஒரே தசை இருவருக்கும் நடப்பதால் மேற்கொண்டு முயற்சிக்க யோசித்து விட்டு விட்டார்களாம். கல்யாணத்திற்கு வந்திருந்தஅந்தப் பிள்ளையையே போய் அழைத்து வந்தார்கள். அவசரம் அவசரமாக மேலே காரியங்கள் நடந்தன. 

ஒன்பது மணிக்கு மேல் அடுத்த முஹூர்த்தத்தில் அந்தப் பிள்ளை நான் கல்யாணம் செய்துகொள்ள இருந்த பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டி என் கண்ணெதிரே சப்தபதி வந்து திருமணம் பூர்த்தி ஆனது. கண்ணீர் பொங்க அக்ஷதைகள் போட்டுத் திருமணத் தம்பதிகளை மனமார வாழ்த்தினேன். நாங்கள் எல்லோருமே தலை குனிந்து வெளியேறினாலும் என் அப்பா, அம்மாவைப்பொறுத்தவரை நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதையே விரும்புகிறார்கள் என்பதைச் சில நாட்களிலேயே புரிந்து கொண்டு விட்டேன்.

மெல்ல மெல்ல அடுத்த கடைசித்  தங்கைக்கும் திருமணம் ஆனது.  பெரிய தம்பி மற்றும் கடைசித் தம்பிக்கும் நானே பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தேன்.  

ஒரு முறை கடைசித்தங்கையின் மாமனார் உங்க பெரிய பிள்ளைக்கும் கல்யாணம் ஆகிப் பேரன், பேத்தி எடுக்க வேண்டாமா எனக் கேட்டதற்கு என் அப்பா, "அவன் மூத்த பிள்ளை. குடும்பப் பொறுப்பு இல்லையா? அவன் கல்யாணம் செய்து கொண்டு அவன் பாட்டைப் பார்த்துக்கொண்டு போனால் குடும்பத்தை யார் கவனிப்பார்கள்? இன்னும் சின்னவனுக்குக் குழந்தை பிறக்கவில்லை. உங்க மாட்டுப்பெண்ணுக்கு (கடைசித்தங்கை) குழந்தை பிறக்கவில்லை. பெரிய பொண்ணு 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தாகணும். இரண்டாவது பெண்ணுக்கும் குழந்தைகள் இருக்கின்றன. இத்தனை பொறுப்பையும் அவன் தானே சுமக்கணும்." என்றார். 

அதற்கு அந்த மாமா, என் பிள்ளையும், "மூத்த பிள்ளை தானே! நான் உங்க பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலையா?" என்று கேட்டதுக்கு என் அப்பா, "அது வேறே! இது வேறே!" என முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.  ஆனால் என் திருமணத்தைப் பற்றி அதற்குப் பின் வீட்டில் யாருமே பேசவில்லை. எனக்கும் திருமண ஆசைகள் இருக்கும் என்பதையே அவர்கள் புரிந்து கொள்ள மறுத்தார்கள். 

அம்மா இருந்தவரையிலும் எனக்குச் சமைத்துப் போட்டாள். அதன் பின்னர் தம்பி, தங்கைகள் வீட்டில் இருக்க முடியவில்லை. ஜாடைமாடையான பேச்சுக்கள். அவர்களின் தேவை எல்லாம் என்னிடம் இருந்த பணமே! அதை அப்படியே அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு எனக்கு வந்த பென்ஷனை மட்டுமே நம்பி இங்கே வந்தேன். இங்கே சாப்பாடு போட்டு வேலையும் போட்டுக் கொடுத்தார்கள். பணமும் கொடுக்கிறார்கள்.  ஆனாலும் மனம் நிறைவில் இல்லை. இன்னிக்கு உங்களோடு வந்தார்களே ராகவன், சித்ரா அவர்கள் தான் நான் சொன்ன பெண்ணும் அவள் கணவரும்.நான் தாலி கட்ட வேண்டிய சித்ரா வேறொருவன் மனைவியாக என் கண்ணெதிரே ஆகிவிட்டாள். இப்போதும் அதைநினைத்து நினைத்து என் மனம் வேதனைப் படும்.  இங்கே அவர்களைநேரில் பார்த்ததுமே எனக்கு என்னசெய்வதெனப் புரியவில்லை."

அவர் கதை அல்ல; அல்ல; உண்மை வாழ்க்கை நிகழ்வைக் கேட்ட நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திக்பிரமித்து நின்றேன்.மீண்டும் அவர் கைகள் கூப்பிக் கொண்டு, சித்ராவும் அவள் கணவனும் என்றென்றும் நல்வாழ்வு வாழ வேண்டும் எனப் பிரார்த்திக்க ஆரம்பித்தார். கங்கையையே பார்த்த நான் அது மேலே சலனமின்றி ஓடினாலும் உள்ளே கொந்தளிப்பு இருப்பதைப் போல் பெரியவரும் பார்க்க அமைதியாகத் தெரிந்தாலும் உள்ளே மனக் கொந்தளிப்புடன் இருக்கிறார் என்பதைப்புரிந்து கொண்டேன்.நீண்டபெருமூச்சு கிளம்பியது என்னிடமிருந்து.

71 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா......    நல்வரவு...    நன்றி,  வணக்கம்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ என்ன இது ஸ்கொட்லாந்தில வெயில் எறிக்குதே என்ன அதிசயம் எனப் பார்த்தேன்ன் கீசாக்கா கதை எழுதியிருக்கிறா அவ்வ்வ்வ்வ்வ்வ்:))..

      தன் கதைக்கு தானே முதல்ல குதிச்சும் இருக்கிறா:)).. துரை அண்ணனிடம் ரெயினிங் எடுத்திருப்பாவோ சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) மீ ரொம்ப அமைதியான பொண்ணு:))..

      நீக்கு
    3. ஹாஹாஹா!வாங்க, வாங்க! அமைதிச் சிகரம்! நாளைக்கு நாம ஒரு போட்டி வைச்சுப்போம்! யார் சீக்கிரம் வராங்கனு!

      நீக்கு
  2. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  3. ஹெஹெஹெ, நானே நானோ, யாரோ தானோனு நினைச்சுட்டேன். எல்லோரும் வந்துட்டுப் போகட்டும். மெதுவா வரேன். நெ.த. வார்த்தைகளை மாத்தியாச்சு! இப்போ என்ன பண்ணுவீங்க?

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக மலரவும் இறைவனை உளமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  காலை வணக்கம்.  வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. எத்தனை எத்தனை சுமைகள்...

    அத்தனையும் சுகமானவையா...
    சோகமானவையா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் தான் தம்பி! இதுவே அவர் நினைத்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தன் குடும்பக் கடமைகளை நிறைவேற்றி இருந்தால் சுகமான சுமைகளே!

      நீக்கு
  6. என்றென்றும் நல்வாழ்வு வாழவேண்டும்...

    இங்கே மனதில் கொந்தளிப்பு இருந்தாலும்
    அங்கே செல்வமும் சுகமும் செழித்து இருக்கட்டும்...

    அதுதான் மாசற்ற மனதின் தன்மை...

    பதிலளிநீக்கு
  7. கதையின் போக்கு மனதை அழுத்தினாலும்...

    அக்காவின் கைவண்ணம் அருமை..

    பதிலளிநீக்கு
  8. பெண்ணின் சம்பளம் போய்விடுமே என்று திருமணம் செய்துகொடுக்காமல் காலம் தள்ளுபவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன், பார்த்ததில்லை.

    மூத்தவனுக்குத் திருமணம் செய்துவைத்து தன்னோடுடனே வைத்திருப்பவர்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் திருமணமே செய்துகொடுக்காமல் இருந்தவர்களைக் கண்டதில்லை.

    தன் தங்கையின் வாழ்வுக்காகத் திருமணமே செய்துகொள்ளாமல் காலம் கடந்து திருமணம் செய்துகொண்டு வாழ்வைத் தொலைத்தவர்களின் கதை தெரியும்.

    இதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது, சிந்திக்க வேண்டியவர்களைச் சிந்தக்கவிடாமல் செய்வது எது, விதியா என்பது புரிவதில்லை.

    வித்தியாசமான கதை... கீசா மேடத்துக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூத்த பிள்ளையோ, மூத்த பெண்ணோ அடுத்தடுத்துத் தம்பி, தங்கைகள் இருந்தால் குடும்பத்துக்காகத் தியாகம் செய்யத் தான் வேண்டும். இதைப் பற்றிப் பல கதைகள் படித்திருக்கிறோம், கேட்டிருக்கோம் என்றாலும் உண்மைச் சம்பவங்களின் பாதிப்புத் தான் கதையாக வெளி வருகிறது! பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு

    2. //மூத்தவனுக்குத் திருமணம் செய்துவைத்து தன்னோடுடனே வைத்திருப்பவர்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் திருமணமே செய்துகொடுக்காமல் இருந்தவர்களைக் கண்டதில்லை.// எதுக்கோ வந்துட்டு இப்போத் தான் இந்தக் கருத்தைப் பார்த்தேன். அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொண்டவர்கள் அநேகமாய் மூத்த பிள்ளை திருமணம் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. எங்க சொந்தத்திலேயே இப்படி இருக்காங்க. அவ்வளவு ஏன்? என் அத்தையின் சில பிடிவாதங்களால் அவங்களோட மூத்த இரு பிள்ளைகளுக்கும் திருமணமே ஆகவில்லை. மூத்த பிள்ளை தனியாகப் போய் அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டு மறைந்து வாழ்ந்தார். இரண்டாவது பிள்ளை தாமதமாய்த் திருமணம் செய்து கொண்டு அம்மாவின் துர்ப்போதனையால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டுக் கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். மூன்றாவது பிள்ளைதான் விவாகரத்தான பெண்ணை தைரியமாகத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி ஒரு பெண்ணையும் பெற்றுத் திருமணமும் செய்து கொடுத்துப் பேரன், பேத்திகளோடு வாழ்ந்தார்.

      நீக்கு
  9. ஓடையையும் படித்துறையையும் வைத்து, அது கங்கைக் கரையின் படித்துறை என்று அடித்துவிடும் தைரியம் கீசா மேடத்துக்கே உரித்தான ஒன்று. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதே நினைத்தேன்..
      இப்படி ஏதாவது வரும் என்று...

      ஆனாலும் பொதுவாக கங்கை என்பது வழக்கம் தானே!...

      நீக்கு
    2. அது ஓடையில்லை நதி என்பதை ஓடும் போக்கும் சற்று தூரத்தில் காணப்படும் பாலமும் சொல்லுகிறது. கங்கை என்பதை ஓர் குறியீடாகத் தான் வைத்தேன். அவர்கள் சந்திப்புக்கு ஓர் இடமும், காரணமும் வேண்டும் அல்லவா?

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். தனக்கு கதை எழுத வராது என்று சொல்லிக் கொள்ளும் கீதா அக்காவின் கதையா? நல்ல மெஸேஜ் இருக்கும் என்று நினைக்கிறேன். வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பானுமதி, எதிர்பார்ப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வண்க்கம்.  கீதா அவர்களின் கதை மிகவும் சிந்திக்க வைப்பதகவும் நேர்த்தியான நடையுடனும் இருக்கிரது.  நெல்லைத்தமிழன் அவர்களே, நீங்கள் நல்லவர்களையே அறிவீர்கள் போலும்.  எங்கள் வீட்டிற்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது.  அக்கா பெண்ணை குடும்ப தலைவர் மணந்து கொண்டுள்ளார்.  மனைவிக்கு இரு தம்பிகள்.  நன்கு படித்டு நல்ல வேலையில் உள்ளவர்கள்.  இருவருக்கும் முறையே 30, 32 வயது இருக்கும்.  திருமண ஏற்பாடு எதுவும் நடக்கவும் இல்லை, நடக்க விடவும் இல்லை அக்காவும் அவள் கனவரும்.  தங்கள் 3 குழந்தைகளும் நன்கு முன்னேர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.  பொருத்து பொருத்து பார்த்து விட்டு, இரு தம்பிகளும் தாங்களே பெண் பார்த்து திருமணம் முடித்து இப்போது அமெரிக்காவில் வாழ்கின்றனர் சந்தோஷமாக.  இவை எல்லாவற்றிர்கும் அந்த அக்காவின் (தம்பிகளின்) பெற்றோர் உள்ளளவு.  ஆகவே, இந்த உலகத்தில் நிறைய சுயகாரிய புலிகள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இனிய காலைப்பொழுது புலர உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள். ரமா ஸ்‌ரீனிவாசன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் இதனைப் படித்தேன்.

      ஒருவேளை, மனைவியின் தம்பிகளுக்கு தாங்கள் திருமணம் செய்துவைத்தால், தங்கள் காசு கரைந்துவிடும் என்பது காரணமாக இருக்குமோ? இருந்தாலும் சொந்த அக்காவின் வாரிசுகள்தானே. தான் தாய்மாமன் முறை என்றிருக்கும்போது அவங்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி செய்வதில் என்ன பிரச்சனை இருந்துவிட முடியும்?

      மக்களில் பலர் சுயகாரியப் புலிகள் என்பது உண்மைதான். என் நண்பனின் மாற்றாந்தாய் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். நண்பனோ இந்துப் பெண்ணை மணக்க விரும்பினான். அதனால் அந்த மாற்றாந்தாய் அவனுக்கு ஏற்ற பெண்ணைப் பார்க்க மறுத்துவிட்டார். அவனின் அப்பாதான் கிடைத்த ஒரு சம்பந்தத்தைப் பார்த்து அவனுக்கு மணம் முடித்துவைத்தார் (ஒன்றையும் கேட்டுக்கொள்ளாமல்). அவனே, தன் திருமணத்திற்கு முழுச் செலவும் செய்தான் (பெண் வீட்டில், எங்க சமூகத்துல மணமகன் வீட்டார்தான் செலவு செய்யணும் என்று சொல்லிவிட்டார்கள்).

      கீசா மேடம் நிறைய கசப்பான சம்பவங்களைப் பார்த்திருக்கிறார், கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்தக் கதை உருவாகியிருக்கிறது. ஆனாலும் இவ்வளவு சுயநலமாக இருப்பார்களா?

      நீக்கு
    2. வாங்க ரமா ஸ்ரீநிவாசன், உங்களைப் பார்த்ததில்லை என்றாலும் உங்களைப் பற்றிய அறிமுகம், ரேவதி, பானுமதி, ஸ்ரீராம் ஆகியோர் மூலம் கிடைத்தது. விரைவில் நாம் சந்திப்போம் என நினைக்கிறேன். (அப்போ ஏதானும் உறவு கூடக் கண்டுபிடிக்கலாம்.) நெல்லைத் தமிழன் மட்டுமில்லை, பலரும் சின்னச் சின்ன விஷயங்களையே பெரிய துன்பமாக நினைப்பதால் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி நம்புவதில்லை. நீங்கள் சொல்லுவது அக்கா, தம்பிகளுக்குச் செய்த கொடுமை. இது போல் இன்னொன்றும் எங்கள் நட்பு வட்டத்தில் நடந்தது. துபாய் போய்ச் சம்பாதித்த தம்பி தன் 40 வயதில் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்குக் குழந்தை பிறக்கக் கூடாது என சகோதரிகள் நினைத்த கொடுமையை எங்கே போய்ச் சொல்ல! குழந்தை அதையும் மீறிப் பிறக்க அந்தக் குழந்தைக்கு எது வாங்கினாலும் தங்கள் குழந்தைகளுக்குச் செய்யவில்லை என்று சண்டை போடுவார்கள். நேற்று வந்தவள் அனுபவிக்கிறாளே எனப் பொருமுவார்கள். எல்லாம் பார்த்துக் கேட்டாச்சு! :)

      நீக்கு
    3. இருப்பாங்க, இன்னுமும் இருக்காங்க நெல்லைத்தமிழரே, தனக்குத் திருமணம் செய்து வைக்கப் பாடு பட்ட மன்னியையே புக்ககம் போனபின்னர் மட்டமாகப் பேசி அவமானம் செய்த நாத்தனாரை அறிவேன். புக்ககத்தினரிடம் தன் மன்னிக்கு அவங்க வீட்டில் எதுவுமே செய்யலை என்றும் வேலைகள் செய்யவும் தெரியாது என்றும் நிஜம்போலச் சொல்லி அவமானம் செய்த நாத்தனார்களும் இருக்காங்க!

      நீக்கு
  12. //மீண்டும் அவர் கைகள் கூப்பிக் கொண்டு, சித்ராவும் அவள் கணவனும் என்றென்றும் நல்வாழ்வு வாழ வேண்டும் எனப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்//

    இந்த நிலையிலும் ???
    இதுதான் நல்ல ஆத்மா நான் தவற விட்ட பெண்களை(?) கண்டு இப்படி பலமுறை பிரார்த்தித்தது உண்டு.

    இப்படி பெற்றோர்களும் இருக்கின்றார்கள் சிலர் கல்யாணம் செய்து வைத்து வாழ விடுவதில்லை.

    அவ்வகையில் இங்கு ஓர் ஆண் மகனின் வாழ்வு சீரழிந்து விட்டது.

    காசிக்கு சென்ற சித்ரா தம்பதியினர் கர்மத்தை கலையாமல் கவலையை சுமந்து திரும்புவது வேதனையே...

    புகைப்படத்தை சரியான வகையில் உபயோகப்படுத்திய உங்களது திறமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி, இது எங்கள் ப்ளாகில் ஓடிக்கொண்டிருந்த போதே எழுதிய கதை. அனுப்பலாமா வேண்டாமானு யோசித்து யோசித்து ஸ்ரீராமுக்கு அனுப்பிப் பின்னர் போட வேண்டாம்னு சொல்லி, பின்னர் மறுபடி திருத்தி எழுதி அனுப்பி! இஃகி,இஃகி,இஃகி என்றாலும் விடாமல் போட்ட ஸ்ரீராமுக்கு என் நன்றி.

      நீக்கு
  13. பெண்ணின் சம்பளம் போய்விடுமே என்று திருமணம் செய்துகொடுக்காமல் காலம் தள்ளுபவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்,//

    எனக்கு தெரிந்த குடும்பத்திலும் மூத்த மகனை இவ்வாறு தனி மரமாக நிற்க வைத்துவிட்டார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் என்ன ஆண் என்ன, யாராக இருந்தாலும் 40 வருஷங்கள் முன் வரை மூத்த பிள்ளையாகப்/பெண்ணாகப் (அதுவும் வேலைக்குப் போகும் பெண் எனில்) பிறப்பதே தப்பு. பூனை தன் முதல் குட்டியை விழுங்கி விடும் , மற்றக் குட்டிகளின் ஆரோக்கியம் பாதுகாப்புக்கு என்பார்கள். என்னால் இதை நம்ப முடியவில்லை என்றாலும் மனிதரில் பலர் சுயநலக்காரர்கள் தான். மூத்த பிள்ளை கல்யாணமே செய்துக்காமத் தன் அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகளைப் பார்த்துக்கணும், அவங்களுக்கே தன் சம்பாத்தியத்தைச் செலவு செய்யணும் என நினைத்த/நினைக்கும் தாய்மார்களே அதிகம். இதை எல்லாம் பார்க்கையில் எனக்குத் தாய்மை பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதை நினைத்துச் சிரிப்பு வரும்.

      நீக்கு
  14. கதை அல்ல நிஜம் என்று தோன்றுகிறது. மனதை என்னவோ செய்து விட்டது. இப்படிப்பட்ட சுயநலமிகளான பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். சிறப்பான நடை. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பானுமதி, கதையல்ல நிஜம்! கதையாகப் படிக்கும்போதே உங்கள் மனதையே என்னவோ செய்து விட்டது எனில்! நேரில் அவர்களைப் பார்த்திருந்தால்!

      நீக்கு
  15. வாழ்வின் யதார்த்தம். மனதில் சுமை ஏறியதைப் போன்ற உணர்வு. இந்த புகைப்படத்தை முன்பொரு முறை பார்த்த நினைவு. இதே கதைக்கா, வேறு கதைக்கா என்று தெரியவில்லை.
    இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முனைவர் ஐயா! இந்தப் படத்தைக் கொடுத்து இதற்கேற்ற கதையை எழுதும்படி ஸ்ரீராம் எல்லோரையும் கேட்டிருந்தார். பலரும் எழுதினார்கள். அப்போப் பார்த்திருக்கலாம் இந்தப் படத்தை. நானும் அந்தச் சமயம் எழுதினது தான். இப்போத் தான் ஸ்ரீராமுக்கு அனுப்பினேன்.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. கதை படித்து முடித்ததும் மனம் கனத்து போனது.
    இப்படியும் பெற்றோர்கள், தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
    சுயநலம் பெருகி வருகிறது.

    பெரிய தங்கை அவருக்கு வரன் பார்த்து இருக்கிறார் அப்போது அவர் நல்லவர் போலும்.
    சிறியவர்களும் , பெற்றோர்களும் தங்களுக்கு உழைக்க ஒரு ஆள் வேண்டும் என்று அவர் திருமணத்தைப்பற்றியே கவலை படாமல் இருந்து இருக்கிறார்கள். இப்படி தன்னையே வருத்திக் கொண்டு உழைத்தாலும் மதிப்பும் மரியாதையும் இல்லை. அப்புறம் ஏன் அவர் அங்கு இருக்க வேண்டும் அது தான் காசி வந்து விட்டார் போலும்!

    படக்கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கீதாவிற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பெரிய தங்கை தான் அந்தக் குடும்பத்திலேயே தனி ரகம். அண்ணா நன்றாக இருக்க வேண்டும் என முழு மனதுடன் நினைத்தவர். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது! எல்லோரையும் கஷ்டப்படுத்தி விட்டேனோ என்று வருத்தமாக இருக்கிறது. வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  18. நல்லதொரு கதை. பாராட்டுகள் கீதாம்மா...

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரி

    அருமையான கதையை தந்துள்ளீர்கள். படிக்கும் போது நதியின் கொந்தளிப்பு எனக்குள்ளும் எழுகிறது. குடும்பத்துக்காக உழைத்தவர் வாழ்வு சிறக்க வேண்டுமென அனைவரும் நினைக்காவிடினும், அந்த பெற்றெடுத்த அம்மாவின் மனமுமா கொஞமும் ஈரமில்லாமல் போயிற்று? இப்படியும் சிலர் உலகத்தில் இருக்கிறார்கள் போலும்...! விசித்திரமாக உள்ளது. ஆனாலும் படித்துப் பின் மனதுக்கு விசாரமாகவும் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா, சில அம்மாக்கள் அப்படித்தான். தனக்குப் பிறந்த கடைசிக்குழந்தைகளின் வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக நினைப்பார்கள். அதற்கு மூத்த பிள்ளை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தான் அனுபவித்த சுகத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கக் கூடாது என நினைக்கும் தாய்மார்களை என்னவென்று சொல்லுவது! தன் மூத்த பிள்ளையும் சுகமாக வாழவேண்டும், நம்மால் பிள்ளைக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது எனக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தான் குறைத்திருக்கலாம் என்று தோன்றாதா? இதான் என் மனதில் அடிக்கடி தோன்றும் கேள்வி!

      நீக்கு
  20. இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கிறார்கள்... பெரியவரின் மனம் போல் கனக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டிடி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. எல்லோரும் மனம் கனத்துவிட்டது என்று சொல்லுவதைப் பார்த்தால் இதை அனுப்பி இருக்க வேண்டாமோ எனத் தோன்றுகிறது! :(

      நீக்கு
  21. இதென்ன விபரீதம் இத்தனை சுயநல வாதிகளா பெற்றோர்? மீண்டும் வருகிறேன். மனம் நிறைந்த பாராட்டுகள் கீதா மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லி, இருக்காங்க, இருந்தாங்க! அவங்க மனம் போல் மாங்கல்யம்! பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  22. நல்லதொரு கதை அக்கா....
    இப்படிப்பட்ட பெற்றோர், சகோதர, சகோதரிகளும் இருக்கிறார்களோ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க குமார், அம்மாவே இருக்கும்போது சகோதர, சகோதரிகள் இருக்க மாட்டாங்களா? அண்ணன் மூலம் எல்லா உதவிகளையும் பெற்றுக்கொண்டு அண்ணன் மனைவி, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தும் மைத்துனர்மார்கள், நாத்தனார்மார்கள் உண்டு! இங்கே அண்ணன் தான் கல்யாணமே செய்துக்கலையே!செய்துக்க விடலை!

      நீக்கு
  23. மனம் கனத்தது. நஜமாகத்தான் நடந்திருக்க வேண்டும். இப்பொழுது நினைவுக்கு வருகிறது. கும்பகோணத்தில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் ஒரு குடும்பத்தில் ஒர்அண்ணா. இப்படி இருந்தார் ஆனால் அவருக்கு 50 வயதில் திருமணம் செய்ய வாய்பபு கிடைத்தது. பிறகு குழந்தையும் பிறந்தது.
    அவரும் தங்கை தம்பிகளுக்கு செய்தே அலுத்து விலகினார். இந்தக் கதையின் நாயகன்இப்படி ஏமாந்தது எவ்வளவு வருத்தம்?! மிக அருமையாகக் கதையை நகர்த்திய. விதம். நெகிழ வைக்கிறது. வாழ்ததுகள் மா. அனைவருக்கும்்இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லி, தம்பி, தங்கைகளுக்குச் செய்வது தப்பில்லை. அரவணைத்துக் கொண்டு போக வேண்டும் தான். ஆனால் அண்ணனையும், அவர் மனைவி, குழந்தைகளையும் வீட்டில் ஒருவராக நினைத்து மதிக்க வேண்டாமா? வேணும்னே அவங்களை வீட்டு வாசலில் நிறுத்திக் கதவைத் திறக்காமல் உள்ளே இருந்து சிரிப்பார்கள். இப்படிப் பட்ட ஆட்களும் உண்டு!

      நீக்கு
  24. யதார்த்தமான கதை. தங்கு தடையில்லாமல் சொன்ன விதம் எல்லாமே பிரமாதம்.

    தொடர்ந்து அந்தப் பெரியவர் தன் கதையைச் சொன்ன விதத்திற்கு மற்றாக வேறு மாதிரி என்ன செய்திருக்கலாம் என்ற யோசனையே ஓடியது.

    எங்கள் பிளாக்கில் எப்பவோ பார்த்த படத்திற்கு மிகப் பொருத்தமான கதைப் பின்னல் என்பது மட்டும் நிச்சயம். வாழ்த்துக்கள், கீதாம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார், நான் இதை எழுதி வைத்திருக்கும்போதும் சரி, ஸ்ரீராமுக்கு அனுப்பிய போதும் சரி, நீங்க என்ன சொல்லுவீங்க என்ற எதிர்பார்ப்பில் தான் இருந்தேன். வேறு மாதிரியும் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அது சரியா இருக்குமானு தெரியலை. வாழ்த்துகளுக்கும் மனமுவந்த பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  25. கீசாக்காவுக்கும் கதை எழுதத் தெரியும் என்பது எனக்கு இப்போதானே தெரியும்:)[பாருங்கோ இப்போ மின்னல் முழக்கம் எல்லாம் வரும்:)), அம்பேரிக்கா அதிரப்போகுது:))]... கதாசிரியரின் பெறாமகள் என்பது தெரியும், இருப்பினும், சில இடங்களில் கதாசிரியரின் மகளுக்கே கதை எழுத வராது.. அப்போ கீசாக்காவுக்கு எப்பூடி வரும் என நினைச்சிருந்தேனே அது டப்பா?:)..

    பழைய தாத்தா புதுவருடத்திலும் அதே படிக்கட்டிலிருந்துகொண்டே நம்மை ஆட்டிப் படைக்கிறாரே:)).. இந்தப் படத்தை எல்லோரும் மறந்திட்டினம் என நினைச்சேன்... இன்னும் தொடர்கிறார்.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அப்போ கீசாக்காவுக்கு எப்பூடி வரும் என நினைச்சிருந்தேனே அது டப்பா?:)..//

      டப்பே இல்லை அதிரடி, கதாசிரியரின் சொந்தம் என்பதால் எனக்கும் எழுத வருதுனு நினைக்கிறீங்க பாருங்க! அதான் அநியாயம், அக்கிரமம், அராஜகம், நான் போய்க் காவிரியில் விழலாம்னா இங்கே அம்பேரிக்காவில் உட்கார்ந்திருக்கேன்! :P:P :P :P

      நீக்கு
  26. ஆவ்வ்வ்வ் வித்தியாசமாக எழுதியிருக்கிறா கீசாக்கா, இது ஒருவேளை எங்காவது நடந்த உண்மைச் சம்பவமாகக்கூட இருக்கலாம் என எண்ணுகிறேன்.

    ஆனா சில வீடுகளில், இப்படி தம் தேவைக்காக பிள்ளையை, மூத்த உழைக்கும் மகளை, தம்மோடு அதிககாலம் வச்சிருக்க விரும்புவதாக கதைகளில் படிச்சதுண்டு.. இருப்பினும், ஒரு குடும்பமும் மொத்தமாக சேர்ந்து இப்படி நடக்குமோ.. குடும்பத்தில் ஒருவராது சப்போர்ட்டுக்கு இல்லாமல் போய் விட்டதே அவருக்கு.

    அழகாக எழுதியிருக்கிறீங்க கீசாக்கா.. வாழ்த்துக்கள். இடையில ரெண்டு தரம் படிச்சேன், ஏனெனில் வழமையாக, முன்னாள் காதலிதானே ஓடிவந்து திருமணத்தை நிறுத்துவா:).. இது தங்கை என்றதும் குழப்பமாகி மீண்டும் படிச்சுத் தெளிவானேன் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச் சிகரம், உண்மையில் நீங்க நேரில் பார்த்திருந்தால் பொயுங்கி இருப்பீங்க. கல்யாணம் நிச்சயம் செய்யும்போதே அழுகை, மூத்த சகோதரிக்குத் தன் தம்பி கல்யாணம் செய்து கொண்டு குழந்தை, குட்டிகள் பிறந்தால் தன் குழந்தைகளின் முக்கியத்துவம் போயிடுமேனு நினைப்பு, மற்றவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை, தங்களுக்குச் செய்ய வேண்டியது என்னும் நினைப்பு மட்டுமே! மற்றபடி அண்ணனையோ அண்ணன் மனதையோ அவர்கள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்கும்படி அந்தத் தாயும் விடவில்லை. அண்ணா கல்யாணம் செய்து கொண்டு மனைவியோடு போயிட்டான் எனில் நம்ம கதி என்ன ஆகும் எனச் சொல்லிச் சொல்லிக் குழந்தைகளைத் தூண்டியதே அவர் தான்! கேட்கவோ நினைக்கவோ கசப்பாக இருந்தாலும் உண்மை அது தான்.

      நீக்கு
  27. இதுக்குத்தான் எப்பவும் கண்ணதாசன் அங்கிளின் ஆதரவோடு நான் சொல்வது, நமக்கு கிடைச்சிருப்பது ஒரு வாழ்க்கை, இந்த ஜென்மம் போயிட்டால் அடுத்து எதுவும் நமக்கு தெரியாது, அதனால கிடைச்ச வாழ்க்கையை, நமக்காகவும் வாழ வேண்டும்.. எப்பவும் தியாகம், பொதுச்சேவை என சொல்லிக்கொண்டிருந்தால், காலம் போனபின்னர்தான் கலங்க வேண்டும்.

    எல்லோரையும் கவனிக்கத்தான் வேண்டும், அத்தோடு நம்மையும் கவனிக்கோணும்... அடுத்தவர்களுக்காக வாழ முன் நமக்காகவும் நாம் வாழ வேண்டும். இளமையில் எதுவும் புரியாது, பெரிய தியாகிபோல எண்ணத்தோணும், ஆனால் அதன் பலனையும், எல்லோரும் கைவிட்டு விட்டார்களே எனும் கவலையும், முதுமையில்தான் நம்மை வாட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்லுவது உண்மையே! பெரியவருக்கு மனோ தைரியம் இல்லை. தாய், தந்தையை மீறிக் கல்யாணம் செய்து கொள்ள மனம் சம்மதிக்கவில்லை. கடைசியில் அவருக்குப் புரிந்த போது காலம் கடந்து விட்டது!

      நீக்கு
  28. கீசாக்கா கதை தான் எழுதி இருக்கிறார். உண்மை சம்பவம் என்று சொல்லவில்லை. கொமெண்ட்ஸ் போட்டவர் எல்லோரும் உண்மை சம்பவம் ஆக்கி விட்டார்கள். காரணம் கீசாக்கா எப்போதும் கட்டுரை , மற்றும் வியாக்யானம் மற்றுமே எழுதி வந்தார். அதனால் கதையும்  சம்பவம் ஆகிவிட்டது. Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ இது ஜேகே ஐயாவோ? சொன்னதும் பெயரை மாற்றிவிட்டார்ர்ர்ர் ஹா ஹா ஹா...

      நீக்கு
    2. எல்லோருக்கும் புரிந்தது உங்களுக்குப் புரியவில்லை ஜேகே அண்ணா! நான் கதைகளும் எழுதி இருக்கேன். ஒரு தொடரே கிட்டத்தட்ட அதுவும் குடும்பக் கதை! மாமியார் படுத்தல் சம்பந்தப் பட்டது தான்! எழுதினேன். அதன் முடிவைப் பின்னூட்டத்தில் வாசகர்கள் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாய் யூகம் செய்து சொல்லிக் கொண்டிருந்தனர். ஜீவி சாரும் ஒரு முடிவை எனக்கு எழுதினார். ஆனால் நான் எனக்குத் தோன்றியபடியே முடித்தேன். ஓர் ஆங்கில நாவல், ஆங்கிலப் படம் ஆகியவற்றின் கதையைக் கூட எழுதி இருக்கேன்.

      நீக்கு
  29. ஆஆஆவ் !!! இன்னிக்கு கீதாக்கா கதையை காலைலயே  போனில் படிச்சிட்டேன் :) தமிழ் fonts இல்லாததால் இப்போதான் கமன்ட் போட முடிஞ்சது .கொஞ்சம் நாள் காணாம  தாத்தாவை கொண்டு வந்துட்டாங்க கீதாக்கா .உண்மையில் பல இடங்களில் நடக்கும் ஒன்றைத்தான் கதையாய் எழுதியிருக்கீங்க கீதாக்கா .சுயநலகிருமிகள் நிறைய பேர் இருக்காங்க இவ்வுலகில் ..தன் மருமகளை மகனுடன் வாழ விடாது இரண்டாம் நாளே துரத்தியவர் பற்றி அறிவேன் . மணமேடை வந்து திருமணம் நின்றுபோனதில்  தாத்தாவுக்கு    எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும் .
    ராகவனும் சித்ராவும் 60 ஆம் கல்யாணத்தை விமரிசையா கொண்டாடி படமெடுத்து மகிழட்டும் ..
    அது சரி அந்த கதையை அதான் பெரியவரிடமிருந்து உண்மையை அறிந்தவர் ராகவனின் நண்பர் பெயர் ??? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல், வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்களோட வேலை மும்முரத்தில் இங்கேயும் வந்து கருத்துச் சொன்னது மனம் மகிழ்வாக இருக்கிறது. தாத்தாவை நான் ரொம்ப நாட்கள் முன்னேயே கொண்டு வந்திருக்கணும். இதுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ என்று எண்ணியே சும்மா இருந்தேன். எல்லோரும் சொல்லி இருக்கிறதைப் பார்த்தால் எனக்கும் எழுத வரும் என நம்பிக்கை வந்திருக்கிறது.

      நீக்கு
  30. அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  31. எங்கள் ப்ளாக் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரின் பிரச்னைகளும் தீர்ந்து உடல் நலமும் ஆரோக்கியமா இருக்கப் பிரார்த்திக்கிறோம்.

    கீதா & சாம்பசிவம்

    பதிலளிநீக்கு
  32. மனதை கனக்கச் செய்தது.சுயநலக்காரர்கள் பெருகிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!