வெள்ளி, 19 ஜூன், 2020

வெள்ளி வீடியோ :  ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் உண்மையை அதிலே உறங்க வைத்தான்

k. சங்கர் இயக்கத்தில் 1965 ஆம் வருடம் வெளியான திரைப்படம் பஞ்சவர்ணக்கிளி.   இரட்டையர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மிக இனிமையான பாடல்களைக் கொண்ட படம்.



ஜெய்சங்கர் இரட்டை வேடங்களிலும், மற்றும் முத்துராமன், கே ஆர் விஜயா, நாகேஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம்.



No Man Of Her Own என்று 1950 இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவான படமாம் இது!



இந்தப் படத்திலிருந்து கண்ணன் வருவான் பாடல்தான் எனது தெரிவு, ஸ்டார் பாடல்.  ஆனாலும் மற்ற பாடல்களைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் எனும் அழகான சுசீலாம்மாவின் பாடலும் உண்டு.  தமிழுக்கும் அமுதென்று பேர் என்னும் பாரதிதாசன் பாடல் தவிர மற்ற பாடல்களை வாலி எழுதி இருக்கிறார்.  



முதலில் பி சுசீலா குரலில் பாரதிதாசன் பாடல்.

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் 
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் 
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!  

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் 
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் 
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் 
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!  
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத் 
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! 

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் 
எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!  
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் 
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! 
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் 
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


அடுத்து இதையே சற்றே மாற்றி அவளுக்கும் தமிழென்று பேர் என்று வாலி எழுதி இருக்கும் பாடல்.



டி எம் எஸ் குரலில் அருமையாக அமைந்திருக்கும் பாடல்.

அவளுக்கும் தமிழ் என்று பேர் 
என்றும் அவளெந்தன் உள்ளத்தில் 
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்  
அவளுக்கும் தமிழ் என்று பேர் 
என்றும் அவளெந்தன் உள்ளத்தில் 
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்  

அவளுக்கு நிலவென்று பேர் 
வண்ண மலர் கொஞ்சும் குழல் அந்த முகிலுக்கு நேர் 
அவளுக்கு குயிலென்று பேர் 
அந்த குயில் கொண்ட குரல் கண்டு கொண்டாடும் ஊர் 
அவளுக்கு அன்பென்று பேர் 
அவளுக்கு அன்பென்று பேர் 
அந்த அன்பென்ற பொருள் நல்ல பெண்மைக்கு வேர் பெண்மைக்கு வேர்

 அவளுக்கும் தமிழ் என்று பேர் என்றும் அவளெந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர் அசைகின்ற தேர்  

அவள் எந்தன் அறிவுக்கு நூல் 
அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல் 
கவிதைக்கு மேல் 
அவளுக்கு அழகென்று பேர் 
அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்
 உழுகின்ற ஏர்  

அவளுக்கும் தமிழென்று பேர் என்றும் 
அவளெந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர் 
அசைகின்ற தேர்  

அவளுக்கு உயிர் என்று பேர் 
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும் வயலுக்கு நீர் 
வயலுக்கு நீர் 
அவள் எந்தன் நினைவுக்கு தேன் 
இந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான் 
அவள் எந்தன் நினைவுக்கு தேன் 
இந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான்  
அவளுக்கும் தமிழென்று பேர் 
என்றும் அவளெந்தன் உள்ளத்தில் 
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்




இனி நான் சொல்ல வந்த பாடலான கண்ணன் வருவான் பாடல்.  இதுவும் பி சுசீலா பாடிய பாடல் என்றாலும் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று.



கண்ணன் வருவான் கதை சொல்லுவான் 
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான் 
குழலெடுப்பான் பாட்டிசைப்பான் 
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான் 
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்  

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க 
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க 
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க 
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க 
முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க  
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே 
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே 
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே 
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே  
ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ ஆராரோ 
ஆரிராரி ராரிராரி ராரிரோ ஆரிராரி ராரிராரி 
ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ  

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் 
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் 
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் 
உண்மையை அதிலே உறங்க வைத்தான் 
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்  
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே 
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே 
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே 
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே  
ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ ஆராரோ 
ஆரிராரி ராரிராரி ராரிரோ ஆரிராரி ராரிராரி 
ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ




122 கருத்துகள்:

  1. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல்களை இன்று வழங்கியிருக்கின்றீர்கள்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. தமிழுக்கும் அமுதென்று பேர்!...

    இதற்குமேல் என்ன சொல்வது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லலாம்!

      நீக்கு
    2. தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் வந்ததால் இந்த படம் & பாடல், அப்போது பட்டி தொட்டி எல்லாவற்றிலும் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது.

      நீக்கு
  5. கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க..
    கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க!...

    என்ன ஒரு குறும்பு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் குறலைச் சொல்லுங்கள்...   

      முத்தம்  கொடுக்க...  முத்தம் கடுக்க...  முத்தம் கொடுக்க...

      நீக்கு
  6. பனி பெய்யும் மாலையிலே
    பழமுதிர்ச் சோலையிலே
    கனி கொய்யும் வேளையிலே
    கன்னி மனம் கொய்து விட்டான்!..

    மற்றொரு இனிய சந்தர்ப்பத்தில்
    இந்தப் பாடலையும் பதிவிடுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      மிகப் பிடித்தது. டி எம் எஸ்ஸின் அவளுக்கும் தமிழென்று பேர்.
      மிக உணர்ச்சி ததும்பும் குரலில்
      பாடி இருப்பார்.
      முத்துராமனின் முக பாவங்களும், விஜயாவின் ரி ஆக்ஷனும்
      அத்தனை அருமை.

      அடுத்த தேர்தல் கண்ணன் வருவான்.
      மிகப் பிரபலம். மதுரையில் பார்த்த படம்.
      கண்ணன் பிறந்த நாளுக்குக் கண்டிப்பாக ஒலிபரப்பாகிவிடும்.:)

      தமிழுக்கும் அமுதென்று பேர்..சுசீலாம்மாவின் குரலுக்காகவே
      வந்த பாடல். கேட்கவே அமுதம்.
      ஓஹோ. இதுவும் இன்னோரு படத்தை முன்னோடியாகக் கொண்டதா.!!
      புது செய்தி.....விஸ்வனாதன் ராமமூர்த்தியின் இணைப்பில்
      எத்தனை நல்ல பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
      இசைக்காகவே ஒரு புதிய வலைப்பூ ஆரம்பித்திருக்கிறேன்.
      பிடித்த பொக்கிஷப் பாடல்களை அதில் பதிவேற்ற ஆசை.
      பார்க்கலாம் எவ்வளவு சேமிக்கிறேன் என்று.:)

      நீக்கு
    2. அன்பு துரைக்கும் இனிய காலை வணக்கம்.
      அழகன் முருகன் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த பாடல்.
      எங்கம்மாவிடம் சிறு திட்டலும் கிடைத்தது.
      உறவினர்கள் கூடி இருக்கையில்
      ஒரு பதினேழு வயது பெண் இதைப் பாடுவது
      பலவித புருவங்களை உயர்த்தியது.

      வாதாபி கணபதிம் பாடக்கூடாதோ???:)))

      நீக்கு
    3. ஓ!...

      ///வாதாபி கணபதிம் பாடியிருக்கக் கூடாதோ!..///

      அருமை.. அருமை..

      வாதாபி கணபதியே நெஞ்சகத்தின் உள்ளிருந்தபடி - இந்தப் பாடலைப் பாடு.. குழந்தாய்!...

      என்று அருளியிருக்கலாம்...

      நீக்கு
    4. ஹாஹாஹா, ரேவதி, நானும் சில பாடல்கள் மூலம் வீட்டில் திட்டல்/பெயர் எல்லாமும் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கேன்.

      நீக்கு
    5. ரேவதி, உங்களைப் போலவோ ஸ்ரீராமைப் போலவோ வலைப்பூக்களில் எல்லாம் பிடித்த பாடல்களைச் சேர்ப்பதோ பகிர்வதோ இல்லை. ஆனால் பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க வேலைகள் செய்து கொண்டிருப்பேன். அவற்றில் பிடித்த பாடல்களும் அடங்கும். ஒரு காலத்தில் பினாகா கீத்மாலா, சென்னை வானொலி 2 இல் வரும் திரைப்படப் பாடல் நிகழ்ச்சி, ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் போடும் சுசித்ராவின் குடும்பத்தில் வரும் பாடல்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.

      நீக்கு
    6. //மற்றொரு இனிய சந்தர்ப்பத்தில்
      இந்தப் பாடலையும் பதிவிடுங்கள்...//

      பதிவிலேயே அந்தப் பாடலுக்கும்  லிங்க் கொடுத்திருக்கிறேன்...   வரிகளைத் தொட்டுப் பாருங்கள்...

      நீக்கு
    7. வாங்க வல்லிம்மா...    இனிய வணக்கம்.  ஓஆடலும் படமும் நினைவாற்றல் குமிழியிட்டு மேலே வந்து விட்டது போல...  ரசித்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    8. கீதா அக்கா...  பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்பதே தகவல் எனக்கு!!!

      நீக்கு
    9. //நானும் சில பாடல்கள் மூலம் வீட்டில் திட்டல்/பெயர் எல்லாமும் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கேன்.// பாடலை விடுங்கள், அரங்கேற்றம் படம் வந்த சமயத்தில் "நாளைக்கு நான் முதல் முறையாக சமைக்கப் போகிறேன்" என்பதை "நாளைக்கு எனக்கு அரங்கேற்றம்" என்று சொன்னதற்காக திட்டு வாங்கினேன்.

      நீக்கு
    10. அரங்கேற்றம் என்ற புனிதமான வார்த்தையை கெட்ட வார்த்தையாக மாற்றிய பெருமை KB யைச் சேரும்.

      நீக்கு
    11. வந்தே மாதரம் என்பதை வந்து ஏமாத்தறோம் என்று கொனஷ்டையாக வசனம் எழுதி பேச வைத்த தஞ்சாவூர் குசும்பனல்லவா KB!!

      நீக்கு
    12. புனிதமான திருமண பந்தத்தையே புரட்சி என்னும் பெயரில் மாற்றியவராச்சே! எனக்குப் பிடிக்காத இயக்குநர்களில் இவருக்குத் தான் முதல் இடம்! தமிழ்த் திரைப்படங்களில் ஒழுக்கக்கேட்டை அரங்கேற்றம் செய்த இயக்குநர்! இதன் மூலம் மாறிய பெண்கள் எத்தனையோ பேர்!

      நீக்கு
    13. ஸ்ரீராம், பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் அதிகம் கேட்பது டிடிடி TTD சானலின் கச்சேரிகள், பஜனைகள்! இல்லைனா எம்.எஸ். மகாராஜபுரம் ஆகியோரின் பாடல்களைப் பின்னணியில் போட்டுவிட்டு வேலை செய்வேன். ஆனால் ஞானம் சுத்தம்! எதுவும் தெரியாது. மகாராஜபுரம் பாடல்களில், "ஆடாது அசங்காது வா!" பாடலும், "சம்போ!" பாடலும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

      நீக்கு
    14. எனக்கும் மகாராஜபுரம் பிடிக்கும். அதே லிஸ்ட்டில் "நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்" என் ஃபேவரைட்.

      நீக்கு
    15. //மகாராஜபுரம் பாடல்களில், "ஆடாது அசங்காது வா!" // - நான் முதலில் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடிய, 'ஆடாது அசங்காது' பாடலைக் கேட்டுவிட்டு, என்னடா இப்படி கோரமா பாடறார் என்றுதான் நினைத்தேன். பிறகு அந்தப் பாடலை (அந்த கேசட்டில் உள்ள எல்லாப் பாடல்களையும்) கேட்க கேட்க, ரொம்பவும் பிடித்தமானதாக ஆகிவிட்டது. பித்துக்குளியின் இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? கண்ணா...கண்ணா என்று ஆரம்பிக்கும்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இப்போல்லாம் கொரோனா செய்திகளே கேட்பதில்லை. ஒரே மாதிரி இருக்கின்றன. எப்படியாயினும் அனைவரும் உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கப் பிரார்த்தனைகள். வரும் நாட்களில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படவும் பிரார்த்தனைகள். எல்லோரும் நலம் வாழப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  நல்வரவு...  நன்றி.  அனைவரும் நம்பிக்கையோடியிருப்போம்.

      நீக்கு
  8. இந்தப் படம் பார்த்ததில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் தெரியும். பள்ளி மாணவியாக இருந்தப்போ வந்த படம். போகணும்னு ஆவல்! எல்லாப் பாடல்களையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் மூலமாக வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கேன். அக்கம்பக்கம் போடுவார்கள். எங்க வீட்டில் வானொலிப் பெட்டி இல்லை. அக்கம்பக்கம் குடித்தனக்காரர்கள் வீட்டில் போடும் ரேடியோ ஒலிதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா அக்கா...  நானும்  படம் பார்த்ததில்லை.  ஆனால் பாடல்கள்....   ரசிக்காமல் இருந்ததில்லை.  என்ன ஒரு இசை வெள்ளம்!

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய ப்ரார்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு நல்வரவும், வணக்கமும், நன்றியும்.

      நீக்கு
  10. காலை வணக்கம் அனைவருக்கும்.

    பொதுவா வெள்ளிக்கிழமை இரு பாடல்கள் வந்தால் அதில் ஒன்று கேட்டமாதிரி இருக்கும், இல்லை அருமையான பாடலா இருக்கும்.

    இன்றைக்கு மூன்றுமே மிக ரசித்து, வார்த்தைகளின் அழகில் மயங்கி, அர்த்தத்தை அனுபவிக்கவேண்டிய பாடல். இது மாதிரி மூன்று பாடலுமே மனதை மயக்குவதாக இதுவரை அமைந்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... வணக்கம்.  முன்னாடி ஒரு தரமும் இதே மாதிரி எல்லாப் பாடல்களும் நல்லா இருக்குன்னு நீங்க சொன்ன ஞாபகம்!!

      நீக்கு
  11. மூன்றும் முத்தான பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  12. தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் - எங்கள் வாழ்க்கைக்காக உருவாக்கிய ஊர் தமிழ். இந்த நிருமித்த என்ற தமிழ் வார்த்தை மிக மிக அரிதாக உபயோகிக்கறாங்க.

    கடைசி வரி, தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ என வரணும்.

    இந்த மாதிரி பாடலைப் பாடச் சொன்னால் இக்காலத்தில் எத்தனை பாடகிகளால் சரியான உச்சரிப்புடன் பாட முடியும்னு தெரியவில்லை. இத்தனைக்கும் பாடகி பி சுசீலா, தெலுங்கை தாய் மொழியாக்க் கொண்டவர்.

    பாரதிதாசன் - பாரதியாருக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும், குறிப்பாக திராவிடக் கட்சிக்கும் பாலமாக இருந்தவர். பாரதிதாசன் என்று பொருத்தமாகப் பெயரிட்டுக்கொண்ட பெரும் திறமைசாலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் வரிகளில் பிழை இருக்கிறதா?  மாற்ற வேண்டுமா?  கேஜிஜிதான் பார்க்கணும்.

      நீக்கு
    2. // இந்த மாதிரி பாடலைப் பாடச் சொன்னால் இக்காலத்தில் எத்தனை பாடகிகளால் சரியான உச்சரிப்புடன் பாட முடியும்னு தெரியவில்லை. இத்தனைக்கும் பாடகி பி சுசீலா, தெலுங்கை தாய் மொழியாக்க் கொண்டவர். //

      அப்படிப் பார்த்தால் டி எம் எஸ்ஸும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் அல்லர்,  சௌராஷ்டிராக்காரர்.  ஆனால் இதை எல்லாம் கடந்தஸ்து இசை மற்றும் கலைகள் இல்லையா நெல்லை...  திறமைதான் நமது செல்வம்.

      நீக்கு
    3. பிழை திருத்தப்பட்டது. நன்றி நெ த.

      நீக்கு
    4. டி.எம்.எஸ் செளராஷ்டிராக்காரர். ஆனால் தமிழர். அவரை சுருதியை விட்டு விலகிப் பாடுங்கள், ஒரு லட்ச ரூபாய் தருகிறேன் என்று சொன்னாலும் அவரால் பாடமுடியாது என்று எம்.எஸ்.வி. அவர்கள் சொல்லியிருக்கிறார். மிக மிகத் திறமையானவர், த மி ழ ர்.

      நேடிவ் மொழிக்காரர் போல பாடுவது சுலபமல்ல. (வெங்கட்டை வட நாட்டவர் என்று நினைக்கும் அளவு அவரது ஹிந்தி உச்சரிப்பு இருப்பது அவரது அனுபவம்/திறமை. அதுபோல). எஸ்.ஜானகி அவர்கள் பாடுவதை விட, தமிழ் உச்சரிப்பு சுசீலாவிடம் அதிகம் என நினைக்கிறேன்.

      எஸ்.பி.பி அவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார். மொழி கொஞ்சம்கூட பிசிறிவிடக்கூடாது, அர்த்தமும் உச்சரிப்பும் மிகச் சரியாக இருக்கணும் என்பதில் அவர் மிகக் கவனமாக இருப்பாராம் (அவரும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்). ஆனா யேசுதாஸ் அப்படி இல்லாமல் உச்சரிப்பு தவறைச் செய்திருக்கிறார். (தெருக்கோயிலே மட்டுமல்ல ழ ள உச்சரிப்புப் பிழைகளோடு) மற்ற பலரைப் பற்றி இப்போது பேசுவது தேவையில்லை, பருவாயில்லை என்று பாடியவர் உட்பட.

      நீக்கு
  13. வணக்கம்
    ஐயா

    அருமையான பாடலும்லுடன் நல்ல நல்ல கருத்துக்களையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. பாடல் காட்சிகளில் 'சிவாஜி' வாயசைப்பதை கேலி செய்பவர்கள், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முதல் பாடலில் கே ஆர் வி யின் வாயசைப்பைப் பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்களோ? (நாராயண, நாராயண !)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை...  உண்மை....   எனக்கு கே ஆர் வியை எப்போதுமே பிடிக்காது....

      நீக்கு
    2. //பாடல் காட்சிகளில் 'சிவாஜி' வாயசைப்பதை கேலி செய்பவர்கள், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முதல் பாடலில் கே ஆர் வி யின் வாயசைப்பைப் பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்களோ?// ஹா ஹா! கௌதமன் சார் நானும் இதைத்தான் நினைத்தேன். ரஞ்சனி நாராயணன் அவருடைய பதிவில் இதை குறிப்பிடிருகிறார். இந்தப் பாடல் தொலை காட்சியில் ஒளிபரப்பான பொழுது அப்போது சிறுவனாக இருந்த அவர் மகன்,"இந்த ஆண்டி பாடும் பொழுது ஏன் வாயை கோணிக்கொள்கிறாள் என்று கேட்டானாம் சாரி கேட்டாராம்.

      நீக்கு
    3. பாடல் காட்சி என்றே இல்லை...  வசனம் பேசும் காட்சிகளிலேயே அவர் அப்படிதான்!

      நீக்கு
    4. பாடலை ஆன் செய்துவிட்டு, கண்களை பாடல் வரிகளில் மேய விட்டுவிட வேண்டும். காட்சியைப் பார்க்கக் கூடாது!!

      நீக்கு
    5. கேஜிஜி யாரைச் சொல்லி இருக்கார்னு தெரியலை. ஆனால் எனக்குக் கே.ஆர்.விஜயா நடிப்பில் எல்லாம் மோகம் இல்லை. அதுவும் ஒரு தரம் தற்செயலாக அண்ணா வீட்டில் இருந்தப்போ "மிருதங்கச் சக்கரவர்த்தி" என்னும் படத்தைப் பார்க்க நேரிட்டது! தலையில் அடித்துக்கொண்டு எழுந்து வேறே அறைக்குப் போய்ப் புத்தகம் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். படமா அது! :( ஜிவாஜி மேக்கப்பே கோரமாக இருந்தது. அன்னிக்கு அப்புறமா மறந்து கூட ஜிவாஜி--கே.ஆர்.விஜயா படங்களைப் பார்ப்பதில்லை. பொதுவாகத் தமிழில் பிடித்த படங்கள் என்பதே என் வரை எண்ணினாப்போல் தான். அதில் ஜிவாஜி, பத்மினி, கேஆர்.விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்கள் எல்லாம் இல்லை.

      நீக்கு
    6. சிவாஜி நடிப்பு ரசிக்கவேண்டும் என்றால், 1952 - 1975 காலகட்டங்களில் வந்த படங்களில் மட்டுமே. அதற்குப் பின் வந்தவை எல்லாமே பெரும்பாலும் குப்பைப் படங்கள்.

      நீக்கு
    7. மிருதங்க சக் நகைச்சுவை படமாச்சே..

      நீக்கு
    8. எங்க விஜயாவைக் கிண்டல் பண்ணுறதா.. யாரங்கே? இவரை அடைத்து மூன்று வேளை மேயர் மீனாட்சி படம் பார்ர்கச் செய்யுங்கள்..

      நீக்கு
    9. @Appadurai, முதல்லே உங்களைத்தான் அந்தப் படங்களெல்லாம்பார்க்கச் சொல்லணும்!

      நீக்கு
    10. ரேடியோ வாய் என்பார் எங்க சித்தப்பா.
      அவ்வளவு கோரம் இந்தப் பாடலில். ரஞ்சனியின் மகன் இப்படி சொன்னதுதான் டாப் க்ளாஸ்:)))

      நீக்கு
  15. பஞ்சவர்ணமாக மிளிரும் வெள்ளி! இப்படி எக்கச்சக்கமாக பல நல்ல பாடல்கள் ஒரு படத்தில் மாட்டியிருக்கிறதே. தியேட்டரில் உட்கார்ந்து, மனசுக்குகந்தவர்களுடன் பார்த்து, கேட்டு ரசித்தவர்கள் பாக்யசாலிகள். சந்தேகமில்லை.

    எதைப் புகழ்வது, எதை விடுவது..! பாரதிதாசனின் இந்த ஒரு பாடல்போதும் தமிழ்புகழ் சொல்ல.

    வாலியின் ’அவளுக்கும் தமிழ் என்று பேர்..’ ஒவ்வொரு துடிப்பான இளைஞனின் உள்ளத்திலும் உலாவந்த, இனியும் உணர்வுமிகு சிலரில் உலா வரும் காவியம். காலந்தாண்டி நிற்கும் வரிகள், இசை..

    MSV ஒரு சிறந்த இசையமைப்பாளர். ஆனால் TKR... ஒரு ஜீனியஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...   ஏகத்துக்கு ரசித்திருக்கிறீர்கள்.  நன்றி.

      நீக்கு
    2. ஆனால் விஸ்வநாதனைப் பிரிந்ததும் டி.கே.ஆர். பிரகாசிக்கவில்லை. இத்தனைக்கும் அடிப்படை சங்கீதத்தில் புலி என்பார்கள்.

      நீக்கு
    3. இவரைப் பிரிந்து அவர் பிரகாசித்தாரா, அவரைப் பிரிந்ததால் இவர் பிரகாசிக்கவில்லையா என்பது ரசிகர்களின் சிந்தனை தளம்.. விதியின் முத்திரை காட்டும் நிகழ்வுகள். ஆனால் இது அவரது மேதமையைக் குறைத்துவிடாது..

      நீக்கு
    4. உண்மை. திறமைக்கும் வாய்ப்பு / பிராபல்யத்துக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம்.

      நீக்கு
    5. திறமை என்பதைவிட, திரையுலகில் எல்லோரையும் அனுசரித்துப் போகணும். 'நான்' என்ற நிலையில் இருந்தாலோ, 'நான் கொடுப்பதுதான் இசை, இல்லைனா இந்தப் பக்கமே வராதே' என்று இருந்தாலோ வாய்ப்புகள் குறைந்துவிடும். அதிருஷ்டம் என்பது மிக முக்கியமானது. இன்னொன்று 'இவன் நம்ம ஆள்' என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படும்படி நெளிவு சுளிவாக நடந்துகொள்ளத் தெரியணும்.

      திறமைக்கும் ப்ராபல்யத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பதை நான் ஏற்கவில்லை. 'திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்' என்ற திரைப்பாடலையே அர்ப்பணம் செய்கிறேன். எதற்குமே கொஞ்சம் அதிருஷ்டம் வேணும். ப்ராபல்யம் உள்ளவர்கள் அனேகமாக திறமைசாலிகள்தாம். ஆனால் திறமைசாலிகள் அனைவரும் ப்ராபல்யமாகணும்னு கட்டாயம் கிடையாது.

      நீக்கு
  16. திரைப்பாடல்களில் தமிழை சிரத்தையோடு, அழகாக உச்சரித்து திரைஇசைக்கு அழகும், லயமும் சேர்த்தவர்கள் TMS-ம், P-சுசீலாவும் என்பதற்கு இந்த ஒரு படப்பாடல்களே போதுமான நிரூபணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடல்களின் இனிமைக்கு இப்போதைய பாடல்கள் உறைபோடாக் காணாது...

      நீக்கு
  17. அன்பின் ஸ்ரீராம்...

    அழகன் முருகனிடம் பாடலுக்கு இணைப்பு கொடுத்திருக்கின்றீர்கள்...

    இந்தப் படத்தின் பாடல்களில் TMS அவர்கள் பாடலைத் தவிர - ஏனெனில் அது மனதைக் கொஞ்சம் அழுத்தும் - மற்ற பாடல்களை எத்தனை நூறு தடவை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது...

    இன்று இசை விருந்து அளித்திருக்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையமும் யூ டியூபும் தோன்றாத காலம்..

      1991 களில் VCP & VCR கள் மற்றும் வீடியோ கேசட்டுகள் பிரபலம் ...

      அப்போது இங்கே குவைத்தில் கேசட் கடைகளில் வாடகைக்கு ஒளி நாடாக்களை எடுத்து வந்து பழைய திரைப்படங்களையும் இனிய பாடல்களையும் மறுபதிவு செய்து சேமித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்...

      அத்தகைய கேசட்டுகளில் நண்பர்கள் கையில் சிக்கியவை போக மீதம் 40/50 என்னிடம் இருந்தன..

      காலவெள்ளத்தில் அவை எல்லாம் மீட்கப்பட முடியாதபடி கெட்டு விட்டன..

      அழகன் முருகனிடம் - பாடல் மட்டும் ஐந்து கேசட்டுகளில் முதல் பாடலாக இருந்தது..

      நீக்கு
    2. இந்தப் பாடல்கள் எல்லாம் நானும் பலப்பல முறை கேட்கும் பாடல்கள்தான் துரை செல்வராஜூ ஸார்...   நானும் கேசெட் காலம் முதல் டிவிடி வரை நிறைய வைத்திருந்தேன்.

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. இந்த படத்தில் எல்லாப் பாடல்களும் மிகவும் பிடிக்கும் என்றாலும் 'கண்ணன் வருவான்,கதை சொல்லுவான்..' பாடல் மிகௌம் பிடிக்கும். அதுவும்'உனக்கென்றும்,எனக்கென்றும் உறவு வைத்தான், இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்..' என்னும் வரிகள்..அடடா! வணிகவியலின் பால பாடம் ஒரு வரவிற்கு(க்ரெடிட்), ஒரு பத்து(டெபிட்). ஆனால் உறவின் கணக்கில் இருவரின் ஏட்டிலுமே வரவுதான் என்பது என்னவொரு சிந்தனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் என் மிக விருப்பப் பாடலாக அதை வைத்துதான் இறுதியில் சேர்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. உறவின் கணக்கில் வரவு எனக்குப் படித்த அசல் கவியரசின் வரிகளில் ஒன்று..

      இனிமையான பாட்டு அதிகாலையில் கேட்க அத்தனை சுகம்.. வந்து.. இசை இளையராஜா இல்லையா?

      நீக்கு
    3. வரிகள் வாலியா?
      கண்ணதாசன் நிழல் சில நேரம் இப்படி மற்றவர்களை இருட்டடிக்குதே..

      நீக்கு
    4. வாலியின் பல வரிகள் வளமானவை.

      நீக்கு
    5. ஆமாம், வாலியின் பல வளமான வரிகளை பெரும்பான்மையானோர் கண்ணதாசன் வரிகள் என்று நினைத்துக் கொள்வார்கள். கங்கை அமரன் இசையமைப்பில் வந்த பாடல்களை இளையராஜாவினுடையது என்று நினைத்துக் கொள்வதைப் போல.

      நீக்கு
    6. கங்கை அமரன் வேறே இளையராஜா வேறேயா..

      நீக்கு
  20. ஆஹா... இந்த வெள்ளியில் வெளியிட்ட மூன்று பாடல்களுமே பிடித்த பாடல்கள். ஒவ்வொன்றாக கேட்டுல்க் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. அருமையான பாடல்கள் ஐய்யா.
    எங்களுக்கு ஷங்கர் என்றால் பிரம்மாண்ட இயக்குனர் தான் நியாபகம் வரும்.
    இன்று காலை எதேர்ச்சயாக கண்ணதாசன் அவர்களின் "சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்" வாசிக்கும்போது கே. ஷங்கர் மற்றும் MSV அவர்களைப் பற்றிய சுவையான தகவல்களை தெரிந்துகொண்டேன்.
    1960 களில் வாழ்ந்தோர் அதிர்ஷ்தசாலிகள்.
    கவிஞர் வாலி, கண்ணதாசன் வைர வரிகள், MSV சகோதரர்கள் இசை, ஆரூர் தாஸ் போன்ற ஜாம்பவான்களின் வசனங்கள், பீம்ஸிங் போன்ற இயக்குனர்கள், இந்தி எதிர்ப்பு, அரசியல் திருப்பங்கள் என பலவற்றை அணுபவித்திருக்கிறார்கள்.
    கண்ணபிரான் மிகவும் விந்தையான் ஒரு அவதாரம் அல்லது ஆழுமை.
    எக்கச்செக்க வெற்றிகளையும் காதல்களையும் அதனால் விரொதிகளையும் சம்பாரித்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அரவிந்த். உண்மைதான். அந்தக் காலத்தில் வந்த பாடல்கள் வரிகள் புரியும்படி இருக்கும். இசை இரைச்சல் இல்லாமல் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.

      நீக்கு
    2. ஒவ்வொரு சிறப்பான விஷயத்திற்கு பின்னாலும் இன்னொரு நினைவு கூறத்தக்க விஷயம் தொக்கி நிற்கும். இந்த உண்மையை பல தடவைகள் நான் தரிசித்திருக்கிறேன். 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடலைக் கேட்டாலே எனக்கு புரட்சிக் கவிஞரோடு எளியவர்களின் எழுத்தாளர் விந்தனின் நினைவும் கூடவே வரும்.

      அமரர் கல்கி அவர்களின் கையெழுத்தைப் புரிந்து அச்சுக்கோர்ப்பது மிகவும் சவாலான காரியம். கல்கி அச்சகத்தில் அச்சுக் கோப்பவராக பணியாற்றிய கோவிந்தன் என்பவர் இந்தக் காரியத்தை மிகத் திறம்படச் செய்து கல்கியின் பேரன்புக்குப் பாத்திரமாகிறார். கோவிந்தன் கதைகளும் எழுதும் திறமை பெற்றவர் என்பதை நேரடி அனுபவத்தில் உணர்ந்து கல்கி அவர்கள் கல்கி பத்திரிகையின் உதவி ஆசிரியராய் அவரை ஆக்கி தம் பக்கத்திலேயே அவரை அமர்த்திக் கொள்கிறார். 'விஜி' என்ற பெயரில் ஆரம்பத்தில் கதைகள் எழுதி வந்த வி. கோவிந்தனுக்கு 'விந்தன்' என்று புனைப்பெயர் சூட்டி கல்கியில் அவரை எழுத வைக்கிறார் பேராசிரியர் கல்கி. விந்தன் கல்கியில் எழுதி பல்லாயிரம் வாசகர்கள் ரசித்து வாசித்த நாவல் 'பாலும் பாவையும்'.

      பாரதிதாசன் அவர்களின் கவிதை நோட்டுப் புத்தகத்திலேயே தங்கி விட்ட கவிதைகள் பல உண்டு. அவற்றில் முத்தான இந்த 'தமிழுக்கு அமுதென்று பேர்' கவிதையும் ஒன்று. அந்நாட்களில் எழுத்துப் பிரதிகள் அச்சாவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருந்திருக்கவில்லை.

      மாசிலாமணி முதலியார் என்பவர் 'தமிழரசு' என்ற மாத இதழை நடத்தி வந்தார். கல்கிக்கு வருவதற்கு முன்பு இந்த தமிழரசு இதழில் தான் விந்தன் அச்சுக் கோப்பவராக பணியாற்றி வந்தார். மாசிலாமணி முதலியார் பார்வையில் பாரதிதாசனாரின் 'தமிழுக்கு அமுதென்று பேர்' கவிதை பட்டு
      அந்தக் கவிதையை தமது 'தமிழரசு' பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்ற
      அவரது பேராவலில் கவிதை அச்சுக்குப் போகிறது. அதிர்ஷ்டக்கார விந்தன் தான் புரட்சிக் கவிஞரின் அட்சர லட்சம் பெறக் கூடிய இந்தக் கவிதையை முதன் முதலாக அச்சுக் கோர்க்கும் வாய்ப்பு பெற்றவர். இந்தக் கவிதை 'தமிழரசு' இதழில் வெளிவருகையில் பிற்காலத்தில் இவ்வளவு பேரும் புகழும் பெறும் என்று தெரிந்திருக்கவில்லை. புகழ்பெற்ற பலரின் ஆரம்ப வாழ்க்கைச் சூழலில் இந்த மாதிரி புதைந்திருக்கும் வாழ்க்கை அனுபவங்கள் எக்கச்சக்கம்.

      நீக்கு
    3. தமிழுக்கு அமுதென்று பேர்.. எனும் பாடல் அச்சேறுவதற்குக் காரணமாக இருந்த திரு. விந்தன் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்...

      நீக்கு
    4. 'தமிழுக்கு அமுதென்று பேர்'- பாடலை வெளியுலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்து வெளியிட்ட பெருமை மாசிலாமணி முதலியார் அவர்களுக்கும் அந்தப் பாடலுக்கு முதன் முதலாக அச்சுக் கோர்த்த பெருமை விந்தனுக்கும் உரித்தாகுகிறது.

      நீக்கு
    5. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த 'கூண்டுக்கிளி' படத்திற்கு திரைக்கதை - வசனம் எழுதியது விந்தன் தான். 'அன்பு', 'குழந்தைகள் கண்ட குடியரசு' படங்களுக்கான வசனங்கள் விந்தனது தான்.

      'பார்த்திபன் கனவு' படத்தில் வரும், 'இதயவானில் உதய நிலவே எங்கே போகிறாய்?' பாடலை எழுதியது விந்தனே. அதே மாதிரி, எம்.ஜி.ஆர். நடித்த 'குலேபகாவலி' படத்தில் இடம் பெறும் காலத்தால் அழியாத 'மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா, வா!' பாடலை எழுதியவரும் விந்தன் தான். இந்தப் பாடலை எனது நேயர் விருப்பமாக தேர்வு செய்கிறேன், ஸ்ரீராம். முடிந்த பொழுது இந்தப் பகுதியில் ஒலிபரப்புங்கள்.

      நீக்கு
    6. அடடா! விந்தனின் பங்களிப்பு அபாரம். மேற்சொன்ன பாடல்கள் மென்மையானவை, நினைவில் நீந்துபவை.

      எங்கேயோ அப்போது மறைந்துகிடந்த விந்தனை மீட்டுக்கொண்டுவந்தார் சாவி -தன் ‘தினமணிகதிர்’ இதழில் -70-களில். சாவியின் தூண்டுதலால் அவர் எழுதிய தொடர் கட்டுரை ‘ஓ! மனிதா!’. விலங்குகள் ஒவ்வொன்றும் மனிதனைக் கேள்விகேட்டு இக்கட்டான நிலைக்குத்தள்ளும் விதமான, சிந்தனை ஓட்டம்கொண்ட கட்டுரைகள். சுவாரஸ்யம்.

      அப்போது வந்துகொண்டிருந்த ’தினமணி கதிர்’ ஒரு கலை, இலக்கியப்பத்திரிக்கை போன்றது. பெரிய சைஸில், வெள்ளைவெளேர் தாளில் அபாரமாகக் கொண்டுவந்திருந்தார் சாவி. அவரைப்போன்ற பத்திரிக்கை ஆசிரியர், ஹாஸ்ய எழுத்தாளர் இனி எங்கே ..?

      நீக்கு
    7. விந்தன் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஜீவி ஸார். இவற்றை உங்கள் புத்தகத்தில் படித்த நினைவு இருக்கிறது.

      நீக்கு
  22. இந்த படத்து பாட்டுக்கள் எல்லாம் சூப்பரா இருக்கும்...
    ஜெய்சங்கர் இருவேடம்ன்னு நினைக்கிறேன்.. படம் முழுசா பார்த்ததில்லை

    பதிலளிநீக்கு
  23. பாடல்கள் இனிமை.வானொலியில் கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. இந்த படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்.
    சிறு வயதில் (பள்ளி பருவத்தில்) சிவகாசியில் இருந்த போது மாமா குடும்பத்துடன் விருதுநகர் சென்று பார்த்த படம். புதுபடம் பார்க்க வேண்டுமென்றால் விருதுநகர் சென்று தான் பார்க்க வேண்டும். உறவினர்கள் வந்தால் விருதுநகர், திருத்தங்கல் சென்று புது சினிமாக்கள் பார்ப்போம். கொடிமலர், சர்வசுந்தரம், பஞ்சவர்ணகிளி எல்லாம் பார்த்த நினைவுகள் வருகிறது. விருதுநகரில் பொருட்காட்சியில் பின்னனி பாடகர்கள் பிரபலங்கள் பாடிய பாட்டு கச்சேரிகள் நேரில் கேட்டு இருக்கிறேன். நேரில் அவர்கள் பாடுவதை கேட்டு இருக்கிறேன்.

    சிவகாசி பத்திரகாளி அம்மன் திருவிழாவில் ஏ.எல் ராகவன் அவர்கள் ஜமுனாராணி பாடிய பாடல்கள் கேட்டு இருக்கிறேன். இன்று ஏ.எல். ராகவன் இறந்து விட்டார் என்று கேள்வி பட்டதும் எனக்கு அவரின் பாட்டுக் கச்சேரி சிவகாசியில் கேட்டது நினைவுக்கு வந்தது.

    காதல் யாத்திரைக்கு , எங்கிருந்தாலும் வாழ்க!, காக்கா காக்கா கதை கேளு போன்ற பாடல்கள் பிடிக்கும். ஜெமினிக்கு பாடிய பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.

    நீங்கள் பஞ்சவர்ணகிளி படப் பாடலை போட்டு சிவகாசி, விருதுநகர் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள்.

    பகிர்ந்த பாடல்கள் எல்லாம் பிடித்த பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் செய்தி படித்தேன் கோமதி அக்கா.. வருத்தமான செய்தி.

      காக்கா காக்கா இல்லை, பாப்பா பாப்பா கதை கேளு.. காக்கா நரியின் கதை கேளு்.

      உங்கள் நினைவுகள் தூண்டப் பட்டதில் பின்னூட்டம் சுவாரஸ்யமாக அமைந்து விட்டது.

      நீக்கு
    2. ஆமாம , பாப்பா பாப்பா கதை கேளுதான் ஏதோ நினைவில் தவறாக எழுதி விட்டேன்.

      நீக்கு
  25. பாடல் அருமையான பாடல். இந்தப் படம் பார்த்ததில்லை ஆனால் பாடல்கள் அனைத்தும் கேட்டிருக்கிறேன். அத்தனையுமே ரசிக்கக் கூடிய பாடல்கள்.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி. எப்படி இருக்கிறீர்கள். உங்கள் ஊர் நிலைமை எல்லாம் எப்படி?

      நீக்கு
  26. No Man Of Her Own என்று 1950 இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவான படமாம் இது!//

    ஆஹா, ஸ்ரீராம் அப்போவே இப்பூடியா !!

    நீங்க சொல்லிருக்கற பாடல்கள் எல்லாமே இந்தப் படத்தில் தானா? படம் தெரியலை ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். கேட்டிருக்கிறேன். மிகவும் பிடிக்கும்

    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் பாடல் அழகான திலங்கு ராகத்தில் அமைந்த பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. படத்தின் எல்லாப் பாடல்களுமே இனிமை.

      நீக்கு
  27. பாரதிதாசனின் இப்பாடல் அழகான வரிகள். மிகவும் பிடிக்கும்.

    வாலி அவர்கள் அழகா அதுக்கு ஏத்தாற்போல் வரிகள் எழுதியிருக்கிறார். ரசித்தேன்.

    பாடலும் மிக மிக பிடிக்கும் டி எம் எஸ் செம.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கண்ணன் வருவான் மிக மிகப் பிடித்த பாடல் ஸ்ரீராம். மீண்டும் கேட்டு ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மிக மிக மிக மிக பிடிக்கும். முதல் சலணம் முடிந்து பல்லவி வராமலேயே இரண்டாவது சரணம் வருமோ என்று தோன்றும்போது பல்லவி பாடுவது ஒரு இன்ப போனஸ்.

      நீக்கு
  29. தமிழுக்கும் அமுதென்று பேர் ராகம் பெஹாஹ் பேஸ்டு. சோ அவளுக்கும் தமிழ் என்று பேர் பெஹாஹ் பேஸ்டு..

    சஞ்சய் சுப்ரமணியம் இந்த பெஹாஹில் ராகம் தானம் பல்லவி பாடி பல்லவிக்கு தமிழுக்கும் அமுதென்று பேர் பாடுவார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் மூன்றுமே அருமை. அடிக்கடி கேட்கும் பாடல்கள். இப்போதும் கேட்டு ரசித்தேன். இந்தப் படமும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். படத்தில் அனைவரின் நடிப்பும், கதையும் நன்றாக இருக்கும். இப்படத்தை பற்றி நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. தமிழுக்கு அமுதென்று பேர் பாடலுக்கு கே ஆர் விஜயா வாயசைப்பது பார்க்க தமாஷாக இருக்கும் எப்போது பாடலைக் கேட்டாலுமந்த வாயசைப்புதான் நினைவுக்கு வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி சாரின் பின்னூட்டம் பார்த்துவிட்டு எனக்குள் எழும் புதன் கேள்வி - கேஜிஜி சார்..உங்களுக்குத்தான்.

      பாடும் பாடலை மிகவும் கண்ணைமூடி ரசிக்கலாம், பாடுபவரைப் பார்த்தால் ஐயோ..வலிப்பு வந்துவிட்டதோ, கையில் பாரிச வியாதி வந்துவிட்டதோ, என்ன! தோசைக்கு மாவரைக்கும் நேரத்தில் வந்துவிட்டோமோ? வாய்க்குள் தேள் ஏதேனும் போய்விட்டதோ....வாய் ஏன் கர்ணகடூரமாக இருக்கு, நேற்று சாப்பிட்டது ஜீரணமாகாமல் கேஸ்ட்ரிக் டிரபிளில் கொண்டுவந்துவிட்டுவிட்டதா என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்கும் கர்னாடிக் பாடகர்கள்/பாடகிகள் உங்களுக்குத் தெரிந்து யார் யார்?

      நீக்கு
    2. இதுக்கு புதன் கிழமை பதில் சொல்ல வேண்டுமா! பார்ப்போம்.

      நீக்கு
    3. நன்றி ஜி எம் பி ஸார். மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்பார்களே.. அதுபோலதான்,!

      நீக்கு
  32. இப்போதுதான் நேரம் கிடைத்தது.

    வாலியின் நேரிசைப் பாடலான 'அவளுக்கும் தமிழ் என்று பேர்' மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இசைச் சந்தத்துக்குப் பொருத்தமான வார்த்தைகளைக் கோர்ப்பதில் வாலி கை தேர்ந்தவர். வாலி மற்றும் கண்ணதாசன், மற்றவர்களுக்கு பாடலெழுதும் வாய்ப்பு போய்விட்டதே என்று ஒரு நாளும் எண்ணாதவர்கள்.

    அவளுடைய அழகு, என் உள்ளத்தை உழுகின்ற ஏர் - பாட்டிற்கு நன்றாக இருக்கு. அழகு நம் உள்ளத்தைக் கிளறி, நல்ல எண்ணங்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்துகிறது என்பது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விளக்கம். ஆழ்ந்து யோசித்திருக்கிறீர்கள் நெல்லை!

      நீக்கு
  33. பி.சுசீலா கலெக்‌ஷன் என்று ஒரு கேசட் போட ஆரம்பித்தாலே அதில் இந்த 'கண்ணன் வருவான்' பாடல் மிஸ் ஆக வாய்ப்பே இல்லை.

    உனக்கென்றும் எனக்கென்றும்.....இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் - என்ற வரிகளுக்கு மயங்கிய பானுமதி வெங்கடேச்வரன்,

    //ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
    உண்மையை அதிலே உறங்க வைத்தான் //

    இதற்கு என்ன மாதிரி பொருள் சொல்வார் என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் பி சுசீலா தனிப்பாடல்கள் லிஸ்ட் கேஸெட் ஐந்து வைத்திருந்தேன்.

      நீக்கு
  34. //உனக்கென்றும் எனக்கென்றும்.....இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் - என்ற வரிகளுக்கு மயங்கிய பானுமதி வெங்கடேச்வரன்,

    //ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
    உண்மையை அதிலே உறங்க வைத்தான் //

    இதற்கு என்ன மாதிரி பொருள் சொல்வார் என்று யோசிக்கிறேன்.
    உனக்கென்றும்,எனக்கென்றும்... வரிகளில் மயங்கிய பிறகு அடுத்த வரிகள் காதில் விழுமா?

    பதிலளிநீக்கு
  35. //..ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
    உண்மையை அதிலே உறங்க வைத்தான் //

    இந்த வரி அதனை சாதாரணத் திரைப்பாட்டு என்கிற நிலையிலிருந்து மேலே கொண்டுபோய் விட்டது. இப்படி மேலும் வரிகள் இந்தப் படத்தில்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!