சனி, 20 ஜூன், 2020

முகக்கவசம் தயாரித்து இலவசமாக வழங்கும் திவ்யா


1)  எங்களுடன் வேலை பார்த்த ஒரு பையன் சொந்த ஊருக்குக் கிளம்பி, ரயிலில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டதையும், பிஹாரில் 14 நாட்கள் பாழடைந்த கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டதையும் சொன்னதால் பயம் அதிகமாகிவிட்டது.
கர்ப்பிணியான என் மனைவியை எப்படி அழைத்துக்கொண்டு ஊருக்குப் போவது என்று பயந்தபோது, 'தம்பி நீ வீட்டு வாடகை எல்லாம் தர வேண்டாம். நிலைமை சரியாகும் வரை இங்கேயே இரு' என்று தமிழ்க்குமரன் சொல்லிவிட்டார். அவரது மனைவியும், 'பிரசவம் வரையில் பார்த்துக்கொள்வது என்னுடைய பொறுப்பு' என்று சொல்லிவிட்டார்.



2)  மலேஷியா நாட்டின் பினாங்கு நகரில் டாக்டர்களுக்கு, முகத்தை மூடும் பாதுகாப்பு கவசம் தயாரித்து, இலவசமாக வழங்கும், அந்த நகரில் வசிக்கும் தமிழ்ப்பெண் திவ்யா.



===========================
மூன்றாவது மூர்த்தி - எம்.எல்.வி

 
ரமா ஸ்ரீனிவாசன்

எனக்கும் சங்கீத ராகங்களுக்கும் காத தூரம். நன்றாக பாடல்களை ரஸித்துக் கேட்பேனே தவிர, ராகங்களைக் கண்டு பிடிக்கும் அளவு திறமை கிடையாது. ஆயினும் நான் பிறந்த குடும்பம் ஒரு பெரிய சங்கீதக் குடும்பம்.  எனது தந்தையார் பிரபல பாடகி டி.கே.பட்டம்மாள் அவர்களின் ஒன்று விட்ட தம்பி.  ஒரு சில வருடங்கள் என் அப்பா அவருக்கு பின்பாட்டுக் கூட பாடினார் என்று பின்பு அவர் கூற அறிந்துகொண்டேன். இருந்தும் அந்த முதல் வாக்கியம் நிஜம்.
அக்காலத்தில் குடும்பங்கள் யாவும் மிகவும் நெருக்கமாகவும் பின்னிப் பிணைந்தும் இருந்தன.  எல்லா விஷேஷங்களுக்கும் என் அத்தை (டி.கே. பட்டம்மாள்) இல்லத்திற்கு சென்று ஆசி வாங்கி வருவோம்.  அவ்வாறு ஒரு நடை சென்றிருந்த போது அங்கேதான் கர்னாடக இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரி அவர்களை சந்தித்தேன்.  மிகவும் அமைதியாகவும், உற்சாகமாகவும் பழகினார்.  இரு பாடகர்களும் சேர்ந்து பல பிரபல கர்னாடக கீர்த்தனைகளை பாடி மகிழ்ந்தனர்.  
ஜுலை 3ஆம் தேதி எம்.எல்.வி. அவர்களின் பிறந்த நாள் (1928 – 1990) என்பதால் இவ்வாரம் அவரைப் பற்றி எழுத முற்பட்டேன். 
மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம்.எல்.வசந்தகுமாரி கூத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார்.  பெற்றோர் இருவரும் இசைக் கலைஞர்கள் ஆவர்.  
சென்னையில் ஆங்கிலப் பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவரை பிரபல பாடகர் ஜி.என். பாலசுப்பிரமணியம் அவர்கள் இசைத்துறைக்கு இழுத்தார் என்பதுதான் உண்மை.  
எம்.எல்.வி. அவர்கள் 1970ல் சங்கீத நாடக அகாதமி விருது, 1976ல் மைசூர் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம், 1977ல் சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது, 1978ல் இசைப்பேரறிஞர் விருது, பத்ம பூஷன் விருது மற்றும் 1987ல் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியும் சங்கீத கலாசிகாமணி விருது என கணக்கற்ற விருதுகளைப் பெற்றவர். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் சங்கீத கலாநிதி விருதை மிகக் குறைந்த வயதான 49 வயதில் பெற்ற பெண் கலைஞர் இவராவார். 
இவர் இந்தியன் கிளாஸிகல் சங்கீதத்திலும் பின்னணிப் பாடல்களிலும் கை தேர்ந்தவர். கர்னாடக சங்கீதத்தை ரசிகர்களுக்கு வழங்குவதில் ஒரு புதிய பாதை வகுத்தார். எம்.எஸ். சுப்பலஷ்மி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி மூவரும் சேர்ந்து அக்காலத்தின் சங்கீத மும்மூர்த்திகளாகத் திகழ்ந்தனர். 
இருப்பினும் எம்.எல்.வியின்  புதுமையான அணுகுமுறை அவருக்கு ஒரு தனி இடத்தை அமைத்துக் கொடுத்தது.  
அவர், பெரும் பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியனின் சிஷ்யையாக இருந்தாலும் தனக்கென்று ஓர் பாணியை அமைத்துக் கொண்டு தனித்தோங்கினார். அவரது முதல் கச்சேரி 13ஆம் வயதில் நடந்தது. 11ஆம் வயது முதல் தன் பாடகி அம்மாவுடன் கச்சேரிக்கு சென்று பழகியவர் ஒரு முறை பங்களூரில் தன் அண்ணையின் உடல்நலக் கோளாறால் மேடையில் பாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றார்


  அவர் தனித்துவம் வாய்ந்தவர்.  எந்த மேடையும் எந்த ரசிகர் குழாமும் அவரை அதைரியப் படுத்தியதில்லை. அவருடைய குல தெய்வம் கூத்தனுர் சரஸ்வதி எம்.எல்.வியுடனே பயணம் செய்தாற்போல் இருந்தது. எம்.எல்.வியும் விடாமல் தஞ்சை கூத்தனூரிலுள்ள சரஸ்வதி தேவியை தரிசித்தப் படியே இருந்தார்.
ஒரு முறை தன் மகனுக்காக ஓர் துணி ஏற்றுமதி வணிகத்தை துவங்குவது பற்றி மிகவும் குழம்பிப் போன எம்.எல்.வி. ராயப்பேட்டையில் இருந்த அவருடைய நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார்.  அவர் அங்கு வந்து இறங்கியதுதான் தாமதம்.  சுற்று முற்றும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் அவரது நண்பர் வீட்டில் குழுமி எம்.எல்.வியை வரவேற்று அவரைப் பாடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.  அவரும் முகம் கோணாமல் யாவரையும் மகிழ்வித்த பிறகுதான் தன் வேலையைத் தொடங்கினார்.  இது அவரது தன்மைக்கும் பண்புக்கும் ஓர் பெரிய எடுத்துக் காட்டாகும்.
அவர் என்றுமே தன் சிஷ்யர்களையும் தன் சக கலைஞர்களையும் கை தட்டி பாராட்டும் குணமுள்ளவர்.  என்றுமே மேலும் கற்க வேண்டும் என்ற வேட்கை உடையவராக இருந்தவர்.  
1971ல் எம்.எல்.வி மியூஸிக் அகாடமியில் பாடும்போது எம்.எஸ்.சுப்பலஷ்மி, ராதா மற்றும் சதாசிவம் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.  ஆரம்ப கேதாரகௌல வர்ணத்திலிருந்து முடிவான யாதவ ராயாவரையில் பிரமிக்க வைக்கும் வகையில் பாடி அம்மூவரையுமே அசத்தி விட்டார் என்றால் மிகையாகாது.
வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் வார்த்தைகளில் : “அவர் தன் மகளை அழைத்துக் கொண்டு என் இல்லத்திற்கு வருவார்.  தன் பெண் என்னிடம் வயலின் கற்று கொள்ள வேண்டும் என்பது அவரது ஆசை.  அவருக்கு என்னுடைய தீர்மானங்களும் தில்லானாக்களும் மிகவும் பிடிக்கும்.   எம்.எல்.வியின் ராக ஆலாபனைகள் மிகவும் நேர்த்தியாகவும் விரிவாகவும் பாடப்பட்டவை. அவர் நவராத்திரி கொலுவை பாட்டுப் போட்டிகளுடன் கொண்டாடுவதே மிகவும் சிறப்பாக இருக்கும்.  அவருடைய பாட்டு நடை மிகவும் தைரியமாகவும் ஏகப்பட்ட கற்பனையுடனும் திகழ்ந்தது.  அவர் பாடிய தண்டபானி தேசிகரின் பவானி ராக உன்னையன்றி என்றும் என் மனதில் நிற்கின்றது”.
மேடை பயமே இல்லாத அவரது மேடையில் ராகங்களுடன் விளையாடும் திறனோ அங்கிருந்தால்தான் புரியும். ஸ்ருதி பேதமும் அவரும் ஒன்றிணைந்திருந்தார்கள்.  சங்கராபரணத்தில் நீந்திக் கொண்டிருக்கும்போதே சட்டென்று கல்யாணிக்கு ஒரு நொடிப் பொழுதில் தாவி விடுவார்.  தோடி மன்னர் திரு.டி.என்.ஆர் அவர்கள் முன்னிலையில் கம்பீரமாகத் தோடியை பாடி அத்தனை நெளிவு சுளிவுகளையும் பிரகாசமாக தன் நிகழ்ச்சியில் வெளிக் கொணர்ந்து டி.என்.ஆர் அவர்களிடமே ஷொட்டு வாங்கியவர் எம்.எல்.வி.
எம்.எல்.வி. ஓர் பிளாட்டிங்க் தாளைப் போல் திரு ஜி.என்.பி கற்று கொடுத்தவை யாவற்றையும் தன்னுள் வாங்கி கிரஹித்துக் கொண்டார்.
திரு. ஜி.என்.பி. அவர்களின் வார்த்தைகளில் : “வசந்தியை ஓர் உண்மையான சிஷ்யையாக வகைப்படுத்தலாம்.  நான் கற்றுக் கொடுக்கும் யாவற்றையும் உள் வாங்கிக் கொண்டு தன் தனி பாணியில் புகழ்பெற்ற படைப்புகளை ரசிகர்களுக்கு அளிப்பார்”.  இதை விட எவரும் எம்.எல்.வியைப் பற்றி நுணுக்கமாகவும் தெளிவாகவும் கூற முடியாது.
எம்.எல்.வி திரைப்பட பாடல்களையும் ஓர் கை பார்த்தார். அவர் விக்ரமாதித்தன் படத்தில் பாடிய திசயம் இவனது அறிவு மயம்என்ற பாடலைத் திருப்பிப் போட்டு திசயம் இவளது அறிவு மயம்என்று பாடலாம்.  என்.எஸ்.கிருஷ்ணனின் மணமகள்திரைப் படத்தில் அவர் பாடிய எல்லாம் இன்ப மயம்மற்றும் சின்னஞ்சிறு கிளியேகாலத்தைத் தாண்டிய காவியங்கள் ஆயின.
திரை பாடல்கள் குறைய ஆரம்பித்த பின் கர்னாடக இசையில் கவனம் கூடியது.  அவரது நடபைரவியும் நாக காந்தாரியும் ரசிகர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றன.   
எம்.எல்.வியின் புரந்தரதாஸர் கிருதிகள் மெல்லிசையின் உயர்ந்த வெளிப்பாடாக அமைந்திருந்தன. அவர் தீக்ஷிதர் கிருத்களை பாடும்போது அவை மிக நேர்த்தியான இசைச் சொற்பொழிவாகவே தெரிந்தன.   
மராட்டிய அபங்குகள் மேல் அவருக்கு இருந்த மீளாக் காதல் அவரை சிந்து பைரவியை படே குலாம் அலியிடமிருந்தும் ஓம் நமோ நாராயணாவை சாருமதியிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேகம் பிறப்பித்தன.  


 எம்.எல்.வியின் மார்கழி மாதத் திருப்பாவைப் பாடல்கள் அம்மாதத்திற்கே தனிப் பெருமையை ஏற்படுத்தின.  தன்னிச்சையான தனித்தன்மை அவரது தனி முத்திரையாகத் திகழ்ந்தது.
எம்.எல்.வி அவர்களின் 81ஆவது பிறந்தநாளான ஜூலை 3ஆம் தேதி 1990 அன்று காலை ஆல் இந்தியா ரேடியோ எம்.எல்.வி, சாருமதி மற்றும் கன்னியாகுமாரி மூவரின் ஓர் மிக சிறப்பான ரெகார்டிங்கை மிகத் தெளிவான கருத்துடனும் புத்திசாலித்தனமான தேர்வுடனும் ஒலி பரப்பியது. ஓர் பிரமாதமான கல்யாணி ஆலாபனையும் ஷ்யாமா சாஸ்திரியின் பிரனவாராவும் மத்தியமாவதியில் பாலிஞ்சு காமாக்ஷியும் சேர்ந்து உயர்மிகு எம்.எல்.வியின் உச்சத்தை ரஸிகர்களான நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
எம்.எல்.வி அவர்கள் ஒரு லெக் டெம்மில் பேசும்போது, கடுமையான குருகுலத்தில் கற்றுக் கொண்ட வித்வான்களான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாதன், செம்பை வைத்தியநாத பாகவதர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயர், ஜி.என்.பி. மற்றும் மதுரை மணி ஐயர் ஆகியோர் யாவரும் கடும்பாதையைக் கடந்து பெரும் பாடகர்களானவர்கள் என்று கூறினார்.  மேலும் அவர் ரஸிகர்களை இளம் வித்வான்களை கை தட்டி உற்சாகப் படுத்துமாறு வேண்டிக் கொண்டார். இல்லையெனில் இந்த மாபெரும் கலை வெகு விரைவில் மரித்துவிடும் என்றும் எச்சரித்தார்.
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழியை இவரும் தன் வாழ்க்கையிலும் தன் வாழ்க்கைக்குப் பின்னும் தன் அசாதாரண இசைப்பயணத்தால் உண்மை என்று நிரூபித்திருக்கின்றார்.
பெரும் இசைக் கோயில் எம்.எல்.வி அவர்களுக்கு என்னுடைய இக்கட்டுரை ஒரு சிறு காணிக்கையாகும்.
========================

98 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாளைக்கப்புறம் இந்தக் குறளை நினைவு படுத்தியதற்கு நன்றி.

      நலமே விளைக.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் இன்பமயம்...
    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...

    தேன்மழை அல்லவா இரண்டு பாடல்களும்....

    பதிலளிநீக்கு
  4. அன்பின் துரை. அன்பின் ஸ்ரீராம் இனிய காலை வணக்கம். முதல் செய்தி மட்டும் படித்திருக்கிறேன். எல்லோருக்கும் இனிய நன்னாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனாவினால் உயிர் இழந்த ஏ.எல்.ராகவன் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் எம்.என்.ராஜம் அவர்களின் பூரண நலத்துக்குப் பிரார்த்தனைகள். கணவரின் இழப்பைத் தாங்கக் கூடிய மன வலிமையை அவருக்குக் கடவுள் கொடுக்கட்டும்.விரைவில் கொரோனா மறையவும் பிரார்த்தனைகள். ஆங்காங்கே நம்பிக்கைக்கீற்றுத் தெரிந்தாலும் மனம் அமைதி அடையவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வாங்க.. வணக்கம். ஏ எல் ராகவன் மறைவு வருத்தமான நிகழ்வு.

      நீக்கு
    2. ஏ.எல்.ராகவன் நல்ல பாடல்கள் பல தந்தவர். அடுத்த வெள்ளி இவருடைய பாடலொன்றைப் போடலாம்.
      இவர் காய்ச்சலில் இறந்ததாக நேற்று படித்தேன். கொரோனாவா? எம்.என்.ராஜத்துக்குமா? கடவுளே...

      நீக்கு
  6. நல்ல செய்திகள் இரண்டுமே புதியவை. ஆங்காங்கே பல முதலாளிகள் தங்களிடம் வேலை பார்க்கும் வடநாட்டவரைத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று தடுத்திருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.அதையும் மீறித்தான் பலரும் செல்கின்றனர்.

    எம்.எல்.வி. பற்றிய ரமாவின் கட்டுரைச் செய்திகள் மீண்டும் படிக்கச் சுவையாக இருந்தன. டி.கே.பட்டம்மாளுக்குச் சொந்தம் என்னும் செய்தி புதியது. என் மாமனார் குடும்பமும் அந்தக் காலங்களில் பிரபலமான சங்கீதக்குடும்பம் தான். மாமனாரின் தந்தை ஃப்ளூட் நவநீதத்தின் குரு. அவரும் இவரைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். செம்மங்குடி கூட ஆரம்பக் காலங்களில் கும்பகோணத்தில் மாமனாரின் தந்தை இருந்தப்போ அங்கே குருகுலமாகத் தங்கி இருந்தார் என்பார்கள். அந்தக் காலப் படங்கள் தான் இந்தக் கதைகளை இப்போது சொல்கின்றன. எல்லாம் பெருங்காயம் வைத்த பாண்டம். எங்க பெண் மட்டும் பாடுவாள் ஆனால் அதை வளர்த்துக்கொள்ளவில்லை. ஆர்வம் இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்க்குமரன் தம்பதிகளின் பெருங்கருணை
      மிக மகிழ்ச்சி தருகிறது. நல்லவர்கள் என்றும் வளமாக இருக்க வேண்டும்.
      அந்தப் பெண் நல்ல விதமாகப் பேறுகாலம் இருந்து குழந்தையுடன்
      நலம் பெற வேண்டும்.

      முககவசம் தயாரித்து வழங்கும் திவ்யாவின் சேவை
      மிக மிகச் சிறப்பு.
      எம் எல் வி பற்றிய சிறப்பு தொகுப்பு
      அருமையாக இருக்கிறது. இனிய தேன் போன்ற குரல்
      அவருக்கு.
      மறக்க முடியாத குரல். மிக நன்றி
      ரமா.

      நீக்கு
    2. பாடுவது என்பது ஏதோ சிம்பிள் ஜாப் மாதிரிச் சொல்லிட்டீங்களே கீசா மேடம்.

      குரல் வளம், திறமை. இறைவன் கொடுப்பது. அதை வளர்த்துக்கொள்ள அசுர உழைப்பு வேண்டுமே. மேலே பிரகாசிக்க பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கணும். மற்ற எதிலும் ஈடுபடாமல் இந்த ரிஸ்க் எடுக்கத் துணியணுமே.

      புகழ் பெற்றாகிவிட்டால், கற்றோர்க்குச் சென்ற இடமெலாம் சிறப்பு என்பது போல எங்கும் வரவேற்பிருக்கும்.

      என் பெண்ணுக்கு நல்ல குரல் வளம் உண்டு. நானும் ரிஸ்க் எடுக்கத் துணியலை. அவளுக்கும் அத்தகைய உழைப்பைப் போடுவதில் ஆர்வம் இல்லை. இயல்பான ஞானம் இருக்கிறது, என் அம்மாவிடம் இருந்த திறமை போல.

      நீக்கு
    3. நெல்லை.. நீங்கள் சொல்லி இருப்பவற்றை ஆமோதிக்கிறேன். எல்லோராலும் பாடிவிட முடியாது. பாடலால் கேட்போரின் சோகங்களை, துக்கங்களை, கோபங்களை மாற்றி விட முடிகிறது என்றால் அவர்கள் கடவுளின் குழந்தைகள்.

      நீக்கு
    4. நீங்கள் சொன்ன குரல் வளம், ராகங்களைப் படும் விதம் எல்லாம் இருந்தும் எங்கள் பெண்ணிற்கு உழைப்பு இல்லை. அதைத் தான் நானும் சொல்லி இருக்கேன். இத்தனைக்கும் வாய்ப்பாட்டுச் சொல்லிக் கொடுத்தோம். சிகந்திராபாதில், பின்னர் அம்பத்தூரில் ஹரிகேசநல்லூரின் பேத்தியிடம், அதன் பின்னர் ராஜஸ்தானில் ஒரு பிரபல பாடகியிடம்னு! அவள் ஆர்வமே காட்டவில்லை. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால்! என்று நினைச்சுப்பேன். என் அண்ணா, தம்பி இருவருமே நன்றாகப் பாடுவார்கள். நானெல்லாம் பாட்டுனே வீட்டில் வாயைத் திறக்க முடியாது. குளியலறையில் கூடப்பாட முடியாது.

      நீக்கு
    5. பாடுவது சுலபமானதே, ஆவல், விருப்பம் உள்ளவர்களுக்கு. பொதுவெளியில் பிரகாசிக்க வேண்டும் எனில் மட்டும் நீங்கள் சொன்ன மாதிரி அசுர உழைப்பு உழைக்கணும். அதை மதுரையில் இருந்தப்போ தெருக்கோடியில் ஜி.எஸ்.மணி, வீட்டுக்குப் பின்னால் மதுரை சோமுனு பாடி அசுர சாதகம் பண்ணும்போது பார்த்துக் கேட்டிருக்கேன்.

      இதுவே என் மாமனாரின் சகோதரிகளின் குடும்பங்களில் எல்லோரும் நன்றாகப் பாடுவார்கள். ஒரு சகோதரியின் பெண் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.எம். தண்டபாணி தேசிகரிடம் பாட்டுக் கற்றார். இங்கேயே இருக்கும் ஓர் சகோதரியின் பையர் (இப்போது 85 வயது ஆகிறது.) இப்போதும் ஹார்மோனியத்தையோ சுருதிப் பெட்டியையோ வைத்துக் கொண்டு பாடுவார். பஜனைகளில் எல்லாம் கலந்து கொண்டவர். இப்போத்தான் சில வருடங்களாகப் போக முடியலை.

      நீக்கு
    6. ..பாடுவது சுலபமானதே..//

      பாடுவது சுலபமாகத்தான் இருக்கும்,
      பலருக்கு. ஆனால் கேட்பவருக்குத்தான்...!

      நீக்கு
    7. //பாடுவது சுலபமானதே, ஆவல், விருப்பம் உள்ளவர்களுக்கு.// - அப்படீல்லாம் கிடையாது கீசா மேடம்... அது ஒரு திறமை. அது இயல்பா வந்தாத்தான் பெரிய அளவுல வரமுடியும். இல்லைனா, சொஜ்ஜி பஜ்ஜி சமயத்துல பாட மட்டும் உபயோகமா இருக்கும்.

      விருப்பம், அதற்காக செலவழிக்க பணம் இருப்பவர்களுக்கு ஒரு திறமை வர முடியும் என்றால், சச்சின் டெண்டுல்கர் பையன், ராகுல் டிராவிட் போன்றோரின் மகன்களுக்கு இல்லாத வசதியா? ஏன் கவாஸ்கர் பையனே பிரகாசிக்கலையே.

      நேச்சுரல் டேலண்ட் இல்லாமல், முயற்சி, உழைப்பு, பணபலத்தால் அந்த நிலையை அடையவே முடியாது என்பது என் கருத்து.

      நீக்கு
    8. நெல்லை நேச்சுரல் டேலண்ட் இருந்தாலும், முயற்சி, உழைப்பு இருந்தாலும் அதற்குத் தகுந்த பின்னணி இல்லை என்றால் எல்லோரும் அறியம்படியான நிலைக்கு வர இயலாது. அதற்கு எங்கள் வீட்டிலேயே உதாரணங்கள் உள்ளன. அதுவும் சும்மா இல்லை. ஹைலி டேலண்டட்...குரு எல்லாம் ஜாம்பவான்கள். (என்னைச் சொல்லவில்லை!! ஹிஹிஹிஹி)

      உங்கள் பெண் மிக மிக அருமையான பாடகி. செம குரல். நன்றாக் ஷைன் ஆகியிருக்கலாம்.

      கீதா

      நீக்கு
    9. நன்றாகப் பாடும் அனைவர் மீதும் எனக்குப் பொறாமை உண்டு என்று அறிக!!

      நீக்கு
    10. நெல்லை மற்றொன்று, வீட்டில் ஒருவருக்கு மட்டும் ஆர்வம் இருந்தால் போதாது. அந்த நபருக்கு ஆர்வம் இருந்தாலும் அவர் உழைக்க ரெடியாக இருந்தாலும் அதை ஊக்குவித்து வகுப்பிற்கு அனுப்ப வீட்டில் யாரிடம் உரிமை இருக்கிறதோ அவர்கள் அந்த நபரை வகுப்பிற்கு அனுப்பி பணம் கட்ட, உழைக்க அனுமதித்து, நேரம் செலவிட என்று வீட்டில் உள்ளோரும் அதற்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே ஒரு நபர் வெளியுலகில் அறிமுகமாக முடியும்.

      கீதா

      நீக்கு
    11. ஸ்ரீராம் ஹைஃபைவ்! மீக்கும் கொஞ்சம் உண்டு. அது நல்ல பொறாமைதான் நமக்கு.

      கூடவே சே நமக்குக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் போனதே என்றும் தோன்றும் ஸ்ரீராம். விடுங்க பரவால்ல நாம மொட்டைமாடி சிங்கராவே இருந்துட்டுப் போவோம்!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    12. நான் சொல்வதை நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை நெல்லையாரே. இங்கே சச்சின் போலவோ, கவாஸ்கர் போலவோ ஆகணும்னு எல்லாம் சொல்லலை. அவங்க வசதி வேண்டும்னும் சொல்லலை. எம்.எஸ்.மாதிரிப் பாடாட்டியும் இருக்கும் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கலாம். சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டும் பயன்படுத்திக்கலை என்பது எங்கள் குறை. நீங்க சொல்லும் அந்த இயற்கையான திறமை அவளிடம் இருந்ததால்/இருப்பதால் அதை அறிந்து தான் பாட்டு வகுப்பிலேயே சேர்த்தோம்.

      நீக்கு
    13. என் பெண்ணுக்கு இயல்பான குரல் வளம். 4வதில் (ஹா ஹா ஹா) ரேங்க் குறைந்தது, படிப்பில் கவனமில்லையோ என்று நினைத்து பாட்டு கிளாஸை நிறுத்திவிட்டேன். அப்புறம் அவள் 6வது படித்துக்கொண்டிருந்தபோது, என் அம்மா பஹ்ரைன் வந்தார். பாடச் சொல்லிக் கேட்டு (டீச்சர்ட்ட கத்துண்டிருந்தாளே முன்னால), என்ன மாதிரி குரல், இவளுக்கா பாட்டு கிளாஸை நிறுத்தின என்று கடிந்துகொண்டார் (அன்று அவள் பாடியதைக் கேட்டதும் எனக்கும் மனது நெகிழ்ந்தது). உடனே பாட்டு கிளாஸ் சேர்த்துவிட்டேன். அப்புறம் அங்கிருந்து கிளம்பும்வரை அதனைத் தொடர்ந்தாள். இங்க ஒரு தடவை, ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் (சென்னை) ஆண்டவன் ஸ்வாமிகள் முன்பு பாடியபோது அங்கிருந்தவர்கள், இவளை விஜய் தொலைக்காட்சி ஆனந்திடம் கூட்டிச் சென்றால் எங்கேயோ போய்விடலாம் என்றார்கள். அவளுக்கும் அசுர உழைப்பில் அவ்வளவாக விருப்பம் இல்லை. (ஆனா பாருங்க... அதுக்குள்ளேயே, அதாவது 12ம் வகுப்புன்னு நினைவு..இவள்ட 35-40 வயசு உள்ள பெண்கள் பாட்டு கத்துக்கிட்டாங்க. ஹா ஹா). அவள் கல்லூரிலயும் பாடியிருக்காள்.

      எப்போவும் இவ, கற்பனா ஸ்வரம் போட்டுக்கிட்டிருந்தால், நான் மெதுவா அலைபேசியைக் கொண்டு செல்வேன். அபூர்வமாகத்தான் காணொளி எடுக்க அனுமதிப்பாள். இதைவிட நல்லா பாடணும் என்றே எப்போதும் சொல்வாள்.

      எனக்கு இசையோ இல்லை ஓவியமோ கற்றுக்கொடுத்திருந்தால், நானும் நன்றாக அதில் முன்னேறியிருப்பேன் என்றே எனக்கு ஒரு நம்பிக்கை. வெட்கமில்லாமல் மேடையில் ஏறி, என்ன திறமை உண்டோ அதைக் காண்பிக்க நான் தயங்கமாட்டேன். ஹா ஹா.

      நீக்கு
    14. //நன்றாகப் பாடும் அனைவர் மீதும் எனக்குப் பொறாமை உண்டு என்று அறிக!!// - என்னைப்போல் நன்றாகப் பாடுவதாக (முன்னால..இப்போ குரல் இழுத்துக்குது) நினைப்பவர் மீதுமா?

      நீக்கு
    15. முதலில் வீட்டில் ஆதரவு, ஊக்கப்படுத்துதல், பண பலம், அடுத்து நல்ல குரு அமைய வேண்டும், அந்த குரு சங்கீதத்தின் சில ந்யுஅன்ஸ்ஸ் கற்றுக் கொடுத்து நம்மை மேம்படுத்திக் கொண்டுவரும் நல்ல குருவாக இருக்க வேண்டும். பாட நினைப்பவர்கள் லிசனிங்க் ஸ்கில்லை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் திகைந்து நன்றாகச் செல்கிறது என்றாலு அடுத்து.....அதன் பின் திருமணம் ஆன பின் தொடர வேண்டும் என்றால் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணை விட ...பெண்ணாக இருந்தால் ரொம்பவே .......வீட்டில் ஆதரவு இல்லை என்றால் தொடர்வது மிக மிகக் கஷ்டம். நேச்சுரல் டாலன்ட் இருந்தாலும் அசுர சாதகம் + ஆடியன்ஸ் பல்ஸ் சமயோஜிதம், மேலும் மேலும் தன்னை அப் டு டேட்டாக வைத்துக்கொள்ள, புது புது யுத்திகள் செய்ய, வித்தைகள் காட்ட சாதகம் என்று பல மிக மிக அவசியம் அதை ப்ரொஃபஷனாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால்.

      கீதா

      நீக்கு
    16. //தகுந்த பின்னணி இல்லை என்றால்// - கீதா ரங்கன்.... பின்னணி இருந்தால் கொஞ்சம் தூக்கி விடுவது போலத்தான். ஆனால் சொந்தத் திறமை இருந்தால்தான் பிரகாசிக்க முடியும். ஆள் இருக்கு, பணம் இருக்கு என்பதற்காக அமெரிக்க கர்நாடக பாடகர்களுக்கு சபாக்கள் சான்ஸ் கொடுக்கலாம். ஆனா எத்தனைபேர் போய்க் கேட்கறாங்க?

      நல்லா பாடறவங்களை (விதி இருக்கறவங்களை) ஆட்டமேட்டிக்கா சந்தர்ப்பங்கள் அமைந்து தூக்கிவிட்டுவிடும். மகாராஜபுரம் விஸ் அவர்களின் புதல்வர் சந் அவரது திறமை அதிகமாக இருந்ததால் தனியாகவே மிளிர்ந்தார். அவங்க குடும்பத்துல அவருக்குப் பின்னும் நிறையபேர் இருந்தாலும் அந்த நிலைக்கு வரமுடியலை இல்லையா?

      நீங்க ராகம், பாடல்களில் இவ்வளவு திறமைசாலியா இருக்கீங்களே. ஏதோ காரணத்தினால்தான் உங்களுக்கு அந்த ப்ரொஃபஷன் அமையவில்லை. அது நிச்சயமாக நல்ல காரணமாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    17. என்னைப்போல் நன்றாகப் பாடுவதாக (முன்னால..இப்போ குரல் இழுத்துக்குது) நினைப்பவர் மீதுமா?//

      யாராக இருந்தாலும் நெல்லை!!!!!!!! ஏனென்றால் பாடும் திறமை என்பது தனி கலை!

      ஏன் நான் ஸ்ரீராம் பாடுவதைக் கேட்டும் பொறாமைப்படுவதுண்டு. ச்சே ஸ்ரீராமுக்கு என்னமா குரல் இருக்கு ஆனா சரியா கவனிக்காம விட்டுவிட்டாரேன்னு!!!!!!

      கீதா

      நீக்கு
    18. கீதா ரங்கன்.... பின்னணி இருந்தால் கொஞ்சம் தூக்கி விடுவது போலத்தான். ஆனால் சொந்தத் திறமை இருந்தால்தான் பிரகாசிக்க முடியும். //

      தூக்கிவிடுவதப் பற்றி சொல்லவே இல்லை நெல்லை நீங்க சரியா புரிஞ்சுக்கலை...சரி விடுங்க...

      கீதா

      நீக்கு
    19. சுவையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் அனைவருக்குமான இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா.. வாங்க.. வணக்கம்.

      நீக்கு
  8. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்றைய பாசிடிவ் செய்திகள் மன மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. பணிவும் திறமையும் கூடிய எம் எல் வி அவர்களின் இசைப்பயணம் சுருக்கமாக நன்றாகச் சொல்லியுள்ளார் ரமா ஶ்ரீநிவாசன். பாராட்டுகள்.

    மகாராஜபுரம் போல, அவரது சந்ததி சங்கீத்த்தில் வளராத்து துரதிருஷ்டமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த லிஸ்ட்டில் NCV யையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏன்.. பாலமுரளி? இயற்பையின் கொடுமையான விதிகள்

      நீக்கு
    2. அனைவருக்கும் மதிய வணக்கங்கள். நன்றி நெல்லைத்தமிழன் அவர்களே. ஸ்ரீவித்யா சங்கீதத்தில் வளரவில்லையே வழிய, திரைப்படங்களில் ஓர் அழியாத இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். கரு சரியாகயில்லை என்று எனக்கு தோன்றினாலும் அவரின் நடிப்பு "ஆபூர்வ ராகங்கள்"ளில் ஓர் இசைக் கலைஞராக மிகவும் பிடித்தமானது.
      மஹாராஜபுரம் சந்தானம் வேரு லெவல். அவர் "ஸ்ரீசக்ர ராஜ" பாட வேண்டும், நாம் உட்கார்ந்து ரஸிக்க வேண்டும்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    தன் குடும்பம் போல் நினைத்து, தன் வீட்டில் குடியிருத்தவர்களின் நலனை கவனித்து, தன் சொந்த தங்கைக்கு செய்வது போல் வளைகாப்பு நடத்தி, பிரசவம் வரையிலும் பராமரிக்கிறேன் என்று சொன்ன மதுரை தமிழ்குமரன் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    முககவசம் தங்கள் செலவிலேயே தயாரித்து இலவசமாக மருத்துவர்களுக்கு வழங்கி வரும் தமிழ்ப்பெண் திவ்யாவுக்கும் பாராட்டுக்கள்.

    இரு நல்ல செய்திகளும் மனதிற்கு உற்சாகமளிக்கிறது. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    எனக்கும் சங்கீதத்திற்கும் காத தூரம் என்று தன்னடக்கமாக கூறிபடியே சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள், மிகச் சிறப்பாக திருமதி எம் எல் வி அவர்களின் இசைப்பயணத்தைப் பற்றி விரிவாகவும், அழகாகவும் கூறியிருக்கிறார். கட்டுரை நன்றாக உள்ளது. சுவாரஸ்யமான பல தகவல்களை தெரிந்து கொண்டேன். மற்றுமொரு முறை படிக்கும் ஆவலை உண்டாக்குகிறது. அந்த அளவுக்கு சகோதரி ரமா அவர்களின் எழுத்து வளம் ஈர்ப்பை உண்டாக்குகிறது.

    அவரது மகள் ஸ்ரீவித்யா அவர்கள் அம்மாவிடம் சங்கீதம் பயின்றும், சில கச்சேரிகளில் அம்மாவுடன் உடனிருந்தும், நடிப்புத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு நடிப்பில் மிளிர ஆரம்பித்து விட்டார் என செய்திகளில் படித்துள்ளேன். இன்றைய நல்லதொரு செய்திகளை தந்த ரமா ஸ்ரீநினிவாசன் சகோதரிக்கும் மனமார்ந்த நன்றிகள். பகிர்ந்த தங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சங்கீதம் பற்றிய பல எண்ணங்களையும் நினைவுகளையும் கிளறுகிறது.

      நீக்கு
    2. ஸ்ரீவித்யா பிரமாதமாக பரதநாட்டியம் ஆடுவார். அரங்கேற்றம் செய்த பின்னர் சில,பல கச்சேரிகளும் செய்தார். ஆனால் சோபிக்கவில்லை! :( தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக்கொண்டவர்களில் அவரும் ஒருவர்.

      நீக்கு
  12. தமிழ்க் குமரனின் கருணையும், அவர் மனைவியின் தாயுள்ளமும் போற்றத்தக்கவை. காலமறிந்து திவ்யவைப் செய்யும் சேவையை பாராட்டாமல் இருக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  13. பெருமனம் படைத்த அரிய மனிதர்களைப் பற்றிய பதிவு. பாராட்டப்பட வேண்டிய சேவை.

    பதிலளிநீக்கு
  14. திருமதி.எம்.எல்.வி. அவர்களைக் குறித்த கட்டுரை சிறப்பு.

    நல்ல உள்ளங்கள் இன்னும் சிலர் வாழ்வதால்தான் வானம் பொழிகிறது.

    பதிலளிநீக்கு
  15. நிறைய சிஷ்யைகளை உருவாக்கியவர் எம்.எல்.வி. அவருடையை ப்ருகாக்கள் ரசனைக்குறியவை. புரந்தரதாசர் கீர்த்தனைகளை பிரபலப்படுதியவர். 'பாரோ க்ரிஷ்ணையா..' மிகவும் பிடிக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ரிஷி வாலி பள்ளியில் இசை கற்பித்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதா ரகுநாதன் அவரின் பிரதம சிஷ்யர். வருடா வருடம் குரு எம்மெல்விக்கு அவர் விழா எடுப்பார்.

      நீக்கு
  16. எம்.எல்.வி. பற்றிய ரமா ஸ்ரீனிவாசனின் கட்டுரை
    ஒரு அறிமுகமாக சரியான அளவில் இருந்தது. பாராட்டுகள். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு விஷயங்களை எழுதுவதன் மூலம் தன் பன்முகத் திறமையை நிரூபிக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு, ஒரே மாதிரி எழுதினால், உங்கள் யாவருக்கும் திகட்டி விடும். இது என் வித்தையை நன்றாக உரசி மேன்மேலும் பட்டைத் தீட்டும் ஓர் சந்தர்பமாகும்.

      நீக்கு

  17. சின்ன வயதில் என் அப்பாவும் அவரது நண்பர்களும் ரேடியோ முன் உட்கார்ந்துகொண்டு GNB, DKP, MLV, மதுரை மணி அய்யர் போன்ற கர்னாட்டிக் இசை மேதைகளை ஸ்லாகித்துக்கொண்டு ’ ஆஹா..! பேஷ்.. பேஷ்..’ என ஆரவாரித்துக் கேட்டு மகிழ்வதை ஆச்சரியத்துடன் பார்த்ததுண்டு. வருஷப் பிறப்பு ஸ்பெஷல் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு விழுந்தடித்துக்கொண்டு முன்னால் போய் உட்காரும் ஆட்களைப் பார்த்து அசந்திருக்கிறேன். நமக்குப் புரியாத இந்த சங்கீதத்துக்கு இப்படி ஒரு தீவிர ரசிகர் பட்டாளமா என வியந்ததுண்டு.

    வஸந்தகுமாரி இசை மேதை என்பதோடு அருமையான மனுஷி. அவர் பற்றிய கட்டுரை உற்சாகமூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார், மிக்க நன்றி. என் பெற்றோர் அந்நாட்களில் ரேடியோ முன் அமர்ந்து எம்.எல்.வியின் கச்சேரியை ரஸித்ததைப் பார்த்திருக்கின்றேன்.

      நீக்கு
  18. நல்ல செய்திகள்...

    எம்.எல்.வி அவர்களைப் பற்றிய கட்டுரை அருமை...

    பதிலளிநீக்கு
  19. ’எல்லாம் இன்ப மயம்’ பாடலின் வீடியோ க்ளிப்பை இன்று ஸ்பெஷலாக இணைத்திருக்கலாம்.
    கட்டுரைக்கான படங்களுக்குக் கீழே யார் யார் படத்தில் என எழுதியிருந்தால் தெரியாதவர்களுக்கும் தெரியவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படத்தில் ஜிஎன்பியும், எம் எல்வியும். இரண்டாவது படத்தில் நடுநாயகமாக எம் எல்வி. மற்றவர்கள் யார்னு தெரியலை. சுதா ரகுநாதன் இந்தப் படத்தில் இல்லை.

      நீக்கு
    2. அல்லது எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

      நீக்கு
    3. எனக்கு ஓரளவு தெரிகிறது. நான் மற்றவர்களுக்காகச் சொன்னேன்.

      ..இரண்டாவது படத்தில் நடுநாயகமாக எம்.எல்.வி.// என்ன ஒரு கண்டுபிடிப்பு!
      அவருக்கு வலதுபுறம் இருப்பவர் சுதா என்று நினைக்கிறேன். பின்புறமும் ஒரு பாப்புலர் முகம்.. நினைவுக்கு வரவில்லை பெயர்!

      நீக்கு

    4. ..//இரண்டாவது படத்தில் நடுநாயகமாக எம்.எல்.வி.// என்ன ஒரு கண்டுபிடிப்பு!// ஹிஹிஹி, இல்லையா பின்னே! வலப்பக்கம் இருப்பவர் சுதாவாக இருக்குமோனு நானும் நினைச்சேன். ஆனால் பார்த்தால் அவராட்டமாத் தெரியலை. பின்புறம் இருப்பவர் பெயர் எனக்கும் தெரிஞ்சாப்போல் ஓர் உணர்வு.

      நீக்கு
    5. கூகிளில் தேடியதில் வலப்பக்கம் இருப்பவர் சாருமதி ராமச்சந்திரன் எனவும் பின்னால் இருப்பவர் வயதானவர் அலமேலு என்னும் பாடகி+வீணை வித்வான், சாருமதியின் அம்மா எனவும் தெரியவருகிறது.

      நீக்கு
    6. //கூகிளில் தேடியதில் வலப்பக்கம் இருப்பவர் சாருமதி ராமச்சந்திரன் எனவும் பின்னால் இருப்பவர் வயதானவர் அலமேலு என்னும் பாடகி+வீணை வித்வான், சாருமதியின் அம்மா எனவும் தெரியவருகிறது.//
      அதே அதே.

      நீக்கு
    7. எம் எல் வி பின்னால் ஸ்ரீவித்யாவும் இருக்கிறார்.

      நீக்கு
    8. @கீதா சாம்பசிவம்: விபரங்களுக்கு நன்றி.

      நீக்கு
    9. ஸ்ரீவித்யாவா அது? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  20. இரண்டு செய்திகளும் சிறப்பான செய்திகள். மதுரை தம்பதியும் மருத்துவர்களுக்கு முகக்கவசம் தரும் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.

    எம்.எல்.வி. அவர்கள் பற்றிய கட்டுரை வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  21. பிரசவிச்ச பெண்ணை பராமரிப்பது மிக எளிதான காரியமல்ல! பணம் மட்டுமே செலவாகாது. உடல் உழைப்பும் தேவை.. தன் வீட்டு பெண்களுக்கே பிரசவம் பார்க்க சோம்பல் படும் இக்காலத்தில் தன் வீட்டில் குடியிருக்கும் பெண்ணை பார்த்துக்குறேன்னு சொல்லவும் பெரிய மனசு வேணும். மதுரை தம்பதியினருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. பின்னூட்டங்கள் எப்பொழுதுமே ஸ்ட்ரியோ டைப்பாக அமைந்து விடுவது வர வர சலிப்பூட்டுகிறது.
    அதில் மாற்றங்கள் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டக் கருத்துரைகளில் மாற்றங்கள் 'எங்கள்' கையில் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு பின்னூட்டமும் ஒவ்வொரு வகை feedback. சில பின்னூட்டங்கள் 'வருகைப் பதிவேடுகள்' அவைகளும் 'எங்களை'ப் பொறுத்த வரையில் ஒரு feedback.

      நீக்கு
    2. வாசகர்களுடான கலந்துரையாடல் அது.

      நீக்கு
  23. ஓரிரு பின்னுட்ட்ங்களைத் தவிர என்று எடுத்துக் கொண்டால் அந்த ஓரிரண்டு
    மற்றவைகளிலிருந்து விடுபட்டு எவ்வளவு தெளிவாக தெரிகிறது பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  24. இந்தத் தடவையும் சகோ. ரமாஸ்ரீ எடுத்துக் கொண்டது வித்தியாசமான கட்டுரைக்கான தலைப்பு. எம்.எல்.வி.யின் பிறந்த நாள் ஜூலை-3 என்பதினால் என்பது தெரிந்து கட்டுரையின் தேர்வுக்கான விசேஷமும் கூடிப்போனது. எம்.எல்.வி.யின் பெயர் வஸந்தகுமாரி என்று தெரியும். ஆனால் அந்த எம்.எல்.லுக்கான காரணம் கட்டுரையாசிரியர் சொல்லித் தெரிந்து வியப்பு கூடியது.
    பொதுவாக அந்த நாட்களில் ஊர் பெயர், பெயரின் இன்ஷியலோடு கூடி வருவது இயல்பு தான். ஆனால் அந்த 'எல்'லுக்கான விரிவு அவர் தாயாரின் பெயரான லலிதாங்கி என்று தெரிந்து ஆச்சரியப்பட்டுப் போனேன். பொதுவாக தந்தை பெயர் தான் இன்ஷியலில் சேர்ந்து வரும் என்ற வழக்கம் மாறி தாயாரின் பெயர் முன்னிலைப் படுத்தப்பட்டதில் கூடுதலான மகிழ்ச்சி. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வத்தில் முக்கியப்படுத்தப்பட்ட மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி. வி. சார், அன்னையில்லாமல் தந்தை இல்லை. தந்தை இல்லாமல் அன்னையில்லை. அவர் ஒரு பாதி, இவர் ஒரு பாதி.

      நீக்கு
    2. நீங்கள் சொல்லியிருப்பது பொதுவானது.

      இது வேறு மாதிரியான பார்வை ரமாஸ்ரீ. சென்ற காலத்து சமூகம் எல்லாவிதங்களிலும் பெண்கள் பிறரை சார்ந்திருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டது. புத்திசாலித்தனத்திலும், குடும்பப்பாங்கிலும், நற்குணத்திலும் அவர்கள் சிறந்திருந்திருந்தாலும் இந்த சார்ந்திருத்தல் அவர்களுக்கான சுயேச்சையான அங்கீகாரத்தை வழங்காதிருந்தது. சொல்லப்போனால் சங்க காலத்திலிருந்தே வழிவழி வந்த நிலை தான் இது. புதுசான ஒன்றில்லை. இருந்தும் அந்தப் போக்கில் ஒரு சின்ன மாற்றம் புலப்பட்டாலும் அவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் நாம் மகிழ்ந்து போகிறோம். அவ்வளவு தான்.

      நீக்கு

  25. மேலும் எம்.எல்.வி. பற்றி ரமாஸ்ரீ அவர்கள் வார்த்தைகளில்--

    //அவர் என்றுமே தன் சிஷ்யர்களையும் தன் சக கலைஞர்களையும் கை தட்டி பாராட்டும் குணமுள்ளவர். என்றுமே மேலும் கற்க வேண்டும் என்ற வேட்கை உடையவராக இருந்தவர்.//

    நல்ல கலைஞர்களின் அடிப்படை குணம் இது.

    எம்.எல்.வி. அவர்களைப் பற்றி அவரது வித்வத் சிறப்புகளைப் பற்றி விரிவாக தாங்கள் எடுத்துக் கூறியிருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. மிக்க நன்றி, சகோதரி!

    பதிலளிநீக்கு
  26. மறுபடியும் நன்றி ஜி.வி. சார்.
    நான் எம்.எல்.வி பற்றி எழுதும்போது சிறிது அச்சத்த்துடந்தான் எழுதினேன். வர்வேற்பா, மண்டையடியா பார்த்து விடுவோம் என்று எழுதினேன். நீங்கள் யாவரும் ஒருங்கினைந்து பாராட்டியமைக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. இரு செய்திகளுமே மிகச் சிறப்பான பாசிட்டிவ் செய்திகள்.

    கர்நாடக இசைப்பாடகி எம் எல் வி அம்மா அவர்களைப் பற்றிய கட்டுரை சிறப்பு. இதுதான் முதன் முறையாக அவரைப் பற்றி அறிந்து கொள்கிறேன். பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி ரமா ஸ்ரீனிவாசன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. முதல் செய்தி : ஆஹா இக்காலத்தில் தங்கள் வீட்டில் தங்கியிருக்கும் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கும் தமிழ்க்குமரனின் மனைவியை மனதாராப் பாராட்டுவோம். வளைகாப்பு எல்லாம் செய்து சூப்பர் குடும்பம் என்ன கருணை. மனதார வாழ்த்துவோம்.

    திவ்யாவின் சேவை அருமை. வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  29. முதல் செய்தி : ஆஹா பிரசவம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிய தமிழ்க்குமரனின் மனைவிக்கு மனதார வாழ்த்துகள் பாராட்டுகள். எத்தனை கடினமான ஒன்று. கருணை உள்ளம். வளைகாப்பு எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தியிருக்காங்க. சூப்பர். மனதார வாழ்த்துவோம்.

    திவ்யா சூப்பர். வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ரமா உங்கள் கட்டுரை சூப்பர்.ரசித்து வாசித்தேன். பின்னே எம் எல் வி யைப் பற்றிய கட்டுரை ஆச்சே. ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அசாத்திய திறமை சாலி!

    ஆஹா உங்கள் பேக் க்ரவுன்ட்!!! வாவ்! டிகேபி க்கு நெருங்கிய உறவு உங்கள் தந்தை. டிகேபி உங்கள் அத்தை..!!!! ப்ளெஸ்ட்.

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ரமா அதுவும் சுவைபட!

    பாராட்டுகள், வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  31. பாஸிடிவ் செய்திகள் இரண்டும் மனிதநேய செய்திகளை சொல்கிறது.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    எம்.எல்,வி கட்டுரை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  32. ஒரு எம்எல்வி பாட்டு சேர்த்திருக்கலாமோ..

    அயர்வான கணங்கள் போகத் தயவானவர் எம்எல்வி

    கட்டுரை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பாதுரை சார். ஆமாம் - அவர் பாடிய திரைப்பாடல்களே 220 க்கு மேல் இருக்கின்றன என்று இப்போதான் படித்துத் தெரிந்துகொண்டேன். சுட்டி கொடுத்திருக்கலாம்.

      நீக்கு
  33. தமிழ் குமரன் தம்பதிகளை வாழ்த்துவோம்.

    வசந்தகுமாரி அவர்கள் பற்றிய கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  34. முதல் செய்தி மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது
    திவ்யா போற்றப்படவேண்டியவர்
    எம் எல் வி கட்டுரை அருமை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!