இன்றைய தனிப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'மயிலாக நான் மாறவேண்டும்.
TMS பாடிய 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' பாடல் கேட்டிருக்கிறோம் அல்லவா.. அந்த பாணியில் அமைந்த சீர்காழி கோவிந்தராஜன் பாடல் இது.
மயிலாக நான் மாறவேண்டும் வள்ளி மணவாளன்
என் தோளில் இளைப்பாறவேண்டும்
மயிலாக நான் மாறவேண்டும் வள்ளி மணவாளன்
என் தோளில் இளைப்பாறவேண்டும்
மயிலாக நான் மாறவேண்டும் வள்ளி மணவாளன்
குயிலாக நான் மாறவேண்டும்
குயிலாக நான் மாறவேண்டும்
முத்துக் குமரேசன் துதி பாடி பசியாறவேண்டும் [மயிலாக]
மலையாக நான் மாறவேண்டும்
எந்தன் முடிமீது வடிவேலன் குடியேற வேண்டும்
மலையாக நான் மாறவேண்டும்
எந்தன் முடிமீது வடிவேலன் குடியேற வேண்டும்
படியாக நான் மாறவேண்டும்
படியாக நான் மாற வேண்டும்
மெய் அடியார்கள் திருப்பாதம் முத்தாடவேண்டும்
அடியார்கள் திருப்பாதம் முத்தாடவேண்டும் [மயிலாக]
==============================================================
==============================================================
1972 ல் வெளிவந்த 'கண்ணம்மா' எனும் 'கலர்' படத்திலிருந்து ஒரு பாடல். கலர் படம் என்று ஏன் தனியாக சொல்கிறேன் என்றால் படம் பார்த்தாலே அது கலர் கலர் என்று சொல்லும் 'வண்ணம்' இருக்கும்.
முத்துராமன் - கே ஆர் விஜயா நடித்த இத் திரைப்படத்தை மா லட்சுமணன் இயக்கி இருக்கிறார். கண்ணதாசன் பாடல். சங்கர் கணேஷ் இசை.
சில பாடல்கள் கேட்கும்போது இப்படி ஒரு பாட்டு வந்திருக்கிறதா என்று தோன்றும். சில, எப்போதோ கேட்டிருக்கிறோமே, அடடா இதை இத்தனை நாள் மறந்திருக்கிறோமே என்று தோன்றும். அந்தத் வகைப் பாடல் இன்றைய பாடல். சிலோன் வானொலிக்கு ரொம்பப் புண்ணியம்.
சென்ற வாரம் பகிர்ந்த P B ஸ்ரீனிவாஸ் கன்னடப்பாடல் எனக்கு இந்தப் பாடலை ஏனோ நினைவூட்டியது. எனவே இந்த வாரம் இந்தப் பாடல்.
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே
கண்ணம்மா...... (எங்கெங்கும்...)
.
முத்துச் சிப்பி போலே – கண்
மூடிக் கொண்ட போதும்
முத்துச் சிப்பி போலே – கண்
மூடிக் கொண்ட போதும்
மூடிக் கொண்ட கண்ணில் எந்தன்
எண்ணம் வந்து மோதும்
மௌனத்தில் வார்த்தை சொல்லம்மா - என்
நெஞ்சத்தில் என்றும் நில்லம்மா
மௌனத்தில் வார்த்தை சொல்லம்மா - என்
நெஞ்சத்தில் என்றும் நில்லம்மா
கண்ணம்மா...... (எங்கெங்கும்...)
.
தாகம் என்று சொன்னேன் - நீ
தண்ணீர் தரவில்லை
மோகம் என்று சொன்ன பின்னும்
முத்துத் தரவில்லை
தாகத்தைத் தீர்த்து விடம்மா - இல்லை
மோகத்தைக் கொன்றுவிடம்மா
கண்ணம்மா.. (எங்கெங்கும்...)
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
பதிலளிநீக்குநற்றாள் தொழாஅர் எனின்.
வாழ்க தமிழ்..
வாழ்க.. வாங்க...
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
நல்லருள் புரிவான்.. நலமுடன் காப்பான் முருகன்..
நீக்கு
மயிலாக நான் மாற வேண்டும் வள்ளி மணவாளன்
பதிலளிநீக்குஎன் தோளில் இளைப்பாற வேண்டும்..
முருகா..
முருகா..
முருகா.. முருகா.. முருகா.. முருகா..
நீக்குஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
பதிலளிநீக்குபடியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே..
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு
மரமானாலும் பழமுதிர்ச்சோலை
மரமாவேன்..
முதல்ல உள்ள பாசுர வரிகள்னால அதனை குலசேகரன் படிம்பாங்க. தாண்டிப் போவார்கள்
நீக்குபொதுவாக நான் கோவில்களில் உள்நுழையும் முதல் படியில் கால் வைப்பதில்லை. தாண்டியே செல்வேன்.
நீக்குகுலசேகரன் படி என்பது கருவறையின் முன்னுள்ள படி. அதற்கு முன்பும் பல மண்டபங்கள் அவற்றிர்க்கான நுழைவாயில் படிகள் உண்டு. பல கோவில்களில் படிகள் தாண்ட முடியாதபடி அகலமாகவும் உயரமாகவும் இருக்கும், குறிப்பாக தென் தமிழகக் கோவில்களில் அப்படி இருக்கும்.
நீக்குஇரண்டு பாடல்களுமே ஒரு முறைக்குமேல் கேட்ட நினைவே இல்லை. இரண்டாவது பாடலாவது, கேட்டிருப்போமோ என்ற சந்தேகத்தை உண்டாக்குது.
பதிலளிநீக்குகேட்டிருக்கிறீர்களா, இல்லையா?
நீக்குஇரண்டும் கேட்ட பாடல்களே...
பதிலளிநீக்குஅதுதானே... நன்றி ஜி.
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குஆமாம். நன்றி DD
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். நன்றி சொல்வோம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் பகிர்வு இரண்டும் அருமை.
முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்தப்பாடல். முன்பெல்லாம் இதை தினமும் கேட்காத நாளில்லை எனலாம்.
இரண்டாவது பாடலுக்குரிய படம் கேள்விபட்டதில்லை. இப்போது பாடலை கேட்டேன். நீங்கள் சொன்னது போல் சிலோன் வானொலியில் நிறைய முறை கேட்ட மாதிரிதான் உள்ளது. இப்போது கேட்ட போதும் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குமுதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்...நல்ல பாடல்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஇரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் ஆனால் அதிகம் கேட்டதாக நினைவில்லை ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஇரண்டாவது படமும் பார்க்கலை. பாட்டும் கேட்கலை. முதலாவது கேட்காமல் இருப்போமா? அதுவும் சீர்காழியின் குரலில்!
பதிலளிநீக்குஅப்பூடிச் சொல்லுங்கோ கீசாக்கா... சீர்காழி அவர்கள் பாடினால்.. என்னா ஒரு சுசியா:).. இருக்கும் கேட்க...
நீக்குநன்றி கீதா அக்கா.
நீக்கு// ஒரு சுசியா:).. இருக்கும் கேட்க... //
நீக்குசுசியா? அப்படீன்னா? ருசியா?
ஆமா ஸ்ரீராம் ஆமா....
நீக்குok.. ok..
நீக்கு////இல்லை, மோகத்தைக் கொன்றுவிடம்மா....///
பதிலளிநீக்குஎங்கே எங்கே மோகன் எங்கே:).. ஹையோ சே..சே.. ஆரம்பமே தடம்புரளுதே டங்கூஊஊஉ கர்ர்ர்ர்:)).. மோகம் எங்கே.. நில்லுங்கோ ஏகே 45 ஐ எடுத்து வாறேன் சுட்ட்ட்ட்ட்டிடலாம் ஹா ஹா ஹா...
பாரதியின் வரிகளிலிருந்து வார்த்தை எடுத்திருக்கிறார் கவியரசர்... 'மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு...'
நீக்குகுருவாயூர் பின் வேலியில அழகாக இருக்கும் அழகன் பற்றிய பாடல் போட்டிருக்கிறீங்கள்.. எனக்கு மிகவும் பிடிக்கும்.. மீண்டும் மீண்டும் கேட்க அலுக்காது...
பதிலளிநீக்குரசனைக்கு நன்றி.
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்கள்...... இன்று மீண்டும் ஒரு முறை கேட்டு ரசிக்க முடிந்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.
பதிலளிநீக்குமுருகன் பாடல் பிடித்த பாடல், காணொளியும் அருமை. மயில் நடனம் அருமை.
பதிலளிநீக்குஅடுத்த பாடல் நன்றாக இருக்கும் முன்பு அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்டு இருக்கிறேன், இப்போது தொலைக்காட்சி சேனல்களில் பழைய பாடல் நிகழ்ச்சியில் இந்த பாடலை வைக்கவே மாட்டேன் என்கிறார்கள்.