வியாழன், 19 செப்டம்பர், 2024

ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடிஜின்ஜின்னா...

 கண்ணே கண்மணியே...

கடைசியாக 2022 ல் கண் பரிசோதனை செய்தது. 

சில மாதங்களாக (!) கணினி, புத்தகங்கள்  படிப்பதில் சிரமம் இருந்தது.  ஆறு மாதத்துக்கொருமுறை மறுபரிசோதனைக்கு வரச்சொல்லி இருந்தாலும் நான் அப்படி எல்லாம் செல்லவில்லை.  அப்போது சொல்லி இருந்தது "கேடராக்ட் லேசாக இருக்கிறது.  அவசரம் இல்லை.  பார்த்துக்கொண்டு அப்புறம் செய்யலாம்.  ஆறு மாதம் கழித்து வாருங்கள்!"

காய்ந்த கண்களை உடையவனாக எனக்கு அந்தப் பரிசோதனையும் செய்தபோது 5 mm என்றார்கள்.  அதாவது ரொம்ப காய்ந்து போயிருக்கிறது.  கூகுள் செய்து பார்த்தால் அது காட்டும் அளவுகளுக்கும், அளவீடுகளுக்கும் இவர்கள் சொன்னதற்கும் ஒப்பீடு புரியவில்லை.  எனினும் அவர்கள் சொன்ன விலை உயர்ந்த கண்  சொட்டு மருந்து போட்டுக்கொண்டு வந்தேன்.  


பஞ்சதந்திரத்தில் கமல் தேவயானியிடம் சொல்வது போல எதையுமே முழுசாய் உருப்படியாய் செய்பவன் அல்ல நான் என்பதால் சீக்கிரமே கைவிட்டு விட்டேன்.

இந்த வாரம் கண் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.  ஒருவேளை கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி விடுவார்களோ என்று பயத்தோடேயேதான் போனேன்.  அனஸ் கொடுக்க கண்ணில் நேரடியாய் ஊசி குத்துவார்களாமே..  என் மாமியார் என்னை பயமுறுத்தி வைத்திருந்தார்.

சென்றமுறை "தொடர்ந்து படித்தால் இமைகள் கனமாகி விடுவது போல உணர்கிறேன்.  தூக்கம் வருவது போல இருக்கிறது" என்று புகார் சொன்னதும் கண்ணில் நீர்த்தன்மை சோதிக்கச் சொல்லி பார்த்தபோது 5 இருந்தது.  ரொம்ப குறைவாம்.  அதற்குதான் மருந்து அரைகுறையாய் போட்டுக்கொண்டேன்.

இந்தமுறையும் அது அந்த அளவிலேயே இருந்தது.  "மொபைல் அதிகமாய் பார்ப்பீர்களா?" என்றார் அந்த சோதனைப் பெண்.  "இல்லை கணினி" என்றேன்.  

சிறு இரும்புக்கவசம் மாட்டி அதில் லென்ஸைப் பூட்டி ஒரு கண்ணை மறைத்து படிக்க வேண்டிய ஆறு வரிசையில் ஓரளவுக்கு ஐந்தாவது வரிசை வரை படித்து விடுகிறேன்.  ஆறாவது வரிசை கொஞ்சம் முயற்சித்தால் குன்ஸாக சொல்ல முடிகிறது.  அவரிடம் இருந்த கடைசி லென்ஸ் வரை என் கண்ணில் மாட்டி படிக்கச் செய்து அனுப்பினார் அந்தப் பெண்.  

கண் பாப்பாவை விரிய வைக்க மருந்திட்டு காத்திருக்கச்சொல்லி பஞ்சு கொடுத்தார்கள்.  ஒரு மணிநேரம் கழித்து மருத்துவரைப் பார்க்ச் சென்றால் வழக்கமாக பார்க்கும் உதய்குமார் சர்ஜரியில் இருந்தாராம்.  ஒரு இளம்பெண் என்னை அன்புடன் அழைத்து விசாரித்து அறுவை சிகிச்சைக்கு மறுபடி ஆறுமாதம் வாய்தா கொடுத்தார்.  

"கணினியில் படிக்கச்சொல்ல காலையில் நார்மலாக படித்தாலும் போகப்போக கண்களை சுருக்கி படிக்கிறேன்.  சமயங்களில் ஒற்றைக் கண்ணால் படிக்க முயல்கிறேன்" என்றேன்.

"கணினியில்தான் வேலையா?  கண்ணாடி போட்டுக் கொண்டுதானே படிக்கிறீர்கள்?"

"இல்லை மேடம்..  வெளியில் போகும்போது மட்டும்தான் கண்ணாடி..."

"அங்கதான் தப்பு பண்றீங்க... எப்பவும் கண்ணாடி போட்டுக்கிட்டே இருங்க...  எப்படியும் சர்ஜரி இப்போ தேவை இல்லை என்றே நினைக்கிறேன்"

எனக்கு வந்த சந்தோஷத்துக்கு கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்திருப்பேன்.  நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஒரே நேரத்தில் அந்த குஷ்பூ டாக்டரிடமும், பாஸிடமும் அடி வாங்கி இருப்பேன்.  எனவே மனதுக்குள் முஷ்டியை மடக்கி முழங்கையை "எஸ்" என்று பின்னால் இழுத்துக் கொண்டேன்.  வெற்றிக்குறி!  படங்களில் பார்த்திருக்கிறேனே....

காய்ந்த கண்களுக்கு 'விலை ரொம்ப உயர்ந்த' மருந்தை விட்டு நான் முன்பு உபயோகித்து வந்த பழைய 'விலை உயர்ந்த மருந்தை'யே எழுதிக் கொடுத்தார்.  நானும் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை!  ஆனால் மெடிக்கல் ஷாப்பில் காட்டி தவறாமல் வாங்கிக்கொண்டு விட்டேன்!


வெளியில் வந்து உற்சாகத்தில் சீட்டி அடித்துப் பார்த்தேன்.  'டச்' விட்டுப்போனதால் வெறும் காற்றுதான் வந்தது.  அதனாலென்ன..  லேசாய் மாற்றப்பட்ட புதிய பவர் கிளாசுக்கு ஆர்டர் தருவதற்கு கீழே வந்தேன்.

"ப்ராகிரஸிவா?"

"ஆமாம். எவ்வளவு ஆகும்?"

"பிராண்டட் பதினோராயிரம் ஆரம்பம்.  சாதா எட்டாயிரம்.."

"அம்மாடியோவ்..."

"பிராண்டட் தரவா.. சாதாரணமா?" - அலுத்துப்போன கேள்விகள்.

"சாதாரண விலையில் பிராண்டட் கொடுங்கள்" என்று நான் சொன்னதை அந்தப் பெண் ரசிக்கவில்லை.

"யுவி வேண்டுமா?  சிரமம் தெரியாம படிக்கலாம்?"

"எவ்வளவு?"

"13,000 ப்ளஸ் ஜி எஸ் டி.."

"எட்டாயிரத்திலேயே யுவி தரமுடியுமா?"

"நான் உங்களுக்கு ப்ராக்ராஸ்ஸிவே தந்து விடுகிறேன்"

"எவ்ளோ?"

"ஃபிரேம் 2500, லென்ஸ் எட்டாயிரம்..  மொத்தம் 10, 500"

பேரத்தில் கடைசியாக ஒன்பதாயிரத்தில் முடித்தேன்.  நான்கு நாட்களில் புதுக்கண்ணாடி!

ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடிஜின்ஜின்னா...

===========================================================================================

படித்ததில் நெகிழ்ந்தது....

உஞ்சவிருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம்.


உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம்.

இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம்.

உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட்டை வரை அரிசி கிடைக்கும். அதில் அன்றைய தேவைக்கு எனக்கானது போக மிஞ்சியதை நான் தங்கி இருக்கும் முதியோர் இல்லத்திற்கோ அரு கிலுள்ள அநாதை இல்லத்திற்கோ கொடுத்து விடுவேன்.’’ என்கிறார் கல்யாணராமன்.

“உபன்யாசம் நடக்கும் இடங்களில் பட்டுச் சேலை, பட்டு வேட்டி வைத்துக் கொடுப்பார்கள். அதைக்கூட நான் வைத்துக்கொள்வதில்லை. ஏழைப் பொண்ணுங்க திருமணத்துக்காகக் கொடுத்துவிடுவேன். உபன்யாசம் தவிர, ஜோதிடம் பார்க்கிறேன். எனது உபன்யாசத்தை சி.டி., பென் டிரைவ்களில் பதிவு செய்து விற்பனை செய்கிறேன். இதிலெல்லாம் கிடைக்கும் வருமானத்தையும் நான் வைத்துக் கொள்ளாமல் ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக பட்டு சேலை, மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து விடுவேன். எனக்காகவே பட்டுச்சேலையும் மாங்கல்யமும் விலை குறைத்துத் தருவதற்குத் தெரிந்த கடைக்காரர்கள் இருக்கிறார்கள்” என்கிறார்.

ராதே கிருஷ்ணா சொல்லிய படியே விடைபெறுகிறார் திருச்சி கல்யாணராமன்.  

‘கடவுள் உனக்கு நிறையக் கொடுப்பான். ஆனால், அதில் எதையுமே உனக்கென்று சேர்த்து வைத்துக் கொள்ளாதே; மற்றவர்களுக்கு கொடுத்துவிடு’ இது எனது தந்தையார் கைலாசம் எனக்குச் சொல்லிக் கொடுத்த வேதம். அந்த வேதத்தை நாற்பது வருடங்களாக விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறார் இதிகாச உபன்யாசகர் திருச்சி கல்யாணராமன்.

==========================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

- காதல் தோல்வி காரணமாக ரயில் தண்டவாளத்தில் தலைவைக்கச் சென்ற இளம்பெண் ரயில்வருவதற்குள் தண்டவாளத்திலேயே தூங்கி அதனாலேயே பிழைத்திருக்கிறார்!  ரயில் டிரைவர் சமயோசிதமாக ரயிலை முன்னரே நிறுத்தி, வந்து, குழம்பி,  எழுப்பி விசாரித்தபோதுதான் விவரம் தெரிந்திருக்கிறது!

திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தினரை பறி கொடுத்த பெண், அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்கு முன்னர் அவரது வருங்கால கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்புக்கு மலையாள நடிகர் மம்முட்டி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை: அதிக சம்பளம் வாங்கி தருவதாக, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படும் நபர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சி வலுக்கட்டாயமாக, 'சைபர்' குற்றவாளிகளாக மாற்றப்படுவதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்வு 11-9-24 அன்று  நடந்தது.  ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் பேசிய வீடியோ, சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவர், அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.  தற்சமயம் பொதுஜனம் இவர் கடைக்கு சென்று பில்லில் இவர் மாற்றி மாற்றி போட்டிருக்கும் ஜி எஸ் டி விவரங்களை படத்துடன் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

நம் சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள் வியாழன். அதனுடைய மிகப் பெரிய நிலவு கேனிமீட். இதுவே ஒட்டுமொத்த சூரியக் குடும்ப நிலவுகளில் பெரியது. 1610ஆம் ஆண்டு கலீலியோவால் கண்டுபிடிக்கப்பட்ட இது, புதன் கோளை விடப் பெரியது. நம் பூமியை ஒரு விண்கல் தாக்கியதால் இங்கிருந்த டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்தன என்பதை அறிவோம். ஆனால், இந்த விண்கல்லை விடப் பல மடங்கு பெரிய விண்கல் ஒன்று 400 கோடி வருடங்களுக்கு முன் கேனிமீட் நிலவைத் தாக்கியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் துணைக்கோளாக நிலவு மட்டுமே உள்ளது. ஒரு சில சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை சுற்றி வருவது வழக்கம்.அந்த வகையில் 2024 PT5 என்று அழைக்கப்படும் குட்டி நிலவு பூமியை சுற்றிவர உள்ளது. இது, வெறும் 10 மீட்டர் விட்டம் கொண்டது.

- கிழக்கு சாளுக்கிய மன்னன் கொக்கிலியின் தெலுங்கு கல்வெட்டு, ஆந்திர மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  கிழக்கு சாளுக்கிய மன்னனான கொக்கிலியின் காலத்தைச் சேர்ந்த இந்த கல்வெட்டு மிகவும் அரியது. இரண்டாம் ஜெயசிம்மவல்லபாவுக்கும், மூன்றாம் விஷ்ணுவர்தனாவுக்கும் இடையே, ஆறு மாதங்கள் அதாவது, 726, 727ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்தவர் கொக்கிலி.

உத்தரபிரதேசத்தில் திருமணமான வெறும் 44 நாட்களில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணின் புகாரை கேட்டு போலீசார் திகைத்து போயினர்.  உண்மையில் விவாகரத்துக்கு காரணம் வரதட்சணை கொடுமையல்ல.. அதை விடவும் பெரிய கொடுமையான விஷயம் என தெரியவந்துள்ளது.  தனது கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், தினமும் குளித்து சுத்தமாக இருக்குமாறு கூறினால், அதனை ஏற்க மறுப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாரம் ஒருமுறை கங்கை நதியில் ஓடும் நீரை எடுத்து உடலில் தெளித்து விட்டு, தூய்மையடைந்து விட்டதாகவும், திருமணமான 44 நாட்களில் வெறும் 6 முறைதான் அவர் குளித்து இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நியூயார்க்: உலகின் 27 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது. கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.  அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியில் தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3 கண்டங்களில் 27 நாடுகளில் பரவி உள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குண்டூர்,ஆந்திரா: ஆந்திராவில் கடந்த மே மாதம் சட்டப் பேரவை, மக்களவை இரண்டிற்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான பாட்டில்கள், மற்றும் கலால் துறையினரால் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் சாலையில் கொட்டி புல்டோசர் மூலம் அழிக்க காவல்துறையினர் முற்பட்டனர். அதை வேடிக்கை பார்ப்பதற்கு கூடிய பொதுமக்கள் போலீஸ் காவலையும் மீறி அந்த மதுபான பாட்டில்களை இரு கைகளிலும் அள்ளிக்கொண்டு ஓடினர். இந்த செய்திக்காக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

ஆக்ராவில் பெய்த கனமழையால் தாஜ்மஹாலின் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டு,ஷாஜஹான் சமாதி வரை சென்ற மழை நீர். 

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 83.5 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வினியோகம். 

சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்ட் கார் தயாரிப்பு நிறுவனம். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஏற்றுமதிக்கு மட்டுமே.

மயிலாடுதுறை: திருமணத்திற்கு பிறகும் நண்பர்களோடு வெளியே செல்வதற்கும், சுற்றுலா போவதற்கும் தடை சொல்ல மாட்டேன் என்று மணமகனின் நண்பர்கள் 100 ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய வினோத சம்பவம் நடந்திருக்கிறது. 

20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அப்போது அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட்டிற்கு அணு அயுதம் பற்றி எழுதிய எச்சரிக்கை கடிதத்தின் நகல் 32.7 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

லண்டன்: ஆங்கில இலக்கிய உலகின் பெருமைக்குரிய விருதாகிய புக்கர்(Booker) விருதிற்காக 13 நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் ஆறு இடங்களை பிடித்துள்ள நாவல்களில் ஐந்து நாவல்கள் பெண் கதாசிரியைகளால் எழுதப்பட்டவை. புக்கர் விருது தொடங்கப்பட்டு 55 ஆண்டுகளில் இப்படி பெண்கள் முன்னணியில் இருப்பது இதுவே முதல் முறை. - வாழ்த்துவோம்.

பெண் திரைக்கலைஞர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய மருத்துவர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு.




=============================================================================================

கீழுள்ள படச்செய்திகள் இரண்டும் நண்பர் குமரன் ராம் பதிவிலிருந்து திருடியது!


A parasite (named Diplostome sp.) 
Contains a fascinating survival story. 
It lives in the eye of the fish. 
When it's time to breed, it manipulates fish behavior and swims at surface level to catch and eat birds. 
Then the parasite enters the bird's stomach, reproduces and multiplies and comes out. 
The cycle continues. 
The universe is fascinating. 
The design is very complex

=============================================================================================



================================================================================================

ரசித்த ஓவியம் கந்தசாமி சார் பதிவிலிருந்து...


============================================================================================


================================================================================================

பொக்கிஷம் :

கேள்வி  : எல்லாவற்றுக்கும் ஒரு Saturation Point இருப்பது போல விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா?

சுஜாதா :  உண்டு.  உயிரின் ரகசியமும், மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும்போது விஞ்ஞானம் முற்றுப்பெறும்.



நேற்றுமுதல் தொடக்கம்!







108 கருத்துகள்:

  1. மருத்துவத்துறையில் பணியாற்றியவர் கண்ணில் ஊசி குத்துவார்களாமே என்றெல்லாம் குழந்தைத் தனமாகக் கேட்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊசி போட்டுக்கொள்வதென்றால் எப்போதும் எனக்கு பயமே...  அல்லது தயக்கமே.  

      ஆய்வகத்தில் விரல் நுனியில் ரத்தம் ஒரு துளி சேகரிக்க சிறுஊசியை நுட்பனர் குத்த வரும்போது, குத்தும் முன்பே துள்ளிக் குதிப்பவன் நான்!

      நீக்கு
  2. "முதியோர் இல்லங்கள் தாம் நமக்கு சொர்க்கம் "
    என்று சொல்லும் க.ராமன் அங்கு தங்குவது எப்படி? I mean paying guest?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை.  ஒருவேளை தனக்கு வரும் தானங்களை அவர்களுக்கு கொடுப்பதாக சொல்கிறாரே..  அதனால் கட்டணம் இன்றி இருக்கலாம்.  அல்லது இவர் இயல்புக்கு கட்டணம் செலுத்தியும் விடலாம்.

      நீக்கு
    2. கட்டணமின்றி என்றதைத் தான் நானும் நினைத்தேன். இது ஒரு வகையில் பண்டமாற்று மாதிரி. அதுவே உண்மை எனில், சிலர் எவ்வள்வு சாமர்த்தியமாக இருக்கிறார்கள். பாருங்கள்.

      நீக்கு
    3. அவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் நாம் சொல்லி விட முடியாது. அரிசி தானம் மூட்டைகளில் வரும்போது அப்படியே முதியோர் இல்லங்களுக்கு கொடுத்து விடுவேன் என்கிறார். அது என்ன வகை விவரம்?

      நீக்கு
    4. அதுவே உண்மை எனில் -- என்று ஒரு clause போட்டிருக்கிறேன், பாருங்கள்.

      நீக்கு
    5. பார்த்து விட்டுதான் பதிலளித்தேன். இதில் சாமர்த்தியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பாராட்டத்தான் தோன்றியது.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நேற்றுப் பதிவில் புதன் கேள்வி பதில் சம்பந்தமாக ஒரு விளக்கம் கேட்டிருக்கிறேன். பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி வி சார் பூவனத்துள் நுழைய முடியவில்லை. இது நேற்றிலிருந்து இருக்கிறது.
      //Sorry, the page you were looking for in this blog does not exist.//
      கொஞ்சம் கவனிப்பீர்களா?
      Jayakumar

      நீக்கு
    2. அது வேறொன்றுமில்லை JKC ஸார்...  டிராஃப்டில் இருந்தது அவர் அறியாமல் பப்ளிஷ் ஆகி விட்டது.  ஞாயிறு அன்று வெளியிடலாம் என்று அதை மறுபடி டிராஃப்டுக்கு அனுப்பி இருக்கிறார் ஜீவி ஸார்.

      நீக்கு
    3. விசாரிப்புக்கு நன்றி, ஜெஸி ஸார்.
      நான் செய்ததை அப்படியே சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அநியாய விலை தான். கண்ணாடியின் விலை யைச் சொல்கிறேன். ப்ரொஃரெஸ்ஸிவ் பிரயோஜனம் இல்லை. bifocal போதும். என்ன லேப்டாப் உபயோகிக்கும்போது கொஞ்சம் சிரமப்படுத்தும். பாஸும் நானும் சென்ற வருடம் கண்ணாடியை மாற்றினோம். ஒருத்தருக்கு 3000 ஆனது.

    பல செய்திகளும் அறியாதவை. இப்படி தேடிப்பிடித்து வெளியிடும் பா வெ அவர்களுக்கு பாராட்டுக்கள். முக்கியமாக கோள்கள் பற்றிய செய்தி, மற்றும் புதிய வகை கொரானா.

    பறவையின் வயிற்றில் பல்கிப்பெருகும் கிருமி எப்படி மீண்டும் மீனின் கண்களுக்கு செல்கிறது என்ற விவரம் இல்லை.

    பிரபஞ்சத்தின் புதிர்களின் விடைகள் எல்லாம் தெரிந்த விட்டால் கடவுள் எதற்கு? 800 கோடி ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட சிக்னலை புரிந்து கொண்டாலும் அனுப்பும் பதில் அங்கு போய் சேர இன்னும் 800 கோடி வருடங்கள் ஆகும். அத்தனைக்காலம் உயிருடன் இருப்பார்.

    வித்தியாசமான ஓவியம் ஓகே.

    என்ன செய்வது மறதியை மறக்க முடியவில்லையே, தேடுவதை பற்றி சொல்கிறேன்.

    பொக்கிஷ ஜோக் என்ன சொல்கிறது? நாரையை பாண்டி விளையாடக் கூப்பிடுகிறதா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவுக்கு தக்க பணியாரம் என்பது போல கிடைக்க, ஊருக்கு தக்க விலை!  நான் முன்பு இருந்த வீட்டுக்கருகில் ஒரு ஸ்பெக்ஸ் கடை இருந்தது.  இங்கு 7,000 சொல்வதை அவர் 2,000 சொல்வார்.  ஆனால் இப்போது அந்தக் கடை இல்லை.  முகத்தைத் தூக்கித் தூக்கி bifocal வழியில் படிப்பதைவிட இது தேவலாம் என்று நினைத்தேன்.  இங்கும் அது 3000 ரூபாய்தான்!

      செய்தி பாராட்டுதல்களை நன்றி.

      "பறவையின் வயிற்றில் பல்கிப்பெருகும் கிருமி..."  - ஆம்.  அந்தத்தகவல் அரைகுறை.  

      பகிர்ந்திருக்கும் என் நண்பர் ஒரு பல்துறை வித்தகர்.  வானிலை சொல்வார்,  பாடல் பாடுவார், விஞ்ஞானம் பேசுவார் கோவில்கள், ஸ்தல புராணங்கள் சொல்வார்.


      உண்மைதான்.  நாம் பார்க்கும் நட்சத்திரங்களே இப்போது இருப்பவை அல்ல என்று முகில் ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தார்.

      நாரையை விளையாட அழைப்பது போலதான் தோன்றுகிறது!

      நன்றி JKC  ஸார்...

      நீக்கு
    2. //பல செய்திகளும் அறியாதவை. இப்படி தேடிப்பிடித்து வெளியிடும் பா வெ அவர்களுக்கு பாராட்டுக்கள்// நீங்கள் பாராட்டியிருக்கும் செய்திகளை தொகுத்திருப்பது ஸ்ரீராம். நியூஸ் ரூமில் அவருடைய பங்களிப்பு கணிசம், ஆனால் தன் பெயரை போட்டுக் கொள்ளாமல் முழு பெருமையையும் எனக்கே விட்டு கொடுத்து விடுகிறார். எனக்குதான் ஏறாறுக்கொள்ள கூச்சமாக இருக்கிறது. இனிமேல் பாராட்ட வேண்டுமென்றால் செய்தியை தொடுத்த வருக்கு என்று கூறி விடுங்கள். நன்றி.

      நீக்கு
    3. நீங்கள் சங்கடப்படுவீர்கள் என்றுதான் நான் நன்றி கூறிவிட்டேன்!  நன்றி பானு அக்கா.

      நீக்கு
    4. 800 கோடி ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட சிக்னலை புரிந்து கொண்டாலும் அனுப்பும் பதில் அங்கு போய் சேர இன்னும் 800 கோடி வருடங்கள் ஆகும். அத்தனைக்காலம் உயிருடன் இருப்பார்.//

      எனக்கும் இது தோன்றியது ஜெ கே அண்ணா. அது போல அதே ஃப்ரீக்வென்ஸி மெயின்டெய்ன் ஆகுமா? அதுவும் இருக்கிறதே.

      கீதா

      நீக்கு
    5. பிரபஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அவ்வப்போது பிரபஞ்சம் பற்றிய அறிவியல் செய்திகளில் இதைத் தெரிந்தும் கொள்ளலாம்.

      செய்திகளில் அறிவியல் செய்திகள், பயனுள்ள செய்திகள் இடம் பெறுவது கவர்கின்றது ஸ்ரீராம். இப்படியானவை சுவாரசியம்.

      பானுக்கா லீவா?

      கீதா

      நீக்கு
  6. நேற்றைய பதிவில் என்னுடைய பின்னூட்டத்தை kgg கவனித்தாரா? நீக்க வேண்டும் என்றால் நீக்கிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீக்கத் தேவை இல்லை.  KGG உங்களுக்கு பதில் அளித்திருக்கிறார். மேலும் நீக்க வேண்டும் என்று நினைத்தால் நாங்களே நீக்க முடியுமே...!

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. //அனஸ் கொடுக்க கண்ணில் நேரடியாய் ஊசி குத்துவார்களாமே.. என் மாமியார் என்னை பயமுறுத்தி வைத்திருந்தார்.//

    இப்போது ஊசி குத்துவது இல்லை. மிக எளிதாக அறுவை சிகிட்சை நடைபெறுகிறது. இப்போது புதிதாக கண் அறுவை சிகிட்சை செய்தவர்களை கேளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியார் ஒரு மாதத்துக்கு முன் அ. சி செய்து கொண்டார்!  இதற்கு ஏதோ சொட்டு மருந்தே போதும் என்று அகர்வாலில் செய்தார்களாம்.  நான் சென்றது DRR.  இங்கு ஊசிதான்!  அரவிந்திலும் ஊசிதானாம்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
    கண்கள் என்னையும் பயமுறுத்துகின்றன.வீட்டில் சொன்னால், என் ஒரே பொழுது போக்கான மொபைலுக்கும் தடா விதிப்பார்கள். உங்கள் பதிவை படித்ததும் வயிற்றில் சங்கடம்.

    இப்போதுதான் என் இளைய சம்பந்தி (இரண்டாவது மகனின் மாமியார்) வலுக்கட்டாயமாக வெளிநாட்டிலிருந்து வந்த அவரின் குழந்தைகள்( மகள், மகன்) அழைத்துச் சென்று இரு கண்களுக்கும், பொறை அ. சி செய்து வந்தனர். (இருவார இடைவெளியில் இரண்டு கண்களும்) அவர்களை விட நான்தான் பயந்தேன் எனச் சொல்லலாம். இப்போது அவருக்கு பார்வை நன்றாக தெரிகிறது என்று சொன்னார்.

    தங்களுக்கு இந்த மட்டும் வேறு கண்ணாடி அணிந்தால் பிரச்சனை இல்லை என்று சொன்னது சந்தோஷம்.

    செய்தி அறை படம் வித்தியாசமாக இருக்கிறது. இன்று நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  மொபைல் தடாவுக்கு பயந்து சொல்லாமல் இருக்கிறீர்கள்...  உங்கள் மகன் போன் நம்பர் கிடைக்குமா?!!

      கண்புரை அறுவை சிகிச்சை நடந்தால் கண்ணாடி அணியத்தேவை இல்லாமல் நன்றாககப் படிக்கலாம்.  அதுதான் மினிமம் 30,000 திலிருந்து  நீங்கள் ஒத்துக்கொள்ளும் விலையில் கண்ணில் லென்ஸ் பொருத்தி விடுகிறார்களே...!

      செய்தியறை பாராட்டுகளுக்கு பானு அக்கா சார்பிலும் நன்றி.

      நீக்கு
    2. /ஹா.. ஹா.. ஹா... மொபைல் தடாவுக்கு பயந்து சொல்லாமல் இருக்கிறீர்கள்... உங்கள் மகன் போன் நம்பர் கிடைக்குமா?!!/

      ஆகா.. போட்டுத்தரவா? ஹா ஹா ஹா. ஆனால், மகன்கள் , மகள் அனைவருமே இரவு சின்ன விளக்கொளியில் மொபைல் பார்க்காதே என்று எச்சரித்தாகி விட்டது. எனக்கு அந்த நேர்ந்தான் சற்று ப்ரீயாக யாருடைய தொந்தரவு மின்றி மனது எழுத்துலகில் ஒர் பறவையாக சிறகடிக்கிறது. மதியங்களில் கைப்பேசியை எடுத்தாலே ஏதாவது ஒரு வேலை வந்து குறுக்கிடுகிறது. தலைப்பில் உள்ளபடி நீங்களும் கண்களை கண்ணே கண்மணியே என கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி.

      நீக்கு
    3. வெளிச்சம் இல்லாத இடத்தில் மொபைல் பார்க்கக் கூடாது என்பார்கள். கண்ணுக்கும் கெடுதல். தூக்கத்தைத் தூண்டும் நரம்புகளை அது செயலிழக்கச் செய்து விடும் என்பார்கள்.

      நீக்கு
  10. ‘//கடவுள் உனக்கு நிறையக் கொடுப்பான். ஆனால், அதில் எதையுமே உனக்கென்று சேர்த்து வைத்துக் கொள்ளாதே; மற்றவர்களுக்கு கொடுத்துவிடு’ இது எனது தந்தையார் கைலாசம் எனக்குச் சொல்லிக் கொடுத்த வேதம். //
    திருச்சி கல்யாணராமன் அப்பா சொல்லிக் கொடுத்தபடி வாழுவது மகிழ்ச்சி.

    //மயிலாடுதுறை: திருமணத்திற்கு பிறகும் நண்பர்களோடு வெளியே செல்வதற்கும், சுற்றுலா போவதற்கும் தடை சொல்ல மாட்டேன் என்று மணமகனின் நண்பர்கள் 100 ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய வினோத சம்பவம் நடந்திருக்கிறது.//


    மணமகள் கையெழுத்து போட்டது நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தந்து இருக்கும்.

    தேடுதல் கவிதை நன்று.

    பொக்கிஷபகிர்வுகள் நிறைய விஷயங்களை சொல்கிறது.
    சிலநினைவுகள் - எப்படி எல்லாம் படிக்காமல் இருக்க வழி கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்ற வியப்பை தருகிறது.
    கொக்கு பாண்டி விளையாட கட்டம் போட்டது சிரிப்புதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா...  வெறும் ஜோக்ஸாக பகிராமல் கொஞ்சம் இப்படி பகிரலாமே என்று...  இருக்கட்டும் என்று ஒரு ஜோக்கும்!  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  11. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  12. விடியற் காலையிலேயே
    பதிவை வாசித்து விட்டேன்...

    கண் நலம் பெற்றமைக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  13. திருச்சி கல்யாணராமன் அவர்கள் - தந்தை சொல்லே மந்திரமாக வாழ்வது நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. கடைசியா ஒரு வழியா எல்லாரும் உங்களை குண்டுக்கட்டா கூட்டிப் போய் கண் பரிசோதனைக்குப் போனீங்களா!!!

    பாஸின் அம்மா - கண்ல ஊசி போடுவாங்கன்னு பயமுறுத்தியதை வாசித்துச் சிரித்துவிட்டேன்.

    கண்ணபுரை//

    இதக் கொஞ்சம் பாருங்க...பதிவுக்கு ஏத்தாப்ல ப்ரூஃப்?? ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வியாழன் பகுதி நன்றாக இருந்தன.

    திருச்சி கல்யாணராமன் மனதைக் கவர்ந்தார். ஒரு வருடம் என்றாலும், ஏன் ஒரு மாதம் என்றாலும் நம்மால் உஞ்சவிருத்தியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

    ஜீவி சார் கருத்து, ஒருவேளை யாரும் மழைக்கு ஒதுங்கினாலும் வாடகை கேட்பாரோ என்று எண்ண வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  கல்யாணராமன் நெகிழ வைக்கிறார்.  இந்தக் காலத்தில் இப்படியா என்று.

      நீக்கு
  16. எனக்கும் கண் பரிசோதனை அதாவது மருத்துவ பரிசோதனை - சும்மா கண்ணாடி போடுவதற்கானது அல்ல - செய்து மாதங்கள்? வருடங்கள் ? ஆகிவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்புரை வந்து சிகிச்சை செய்யாமலே விட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.  பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். 

      எனினும்,

      நீங்களும் சீக்கிரம் கண் மருத்துவரை பார்த்து விடுவது நல்லது கீதா.

      நீக்கு
  17. மஹாளயபக்ஷத்தில் சில உறவினர்கள் தினமும் தர்ப்பணம் செய்கின்றனர். நான் விசாரித்த வரையில் ஒரு முறை தர்ப்பணம் பண்ணினாலே போதுமானது என்றுதான் சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யக்கூடாது என்றில்லை. நான் முதல் வருடம் மட்டும் தினமும் தர்ப்பணம் செய்தேன்.  அப்புறம் ஒருநாள் மட்டும்.  

      அப்பா சித்திரா பௌர்ணமி.  அம்மா சதுர்த்தசி...  கடைசியில் வரும் என்பதால் மஹா பரணியில் செய்து விடுகிறோம்.

      நீக்கு
  18. ப்ராக்ரசிவ் லென்ஸ் எனக்குப் பழகாதோ என்று பயம். பைஃபோகலில் ரோடில் சரியாக நடக்க முடியவில்லை. படிப்பதற்குத் தவிர கண்ணாடி அணிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Easy. நான் நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டியவன். அணிவதில்லை. இப்போது கூட கண்ணாடி இல்லாமல்தான் டைப்புகிறேன்!

      நீக்கு
  19. "அங்கதான் தப்பு பண்றீங்க... எப்பவும் கண்ணாடி போட்டுக்கிட்டே இருங்க... எப்படியும் சர்ஜரி இப்போ தேவை இல்லை என்றே நினைக்கிறேன்"//

    ஸ்ரீராம் கணினிக்கும் கண்ணாடி போட்டுக் கொண்டு வாசிப்பது நல்லது. நான் முழு நேரம் அணிகிறேன். அவ்வப்போது கண்ணிற்கான பயிற்சிகளும் செய்கிறேன்.

    எப்படியோ இப்போதைக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை! பெரிய Relief இல்லையா!!

    எனக்கும் சென்னையில் இருந்தப்ப கரும்புள்ளி கண்ணில் இருக்குமோன்னு தோண பரிசோதனைஅதென்னவோ dye எல்லாம் போட்டு கண்ணில் விட்டு பரிசோதனை செய்தாங்க. கார்னியா பகுதிக்குள் வரலை வெளியில் தான் இருக்கு அதனால் அறுவை சிகிச்சை தேவை இல்லை என்றார்கள் இது வரை அப்படியே போகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கர் நேத்ராலயாவில் ஒருமுறை எனக்கு கருவிழியில் புள்ளி இருப்பதாகக் கூறி மெயின் பிராஞ்சுக்கு வாங்க என்று அழைத்திருந்தனர்.  நான் போகவில்லை.  இப்போ எந்த மருத்துவரும் அதைக் குறிப்பிடுவதில்லை.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம், நான் அப்ப போனது மோகன் டயபடிஸ் அங்கு மொத்த பரிசோதனையும் பண்ணுவாங்களே...இந்த சோதனை செய்து கிட்டத்தட்ட, 10-12 வருடங்கள் ஆயாச்சு.

      கீதா

      நீக்கு
    3. ஒருமுறை பரி செய்த்து விடுங்களேன்...  நான் கூட கொலஸ்ட்ரால், சர்க்கரை சோதனை டியூ!

      நீக்கு
    4. ஆமாம் கண்ணுக்கு மட்டும் தான் செய்யலை. மற்றதெல்லாம் இடையிடையே நடக்கிறது.

      கீதா

      நீக்கு
    5. நான் முழங்காலுக்கு சென்று காட்டவேண்டும்.

      நீக்கு
  20. ஆ! ஸ்ரீராம் நிஜமாவா இம்புட்டு விலை ஆகிடுச்சா? ஓ மை!

    எனக்கு 4 வருடங்களுக்கு முன் கண்ணாடி மாற்றிய போது 6 ஆயிரம் இருந்தது இங்கு. progressive, uv யோடு....அதனாலதான் கணினியிலேயே என்பதாலும் அதனாலதான் அவ்வளவா சிரமம் இல்லையோ? தெரியவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலை எறிகிட்டே போகுது கீதா...   எல்லாவற்றிலும் ஏற்றம்.

      மின் அக்கட்டணம் ஷாக் அடிக்குது... 

      இது மட்டும் ஏறாமல் இருக்குமா?

      நீக்கு
    2. ஆமாம் நேத்து கூட மருந்து வாங்கறப்பவும் நம் வீட்டில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டோம். விலை எகிறுது ஆனா அதுக்கேத்த வருமானம் நல்ல துறைகளில் இல்லை. வேண்டாத துறைகளில் எக்கச்சக்கப் பணம் விளையாடுது. வருத்தமான விஷயம். அறிவியலுக்கு, ஆராய்ச்சிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை பண வரவும் இல்லை. ஆனால் entertainment துறையைப் பாருங்க கொட்டுது. இத்தனைக்கும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் கெட்ட விஷயங்கள்.

      கீதா

      நீக்கு
    3. உதாரணமாக நான் முதலில் போட்டுள்ள அந்த பச்சை நிற மருந்து விலை முன்னூறு ரூபாய்க்கு மேல்...

      நீக்கு
  21. திருச்சி கல்யாணராமன் அவர்கள் - //‘கடவுள் உனக்கு நிறையக் கொடுப்பான். ஆனால், அதில் எதையுமே உனக்கென்று சேர்த்து வைத்துக் கொள்ளாதே; மற்றவர்களுக்கு கொடுத்துவிடு’//

    அருமையான விஷயம்.

    எதுவுமே நம்மது இல்லை....இந்த நிலை நம் மனதில் வந்துவிட்டால் நல்லதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. அலைபேசி வந்த பிறகு அனைவருமே கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. ஆனால் IT என அழைக்கப்படும் துறை பெரிதாக வளர்ந்த கணினி காலத்திலிருந்தே தொடங்குகிறது ஜி.

      நீக்கு
  23. சைபர் குற்றம் பயங்கரமாக இருக்கிறதே..

    ஹோட்டல் சங்கத்தலைவர் ஸ்ரீநிவாசன் அவர்களின் பேச்சு சுவாரசியமாக இருந்தது. கேட்க. அது லாஜிக்கலாகவும் இருந்தது போல்தான் தெரிந்தது. ஆனால் அதன் பின் தொடரும் அந்தச் செய்தி அதான் பொதுஜனங்கள் பில்லைக் குறித்துச் சொல்வது என்ன என்று யோசிக்க வைக்கிறது.

    இப்பவும் கூட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாச் செய்தி ஒன்று பார்த்தேன். கூடவே அந்த க் குட்டி நிலவு செய்தியும்.

    குளிக்காமல் இருப்பது ஏதோ பிரச்சனை...

    ஆமாம் அடுத்த கொரோனா மாறுவேஷம் போட்டாச்சு!! எல்லாரும் மாஸ்க் போடுங்கப்பா, அடுத்த அலை வந்தால் தாங்குமா?

    பொதுவெளில எச்ச துப்பாம, உச்சா அடிக்காம இருந்தாலே பல தொற்று நோய்களை சமாளிக்கலாம்.

    இங்கு என்னவோ மங்கி ஃபாக்ஸ் எச்சரிக்கை விடுத்திருக்காங்க விமான நிலையத்தில் வெளிநாட்டினரை பரிசோதிக்கறாங்களாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைபர் குற்றம்..  ஆம்.  பயமுறுத்துகிறது.

      ஸ்ரீநிவாசன்..  ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது...

      'அம்மாடி..  ஊரெல்லாம் போலி வேஷம்...  ஆனாலும் பரிதாபம்..  ஏதோ பாவம்...'

      விண்கல் புஸ்ஸுன்னு போச்சு.

      குளிச்சோஃபோபியா நோய் போலும் அவருக்கு!

      கொரோனா சலிப்பேற்படுத்துகிறது.

      குரங்கம்மை நோய், சிக்குன்குனியா ஆகியவை பயமுறுத்தல் லிஸ்ட்டில் ஆல்ரெடி உள்ளன.

      நீக்கு
  24. பெண் திரைக்கலைஞர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய மருத்துவர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு.//

    இவர் மட்டுமா பேசுகிறார்....இன்னும் இருக்காங்க....இஷ்டத்துக்கு ஒரு வரைப் பற்றி வாய்க்கு வந்தபடி என்னவோ அவங்க கிட்ட இருந்து பார்த்தது போலவும், ஒவ்வொரு வீட்டுப் பிரச்சனையையும் அலசோ அலசுன்னு அலசி பணத்துக்காகப் பேசுவது மீடியாவுக்கு கண்டிப்பாக சென்ஸார் கொண்டு வரணும். மக்கள் திசை திரும்பாமல் கவனமாக இதை எல்லாம் புறம் தள்ளினால் எல்லா சானல்களும் மூடிக்கும்.

    அதுக்குத்தான் நான் சொல்வது யுட்யூபிற்கு, ஊடகங்களுக்கு சென்ஸார் தேவை என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம பயில்வான் ரங்கநாதன் இருக்காரே...
         
      ஆனால் காந்தராஜ் ரொம்ப மோசம்.  இன்று பேப்பரில் கூட அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக தகவல் வந்துள்ளது.  

      முன்னாள் அமைச்சர் ராஜாராமின் சகோதரர் அல்லவா இந்த ஓய்வு பெற்ற மருத்துவர்?

      நீக்கு
    2. ஓ அப்படியா? அவ்வளவு பின்புலமா?

      பயில்வானும் உண்டு இன்னும் 4, 5 பேர் இருக்காங்க ஸ்ரீராம் பேர் எதுவும் டக்குனு வர மாட்டேங்குது. ஏனென்றால் அதற்குள் சென்று பார்ப்பது இல்லையே. நமக்குத் தேவையானதைப் பார்த்தால் இஷ்டத்துக்குத் தேவையில்லாத வீடியோஸ் வந்து காட்டும்.

      கீதா

      நீக்கு
  25. படச் செய்திகள் இரண்டுமே சூப்பர் செய்திகள். முதல் செய்தி புதியது. இரண்டாவது அறிந்தேன் அதைக் குறித்து இன்னும் என்ன வந்திருக்கு என்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இந்த ரேடியோ சிக்னல் வேற்று கிரக வாசிகளின் சிக்னல் க்ராஸ் ஆச்சா என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் பாதி புருடாவாக கூட இருக்கும் கீதா.  ஆனால் படிக்கும்போது சட்டென ஒரு சுவாரஸ்யம் வருகிறது!

      நீக்கு
    2. JKC ஸார் சொல்லி இருப்பதும் கவனிக்க வேண்டியது.  நீங்கள் அனுப்பும் பதில் அவர்களை அடையுமா, தெரியாது.  அடைந்தாலும் நமக்கு தெரியுமா, தெரியாது. 

      எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆகும் என்று சொல்லி இருக்கிறார் பாருங்கள்.

      நீக்கு
    3. ஸ்ரீராம், ஆமாம் அதேதான்.....கூடவே ஜெ கே அண்ணாவுக்கு ஹைஃபைவ்!!! நானும் இதைத்தான் அடுத்து சொல்ல வந்தேன். ஏன்னா செய்தி சொல்றது பாருங்க எத்தனை கோடி அம்ஆண்டுகளுக்குப் பின் என்று....இதே ஃப்ரீக்வென்ஸி மெய்ன்டெயின் ஆகுமா....என் யோசனைகள் இப்படி பலதுக்கும் சென்றது. சென்று கொண்டிருந்தது....கொண்டிருக்கிறது......காரணம் ஹிஹிஹிஹி....இது ஸ்ரீராமிற்குப் புரிந்திருக்கும்...ஸ்ரீராம் ஆனா சொல்லாதீங்க.....

      கீதா

      நீக்கு
  26. கண்ணாடி - அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லதே. கண்ணாடி விலை அதிகமாகத் தான் இருக்கிறது…

    மற்ற தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  27. ஓவியம் மிகவும் ரசனையானது.

    அதைச் சொல்லுங்க தேடறதிலேயே பாதி வாழ்க்கை என்ன முழுசுமே போய்விடுமோன்னும் தோணும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருளைத் தேடல் அது ஒன்னு நேரம் போய்டும்....வாழ்க்கைத் தேடல் இது கடைசிவரை... பிறந்தாச்சு வாழ்க்கை வாழணுமே அதுக்கான பொருள் தேடலிலேயே வாழ்க்கை போய்டும்!!!!

      கீதா

      நீக்கு
  28. சாச்சுரேஷன் பாயின்ட் - சுஜாதா வின் இதை வாசித்திருக்கிறேன். அறிவியல், இறைதத்துவம் குறித்து இந்தியாவைச் சேர்ந்த பார்கவா அவர்களின் கட்டுரைகள் தொகுப்பிலும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  29. பாண்டியா சபாஷை ரசித்தேன்!!!! செம கற்பனை! இரஸாக் அவர்களுக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ஸ்‌ரீராம் கருத்துகளைக் காணவில்லை. மாயமாகிவிட்டன கொஞ்சம் கொண்டாங்க இங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குகைக்குள் நுழைந்து மீட்டுக்கொண்டு வந்து விட்டேன்!

      நீக்கு
  31. இப்போதெல்லாம் கண்புரை அறுவை சிகிச்சை ரொம்பவும் சாதாரணமாக நடக்கிறது! நான் 2016லேயே இரு கண்களுக்கும் செய்து கொண்டேன். நீங்கள் சொன்ன மாதிரி அந்த ஊசியில் மயக்க மருந்தை சில நிமிடங்களுக்கு ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். அந்த நிமிடங்கள் மட்டும் வலி, கடுப்பு என்றிருக்கும். அதன் பின் அந்த மயக்க மருந்தை ஏற்றிய பிறகு வேறு எந்த வலியும் வராது. ஒரே வர்ணஜாலமாக, வெளிச்சமாக இருக்கும். அவ்வளவு தான்! நேரம் வரும்போது பயப்படாமல் செய்து கொள்ளுங்கள் ஸ்ரீராம்!! அதன் பின் கண் பார்வை மிகத்தெளிவாக இருக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா...   பல்வலி கூட அப்படி பயந்து கொண்டுதான் இருந்தேன்.  அப்புறம் பழகி விட்டது.  பல் ஆஸ்பத்திரியில் மெனு கார்டில் இருக்கும் அத்தனையும் செய்ய வேண்டியதாப்போச்சு!  இதுவும் அவசியம் வந்தால் செய்ய வேண்டியதுதான்.

      நீக்கு
  32. தற்கொலை முயற்சியில் அந்தப் பெண் தூங்கியது மிக ஆச்சரியம்!! இவர்களெல்லாம் எதற்கு தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்கள் என்று தான் புரியவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இவர்களெல்லாம் எதற்கு தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்கள் என்று தான் புரியவில்லை!! //

      ஹா..  ஹா..  ஹா...  சரியாகச் செய்திருக்கவேண்டும் என்கிறீர்களா?!!  பஞ்சதந்திரம் கமல்-தேவயானி டயலாகஸ் இங்கும் பொருந்துகின்றன.

      நீக்கு
  33. கண் ஆப்பரேசன் இப்பொழுது தேவை இல்லை என்றால் விட்டுவிடலாம் மருந்தை ஒழுங்காக விடுங்கள் .பின்பு செய்ய வேண்டும் என அவர்கள் கூறீனால் செய்வதுதான் நல்லது. இதற்கு பயப்படத் தேவையில்லை.

    நியூஸ் ரைம் பல வித செய்திகளுடன் அருமை.

    பொக்கிசம் வித்தியாசமானது.

    இரண்டு நாட்கள் உங்கள் பக்கம் வரமுடியவில்லை இனித்தான் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். செய்தாக வேண்டிய நேரம் வந்தால் அவசியம்தானே.. நன்றி மாதேவி.

      நீக்கு
  34. தலைப்பே அருமை. தலைப்பை பலமுறை பல விதங்களில் சொல்லிப் பார்த்த போதே மனதில் உற்சாகமாக இருந்தது.

    ஓ கணினியில் பார்க்கும் போது கண்ணாடி போடுவதில்லையா நீங்கள்? ஓ! ஆச்சரியம். கண்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    இங்கு கண்ணாடி விலை குறைவு என்றே சொல்லலாம். நானும் ப்ரோக்ரெஸ்ஸிவ் தான் பயன்படுத்துகிறேன். ஃப்ரேமின் விலையும் கூடுதலாக இருக்கிறதே. ஒரு வேளை க்வாலிட்டி வித்தியாசப்படுமோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலை என்பது அவர்கள் நிர்ணயிப்பதுதானே...  நமக்கென தெரியும்.?  விலை கூடச் சொல்லி குறைப்பார்கள்.  நாமும் குறைந்த விலைக்கு வாங்கி இருப்பதாக திருப்தி பட்டுக்கொள்வோம்!

      நன்றி துளசி ஜி.

      நீக்கு
  35. திரு கல்யாணராமன் பற்றிய தகவல் நெகிழ்ச்சி. மிகவும் உயர்வான எண்ணம், நிலை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  36. அறிவியல் செய்திகள், தகவல்கள் அனைத்தும் புதியவை மற்றும் சுவாரசியம்.பூமிக்குப் பாதிப்பில்லாமல் சிறு கோள் கடந்து சென்றது இச்செய்திகள் எல்லாம் வாசிக்கவே சுவாரசியமாக இருக்கிறது.

    படச் செய்திகளில் முதல் படத்தின் தகவல் மிகவும் வியக்க வைக்கிறது. எத்தனை வியப்பான விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன! மேலே சொல்லப்பட்ட அறிவியல் விஷயங்கள் உட்பட.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  37. வாழ்க்கைத் தேடல்களில் வாழ்க்கை பகுதி முடிந்துவிடுகிறது அந்த வரிகளை ரசித்தேன். உண்மைதானே!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  38. விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கு விடை தேட முயற்சி செய்கின்றன என்றாலும் கடைசியில் ஒன்றுதான் அதை அணுகும் விதம் தான் வித்தியாசமோ என்று தோன்றும்.

    பொக்கிஷத்தின் கார்ட்டூன் ஜோக்கை ரசித்தேன்.

    இன்றைய பகுதி அனைத்தும், அருமையான தகவல்கள் மிகவும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில், மற்ற பூக்களும் நறுமணம் வீசுகின்றன .

    உஞ்ச விருத்தியின் சிறப்பு பற்றி கூறி, அதன்படி நடந்து வரும் திரு கல்யாணராமன் அவர்கள் மனதை நெகிழ வைக்கிறார்.

    தாங்கள் ரசித்த ஓவியத்தை நானும் மிகவும் ரசித்தேன்.

    தங்களின் குட்டி கவிதை அருமை. நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் நிகழ்வதை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்.

    சுஜாதா அவர்களின் பதில் அருமை.

    மஹாலயம் பற்றிய விளக்கங்கள் பயனுள்ளவை. இப்போது பதினைந்து நாளும் யாரும் நியமமாய் ச்ராத்தம் செய்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், இப்படி முறையாக வெளியிட்டு அதை படிக்கும் போது மனதில் செய்ய வேண்டுமென்ற அவாவை கண்டிப்பாக உண்டாக்கும்.

    அத்தனை விஷயங்களும் இன்று அருமையாக உள்ளது. தொகுத்து தந்து வியாழனுக்கு பெருமை சேர்க்கும் தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் ஒருநாள் செய்தால் கூட அன்ன ஸ்ராத்தம் யாரும் செய்வதில்லை.  ஹிரண்யம்தான்.  

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!