வெள்ளி, 20 செப்டம்பர், 2024

ஜின்ஜின்னாகடி.. ஜின்ஜின்னாகடி - 2

 இன்றைய தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் குரலில்...

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்
விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன்
மூவுலகின் முதற்பொருளே முதல் பிள்ளை ஒளிவடிவே
முக்கண்ணன் அருட்பொருளே
முக்கனியின் வேதப் பொருளாய் அமர்ந்த (நாயகனைப்பாட )
அரசமரம் சுற்றிவந்து முரசம் பல கொட்டி நின்று (2)
பருப்போடு பாலும் பழரசம் அபிஷேகம் செய்து
அன்பர்க்கு அளித்திடவே
தேங்காய்ப்பூ இளநீரு தீர்த்தம் மணக்கும்
வெள்ளிரத ஊஞ்சல் ஆட
விரும்பமுடன் மனம் பாட வினைதீர்க்க அருள் கொடுக்க (2)

பொருள் குவிக்க மனம் இனிக்க
எருக்கம்பூ மாலையிலே இருக்கின்ற நாயகனே (2)
ஓதுகின்ற மனதினிலே
சிரிக்கின்ற சிரிப்பினிலே செல்வமெல்லாம் தருபவனே (2
தேனமுதை தெளிப்பவனே சிவசக்தி விநாயகனே (2)
சித்தி விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன்


================================================================================================

நேற்றைய பதிவின் தலைப்பு பற்றி யாரும் ஒன்றும் கண்டுக்காததால் இன்று இந்தப் பாடல்கள். துளஸிஜி லேஸாய் குறிப்பிட்டிருந்தார்.

பிடித்த பாடல் என்றில்லை. சும்மா ஜாலி பாடல்.

இது மாதிரி நாயகியால் கேலி, கிண்டலுக்குள்ளாகும் நாயகன் பின்னர் அதே மாதிரி நாயகியை கிண்டல் செய்யும் பாடல்கள் சில உண்டு. சகலகலாவல்லவனில் கட்டை வண்டி கட்டை வண்டி பாடல் உட்பட...

இந்தப் படத்தின் இன்னொரு ஜாலிப்பாடலான ஜாவ்ரே ஜாவ் பாடல் ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன்.

1966 ல் வெளிவந்த ஜாலி திரைப்படம் குமரிப்பெண் ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடித்த இளமைத் திரைப்படம். அந்தப் படத்திலிருந்து இந்த ஜின்ஜின்னாக்கடி பாடல் பெண்குரல், ஆண்குரல் இரண்டையும் பகிர்கிறேன்.

கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.

பெண்குரல் எல் ஆர் ஈஸ்வரி குழுவினர். ஆண்குரல் டி எம் சௌந்தரராஜன்.

வருஷத்தப் பாரு அறுபத்தி ஆறு
உருவத்தப் பாரு இருபத்தி ஆறு..
வருஷத்தப் பாரு அறுபத்தி ஆறு
உருவத்தப் பாரு இருபத்தி ஆறு..

கழுத்துக்கு மேலே அதிசயம் பாரு
கட்டாந்தரையிலே கொடி வளர்த்தாரு
கழுத்துக்கு மேலே அதிசயம் பாரு
கட்டாந்தரையிலே கொடி வளர்த்தாரு

ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி..
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி..
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னா..

பொண்ணாப் பொறந்தா பொழைச்சிருப்பாரு…
பூவோடு பின்னல் முடிச்சிருப்பா..ரு
ஆணாப் பொறந்தாரு …வால் வளர்த்தாரு…
ஆணாப் பொறந்தாரு …வால் வளர்த்தாரு
ஆட்டையும் மாட்டையும் அளந்து வெச்சாரு

ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி..
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னா..    [வருஷத்தப் பாரு]

எங்கோ இவரு போக வந்தாரு
எடந்தெரியாம் ஏறி விட்டாரு..
ஏனோ பாவம் பயந்து..விட்டாரு..
ஏனோ பாவம் பயந்து விட்டாரு..

எத்தனை பேருக்கு பதில் சொல்லுவாரு

ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி..
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னா…    [வருஷத்தப் பாரு]

போனாப் போகட்டும் கிராமத்து ஆளு
பொறந்தது போலே வளர்ந்திருக்காரு
புதுசா வண்டியைப் பார்த்திருக்காரு
புதுசா வண்டியைப் பார்த்திருக்காரு
பொடவயைப் பார்த்து மயங்கி விட்டா..று....

ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி..
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னாக்கடி…
ஜின்ஜின்னாக்கடி.. ஜின்ஜின்னா..  [வருஷத்தப் பாரு] 




டி எம் எஸ் பாடிய பாடலுக்கு வேறு வரிகள்.
வருஷத்தப் பாரு அறுபத்தி ஆறு
உருவத்தப் பாரு இருபத்தி ஆறு..
வருஷத்தப் பாரு அறுபத்தி ஆறு
உருவத்தப் பாரு இருபத்தி ஆறு..
இடம் தெரியாமல் கேலி செய்தாரு 
இப்போது யாரை தேடி வந்தாரு 
ஜின்ஜின்னாகடி  ஜின்ஜின்னாகடி ஜின்ஜின்னாகடி 

பொண்ணாப் பொறந்தா போவது எங்கே 
பூவோடு மாலை கேட்பது எங்கே 
ஆணாப்பொறந்தவன் கைகளுக்குள்ளே 
அடங்குவதல்லாமல் உறங்குவதெங்கே 
ஜின்ஜின்னாகடி  ஜின்ஜின்னாகடி ஜின்ஜின்னாகடி 

அத்தான் என்றால் ஆயிரம் துடிப்பு 
அடிக்கடி பார்த்து சிரிக்கிற சிரிப்பு 
தொட்டால் போதும் நடிக்கிற நடிப்பு 
துணைக்கு வராது படிக்கிற படிப்பு 
ஜின்ஜின்னாக்கடி  ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடி 

விண்ணில் பறந்து திரும்பி வந்தாலும் 
வேட்டியை சேலை வென்றது இல்லை 
உள்ளம் அறிவில் வளர்ந்து விட்டாலும் 
ஒருவன் இல்லாமல் உறவுகள் இல்லை 
ஜின்ஜின்னாகடி  ஜின்ஜின்னாகடி ஜின்ஜின்னாகடி 


34 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. மூவுலகின் முதற்பொருளே முதல் பிள்ளை ஒளிவடிவே
    முக்கண்ணன் அருட் பொருளே
    முக்கனியின் வேதப் பொருளாய் அமர்ந்த நாயகனைப் பாட
    நான் என்ன தவம் செய்தேன்..

    நான் என்ன தவம் செய்தேன்

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடி
    ஜின்ஜின்னா..

    ஜின்ஜின்னாக்கடி புராணம் அருமை..

    66/67 ல் தெருவில் பசங்களுடன் ஓடும் போது இந்த ஜின்ஜின் னாக்கடி தான் கூட வரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவிச்சந்தரின் டான்ஸ் ஒரு ஸ்டைல்...  தனி விதமாக ஆடுவார்.

      நீக்கு
  5. நேற்றைய தலைப்பின்போதும் இன்றைய தலைப்பின்போதும் எனக்கு மனதில் உதித்த பாடல், ஜின்ஜினக்கா சின்னக் கிளி சிரிக்கும் பச்சைக்கிளி. பாடல்தான். நேற்றைக்குக் குறிப்பிட விட்டுப்போயிற்று.

    வருஷத்தைப் பாரு பாடலும் பலமுறை கேட்ட பாடல்தான். அப்போது ரவிச்சந்திரனுக்குத் தெரிந்திருக்குமா... மக்களின் பேராதரவுடன் பலமுறை முதலமைச்சராக ஜெ ஆவார் என்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வித்தியாசம் இருக்கிறதே...  ஜின்ஜினுக்கா சின்னக்கிளி...  இதில் ஏகப்பட்ட ஜின் வருகிறதே...!

      நீக்கு
  6. முதல் பாடல் மனதை எப்போதும் கவர்வது. பாடல் வரிகள், இசை, பாடிய குரல்கள் நம்மை இறைச் சிந்தனைக்கு இட்டுச் செல்லும் வலிமை வாய்ந்தவை. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் அருமை. முதல் தனிப்பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். விநாயகர் பாடென்றால் மிகவும் பிடிக்கும்.

    இரண்டாவது திரைப்படபாடலும் அப்போது உள்ள காலகட்டத்தில் ஜாலியாகத்தான் இருக்கும். படம் கூட நான் பார்த்தாக (பள்ளி விடுமுறையின் போது எங்கள்அம்மா வீட்டில் அழைத்துப் போனார்கள்.) நினைக்கிறேன். கதையெல்லாம் இப்போது நினைவுக்கு வரவில்லை. இப்போது யூடியூபில் பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கும். நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்தப்பாடல் ரவிசந்திரன் ஸ்டைல், ஜெயலலிதாவின் அழகு அப்போதைய வயதில் மனதை கவர்ந்தது சிறு வயதில் வீட்டின் அருகில் உள்ள தோழர், தோழிகளோடு இந்தப் பாடலை அடிக்கடி பாடிக் கொண்டிருப்போம் . அதற்கும் எங்கள் வீட்டில் பெரியவர்களிடம் ஏச்சுக்கள் வாங்கியுள்ளோம் .

    நேற்று பகிர்ந்த பாடலின் தலைப்பு எனக்குபிடித்தது. நான் ராஜபார்ட் ரங்க துரை படத்தில் வரும் ஒரு பாடலோடு அதை ஒப்புமை செய்து பாடிக் கொண்டேன் (மனதுக்குள்தான்:)) ) நீங்களே கண்களின் பிரச்சனைப் பற்றி கூறுகையில், தலைப்பை பற்றி குறிப்பிட வேண்டாமென விட்டு விட்டேன். குட்டித் தலைப்பை மட்டும் குறிப்பிட்டேன். இன்றைய இரு பாடல்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயலலிதாவின் இளமை, நாட்டியம் எல்லாமே ஸ்பெஷல்.  அந்த ஒரு ஸ்டைல் அவருக்கு தனியாக உண்டு.  நீதி படத்தில் அவ்வப்போது 'ஹும்' என்று ஒரு வெட்டு வெட்டுவார்.  நான் இந்தப் படம் பார்த்ததில்லை.  பாடல் காட்சிகள் மட்டும்தான்.  அதிலும் 'ஜாவ்ரே ஜாவ்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
      இந்த வெர்ஷனில் டி எம் எஸ் பாடல் பார்த்தீர்கள் என்றால்..  ஐ மீன்..  கென்டர்கள் என்றால் ஆணாதிக்க பாடலாய் இருக்கும்.  பின்னாளைய ஜெ யை நினைத்துப் பார்த்தல் ஜீரணிக்கவே முடியாது!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      அந்த கால படங்களில் இந்த மாதிரி கதாநாயகியை கேலிசெய்யும் பாடல், இல்லை கதாநாயகனை கேலி செய்யும் பாடல்கள் என்று இடையிடையே வரும். படத்திற்கு அதில் என்ன ஸ்வாரஸ்யமோ.? ஆனால் தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் மிக விரும்பி ரசிப்பார்கள். பாமா விஜயம் படத்திலும், ஒரு பாடல் ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்டு இதுபோல் வரும். அக்கால ஜெமினி படங்களிலும் இதுபோல் ஒரு பாடல் வரும். இன்று நீங்கள் பகிர்ந்த இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ​90 களின் ரஜினி படங்களில் கூட இந்த ஆணாதிக்க வசனங்கள் இருக்கும்!

      நீக்கு
  8. முதல் பாடலின் பின்னனி இசை வந்தவுடனேயே வாய் முனு முனுக்க ஆரம்பித்து விடும். பிள்ளையார் சதுர்த்தி அன்று இந்த பாடல் எங்கள் வீட்டில் ஒலித்து விடும்.

    மாயவரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள இரண்டு பிள்ளையார் கோவிலில் மாத சதுர்த்தி அன்று மாதாமாதம் கேட்கும் பாடல்.
    எங்களுக்கு பிடித்த பாடல்(என் கணவருக்கும் எனக்கும்)

    அடுத்த பாடலும் அடிக்கடி கேட்டபாடல். படமும் சிறு வயதில் தியேட்டரில், இப்போது தொலைக்காட்சியில் பழைய படம் வைக்கும் போது விரும்பி பார்ப்பேன்.

    இரண்டு பாடல்களையும் கேட்டேன் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.  அப்போதெல்லாம் சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள் பக்திப்பாடல்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார்!  நன்றி அக்கா.

      நீக்கு
  9. பக்திப்பாடல் சிறப்பு ஜி

    மற்ற இரண்டும் ஜாலியான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  10. பாடல்களை ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. உண்மையாகவே நேற்றைய தலைப்பு அருமை, நான் சொன்னேன் என்பதை இங்கு கோட் செய்திருக்கிறீர்கள் மிக்க நன்றி, ஸ்ரீராம்,. ஓ இன்றைய தலைப்பும் அதேயாகி அதற்கேற்ப ஒரு பாட்டும்.

    முதல் பாட்டு ஓ! விநாயகர் பாடல் மிக அருமையான பாடல். நீண்ட நாட்களாகக் கேட்காமல் இருந்த பாடல். கேட்டு ரசித்ததோடு மனம் நிறைந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி ஜி...  நேற்று பதிவில் நான் சொல்ல வந்தது சர்ஜரி இல்லை என்றதானதும் மனதில் ஏற்பட்ட உற்சாக பாட்டு, டான்ஸ்...   அதற்கான வரிகள்!

      நீக்கு
  12. முதல் கருத்தில் முதல் சொன்னதோடு, ஒன்றிற்கு இரண்டு ஜின்ஜின்னாக்கடிகள்! பகிர்ந்துவிட்டீர்கள். 1966ல் வெளிவந்த படமா இது!
    என் சிறு வயதில் நான் ரவிச்சந்திரனின் ரசிகன். ஆனால் என் நண்பர்களுக்கு எல்லாம் ரவிச்சந்திரனைப் பிடிக்காது. அவர்கள் எல்லாம் ஜெய்சங்கர் பக்கம். அது போல தெலுங்கு நடிகர்களை எடுத்துக் கொண்டால் எனக்குக் கிருஷ்ணாவை பிடிக்கும். அதே சமயம் என் டி ஆரின் ரசிகர்கள் என் நண்பர்கள். ஆனால் ஒரே விஷயத்தில் மட்டும் நாங்கள் எண்ணிக்கை கூடுதல். எம்ஜிஆர் சிவாஜி என்பதில் பெரும்பான்மையானோர் எல்லாம் எம் ஜி ஆர் ரசிகர்கள். இருந்தாலும் சில தீவிரமான சிவாஜி ரசிகர்களும் உண்டுதான். அவர் நடிப்பிற்கு. அவர் நடிப்புச் சக்கரவர்த்தி அல்லவா!
    எப்படியோ இந்தப் பாடல்கள் என்னை பழைய காலத்திற்குக் கொண்டு சென்றது.

    ரவிச்சந்திரன் நடனமாடும் போது கொஞ்சம் எம் ஜி ஆர் ஸ்டைல் வருகிறதோ என்று எனக்குத் தோன்றும். இப்பாடலில் குறிப்பாக.

    மிக்க நன்றி, ஸ்ரீராம் கேட்டு பல நாட்களான பாடல்களைப் பகிர்ந்தமைக்கு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  இது மாதிரி ரசித்து, அந்தக் கால நினைவுகளுக்குப்போய், இப்போது கேட்டு நீண்ட நாட்களாகி விட்டதே என்கிற அந்த உணர்வு  பகிர்வு...   அதுதான் ஸ்பெஷல்...  நன்றி துளஸிஜி.

      நீக்கு
  13. ஸ்ரீராம், முதல் பாடல் செம பாடல் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். கேட்டு ரசித்துக் கொண்டே கருத்து தட்டச்சுகிறேன்....அழகான மாயாமாளவகௌளை என்று என் சின்ன அறிவுக்கு எட்டியவரை...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இரண்டாவதாக வந்திருக்கும் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். நிறையவே. ஆனால் படம் பெயர் மற்ற விவரங்கள் எல்லாம் இப்பதான் அதாவது ரவிச்சந்திரன் ஜெஜெ என்பதெல்லாம். ஆனால் பாருங்க நேத்திக்குச் சொல்லத் தெரியலை. ஆனா பாருங்க நேத்து தலைப்பு இந்தப் பாட்டான்னு சொலல்த் தெரியலை.... ஆனா தலைப்பு ஏதாவது பாட்டோன்னு யோசித்து கேட்க விட்டுப் போச்சு. வேறு பல இடையீடுகள், வேலைகள்னு போச்சு, அப்புறம் மறந்தே போச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... அது பாட்டின் வரிகள் என்பதே நினைவில்லையா கீதா... நல்லது.. அப்போ நான் இன்று இந்தப் பாடல்களை பகிர்ந்து சரிதான் போல..!!

      :)

      நீக்கு
  15. முதல் வணக்கம் ஆனைமுகத்தானுக்கு அருமையான பாடல்.

    மற்றைய பாடலும் கேட்டிருக்கிறேன். அப்பொழுது இப்பாடல் கேட்டால் சிரிப்புவரும்.

    பதிலளிநீக்கு
  16. முதல் வணக்கம் ஆனைமுகத்தானுக்கு அருமையான பாடல்.

    மற்றைய பாடலும் கேட்டிருக்கிறேன். அப்பொழுது இப்பாடல் கேட்டால் சிரிப்புவரும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!