வாலி எழுதிய பாடலை, தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் T M சௌந்தர்ராஜன்.
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்
அய்யன் ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
ஸ்வாமி மலையில் சிவகுருவென்று
ஸ்வாமி மலையில் சிவகுருவென்று
திரு சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள்...
தேமதுர மொழியாள் தேவானையை மணந்த
திருப்பரங்குன்றில் தரிசனம் தந்த அந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணித் தேடி
மாமயிலேறிட திருத்தணித் தேடி
மோஹமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்
====================================================================================================
T R ராமண்ணா தயாரிப்பில், வின்சென்ட் இயக்கத்தில் தோப்பில் பாசி மூலக்கதைக்கு தமிழில் மல்லியம் ராஜகோபால் வசனம் எழுத, வெளியான சோக சித்திரம் துலாபாரம். அழுவாச்சி காவியம்.
சாரதா, ஏ வி எம் ராஜன், முத்துராமன், நாகேஷ், சுந்தர்ராஜன் நடித்த படத்தில் பாடல்களை கண்ணதாசன் எழுத, ஜி தேவராஜன் இசை.
1968 ல் மலையாளத்தில் வெளியாகி விருதுகளை வாங்கிய படம். தமிழ் தெலுங்கு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வசூலைக் குவித்தது.
இந்தப் படத்திலிருந்து டி எம் சௌந்தர்ராஜன் - பி. சுசீலா பாடிய 'பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்' பாடல்... மென்மையான, அமைதியான, இனிமையான தாலாட்டுப் பாடல்.
அந்த பொன்னுலகம் கண்ணில் காணாமலே போவதுதான் சோகம்.
பணக்கார வீட்டில் வளர்ந்து ஏழையான சாரதா அதற்குத் தக்க வரிகளைப் பாட, முதலிலிருந்தே ஏழையான AVM ராஜன் எளிமையான வரிகளைப் பாட, பாடலின் முடிவில் ஏழைகளின் ஒரே என்டர்டெயின்மென்டுக்கு செல்கிறார்கள்!
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீர் இட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு.. - பூஞ்சிட்டு கன்னங்கள்
மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பூஞ்சிட்டு கன்னங்கள்......
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஓராறு முகமும் ஈராறு கரமும்
பதிலளிநீக்குதீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்..
__/\__
நீக்குபூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்' ...
பதிலளிநீக்குஅற்புதமான பாட்டு...
இனிமை. பி சுசீலாவின் குரல் சற்றே வித்தியாசமாக ஒலிக்கும் இந்தப் பாடலில். சாரதாவுக்கென்று மாற்றியதோ என்று தோன்றும்வண்ணம்.
நீக்குபாடலின் முடிவில் ஏழைகளின் ஒரே என்டர்டெயின்மென்டுக்கு செல்கிறார்கள்...
பதிலளிநீக்குஎன்டர்டெயின்மெண்ட்!?
ஹிஹிஹி... பார்க்கவில்லையா?
நீக்குஇனிய பாடல்...
பதிலளிநீக்குஇயல்பானதொரு காட்சி...
ஆம். ஆனாலும் எனக்கு ராஜனைப் பிடிக்காது. அவர் டயலாக் டெலிவரி எரிச்சலைத் தரும்.
நீக்குஎனக்கும் அவரை அவ்வளவாகப் பிடிக்காது..
நீக்குஅதேதான்!
நீக்குஇன்றைய பாடல்கள் இரண்டுமே
பதிலளிநீக்குஅற்புதம்...
ஆம். உண்மை. நன்றி.
நீக்குதாள முடியாத சோகத்திற்கு அன்பும் அரவணைப்பும் தான் அருமருந்து..
பதிலளிநீக்குஎன்டர்டெயின்மெண்ட் வேறு..
ஹிஹிஹி.. அப்போது அந்த நேரத்தில் தாளமுடியாத சோகம் எதுவும் இல்லைங்க...
நீக்குஅந்தக கருத்து பொதுவாகச் சொல்லியது...
நீக்குவீணாக மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்..
:))
நீக்கு'ஓராறு முகமும் ஈராறு கரமும்
பதிலளிநீக்குதீராத வினைதன்னைச் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்'
-- வாலி எழுதிய பாடலா? ஆச்சரியமாக இருக்கிறது!
அப்படிதான் போட்டிருக்கிறார்கள். வாங்க ஜீவி ஸார்... சோப்ளாங்கி கேள்வின்னுட்டீங்களே...!!
நீக்குஅவசரக்குடுக்கை மட்டும் என்ன உசத்தி? சோப்ளாங்கியும் அந்த லிஸ்டில் சேரட்டுமேன்னு தான்!
நீக்குஆமாம் ஜீவி அண்ணா இது வாலி எழுதிய பாடல்தான். வாலி எழுதிய முதல் முருகன் பாடல் டி எம் எஸ்கு கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், அடுத்து இந்தப் பாடல்.
நீக்குஒரு வீடியோவில் பார்த்து அறிந்து கொண்டது.
கீதா
துலாபாரம் உருக்கமான படம்.
பதிலளிநீக்குசில சோகக்காட்சிகள் நினைவில் நிற்கின்றன.
கேரளத்து மண் சார்ந்த காவியம். அதனால் தான் யதார்த்தமான கதையமைப்பு வாய்த்து விட்டது.
ஆமாம். சில சமயங்களில் சோகப்படங்கள் பார்க்க அலர்ஜியாகி விடுகிறது.
நீக்குதுலாபாரம் நான் பார்த்த இரண்டாவது மலையாள படம். அடிமைகள் மூன்றாம் படம், முதல் படம் செம்மீன்.
பதிலளிநீக்குதமிழில் பொங்கல், மலையாளத்தில் ஓணம். இதில் நடித்த மதுவின் 92 ஆவது பிறந்தநாள் நேற்று. இப்போதும் ஆரோக்யத்துடன் இருக்கிறார்.
Jayakumar
செம்மீன். சலீல் சவுத்ரி. ஆஹா...
நீக்குமது பெரிய விழிகளை உடையவர்தானே?
துலாபாரம் 89-90ல் வீட்டில் பொதிகையில் பார்த்துக் கண்ணீர் விட்ட படம். அருமையான பாடல் பகிர்வு.
பதிலளிநீக்குநான் தொலைக்காட்சியில் பார்த்து அழுதேன்.
நீக்குவாலி எழுதிய பல்வேறு முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடி நெஞ்சில் நீங்கா இடம் பெறச் செய்திருக்கிறார் டிஎம்எஸ். இந்தப் பாடலும் நெஞ்சைவிட்டு நீங்காது.
பதிலளிநீக்குஉண்மைதான். தனியாக ஒரு லிஸ்ட் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குT M சௌந்தர்ராஜன் அவர்கள் குரலும், வாலி அவர்களின் பாடல் வரிகளும் மிகவும் அருமை.
பதிலளிநீக்குஅடிக்கடி கேட்ட பாடல். எங்கள் பாடல் சேகரிப்பில் உள்ளது.
அடுத்த பாடல் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல், வானொலியில் இந்த படம் வைத்த போது கேட்டு இருக்கிறேன், தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன். சிறு வயதில் வானொலியில் கேட்டே அழுது இருக்கிறேன். தியேட்டருக்கு கூட்டி போகவில்லை அம்மா சோக படம் என்று.
பாடல் பிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றி.
இதே பாடல் சோக பாடலும் இருக்கும்.
ஆமாம். சோகப்பாடலும் உண்டு. முன்பெல்லாம் இலங்கை வானொலியில் ஒலிச்சித்திரம் வைப்பார்கள். எல்லா படங்களுக்கும் ஒலிச்சித்திரம் வரும். திரைவிருந்து பகுதியில் பகுதி பகுதியாக சில காட்சிகளின் ஒலிப்பதிவு வெளியாகும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்.
/ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும். /
தீராத வினைகளை தீர்த்து.. மனித வாழ்க்கைக்கு அதுதான் வேண்டும். நல்ல பாடல். டி. எம் எஸ் அவர்களின் குரலில் மனதை உருக்கும் பாடல்.
இரண்டாவது திரைப்பட பாடலும் அருமை. ஏழைகளாக இருந்தாலும் பரவாயில்லை.. அடி மேல் அடி போல் சோகம் மனதை தாக்கக் கூடாது. அப்போது சிறு வயதில் படம் பார்த்து விம்மி விம்மி அழுதிருக்கிறேன். தியேட்டரில் அக்கம் பக்கம் வியப்புடன் என்னைத்தான் நோக்கினார்கள். அப்போதும் அழுகையை அடக்க இயலவில்லை. பிறகு வளர வளர இந்தப்பாடலை கேட்கக்கூட அவ்வளவாக விருப்பமில்லாமல் போய் விட்டது.
ஏவி. எம் ராஜன் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நடிப்பார். இன்றைய இரு நல்ல பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பொதுவாக சோகமான படங்களை பார்க்கையில் எனக்கு கண்கள் கலங்கும். விம்மி விம்மி அழுவதெல்லாம் கிடையாது! பாடலைக் கேட்க என்ன சோகம் கமலா அக்கா? பாடல் இனியமையாச்சே...
நீக்குஏ வி எம் ராஜனுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. தெரியுமோ?
/பாடலைக் கேட்க என்ன சோகம். /
நீக்குஅது மீண்டும் கோகப் பாடலாக வந்து விடும் என்ற நினைப்பில்..
அவருக்கு அது என்ன பட்ட பெயரோ தெரியவில்லை. . ஆனால், சின்ன க்ளு கிடைத்தால் நினைவுக்கு வந்தாலும் வரலாம்.
டீக்கடையில் கிடைக்கும், ஹோட்டலில் கிடைக்கும்!!
நீக்குஓ.. சரி. சரி புரிகிறது. ஆனால் முழுதாகவும் புரியவில்லை.. ஹா ஹா ஹா. ஆனால் புரிந்ததையும் இங்கு (பொது வெளியில்) சொல்லவும் முடியாது:)) நன்றி.
நீக்கு:))
நீக்குஇரண்டுமே அற்புதமான பாடல் ஜி
பதிலளிநீக்குஆமாம் ஜி. நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு பகிர்ந்து இருக்கும் இரண்டு பாடல்களுமே கேட்டு ரசித்த பாடல்களே.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமுதல் பாடல் வரிகள் பார்த்ததுமே மனதில் பாடல் கணீரென்று ஒலிக்கத் தொடங்கிவிட்டது!!
பதிலளிநீக்குஅருமையான பாடல். மலையமாருதம்
கீதா
கீதா
ஓ.. மலயமாருத கானாவா?
நீக்குஇரண்டாவது பாட்டின் வரிகளும் பார்த்ததுமே மனதில் வந்துவிட்டது பாட!!
பதிலளிநீக்குதுலாபாரம் ஆம் மலையாளத் தழுவல்...பயங்கர அழுவாச்சி கதை. இந்தப் படம் என் அத்தை பாட்டியுடன் அவங்க தியேட்டர் போனப்ப கூட்டிப் போனாங்க நான் சுக தூக்கம்! இடையில் கண் விழிச்சப்ப பார்த்தா ஒரே அழுகை....திரும்ப தூக்கம். ஆனா இந்தப் பாட்டு சிலோன் வானொலி உபயத்தில் நிறைய கேட்டிருக்கிறேன் ஆனா இப்பதான் இந்தப் பாட்டு இந்தப்படம்னும் தெரிகிறது!!! ஹிஹிஹிஹி
பாடம் செம பாட்டு ரசித்த பாடல்,
கீதா
டிக்கெட் வாங்கிச் சென்று தூங்கிய ஆளா நீங்க?
நீக்குaஅருமையான பக்திப்பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கக் கிடைத்தது உங்கள் தயவினால் ஸ்ரீராம். இனி கேட்க வேண்டும் அவ்வப்போது.
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குதுலாபாரம் சினிமா. மனதை விட்டு நீங்காமல் நெருடும் ஒரு சினிமா. சின்ன வயதில் பார்த்தது. அப்போழுதெல்லாம் அழுகையை அடக்க முடியாமல் பார்த்த ஒரு படம். அதனாலேயோ என்னவோ மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க ஒரு போதும் தயாராக இல்லை. பழைய நினைவுகளைக் கொண்டு வந்த இரு பாடல்கள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆமாம். இனிமையான பாடல்கள். ஜி தேவராஜன் இசை.
நீக்கு'ஓராறு முகமும்.... எங்கள் வீட்டில் ஒலித்த முருகன் பாடலில் ஒன்று.
பதிலளிநீக்குதுலாபாரம் பாடல் இலங்கை வானொலியில் கொடிகட்டிப் பறந்த பாடல்களில் ஒன்று.. படம் அந்நாளில் பார்க்கவில்லை பின்பு ரி,வி யில் பார்த்திருக்கிறேன்.
இரண்டு பாடல் பகிர்வுமே நன்று.
நன்றி மாதேவி.
நீக்குசங்கம் வளர்த்த தமிழ் - என்றொரு
பதிலளிநீக்குசந்தப் பாடலும் இத்திரைப் படத்தில்!...
விறலி விடு தூது அளவுக்கு இனிமையாக (!) இளமையாக இருக்கும்...
https://engalblog.blogspot.com/2022/01/blog-post_14.html
நீக்கு