வியாழன், 12 செப்டம்பர், 2024

நாய்க்கொரு கவிதை...

 அண்ணன் மகனின் மகனுக்கு முடி இறக்க குலதெய்வம் கோவில் சென்று வந்தோம். 

மாமாவின் மறைவு உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன வரலக்ஷ்மி விரதத்தை கடந்த வெள்ளி அன்று செய்தோம்.  சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி.  அன்று மாலை ஏழரை மணிக்கு கிளம்பி எங்கள் குடும்பமும், அண்ணன் குடும்பமும் கும்பகோணம் சென்றோம்.

வரலக்ஷ்மி விரதம் அன்று ஆளுக்கு ஒரு கொழுக்கட்டையும், விநாயகர் சதுர்த்தி அன்று ஆளுக்கு ஐந்தைந்து கொழுக்கட்டையும் கிடைத்தது.  அதென்னவோ எனக்கு கொழுக்கட்டை எட்டாப்பொருளாகிப் போனதால் அபூர்வமாகி ஆசை அதிகம் ஆகிவிட்டது!!

இந்தமுறை இரண்டு நாட்களும் மாவு பதம் ஒழுங்காய் வந்தது ஒரு திருப்தி.  அழகாய் கிண்ணம் செய்து பூரணம் நிரப்பி உடையாமல் எடுக்க முடிந்தது.  சிறிய மாறுதல் முறையில் செய்ததால் சரியாக வந்ததது என்று பாஸ் சொன்னார்.

விநாயகர் சதுர்த்தி புனர் பூஜையை வேறுவழியின்றி சனிக்கிழமை மாலையே முடித்தோம்.  இரவு இரண்டு மணிக்கு சம்பந்தி வீடு சென்று தங்கி, அங்கிருந்து காலை குலதெய்வம் கோவில்.  ஒப்பிலியப்பன் கோவில் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தது சில காரணங்களால் செல்ல முடியாமல் போனது.  பெருமாள் விருப்பம்.  குலதெய்வம் கோவிலுக்குச் சென்றுவிட்டு நேராக வீட்டுக்குத்தான் வரவேண்டும்.  வேறெங்கும், வேறு எந்தக் கோவிலும் செல்லக் கூடாது என்று சிலர் கூறினார்கள்.  நினைத்தாலும் செல்ல முடியாத சூழல்!

சம்பந்தி வீட்டருகே ரெட்ராயர் குளம்!  காலை 5 மணி.

குலதெய்வம் கோவில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் குடவாசலில் இருந்து சேங்காலிபுரம் செல்லும் வழியில் சிறு ஊர்,  மழுவச்சேரி.




கோவிலை பிரதட்சணமாக சுற்றும்போது இதே பாதையில் என் தாத்தா பாட்டிகள் அவரவர் பிள்ளைகளுக்காக சுற்றி வந்திருப்பார்கள் என்று மனதில் எண்ணம் ஓடியது.  ஆரம்பத்தில் சிலாரூபம் மட்டும் இருந்திருக்கலாம்.  பின்னர் கருவறை உண்டாகி இருக்கலாம்.  நான் பார்த்தபோது அந்த கருவறை மட்டும்தான்.  இப்போது கோவில் வளர்ந்திருக்கிறது. அதே பாதையில் நானும் கால்வைத்து சுற்றி வருகிறேன் என்கிற எண்ணம் மனதில் ஒருவித உணர்வைத் தோற்றுவித்தது. 




விளையாட்டாய் ஆட்டோ ஓட்டுவது போல புகைப்படம் எடுக்கப்போய், குடந்தை ஆட்டோ நண்பர், 
ட்டவே ஓட்டலாம் தப்பில்லை என்று சொல்லி ஆட்டோவை 'ஆன்' செய்த உடனே ஆட்டோ பின்னாலேயே செல்ல, எல்லோரும் பதறினாலும் நான் பதறவில்லை.  

பிரேக் பிடிக்காத ஆட்டோவில் வேகமாக முன்னோக்கிச் சென்று விபத்துக்குள்ளானபோதே நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! பின்னர் ஒரு வீடியோவும் போட்டோக்களும் எடுத்துக்கொண்டேன்..

திரும்பும் வழியில் வானம் காட்டிய காட்சி ஜாலங்களில் ஒன்று 

திரும்பும்போது கோவிலில் பிரசாதமாக புளியோதரை, பொங்கல், வடை, பஞ்சாமிர்தம் சாப்பிட்டதில் வேறெதுவும் சாப்பிடாததால் வடை பஜ்ஜி சாப்பிடலாம் என்று வழியில் டிரைவர் நிறுத்திய இடம் ஒரு கருப்பட்டி காஃபி கடை.  லேட்டஸ்ட் பேஷன் இந்தக் கடைகள்தான்!  அங்கு கண்றாவியான ஒரு டீயைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.  ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள்.  டின்னருக்கு நிறுத்திய மனோஜ் பவனில் மோசமான அனுபவம்.  எங்கள் நேரம், அந்நேரம் நாங்கள் கேட்ட எதுவும் இல்லை.  அங்கு இருந்தவற்றுள் மகன்கள், மருமகள் சிலவற்றை விரும்பிச் சாப்பிட, நாங்கள் சாதா தோசையுடன் திருப்தியடைந்தோம்.


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()(

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

*  1997 ஆம் ஆண்டு நெதர்லாந்திலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த கப்பல் ராட்சத அலைகளால் தாக்கப்பட்டதில் அந்த கப்பலில் இருந்த 'லெகோ'(Lego) என்னும் குழந்தைகள் விளையாடும் இணைக்கக்கூடிய துண்டுகள் இருந்த கண்டெய்னர் மூழ்கியது. ஆனால் இன்று வரை அந்த லெகோ துண்டுகள் ஐரோப்பாவின் கடற்கரைகளில் கிடைக்கிறதாம். - சுவாரஸ்யம்.

*  அளவில் பெரிய எரிகல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக கூறியுள்ள இஸ்ரோ, அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது. இந்த விண்கல் 2029ம் ஆண்டு ஏப்.,13ல் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.  2004ம் ஆண்டு அபோபிஸ் என்ற எரிகல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது, இந்த எரிகல் பூமிக்கு அருகில் வந்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா மற்றும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியது. 350 முதல் 450 மீ., விட்டம் கொண்டது இந்த விண்கல். 140 மீ., விட்டத்திற்கு மேல் உள்ள எந்த விண்கல்லும் ஆபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.  எகிப்திய கடவுளான அபோபிசை நினைவு கூறும் வகையில் அவரது பெயர் இந்த விண்கல்லுக்கு சூட்டப்பட்டது. இது 2029ம் ஆண்டும், அதற்கு பிறகு 2036ம் ஆண்டும் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். அப்போது பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் இருந்து 32 ஆயிரம் கி.மீ., உயரத்தில் இந்த எரிகல் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*  சண்டிகர்: நாற்பதாயிரம் பட்டதாரிகள், ஆறாயிரம் முதுகலை பட்டதாரிகள், 1.2 லட்சம் +2 முடித்தவர்கள் ஹரியானாவின் அரசு அலுவலகங்களில் துப்புரவு தொழிலாளியாக பணி புரிய விண்ணப்பித்திருக்கிறார்கள். மாத சம்பளம் ₹15,000/-- வறுமையின் நிறம் கருப்பு.

*  கணவரை டைவர்ஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த துபாய் இளவரசி, 'டைவர்ஸ்' என்ற பெயரில் புதிய வாசனை திரவியத்தை அறிமுகம் செய்தார்.  சமீபத்தில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்தார். அந்த பதிவில், 'அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.  அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்தாற்போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில், தற்போது வாசனை திரவியம் ஒன்றை இளவரசி மஹ்ரா இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு 'DIVORCE' (விவாகரத்து) என பெயரிட்டுள்ளார். இந்த பெயர் தான் சமூகவலைதளத்தில் சுவாரஸ்யமான விவாதத்தை கிளப்பி உள்ளது. 

*  டில்லி: குரல் மூலம் UPI பரிவர்த்தனை அறிமுகம். இனி UPI மூலம் பண பரிவர்த்தனை செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசி எண்ணையோ, யு.பி. ஐ. எண்ணையோ தட்டச்சு செய்யத் தேவையில்லை. குரல் வழி ஆணை கொடுக்கலாம். 

*  ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவை மீட்பதற்கான முயற்சி தடைபட்டு உள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, அதிக சம்பளத்தை வழக்கறிஞர் எதிர்பார்ப்பதே இதற்கு காரணம் ஆகும்.  தலால் அப்தோ மஹ்தி தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அப்துல்லா அமீர் என்ற வழக்கறிஞர், இந்தியா அரசு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜூலை 4ம் தேதி அவருக்கு 19,871அமெரிக்க டாலர் பணம் வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது.  ஆனால், அவர், மேலும் 20 ஆயிரம் டாலர் பணம் கொடுத்தால் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் எனக்கூறியுள்ளார். இதனால், பேச்சுவார்த்தை நடப்பது தடைபட்டுள்ளது. 'கிரவுடு பண்டிங்' என்ற முறையில் வெளிநாடு வாழ் மலையாளிகளிடம் நிதி திரட்டித்தான், ஏற்கனவே பணம் வழங்கப்பட்டது. இப்போது மேலும் அதே அளவு பணத்தை எப்படி திரட்டுவது, யாரிடம் உதவி கோருவது என்று தெரியாமல், அவரது குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.

*  ஒவ்வொரு மூன்றாவது இந்தியனும் fatty lever பாதிப்பிற்கு ஆளாகின்றனராம். இதில் பெண்களின் சதவிகிதம் அதிகம்(38%). ஆண்கள் 33%.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையின் கையில் வைத்திருந்த லட்டுவை ஏலம் விட்டதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி அதை 1,51,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்து கிராம மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி யுள்ளார்.  கிராம மக்கள் அவருக்கு ஒரு பவுன் தங்கக்காசும், 10 வேஷ்டி சட்டைகள், 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

*  பெங்களூரு: அமெரிக்கா செல்வதற்காக பொருள்கள் வாங்குவதற்காக சேலத்திலிருந்து பெங்களூரு வந்திருக்கிறார் 29 வயதான சபரீஷ் என்னும் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞர். அவர் நண்பர்களோடு சென்ற கார் வேகமாக சென்றதில் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் பைக்கோடு நேருக்கு நேராக மோதி, யஷ்வந்த்பூர் பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் மரணமடைந்தார்.- சிதைந்த கனவு. 

ஜப்பானின் துயரம்: 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஜப்பானில் 40000 பேர்கள் வீட்டிலேயே இறந்த நிலையில் சடலமாக மீட்கப் பட்டிருக்கின்றனர். அதில் 4000 பேர் இறந்து ஒரு மாதத்திலும், 130 பேர் இறந்து ஒரு வருடத்திற்கு பிறகும் சடலமாக மீட்கப் பட்டிருக்கின்றனர். உலகிலேயே அதிக முதியவர்கள் கொண்ட நாடான ஜப்பானில் கவனிக்க ஆளில்லாமல் வீட்டிலேயே இறக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.- மனதைப் பிழியும் சோகம். 

தெலங்கானாவில் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஓராண்டாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகளில், கணவர் சுனில் உடல்நலக்குறைவால் மரணம் அடைய, தகவல் அறிந்த மனைவி சடலம் வைக்கப்பட்டிருந்த ஆற்றங்கரைக்கு வந்து தன் மகனுக்கு சேரவேண்டிய சொத்தின் பங்கைக் கொடுத்தால்தான் தகனம் செய்ய விடுவேன் என்று போராடி, இரண்டு நாட்களில் கோரிக்கை ஏற்கப்பட்டதும், இரண்டு நாட்களாகக் காத்திருந்த சுனிலின் உடலுக்கு விடுதலை கிடைக்க,  மகனை தந்தையின் உடலை தகனம் செய்ய அனுமதித்துள்ளார்.

உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் தண்டவாளம் மீது சிமெண்ட் துண்டுகளை வைத்தும், சிலிண்டர், கம்பிகள் வைத்தும், டிராக்டரை குறுக்காக நிறுத்தியும் ரயிலைக் கவிழ்க்க தொடர்ந்து சதிகள் நடந்து வருவதை வெவ்வேறு செய்திகள் சொல்கின்றன.

*  எதிர் முனையில் பேசும் நபர், தன்னை சி.பி.ஐ., அதிகாரி என்பார். 'நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள். சிறைக்கு செல்லாமல் இருக்க, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும்' எனவும் கூறுவார். மொத்தத்தில், உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவர்.  சில தினங்களுக்கு முன், 'வாட்ஸாப்' அழைப்பில், இன்ஸ்பெக்டர் போல பேசிய மர்ம நபர், தன் பெயரை வெளியிட விரும்பாத சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம், 'கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளீர்கள். சட்ட விரோத செயலுக்கு உங்கள் மொபைல் போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. உங்கள் மீது, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என, மிரட்டல் விடுத்துள்ளார்.

*  மும்பை பந்த்ராவை சேர்ந்தவர் வினாயக் கோல்வங்கர்,76, விஞ்ஞானியான இவர் பி.ஏ.ஆர்.சி., எனப்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி பணிநிறைவு பெற்றார். மும்பை நியூ எம்.ஐ.ஜி. காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த செப். 5-ம் தேதி முதல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

பெங்களூரு: ராஜஸ்தான்,கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை குறித்து கேள்வி எழுப்பப் பட்ட பொழுது இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, "கோச்சிங் சென்டர் கலாசாரத்தை ஒழித்து, ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துங்கள்" என்றார்.  மேலும் "பள்ளிகளில் கற்பதை விட கோச்சிங் சென்டர்களில் சிறப்பாக கற்றுக் கொள்ள முடியும் என்று நினைப்பது தவறு. கோச்சிங் சென்டர்கள் சில நெறிமுறைகளை வலியுறுத்துகின்றன. அவற்றை பெற்றோர்களே வீட்டில் கொண்டுவர முடியும். ஓய்வு பெற்ற, திறமை மிகுந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கும் முறைகளை தற்கால ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் திறனை மேம்படுத்தலாம்" என்றும் கூறியிருக்கிறார். 

*   இந்தியாவில் நிலவும் சில்லறை வாணிப (retail marketing) சட்டங்களினால் லாபம் ஈட்ட முடியவில்லை என்று இந்தியாவை விட்டு வெளியேறிய Carrefour என்னும் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் துபாய் சேர்ந்த Apparal என்னும் நிறுவனத்தோடு இணைந்து மீண்டும் இந்தியாவிற்குள் நுழையப் போகிறது. 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


சென்ற வருடம் பேஸ்புக்கில் பகிர்ந்தது....

நேற்று செப்டம்பர் பதினொன்றாம் தேதி. மகாகவி பாரதியார் நினைவு தினம். சிலபேர் இந்த தேதியிலும் தவறு இருக்கிறது என்று சொல்லி இருந்த ஞாபகம்.
ஒருவர் இறந்தபிறகு அவரைப்பற்றி தனக்குத் தோன்றியதை எல்லாம் மேடைகளில் மற்றும் பொதுவெளியில் எடுத்து விடுவது 'இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளும் உள்ளது'!
அசோகமித்திரன், சுஜாதா இவர்களை பற்றியெல்லாம் எல்லாம் தெரிந்தவர்கள் போல சொல்வது போலவே அப்போதும் இஷ்டத்துக்கு பேசி இருக்கிறார்கள், எழுதி இருக்கிறார்கள்.
1977 ல் குமுதத்தில் பாரதியார் நூற்றாண்டு விழா காரணமாக அவர் ஜாதகம், விவரம் பற்றிய குறிப்புகளுடன் 'நான் பாரதியாரை சந்தித்தால்' என்ற தொடர் ஆரம்பித்து, அதில் ஓரிரு விவாதத்துக்குரிய கருத்துகளும் இடம்பெற்றன. அறந்தை நாராயணன், குமரி அனந்தன் போன்றோர் சொன்னதை, அறந்தைக்கு பகீரதனும், குமரிக்கு ரகமியும் விளக்கம் கொடுத்தார்கள்.
தொடரில் வீரமணியும், கமலஹாசனும் கூட கதைத்திருந்தார்கள்.
தொடர்ந்து அதே குமுதம் இதழில் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வருத்தப்பட்டு எழுதி இருப்பது கீழே தருகிறேன்.

============================
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா பெருமைப்படும் விதத்தில் அரசினரால் தொடங்கப்பட்டது என்பது நாடறிந்த விஷயம். ஏராளமான அறிஞர்களும், பெரியவர்களும் தத்தம் அன்பு உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. எனினும்... பாரதியாரின் பேத்தி - தங்கம்மாளின் புதல்வி என்ற உரிமையில் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
பாரதியார் வறுமையில் வாடியது உண்மைதான் என்ற போதிலும் வறுமையை துச்சமென உதறியவர் அவர். "சாப்பிட்டால் பொரித்த அப்பளத்துடன் நல்ல சாப்பாடு... இல்லையெனில் பழமும் பாலுந்தான்," என்று என் பாட்டி செல்லம்மா பாரதி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி இன்று பேசுவோர் சற்று நாகரீகமாக இருக்க வேண்டுமென வேண்டுகிறேன்... கிழிசல் கோட்டு, எலி கடித்த மாதிரி பொத்தல்கள், அதை மறைக்க மனைவியினுடைய கருப்பு சேலை சாயப்பூச்சு என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு அவர் ஒருநாளும் இருந்ததில்லை.என்று என் பாட்டியார் கூறக் கேட்டிருக்கிறேன்.
என் தாயார் தங்கம்மாள் பாரதி உயிருடன் இருந்த காலத்தில் அவர் தெருவில் கீரைத்தண்டு விற்றார் என்று பத்திரிக்கையில் எழுதியிருந்ததையும் பாத்திருக்கிறேன்.
தன் பெண்ணுக்குத் தன் கைப்பட தாரை வார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்தவர் பாரதியார். அப்படியிருக்க, 'பாரதியார் தம் மகள் கல்யாணத்துக்கு வர மறுத்து விட்டார். நான்தான் கல்யாணத்திற்கு வேண்டிய வேஷ்டி புடைவைகளை கடனாகக் கொடுத்து உதவி, கல்யாணத்தை நடத்தி வைத்தேன்' என்று என் காதுபடவே அன்பர் ஒருவர் கூறினார்.
புதுவை அரசு நடத்திய பாரதி விழாவிலும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். 'பாரதியார் என் மடிமீது படுத்து உயிரை விட்டார்' என்று ஒரு அன்பர் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளைக் கேட்கும்போது மனத்திற்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது. எல்லாம் அன்பின் மிகுதியால் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் என்ற போதிலும் எங்கள் குடும்பத்தினரால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
பாரதியார் இறந்த பின்தான் நான் பிறந்தேன் என்றாலும், என் பாட்டியாரால் முழுக்க முழுக்க வளர்க்கப்பட்டவள் நான். "பாரதியார் ஒரு அலங்கார பிரியர். இறப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு கூட தான் அணிந்திருந்த அல்பகா கோட்டையும், தலைப்பாகையையும் சரி செய்து கொண்டார். நல்ல ஆடைகளை அணிவதில் அவருக்கு விருப்பம் மட்டுமல்ல, அதை அணிவதிலும் மிகுந்த கவனமும் செலுத்துவார்" என்றெல்லாம் என் பாட்டியார் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே, பாரதி அன்பர்கள் எது சொன்னாலும் சரி, எழுதினாலும் சரி, அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். 'பசியின் கொடுமை காரணமாக பாரதியார் ரோட்டில் கிடந்த எச்சிலையைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்' என்றளவிற்கு கூட நாளை யாரும் சொல்லி விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நாய்க்கொரு கவிதை...


நான்கடிக்கு நான்கடி 
கூண்டுக்குள் 
குறுகிப் படுத்திருக்கிறது 
நாலுகால் செல்லம் 
அப்படித்தான் அழைக்கிறார்கள் 
அதை 
அடைத்து வைத்து 
அவ்வப்போது 
நான்கடியில் ஓரடியை 
அடைத்திருக்கும் 
கிண்ணியில் சோறு வைத்து விட்டு 
செல்லம் என்றுதான்  
அழைக்கிறார்கள் அதை 


ச்சுச்சு, கக்கா போகும் 
விடுதலை நிமிடங்களுக்காய் 
கம்பியில் முகத்தை வைத்து பார்த்தபடி 
காத்திருக்கிறது 
திறந்து அழைத்ததும் 
வாலாட்டியபடி வந்து விட்டு 
வாலாட்டியபடி 'கழித்து'விட்டு 
வாலாட்டியபடி 
அனைவரையும் ஒரு சுற்று சுற்றி 
முகர்ந்து விட்டு 
வாலாட்டியபடியே உள்ளே 
அதுவே அடைந்து கொள்கிறது 
விடுதலையை அது 
மறந்து விட்டதா, விரும்பவில்லையா 
தெரியாது 


என்னவென்று கேட்டேன் 
வள்வள் என்றே 
பதிலாய்ச் சொன்னது...



மூச்சா போகும்போது 
நானும் ஒரு நாய் 
பார்த்தேன்.
உணவுக்காய் 
முடுக்கெங்கும் முகர்ந்தபடி 
எலும்பும் தோலுமாய் 
எதிரே வந்தது.
என் கழுத்துக் கயிற்றை 
ஏளனமாக அது பார்த்தது 
அதன் இளைத்த வயிற்றை 
பகடியாய் பதிலுக்கு  
நானும் பார்த்தேன்.

உள்ளே இழுத்து வரப்படுகையில் 
என்னுள்ளே ஒரு கேள்வி 
சுதந்திரமாய் பட்டினி, கல்லடி 
சிறைச்சாலையில் 
கொஞ்சல்களுடன் சோறு 
எது பெரிது? 

ஆமாம், எது பெரிது?

குழம்பித்தான் போனேன் 
நானும் 
செல்லம் 
தொடர்ந்து 'வள்'ளியது...

என் நிலை தேவலாம் 
எதிர்வீட்டில் 
ஒரு பொமெரேனியன் 
கூண்டு கூட இல்லாமல் 
வெளியேயே கட்டப்பட்டு 
வெய்யிலிலும் மழையிலும் 
அவதிப்படுகிறானாம்..

என்நிலை சொல்ல 
ஒருமுறை 
ஓங்கி குரல் கொடுத்த போது 
உன் நிலை தேவலாம் என்று 
தன்னிலை சொல்லி 
எதிர்க்குரல் கொடுத்தான்.
அந்த அழுகுரலில் 
அடங்கிப்போனேன் 
நானும்.

**********************************

இந்தக் கவிதை எழுதுவதற்கு மூலகாரணமாக இருந்த  க்ரூட்டை மகன் படம் பிடித்துக் கொடுத்தான்.  கீழே..



************************************************************************************************************************

ஜெயலலிதாவின் வாரிசு போல ஒரு முகம் ரீல்ஸ் பார்க்கும்போது தென்படுகிறது....  நிறைய ஜாடை ஒற்றுமைகள்...  பெயர் 'வசந்த்தி'யாம்!


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

படித்ததில் பகிர்வது....



ஒருசமயம் இரவு நேரத்தில் நான் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே எதேச்சையாக தனது நண்பர்களுடன் வந்திருந்த பிரகாஷ் என்னைப் பார்த்து விட்டார். ”என்ன இங்கே?” என்று கேட்டார். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னேன். அவ்வளவுதான். ‘நாம் சந்திக்காமல் எப்படிப் போவது?’ என்று சொன்னவர், தன் நண்பர்களை விட்டு அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போடச் சொல்லி, மூன்று நாள் வரைக்கும் அங்கேயே தங்க வைத்தார். அந்த மூன்று நாளும் அவரும் வீட்டுக்குப் போகவில்லை. அங்கே இன்னொரு எழுத்தாள நண்பரையும் சந்தித்தேன். அவர் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார் - பெயர் நினைவில்லை - பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் சொல்கிறேன் என்றால் பிரகாஷிற்கு என் மேல் அவ்வளவு ஈடுபாடு.
பிரகாஷ் நாவல்கள், சிறுகதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு எழுத்தாளன் என்று தன்னை காட்டிக் கொண்டது கிடையாது. அவ்வப்போது நாடோடிக் கதைகள் என்று தாமரையில் எழுதியிருப்பது தெரியும். மற்றபடி அவர் தன்னை எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. மேலும் அவருக்கு தெலுங்கு தெரியும், மலையாளம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். லாரி ஓட்டுவதற்கான ஹெவி டிரைவிங் லைசென்ஸூம் அவர் வைத்திருந்தார். அவருடைய தாய் ஒரு ஐயங்கார். தந்தை தேவர். பிரகாஷின் பாட்டி ஒரு பெரிய டாக்டர். இதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது. அவரது பேச்சு மட்டுமே தெரியும். ஆனால் அவர் நிறைந்த படிப்பாளி. பெங்காளி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சிறந்த, ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உடையவர். பல புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். நல்ல ஞாபக சக்தி உடையவர். எனக்காக ஒரு பத்திரிகையே அவர் ஆரம்பித்து நடத்தினார். “வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்” என்பதைச் சுருக்கி ‘வெசாஎ’ என்ற தலைப்பில் ஒரு புதிய பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அதில் முழுக்க முழுக்க நான்தான் எழுதினேன். வேறு யாரும் கிடையாது. அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஆனாலும் பிடிவாதமாக நடத்தினார். இரண்டு இதழ் வந்தது. மூன்றாவது இதழ் வரும்போது அவர் இல்லை.

- வெங்கட்சாமிநாதன்
நன்றி: சொல்வனம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பொக்கிஷம்  :- 

நான்கும் ,ஆறும் படிக்க முடிகிறதா, சொல்லுங்கள்.  






95 கருத்துகள்:

  1. நங்கநல்லூர் ஆஞ்சு கோயிலில் புளியோதரை உங்களுக்குக் கிடைக்கமாட்டேங்குதுனா வீட்டில் கொழுக்கட்டையுமா??!!!!!! பாஸிடம் கேட்கிறேன்.... ஏம்பா இப்படின்னு!!!!!!

    ஒட்டவே ஓட்டலாம்// இதைக் கொஞ்சம் கவனிங்க...ஆட்டோ ஓடிச்சான்னு ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் புளியோதரை இங்கு கிடைத்தது.  குருக்கள் சொன்னபடி வராமல் தாமதம் செய்தார்.  ரோஷம் வேண்டாம் என்று சொல்வது போல புளியோதரையில் உப்பு போடாமல் அனுப்பி இருந்தார்கள்!

      ஒட்டி / ஓட்டி...  சரி செய்து விட்டேன்!

      நீக்கு
  2. அடுத்த வரியிலும்....ய் பாருங்க!!//

    ஆ! ஆட்டோ ஓட்டி விபத்தெல்லாமுமா? எப்போ?

    இப்போதைக்கு இவ்வளவு. பின்னர் வருகிறேன்.

    கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆ! ஆட்டோ ஓட்டி விபத்தெல்லாமுமா? எப்போ?//

      அப்போது நான் ஓட்டவில்லை. முன்னாள் ஆ ஆ கருப்பு!
      2018 அல்லது 19...   பதிவிலேயே சொல்லி இருந்தேனே கீதா...   

      இன்னொரு பிழையையும் சரி செய்து விட்டேன்.  நன்றி.

      நீக்கு
    2. அந்த விபத்து தெரியும் நினைவிருக்கு ஸ்ரீராம். நீங்க இப்படி ஓட்டிப் பார்த்தப்ப ஏற்பட்ட விபத்துன்னு மாற்றிப் புரிந்துகொண்டுவிட்டேன்...

      கீதா

      நீக்கு
  3. ஏன்தான் இப்படி பயணங்களை அவசர அவசரமாக வைத்துக்கொள்கிறீர்களோ? வேலை, கடமைகள் போன்றவை என்றைக்காவது இல்லாமல் போகுமா? இருந்தாலும் மருமகளுடன் முதல் பயணம். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரம் மகன்கள், மருமகள்களுக்கு...  மறுநாள் காலை  அலுவலகத்தில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் டெப்லாய்மென்ட்!

      நீக்கு
  4. நாய் கவிதை நன்று. விலங்குகளை அதனதன் போக்குகளில் விட்டுவிடவேண்டும். கோவில் யானையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள, மறுத்த நெருங்கிய உறவினரின் நினைவு வரைகிறது. காலில் சலங்கையிட்டு இப்படி நடத்துவது மனதுக்கு ஒப்பவில்லை என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  கோவில் யானை ஏதோ தானே சாமி கும்பிடுவது போல பழக்கி வைத்திருப்பார்கள்.  அதற்கென்ன தெரியும்?  ஆனாலும் அந்த ஆஜானுபாகு உயிரினம் ஒரு பிரமிப்படிதான் தரும்.  ஸ்ரீரங்கம் ஆண்டாள் பாகனுடன் பேசுவது, இன்னொரு யானை பாகனுடன் விளையாடுவது எல்லாம் சுவாரஸ்யம்.

      ஸ்ரீரங்கம் பிரகாரத்தில் அதிகாலை தரிசனத்துக்காக காத்திருக்கையில் மிக அருகில் யானை வந்து உள்ளே சென்றது சிலிர்த்தஸ்து எனக்கு.  ஒரு நொடி அதன் பார்வை என் மேல்...

      நீக்கு
    2. விலங்குகளை அதனதன் போக்குகளில் விட்டுவிடவேண்டும்.//

      அப்படினா ஏன் யானை ஊருக்குள் வந்தா வெடி வைக்கிறோம்? புலி ஊருக்குள் வந்தா சுடுகிறோம்? நாய் பூனைகளை விரட்டுகிறோம்.....சரி அவை விலங்குகள்....

      நம்ம கூட உள்ளவங்களை அவங்கவங்க போக்கில் விடுகிறோமா நெல்லை?!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்(க்கா) கேள்வி, எம் ஆர் ராதா ரத்தக்கண்ணீர் படத்தில் சொல்வதை நினைவுபடுத்துது. உயிர்க்கொலை கூடாதுன்னு சொல்லிட்டு கொசுவைக் கொல்கிறோமே என்று கேட்பார்.

      யானையை விளைநிலங்களிலிருந்து விரட்டுவது (காட்டுப் பன்றிகளையும்) நம் உழைப்பைப் பாதுகாத்துக்கொள்ள, பாம்பை மற்றவற்றை விரட்டுவது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள. சிலர் நாயிடம் ஏதோ அது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் என்று பந்தா காட்டுவதற்காக, இன்னைக்குப் பண்ணின வெந்தயக் குழம்பு நல்லா இருந்ததில்லையா என்று அதனிடம் நடைப்பயிற்சியின்போது பேசிக்கொண்டே செல்வதை நினைவுபடுத்துகிறது (satire)

      நீக்கு
    4. ஶ்ரீராம்... கூடவே இருக்கும் விலங்குகள் நம் உணர்வைப் புரிந்துகொள்ளும். திருக்குறுங்குடியில் கொட்டடியில் கட்டப்பட்டிருந்த யானை என்னிடம் பேசியது (மனைவி சாட்சி ஹாஹாஹா). ஒரு தடவை அல்ல. இரண்டு மூன்று தடவைகள். எனக்குத்தான் புரிந்துகொள்ளும் பொறுமையில்லை.

      நீக்கு
    5. ஜோக் ஒன்று நினைவிருக்கா நெல்லை?  ஒரு சீன நண்பன் பேஷண்ட்டைப் பார்க்க ஒரு இந்திய நண்பன் ஆஸ்பத்திரி சென்றானாம்.  அவன் ஏதோ இவனிடம் கையை ஆட்டி ஆட்டி சொல்ல முயன்று..  அப்படியே உயிரை விட்டானாம்.... 

      நீக்கு
    6. // கூடவே இருக்கும் விலங்குகள் நம் உணர்வைப் புரிந்துகொள்ளும். //

      ஆம். எனக்கு அனுபவம் உண்டு. சொன்னதைக் கேட்கும். மோத்தி, சாத்தி, பிரௌனி, அப்புறம் ஒரு குட்டிப்பூனை

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. இந்தத் தடவை ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒப்பிலியப்பன் கோவில் புளியோதரை பிரசாதம் சாப்பிட்டனோது உப்பில்லை என்பது புரிந்தது. ருசியில் மாற்றம் தெரியவில்லை என்பது அதிசயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒப்பிலி புளியோதரையில் எப்போதுமே உப்பிருக்காதுதானே!

      நீக்கு
  7. பத்திரிகைத் துணுக்குகளைப் படிக்க முயன்று கண்ணைக் கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை.

    பதிலளிநீக்கு
  8. குலதெய்வ வழிபாடு, அண்ணன் பேரன் முடி இறக்கும் விழா சிறப்பாக நடந்து இருக்கிறது.

    மற்றும் குலதெய்வ கோவில் படங்கள் காணொளி
    வழியில் எடுத்த படங்கள், கொழுக்கட்டை மந்தாரை பூ படங்கள் நன்றாக இருக்கிறது.

    ஓட்டலில் மகன்கள், மருமகளுக்கு பிடித்த உணவு கிடைத்ததே!

    எது கேட்டாலும் இல்லை என்று சொன்ன ஓட்டல் கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. குலதெய்வம் கோயில் போவது என்றால் நமது கீதா சாம்பசிவம் மேடம் தான் நினைவுக்கு வருகிறார். அவருடைய கட்டுரைகள் டூர் டைரி போன்று விவரமாக இருக்கும். அது சரி குலதெய்வம் பெயர் கூறவில்லையே.

    நியூஸ்ரூம் என்ற தலைப்பின் கீழ் பா வெ யின் பெயரை போடாமல், பாட்டி பேப்பர் பார்ப்பது போல் படம் போட்டு அதன் கீழ் பானுமதி வெங்கடேஸ்வரன் என்று போட்டிருப்பது உங்களுக்கே உரிய குறும்பு.

    செல்லம் பற்றிய கவிதை ஈர்க்கவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்து மனிதர்களே எலிப்பொந்தில் வாழும் நிலையில் சுதந்திர செல்லங்களுக்கு இடம் ஒதுக்குவது மிகவும் கஷ்டம் தான். இந்த போராடல் சிறுவர் கதையான வயல் எலியும், நகர எலியும் கதையை நினைவு படுத்தியது.

    //எனவே, பாரதி அன்பர்கள் எது சொன்னாலும் சரி, எழுதினாலும் சரி, அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். //
    மனம் திறந்த வேண்டுகோள்.

    அம்மா தி மு க காரர்கள் வசந்தியை கட்சிக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு ஒரு ஊன்றுகோல் தேவை. தீபா அட்ரஸ் இல்லை.

    பொக்கிஷத்தில் இருக்கும் 18 நகைச்சுவை எழுத்தாளராக்களில் ஒருவருடைய கதையையாவது நான் படிச்ச கதையில் இதுவரை உட்படுத்தவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தேட வேண்டும்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலதெய்வம் பெயர் சாத்தியப்பா - பாலசாஸ்தா 

      குறும்பா...   நாராயணா..  நாராயணா..  இதென்ன குறும்பு!

      கவிதை உண்மையைச் சொல்வதால் ஈர்க்கவில்லை!!  ஹிஹிஹி...

      வசந்த்தி...   எப்படி இப்படி உருவ ஒற்றுமை என்றும் தெரியவில்லை.  ஒவ்வொரு அசைவும் ஜெ போலவே இருக்கிறது.

      எழுத்தாளர்கள் படம் பார்த்து உங்கள் சிந்தனை...  அந்த டெடிகேஷன் எனக்குப் பிடித்திருக்கிறது.

      நீக்கு
  10. செய்திகள், பாரதியார் பேத்தி கட்டுரை படித்தேன்.
    நாய் கவிதை சோகம். கூண்டுக்குள் அடைபட்ட நாயின் நிலை பாவம்.
    படங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் பிரியர்களுக்கு பார்க்க கஷ்டமாக இருக்கும்.
    பொக்கிஷ பகிர்வில் "பின்னாலே ரொம்ப அசிங்கம் "சிரிப்பை வரவழைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொக்கிஷ பகுதியில் அந்த படங்களை படிக்க முடிகிறதா கோமதி அக்கா?  ரொம்ப சிறிதாகவும், எழுத்துகள் மங்கி இருப்பது போலவும் இருக்கிறது.

      நீக்கு
  11. எழுத்தாளர்கள் பேர் 4 . சாவி. 6. சுந்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னியின் புதல்வர் எழுதியவர் சுந்தா.

      நீக்கு
    2. ஓ அக்கா...   உங்கள் பதிலில் சற்றே குழம்பி மேலே சென்று பார்த்தபோது நான்தான் குழப்பி இருக்கிறேன் என்று தெரிகிறது. 

      பொக்கிஷப் பகிர்வில் நான் மொத்தம் ஆறு படங்கள் பகிர்ந்துள்ளேன்.  அதில் நான்காவது சித்திர ஜோக்கும், ஆறாவது ராஜு பற்றிய விவரத்துடன் கூடிய அவரது ஜோக்கும் படிக்க முடிகிறதா என்று கேட்க முயற்சித்துள்ளேன்!!

      நீக்கு
    3. ஓ ! அப்படி கேட்டீர்களா?
      //நான்காவது சித்திர ஜோக்கும், ஆறாவது ராஜு பற்றிய விவரத்துடன் கூடிய அவரது ஜோக்கும் படிக்க முடிகிறதா என்று கேட்க முயற்சித்துள்ளேன்!!//

      நீங்கள் கேட்டது படிக்க முடிகிறது. "தமிழ் நாட்டு குடும்பங்களை மகிழ்ச்சியால் நிரப்பியவர் ராஜூ "

      படித்தேன்.

      நீக்கு
  12. ///ரயிலைக் கவிழ்க்க தொடர்ந்து சாதி நடந்து வருவதை வெவ்வேறு செய்திகள்///


    ரயிலைக் கவிழ்க்க தொடர்ந்து சதி நடந்து வருவதை வெவ்வேறு செய்திகள்..

    அவுனுங்க ஊர்லே வெச்சு வெறும் ரயிலை பழசாப் பாத்துக் கவுத்து வுடுங்கோ... பய புள்ளைங்க குஷியாய்டுவானுங்கோ...

    அப்டியே அந்தக் கும்பலை போட்டுத் தள்ளிடோணும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி செய்து விட்டேன்.  சாதியை சதி ஆக்கி விட்டேன்!!

      சமீபத்தில் ஒரு ரீல்ஸ் காட்சியில் இயல்பாக நடந்து செல்வதைப் போல அடைந்து தண்டவாளங்களில் உள்ள திருகாணிகளை இரு இளைஞர்கள் கழற்றுவதை காணொளி எடுத்திருந்தார்கள்.  எடுத்து முடித்தபின் அதை எடுத்தவர் போதிய நடவடிக்கை எடுத்திருப்பார் என்று நம்புகிறேன்! 

      நீக்கு
  13. நாய்க்கான கவிதை ஆஹா உண்மைய புட்டு புட்டு அருமையான எண்னப் பதிவு அதே சமயம் மனதை என்னவோ செய்துவிட்டது ஸ்ரீராம்....நம் வீட்டில் வளர்ந்தவைக்கு கூடு இல்லாமல் வளர்ந்தவை.

    அவை எல்லாம் நினைவுக்கு வந்து செல்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்   நானும் முதலில் கட்டாமல் வைத்திருந்துதான் வளர்த்தேன்.  பின்னர் கொஞ்ச காலம் கட்டி போடப்பட்டிருந்தன.  அது மோதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

      நீக்கு
  14. நாய்க்கான கவிதை நெஞ்சைப் பிழிகின்றது..

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கங்கள்
    பொக்கிஷம் பகுதியில் வெளியிடுவது தெளிவாக
    தெரிவதில்லை. படிக்கமுடிவதில்லை.
    சற்று கவனிக்கவும்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சக்ரபாணி ஸார்...   நானே நினைத்தேன்தான்.  இனி கவனமாக இருக்கிறேன்.  படிக்க முடிவதை மட்டும் பகிர்கிறேன்.

      நீக்கு
  16. சாலையோர மரங்களை வெட்டித் தள்ளுவதைப் போல -

    மனித வாழ்விலிருந்து மாடு, நாய்களை முற்றாக அப்புறப் படுத்தப் படவும் கோரிக்கைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்கு மட்டும்தான் இந்த உலகு என்று நினைக்கிறார்கள்.

      நீக்கு
    2. இந்தக் கோரிக்கைகளை யார் வைக்கிறார்கள், எதற்காக என்று பார்க்கவேண்டும். ரோடில் பசு காளைகள் திரிந்து டிராபிக் ஜாம், பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதை எப்படி எல்லோரும் பொறுத்துக்கொள்வார்கள்? இதுபோல தெரு நாய்கள் வளாகத்தில் சுற்றித் திரிந்து பிறருக்கு ஆபத்தாக மாறுவதையும்.

      நிறையபேர் தங்களை புத்தர்கள் என்று நினைத்துக்கொண்டு, ரோஹிங்க்யா முஸ்லீம்களுக்கு நம் நாடு இடம் கொடுத்தால் என்ன தப்பு என்று கேட்கிறார்கள், அவர்களுக்கும் நம் நாட்டிற்கும் சம்பந்தமில்லை என்று புரிந்துகொள்ளாமல். அப்போ, நீ ரெண்டு ரோஹிங்கியாக்களை உன் வீட்டில் வைத்துக்கொள் என்றால் காணாமல் போய்விடுகிறார்கள். இதுவேதான் தெரு நாய்களுக்கும்.

      நீக்கு
    3. // அப்போ, நீ ரெண்டு ரோஹிங்கியாக்களை உன் வீட்டில் வைத்துக்கொள் என்றால் காணாமல் போய்விடுகிறார்கள்.//

      ஹா.... ஹா... ஹா....

      நீக்கு
  17. பாரதியார் பேத்தி கட்டுரை ஏற்கனவே படித்ததாக நினைவு...

    நவீன புனைவாளர்கள் இனியாவது திருந்த வேண்டும்...

    இங்கே கொஞ்சம் பேர்

    இராசராச சோழன் என்னைக் கேட்டுட்டுத்தான் சண்டைக்குப் போனாருன்னு சொல்லிக்கிட்டு திரியறானுவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுமாதிரி ரஞ்சிதங்களும் சீமான்களும் இங்கு அதிகம்!!

      நீக்கு
  18. குரல் வழி பதிவு என்பது பாதுகாப்பானதா?

    அந்த நர்ஸ் நிமிஷா நிஜமாகவே தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்தாரா? செய்தார் என்றால் ஏன் எதற்கு? அந்தச் செய்தியில் விவரங்கள் இல்லையே....

    இந்த fatty liver பிரச்சனை இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. எப்படிப் பாதுக்காத்துக் கொள்ளலாம் என்பது உட்பட....நெருங்கிய நட்பு ஒருவருக்கு இது கூடுதலாகி சில சிகிச்சைகள்...இதனால் ஏற்பட்ட வேறு சில பாதிப்புகள் மாத்திரை மருந்துகள் என்று போகின்றது.

    ஏலத்திற்கு ஈடுகட்டா? மொய்க்கு மொய் என்பது போல!!

    ஜப்பான் செய்தி சோகத்துடன் கூடவே நிறைய விஷயங்களையும் கருத்தில் கொள்ளச் சொல்கிறது.

    சாதி நடந்து வருவதை வெவ்வேறு செய்திகள் சொல்கின்றன.//

    சதி?

    அந்த டிஜிட்டல் மிரட்டல் தனக்கு நடந்ததை, டைரக்டர் மௌலியின் சகோதரர் வீடியோவே போட்டிருந்தார். அவர் முதலில் இதை நம்பியும் நம்ப முடியாமலும் அவஸ்தைக்கு ஆளாகி, பயந்து போக...அப்போது குடும்ப நண்பரின் மகன் இந்தச் செய்தியைச் சொல்லி, உடனே அந்த நம்பரின் தொடர்பை கட் செய்யச் சொல்லி...என்று சொல்லியிருந்தார்.

    https://www.youtube.com/watch?v=-aDI6EBuDmI

    விநாயக் கோல்வங்கர் - மறதி நோயாக இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதி மாற்றி விட்டேன். 

      பரவாயில்லை, அந்த காணொளி லிங்க்கை தேடி எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

      குறல்வழி பதிவு பாதுகாப்பா இல்லையா என்று காலம் சொல்லட்டும்!

      நிமிஷா என்ன செய்தாரோ...  யாருக்கு தெரியும்?  பார்த்த செய்தி...  அஷ்டே...

      நீக்கு
    2. //ஜப்பான் செய்தி சோகத்துடன் கூடவே நிறைய விஷயங்களையும் கருத்தில் கொள்ளச் சொல்கிறது.// எனக்கு இதில் புரியும் செய்தி, தேவையில்லாமல் ஆயுளை நீட்டிக்கக் கூடாது. மாறிவரும் உலகில் 70க்கு மேலேயே பெரும்பாலும் தேவையில்லாதவர்களாக, சுமையாக ஆகிவிடுவோம். (பொதுவாக. நிறைய விதிவிலக்குகள் உண்டு). ஒரு காணொளி 130-135 வயது உள்ள பெரியவர் அவருடைய பேரனுடன் இருக்கிறார். அந்தப் பெரியவர் மம்மி போன்றே எனக்குத் தோன்றினார். ரொம்ப வயதாகியும் உயிரோடு இருப்பது வரமா இல்லை சாபமா? (புதன் கேள்வி)

      நீக்கு
  19. பொக்கிஷம் பகுதியில் வெளியிடப்படுபவை தெளிவாகத்
    தெரிவதில்லை. படிக்க முடிவதும் இல்லை..

    இதனால் தான் அத்ழ்ன் பக்கத்தில் வருவதில்லை...

    மேலும் பொக்கிஷத்தைக் காவல் காத்துக் கொண்டு பூதம் இருக்குமாமே!..

    பதிலளிநீக்கு
  20. பாரதியின் பேத்தி யின் ஆதங்கம் மன வருத்தம் நம்மையும் ஆட்கொள்கிறது. இப்ப உயிருடன் இருப்பவர்களையே இந்த மீடியா என்னவெல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக் கேவலப்படுத்துகிறது! எழுத்திலும், காணொளிகளிலும்

    யுட்யூபர்ஸ்கு சுந்தர்பிச்சை ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். இதைக் குறித்து கூகுளில் பணிபுரியும் என் நெருங்கிய உறவினரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் முயற்சி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நடக்குமா தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // யுட்யூபர்ஸ்கு சுந்தர்பிச்சை ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். //

      ஏன் கீதா?

      நீக்கு
    2. யாரேனும் புகார் கொடுத்து காரணத்தையும் தெரிவித்தால் பதிவு நீக்கப்படும். புகார் நியாயமாக தரவுகளுடன் இருக்கணும். கீதா ரங்கன் திருபாகம் செய்முறை பார்த்துச் செய்து அது ஃபோர்பாகமாக ஆகிவிட்டது, வீடியோவை நீக்குங்கள் என்றெல்லாம் புகார் தெரிவிக்க முடியாது.

      நீக்கு
    3. ஸ்ரீராம் நான் சொன்னது, வரைமுறை இல்லாமல் யுட்யூபில் பேசித் தள்ளுகிறார்களே அதற்குச் சொன்னேன். துணி குறைச்சலுடன் ஃபோட்டோஸ் வெளியிட்டு சம்பாத்தியம் செய்யும் பெண்ணை பேட்டி எடுக்கிறார்கள் விழுந்து விழுந்து....சானல் சானல்களாக....அப்பெண்ணும் தனக்குப் பிடித்ததைச் செய்கிறேன் என்கிறாள் நியாயப்படுத்துகிறாள், பிடித்ததைச் செய்யுமாறு சொல்லவும் செய்கிறாள்!!!!! குத்துவது, கொலை செய்வது பிடிக்கும் என்று யாரேனும் செய்தால்?!!!!!

      நெல்லை ஸ்ரீராமிற்குச் சொன்னதுதான்....அப்படியான வீடியோக்கள், மற்றும் பலரையும் கேவலப்படுத்திப் பேசும் வீடியோக்கள் என்று இருப்பதால் வரைமுறை வேண்டும் என்று. சென்சார் ரெஸ்ட்ரிக்ஷன் வேண்டும் என்று....

      நெல்லை நான் சொல்வது வரம்புக்கு மீறிய பதிவுகளை, சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பதியலாம் என்பதும் தவறுதானே.

      கீதா

      நீக்கு
    4. எந்தவித மீடியாவாக இருந்தாலும் சமூகப் பொறுப்புணர்ச்சி வேண்டும் இல்லையா? தவறுதலாக ஒரு விஷயம் பதியப்படும் போது அதை நம்பும் மக்கள்.....

      மீடியாவே நம்பகமற்றதாக ஆகிறது என்பதால்தான், அதுவும் இப்பலாம் சைபர் க்ரைம்,....குரலே கூட ஒருவரைப் போன்று பேசி உண்மை என்று நம்ப வைப்பது...

      கீதா

      நீக்கு
    5. நிச்சயம் கீதா... உங்கள் கருத்தை 100% ஒப்புக்கொள்கிறேன்.

      நீக்கு
    6. //வரைமுறை இல்லாமல் யுட்யூபில் பேசித் தள்ளுகிறார்களே அதற்குச் சொன்னேன். துணி குறைச்சலுடன் ஃபோட்டோஸ் வெளியிட்டு சம்பாத்தியம் செய்யும்// - தெருவுக்கு மூன்று பிரியாணி கடைகள், சாட் கடைகள், பொரித்த உணவகங்கள் என்று பல்கிப் பெருகியதற்கு யார் காரணம்? இவற்றைச் சுவைக்கும் மக்கள் மிக மிக அதிகமானதுதான். இந்த மாதிரி, அக்கப்போர் நியூஸ்களைக் கேட்கும் மக்கள் பல்கிப் பெருகினதுதான், பயில்வான்கள் பெருகிப் போனதன் காரணம். அவனவன் வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், சூர்யா ஜோதிகா விவாகரத்தா/ஜோதிகாவின் இரவு பார்ட்டி வாழ்க்கையா, நடிகர் சிவகுமார் வேறு வழியில்லாமல் ஹோட்டல் உணவுதான் சாப்பிடுகிறார், ஜெயம் ரவி விவாகரத்து, தனுஷ் எல்லா நடிகைகளின்/குடும்ப இஸ்திரிகளின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறார் போன்ற தகவல்களைக் கேட்கும் கும்பல் பெருகிவிட்டதால், இதுபோன்றவைகள் இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன. அவ்ளோதான்.

      நீக்கு
  21. தஞ்சை பிரகாஷ் அவர்களின் பின்னணி வாசித்திருக்கிறேன் விக்கியில் அவர் பெற்றோர் பற்றி. இங்கு சொல்லப்பட்டிருப்பது வித்தியாசமாக இருக்கிறது.

    //தஞ்சை பிரகாஷ் தஞ்சையில் எல்.ஐ.சி ஊழியரான கார்டன் - மருத்துவர் கிரேஸ் இணையருக்கு ஒரே மகனாக 1943-ல் பிறந்தார். அவர்கள் தீவிரக் கிறிஸ்தவர்கள். //

    இது விக்கியில்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விக்கியில் யாரோ ஒரு மூன்றாம் நபர் சொல்லி இருக்கிறார்.  இங்கே அவரைப்பற்றி நன்கு அறிந்த வெ. சா சொல்லி இருக்கிறார்.  எனவே இதை அதிகம் நம்பலாம்!  ஆனாலும்....

      நீக்கு
  22. எதற்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், பாரதியின் பேத்தி மனவருத்தத்துடன் சொல்லியிருப்பதை வாசித்ததும் கீழே தஞ்சை பிரகாஷ் குறித்து வெங்கட் சாமிநாதன் அவர்கள் சொல்லியிருப்பதை வாசித்ததும் விக்கியில் இருக்கும் தகவல்கள் (அதையும் யாரோ ஒருவர்தானே எழுதியிருப்பார்!!!) இங்கு சொல்லப்பட்டிருக்கும் தகவல் எத்தனை முரண்படுகிறது இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பழைய பாடல் இருக்கிறது.. 

      "உண்மை எது பொய்யெதுன்னு ஒண்ணும் புரியல...  நம்ம கண்ணை நம்மால நம்ப முடியல..."

      நீக்கு
  23. தமிழ் மண்ணுக்கு நகைச்சுவை உணர்வு - நிஜமாகவே அதிகம், ஸ்ரீராம். இதை கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன். இல்லைனா நம்ம மக்கள் இம்புட்டு மீம்ஸ் போடுவாங்களா!! பலதும் செம சிரிப்பை வரவழைக்கும்.

    இங்கு சொல்லியிருக்கும் நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒரு சிலரை மட்டுமே அறிவேன். அவர்களின் எழுத்துகளைச் சொல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரை மணாளனை எப்படி நகைச்சுவை எழுத்தாளர் லிஸ்ட்டில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை!

      நீக்கு
  24. மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டுவரும் ஜோக் முன்னரே வாசித்த நினைவு! 6 ல் இடப்பக்கம் இருப்பவை வாசிக்க முடிகிறது

    மாலிக்கு நிகர் ராஜு என்று சொல்லப்பட்ட விஷயம் ஓரளவு வாசிக்க முடிந்தது ஆனால் வலப்பக்கம் உள்ளவை ராஜுவின் நகைச்சுவையை வாசிக்க முடியவில்லை.

    4 - வாசிக்கக் கஷ்டமாக இருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 4.  உள்ளே வந்த விருந்தினரை 'நாற்றமடிக்கிறது, கதவைச் சாத்திடுங்கோ' என்கிறார் வீட்டுக்காரர்.  அவர் கதவை சாத்தியும் நாற்றமடிக்கிறதாம்..  என்னவென்று பார்த்தால் வந்தவர் ஏதோ மோசமான செண்ட் போட்டிருக்கிறாராம்.  ஜோக்!

      நீக்கு
    2. ஆறாவதில் நடுவில் உள்ளதை மட்டும் எடுத்துக் போட்டால் சரியாக படிக்க வராதோ என்று ஏற்கெனவே பிரித்து மேலே போட்டிருப்பதோடேயே சேர்த்துக் கொடுத்தேன்.  அப்படியும்...!

      நீக்கு
  25. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவு நன்று.

    குலதெய்வம் கோயில் சென்று வந்தது சிறப்பு.

    மற்ற தகவல்களும் ரசித்தேன். படம் 4 மற்றும் 6 - கொஞ்சம் கடினம். படத்தை மட்டும் க்ளிக் செய்து பார்க்க வேண்டியிருந்தது. எழுத்துக்களும் கொஞ்சம் மறைந்து இருப்பதால் கடினம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 60 களில் பைண்ட் செய்யப்பட புத்தகம். மக்கிப்போகும் நிலை!

      நீக்கு
  26. குடும்பக் கோயில் ஷார்ட் அதுவும் மின்னல் வேக ட்ரிப் போல!!

    உங்கள் பிரதட்சணம் வீடியோ சூப்பர். எத்தனாவது சுற்று ஸ்ரீராம்? அதில் ஸ்வாமியையும் பார்த்துக் கொண்டேன். இங்கு சாஸ்தா நின்றிருக்கும் கோலமா?

    மின்னல் ட்ரிப் என்றாலும் குடும்பக்கோவிலுக்கு ஒரு அட்டெண்டன்ஸ் கொடுத்தது நல்ல விஷயமாச்சு!

    வானத்தின் படம் அழகு. மொபைலில் பார்ப்பதற்கும் கணினியில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மொபைலில் இன்னும் பளிச் மிக அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மின்னல் ட்ரிப்பே குலதெய்வம் கோவிலுக்குதான் கீதா!  தள்ளிக்கொண்டே போன அண்ணன் பேரனின் முடி இயக்கத்துக்கு அவசர நாள் குறித்து நெருக்கடியில் சென்று வந்தோம்!

      நீக்கு
  27. என்ன கொடுமைங்க மனோஜ்! கேட்டது எதுவும் இல்லைனா பவன்னு ஏம்பா உணவகம்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டால் ஞாயிறு, ஆள் லீவு, இப்போதான் ஒரு செட் தீர்ந்ததுன்னுல்லாம் கதை சொல்வாங்க...  கருப்பட்டியில் அப்படிதான் சொன்னாங்க...

      நீக்கு
  28. மகன் எடுத்த புகைப்படம் அதனால் வந்த கவிதை இரண்டுமே சோகமான விஷயங்கள். கூட்டில் அதன் கண்களைப் பாருங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. கொத்தமங்கலம் சுப்பு நகைச்சுவை எழுத்தாளர்ன்னா, (அதுவும் ஆ.வி. கணிப்பு) கவுண்டமணி குணச்சித்திர நடிகர்.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா.... ஹா...   சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.  அந்த எழுத்தாளர்கள் மேல் பத்திரிகைக்கு என்ன கடுப்போ...

      நீக்கு
  30. கோமதி சுவாமிநாதன் ஒரு குமுதம் எழுத்தாளர். என் சிறு வயதில் படித்தது. அவர் எழுதுவது கதை போல இருக்காது. மெரினா போல நாடக எழுத்தாளர். அவர் புகைப்படத்தை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் முன்பு பார்த்த நினைவு லேசாக இருக்கிறது - எங்கள் வீட்டு பைண்டிங் தொகுப்புகளில்.

      நீக்கு
  31. பாரதிக்கு எடுக்கும் விழாவில் யாராவது திருச்சியிலிருந்து வெளிவந்த சிவாஜி பத்திரிகை ஆசிரியர் திருலோக சீதாராம் பற்றி பேசினால் தேவலை. பாரதியின் இந்தத் தலைமுறை வாரிசுகள் யாராவது பாரதிக்காக எடுக்கும் அரசு விழாக்கள் எதிலாவது கலந்து கொள்ள நேரிடின் திருலோக சீதாராம் அவர்கள் பற்றி உரையாற்றினால் நல்லது.

    பதிலளிநீக்கு
  32. தஞ்சை பிரகாஷ் பற்றி வெங்கட் சாமிநாதன் சொன்னது இருக்கட்டும்.
    த.பி.யின் எழுத்தை அறிமுகப்படுத்தற மாதிரி எ.பி.யில் அவர் கதை, கட்டுரை எதையாவது வெளியிடுங்களேன். இவர் சொன்னார், அவர் சொன்னார் செய்திகளை விட இது உத்தமமான விஷயம் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் முக்கியம் என்று சொல்லுங்கள். அது சரியாக இருக்கும். இதுவும் முக்கியம் என்று நான் ஒத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. தங்கள் நான் படிச்ச கதை பகுதியில் தஞ்சை பிரகாஷ் எழுதிய 'அஞ்சுமாடி' கதையை பார்க்கவில்லையா? கோபிராவ், மற்றும் அஞ்சுமாடி அரண்மனையாக இருந்த, அரசு அலுவலகமும், தாவீது பிள்ளையும் நினைவில் வரவில்லையா?
      Jayakumar

      நீக்கு
  33. வர வர நியூஸ் ரூம் செய்திகளிலேயே கதைகள் எழுத நிறைய மேட்டர்கள் கிடைக்கும் போலிருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  நான் நினைத்ததையே நீங்கள் சொல்லி விட்டீர்கள்.  முன்பு நான் படித்த செய்தியை வைத்து ஒரு கதை எழுதி வெளியிட்டேன்.  முடிக்கும்போது அந்த செய்தியின் படத்தையும் வெளியிட்டேன்.  ஏதோ ஒரு வீட்டில் அவசரத்தேவைக்காக நியாயமான காரணம் என்று சொல்லி திருட்டு செய்த பிறகு அதை திருப்பிக் கொடுத்த நிகழ்வு.

      நீக்கு
  34. குலதெய்வம் கோவில் வழிபாடு மனதுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.

    நியூஸ்ரைம்மில் பலவித செய்திகளும் அறிகிறோம். சிலது மனதை கலக்கும்,சிலது இப்படியுமா ?என நெருடும்.தொடரட்டும் நியூஸ்ரைம்.

    பொக்கிசம் கவிதை ,பாரதியார் தகவல்கள் என பலதும் கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு
  35. குல தெய்வம் கோயிலுக்குச் செல்லுகையில் முன்னோர்கள் நினைவு வந்து விடும்.

    ந்யூஸ் ரூம்.. செய்திகள் சேகரிப்புக்கு நன்றி.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!