தேவையான பொருட்கள் :
அவல் ஒரு கப்
பெரிய வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு
கடுகு ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
தயிர் ஒரு ஸ்பூன்
செய்முறை:
அவலை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு தயிர்மற்றும் தேவையான உப்பு போட்டு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக நறுக்கி ஊறவைத்த அவலில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய்ன விட்டு கடுகு உளுத்தம் பருப்பு போட்டு கடுகை வெடிக்க விட வேண்டும்.
அதில் ஊற வைத்த அவல் வெங்காயம் பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி உருண்டையாகவோ நீளவாக்கிலோ பிடிக்க வேண்டும்.
பிறகு அவற்றை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதை ஒரு தட்டில் ஆற வைக்க வேண்டும். இப்பொழுது மிக ருசியான பிடி கொழுக்கட்டை தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடி சரியான காம்பினேஷன்.
= = = = = = = = = =
அவல் கொழுக்கட்டை செய்முறை நன்று.
பதிலளிநீக்குநம் வீட்டிலும் செய்வதுண்டு ரவை போன்று பொடித்துக் கொண்டும் செய்வதுண்டு.
அவல் உப்புமாவுக்கும், இதற்கும் வித்தியாசம்? என்று கேட்டால் என் தனிப்பட்ட கருத்து அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியலை. என்றாலும் ஒரு மாறுதல். காய்கள் போட்டும் செய்யலாம்.
கீதா
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுக்கியமாக அவல் கொழுக்கட்டைக்கு கெட்டி அவல் வேண்டும்.
பதிலளிநீக்குPaper அவல் என நான் அழைக்கும் வெள்ளை அவல் எனக்கு மிகவும் பிடிக்கும். ரோஸ் எசென்ஸ், பால் விட்டு உடனே சாப்பிடுவேன். எப்போதும் வீட்டில் ஸ்டாக் வைத்திருப்பேன். Diet இருக்க ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிறது. அதனால் இனிப்பு, வெள்ளை அரிசி, பால் சம்பந்தப்பட்டவற்றை விட்டுவிட்டேன்.
நீக்குஅவல் கொழுக்கட்டை செய்முறையும், படமும் கவர்கிறது. இப்போதே செய்யச் சொல்லலாமா என்று தோன்றுகிறது. Fasting programல் இருந்துகொண்டு, நேற்று சாப்பிட்டதால் எடை கூடியிருக்கும். சில நாட்கள் கழித்துச் செய்யச் சொல்ல வேண்டியதுதான்.
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))
நீக்குஅவல் கொழுக்கட்டை படமும் குறிப்பும் நன்றாக இருக்கிறது! இதற்கு தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய சமையல் பதிவில் அவல் கொழுக்கட்டை படங்கள், செய்முறை விளக்கங்களுடன் நன்றாக உள்ளது. அவல் உப்புமா அடிக்கடி செய்துள்ளேன். இனி இது போலவும் செய்கிறேன். சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்றைய பதிவில் அவல் கொழுக்கட்டை படங்கள், அடுத்தடுத்து செய்முறை விளக்கங்களுடன் சிறப்பு..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
அவல் கொழுக்கட்டை நன்றாக உள்ளது. நாங்கள் அவல் உப்புமா செய்வதுண்டு.
பதிலளிநீக்குகொழுக்கட்டைகள் எல்லாமே சுவைதான். உப்புக்கொழுக் கட்டை, காரக்கொழுக்கட்டை,உழுந்துமா வெல்லம் இனிப்புக் ,கொழுக்கட்டைகள் செய்வதுண்டு.
உங்கள் அவல் கொழுக்கட்டையும் செய்கிறேன். நன்றி.
அவல் கொழுக்கட்டை[எந்த ழு/ளு எனத் தெரியாமல் மாதவியின் கொமெண்ட்பார்த்து கரீட்டா எழுதுகிறேன் தெரியுமோ ஹா ஹா ஹா]] நன்று. நாங்கள் இனிப்புக் கொழுக்கட்டைதான் விதம் விதமாகச் செய்ததுண்டு, காரக்கொழுக்கட்டை என் வாழ்நாளில் நம் பரம்பரையில் இதுவரை செய்ததாக நினைவில்லை ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குகார கொழுக்கட்டையை இந்த வகை அல்ல, அரிசி மாவில் செய்யப்படும் கார கொழுக்கட்டை எனக்கு உயிர் அதிரா...
நீக்குநாங்கள் பூஜைகளுக்கு அவற்றைத்தான் செய்வோம். அரிசி மாவில் தித்திப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, அம்மிணி கொழுக்கட்டை...
அதிராவுக்காக கார கொழுக்கட்டை முறைகளில் ஒன்றைச் செய்து இங்கு விரைவில் பகிர்கிறேன். காரக்கொழுக்கட்டை செய்வதில்தான் திறமை இருக்கிறது. வெல்லத்தில் எதைச் செய்தாலும் சாப்பிட்டுவிடுவார்கள் ருசி சிறிது குறைவாக இருந்தாலும். கார கொழுக்கட்டை (உப்பு கொழுக்கட்டை) அப்படி அல்ல
நீக்குஎன் பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி இவர்கள் கருத்து தெரிவிப்பதால் மேலும் மேலும் எழுதுவதற்கு ஆசையாக உள்ளது
நீக்கு