5.12.25

நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்...

 கொஞ்ச வாரங்களுக்கு முன் இளமைக்காலங்கள் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் பகிர்ந்து விட்டு, 'இன்னும் இரண்டு நல்ல பாடல்கள் இருக்கின்றன.. அதை அடுத்த வாரம் பகிர்கிறேன்' என்று சொல்லிவிட்டு,  அடுத்த வாரம் வேறெதையோ பகிர்ந்து விட்டேன்.  "அது என்ன ஆச்சு?"  "அது என்ன ஆச்சு?"  என்று ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஃபோன்பண்ணி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் -  ஹிஹிஹி... என் அக்காதான் கேட்டார்.