திங்கள், 9 அக்டோபர், 2017

"திங்க"க்கிழமை 171009 : ஒரு போண்டா வெள்ளை அப்பம் ஆன கதை! - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி





எப்போவும் அமாவாசை நாளன்று காலை கஞ்சியோ அல்லது வேறே ஆகாரமோ சாப்பிடாமல் பத்தரைக்குள் சாப்பிட்டுடுவோம். மத்தியானம் பசிக்கும் தான்! 


ஆனால் முன்னெல்லாம் காஃபி மட்டும் குடிச்சுட்டு ஏதேனும் பழங்கள் எடுத்துக்குவோம். இப்போ நம்ம ரங்க்ஸுக்கு சர்க்கரை மேலும், கீழும் நாட்டியம் ஆட ஆரம்பிச்சப்புறமாப் பசி தாங்கலைனு மத்தியானம் ஏதேனும் பண்ணிக் கொடுக்க வேண்டி இருக்கு! 


அநேகமா அவலை ஊற வைத்துத் தேங்காய், மிளகு, ஜீரகப் பொடி சேர்த்துத் தாளிதம் செய்து கொடுத்துடுவேன். இன்னிக்கு அவல் இல்லை! வேறே இட்லி மாவும் ஏதும் கைவசம் இல்லையா என்ன பண்ணறதுனு யோசிச்சுட்டுக் கடைசியிலே மங்களூர் போண்டா மாதிரிப் பண்ணலாம்னு தீர்மானிச்சேன். 


அதை வெறும் மைதாவிலும் பண்ணலாம். ஆனால் இப்போல்லாம் மைதா சேர்ப்பதைக் குறைத்து வருவதால் ரவை+மைதா+அரிசி மாவு+உ.மாவு சேர்த்துப் பண்ணலாம்னு முடிவு செய்தேன்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கரண்டி ரவை போட்டேன்.






மற்ற மாவுகளையும் ஒவ்வொன்றாகச் சேர்த்தேன். அதில் உப்பு, பெருங்காயத் தூளையும் சேர்த்துக் கலக்கி வைத்தேன். புளித்த தயிர் இரண்டு கரண்டி விட்டு அதில் கலக்கினேன். மாவு நல்ல இட்லி மாவுப் பதத்துக்கு இருக்கணும்.




தயிர் விட்ட மாவுக் கலவை கலக்கும் முன்னர்!



அதில் போட வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை



எல்லாம் போட்டுக் கலந்த மாவு போண்டோ போடத் தயாரான நிலையில். 



எண்ணெயில் போடும்போது திடீர்னு ஒரு யோசனை. போண்டாவாக உருட்டாமல் வெள்ளை அப்பமாகப் போட்டால் என்னனு! 



சரினு அப்படியே போட்டுட்டேன். உளுந்து அரைச்சு அரிசி மாவு சேர்த்துப் பண்ணின வெள்ளை அப்பம் மாதிரியே இருந்தது. அமாவாசை மட்டும் இல்லைனா வெங்காயச் சட்னியோடு சாப்பிடலாம். :) 





68 கருத்துகள்:

  1. ஆகா.. இன்றைய இனிய காலைப் பொழுது சுவையான அப்பத்துடன் மலர்ந்திருக்கின்றது..

    சுவை எங்கும் நிறையட்டும்..

    பதிலளிநீக்கு
  2. முற்றிலும் மைதாவை தவிர்த்து விட்டு செய்யலாம் என்றிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  3. @துரை செல்வராஜு,கோதுமை மாவு சேர்த்துக்கலாம். இல்லைனா வெறும் அரிசி, உளுந்து அரைச்சுப் போட்டே வெள்ளையப்பமாகச் செய்துடலாம். இது இன்னமும் நல்லது. :)

    பதிலளிநீக்கு
  4. நன்று புகன்றீர்கள்.. நானும் மைதாவில் இருந்து விலகி விட்டேன்.. பிஸ்கட் வகையறாக்களைக் கூட 99% குறைத்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  5. அது ஏன் அந்த 1% பாக்கி என்று யாரும் கேட்கலாம்.. இங்கு இருக்கும் சூழ்நிலைகளில் சமயத்தில் கை கொடுப்பது அந்த 1% தான்..

    பதிலளிநீக்கு
  6. செய்து கொடுத்தால் சொல்லவேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
  7. கேமரா சரியானாலும் ஆனது, புகைப்படங்களாகச் சுட்டுத் தள்ளிஙிட்டீர்கள்.

    வெள்ளையப்பம் நல்லா இருக்கு. நீங்க சொல்றதைப் பார்த்தால், தோசை மாவையே எண்ணெயில் வெள்ளையப்பமாகப் பொரித்து எடுத்துவிடலாம் போலிருக்கிறது.

    தொட்டுக்க எதுவுமில்லாமல் நல்லாயிருக்குமா? செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா கீதா சாம்பசிவம் இப்ப ரிசிப்பி எக்ஸ்பர்ட்டா ஆகிட்டாங்க ரெசிப்பி போடுறது அல்லாமல் படமும் எடுத்து கலக்குறாங்க பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. வோட்டு போட்டுட்டேன் ஆனால் எத்தனியாவது வோட்டு என்று சொன்னால் அது தவறாம் இந்த பதிவுலக மேதைகள் சொல்லிட்டாங்க அதனால் மேதைகள் சொன்னால் கேட்டக வேண்டியதுதானே ஹீஹீ

    பதிலளிநீக்கு
  10. வெள்ளையப்பன் எல்லாருக்கும் பிடிக்கும்!! அப்பமும் தான்! எண்ணை குடித்ததா இந்த வகையில் போட்டால்? உ.மாவு எவ்வளவு?

    பதிலளிநீக்கு
  11. நல்ல இருக்கு எண்ணெயில் வேண்டாம் என்று நினைப்பவர்கள் நான்ஸ்டிக் குழி பணியார சட்டியில் போடு கொள்ளமுடியும் என்று நினைக்கிறன் இதை

    பதிலளிநீக்கு
  12. செம்ம, எங்கம்மா அதுல கொஞ்சூண்டு சோடாப்பு சேர்ப்பா. அல்டிமேட்டா க்ரிஸ்பியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. போண்டா மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து கரைத்துதான் அப்பம் வார்த்திருப்பீர்கள் இல்லையா. இந்த சிறுதானிய மாவுகளையும் கலந்து போடலாம். நினைத்தவுடனே செய்வதற்கு எளிய முறை. இதையே காரம் போடாமல் வெல்லம் சேர்த்துச் செய்தால் அதுவும் ஒரு ருசி.நன்றாக இருக்கு படங்கள். அப்பமும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. //தமிழ்மணத்தில் வாக்களிக்க...... //
    நாம் தப்புச் செய்தால்தான் பயப்படவேண்டும், அடுத்தவர்களுக்கு நல்லபிள்ளையாக இருக்கவேண்டும் என எண்ணியோ இல்லை அடுத்தவர்களுக்கு பயந்தோ நம்மை மாற்றிக்கொள்வது சரியல்ல[போட்டு வந்த லிங்கைப் போடாமல் விடுவது].. நாம் நாமாக இருப்போம்.

    தமிழ்மண வோட் பொக்ஸ், கொம்பியூட்டரில்கூட பலநேரம் தெரிவதில்லை, வெப்வேஷன் போனால்கூட, இணைக்கப்படவில்லை எனத்தான் பலநேரம் பொய்யாகக் காட்டுது, அதனால்தானே லிங் இணைக்கிறோம்.. மற்றும்படி நமக்கு டபிள் வோட் தேவை என்றா இணைக்கிறோம் இல்லையே..

    இல்லை உண்மையிலேயே நமக்கு வோட் வேணாம் என மனதால நினைச்சால்.. வோட் பொக்ஸையே தூக்கிடலாம்.. வோட் போடாதீங்கோ என்றே சொல்லிடலாம் அது அவரவர் தனிப்பட்ட உரிமை.
    ===============================

    வோட் போட்டு தமிழ்மணத்தில் ஏற்றி விட்டேன்...:).

    பதிலளிநீக்கு
  15. கீதாக்கா நல்லாத்தான் கிட்னி வேர்க் பண்ணுது உங்களுக்கு.. நானும் இப்படித்தான், புதிதில் இடியப்பம் குழைத்து, பிழிய முடியாமல் ரொட்டி ஆக்கினேன்:).

    ஆனா ரவ்வை நிறைய சேர்த்திருக்கிறீங்க., எண்ணெயைக் குடிக்குமே.. ?? இப்படி டவுட் வருது... இன்னொரு விதமாக சொன்னால், இது இன்ஸ்டன்ஸ் குண்டுத்தோசை.. உங்க பாசையில் குழிப்பழியாரம்.

    சூப்பரா வந்திருக்கு.

    துரை அண்ணன் .. இதில் கோதுமை மாச் சேர்க்காவிடில்.. றவ்வை எண்ணெயில்போடும்போது ஒட்டாதெல்லோ.. எண்ணெயோடு சங்கமமாகி கூழாகிடவும் வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  16. கீதாக்கா சூப்பர்! மைதாவில் தான் பொதுவாகச் செய்வாங்க மங்களூர் போண்டா...ஒரு முறை இப்படித்தான் கல்யாணம் ஆன புதிதில் ரவா தோசைக்கு புளித்த தயிரில் கரைத்துவிட்டு, அப்போ அது சரியாக வராததால், கடலை மாவு இருக்கானு பார்த்தால் இல்லை... என்ன செய்ய என்று யோசித்து வீட்டில் ரெடியாக இருந்தது அம்மா கொடுத்திருந்த உளுத்த மாவு (எங்கள் பிறந்த வீட்டில் அப்போ எல்லாம் கூட்டுக் குடும்பம்...நிறைய பேர் என்பதால் முறுக்கு தட்டை தேங்குழல் என்று அடிக்கடி செய்துவந்ததால் உளுத்தமாவு ஸ்டாக் இருக்கும். அம்மா எனக்கும் கொடுத்திருந்தார்கள். அதைப் போட்டு மேலும் மாவு ரவை எல்லாம் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக்கி உருட்ட வரவில்லை எனவே கரண்டியால் அப்பம் போல எண்ணையில் விட்டுப் பொரித்தேன். எண்ணெய் குடித்தது போல் இருந்தது. நன்றாக வந்தது என்றாலும்...... அப்புறம் மேலும் கொஞ்சம் மாவு ரவை எல்லாம் சேர்த்துக் கெட்டியாக்கி போண்டோ போட்டேன்..கூடி விட்டது..நல்ல காலம், மாமியார், மாமனார், மாமியாரின் அம்மா என்று என்னுடன் அப்போது இருந்ததால் போணியாக்க முடிந்தது. ஆனால் மாமியாரிடம் திட்டு வாங்கினேன் என்பது வேறு விஷயம். ஆனால், பாட்டி - மாமியாரின் அம்மா எனக்கு சப்போர்ட் செய்து நல்லாத்தான் இருக்குமா இதையே இன்று டிஃபனாக வைச்சுட்டா போச்சு என்று சொல்லி சமாளிக்க உதவினார்.

    சூப்பர் ரெசிப்பி....!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. @ athira said...
    >>> புதிதில் இடியப்பம் குழைத்து, பிழிய முடியாமல் ரொட்டி ஆக்கினேன்..<<<

    இந்த மாதிரி செய்யிறதுக்கு எத்தனை நாள் திட்டமோ!?..

    விருந்தாளிகளுக்கு செஞ்சி வெச்சிருந்தா - துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்....ன்னு ஒரே ஓட்டந்தான்!..

    பதிலளிநீக்கு
  18. இது இன்ஸ்டன்ஸ் குண்டுத்தோசை.. உங்க பாசையில் குழிப்பழியாரம். - இந்த மாதிரி கமென்ட் போட்டால், நான் எழுதிவச்சிருக்கிற 'குழிப்பணியாரம்' ரெசிப்பியை அனுப்பாமல் விட்டுடுவேனா? இன்றைக்குச் செய்தோம் (செய்தாள்). ஆனா கீ.சா மேடம் எழுதியிருக்கிறது வெள்ளையப்பம்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி துரை செல்வராஜு அவர்களே

    நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

    பதிலளிநீக்கு
  20. நன்றி கில்லர்ஜி! செய்து தந்துடுவோம்.

    நன்றி நெ.த. தோசை மாவிலும் பண்ணுவேன். அதுக்கு மைதாவெல்லாம் சேர்ப்பதில்லை. தொட்டுக்கத் தக்காளித் தொக்கு, வெங்காயச் சட்னின்னா ஓக்கே தான்! அன்னிக்கு ஏதும் பண்ணலை! :) அமாவாசை!

    பதிலளிநீக்கு
  21. தீடிர் சிற்றுண்டி செய்முறை இலகுவாக இருக்கின்றதே? இன்றே செய்து பார்த்து விடுகின்றேன்

    பதிலளிநீக்கு
  22. அவர்கள் உண்மைகள், இது அநியாயமா இல்லையோ! சமையலுக்குனு தனி வலைப்பக்கமே வைச்சிருக்கேனே! :)

    பதிலளிநீக்கு
  23. யார் என்ன ஓட்டுப் போட்டாலும் எனக்கெல்லாம் அவ்வளவாக் கூட்டம் கூடாது! இதுவே அதிகம்! :)

    பதிலளிநீக்கு
  24. மிகிமா, எண்ணெயெல்லாம் குடிக்கலை. உளுத்த மாவு ஒரு டேபிள் ஸ்பூன் போட்டுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  25. பூவிழி, நீங்க சொன்னாப்போல் நான் ஸ்டிக் குழிஆப்பச் சட்டியிலும் செய்யலாம். எண்ணெய் அதிகம் செல்வாகாது.

    பதிலளிநீக்கு
  26. அனன்யா, நான் சமையலில் சோடா உப்புச் சேர்ப்பதில்லை. குளிர்சாதனப் பெட்டியில் மட்டும் வைப்பேன். ஆகவே இதில் சேர்க்கலை! உங்கள் குறிப்பும் முகநூலில் பார்த்தேன். அப்படியும் செய்வேன்.

    பதிலளிநீக்கு
  27. அசோகன் குப்புசாமி, நன்றி.

    காமாட்சி அம்மா, தண்ணீர் சேர்க்கலை. மாவே கொஞ்சம் தளரத் தான் இருந்தது. :) எண்ணெய் குடிக்குமோனு பயமாவே இருந்தது. நல்ல வேளையா எண்ணெய் குடிக்கலை.

    பதிலளிநீக்கு
  28. அதிரா, வாங்க, வாங்க, இம்மாதிரிச் சமையல் நாங்க திப்பிசச் சமையல் என்போம். நான் நிறையத் திப்பிச வேலை செய்திருக்கேன் சமையலிலே! இடியாப்பம் மாவில் இடியாப்பத்துக்கு எனக் கலந்ததைப் புளி உப்புமா ஆக்கி இருக்கேன். ஹிஹிஹி, கிட்னி வேகமா வேலை செய்யுமாக்கும்! :)

    பதிலளிநீக்கு
  29. அதிரா நீங்க துரை செல்வராஜு சகோவை ஏன் இப்படி எல்லாம் சொல்லி குழப்பி ஆனா அவர் அழகா கமென்ட் போட்டுட்டார் ஹாஹாஹாஹா....

    நெல்லை விடமாட்டார் பாருங்கோ...நீங்க என்ன சொன்னாலும் குழிப்பணியாரம்...செய்முறை போடுவார்...

    நெல்லை எங்கள் வீட்டில் நேற்று இரவு குழிப்பணியாரம்...இன்று காலையும் அதே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. வாங்க தில்லையகத்து கீதா, நானும் ஒருமுறை டோக்லா செய்ய முயற்சித்து நீங்க சொன்னாப்போல் மேலே மாவு, ரவை, கடலைமாவுனு போட்டுக் கடைசியில் அக்கம்பக்கம் எல்லாம் மாவைப் பகிர்ந்து அளிக்கும்படி ஆச்சு! :)

    பதிலளிநீக்கு
  31. வாங்க நிஷா, உங்களுக்கு ஓட்டலில் இதுக்கு ஒரு புதுப்பெயரைச் சூட்டிவிட்டு வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்யலாம். ஸ்டார்டிங்கிற்குக் கூட உதவும்.

    பதிலளிநீக்கு
  32. அதிரா குழிப்பணியாரம் வேறு, மங்களூர் போண்டோ வேறு, வெள்ளைப் அப்பம் வேறு, ஊத்தப்பம் வேறு...நீங்கள் எல்லாத்துக்கும் குண்டு தோசைனு சொன்னா எப்படி?!!! ஹாஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  33. வெள்ளை அப்ப போண்டா நல்லா இருக்கே ..
    எங்க வீட்டில டீப் பொரித்தல் ஆறு மாசத்துக்கொருமுறைதான் :)
    அப்பளம் மட்டும் விதிவிலக்கு ..

    எனக்கு ரொம்ப நாள் ஆசை இந்த அப்பம் செய்ய ..ஒரு தரம் ஏதோ சமையற்குறிப்பு பார்த்து ஜவ்வரிசி அப்பம் செய்யப்போய் அது எண்ணெய்யெல்லாம் குடிச்சிருச்சி ..

    இந்த முறையில் ரவை ,மைதாக்குப்பதில் self raising gluten free மாவு சேர்த்து செய்து பார்க்கபோறேன் .
    குழிப்பணியார தட்டில் போடும் ஐடியாவும் நல்ல ஐடியா

    பதிலளிநீக்கு
  34. துறை அண்ணன்.. நீங்க பயப்பூடாமல் வாங்கோ.. நான் உங்களுக்கு இடியப்பமும் அவித்து.. எண்ணெய்ச்சட்டிச் சொதியும் வச்சுத்தாறேன்:)..
    ஊசிக்குறிப்பு:
    கலா அண்ணியைக் கையோடு கூட்டி வரவும்:)..
    ---------------------------------------------------

    // இந்த மாதிரி கமென்ட் போட்டால், நான் எழுதிவச்சிருக்கிற 'குழிப்பணியாரம்' ரெசிப்பியை அனுப்பாமல் விட்டுடுவேனா?///
    ஆஹா... வந்தவர்களைக் கவனிக்காமல். . நெல்லத்தமிழன் கமெராவோடு உலாவருகிறார் போலிருக்கே:)... போடுங்கோ போடுங்கோ.. தொடர் விரத்தத்தால வாய் புளிக்குது:) ஏதும் வித்தியாசமாகச் செய்தால்தான் சாப்பிட மனம் வருது....

    ஹா ஹா ஹா கீதா அருமையான விழ/ளக்கம்:).

    கீதாக்கா இம்முறை மகுட ராணி நீங்களாகத்தான் இருக்கும்:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  35. /துறை அண்ணன்//

    ஹஆஹா :) ஆமா காவல்துறையா மருத்துவத்துறையா பொதுநலத்துறையா உள்த்துறையா வெளித்துறை யா
    என்ன துறை :) அதிராவ்

    பதிலளிநீக்கு
  36. எப்படியும் சமாளிக்கும் திறமைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  37. எப்போதுமே திங்கள் விடுமுறை. முழு ஓய்வு என எடுத்து விடுவேன். இன்று பிரபாவும் விடுமுறையில் நிற்கின்றார். முழுச்சோம்பல் நாள் என்பதனால் நண்பகல் இரண்டரை ஆகியும் இன்னும் மதியச்சாப்பாடே சமைக்கவில்லை. இப்போதான் பசிக்குது என சொன்னார். நான் இந்த மெனுவை செய்து கொடுத்து விடலாம் என யோசிக்கின்றேன். நீங்கல்லாம் என்ன சொல்கின்றீர்கள்.

    நானும் ஒட்டுப்போட்டேன்பா. நான் போடும் ஒட்டைப்பத்தி பல நேரம் பதிவில் சொல்ல மறந்தும் போவேன்.

    பதிலளிநீக்கு
  38. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் விளக்கெண்ணெய் விட்டபடியே திரியினமே:)... இப்போ துரை அண்ணன் வந்து பொயிங்கப் போறார்:)... போஸ்ட் பண்ணியகையோடு அவதானிச்சேன்ன் ... சரி போனாப் போகுதென விட்டுட்டேன்:)

    பதிலளிநீக்கு
  39. நம்ம ஏரியாவில் புதிய எழுத்தாளரின் கதை..

    https://engalcreations.blogspot.in/2017/10/5.html

    பதிலளிநீக்கு
  40. போண்டாவானாலும், அடையானாலும் எண்ணெய்ல குளிச்சு வந்தாச்சுல்ல. ருசி எப்படி இருந்துச்சு?!

    பதிலளிநீக்கு
  41. @ athira said...

    >>> இன்னொரு விதமாக சொன்னால், இது இன்ஸ்டன்ஸ் குண்டுத்தோசை.. உங்க பாசையில் குழிப்பழியாரம்... சூப்பரா வந்திருக்கு...<<<

    இத அப்படியே நம்ம சாப்பாட்டுக்கடை கூட்டாளிக்கிட்ட சொன்னேன்.. அவரு என்னடா..ன்னா நல்ல மனுசன்...ன்னும் பாக்காம நைப்பை (Knife) எடுத்துக்கு..னு ஓடியாந்தாரு!..

    நான் விடுவனா?.. ஒரே ஓட்டந்தான்!..

    பதிலளிநீக்கு
  42. @ Thulasidharan V Thillaiakathu said...
    >>> அதிரா நீங்க துரை செல்வராஜு சகோவை ஏன் இப்படி எல்லாம் சொல்லி குழப்பி ஆனா அவர் அழகா கமென்ட் போட்டுட்டார் ஹாஹாஹாஹா...<<<

    ஆகா.. நமக்கும் ஒரு சப்போர்ட்டு!.. நன்றி யுவர் ஆனர்!..

    பதிலளிநீக்கு
  43. @ athira said...
    >>> துறை அண்ணன்.. நீங்க பயப்பூடாமல் வாங்கோ.. நான் உங்களுக்கு இடியப்பமும் அவித்து.. எண்ணெய்ச்சட்டிச் சொதியும் வச்சுத்தாறேன்:)..

    ஊசிக்குறிப்பு:
    கலா அண்ணியைக் கையோடு கூட்டி வரவும்:).. <<<
    ---------------------------------------------------

    கலாவுக்கு கார்த்திகை மாசந்தானே கல்யாணம்.. பத்திரிக்கை எல்லாம் வரும்.. அவசியம் வந்துடுங்கோ!..

    ஊசி:- பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வர்றப்போ குண்டு தோசை, குழாய் இட்லி..ன்னு பயமுறுத்தக் கூடாது.. நல்ல பலகாரமா செஞ்சு போடோணும் தெரியுதா!..

    பதிலளிநீக்கு
  44. @ Angelin said...
    >>> /துறை அண்ணன்//

    ஹஆஹா :) ஆமா காவல்துறையா மருத்துவத்துறையா பொதுநலத்துறையா உள்துறையா வெளித்துறையா என்ன துறை :) அதிராவ்.. <<<

    அண்ணன் மேல அம்பூட்டு நம்பிக்கை!?..
    அண்ணன்..ன்னா அண்ணந்தான்.. எல்லாத் துறைக்கும் அண்ணந்தான்!..

    புது வஜனம்.. நல்லாருக்குதா..ன்னு வரும்.. ஆனாலும்,
    எனக்கென்னமோ - மியா...வ்!..ன்ற மாதிரி இருக்கு..

    பதிலளிநீக்கு
  45. ஹா ஹா ஹா துரை அண்ணன் நீங்க எங்கேயோஓஓஓஓஒ போயிட்டீங்க:)... வர வர உங்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த அந்த வவ்வாலு ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே... வடிவேலு அங்கிள் தலை காட்டத் தொடங்குறார்:)... இனி எல்லாத் திறைக்கும் ஹையோ துறைக்கும்... துரை அண்ணன் .... அண்ணந்தேன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  46. //ஊசிக்குறிப்பு:
    கலா அண்ணியைக் கையோடு கூட்டி வரவும்:).. <<<
    ---------------------------------------------------

    கலாவுக்கு கார்த்திகை மாசந்தானே கல்யாணம்.. பத்திரிக்கை எல்லாம் வரும்.. அவசியம் வந்துடுங்கோ!..//

    இது எப்போ எனக்கு தெரியாம இவ்ளோ விஷயம் நடந்திருக்கே ??????????? எனக்கு செய்ய வேண்டிய சீரெல்லாம் வராட்டி நான் மூணாம் முடிச்சி போட வர மாட்டேன் இப்போவே சொல்லிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  47. உறவு முறை..ந்னு சொன்னா அடிக்கடி வர போக இருக்கோணும்... திடீர்...ந்னு தூக்கத்தில முழிச்சா ஒண்டும் வெளங்காது..

    ஓவியர் ஜெ... சித்திரத்துக்கான கவிதையில தான் கலாவும் பாரதியும் வந்தாங்க.. அந்த எளஞ்சோடிக்குத் தான் கார்த்திகை மாசம் கல்யாணம்..

    சீர் எல்லாம் நல்ல நாள் பார்த்து செஞ்சிடுவோம்...

    இப்போ சரி தானே...

    பதிலளிநீக்கு
  48. ஆமா !!அவங்க நினைவிருக்காங்க ஆனா கல்யாணம் வரைக்கும் போனது தெரியாம போச்சி :) ஹீ ஹீ விடுமுறையில் கொஞ்சம் அதிகமா தூங்கிட்டேன் :) எனக்கு பச்சை கலர் கையளவு சரிகை (வெள்ளி ) அப்புறம் என் கணவருக்கு பட்டு வேஷ்டி கட்ட மாட்டார் அதுக்கு பதில் கோட் சூட் மகளுக்கு பட்டு பாவாடை போக வர பிளைட் செலவு அவ்ளோதான் ..தங்கற இடமெல்லாம் நாங்க பாத்துக்கறோம் :) ..இப்போவே பெட்டி பாக்கிங் செய்யறேன்

    பதிலளிநீக்கு
  49. ////எனக்கு செய்ய வேண்டிய சீரெல்லாம் வராட்டி நான் மூணாம் முடிச்சி போட வர மாட்டேன் இப்போவே சொல்லிட்டேன் :)///
    கர்ர்ர்ர்ர்ர்:) அது நான் பிங் கலரில பாவாடை சட்டை போட்டு விளக்குப் பிடிக்க... முடிச்செல்லாம் ஓல்ரெடி போட்டாச்சூஊஊஉ:) இப்ப போய் மூணாவது போடப்போறேன் என அடம் புச்சுக்கொண்டு:)).... கலா அண்ணி குடும்பத்தில குழப்பத்தை உண்டுபண்ணாம விடமாட்டீங்க போலிருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  50. @Geetha Sambasivam

    //அவர்கள் உண்மைகள், இது அநியாயமா இல்லையோ! சமையலுக்குனு தனி வலைப்பக்கமே வைச்சிருக்கேனே! :)///

    அது எப்படி என் கண்ணில் படாமல் இருக்கிறது என்பது எனக்கு ஆச்சிரியமே... அதுமட்டுமல்ல நீங்கள் ரொம்ப நாளாக எழுதி வருகிறீர்கள் அதுவும் என் கண்ணிற்கு படவில்லை என்பது மிக மிக ஆச்சிரியமே... இப்போது முடிந்த வரையில் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் ஆனால் என்ன நான் போடும் கருத்துகள் (அறிவு பூர்வமானது அல்ல ஹீஹீ ) மட்டும் எங்கோ போய் ஒளிந்துவிடுகின்றன. அதனால் இப்போது போடுவதில்லை ஆனால் பேஸ்புக்கில் உங்கள் பெயரை கண்டு ஸ்ட்டேடஸ் படித்தால் லைக்ஸ் கண்டிப்பாக போட்டு நேரம் இருக்கும் போது கருத்துகளும் சொல்லிவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
  51. @Geetha Sambasivam

    ///யார் என்ன ஓட்டுப் போட்டாலும் எனக்கெல்லாம் அவ்வளவாக் கூட்டம் கூடாது! இதுவே அதிகம்! :)///

    ஒட்டு அதிகம் வராது என்று சொல்லுங்கள் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் கூட்டம் வராது என்று சொல்லாதீர்கள்.. உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் நன்றாக எழுதுகிறீர்கள்... பல சுவையான தகவல்களை தருகிறீர்கள்..


    சில பேர் கேட்டுக் கொண்டதற்குகிணங்கவே நானும் வோட்டு போடுகிறேன் அது சிலருக்கு சந்தோஷத்தை தருகிறது நம்மால் அதையாவது அவர்களுக்கு தர முடிகிறதே என்று நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வோட்டு போடுகிறேன்..


    இந்த வோட்டை பற்றி கவலைப்படாமல் எழுதுங்கள் நீங்கள் சொல்பவை மற்றவர்களுக்கு பிடிக்கும் என்றால் நிச்சயம் வோட்டுகள் இல்லாமலே உங்கள் கருத்துகளுக்கு ஒரு கூட்டம் நிச்சய்ம வரும்

    பதிலளிநீக்கு
  52. @Geetha Sambasivam

    நீங்கள் மதுரையில் படித்து வளர்ந்தீர்களா? ரயில்வேகாலனியில் வசித்தீர்களா? உங்கள் பெயரை பார்த்ததும் என் மனதில் நீங்கள் மிகவும் தெரிந்தவர் போல ஒரு உணர்வு அதை தெரிந்து கொள்ளவே இந்த கேள்வி

    பதிலளிநீக்கு
  53. பார்க்க அழகாக இருக்கிறது. .கீதாமா.
    மைதாமாவு இப்பொழுது உபயோகிப்பது
    இல்லை.
    ரவை,அரிசிமாவு,கடலைமாவு கலந்து
    செய்வேன்.
    இந்த வெள்ளையப்பம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  54. ஆமாம் அதிரா, குழிப்பணியாரம் வேறே! ஊத்தப்பம் வேறே! போண்டோ வேறே! அதிலும் மங்களூர் போண்டோ முழுக்க முழுக்க மைதாவிலேயே செய்வார்கள். நான் மைதாவின் உபயோகத்தைக் குறைத்து வருவதால் ஒரு கரண்டி மட்டும் சேர்த்துக் கொண்டேன். எங்க இரண்டு பேருக்கும் அது போதும்!

    பதிலளிநீக்கு
  55. @ஏஞ்சலின், பொரித்தல் மாசம் ஒரு தரம் வைச்சுக்கலாம். எங்க வீட்டில் அநேகமா அமாவாசை அன்னிக்கு இருக்கும். :) மற்றபடி அப்பளம் கூடப் பெரும்பாலும் எரிவாயு அடுப்பிலேயே சுட்டுடுவேன். வடாம் என்றால் மேலே எண்ணெய் தடவி மைக்ரோவேவில் வைச்சுடுவேன்.

    பதிலளிநீக்கு
  56. அதிரா, நான் தமிழ்மணத்தில் இருந்தப்போவே மகுடம் சூட்டியதில்லை. இப்போவா? ஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  57. நிஷா, மதிய உணவுக்கெல்லாம் இது போதுமா? சந்தேகமே! ஊத்தப்பம் என்றால் ஓகே! :)

    பதிலளிநீக்கு
  58. ராஜி, மிக்க நன்றி.

    பரிவை சே.குமார், நன்றிங்க

    பதிலளிநீக்கு
  59. @அவர்கள் உண்மைகள், நான் வலைப்பக்கம் எழுத ஆரம்பித்துப் பனிரண்டு வருடங்கள் ஆகின்றன. அநேகமாய்த் தொடர்ந்து எழுதி வரும் பதிவர்களில் நான், துளசிதளம் துளசி, நாச்சியார் வலைப்பக்க ரேவதி ஆகிய மூவர் தான் என நினைக்கிறேன். எங்களுடன் ஆரம்பித்த பலரும் இப்போது எழுதுவது இல்லை.

    பதிலளிநீக்கு
  60. //ஆனால் என்ன நான் போடும் கருத்துகள் (அறிவு பூர்வமானது அல்ல ஹீஹீ ) மட்டும் எங்கோ போய் ஒளிந்துவிடுகின்றன.//

    @அவர்கள் உண்மைகள், நான் தினமும் சோதித்து வருகிறேன். இன்று மட்டும் ஒரே ஒரு கருத்து உங்களுடையது கிடைத்தது. அதே கருத்தை முகநூலிலும் சொல்லி இருந்தீர்கள். நீங்கள் தாராளமாக என்ன் பதிவுகளில் கருத்துப் பதியலாம். எனக்குத் தெரிந்தால் உடனே வெளியிட்டு விடுவேன். இல்லை எனில் என்னோட மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  61. @அவர்கள் உண்மைகள், ஓட்டுக்கள் விழுவது பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை. நான் தமிழ்மணத்தை விட்டு விலகி ஐந்தாண்டுகளுக்கும் மேலே ஆகி விட்டது. பொதுவாக என் பக்கம் படிப்பவர்கள் அதிகம் என்பதைப் பார்வையாளர்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  62. @அவர்கள் உண்மைகள், நான் மதுரைக்காரி தான். ஆனால் மேலாவணி மூலவீதி. என் கல்யாணத்துக்கு அப்புறமாப் பெற்றோர் மேலமாசி வீதிக்குக் குடி புகுந்தனர். என் அப்பா மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர். பெரியப்பா மேலாவணி மூலவீதியில் பிரபல வக்கீல். என் அம்மாவழித் தாத்தா சேதுபதி அரசரின் சட்ட ஆலோசகராக இருந்தார். அவரும் மதுரையில் தான் தானப்ப முதலித்தெருவில் இருந்து பின்னர் கிருஷ்ணராஜபுர அக்ரஹாரத்தில் இருந்துவிட்டுப் பின்னர் ஜெய்ஹிந்த்புரம், சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் வசித்துவிட்டுப் பின்னர் டிவிஎஸ் நகரில் வீடு கட்டிக் குடியேறினார். அந்த வீட்டில் தான் என் கல்யாணமும் நடந்தது! :) ஹாஹா, ஶ்ரீராம் கடுப்பாகிறதுக்குள்ளே கிளம்பறேன். டாட்டா, பை, பை! இது என்ன சுயசரிதை எழுதறீங்கனு கேட்கப் போறார்.

    பதிலளிநீக்கு
  63. வல்லி சிம்ஹன், எல்லோரும் ஆல்பர்ப்பஸ் மாவு பயன்படுத்தறாங்க. அதுக்கும் மைதாவுக்கு என்ன வேறுபாடுனு எனக்குப் புரியலை! :) செய்து பாருங்க. இதை விட அரிசி, உளுந்து அரைத்துச் செய்யும் வெள்ளையப்பத்துக்கே என்னோட ஓட்டு!

    பதிலளிநீக்கு
  64. @Geetha Sambasivam

    ///@அவர்கள் உண்மைகள், நான் மதுரைக்காரி தான். ஆனால் மேலாவணி மூலவீதி. என் கல்யாணத்துக்கு அப்புறமாப் பெற்றோர் மேலமாசி வீதிக்குக் குடி புகுந்தனர்.//

    தகவலுக்கு நன்றி... நான் நினைத்த கீதா அப்ப நீங்கள் இல்லை.அதனால் என்ன ஒரு புதிய தோழி எனக்கு கிடைத்துட்டார் என நினைத்து கொள்கிறேன்..

    நான் நினைத்த கீதா எங்கள்வீட்டின் கீழே குடியிருந்த ஐயங்கார் குடும்பத்தில் உள்ள ஒரு பெண் அவர் என்னைவிட சிறிது மூத்தவர்.அவர்கள் வீட்டில்தான் நான் எப்பொழுது இருப்பேன் விளையாடுவேன்...அவர்கள் வீட்டில் 3 பெண்கள் 2 ஆண்கள் மூத்த பையன் பெயர் ரகுநாதன் அவர் திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்தாக கேள்வி பட்டேன் ஒரு வேளை அந்த கீதாதான் நீங்கள் என்று நினைத்து கேட்டேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!