திங்கள், 19 ஏப்ரல், 2010

சாதிக்க விரும்புபவர்கள்





எல்லாமே எய்ட்டி : ட்வெண்டி ரூலில் அமையும் என்று வாதிட்ட 'எங்கள் பிளாக்' ஆசிரியர் குழுவைக் கூட சுனந்தாவின் அறுபத்து மூன்று : முப்பத்து ஏழு விகிதம்தான் - படித்த மக்களிடையே எடுக்கப்படும் வாக்கெடுப்புகளுக்கு சரியாக வரும் என்ற வாதமும், முடிவும் அசர வைத்தது, 


புள்ளிவிவர ஆர்வலராகிய சுனந்தாவிற்கு இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. 'எங்கள்' கல்லூரியில் அவர் எதிர்பார்த்த சம்பளம், படிகள் இத்யாதிகளுடன், வேலையில் சேர அழைப்புக் கடிதம் வந்தவுடன், அவருக்கு வானத்தில் பறக்கின்ற உணர்வு ஏற்பட்டது.


முதல் நாள், முதல் வகுப்பிலேயே - தன்னுடைய புள்ளிவிவர நிபுணத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும், மாணவர்களை அசத்த வேண்டும்  என்கிற ஆர்வம அவருக்கு ஏற்பட்டது. அதற்கு உதவியாக தான் சமீபத்தில் அலசி ஆராய்ந்த 'எங்கள் பிளாக்' எல்டாம்ஸ் ரோடு வாக்கெடுப்பு விவரங்களை, குறிப்பெடுத்துக் கொண்டார். மனத்திலும் பல்வேறு வகையில் - ஒவ்வொரு நாளும் எவ்வளவு வாக்குகள் பதிவாயின, 'ஆஹா' எவ்வளவு 'சீச்சீ' எவ்வளவு என்பது போன்ற விவரங்களை, தன்னுடைய குறிப்பேடு உதவியோடு அசை போட்டுக் கொண்டார். 


சுனந்தா கல்லூரி வகுப்பினுள் நுழைந்தார். வருகைப் பதிவேட்டை நோட்டமிட்டார். என்ன ஆச்சரியம்! அந்த வகுப்பில் மொத்தம் நாற்பத்து இரண்டு பேர். (எங்கள் பிளாக் வாக்காளர்களில் பாதி எண்ணிக்கை). அதில் இருபத்தொன்பது ஆண்கள், பதின்மூன்று பெண்கள்.  எல்லோருமே அன்று கட் அடிக்காமல் வந்திருந்தனர். புதியதாக வரும் சுனந்தா எப்படி இருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கே எல்லா மாணவர்களும் வந்திருந்தார்கள் போலிருகிறது. 


சுனந்தா ஒரு துண்டுச் சீட்டை எடுத்து அதில் எழுதினார் - வாக்கெடுப்பு முடிவு = 63:37 (one side 27 +/- 1 , other side 15 +/- 1). அறிமுக உரையாடல்கள் முடிந்தவுடன், அவர் மாணவர்களைப் பார்த்துக் கூறினார். "நீங்க எல்லோரும் எய்ட்டி : ட்வென்டி விகித கணக்கு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் ஒரு புதிய தியரி கண்டு பிடித்துள்ளேன் அது, படித்த மக்களிடையே, எய்ட்டி :ட்வென்டி விகிதம் எடுபடாது, வேறு ஒரு விகிதம் எடுபடும். நான் அதை இங்கே நிரூபிக்கப் போகிறேன். இதோ இந்தத் துண்டுச் சீட்டில், நான் நடத்தப் போகிற வாக்கெடுப்பின் முடிவை முன் கூட்டியே எழுதி வைத்துவிட்டேன்."


"ஒரு சிறிய, எளிய கேள்விதான். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்க எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்புவீர்கள். இல்லையா? அப்படி சாதிக்க விரும்புபவர்கள் எத்தனை பேர்?"


இருபத்தெட்டுப் பேர்கள் கையை உயர்த்தினார்கள். வகுப்பில் இருந்த எல்லா (13) மாணவிகளும் + பதினைந்து பையன்களும் சேர்ந்து இருபத்தெட்டு. 


தன கணக்கு சரியாக இருந்தது என்றாலும் சுனந்தா, மீதி இருந்த பதினான்கு மாணவ மணிகளையும்  பார்த்து, "நீங்க சாதிக்க விரும்பலையா? ஏன்?" என்று கேட்டார். ஒரு மாணவனைத் தவிர மீதி பதின்மூன்று மாணவர்களும் எழுந்து, ஒரே குரலில் - 'இங்கே இருக்கற பொண்ணுங்க எல்லோரும் சாதிக்க விரும்புவதால் நாங்க சாதிக்க விரும்பவில்லை.' என்றனர்.


இதென்னடா விசித்திரமாக உள்ளதே என்று நினைத்த சுனந்தா, மீதி இருக்கின்ற ஒற்றை மாணவனை நோக்கி, "அப்போ நீ?" என்று கேட்டார்.


அந்த மாணவன் எழுந்திருந்து, அமைதியாகச் சொன்னான், " நான்தான் சாதிக்."  

11 கருத்துகள்:

  1. /இருபத்தெட்டுப் பேர்கள் கையை உயர்த்தினார்கள். வகுப்பில் இருந்த எல்லா (பதின்மூன்று) மாணவிகளும் , பதினைந்து மாணவர்களும் - சேர்ந்து இருபத்தெட்டு./

    இது புள்ளி விவரக் குழப்பம் மாதிரித் தெரியவில்லையே!

    சுனந்தா என்ற பெயர் ஏற்படுத்திய குழப்பமா?

    சு'ரூர் எங்கள் ப்ளாகைக் கூட சுரீரென்று சுடுகிறதா என்ன!

    பதிலளிநீக்கு
  2. எப்பிடித்தான் இப்பிடியெல்லாம்
    எழுத வருதோ !

    பதிலளிநீக்கு
  3. /////////முதல் நாள், முதல் வகுப்பிலேயே - தன்னுடைய புள்ளிவிவர நிபுணத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும், மாணவர்களை அசத்த வேண்டும் என்கிற ஆர்வம அவருக்கு ஏற்பட்டது./////////////


    ஏலே மக்கா இப்படித்தால நானும் ஒரு முறை ஆர்வக்கோளாறுல நம்ம முதல் வகுப்பிலேயே வேலைகளை காட்ட ஆரம்பிச்சேன் .அவளவு தான் என்னை ஸ்கூலை விட்டே வெரட்டிட்டானுவ . பின்ன என்னல பாத்தாப்பு படிக்கிற பாய போய் ரெண்டாப்பு படிக்கிற பயலுகக்கிட்ட வேலையக்காட்டினா அப்படித்தாம்ல நடக்கும் .

    பதிலளிநீக்கு
  4. Pareto principle வச்சு இப்படி தாளிச்சுட்டீங்களே? சீரியஸா படிக்க ஆரம்பிச்சு கடைசியில் 'பன்' வாங்கிட்டேன் :)))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!