முன்னர் எழுதப்பட்ட மூன்று பகுதிகளையும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் (அல்லது படித்திருக்க மாட்டார்கள்) என்று நினைக்கிறேன்.
இதோ முன் கதைச் சுருக்கம்.
1) கனவும் விழிப்பும் ... பகுதி ஒன்று. பெப்ரவரி பதின்மூன்று பதிவு.
"நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்." விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.
2) பகுதி இரண்டு : பெப்ரவரி பதினேழு பதிவு.
ஒன்று : கார் துடைப்பவர்.
இரண்டு : ஈ
மூன்று : ஜாகிங் செல்லும் பெண்ணுருவம்.
நான்கு : ?
3) பகுதி மூன்று : (பெப்ரவரி இருபத்தைந்தாம் தேதி பதிவு)
நான்காவதாகக் கண்ணில் பட்டவர், எதிர்ப் பக்கம் கட்டப்படும் வீட்டின் வாட்ச்மேன் - ஆமாம், இவருக்கு என்ன குறை? இவர் ஏன் கடவுளாக இருக்க முடியாது?
இனி இறுதிப் பகுதி.
பெப்ரவரி இருபத்தைந்தாம் தேதி தொடங்கி மார்ச் இருபத்தேழாம் தேதி வரை கடவுள் என் கண்ணுக்கோ கனவுக்கோ வரவில்லை. அல்லது கனவில் வந்தவர்கள் யாரும் கடவுள் இல்லை.
மார்ச் இருபத்தேழு அன்று இரவு பூமி மணிக்காக தேவை இல்லாத விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டுக்கு வந்திருந்த சகோதரன் மகன், மற்றும் வீட்டில் உள்ள மற்ற இருவர் என்று சேர்ந்து ஒரு மணி நேரம் ஐம்பத்தாறு (சீட்டாட்டம் - வாசகர்களில் யாராவது இதை ஆடியிருக்கிறீர்களோ? கேரளத்துப் பக்கம் உதயமான சுவாரஸ்யமான ஆட்டம்) ஆடி,பிறகு தூங்கப் போனேன், தூங்கிப் போனேன்.
கனவில் முதலில் கங்குலி வந்து, அமபயரிடம் போய், "ஃபார்ட்டி கிளப்ஸ்" - என்றார். அம்பயர் உடனே வலது கையை உயர்த்தி, அவரை அவுட் என்றார். கங்குலி அழுதுகொண்டே பெவிலியன் பக்கம் போனார்.
என்ன ஆச்சரியம்! அம்பயர் உடனே கடவுள் உருவமாக மாறினார். அட முதல் பதிவில் நான் பார்த்த அதே கடவுள்! சுற்றிலும் இருந்த மக்கள் கூட்டம் எங்கே மாயமாய் மறைந்ததனர்? நானும் கடவுளும் மட்டும்தான் அங்கே. கடவுள் என்னைப் பார்த்து, "நான் யாரென்று தெரிந்துகொண்டாயா?" என்று கேட்டார்.
"உம். கண்டுகிட்டேன். ஆனா எனக்குப் பிடிக்கலை" என்றேன்.
"என்ன? பிடிக்கலையா? ஏன்?"
"பின்ன என்ன? எல்லோருக்கும் எக்சாம்பிளா இருக்கவேண்டிய நீங்க இப்படி பீடி புகைத்து சுற்றுச் சூழலை பாதகம் செய்வது சரியா?"
"பீடி புகைப்பதா? நானா? உனக்கு என்ன பைத்தியமா? பார்க்கப் போனால் என்னால்தான் சுற்றுச் சூழல் சுத்தமாகிறது, மழை பெய்கிறது."
"கடவுளே - நான் அன்றைக்கு உன்னைப் பார்த்து ஹலோ சொன்னேன், சிரித்தேன், நீ ஒன்றும் மறுமொழி கூறாமல், என்னை முறைத்துப் பார்த்தாயே! அது ஏன்?"
"என்ன? ஹலோ சொன்னாயா? சிரித்தாயா? என்னைப் பார்த்தா? சரிதான். சாதாரணப் பைத்தியம் இல்லை; முற்றிப் போயிடுச்சு!"
"கடவுளே! இந்தக் காமெடி எல்லாம் என்னிடம் வேண்டாம். அன்று நான் பார்த்த நான்காவது உயிரினம் நீங்க தானே?"
"ஆமாம்."
"அந்த வாட்ச்மேன் தானே நீங்க?"
"இல்லை."
"கடவுளே - ஏன் இந்த விளையாட்டு?"
"சரி. அன்று நீ பார்த்த உறவினர் அல்லாத நான்கு உயிரினங்களையும் வரிசையாகச் சொல்லு."
"ஒன்று : கார் துடைக்கும் பணியாளர்."
"சரி"
"இரண்டு: ஈ "
(சிரித்தவண்ணம்) "சரி"
"மூன்று: ஜாகிங் சென்ற பெண்."
"அதுவும் சரி."
"நான்கு: வாட்ச் மேன்."
"அதுதான் சரி இல்லை. நீ வாட்ச் மேனைப் பார்க்கும்பொழுது என்ன செய்து கொண்டிருந்தாய்?"
"வீட்டுக்கு வெளியே இருக்கும் மரத்திற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன்."
"அந்த மரம் அங்கே எவ்வளவு நாட்களாக இருக்கிறது? "
"அது? அது .. வந்து .. வீடு காட்ட ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே ....இன்னும் பார்க்கப் போனால் .... நான் பூமி பூஜை பண்ணும் பொழுதே பார்த்த ஞாபகம்."
"ஆமாம் - அந்த நாளிலிருந்தே நானும் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!"
"அப்படீன்னா - கடவுளே நீங்க அந்த மரத்தின் உருவாக இருக்கிறீர்களா?"
"ஆமாம்டா மரமண்டை! எங்கே போகிறாய்?"
"கடவுளே - நீ அங்கே மரமாக இருக்கிறாய் என்றால், இப்பவே போயி... "
"போயி?"
"மரத்துக்கு பொட்டிட்டு, பூ வைத்து, ...."
"உண்டியல் கட்டி, ஊதுபத்தி சொருகி, வருபவர் போபவர் எல்லோரிடமும், வசூல் பண்ணி - என்னைப் பிச்சைக்காரர் ரேஞ்சுக்குக் கொண்டுபோகப் போகிறாயா?"
"ஆ .... மா ...ம்....?"
"வேண்டாம். நான் அந்த மரத்திலும் இருக்கிறேன், மற்றும் உள்ள எல்லா உயிரினங்களிலும் இருக்கிறேன். உனக்காக, உன் வீட்டில் உள்ளவர்களுக்காக அந்த மரத்தில் தற்பொழுது ஓர் அங்கமாக இருக்கிறேன். அந்த மரம் பட்டுப் போனால், அல்லது வெட்டப்பட்டால், வேறொரு உயிரினம் என்று மாறிக்கொள்வேன். எனவே, அந்த மரத்தில் மட்டும்தான் நான் இருக்கிறேன். வேறு எங்கும் இல்லை அல்லது இருக்கமாட்டேன் என்று நினைக்காதே. போ...போய் வேலையைப் பார் (டா மரமண்டை!)"
விழித்தெழுந்தேன்.
முதல் வேலையாக மரத்திற்கு ஊற்றவேண்டிய வாளித் தண்ணீரை நிரப்பிக் கொண்டு - மரத்திற்கு அதை ஊற்றிக்கொண்டே கேட்டேன், "கடவுளே நான் கண்டது கனவா, கற்பனையா அல்லது உண்மையா?"
மரத்தின் கிளையில் இருந்த பல்லி ஒன்று, 'கிக்.. கிக்.. கிக்.. ' என்று சப்தமிட்டது.
அழகு என்பது பார்ப்பவர் மனதில்தான் இருக்கிறது (Beauty lies in the eyes of the beholder) என்பார்கள். அழகு மட்டும் அல்ல, கடவுளும் கூட அப்படித்தானோ?
முன்னர் எழுதப்பட்ட மூன்று பகுதிகளையும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் (அல்லது படித்திருக்க மாட்டார்கள்) என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு......ha,ha,ha,ha.....
அழகு என்பது பார்ப்பவர் மனதில்தான் இருக்கிறது (Beauty lies in the eyes of the beholder) என்பார்கள். அழகு மட்டும் அல்ல, கடவுளும் கூட அப்படித்தானோ?
பதிலளிநீக்கு.....mmm..... nice way to put it.
:-)
The photo of the tree (human face) is awesome.
அட! கருணை உள்ளம் கொண்ட உயிர்கள் எல்லாம் தான் கடவுள் என்று இந்த மரம் சொல்லாமல் சொல்லிவிட்டதே!
பதிலளிநீக்குகடவுள் என்பவன் மனிதத்தில் இருக்கிறான் மதத்தி; அ;;அ...நல்ல பதிவுங்க
பதிலளிநீக்கு"கண்டேன் கடவுளை"
பதிலளிநீக்குஇந்த கதைக்கான தலைப்பு,
இப்படி இருந்தால் பொருத்தம் என நினைக்கிறேன்.
அழகும் கடவுளும் ஒண்ணா? ம்ம்ம்... தலைவலியும் நோயும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் வலியும் துன்பமும் கூட மனதில் தான் இருக்கிறது. வலியும் துன்பமும் போல் தான் கடவுள் என்று ஏன் நமக்குத் தோன்றுவதில்லை?
பதிலளிநீக்குso கண்டுபிடித்துவிட்டீர்கள்
பதிலளிநீக்குஅட! கருணை உள்ளம் கொண்ட உயிர்கள் எல்லாம் தான் கடவுள் என்று இந்த மரம் சொல்லாமல் சொல்லிவிட்டதே!
பதிலளிநீக்குமீனாட்சி சொன்னதை வழிமொழிகிறேன்.
//வலியும் துன்பமும் போல் தான் கடவுள் என்று ஏன் நமக்குத் தோன்றுவதில்லை?//
பதிலளிநீக்குமனதிற்கு ஆறுதலும் நிம்மதியும் தரும் ஒரு உணர்வுதான் கடவுள். அந்த உணர்வு ஒருவருக்கு எதில் கிடைக்கிறதோ அதுவே கடவுள். வலியிலும், துன்பத்திலும் ஒருவர் நிம்மதியை உணர்ந்தால் அதுவும் கடவுள்தான்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு>>ஆறுதலும் நிம்மதியும் தரும் ஒரு உணர்வுதான் கடவுள்.
பதிலளிநீக்கும்ம்ம்ம்... உளைச்சலையும் பிரச்சினையையும் குழப்பத்தையும் சோகத்தையும் துயரத்தையும் தரும் ஒரு உணர்வுதான் கடவுள் என்று நமக்கு ஏன் தோன்றுவதில்லை?
தாயின் மடியும், பிள்ளையின் மழலையும் துன்பமான ஒரு உணர்வாக ஒரு நாளும் தோன்றுவதில்லை, இல்லையா!! கடவுள் என்றாலே கோவிலில் சிலையாக இருப்பவர் என்று எண்ணாமல், அவர் அருளை பெற பூஜை, வழிபாடு, விரதம் எல்லாவற்றையும் அனுஷ்டிக்க வேண்டும் என்றில்லாமல், எதில் மனம் அமைதி என்ற உணர்வை பெறுமோ, அதுதான் கடவுள் என்று நம்பினால், பிரச்சினை, குழப்பம், சோகம், துயரம் இந்த உணர்வு கடவுளாக தோணாது. ஆதியிலிருந்தே 'கடவுள்' என்ற சொல்லே நிம்மதி, ஆறுதல் என்ற பொருள் ஆகிவிட்டது. பாகற்காய் என்றாலே கசப்பு என்று ஆகிவிட்டது போலத்தான்.
பதிலளிநீக்கு//பாகற்காய் என்றாலே கசப்பு என்று ஆகிவிட்டது போலத்தான்//
பதிலளிநீக்குபாகற்க்காய் என்று பெயர் வைக்காவிட்டாலும் அது கசக்கும் !
//எதில் மனம் அமைதி என்ற உணர்வை பெறுமோ, அதுதான் கடவுள் என்று நம்பினால்//
அதைத்தான் நம் சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - அதை சும்மா விடுகின்றார்களா பெண்கள் !
//சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - அதை//
பதிலளிநீக்குசரணாகதி என்றபின் சரக்கும் சர்வேஸ்வரனும் ஒன்றே!
//அதைத்தான் நம் சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - //
பதிலளிநீக்குதாரளமாக காணுங்கள், அதில் தான் உங்களுக்கு நிம்மதியும், அமைதியும் கிடைக்கறது என்றால், அனுபவியுங்கள். அதே நேரத்தில், அதனால் ஏற்படும் விளைவுகளையும், உபாதைகளையும் கூட அமைதியாக நிம்மதி உணர்வோடு அனுபவிக்கும் பக்குவம் இருந்தால் சரிதான்.
வணக்கம்
பதிலளிநீக்குநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
http://www.thalaivan.com/button.html
Visit our website for more information http://www.thalaivan.com
குடிப்பதற்கு ஓர் மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்
பதிலளிநீக்குஅவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்
ஆனால்
இருப்பதோ ஓர் மனம் நான் என்ன செய்வேன் !
// Anonymous said...
பதிலளிநீக்கு//சராசரி ஜனம் "சரக்கில்" காண்கிறான் - அதை//
சரணாகதி என்றபின் சரக்கும் சர்வேஸ்வரனும் ஒன்றே!//
அஹகாஹா ? அற்புதம்
சரணாகதி சர்வேஸ்வரனுக்கு அல்லது மனைவிக்கா ?
>>குடிப்பதற்கு ஓர் மனம் இருந்தால்
பதிலளிநீக்குdialog engeyo kettaapula irukke?
TGIF - Please do not disturb
பதிலளிநீக்கு/////கனவில் முதலில் கங்குலி வந்து, அமபயரிடம் போய், "ஃபார்ட்டி கிளப்ஸ்" - என்றார். அம்பயர் உடனே வலது கையை உயர்த்தி, அவரை அவுட் என்றார். கங்குலி அழுதுகொண்டே பெவிலியன் பக்கம் போனார். /////////
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா
வாங்க சித்ரா,
பதிலளிநீக்குநன்றி சித்ரா, (நாங்களும் ரெண்டு முறை சொல்லிட்டோம்..!)
கடவுள் மரம் மாதிரி நிற்கிறார் என்றும் சொல்லலாம் ..இல்லை மீனாக்ஷி?
வாங்க புலிகேசி, நீங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டோம்.
நீங்க இது கதையா இல்லையான்னு முடிவு பண்ணிட்டா தலைப்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் சைவக்கொத்துபரோட்டா..
நல்ல சிந்தனை அப்பாதுரை, கடவுளை தன் துன்பத்தின் போது தேடும் மனிதன் அழகான சந்தோஷத்தைதானே நாடுகிறான்..
ஆமாம் padma, உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?
வாங்க ரமேஷ், மீனாட்சிக்கு சொன்ன கருத்தையே உங்களுக்கும் வழிமொழிகிறேன்..
வாங்க மீனாக்ஷி, துறைக்கு நாங்கள் பதில் சொல்லியிருக்க வேண்டாமோ...சரியாய்ச் சொல்லி உள்ளீர்கள்..
வருக சாய்ராம், பாகற்காய் என்று பெயர் வைக்காவிட்டாலும் அது கசக்கும்...ரசித்தோம். அடித்த உங்கள் எண்ணத்துக்கும் மீனாக்ஷி பதில் சொல்லி விட்டார். அனானியின் கமெண்ட்டும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.
வாங்க பனித்துளி...ரசனைக்கு நன்றி
எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது என்றால் சாராயம் குடிக்க அதில் கடவுளைக் காண்பதாக நடிப்பது என்று ஆகிவிடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடவுளை ஏன் இழுத்து வைக்கிறோம் என்று நாணயம் தவறாமல் ஆராய்ந்து பார்த்தால் கடவுள் வாய்மையில் உறைகிறார் என்பது தெரிய வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குகடவுள் எங்கே இருக்கிறார் ?
பதிலளிநீக்குhttp://en.wikipedia.org/wiki/Arai_En_305-il_Kadavul