திங்கள், 26 ஏப்ரல், 2010

ஸ்ரீ சியாமா சாஸ்திரி

சங்கீத மும்மணிகளில் ஒருவர் ஆகிய ஸ்ரீ சியாமா சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 26, 1762) என்று  படித்தேன்.
                                                                
 காலத்தினால் அழியாத பாடல்களை இயற்றுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சியாமா சாஸ்திரி அவர்களால் மதுரை மீனாட்சியின் பேரில் பாடப் பெற்ற நவரத்னமாலிகை பாடல்கள் மிகவும் பிரசித்தம். மத்யமாவதியில் அவர் இயற்றிய 'பாலிஞ்சு காமாட்சி' போன்ற பாடல்கள் மனதை உருக்கும் சக்தி வாய்ந்தவை. 

இதை எழுதும்போதே, இரண்டு வருடங்களுக்கு முன், ஹிந்து நாளிதழில், படித்த செய்தி ஒன்றும் நினைவுக்கு வருகிறது. சியாமா சாஸ்திரி வழித் தோன்றல்கள், சென்னை குரோம்பேட்டை சித்லப்பாக்கம் பகுதியில், வறுமையில் வாடுகிறார்கள் என்னும் செய்திதான் அது. 
                                 
எத்தனையோ சங்கீத விழாக்கள், சங்கீத சபாக்கள், சங்கீத ஆர்வலர்கள், சங்கீத விற்பன்னர்கள் நிறைந்த நம் நாட்டில், இவர்களுக்கு உதவி புரிய யாரும் முன் வந்ததாகத் தெரியவில்லை. 

8 கருத்துகள்:

  1. sad..
    கலைஞனின் பசி கலைஞனுக்கு மட்டும் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. பத்திரிகையில் தகவல் வந்த பின்னாவது, யாராவது இவர்களுக்கு உதவ முன் வந்தார்களா?

    பதிலளிநீக்கு
  3. இது போல எத்தனை பேருடைய பரம்பரை கஷ்டப்பட்டு கொண்டிருகிறது .அவர்களிடமிருந்து பெற்று முன்னணியில் இருப்போர்களாவது ஏதாவது செய்யலாம்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் வருத்தம் . இது போன்று இன்னும் எத்தனை கலைஞர்கள் முகவரி அற்று இருக்கிறார்களோ தெரியவில்லை . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  5. வருத்தமாய்த்தான் இருக்கிறது:(

    பதிலளிநீக்கு
  6. மிகவும் வருந்தவேண்டிய விஷயம்

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. ஒரு குடும்பம் ஓரளவு வசதியுடன் வாழ வேண்டிய அளவு நிதி என்பது தனி மனிதர்களால் தயார் செய்ய இயலாத தொகையாக இருக்கும்.

    யார் யாருடைய எழுத்துக்களையோ தேசிய மயமாக்கி குடும்பத்தினருக்கு லட்சங்கள் கொடுக்கப் படுகின்றன. அதுபோல் இங்கும் செய்ய இசை சபாக்கள் போன்ற அமைப்புக்கள் செயல் பட வேண்டும்.

    இதே சமயம் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். 150 வருடங்களுக்குப் பின் ஒரு மேதையின் குடும்பத்தில் கிட்டத் தட்ட 60 அல்லது 80 சமையலறைகள் இருக்க வாய்ப்புண்டு. எல்லாருக்கும் போதிய நிதி என்பது கொஞ்சம் அதைரியப் படுத்துகிறது.

    என் சொந்த அபிப்பிராயம், அடுத்த தலைமுறை, அதிக பட்சம் பேரன்/பேத்தி வரைக்கும் உதவிகளுக்கு மதிப்பு இருக்கும்.

    இன்னொரு உறுத்தல் சமாசாரம், பல மேதைகளுக்கு அவர்கள் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் போனதும் உண்டு.

    சமுதாயத்துக்கு குறிப்பிட்ட பணி செய்த பலரின் வாரிசுகளில் பலரும் வறுமையில் வாடக் கூடும். உதாரணம் சொல்ல சற்று தயக்கமாக இருக்கிறது. இன்னாரின் வாரிசு எனும் தகுதி மட்டும் உதவிக்குப் போதுமா என்று யோசிக்க வைக்கிறது.

    இந்த எண்ணங்கள் பலருக்கும் ஒப்புதலாக இராது என்று தெரிந்தும் சொல்ல முன் வந்ததற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!