வியாழன், 15 ஏப்ரல், 2010

ஐ. பி எல் அனுபவங்கள்..

சாய்ராம் கோபாலன் ஒரு முட்டிக் கால் வலி மருந்து சிபாரிசு பண்ணியிருந்தார்.  


அதை சாப்பிட வேண்டுமென்றால் முட்டி வலி இருக்க வேண்டும். அது எனக்கு இல்லையே என்ற போது டென்னிஸ் ஆடுங்கள் வரும் என்று சொல்லியிருந்தார். எனவே டென்னிஸ் ஆட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.




பையன் ஆர்வமாக ஓடிவந்தான்.

"என்னடா...என்ன ஆச்சு.." 

"கிடைச்சிடுசிப்பா...கிடைச்சிடுச்சி.."
நெட்டிலும் நேரிலும் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் ஐ.பி.எல் டிக்கெட்டுக்கு அலைந்த பையன் கடைசியில் எப்படியோ வெற்றி பெற்றான். டிக்கெட் கிடைக்காது என்று நம்பி...நிம்மதியாய் இருந்தவன் நம்பிக்கையில் மண் விழுந்தது. அட, இப்படி எல்லாம் செய்கிறார்களே என்று அங்கலாய்த்த ஐ. பி. எல்லை பையன் வற்புறுத்தல் காரணமாக நேரில் போய்ப் பார்க்க வேண்டி வந்தது. (நல்ல வேளை...ஐ.பி.எல் தேவையா என்று கேள்வி கேட்ட புலவன் புலிகேசி லீவில் இருக்கிறார்...)

சென்னை மற்றும் கோல்கட்டா இடையே நடந்த லீக் மேட்ச்...இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்றாலும் முன்னரே போய் விடுதல் நலம் என்று தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் ஃபோன் செய்து வற்புறுத்தியதால் மாலை நான்கு மணிக்கே கிளம்பி மைதானத்தை அடைந்தால் மனிதக் கடல்...! நீந்தி வரிசையில் நின்று ஒரு வழியாய் உள்ளே சென்று மே...லே...மேல் வரிசைக்கு சென்று அமர்ந்தோம்.

உள்ளே ஃபோன் எடுத்துச் செல்லக் கூடாது,தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லக் கூடாது என்று சொன்னார்களே என்று பார்த்தால், அதெல்லாம் ஒன்றுமில்லை, இரண்டுமே எடுத்துச் செல்லலாம் என்று விட்டு விட்டார்கள். உணவு, பெரிய வாத்தியங்களுக்குதான் அனுமதி இல்லை.

ஆனால் செல் உள்ளே எடுக்கவில்லை. யாருக்கும் பேசவும் முடியவில்லை. அழைப்பும் வரவில்லை. ("ஸ்க்ராம்ப்ளர் போட்டிருப்பாங்க அங்கிள்... நான் கூட இப்படிதான் ஏமாந்தேன்...கீழ படிக் கட்டுக்குக் கீழ போய்ப் பேசுங்க..எடுக்கும்" என்றான் பின்னாலிருந்து ஒரு எட்டு வயதுப் பொடியன்!)

எனக்கு தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!

மேலேயிருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டரில் விளையாடும் பொம்மைகள் போல விளையாட்டு வீரர்கள்...டிவியில் பார்ப்பது போல பெரிதாய்த் தெரியாததில் வருத்தம்தான்..! ஆனால் பையன் என்னமோ இது ஹசி, அது கங்குலி என்றெல்லாம் கை காட்டிக் கொண்டிருந்தான். ரசிகர்களுக்குப் பரிசு கொடுக்கும் கேட்ச்கள், மற்றும் மைக் வைத்துப் பேசுபவர்கள் எல்லாம் கண்ணில் படவில்லை.

மைதானத் துளிகள்...

மைதானத்துக்கு வெளியே எல்லா டீம் சட்டைகளும் நூற்று எண்பது ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். மேலும் தலைத் தொப்பி, ஊதுகுழல் ஆகியவையும்...

முன்னாலேயே போய் விட்டதால் சாப்பிட ஏதாவது வாங்கிதான் ஆக வேண்டும்...ஆவின் பால் கோவா கப் போல இருக்கும் கப்பில் வெஜ். பிரியாணி எண்பது ரூபாய். சுவைதான். ஆனால் காணாது.மற்ற ஐட்டங்கள் பர்கர், சிப்ஸ் என்று எதை எடுத்தாலும் ஐம்பது ரூபாய்!

ஜூஸ் கப் போலக் கப்புகளில் ஐந்து ரூபாய் கொடுத்தால் தண்ணீர் நிரப்பித் தருகிறார்கள்.

ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்சை தூக்கிக் கொண்டு (ஆள் வைத்துதான்..!) ஒவ்வொரு இடமாக நகர்ந்து நகர்ந்து சென்று சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஓவர் இடைவெளியிலும் குத்துப் பாடல்கள்...ஆட்டங்கள்...

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பும் நடந்து கொண்டிருக்கும்போதும் ஏராள பறவைகள் மேலே பறந்த வண்ணமிருந்தன.

ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் எல்லா இடங்களையும் இணைத்து பஸ்கள் விட்டிருந்தது சிறப்பு.

வயதான தம்பதிகள் முதல் குழந்தைகள் வரை ஆட்டத்தை மிக ரசித்தார்கள். அட, நம்ம தாத்தா கலைஞர் கூட பேரனுடன் அமர்ந்து பார்த்தாராம்..எங்களுக்குத் தெரியாது மறு நாள் டிவி பார்த்துதான் இதையும், அம்பையர் இரண்டு மூன்று அவுட்கள் தவறாகத் தந்தார் எண்பது போன்ற விவரங்களும் தெரிந்தன.

அது சரி, ஆட்டம் என்கிறீர்களா? அது யாருக்குத் தெரியும்? யார் பார்த்தார்கள்..பையனைத்தான் கேட்க வேண்டும்.

முத்தையா முரளிதரன் விஜய் டிவியில் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பிடித்த நடிகர் ரஜினிதானாம் சிவாஜியை பத்து முறை பார்த்தாராம். கமல் நடித்த நாயகன் பிடிக்குமாம்.

லெக் ஸ்பின் போடும்போது அதில் ஆஃப் ஸ்பின் கலந்தால் அதுதான் 'தூஸ்ரா' என்றார்.

பிடித்த கேப்டன் அர்ஜுனா ரணதுங்காதானாம். நாற்பது வயதாகியும் சிறப்பாக விளையாடும் ஜெயசூர்யாவுக்கு பாராட்டு மாலை சூட்டினார்.

ஹெய்டனுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் என்று பெயர் வைத்துள்ளார்களாம். ஹெய்டனுக்கு இவர்கள் தமிழ் சொல்லிக் கொடுப்பார்களாம். ஐ.பி.எல், எதிரிகளாகப் பார்க்கும் வெளிநாட்டு வீரர்களையும் நண்பர்களாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றார்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது செல் ஒலித்தது. எடுத்தல் புதிய குரல்.."சார்! நான் வசந்தபாலனோட அசிஸ்டென்ட் பேசறேன்...நேத்து ஐ.பி.எல் மேட்ச் நடுவுல திரையில உங்களை டைரக்டர் பார்த்தாராம்..அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."

பையனை முறைத்தேன். அவனால்தானே இந்த புதிய வம்பெல்லாம்...!   

15 கருத்துகள்:

  1. //அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."//

    படத்துல இதே மாதிரி ஒரு பொதுக்கூட்டத்துல, கூட்டத்தோட கூட்டமா, பராக்குப் பாக்கிற ஒருத்தராகவா? :-))

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்15 ஏப்ரல், 2010 அன்று PM 4:52

    // தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!//

    ஐயா - நீங்க தோனியை பைனாகுலார்ல பார்த்து அவர் அருகே தெரியும்போது கேட்டிருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  3. வசந்தபாலன் இதே வேலையாகத் தான் இருக்காரா.

    பதிலளிநீக்கு
  4. //(நல்ல வேளை...ஐ.பி.எல் தேவையா என்று கேள்வி கேட்ட புலவன் புலிகேசி லீவில் இருக்கிறார்...)//


    நா லீவுல இல்ல.. என்ன http://madhavan73.blogspot.com/2010/03/i-p-l.html
    மறந்திட்டீங்களா ?

    //மேலேயிருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டரில் விளையாடும் பொம்மைகள் போல விளையாட்டு வீரர்கள்...டிவியில் பார்ப்பது போல பெரிதைத் தெரியாததில் வருத்தம்தான்..! //

    ஒரு முறை, அகமதாபாத்தில், இந்திய-ஜிம்பாப்வே ஒருதின கிரிக்கெட் போட்டி, நேரில் காண வாய்ப்பு கிடைத்தது..
    முன்னரே சென்று இருக்கையில் அமர்ந்தாலும், 'தாஸ்' ஜெயிச்சது இன்டியாயதான்னு வீட்டுக்கு வந்து நியூஸ் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்..
    TV ல பாக்குறதே பெட்டெர் நு முடிவுக்கு வந்த நாள் அது..


    // தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!//

    ஐயா - நீங்க தோனியை பைனாகுலார்ல பார்த்து அவர் அருகே தெரியும்போது கேட்டிருக்கலாமே!


    ஒரு முறை, அகமதாபாத்தில், இந்திய-ஜிம்பாப்வே ஒருதின கிரிக்கெட் போட்டி, நேரில் காண வாய்ப்பு கிடைத்தது..
    முன்னரே சென்று இருக்கையில் அமர்ந்தாலும், 'தாஸ்' ஜெயிச்சது இன்டியாயதான்னு வீட்டுக்கு வந்து நியூஸ் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்..
    TV ல பாக்குறதே பெட்டெர் நு முடிவுக்கு வந்த நாள் அது..


    "குரோம்பேட்டைக் குறும்பன் " --உங்கள் பெயரின் காரணம் இப்போது புரியுது..

    பதிலளிநீக்கு
  5. //ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பும் நடந்து கொண்டிருக்கும்போதும் ஏராள பறவைகள் மேலே பறந்த வண்ணமிருந்தன// அங்கே போய் செம்ம 'Bird Watching' போல இருக்கே?

    வசந்தபாலன் அடுத்து எடுக்கப்போகும் படம் ராஜஸ்தான்ல இருந்து வந்து பேப்பர் மெஷ் பொம்மைகள் தயாரிக்கும் வியாபாரிகளை பத்தியாமே? அவர் யதார்த்தவாதி. அதான் உங்களை கேட்டு இருக்கார்! :P

    பதிலளிநீக்கு
  6. இதில் இருந்து தெரிய வரும் உண்மை
    டி.வீ யில் மேட்ச் பார்ப்பதே "தெளிவு" :))

    பதிலளிநீக்கு
  7. முத்தையா முரளிதரன் விஜய் டிவியில் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அவருக்குப் பிடித்த நடிகர் ரஜினிதானாம் சிவாஜியை பத்து முறை பார்த்தாராம். கமல் நடித்த நாயகன் பிடிக்குமாம்

    .....சரிங்க........ அடுத்த பேட்டியில், வசந்த பாலன் சார் அறிமுகப்படுத்த போகிற உங்களையும் பிடிக்கும் என்று சொல்லி விடுவார். :-)

    பதிலளிநீக்கு
  8. பராக்கு பார்க்க அவ்வளவு காசு அதிகமில்லையா:))

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டைக் குறும்பன்15 ஏப்ரல், 2010 அன்று PM 7:47

    // அநன்யா மஹாதேவன் said...
    .....
    வசந்தபாலன் அடுத்து எடுக்கப்போகும் படம் ராஜஸ்தான்ல இருந்து வந்து பேப்பர் மெஷ் பொம்மைகள் தயாரிக்கும் வியாபாரிகளை பத்தியாமே? //

    அட! அப்போ எனக்கு நிச்சயம் ஒரு சான்ஸ் கிடைக்கும். சின்ன வயசுல சுத்துப் பக்க பதினெட்டுப் பட்டியிலும் என்னை 'சோளக் கொல்லை பொம்மை' போல இருக்கானே இந்தப் பையன் என்று சொல்வார்கள். நான் பொம்மையாக நடிக்கத் தயார். வசந்தபாலன் விலாசம் கொடுங்கள் அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. கலக்கல் பதிவு!

    //நான் வசந்தபாலனோட அசிஸ்டென்ட் பேசறேன்...நேத்து ஐ.பி.எல் மேட்ச் நடுவுல திரையில உங்களை டைரக்டர் பார்த்தாராம்..அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."//
    அட, அட, அட.......! எதுக்கும் சரின்னு சொல்றதுக்கு முன்னாடி ஹுசைனம்மா அவர்கள் எழுதி இருக்கறத ரெண்டு தடவ படிச்சிருங்க. :)

    பதிலளிநீக்கு
  11. - கடவுளுக்கு இணையாக கருதப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தக்கனுண்டு ஆட்களாய் கிரிக்கெட் பிளேயர் பார்ப்பதற்கு மேல் வரிசை ஏறி போனபோதே முட்டி வலி வந்திருக்குமே - எதற்கு அனாவசியாமாக டென்னிஸ் வேறு ?
    - பெண்டாட்டியிடம் எதாவது கேனைத்தனமாக பேசியிருந்தால் முட்டி பெத்து கையில் கொடுப்பார்களே ? அதை முயற்சி செய்யவில்லையா ?

    இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் ஏதோ பிசகு : -

    - "நித்தியானந்தா" கேமெராமேன் அடுத்த பட சிடி எடுக்க கூப்பிடவில்லையே !

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் சார். வசந்தபாலன் படத்துல ஹீரோவாயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதீங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  13. தோனியை ஹெல்மெட்டோடு பார்த்தது சரி, பின்னாடி பில்லியன்ல இருந்த பூனைக்குட்டியைப் பாக்கலியா? அது குறித்து பதியாத மர்மம் என்ன?

    பதிலளிநீக்கு
  14. SUREஷ் (பழனியிலிருந்து) ...ரசனைக்கு நன்றி.

    ஹுஸைனம்மா அவர் என்ன கேரக்டர்னு சொல்றதுக்குள்ள தொடர்பைத் துண்டிசிட்டோம்ல...!

    குரோம்பேட்டைக் குறும்பன்...யோசனையை மனதில் வாங்கிக் கொண்டோம்.

    தமிழ் உதயம்..நீங்க கேக்கறதைப் பார்த்தா உங்களையும் கேட்டுருப்பர் போலேருக்கே...

    Madhavan.... மறக்கவில்லை..நீங்கள் கூட ஐ.பி.எல்லுக்கு எதிர்ப்பாளரா என்ன?

    அநன்யா மஹாதேவன்...உங்களுக்கு வசந்தபாலனையும் தெரிஞ்சிருக்கு..எங்களையும் தெரிஞ்சிருக்கு...

    சைவக்கொத்துபரோட்டா ...தெளிவான தீர்ப்பு.

    Chitra....நீங்கதான் சரியாச் சொல்லியிருக்கீங்கன்னு தோணுது..

    வானம்பாடிகள்...காசு இல்லீங்கோ...புல்லுக்கும் பொசிஞ்ச காம்ப்ளிமென்டரி டிக்கெட் ...

    meenakshi....ஹுஸைனம்மா ஏதோ பொறாமைல சொல்லி இருக்காங்க..

    சாய்ராம்...நித்தியாவை மறக்கலை இன்னும் நீங்க...

    செ. சரவணக்குமார்....நிச்சயம் மறக்க மாட்டோம்..

    அனானி.....பூனைக்குட்டியா யார் அது?

    பதிலளிநீக்கு
  15. //சாய்ராம்...நித்தியாவை மறக்கலை இன்னும் நீங்க...//

    சார் - என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்கரிங்களே ? ரஞ்சிதா சார் ரஞ்சிதா ?

    நான் இந்த வார முதல் மூன்று நாள் "சான்பிரான்சிஸ்கோ" போனேன். அங்கே gay couples உண்டு அதுக்காக !! இப்படியா !

    நானும் என்னுடைய கஸ்டமரும் SFO மார்க்கெட் ஸ்ட்ரீட் பாரில் உட்கார்ந்திரோந்தோம். ரெண்டு பசங்க கையை பிடித்து வந்தார்கள். ஒருவன் (ஒருவளோ !!) பிரிந்து போகும்போது உதடோடு உதடு முத்தம் வேறு !! கர்மம்.

    ஐந்து அறிவு மிருகங்கள் கரீட்டா இருக்கு - நம்ம பயலுவ - ரொம்ப மோசம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!