வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வேண்டுதல் வேண்டாமை

"என்ன கோபால், நம்ம ஊரு கோவில்ல ஒரே கூட்டம் நேற்று?"

"ஆமாம். கோயிந்து, புது வருஷம் பிறந்திருக்கு இல்லே? அதுதான்..."

கோவிந்து: "உங்களுக்கு முன்னாடி ... இரண்டு பேர் ...."  

கோபால் [மனதுக்குள் 'கோவிலுக்கு நீங்கள் எல்லாம் வருவதே இதுக்குத்தானே']: "என் மனைவியும் மச்சினியும்."

கோவிந்து: "ஓஹோ, என்ன வேண்டிகிட்டீங்க? எங்க ஊர்ல எல்லாம் கூட ஹோலிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே அல்லோல கல்லோலப் படும்."

கோபால்: "அதுவா, நான் எனக்கு புரமோஷனும் நிறைய ஓவர்டைமும் கிடைக்கணும் என்று வேண்டிக் கொண்டேன். நீங்க?"

கோவிந்து: "நாங்கள் எல்லாம் கோவிலுக்குப் போனால் 'சாமி நல்ல புத்தியைக் கொடு' என்றுதான் வேண்டிக் கொள்வோம் "

கோபால்: "அதுவும் சரிதான். அவரவரிடம் இல்லாததைத் தானே வேண்டிப் பெற முடியும்?"   13 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்30 ஏப்ரல், 2010 அன்று பிற்பகல் 2:44

  இன்னைக்கும் புதிர் கிதிர் போட்டீங்கன்னா முட்டியைப் பேத்துடலாம்னு இருந்தேன். பொழச்சிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 2. இத......இத...............இந்த பதிலைத்தான்
  எதிர்பார்த்தேன் :))

  பதிலளிநீக்கு
 3. //குரோம்பேட்டைக் குறும்பன் wrote...
  இன்னைக்கும் புதிர் கிதிர் போட்டீங்கன்னா முட்டியைப் பேத்துடலாம்னு இருந்தேன். பொழச்சிட்டீங்க!//

  Super. மனம் விட்டு சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. நான் அடுத்தவங்களுக்கு நல்ல புத்திய கொடு சாமீன்னுதான் வேண்டிக்குவன்..... எப்படீ?

  உங்களுக்கு எமது மே தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. உழைபாளர் தின வாழ்த்துகள்.
  //அதுவும் சரிதான். அவரவரிடம் இல்லாததைத் தானே வேண்டிப் பெற முடியும்?" //


  எசக்குத்து...!இல்லாததை கேட்டால் கிடைச்சிடுமா..?

  பதிலளிநீக்கு
 6. எவ்ளோ அருமையா பதில் சொல்லியிருக்கார்.அதுக்கே எவ்ளோ புத்தி வேணும்.

  ச்ச...ஸ்ரீராமுக்கு வர வர புத்தி கூடிகிட்டே போகுது !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!