வியாழன், 29 ஏப்ரல், 2010

இன்றும் ஒரு புதிர்.

நானும் என் நண்பர்கள் இருவரும், எங்கள் வங்கிக்குச் சென்றோம். கவுண்டரில் வழக்கமான சிடுமூஞ்சி. வங்கியில் எக்கச் சக்கக் கூட்டம். எங்கள் மூவருக்குமே பணம் எடுக்கவேண்டும்.  வரிசையாக எங்கள் செக்குகளை கொடுத்து டோக்கன்கள் வாங்கிக் கொண்டோம்.

எங்கள் மூவரிடமும் இருந்த டோக்கன்களின் எண்களைப் பார்த்தோம்.
இருந்த டோக்கன்கள் எல்லாம் முடிந்து போய் அடுத்த ரவுண்டு வர ஆரம்பித்துவிட்டது என்று தெரிந்துகொண்டோம். என்னுடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவர் அறிவு ஜீவி. காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல், புதிர்கள் போட ஆரம்பித்தார்.

அறிவு ஜீவி கேட்ட இரண்டு கேள்விகள் இங்கே:

* மூன்று டோக்கன்களையும் பயன்படுத்தி மிகச் சிறிய எண்  என்ன கொண்டு வர முடியும்?

* மூன்று டோக்கன்களையும் பயன்படுத்தி மிகப் பெரிய எண் என்ன கொண்டு வர முடியும்?

(மூன்று டோக்கன்களையும் பயன்படுத்த வேண்டும். எண் மேலே தெரியவேண்டும். கழித்தல் கூட்டல் போன்ற குறிகள் எதுவும் பயன்படுத்தக் கூடாது. இன்னும் சரியாகச் சொன்னால் - மூன்று டோக்கன்களையும் தரை மீதோ / மேஜை மீதோ வைத்துக் காட்டும்படி இருக்க வேண்டும்..)

இதற்கு வாசகர்களின் பதில்களைப் பார்த்த பின், அறிவு ஜீவி கேட்ட மற்ற கேள்விகள், புதிய பதிவாக பார்ப்போம்.    

23 கருத்துகள்:

  1. 1 square the whole cube is the smallest number.
    12 power 3 (cube) is the largest number.--geetha

    பதிலளிநீக்கு
  2. //12 power 3 (cube) is the largest number.//

    Why not 21 to the power 3 ?

    பதிலளிநீக்கு
  3. டோக்கன்களை தரை மீது ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தால் மிகச் சிறிய எண் 1 வரும்.

    321 தான் மிகப் பெரிய எண்?!

    பதிலளிநீக்கு
  4. 21 power 3 is the largest number.
    1 power 32 is the smallest number.

    பதிலளிநீக்கு
  5. விடுமுறைன்னு ஒரே புதிரா போடறீங்க. இங்க இன்னும் விடுமுறை விடலீங்க. பரிட்சையே வர வராம்தான். அதனால மதிப்பெண் போடும்போது எனக்கு extra credit குடுங்க வாத்தியாரே.

    பதிலளிநீக்கு
  6. நா ஸ்கூல்லயும் கணக்குல பெயில். இங்கேயுமா.

    பதிலளிநீக்கு
  7. I have asked my wife and son to be proxy for me !!!


    //தமிழ் உதயம் said... நா ஸ்கூல்லயும் கணக்குல பெயில். இங்கேயுமா. //

    "You want company. But I want company" - Famous dialogue of Nagesh Sir in Apporva Raangangal.

    பதிலளிநீக்கு
  8. மூன்று டோக்கன்களையும் பயன்படுத்தி மிகச் சிறிய எண்...
    டோக்கன்களை தரை மீதோ / மேஜை மீதோ ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தால் மிகச் சிறிய எண் 1 வரும்.(அல்லது)மூன்று டோக்கன் எண் மேலே தெரியவேண்டும் என்றால்=123

    மூன்று டோக்கன்களையும் பயன்படுத்தி மிகப் பெரிய எண்...
    மூன்று டோக்கன் எண் மேலே தெரியவேண்டும் என்றால்=321

    பதிலளிநீக்கு
  9. மிகச்சிறிய எண் ஒன்று என்பது சரி.
    ஒன்று பவர் 23 என்பதுதான் இதுவரையில் சிக்கனமான ஒன்று என்று கொள்ளலாம்.
    மிகப்பெரிய எண் த்ரீ பவர் ட்வெண்டி ஒன். (10460353203)

    பதிலளிநீக்கு
  10. ஒன் பவர் டொண்ட்டி த்ரீ

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா1 மே, 2010 அன்று AM 6:03

    கணக்கு குறியீடுகள் பிளஸ் மைனஸ் மாதிரி எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு பவர் 23 என்றெல்லாம் சொன்னால் எப்படி?

    1, 321 மட்டுமே ஒப்புக் கொள்ளக் கூடிய விடை?

    பதிலளிநீக்கு
  12. // கழித்தல் கூட்டல் போன்ற குறிகள் எதுவும் பயன்படுத்தக் கூடாது. இன்னும் சரியாகச் சொன்னால் - மூன்று டோக்கன்களையும் தரை மீதோ / மேஜை மீதோ வைத்துக் காட்டும்படி இருக்க வேண்டும். //
    கழித்தல் கூட்டல் பெருக்கல் வகுத்தல் ஆகியவற்றிற்கான குறிகள் உள்ளன. ஆனால், 'Raised to the power of' என்பதைக் குறியீடுகள் இல்லாமல் (குறியீடுகள் உண்டு என்ற போதிலும்) தலைப் பகுதியில் எண்களை அமைத்துக் காட்டலாம். எனவே பவர் ஆப - ஏற்றுக் கொள்ளப் படக்கூடியதே!

    பதிலளிநீக்கு
  13. 3 to the power 21 is the largest possible number.

    Keep the number '1' rotated by 90 degrees (so as to form '-'sign)
    , I get -32 is the smallest possible number.

    பதிலளிநீக்கு
  14. மாதவன் - வெரி எக்செலேன்ட் - மிகச்சிறிய எண்ணுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விடை.

    பதிலளிநீக்கு
  15. I appreciate this puzzle... really an excellent one. This helps thinking power with numbers.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!