ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஞாயிறு 40

இந்த விடுமுறை நாளில் சும்மா படம் பார்த்து கமெண்ட் அடிச்சிட்டுப்  போய்விட முடியாது. உங்களுக்கு ஓர் எளிய படைப்பாற்றல் பயிற்சி. 

படைப்பாற்றல் பற்றிய புத்தகம் ஒன்றை சென்ற மாதம் படித்தேன். அதில், படைப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ள, ஒவ்வொருவரும் ஒரு நாளில் 'இரண்டே நிமிடங்கள்' செலவழித்தால் போதும் என்று எழுதி இருந்தார் அந்த நூலாசிரியர். 

ஒரு சிறிய வெள்ளைத் தாள், பென்சில் அல்லது பேனா (கலர் கிரேயான்ஸ் - இருந்தால் அதையும்) எடுத்துக்குங்க. 

நேரம் : இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். (நூற்று இருபது வினாடிகள்)
வெள்ளைத் தாளில், இங்கே காணப்படும் வழிமுறையைப் பின்பற்றி, படம் வரையுங்கள். 
START :
ஸ்டெப் ஒன்று:

ஸ்டெப் இரண்டு:

ஸ்டெப் மூன்று :

ஸ்டெப் நான்கு : (கலர் பென்சில் / பென் / கிரேயான் இருப்பவர்கள் மட்டும்)

ஸ்டெப் மூன்று / ஸ்டெப் நான்கு முடித்தவர்கள், அதை வரைந்தவரின் பெயரை, படத்தின் மீது (" Art by : ....................." ) எழுதுங்கள். 
CAMERA :
பிறகு, அந்தப் படத்தை டிஜிட்டல் காமிராவால் கிளிக்குங்கள். ( Or scan and save the image in digital format.)
ACTION :
அந்தப் படத்தை, அப்படியே, engalblog@gmail.com  என்ற எங்கள் முகவரிக்கு அனுப்புங்கள். (JPG format preferred)

ஒருவர் அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும், எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 

எல்லா படங்களும் - எங்கள் பிளாகின் சைடு பாரில் ஒரு நாளுக்கொன்றாக வெளியிடப்படும். 
குறிப்பு: இது போட்டி அல்ல. படைப்பாற்றல் பயிற்சி.
வாசகர்களுக்கு / வாசகர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்தப் படைப்பாற்றல் பயிற்சி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றோம். 

அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள் வருகின்ற படங்கள் அனைத்தும் பிரசுரத்திற்கு  எடுத்துக் கொள்ளப்படும். 

34 கருத்துகள்:

  1. பக்கத்து வீட்டுப் பூனை இருக்குன்னேன்..

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்18 ஏப்ரல், 2010 அன்று 8:49 AM

    படம் அனுப்பிட்டேனுங்க பேப்பர் பேனா கலர் கிரேயான்கள் தேடி எடுத்து, (வெள்ளை பேப்பர் மட்டும் கிடைக்கலை, அதனால வீட்டுக்கு வந்த தபால் ஒன்றின் வெள்ளைப் பக்கம் பயன் படுத்தினேன்) படம் போட்டு கலர் அடித்து, செல் போன் படம் எடுத்து, - எல்லாவற்றுக்கும் நூறு செகண்டுகள் ஆயிற்று. அனுப்பி வைக்க மட்டும் கொஞ்சம் லேட்.

    பதிலளிநீக்கு
  3. நாங்க + எங்க வீட்டுக் குழந்தைங்க படம் வரைந்து - அதை படம் பிடித்து, உங்களுக்கு அனுப்பி, அதை நீங்க வெளியிட்டு - இந்த பிராசஸ் ரொம்ப
    நீ ...... ளமாகப் படுகிறது. நாங்க அந்தப் படங்களை எங்களுக்கு வசதியான வலைப்பூவில் வெளியிட்டு, உங்களுக்கு சுட்டி மட்டும் அனுப்பினால் சரியாக வருமா?

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் அனானி யோசனையும் சரிதான். லிங்க் கொடுத்தால் கூட போதும்.
    அப்பாதுரை என்ன சொல்றாரு?
    கு கு போட்டுட்டோம் - நீங்க அனுப்பிய படத்தை.

    பதிலளிநீக்கு
  5. //இந்த விடுமுறை நாளில் சும்மா படம் பார்த்து கமெண்ட் அடிச்சிட்டுப் போய்விட முடியாது.//

    வடை போச்சே:(!

    //உங்களுக்கு ஓர் எளிய படைப்பாற்றல் பயிற்சி//

    புதுமையான முயற்சி.

    ஓரளவு பார்த்ததை அப்படியே வரைய வரும். நேரமிருந்தால் முயற்சிக்கிறேன்.

    மற்றவர் கைவண்ணத்தைப் பார்க்கவும் வருவேன்:)!

    பதிலளிநீக்கு
  6. வீட்ல குட்டீஸ் இருந்தா நல்லாத்தானிருக்கும் !

    ஸ்ரீராம் அப்பா சொல்றது புரியலயா ?அவர் கடிக்கிறது போதாதாம்.இனித் தன்கூட பக்கத்துவீட்டு பூனையையும் சேர்த்துக்கிட்டு கடிக்க விடப்போறாராம் !

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. கைல கத்தியிருக்குன்னேன்.. எல்லாம் தொழில் பழக்கம்னேன்.. ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டைக் குறும்பன்18 ஏப்ரல், 2010 அன்று 6:31 PM

    அப்பாதுரை - ஏதோ ஒரு பழமொழியை சொல்றீங்க என்று நினைக்கிறேன். பாவம் எங்கள் படைப்பாற்றல் குழு!

    பதிலளிநீக்கு
  10. குரோம்பேட்டைக் குறும்பன்18 ஏப்ரல், 2010 அன்று 6:50 PM

    ஆ ..!

    பதிலளிநீக்கு
  11. //ஸ்டெப் நான்கு : (கலர் பென்சில் / பென் / கிரேயான் இருப்பவர்கள் மட்டும்)//

    இல்லாதவர்கள் பக்கத்து வீட்டில் திருடலாமா ?

    எனக்கு நல்ல படம் காட்ட தெரியும். வரையறது ? நான் வெறும் "நல்ல பிகர்" பார்க்கும் உத்தமன் !

    பொறுமை சிகரம் - என் இரண்டாவது மகனை ட்ரை பண்ண சொல்லறேன்.

    பதிலளிநீக்கு
  12. ராமலக்ஷ்மி மேடம் நெஜமாவே இரண்டு நிமிடங்கள் கிடைக்கலையா உங்களுக்கு! இந்தப் பதிவின் முக்கியமான பாயிண்டே ஒரு நாளில் இரண்டே நிமிடங்கள் படைப்பாற்றலுக்காக செலவழித்தால் போதும் என்பதுதான். விரைவில் வரைந்து, அனுப்புங்கள் அல்லது லிங்க் கொடுங்கள். உங்களால் முடியும்.

    அப்பாதுரையும் கு கு வும் ஏதோ கேம் ஆடறாங்க போலிருக்கு. சி எஸ் கே ஜெயித்த சந்தோஷத்தில் நாங்க இருப்பதால், இவர்கள் ஆடுவதையும் சந்தோஷமாகப் பார்க்கிறோம்.
    நன்றி ஹேமா.
    சாய் கலர் பென் / கலர் கிரேயான் இல்லாதவர்கள் ஸ்டெப் மூன்று வரையிலும் வரைந்தால் போதும். பக்கத்து வீட்டுப் பூனையை தொந்தரவு செய்யாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. //இந்தப் பதிவின் முக்கியமான பாயிண்டே ஒரு நாளில் இரண்டே நிமிடங்கள் படைப்பாற்றலுக்காக செலவழித்தால் போதும்//

    என் தந்தை வழி தாத்தா, என் தந்தை என்று எல்லோரும் அதே இரண்டு நிமிடத்தில் வேறே படைப்பாற்றல் செய்து இந்தியாவின் முப்பது கோடி கண்ணுடையாளை 100 கோடி கண்ணுடையாளாய் ஆக்கிய மகா உத்தமர்கள் !!

    பதிலளிநீக்கு
  14. Great.. Great..!!!
    This will make the summer colorful..!
    Hearty thanks to you. This will stimulate us to revisit our drawing skills!
    All the best!

    பதிலளிநீக்கு
  15. One request:
    Please ask the participants to specify the materials (type of paper, pencil / crayon / pastel / water color etc.) in their art work. Thanks!

    பதிலளிநீக்கு
  16. Materials used:
    blue Gel pen for drawing.
    A4 sheet
    Face color Crayon.

    பதிலளிநீக்கு
  17. //divya said..."Materials used:
    blue Gel pen for drawing.
    A4 sheet
    Face color Crayon.//

    Following also used..
    Camera / Scanner (for digital image) & Computer, Internet (for posting email to engal blog) ?

    பதிலளிநீக்கு
  18. //Following also used..
    Camera / Scanner (for digital image) & Computer, Internet (for posting email to engal blog) ?//
    they just specified materials for Art Work

    பதிலளிநீக்கு
  19. படைப்பாற்றல் பயிற்சிப் பகுதிக்கு நான் வரைந்ததை மின்னஞ்சலாக அனுப்பியுள்ளேன். பங்கேற்பதில் மகிழ்ச்சி! நன்றி!!

    பதிலளிநீக்கு
  20. படைப்பாற்றல் பயிற்சியில் நிறைய வாசகர்கள் கலந்துகொள்வது எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  21. நேற்று அனுப்பிய ஆரஞ்சைத் தூக்கிக் கடாசிவிடுங்கள். இன்று அன்னத்தைத் தூது விட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. ஜெகநாதன் தூது விட்டிருக்கும் அன்னம் சூப்பரோ சூப்பர்.

    [அடடா, கடாசப்பட்ட ஆரஞ்சைப் பார்க்கவில்லையே நான்:))!]

    பதிலளிநீக்கு
  23. நன்றி ராமலக்ஷ்மி!!
    (கடாசிய ஆரஞ்சை Buzzல் ​போட்டிருக்கேன் இன்று!)

    பதிலளிநீக்கு
  24. //கடாசிய ஆரஞ்சை Buzzல் ​போட்டிருக்கேன் இன்று!//

    நான் எப்படி பார்ப்பது?

    பதிலளிநீக்கு
  25. ராமலக்ஷமி, எனக்கு விளக்கத் தெரியலியே..! (கல்யாண்ஜி சார், ​கொஞ்சம் உதவுங்களேன்)
    கவலை வேணாம்.. எங்கள்-ப்ளாக் அதை​ஒருநாள் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. //எங்கள்-ப்ளாக் அதை​ஒருநாள் வெளியிடுவார்கள்//

    ஆமாம் இது கூட நல்ல யோசனை. அடுத்த ஞாயிறு தொகுத்து வெளியிடலாமே:)!

    பதிலளிநீக்கு
  27. நேயர்கள் விருப்பம், எங்கள் பாக்கியம். சனிக் கிழமை, இந்த வாரம் வந்த படங்களை வெளியிட்டு விடுவோம்.

    பதிலளிநீக்கு
  28. ஜி மெயில் கணக்கு இருப்பவர்கள் எல்லோரும் Buzz ல சுலபமா ஏறிக்கலாம். (எப்போது வேண்டுமானாலும் இறங்கிக்கலாம்.) விவரமான பதிவு ஒன்று இதுகுறித்துப் போடமுடியுமா என்று பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  29. நானும் buzz-ல இருக்கிறேன்:)! ஆனா ட்விட்டர் போல மற்றவர்களை இணைப்பது சுலபமாயில்லையே. பதிவு போடுங்கள். உபயோகமாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  30. நல்ல முயற்சி.
    வரைய ஆர்வம் இருந்தும் தெரியாதவர்களுக்கு உபயோகமான ஒன்று!

    பதிலளிநீக்கு
  31. ஆகா ஆகா ரெண்டு நிமிசம் - ஒதுக்கணுமா - தெனந்தெனமா - ஆமா - ஏன் ஒதுக்கக் கூடாது - வரைஞ்சுதான் பாப்போமே - ஆரம்பிப்போமே

    பதிலளிநீக்கு
  32. நன்றி சீனா சார்! உங்களைப் போன்ற பெரிய மனிதர்கள் வருகையாலும், கருத்துரையாலும், நாங்கள் மிகவும் சந்தோஷப் படுகின்றோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!